Thursday, February 07, 2013

விஸ்வரூபம் -சினிமா விமர்சனம் (விகடன் விமர்சனக் குழு)


திரை விமர்சனம் - விஸ்வரூபம் !

சினிமா விமர்சனம்


அந்த 'ஏழு’ காட்சிகள் நீக்கப்படுவதற்கு முன் பார்த்த 'விஸ்வரூபம்’ படத்தின் விமர்சனம் இது.
இந்திய உளவுத் துறை அதிகாரி, தலிபான் தீவிரவாதக் கூட்டத்துக்குள் புகுந்து ஆடும் உயிர்ப் பந்தய 'விஸ்வரூப’ விளையாட்டு.

அமெரிக்க வாழ் கதக் நடனக் கலைஞராக மென்மையும் பெண்மையுமாகத் தோன்றுகிறார் கமல். அவரது மனைவி, பூஜா குமார். தனது அலுவலக மேலதிகாரியுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கிறார் பூஜா. 'பெண் நளின’க் கமலிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக, அவருக்கு வேறு ஏதேனும் 'கனெக்ஷன்’ இருக்கிறதா என்று துப்பறியும் நிபுணர் மூலம் உளவு பார்க்கிறார் பூஜா. தவறுதலாக அல்கொய்தா தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்ளும் அந்த டிடெக்டிவ் கொலை செய்யப்படுகிறார். டிடெக்டிவை அனுப்பியது யார் என்று நூல் பிடித்துத் தேடி வரும் தீவிரவாதிகளிடம் சிக்குகிறார்கள் கமலும் பூஜா குமாரும். 


அப்போது கமல் ஒரு முஸ்லிம் என்று தெரியவருகிறது. கமலின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியாகும் தலிபான்களின் தலைவர் முல்லா முஹம்மது ஓமர், 'நான் வரும் வரை கமல் தப்பிவிடாதவாறு அவருடைய இரண்டு கால் முட்டிகளிலும் சுட்டுவிட்டு உயிருடன் வைத்திருங்கள்’ என்று சொல்கிறார். ஓமர் வருவதற்குள் கமல் எடுக்கும் ஆக்ஷன் விஸ்வரூபத்தைத் தொடர்ந்து, அவர் யார், எதற்கு அமெரிக்கா வந்தார், ஓமர் ஏன் அவரைப் பழிவாங்க எண்ணுகிறார் என்பதெல்லாம் விறுவிறு சினிமா!


ஹாலிவுட்டில் இதுபோல 500 படங்களாவது வந்திருக்கும். ஆனால், தமிழுக்கு..? படமாக்கப் பட்ட தரத்திலும், கதை சொல்லும் விதத்திலும், தொழில்நுட்பத்திலும் இது அடுத்தகட்ட அபாரப் பாய்ச்சல்!
நேச நாடாக இருந்தாலும், தன் அடையாளங்களை மறைத்து வாழும் ரகசிய உளவாளி, இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாதிகளாக உருமாற்றும் அல்கொய்தா பயிற்சிப் பட்டறை, சீசியம் கட்டப்பட்ட கதிர்வீச்சுப் புறாக்கள்... எனப் படம் முழுக்க செம ஃப்ரெஷ் விஷயங்களைத் தொட்ட விதத்தில் இயக்குநர் கமல்ஹாசனுக்குப் பாராட்டுகள்.

நளினம் மிளிரும் பரதக் கலைஞராக கண்கள் அபிநயம் பிடிக்க, பெண்மை கலந்து ஓடுவதும், ஆடுவதும், பேசுவதுமாக அந்த கதக் டான்ஸர் கமல்... அபாரம். தீவிரவாதிகளிடம் பிடிபட்ட சமயமும் பதற்றம் அடையாமல் கண்கள் சிமிட்டிச் சிமிட்டிச் சமாளிப்பது... கிளாஸிக் அப்ளாஸ்! 'சாகுறதுக்கு முன்னாடி ஒரு தடவை பிரேயர் பண்ணிக்கிறேன்’ என்று தீவிரவாதிகளிடம் அழுது விம்மி, அடுத்த நொடியில் அத்தனை பேரையும் பொளந்தெடுக்கும் அதிரடி அவதாரம்... கமலுக்கு ஒரு மைல்கல் ஆக்ஷன்.

அப்பாவி கமல் அடப்பாவி கமல் ஆகும்போது மருண்டு மிரளும் இடம் மட்டும் பூஜா குமாரின் ஸ்கோரிங் ஏரியா. இந்தப் படத்தில் எதுக்குங்க ஆண்ட்ரியா..? ஒருவேளை இரண்டாம் பாகத்துக்காக அவரது பாத்திரத்தை ரிசர்வ் செய்திருக்கிறார்களோ?

தலிபான் தலைவராக வரும் ராகுல் போஸ், அசத்தல் வில்லன். ஆங்கிலத்தில் பேசியதற்காகத் தன் மகனையே நெற்றிப்பொட்டில் விரல் வைத்து அவர் 'சும்மானாச்சுக்கும்’ சுடும்போதே தன் கதாபாத்திரம் எவ்வளவு டெரர் என்பதை உணர்த்திவிடுகிறார். ''அப்பா இல்லாம வளர்ந்த பசங்க விவரமா இருப்பாங்க'' என்று தான் சொல்லியதற்கு, ''யார் அப்பான்னே தெரியாம வளர்ந்த பசங்க அதைவிட விவரமா இருப்பாங்க'' என்று கமலிடம் கவுன்டர் வாங்கும்போது கெத்து கலைக்காமல் சிரிக்கவைக்கிறார்.

ஆப்கானிஸ்தான் தலிபான்களிடம் தமிழ் பேசும் காஷ்மீரி ஜிகாத்தாகச் சேர்ந்து, பயிற்சி கொடுத்து, பின் அங்கிருந்து கமல் தப்பிக்கும் காட்சிகள் படத்தின் படபடப்பு அத்தியாயங்கள். 'தலிபான்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்’ என்று 'செய்முறை’ விளக்கம் அளித்திருக்கும் கமல், உருவத்திலும் உடல் மொழியிலும் தேர்ந்த ஜிகாதி போலவே நடித்து மிரட்டுகிறார்.

''தீவிரவாதியைக் கடவுள்தான் காப்பாத்தணும்?'' என்று பூஜா குமார் சொல்ல, ''எந்தக் கடவுள்?'' என்று கமல் கேட்பதும், ''நான் இந்து. என் கடவுளுக்கு நாலு கை இருக்கும்!'', ''அப்படின்னா அவரை எப்படிச் சிலுவையில அறைவீங்க?'' ''நாங்க எங்க கடவுளைச் சிலுவையில அறைய மாட்டோம். கடல்ல தூக்கிப் போட்ருவோம்!'' போன்ற வசனங்களும் கமல் பிராண்ட் கிண்டல்ஸ்.

குழந்தை ஒன்றைத் தவறுதலாகக் கொன்ற அமெரிக்க ராணுவ வீரர் வருந்துவதும், ''அமெரிக்கர்கள் பெண்கள், குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள்'' என்று தலிபான் தலைவரே அமெரிக்காவுக்கு ஆதரவாகப் பேசுவதும்... அடடே... அமெரிக்க ஜால்ரா!

'டர்ட்டி பாமை’ வெடிக்கவைக்கவிருக்கும் தீவிரவாதியைப் பிடிக்க, அவன் வீட்டுக்கு அருகில் ரயில் கடக்கும் இரைச்சலில் கதவை உடைத்துச் சென்று டார்கெட் அடிப்பது, வெடிகுண்டு ரிமோட்டில் தவறுதலாகக் கை பட்டு வெடித்துவிடாமல் இருக்க சேஃப்டி லாக் வைத்திருப்பது, தட்டான் போலப் பறந்து படம் எடுக்கும் ரிமோட் கேமரா, கதவிடுக்கில் வளைந்து சென்று படம் எடுக்கும் கேமரா எனப் படம் முழுக்க நவீன உத்திகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.


