Thursday, November 22, 2012

மங்கையர் திலகம் சோனாவும் , ஆண்கள் பாதுகாப்பு சங்கமும்

நடிகை சோனா மீது ராணிப்பேட்டை கோர்ட்டில் வழக்கு

 
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடையை சேர்ந்தவர் வக்கீல் ஜானகிராமன். இவர் பா.ம.க.வின் சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில் வக்கீல் ஜானகிராமன், ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆண்களை இழிவாக பேசியதாக திரைப்பட நடிகை சோனா மீது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள குற்ற முறையீட்டில் கூறியிருப்பதாவது:- 

ஆம்பளைங்க எனக்கு டிஷ்யூ பேப்பர்தான் எனும் தலைப்பில் வந்துள்ள நடிகை சோனா பேட்டியானது ஆண் இனத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், கேவலப்படுத்தும் விதமாகவும், ஆபாசமாக, அருவருக்கதக்கதாகவும் அமைந்துள்ளது. 

ஆண்களுடன் சேர்ந்து வாழ்வதும், திருமணம் செய்து கொள்வதும் முட்டாள்தனம் என புனிதமான திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தி பேட்டியளித்துள்ளார்.

தமிழ் பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும், நாகரீகத்திற்கும் முன் உதாரணமாக திகழும் தமிழ்நாட்டில் இதுபோன்ற கருத்துகளால் பண்பாடு, கலாசாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆண்கள் மீது பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் குறைய வாய்ப்புள்ளது. ஒட்டு மொத்த ஆண் இனத்திற்கும் உள்நோக்கம் கொண்டு அவதூறாக பேசியுள்ளார். 


நடிகை சோனா சினிமா துறையில் பிரபலமானவர் என்பதால் இந்த கருத்துகள் பெண்கள் மத்தியில் எளிதில் செல்ல வாய்ப்புள்ளது. பின் விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளளது.  நடிகை சோனா மீது குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 200-ன்கீழ் கோப்பில் எடுத்துக்கொண்டு நடிகை சோனாவிற்கு அழைப்பாணை அனுப்பி இந்திய தண்டனை சட்டப்பிரிவு 292 (1) (2), 293, 294, 499, 500, -ன்கீழ் வழக்கை விசாரித்து தகுந்த நீதி வழங்க கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அந்த குற்ற முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்!

சண்டைக்கு தயார்!

ஆண்கள் சங்கத்தினர் மீது நடிகை சோனா புகார்!
















நடிகை சோனா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 21.11.2012 புதன்கிழமை புகார் மனு ஒன்றை கொடுத்தார். ஆண்கள் சங்கத்தினரிடம் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்றும், ஆண்கள் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளேன் என்றும் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.



நடிகை சோனா, வாரப்பத்திரிகை ஒன்றில், ஆண்களை இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாக செய்தி ஒன்று வெளியானது. ஆண்கள் செக்சுக்கு மட்டுமே பயன்படுவார்கள் என்றும், கையை துடைத்துவிட்டு, தூக்கி எறியப்படும் டிஷ்யூ பேப்பரை போன்றவர்கள் என்றும் சோனா தனது பேட்டியில் கூறியதாக, பத்திரிகை செய்தியில் கூறப்பட்டிருந்தது. மேலும் நான் திருமணம் செய்துகொள்ளவே மாட்டேன் என்றும் தனது பேட்டியில் சோனா மேலும் கூறி இருந்தார்.



நடிகை சோனாவின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர், சோனாவின் பத்திரிகை பேட்டியை கண்டித்து போர்க்கொடி தூக்கினார்கள். சோனாவை கண்டித்து, சென்னை தேனாம்பேட்டை, கே.பி.தாசன் சாலையில் உள்ள அவரது அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சோனா தனது பேட்டிக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கும் வரை, போராட்டம் தொடரும் என்றும் ஆண்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.



இந்த நிலையில் நடிகை சோனா 21.11.2012 புதன்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். கூடுதல் கமிஷனர் ராஜேஷ்தாசை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.



பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் ஆண்களைப்பற்றி இழிவான கருத்து எதையும் சொல்லி பேட்டி கொடுக்கவில்லை என்று மறுத்திருந்தேன். குறிப்பிட்ட பத்திரிகை நிருபர் செய்தியை தவறாக கொடுத்துவிட்டார் என்றும் கூறி இருந்தேன்.


செய்தி வெளியிட்ட பத்திரிகை மீதும், செய்தியை கொடுத்த நிருபர் மீதும் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கும் போட்டுள்ளேன். 


ஆண்களை இழிவுபடுத்தி பேட்டி அளித்ததாக நடிகை சோனாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் சோனா வீட்டில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் மீது கோர்ட்டில் வழக்க தொடரவும் தயாராகி வருகிறார்கள்.
 
தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக சோனா கூறினார். 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, 
 
நான் ஆண்களை கேவலமாக பேசவில்லை. சொல்லாததை பத்திரிக்கையில் பேட்டியாக வந்துள்ளன. எனக்கு எதிராக ஆண்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அச்சங்கத்தை சேர்ந்த 120 பேர் என் வீட்டில் முற்றுகையிட்டு கோஷம் போட்டார்கள். நான் அப்படி பேட்டி அளிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துவிட்டேன். 

சம்பந்தப்பட்டவர்களுக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளேன். அதன் பிறகும் கண்டிக்கிறார்கள். போராட்டம் நடத்துகிறார்கள். தொடர்ந்து மிரட்டல்களும் வருகிறது.
 