''நான் ஒரு முஸ்லிம். என் பெயர் தௌபீக்'' என்று சொல்வதைத் தவிர, கமல் ஒரு முஸ்லிம் என்பதற்கான எந்தப் பின்னணி விவரமும் படத்தில் இல்லையே! அப்துல் கலாமோ, ஷாரூக் கானோ... யார், எவராக இருந்தாலும் விமான நிலையத்தில் துகிலுரியும் அமெரிக்காவில், ஓமரும் அவரது தளபதியும் சர்வ சுதந்திரமாக காரில் உலா வருவது, எஃப்.பி.ஐ-க்கு கமலைப் பற்றித் தகவல் தருவது, தனி விமானத்தில் பறப்பதெல்லாம்... லாஜிக் இல்லாத ஆப்கன் பாப்கார்ன். இந்திய உளவுத் துறை அதிகாரி அமெரிக்காவைக் காக்க உயிரைக் கொடுத்துப் போராடுவதும் 'ஹாலிவுட் கதவுக்கு காலிங் பெல்’!



அதிரடி அடிதடி படத்தில் பின்னணி இசையில் டெரர் கூட்டும் ஷங்கர் எஹ்சான் லாயின் இசை, 'உன்னைக் காணாது கண்’ பாடலில் தாலாட்டுகிறது. சானுஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில் அமெரிக்காவும் ஆப்கன் லொகேஷன் மலைகளும் அழகும் அபாரமுமாக மிரட்டுகிறது.    

முன்னரே பல தமிழ்ப் படங்களில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தீவிரவாதி வில்லன்களைப் பார்த்திருக்கிறோம்தான். ஆனால், கமல் என்கிற நடுநிலையான கலைஞனுக்கு என்று ஒரு சமூகப் பொறுப்பு உண்டல்லவா? அந்த விதத்தில் குர்-ஆன் ஓதிவிட்டுக் கழுத்தை அறுப்பது, வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் முன் தொழுவது, 'முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்ல வேண்டும்’ போன்ற வசனங்களை ஒலிக்கவிட்டுஇருப்பது... தவிர்த்திருக்கலாமே கமல்!

ஆனால், அந்த சர்ச்சைகளைத் தாண்டி இது கமலின் 'விஸ்வரூபம்’தான்!

விகடன் விமர்சனக் குழு


thanx - vikatan

கொழுந்தியா கிட்டே மச்னி ரத்னமா பேசுவது எப்படி?

1. எனது ஆட்சியில் என் ஆணைப்படி கமல் ன் விஸ்வரூபம் 7 2 2013 முதல் வெளியிடப்படுகிறது.அண்ணா நாமம் வாழ்க.MGR நாமம் வாழ்க.அல்லா நாமம் வாழ்க



-------------------


2. எல்லா ஏழரையையும் கடந்து பிப் 7 முதல் ;-))))))))


---------------------



3. அதீத பெண்மையின் உச்சம் #ஆண் மனதை புரிதல.புருஷன் பேச்சை கேட்டல் # சும்மா ஒ எ கீ ;-))்



--------------------



4. ரேப்பண்ணவந்தவன் கிட்டெஉனக்கு எய்ட்ஸ் இருக்குன்னு பொய் சொல்லியும் அவன் பயப்படலையா? ஏன் ?



 லேடி - அவன் ஆல்ரெடி எய்ட்ஸ் பேஷன்ட்டாம் 



------------------------



5. புற்று நோய் வராமல் இருக்க பாம்புப்புற்று எறும்புப்புற்று கரையான் புற்று பக்கம் போகாமல் இருந்தா போதுமா?



--------------------


6. இன்று கேன்சர் தினம்.உங்கள் கண்ணில் தென்படும் வடபடும் தம் அடிக்கும் மாடர்ன் பிகர்களிடம் அட்வைஸ்மழை பொழிய ஒரு வாய்ப்பு




-------------------



7. அதிகம் பேசும் பெண்ணைக் கூட வார்த்தை வராமல் லிப் கிஸ் அடித்தே தடுமாற வைக்கும் ஆண் திறமைசாலி தான்....



-----------------------



8.  போடா "மொகரகட்ட" என்று ஊடாடினாள்.வாடி செம கட்ட என நூலாடினேன்

-------------------------



9. ஒவ்வொரு கலைஞனின் ஆகச்சிறந்த படைப்புகலளும் 25-40 அகவயில் மட்டுமே வரும் - சுஜாதா# 41 வயசு ஆனா குழந்தை பெத்துக்கக்கூடாதோ




------------------------



10 நவரசம் = மிளகுரசம் தக்காளி ரசம் பூண்டுரசம் கறிவேப்பிலை ரசம் கொத்துமல்லி ரசம் பொதினாரசம் கசாயரசம் பொடிரசம் பாதரசம் 


-------------------



11. ஒரு மணி நேர பீரியட் ல 10 நிமிஷம் அட்வைஸ் பண்ணா டீச்சர்.ஒரு மணி நேரமும் அட்வைஸ் பண்ணா லெக்சரர்்



-------------------



12. ஜெமோ டூ மணிரத்னம் - தமிழ் நாட்ல 2 புத்திசாலிங்கதான். 1 நான் 2 நீங்க.ஒரு பயலுக்கும் படம் புரியல





---------------------


13. கடல் படத்துக்கு வைத்திருக்க வேண்டிய டைட்டில் சாத்தான் VS கடவுள்


-------------------


14. கமல் - எந்திரன் ல ரஜினி ரோபோவா பேசும் மேஏஏஏ டயலாக் ஹிட் ஆன மாதிரி என்னோட மூ ஹிட் ஆகும் # சும்மா




---------------------


15. கமல் அடுத்த படத்தில் 3 வேடங்கள் # அப்போ இந்து ,முஸ்லீம் ,கிறிஸ்டியன்?



---------------------



16. கமலின் அடுத்த படம் மூ - சன் நியூசில் கமல் பேட்டி # மூ(டர்கள்)??




-----------------------


17. தாலி கட்ன சொந்த சம்சாரம் கிட்டே மணிரத்ன சுருக்கமாப்பேசு.கொழுந்தியா கிட்டே மச்னி ரத்னமா பேசு




--------------------



18. சுஹாசினி - எதுக்கு சர்ச்க்கு போறீங்க? 



 மணிரத்னம் - பாவ மன்னிப்புக்கேட்க 



---------------------



19. தலைவலி முதல நோய் எல்லாம் ஜெயம் ரவியின் ் ஆதிபகவன் முதற்றே .ஓடிடு ;-))) #சும்மா



-----------------------



20.  துளசிக்கு பதிலா ராதா . கவுதம்க்கு பதிலா கார்த்திக் நடிச்சிருக்கலாம் போல! #கடல# அதுக்கு அலைகள் ஓய்வதில்லையை ரீமேக்கி இருக்க்கலாம்்



-------------------



21. டியர். லெமன் ரைஸ் ரெடி.



 சரி.நீ முதல்ல சாப்பிடு.உனக்கு எதுவும் ஆகலைன்னா நான் சாப்பிட ரெடி 



-------------------



22  ஆபாச கருத்துகள்: டுவிட்டரை மூடினார் ஸ்ரேயா# நல்ல வேளை ட்விட்டரை மட்டும் மூடுனாங்க.ஒரு நிமிஷம் அப்டியே ஷாக் ஆகிட்டேன் ;-)) 




-------------------


23. சுஹாசினி - பாஸிடிவ் விமர்சனங்கள் 8 கடலுக்கு வந்திருக்கே?



 மணிரத்னம் - கடுப்பைக்கிளப்பாதே.எட்டும் நான் தான்.பேக் ஐ டி ல 



-----------------------

24. வயசுக்கு வந்ததும் இந்தக்காலப்பொண்ணுமுதல் வேலையா என்ன செய்யும் ?நான் சமைஞ்சுட்டேன் னு FB ல் ஸ்டேட்டஸ் போடும்




-------------------


25. ஏன் ஆபீஸ் லீவ்?



 உங்க கிட்ட எவ்ளோ பணம் இருக்குன்னு ஆரும் கேக்கறதில்ல,எத்தனை குழந்தைகள்னு தான் கேக்கறாங்க.சோ வி ட்ரை ஹி ஹி 



--------------------------------

Wednesday, February 06, 2013

30 வகை பிரியாணி !

கமகமக்கும் மணத்துடன், நாக்கின் சுவை நரம்புகளைத் தூண்டி, 'இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம்’ என்று கேட்டு சாப்பிட வைக்கும் உணவு வகைகளில் பிரியாணிக்கு தனி இடம் உண்டு. 'இன்னிக்கு ஸ்பெஷல் அயிட்டம் பண்ணப் போறேன்’ என்றாலே,  'பிரியாணிதானே?’ என்று வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கேட்கும் அளவுக்கு சுவையால் அனைவரையும் கட்டிப்போடும் பிரியாணியில் 30 வகைகளை அள்ளித் தந்து அசத்துகிறார் சமையல் கலை நிபுணர் கலைச்செல்வி சொக்கலிங்கம்.
''பனீர் பிரியாணி, காளான் பிரியாணி, மண்சட்டி பிரியாணி, மசாலா ஜூஸ் பிரியாணி என்று வித்தியாசமான, வகை வகையான பிரியாணிகளை செய்து காட்டியுள்ளேன். செய்து பரிமாறுங்கள்... குடும்பத்தினரால் கொண்டாடப்படுவீர்கள்'' என்று உறுதி கூறும் கலைச்செல்வியின் ரெசிபிகளை, கலைநயம் பொங்க அலங்கரித்திருக்கிறர் 'செஃப்’ ரஜினி.
நட்ஸ் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பாதாம், முந்திரி - தலா 50 கிராம், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 10 பல், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் 2 டீஸ்பூன். சோம்பு - அரை டீஸ்பூன், பட்டை - 2 துண்டு, கிராம்பு, ஏலாக்காய் - தலா 2.
ராய்தா செய்ய: வெங்காயம் - 2, தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, வெள்ளரிக்காய் - சிறு துண்டு, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், இஞ்சி - சிறிதளவு, தயிர் - ஒரு கப், கடுகு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்று சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய், எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன்,  நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, நன்கு வதங்கியபின் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். இதில் 2 கப் தண்ணீர் விட்டு கலந்து, தண்ணீர் கொதித்தபின் ஊற வைத்த அரிசியை சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் பாதாம், முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுத்து சேர்த்து இறக்கவும். ராய்தாவுடன் பரிமாறவும்.
ராய்தா செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கி, உப்பு போட்டு பிசிறி, தனியாக வைக்கவும். தக்காளி, பச்சை மிளகாய், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கவும். தேங்காய், இஞ்சி இரண்டை யும் சேர்த்து அரைக்கவும். பிசிறி வைத்த வெங்காயத்தை பிழிந்து கொள்ளவும். இதனுடன் தக்காளி, வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், தேங்காய் - இஞ்சி விழுது சேர்த்து, எல்லாவற்றையும் தயிருடன் சேர்த்துக் கலக்கவும். எண்ணெ யில் கடுகு தாளித்து இதனு டன் சேர்க்கவும்.
இந்த ராய்தா, எல்லா பிரியாணிகளுக்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.

புதினா பிரியாணி
தேவையானவை: பசுமதி அரிசி - 250 கிராம்,  வெங்காயம் - ஒன்று, தேங்காய்ப் பால் - அரை கப், தயிர் - 2 டீஸ்பூன், உரித்த பச்சைப் பட்டாணி - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு -  தேவையான அளவு.
அரைக்க: புதினா - 2 கைப்பிடி அளவு, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 3, பட்டை - 2 துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல்.
செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்று சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, நெய், எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் அரைத்த விழுதை சேர்த்து எண்ணெய் மிதந்து வரும் வரை வதக்கி, தேங்காய்ப் பால், தயிர் சேர்த்து வதக்கவும். பிறகு, பட்டாணி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, கொதித்தும் ஊற வைத்த அரிசி சேர்த்து, வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

காளான் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், காளான் - 10, வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: சோம்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பட்டை - 2 துண்டு, பூண்டு - 10 பல், கிராம்பு - 2, மிளகு, மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், ஏலக்காய் - 2.
செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் அரைத்த விழுது, நறுக்கிய தக்காளி, காளான், உப்பு, புதினா, கொத்தமல்லி எல்லாம் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். அதன்பின் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், ஊற வைத்த அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

பட்டாணி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, தயிர் - 3 டீஸ்பூன், பச்சைப் பட்டாணி - கால் கப், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல், பட்டை - 2 துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 2.
செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அரைத்த விழுது சேர்த்து, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள், தயிர், பச்சைப் பட்டாணி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். ஊற வைத்த அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

தக்காளி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், சீரகம் - அரை டீஸ்பூன், நாட்டுத்தக்காளி - 5, பச்சை மிளகாய் - ஒன்று, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடுப்பில் குக்கரை வைத்து... எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் தாளித்து, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகத் தொக்காக வதக்கி கொத்தமல்லி சேர்க்கவும். பின்னர் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அரிசியை சேர்த்து மூடி, ஒரு விசில் விட்டு 5 நிமிடம் சிறிய தீயில் வைத்து இறக்கிப் பரிமாறவும்.

 வெங்காய பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்கா யம் - 2 (பொடியாக நறுக்க வும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - 2, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 10 பல்.
செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன் னிறமாக வதக்கி, உப்பு,      மஞ்சள்தூள் சேர்க்கவும். பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும், அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

 தேங்காய்  தக்காளி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் - ஒன்று, நாட்டுத்தக்காளி - 4, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: மிளகாய்த்தூள், சோம்பு - தலா அரை டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல், பட்டை - ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்.
செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து மேலும் நன்கு வதக்கவும். பின்பு, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

மசாலா தக்காளி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம்,  வெங்காயம் - ஒன்று, நாட்டுத்தக்காளி - 4, பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லி, புதினா - ஒரு கைப்பிடி அளவு, தயிர் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 10 பல், பட்டை - 2 துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 2.
செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய்,  உப்பு, கொத்தமல்லி, புதினா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்

புழுங்கலரிசி பிரியாணி
தேவையானவை: புழுங்கலரிசி - கால் கிலோ, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல், தேங்காய் - ஒரு துண்டு, புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா 2, சின்ன வெங்காயம் - 8, நாட்டுத்தக்காளி - 2,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சைப் பட்டாணி  - கால் கப், பிரியாணி இலை - ஒன்று, நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அரிசியை, உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். தேங்காய், புதினா, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், ஏலக்காய், இஞ்சி, பூண்டு... இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அம்மியில் அரைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், வெண்ணெய் சேர்த்து பிரியாணி இலை தாளித்து, வெங்காயம், தக்காளியை வதக்கி, அரைத்த விழுதுகளை ஒன்றன் பின் ஒன்றாகத் தனித்தனியாக போட்டு வதக்கவும். பச்சைப் பட்டாணியை சேர்த்து மேலும் வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும், எல்லாம் நன்றாக வதக்கியதும் வேக வைத்த சாதத்தை சேர்த்துக் கிளறி, பாத்திரத்தை மூடி, சிறிது நேரம் கழித்து இறக்கினால்...  புழுங்கல் அரிசி பிரியாணி ரெடி.

அவசர பிரியாணி
தேவையானவை: பிரியாணி அரிசி - கால் கிலோ, இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கவும்), பூண்டு - 8 பல் (நசுக்கி வைக்கவும்), பச்சை மிளகாய் - 4  (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லி, புதினா - ஒரு கைப்பிடி அளவு, வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, சோம்பு - கால் டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் - தலா 2, தயிர் - 2 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில், பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி... பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கி... தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தயிர் சேர்த்து மேலும் வதக்கவும். அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, அரிசியைப் போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால் காய்கறி சேர்த்துக் கொள்ளலாம்.

காய்கறி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பீன்ஸ் எல்லாம் சேர்த்து - ஒரு கப், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அரைத்த விழுது - ஒன்றரை டீஸ்பூன், வெங்காயம்,  பச்சை மிளகாய் - தலா ஒன்று, தக்காளி - 3, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தயிர் - 4 டீஸ்பூன், புதினா - கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு. எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, தயிர், உப்பு, காய்கறி, புதினா, கொத்த மல்லி  சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

கொண்டைக்கடலை பிரியாணி
தேவையானவை: பச்சரிசி அல்லது சீரகசம்பா அரிசி - 250 கிராம், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 3, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அரைத்த விழுது - ஒரு டீஸ்பூன், ஊற வைத்து, வேக வைத்த கொண்டைக்கடலை - அரை கப், பிரியாணி இலை, பட்டை - தலா ஒன்று, எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி. காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, கொண்டைக்கடலை சேர்க்கவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும்.

 கத்திரிக்காய் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம்,   வெங்காயம் - ஒன்று, கத்திரிக்காய் - 3 (சுமாரான அளவு, கசப்பில்லாதது), தக்காளி - 3, மிளகாய்த்தூள் - ஒன்றே கால் டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புதினா - கறிவேப்பிலை - கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் விழுது - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். கத்திரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி... மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக் கொள்ளவும் (அல்லது தோசைக்கல்லில் போட்டு வறுத்தெடுக்கவும் செய்யலாம்). அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி... நறுக்கிய தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மேலும் வதக்கவும். இதில் அரை வேக்காடாக வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி, அதில் பாதியை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொண்டு, பாத்திரத்தில் உள்ள கலவையில் கத்திரிக்காயை பரப்பி, எடுத்து வைத்துள்ள சாதத்தை அதன்மேல் பரப்பி, அதன்மேல் நெய் ஊற்றி, பாத்திரத்தை மூடி, சிறிது நேரம் சிறு தீயில் வைத்து இறக்கி, கிளறி பரிமாறவும்.

மசாலா ஜூஸ் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தயிர் - 3 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன்,  நெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
அரைக்க: தக்காளி - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 10 பல், பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 2.
செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்து, கெட்டியாக வடிகட்டி, சாறு எடுக்கவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி... அரைத்து வடிகட்டி எடுத்த சாற்றை ஊற்றி, நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் இதனுடன் மஞ்சள்தூள், உப்பு, தயிர் சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்னர் அரிசியை சேர்த்துக் கிளறி, வெந்ததும் இறக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், காய்கறி சேர்த்துக் கொள்ளலாம்.

சீரக சாதம்
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், நெய் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியோடு, தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். நெய்யில் சீரகம் தாளித்து சாதத்தோடு சேர்த்துக் கிளறவும்.
இதை தனியாக சாப்பிட முடியாது. எனவே, காய்கறி குருமா, கடலைக்குழம்பு போன்றவற்றோடு சேர்த்து சாப்பிடலாம்.

பிரெட் புலாவ்
தேவையானவை: சீரகசம்பா அரிசி - 250 கிராம், தேங்காய்ப் பால் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, தயிர் - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா ஒன்று, பிரெட் துண்டுகள் - அரை கப் (எண்ணெயில் பொரித்தது), எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும்... பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் தயிர், உப்பு, தேங்காய் பால் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும். இதனுடன் வறுத்த பிரெட் துண்டுகளை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

வெந்தயக்கீரை சாதம்
தேவையானவை: பிரியாணி அரிசி - 250 கிராம், வெந்தயக்கீரை - 2 கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - 3, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், புதினா - அரை கைப்பிடி அளவு, கொத்தமல்லி - அரை கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, தேங்காய்ப் பால் - அரை கப், வெங்காயம் - ஒன்று, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று, தயிர் - 3 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தனியாத்தூள், புதினா, கொத்தமல்லி, மஞ்சள்தூள், சின்ன வெங்காயம் ஆகியவற்றை நசுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, நசுக்கி வைத்துள்ளவற்றையும் சேர்த்து, கீரையை சேர்த்து வதக்கவும். இதனுடன் தயிர், உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்ப் பால் சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

மொச்சை பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், பச்சை மொச்சை - கால் கப் (ஊற வைத்து, தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்), வெங்காயம் - 2, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 3, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா ஒன்று, சோம்பு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு ஆகியவற்றையும் தனியாக ஊற வைக்கவும். வெங்காயம் ஒன்றை அடுப்பில் சுட்டு பின் தோல் நீக்கி அதனோடு தனியாத்தூள், பாதியளவு புதினா, கொத்தமல்லி, ஒரு பச்சை மிளகாயை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் ஊற வைத்த சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து... மொச்சை சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், அரைத்த வெங்காய விழுது, நறுக்கிய தக்காளி, மீதமுள்ள 2 பச்சை மிளகாய், மீதமுள்ள புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும்.

பனீர் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், பனீர் - 150 கிராம் (துண்டுகளாக்கவும்), வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, இஞ்சி, பூண்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சைப் பட்டாணி - கால் கப், தயிர் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி... இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கி, தயிர், உப்பு, பனீர் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியைச் சேர்த்துக் கிளறி, வெந்ததும் இறக்கவும்.

கோவா பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, கோவா - 50 கிராம் (இனிப்பு இல்லாதது), பச்சைப் பட்டாணி - கால் கப், தயிர்- 3 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு, பட்டை கிராம்பு, ஏலக்காய் விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய்  - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும். பச்சைப் பட்டாணி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சேர்த்து தயிர் சேர்த்துக் கிளறவும். இதனுடன் கோவா சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி... கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும்.
குறிப்பு: கோவாவை சிறிது வதக்கினால் போதுமானது. இல்லையென்றால், அடிபிடித்து விடும். கோவா வேண்டாம் என்றால் கெட்டியான தேங்காய்ப் பால் சேர்க்கலாம்.

 குட்டீஸ் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், நெய் - 3 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், ஒரு பச்சை மிளகாயுடன் புதினா, கொத்தமல்லி, தேங்காய் சேர்த்து அரைத்த விழுது - ஒரு கரண்டி, கேரட் - ஒன்று, பட்டாணி - கால் கப் (நசுக்கி வைக்கவும்), பீட்ரூட் - பாதி அளவு, வெங் காயம், தக்காளி - தலா ஒன்று, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேரட், பீட் ரூட்டை  துருவிக் கொள்    ளவும். வெங்காயம்,    தக்காளியை பொடியாக நறுக்கவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த பச்சை மிளகாய் - தேங்காய் மசாலா, கேரட், பீட்ரூட், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, உப்பு சேர்க்கவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.

தேங்காய்ப் பால் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம்,  தேங்காய்ப் பால் - ஒன்றரை கப், தயிர் - 3 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - ஒன்று, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு - தலா ஒன்று, புதினா - ஒரு  கைப்பிடி அளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது, புதினா சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் தயிர், உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்ப் பால் சேர்க்கவும். இதில் அரை கப் தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

நெய் சாதம்
தேவையானவை: சீரகசம்பா அரிசி - 250 கிராம், நெய் - 4 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு, புதினா - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று, பிரியாணி இலை - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சி, பூண்டு, புதினா, வெங்காயம்... எல்லாவற்றையும் மிகவும் பொடியாக நறுக்கி தனியே வைக்கவும். அரிசியை உப்பு சேர்த்து முக்கால்  வேக்காடு பதத்தில் சாதம் வடித்து வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து 2 டீஸ்பூன் நெய் ஊற்றி, பிரியாணி இலை தாளித்து, பொடியாக நறுக்கியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி, வேக வைத்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி, பாத்திரத்தை மூடி ஐந்து நிமிடம் கழித்து இறக்கி, மீதி நெய்யை ஊற்றி கிளறி பரிமாறவும்.

மண்சட்டி பிரியாணி
தேவையானவை: பச்சரிசி - 250 கிராம், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 3 (நன்றாக பழுத்தது), பிரியாணி இலை - ஒன்று, புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - ஒன்று, பட்டை, ஏலம், கிராம்பு - தலா ஒன்று.
செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத் துக் கொள்ளவும். அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் மண்சட்டியை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதை சேர்க்கவும். பிறகு புதினா, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, உப்பு சேர்க்கவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும்.

நவதானிய பிரியாணி
தேவையானவை: பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி - 250 கிராம், வெங்காயம் - ஒன்று, நவதானியம் - ஒரு கப் (வறுத்து, ஊற வைத்தது, வேக வைத்தது), தக்காளி - 2, தேங்காய்ப் பால் - கால் கப், எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  
அரைக்க: மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 6.
செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து, நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின் வேக வைத்த நவதானியம், தேங்காய்ப் பால் சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும். விருப்பப்பட்டால், கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம்.

கோலா உருண்டை பிரியாணி
தேவையானவை: சீரக சம்பா அரிசி - 250 கிராம், தக்காளி - 3, வெங்காயம் - ஒன்று, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், புதினா - கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, தயிர் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
கோலா உருண்டைக்கு: துருவிய பன்னீர் - கால் கப், பொட்டுக்கடலை மாவு - 4 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோலா உருண்டை செய்ய கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன் றாகப் பிசைந்து, சிறிய உருண்டை களாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, தயிர் சேர்த்து... புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும். இதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும். சாப்பிடும்போது பொரித்த கோலா உருண்டைகளைச் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

முட்டைகோஸ் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், முட்டைகோஸ் - 250 கிராம், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் அரைத்த விழுது -  ஒரு டீஸ்பூன், தயிர் - 3 டீஸ்பூன்,  தேங்காய்ப் பால் - அரை கப், கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, முட்டைகோஸ் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து வதக்கி, தயிர், தேங்காய்ப் பால் சேர்க்கவும். இதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்துக் கிளறி, வெந்ததும் பாத்திரத்தை மூடி, சிறு தீயில் சிறிது நேரம் வைத்து இறக்கி, பரிமாறவும்.

  தனியா பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், தனியா - 150 கிராம், காய்ந்த மிளகாய் - 4 , இஞ்சி - பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 3, பட்டை கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, உருளைக்கிழங்கு - 100 கிராம், தேங்காய்ப் பால் - அரை கப், எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தனியாவை வறுத்து, குக்கரில் 2 தம்ளர் தண்ணீரில் நன்றாக வேக வைத்து, வடிகட்டி, ஒன்றரை கப் தண்ணீராக எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை விழுதாக அரைக்கவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, உருளைக்கிழங்கு, சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் மிளகாய் விழுதையும் உப்பையும் சேர்த்து வதக்கி... தேங்காய்ப் பால், தனியா தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும்.

 மொகல் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, தயிர் - 3 டீஸ்பூன், புதினா - கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - ஒன்று, ஏலக்காய் - 3, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, காய்கறி கலவை - அரை கப், கேசரி பவுடர் - சிறிதளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து... நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, புதினா, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், காய்கறி, தயிர், உப்பு சேர்த்து தொக்காக வரும் வரை நன்கு வதக்கி, சிறு தீயில் வைக்கவும் (தீயை அணைக்கக் கூடாது).
இன்னொரு அடுப்பில் அரிசியை அரை வேக்காடாக வேக வைத்து வடித்து உடனே சூடாக அடுப்பில் உள்ள தொக்கில் சேர்த்து நன்றாகக் கிளறி, மூடி போட்டு, சிறிது நேரத்துக்குப் பிறகு கேசரி பவுடர் கரைத்து ஊற்றி, கிளறி இறக்கவும்.

 உருளைக்கிழங்கு பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், உருளைக்கிழங்கு - ஒன்று (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி, பூண்டு, பட்டை கிராம்பு, ஏலக்காய் அரைத்த விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், தயிர் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு,  நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி... உருளைக்கிழங்கையும், வெங்காயத்தையும் தனித்தனியாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின் குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி... பொரித்த வெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து... தயிர், உப்பு, உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் தேவையான தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்துக் கிளறி, வேக வைத்து இறக்கவும்.


நன்றி - விகடன்

கடல் படத்துக்கு ஆஸ்கார் விருது அறிவிப்பு,.மணிரத்னம் மகிழ்ச்சி

1. டாக்டர், எனக்கு ஹார்ட் அட்டாக், சீக்கிரம் ஆபரேஷன் பண்ணுங்க ./ 



இருய்யா ,இங்கே அவனவனுக்கு ஹார்ட்பீட் எகிறிட்டிருக்கு, தீர்ப்பு வரட்டும்



------------------------



2. யுவர் ஆனர், ஏன்  ஜவ்வு மாதிரி இழுக்கறீங்க? 



டக்னு தீர்ப்பு வந்தா கமல் ட்ரெண்ட்ல வருவாரு, இழுத்தடிச்சா நான் ட்ரெண்ட்ல வருவேன் ஹி ஹி



-----------------------



3. நைட் எல்லாரும் தூங்குன பிறகு தீர்ப்பு வந்தா கலவரம் , பிரச்சனை வராதுன்னு நினைக்கறாங்க போல . தீர்ப்பு வரும் வரை நாங்க தூங்க மாட்டோம்





---------------------



4. விஸ்வரூபத்துக்கு தடை நீடித்தால் கமல் அரசியலுக்கு வருவார், சாதாரண சினிமாப்பிரச்சனையை ஜெ அரசியல் பகை ஆக்கி விடுவார் # கலைஞர்VS MGR போல்



------------------



5.  ஜெ கமலுக்கு செய்த ஊழ்வினை பெங்களூர் கோர்ட் வழக்கில் உறுத்து வந்து ஊட்டட்டும்




------------------------



6. கமல் ரசிகர்கள் அதிமுக அரசின் வன்மத்தை வஞ்சக நெஞ்சத்தை குறித்து வைத்துக்கொள்வார்கள் #2016



---------------------


7. விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல் கேள்வி..# எதிரிக்கு எதிரி நண்பன்




-------------------------



8.  விஸ்வரூபம் விவகாரத்தில் சோ: முதல்வர் ஜெ வுக்கு ஆதரவு# சோ SAD.துக் (க)ளக் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்



--------------------


9. ஜெ வின் பழிவாங்கும் குணத்தால் விஸ்வரூபம் மாஸ் ஹிட் ஆகி ரூ 100 கோடி வசூலைத்தாண்டுவது உறுதி # மார்க் மை வோர்ட்ஸ்



-------------------



10. ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும் - சோ # படத்தை பார்த்துட்டு பேசனும்




----------------------



11. பச்சை நிறத்தை ராசியான நிறமா நினைக்கும் ஜெ இந்தப்படத்துக்கும் பச்சைக்கொடி காட்டி இருக்கலாம்.இப்போ பாதிப்பு ஜெ வுக்கே



----------------------



12. தே.மு.தி.க தலைவர் விஜய்காந்த் கமலுக்கு ஆதரவு. # கேப்டனின் "மனக்கணக்கு" புரியுது



-------------------


13. ஜெ- முஸ்லீம்கள் ஓட்டு பூரா நமக்குத்தான். ஓ பி எஸ் ( மைண்ட் வாய்ஸ்)- அவங்க ஓட்டு மட்டும்தான் விழப்போகுது



------------------------



14. ஜெ ( மைன்ட் வாய்ஸ்) - ரஜினியால ஒரு தடவை ஆட்சி போச்சு.கமலாலும் ஒரு முறை போயிடுமோ?



-------------------------------



15. 2013 - கமல் க்கு வசந்தகாலம் பாதி கசந்த காலம் மீதி.2016 ஜெ க்கு இரட்டை இலை உதிரும் காலம்



------------

16. ஜெயா டிவிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை - ஜெ # நல்ல வேளை. தமிழக அரசுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.தடை பண்ணது நான் இல்ல னு சொல்லல



---------------------



17. ஜெ - கமல் என் நண்பர்தான், நான் அவர் நடித்த பஞ்சதந்திரம் பார்த்து சிரிசிரி எனசிரித்திருக்கிறேன், அவரும் என் படம் பார்த்து சிரிப்பார் # சும்மா




---------------------



18. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஜெ தான், என் ஆதரவு அவருக்கு எப்போதும் உண்டு - கமல் அறிவிப்பு , கலைஞர் அதிர்ச்சி # சும்மா





-------------------




19. கமல் எனக்கு விரோதி இல்லை, கலைஞர் கூட எனக்கு எந்த பகையும் இல்லை. எனக்கு நான் தான் எதிரி , ஹி ஹி # சும்மா










--------------------






20. நேற்று இரவு 10 மணிக்கு எம் ஜி ஆர் என் கனவில் வந்து  கமல் ”நம்மவர்” என்றார், அப்போதுதான் எனக்கு நினைவு வந்தது








----------------------






21. கலைஞர் டி வி என்னுடையது அல்ல , கனிமொழியினுடையது. - கலைஞர் ஏட்டிக்குப்போட்டி அறிக்கை # சும்மா








------------------------------




22, MGRக்கு கமல் பற்றி ஜெ. எழுதிய கடித ஆதாரம் என்னிடம் இருக்கிறது-கலைஞர் # தலைவா! அடுத்தவங்க  லெட்டரை எதுக்குபாதுகாப்பா வெச்சிருக்கீங்க?



------------------------



23. உன் உதடுகளுக்கு முத்தம் தரு வாயில் வாயில் காப்போனாக உன் உள்ளங்கையை வைத்து மறைத்து விடுகிறாய் !



-------------------


24. படத்தின் 20 நிமிடக்காட்சிகள் கட் என்பதால் கவுன்ட்டர் ரேட்டில் இருந்து 20% டிக்கெட் சார்ஜ் குறைத்து வசூலிக்கப்படும் .கமல் ு#சும்மா



---------------------


25. கடல் படத்துக்கு ஆஸ்கார் விருது அறிவிப்பு.போட்டிக்குப்போகாமலேயே ஒரு படம் விருது பெறுவது இதுவே முதல் முறை .மணிரத்னம் மகிழ்ச்சி # சும்மா



------------------------------------









Tuesday, February 05, 2013

இயக்குநர் ஹரி எனக்கு மாமா வா இருந்தும் நோ யூஸ் - தடையறத்தாக்க அருண் விஜய் டீல் -ல் விட்ட பேட்டி

http://www.kollywoodtoday.net/gallery/actors/arun_vijay/images/arunvijay_0001.jpgஅஜித் விஜய் சூர்யா விக்ரம் லிஸ்ட்ல நானும் இருப்பேன் !

க.நாகப்பன் 
தடையறத் தாக்க’ படத்துக்குப் பிறகு இப்போலாம் சினிமா விழாக்களுக்குப் போனா என்னை முதல் வரிசைல உக்காரவைக்கிறாங்க. ஆனா, இதே அருண் விஜயைச் சில வருஷங்களுக்கு முன்னாடி அதே நிகழ்ச்சிகளில் ஆறாவது, ஏழாவது வரிசையில் உக்காரவைப்பாங்க. அப்பவும் இப்பவும் நான் ஹீரோவாகத்தான் நடிச்சுட்டு இருக்கேன். ஒரு வெற்றியோட மதிப்பு என்னன்னு ரொம்ப அழுத்தமா உணர்ந்துட்டேன்!''- அழகாகச் சிரிக்கிறார் அருண் விஜய். 'தடையறத் தாக்க’ பட வெற்றிக் குப் பிறகு மிகவும் கவனமாகக் காய் 


நகர்த்தத் தொடங்கியிருக்கும் பக்குவம் தொனிக்கிறது அருணிடம்.  


  ''ஆமாங்க... போதும் போதும்கிற அளவுக்குப் பாடம் படிச்சுட்டேன். அடுத்த படத்தில் 'தடையறத் தாக்க’ சாயல் இருக்கக் கூடாது. ஆனா, அந்த வெற்றியின் பிரதிபலிப்பு தொடரணும்னு ஆசை. இந்த நிபந்தனைகளைப் பூர்த்திசெஞ்சது 'டீல்’. துறுதுறுனு சாதிக்கணும்கிற வெறியோட இருக்கார் படத்தோட டைரக்டர் சிவஞானம். குறும்படம் பார்த்திருக்கோம். அதையே சினிமாவாகூடப்  பண்ணியிருக்கோம். ஆனா, தான் எடுக்க நினைக்கிற படத்தையே சின்னதா, அழகா படம் பிடிச்சு, ஒரு டிரெய்லரோட என்னைப் பார்க்க வந்தார் சிவஞானம். அந்த வீடியோ பார்த்து அசந்துட்டேன். முழு நம்பிக்கையோட களம் இறங்கிட்டேன்!''



''பல ஹீரோக்கள் இப்ப பண்ணிட்டு இருக்கிற டான்ஸ், ஃபைட்லாம் நீங்க எப்பவோ பண்ணீங்க. ஆனா, ஒரு பிரகாசமான ஓப்பனிங்குக்கு இத்தனை வருஷம் காத்திருக்க வேண்டியதாயிருச்சே?'' 



''என்கிட்ட என்ன தப்புனு எனக்குத் தெரியலை. ஒவ்வொரு படம் பண்ணும்போதும் பெஸ்ட் தரணும்னுதான் உழைச்சேன். ஒரு வேளை ப்ளஸ் டூ முடிச்சவுடனே சினிமாவுக்கு வந்தது தப்போன்னு இப்பத் தோணுது. சூர்யா எனக்கு கொஞ்சம் சீனியர். எனக்கும்  கார்த்திக்கும் ஒரே வயசு. ஆனா, அவங்கஎல்லாம் சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சப்ப ஃப்ரெஷ்ஷா தெரிஞ்சாங்க



 ரொம்ப சீக்கிரமே வந்துட்டதால, எனக்கு அந்த மெச்சூரிட்டி லெவல் இல்லாமப் போயிருச்சு. 'பாண்டவர் பூமி’ வரைக்கும் என்ன ரூட்ல போறதுன்னே தெரியலை. இத்தனைக்கும் அப்போதைய சினிமா ஹீரோக்கள் பண்ணிட்டு இருந்த பல விஷயங்களைத் தாண்டியும் நான் மெனக்கெட்டேன். இண்டஸ்ட்ரியில முதல்ல சிக்ஸ்பேக் வெச்சது நான்தான்னு சொன்னா நம்ப முடியுமா உங்களால?



 'ஜனனம்’ படத்துக்காக சிக்ஸ்பேக் வெச்சேன். ஆனா, க்ளைமாக்ஸ்ல சட்டையைக் கிழிச்சு எறிஞ்சு அதை வெளியே காமிக்கலை. தப்பான படங்கள் பண்ண மாதிரியும் தெரியலை. யோசிச்சா 18 படங்களில் ரெண்டு படங்கள் தப்பான படங்களா இருந் திருக்கலாம். ஆனா, அதைத் தாண்டி பேர் சொல்லக் கூடிய படங்களும் இருக்கு.


இவ்வளவு உழைச்சும் யாருமே என்னைக் கண்டுக்கலையேன்னுதான் வருத்தமா இருந்துச்சு. அப்போ என்னைச் சுத்தி இருந்த தனிமைதான் எனக்கு நிறைய கத்துக் கொடுத்துச்சு. அந்த விதத்துல சினிமாவுக்கும், எனக்கு வாய்ப்பு கொடுத்தவங்களுக்கும், கொடுக்காதவங்களுக்கும் நான் நிறையவே நன்றிக்கடன் பட்டிருக்கேன். ஆனா, இதுதான் எனக்கான ஸ்டார்ட் பட்டன். நான் நிறையப் பேருக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கு. அஜித், விஜய், சூர்யா, விக்ரம் லிஸ்ட்ல சீக்கிரம் நானும் இருப்பேன்!'' 


 
''இவ்வளவு ஃபீல் பண்றீங்க. பல ஹீரோக்களுக்கு மாஸ் ஹிட் கொடுத்த டைரக்டர் ஹரி உங்க மாமாதானே! 'எனக்காக ஒரு படம் பண்ணித்தாங்க’னு அவர்கிட்ட அன்புக் கட்டளை போட்டிருக்கலாமே?'' 



''புரொஃபஷன் வேற, ரிலேஷன்ஷிப் வேற. நான் அவரை ஹரி மாமான்னு கூப்பிடுற அந்த ரிலேஷன்ஷிப்தான் எனக்கு முக்கியம். 'அவங்க வீட்ல இருக்குற டைரக்டரே அவரை வெச்சுப் படம் பண்ணலையே’னு பலர் சொன்னது எனக்கு மைனஸ்தான். ஆனா, எங்க மாமா தன்னை நிரூபிச்சுதான் அந்த இடத்துக்கு வந்திருக்கார். நானும் என்னை நிரூபிப்பேன். இந்த கேரக்டருக்கு அருண் பொருத்தமா இருப்பான்னு அவருக்குத் தோணுச்சுன்னா, அவரே என்கிட்ட வருவார். அது சீக்கிரமே நடக்கும்!''


நன்றி - விகடன் 

அன்னக்கொடியும் கொடிவீரனும்

அன்னக்கொடியும் கொடிவீரனும்’ பட இசை வெளியீட்டு விழா என்றுதான் அறிவித்தது அழைப்பிதழ். ஆனால், மதுரை அரசரடி மைதானத்தில் அன்று அரங்கேறியதோ 'இமயத்திற்கு மரியாதை’ விழா. பாரதிராஜாவின் 36 வருட திரை வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் வகையில் நடந்த விழாவை 80-களின் திரை நட்சத்திரங்கள் கலகல கலாட்டாவாக நடத்த, நெகிழ்ந்துவிட்டார் பாரதிராஜா.


 பாரதிராஜாவை முதன்முதலில் சந்தித்தது, ஹீரோவாக அறிமுகமானது உள்ளிட்ட சம்பவங்களைப் பகிர்ந்துகொண்ட பாக்யராஜ், 'என் குருநாதரின் ஆசியுடன் சினிமாவில் நான் என்னுடைய செகண்ட் இன்னிங்ஸைத் தொடங்கப்போகிறேன். படத்தின் தலைப்பை பாரதிராஜா அறிவிப்பார்!'' என்றபடி ஒரு துண்டுத் தாளை அவரிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் பாரதிராஜாவுக்கு முகமெல்லாம் அதிர்ச்சி. 'படத்தின் பெயர் 'துணை முதல்வர்’ சப் டைட்டில் 'அன் அப்போஸ்ட்!'' என்று வாசித்த பாரதிராஜா, ''அட சண்டாளா... மாட்டிவுட்டுட்டான்யா!'' என்று சிரித்தார்.  


பார்த்திபனின் பேச்சு முழுக்கக் குறும்பு தெறித்தது. 'மயிலு, முத்துப்பேச்சி, பாஞ்சாலி, பஞ்சவர்ணம்னு அவரோட கதாநாயகிகள் பேரு எல்லாம் 'நச்’னு மனசுல பதிஞ்சிரும். ஆனா, அவர் படத்து ஹீரோக்கள் எவன் பேரும் என் ஞாபகத்துல இல்லை. ஏன்னா, எந்த நாயகனையும் நம்ம மனசுல நிக்கவிட மாட்டாரு அவரு. ஹீரோவை சப்பாணி ஆக்கிடுவாரு. அதே சப்பாணி சிகப்பு ரோஜாவோடு வந்தா, மென்டல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடுவாரு. சுதாகர் மாதிரி ஒரு அப்பாவி கிடைச்சா... கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கழுதை மேல ஏத்திவிட்ருவாரு. இப்படி எல்லா ஹீரோவையும் கேவலப்படுத்திக்கிட்டே இருந்தா... அவங்க மூஞ்சி எப்படி நமக்கு ஞாபகத்துல இருக்கும்?



பாரதிராஜாவுக்கு ஒரு மன வருத்தம் உண்டு. 'ஊர்ல எல்லாரும் வந்து பாராட்டுறாங்க. ஆனா, வீட்ல சரியான மரியாதை கொடுக்க மாட்டேங்குறாங்களே’னு சொல்லுவார். 'இந்த பாரதிராஜா எவ்வளவு சாதிச்சிருக்கான். அவனை ஏன்யா சராசரி மனுஷனா ட்ரீட் பண்றாங்கன்னு 'தண்ணி’ப்பட்ட... ஸாரி, தனிப்பட்ட முறையில் வருத்தப்படுவார். வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை உங்களோடு நாங்க இருப்போம். தமிழ் சினிமா இருக்கிற வரை நீங்க இருப்பீங்க!'' என்று நெகிழ்வாக முடித்தார்.


வடிவுக்கரசி பேசியபோது, '' 'முதல் மரியாதை’ படத்துல, சிவாஜி சாரோட ஜோடின்னதும் 'தங்கப்பதக்கம்’ கே.ஆர்.விஜயா மாதிரி நடிக்கப்போறோம்னு சந்தோஷமாப் போனேன். ஆனா, அங்க போய் நின்னதுமே முஞ்சில கரியப் பூசுனாங்க, காதுல தண்டட்டி போட்டாங்க. அப்புறமா, 'அப்பச்சி கோவணத்தைக் காத்து தூக்கிட்டுப் போயிடுச்சாம். அடுப்பு ஊதுற குழல்ல அப்படி என்னடா ராகம்?’னு வசனம் பேசவெச்சாரு. நான் நொந்துட்டேன். அந்த கேரக்டர் எனக்குப் பிடிக்கவே இல்லை. டைரக்டர் மேல உள்ள கோபத்தைத்தான் படத்துல சிவாஜி சார் மேல காட்டினேன்!' என்று உண்மையைப் போட்டு உடைத்தார்.



சத்யராஜ் பேச்சு முழுக்கத் தகடு தகடுதான். ''நான் நடிச்ச முதல் லவ் சப்ஜெக்ட் 'கடலோரக் கவிதைகள்’தான். அதுக்கு முன்னாடி 75 படத்துல வில்லனா நடிச்சிருக்கேன். நான் ஸ்க்ரீன்ல வந்து நின்னதுமே, 'சூப்பர் ரேப் சீன் இருக்குடா’னு ஆடியன்ஸ் எல்லாம் கை தட்ட ஆரம்பிச்சிடுவாங்க. ஆனா, அப்படிப்பட்ட என் கையில ஆட்டுக்குட்டியைக் கொடுத்து, 'டீச்சர்... டீச்சர்’னு நடிக்கவெச்சவர் பாரதிராஜா!'' என்றார் சத்யராஜ்.



''எங்க காலடி படாத இடமே கிடையாது இந்த மதுரையில். பாரதிராஜாவைப் பாராட்ட வந்த வங்க எல்லாம் அவங்கவங்க அனுபவிச்ச விஷயத்தை அழகாச் சொன்னாங்க. ஆனா, அவரை அதிகமாப் புரிஞ்சுக்கிட்டவன் நான்தான். என்னை அதிகமாப் புரிஞ்சுகிட்டவர் அவர்தான்!'' என்று நெகிழ்ந்த இளையராஜா, இருவருக்கும் இடையிலான நெருக் கத்துக்கு மேலும் பல சம்பவங்களைக் குறிப் பிட்டார்.  



இறுதியில் பேச எழுந்தபோது, உணர்ச்சிப்பிழம்பாக நெக்குருகிவிட்டார் பாரதிராஜா.


''நான் கோபத்தின் உச்சம். அவன் இசை உலகின், தத்துவ உலகின் உச்சம். இந்த பாரதிராஜா சினிமாவைத்தான் ஜெயிச்சேன். நீ சமூகத்தையே ஜெயிச்சவன்டா. நீ மிகப் பெரிய கலைஞன். உனக்கு வித்தை கர்வம் வேணும். வெச்சிக்கோ. இப்பக்கூட எனக்கும் உனக்கும் சண்டை. ஏ இசைஞானி... இந்த மதுரை மண்ணில் நான் ஒன்றைப் பிரகடனப்படுத்துகிறேன்... இங்கே இருந் திருக்க வேண்டிய இன்னொரு தூண் (வைரமுத்து) இங்கே இல்லை. 



நீ உருவாக்கின தூண் இங்க இல்லை. ஒரு எறும்பு உன்னைக் கடிக்குதுடா. அதுக்காக நீ அதைக் கொல்லக் கூடாதுடா. கீழே எடுத்துவிட்றணும்டா. இந்த மண்ணில் ஒரு மொட்டைக் கோபுரம் நின்றுகொண்டு இருக்கிறது கட்டப்படாமல். நீ நினைத்தால் கட்டி முடிக்கலாம். பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து என்ற மூன்று கோபுரங்களும் எழுந்து நிற்கும். நிக்கவைக்கணும். நான் கை கொடுக்குறேன்... நீ..?'' என்று கேள்வியோடு பாரதிராஜா நிறுத்த, சிந்தனையில் ஆழ்ந்தார் இளையராஜா.


நல்ல கனவுகள் நனவாகட்டும்!


நன்றி - விகடன்



மணிரத்னம் மீது சீட்டிங் கேஸ் வருமா?

1. ரைட்டர் ஜெமோ - இனி எந்த மூஞ்சியை வெச்சுக்கிட்டு பிளாக் ட்விட்டர் பக்கம் போக? கழுவிக்கழுவி ஊத்துவாங்ளே?



-------------------



2. கடலுக்குள்ளே மீனம்மா.தியேட்டருக்குள்ளே போவமா.ஒரு பயலும் இல்லம்மா கார்னர் சீட்டைத்தேடம்மா




--------------


3. “தமிழக அரசு வழக்குரைஞர் மன்னிப்பு கேட்ட வேண்டும்” -தணிக்கை வாரியம். # தமிழ் ல ஜெ க்கு பிடிக்காதபல வார்த்தை.அதுல ஒரு வார்த்தை - மன்னிப்பு




--------------------



4. நீங்கள் என்னை கடலில் தூக்கிப்போட்டால் கட்டுமரமா மிதப்பேன்.ஆனா கடல் தியேட்டர்க்கு மட்டும் கூட்டிட்டுப்போய்டாதீங்க



--------------------


5. மணிரத்னம் - நல்ல வேளை கமல் படம் ரிலீஸ் ஆனதால்தான் கடலை தூக்கிட்டாங்கனு சமாளிக்கலாம்.




------------------


6. இன்றைய விஸ்வரூபம் செய்திகள் னு தினம் தனி டைம் நியூஸ் சேனல்ல ஒதுக்கற அளவு வந்துடும் போல.டேய்.படத்தை விடுங்கப்பா.முடியல




-----------------------


7. ராகுல் - கூட்டணி பற்றி பேசிட்டு வா னு அம்மா அனுப்பிச்சாங்க. 



கேப்டன் - உங்கம்மா அனுப்பி இருந்தா உள்ளே வாங்க. அந்த " அம்மா" ன்னா நோ 



----------------------



8. கேப்டனுடன் கூட்டணி அமைக்க ராகுல் ஆலோசனை! # "கலக்குங்க" ஹி ஹி




----------------------



9. கமல் - என் படம் தடை செஞ்சது கூட தேவலை.நாடோடி மன்னன் மாதிரி டப்பா படத்துல நடிச்ச சரத் எல்லாம் தகுதி பற்றி பேசறதை நினைச்சா




------------------


9. இனி வரும் படங்களில் மருந்துக்குக்கூட முஸ்லீம்களை காட்டமாட்டாங்க.ஒதுக்கிடுவாங்க.நட்டம் யாருக்கு?




-------------------


10. படம் எப்படி எடுக்ககூடாது என்பதற்கு விஸ்வரூபம் உதாரணம்-சரத்குமார்# குமாரு உங்க நடிப்பு சுமாரு.கருத்து தாறுமாறு ஜிங் ஜக்



------------------


11. கமலுக்கு ஒரு ஐடியா.எந்த எந்த காட்சிகள் விஸ்வரூபம் -ல நீக்கப்பட்டிருக்குன்னு க்ளைமாக்ஸ்ல நீக்கப்படும் காட்சிகள் விவரம்! னு காட்டிடுங்க



--------------------


12. கடலுக்குபோய்பத்திரமாத்திரும்பி வந்த மீனவர்கள் உண்டு.கடல் படம் பார்க்கப்போய் சேதாரம் இல்லாம திரும்புனவங்க யாரும் இல்ல



-------------


13. மனைவி பிரிந்துஇருக்கும் போது உறவு கொண்டால் அது் பலாத்காரமே -கோர்ட்# பலாச்சுளையை மிளகாப்பொடி தொட்டு சாப்டா பலா த் காரமே.போங்கய்யா யோவ்




----------------------


14. ராகுல் டிராவிட்டை ரசிக்காதவரும் இல்லை.விக்ரம் ன் டேவிட் டை ரசிச்சவரும் இல்லை





----------------------


15. மணிரத்ன்ம் - கடல் ஓடும் வரை உங்க பட ரிலீஸ் கூடாது. 



கமல் - சரி.இன்னும் 2 நாள் கழிச்சு ரிலீஸ் பன்றேன் 



---------------------



16. ஆயிரம் அட்டு பிகர்கள் ் கண்டுகாமவிடப்படலாம்! ஒரு லட்டு பிக்ரைக் கூட மிஸ் பண்ணிடக்கூடாது!



---------------------



17. அடிக்கடி கட் ஆனா த்தான் அது கரண்ட்டு.ஒரு டைமாவது பிட் ஓட்டுனாத்தான் அவன் பிரண்டு


-----------------


18. கமல் - யார் என்று தெரிகிறதா.இவன் தீ என்று புரிகிறதா?




ஜெ - அங்கே என்ன சத்தம்? 



கமல் - சும்மா பாடிட்டு இருந்தேன் மேடம்் 



----------------------------


19. அன்னக் கொடியும் கொடி வீரனும் = அன்னக்காவடியும் கடி வீரனும் # உத்தேசமா ஒரு ஒன் லைன் விமர்சனம் (சும்மா)




-----------------


20. 56 கிலோ # தோழி அப்டேட் ( உத்தேசமா சொன்னது)




---------------------



21. 4 பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல -கமல் (நாயகன் பஞ்ச் )"# 24 பேருக்கு இம்சைன்னா ஒரு படமே ரிலீஸ் இல்ல.- விஸ்வரூபம் கமல்




-------------------

 22. இன்று அறிஞர் அண்ணா நினைவு நாள.எனவே எந்த பிகராவது அண்ணா என அழைத்தால் அவர் போய்ட்டாரு.கண்ணுக்கு கண்ணா நான் இருக்கேன் என்க




-------------------



23.  நான் சினிமாவில் உள் இருக்கிறேன் - சாரு # நீங்க மிஸ் பண்ணுன லைன் " நடிகை வீட்டுக்குள்"



------------------


24. கடல் உள்வாங்கிருச்சாமே!! இல்ல.உயிரை வாங்கிடுச்சு ;-))




---------------------



25. ட்ரெய்லரில் ,போஸ்டரில் லிப் லாக் கிஸ் சீன் காட்டி படத்தில் அதை கட் பண்ணிய மணிரத்னம் மீது சீட்டிங் கேஸ் வருமா? # சும்மா




---------------------------------