நான் எங்கு போகிறேனோ அங்கெல்லாம் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறி உள்ளனர். இதனால் படப்பிடிப்புக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. நடிகர் சங்கத்தினர் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினர். இப்பிரச்சினையில் எனக்கு உதவுவதாக உறுதி அளித்தார்கள். சில பெண்கள் சங்கத்தினரும், மனித உரிமை அமைப்பினரும் என்னிடம் பேசினார்கள். என்னை தொடர்ந்து மிரட்டி வரும் ஆண்கள் சங்கத்தினர் மீது போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர்.
 
இவ்வாறு சோனா கூறினார்.




=

இவ்வளவு நடவடிக்கை எடுத்தபிறகும், ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் எனது அலுவலகம் மற்றும் எனது நகை ஷோரூம் கடை முன்பு போராட்டம் நடத்தினார்கள். ராணிப்பேட்டை கோர்ட்டில் என்மீது வழக்கும் போட்டுள்ளனர்.


மேலும் செல்போனில் பேசி என்னை மறைமுகமாக மிரட்டுகிறார்கள். வெளியில் நடமாடவிடமாட்டோம் என்கிறார்கள். வெளியில் வந்தால், என்மீது கற்களை வீசுவோம் என்று பயமுறுத்துகிறார்கள். இதனால் கடந்த 8 நாட்களாக நான் வெளியில் போகமுடியவில்லை. எனது அலுவலகமும், கடையும் மூடியே கிடக்கிறது.


எனவே எனக்கு பாதுகாப்பு கேட்டும், எனது அலுவலகம் மற்றும் கடைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடும் படியும், என்னை செல்போனில் மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை கோரியும், கூடுதல் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன்.


என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். செய்யாத தவறுக்காக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சட்டரீதியான சண்டைக்கு நான் தயார். இவ்வாறு சோனா தெரிவித்தார்.

 நன்றி - நக்கீரன்

துக்ளக் பத்திரிக்கை 41 வது ஆண்டு விழா - சோ பேச்சு பாகம் 2


துக்ளக் பத்திரிக்கை 41 வது ஆண்டு விழா - சோ பேச்சு பாகம் 1


பீனிக்ஸ் பறவை @ மும்பை. மக்கள் - சிறுகதை -ஆர். மீனலதா

பீனிக்ஸ் பறவை @ மும்பை. மக்கள்

கதை : ஆர். மீனலதா
ஓவியம் : ராமு

ஏம்மா ராதா, நீயுந்தான் கிட்டத் தட்ட இருபத்து இரண்டு வருஷமா ஆபீஸுக்குப் போய் அல்லாடறே? ஒரு ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுத்துக்கிட்டு சௌகரியமா போகக் கூடாதா?" மாமியார் லக்ஷ்மி வாஞ்சையோடு கேட்டாள்.
அப்படியில்ல பாட்டி; அம்மாவுக்குத் தன்னோட ஃப்ரெண்ட்ஸ் கும்பலோடு செகண்ட் க்ளாஸ்ல பேய் கும்பல்ல போனாத்தான் சரிப்படும்" - மூத்தவன் ஆனந்த் சொல்ல, செல்லப் பெண் ரேகாவும், அன்புக் கணவன் சிவராஜனும் சேர்ந்து கலாட்டா பண்ணினார்கள்.
சரி! சரி! செகண்ட் க்ளாஸ் பாஸ் வர்ற இருபத்தைந்தாம் தேதியோட முடியுது. அப்புறம் ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுத்துடறேன். ஆளாளுக்கு கலாட்டா பண்ண வேணாம்" முற்றுப் புள்ளி வைத்தாள் ராதா.
அன்றிரவு ராதாவுக்கு ஒரே யோசனை.
ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுக்கறேன்னு சொல்லி விட்டாளே தவிர, தேவையா? ஃப்ரெண்ட்ஸோடு கலாய்த்துக் கொண்டும், ஸ்லோகம் சொல்லிக் கொண்டும் போவது போல வருமா? அநாவசியச் செலவு வேற!’
சிவராஜன் ஆரம்பம் முதலே ஃபர்ஸ்ட் க்ளாஸ் பயணிதான். என்ஜினீயரிங் முடித்து, ஆனந்த் இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்வது அலுவலகப் பேருந்தில். மும்பை லோக்கல் ட்ரெயின் நெரிசலுக்குப் பயந்து, கல்லூரிக்கு ரேகா செல்வதும் மாநகர பஸ்ஸில்தான்.
முன்பிருந்ததை விட குடும்ப நிலைமை இப்போது ஓரளவு ஓகேதான். சம்பளமும் கூட வருகிறது என்றாலும் யோசனையாக இருந்தது. சரி, எதற்கும் முதல்ல ஒரு மாதம் ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுக்கலாம். போகப் போக பார்த்துக்கலாம். இல்லன்னா வீட்டுல இருக்கிறவங்க நச்சு தாங்காதுஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுப்பதென்று முடிவெடுத்தாள் ராதா.
என்னம்மா கண்ணு! இன்னிக்குத் தேதி 25. நினைவிருக்கில்லையா?" கிசுகிசுத்த சிவராஜனிடம்,
ம்...ம்" என்றாள்.

அலுவலக வேலை முடிந்து பாஸ் எடுக்க வருகையில், மைல் கணக்கில் க்யூ. மறுநாள் வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணி வீடு திரும்பியவளிடம் லக்ஷ்மி கேட்டாள், பாஸ் வாங்கியாச்சா?"
இல்லம்மா, இன்னைக்கு க்யூ நிறைய. நாளைக்குக் காலையில கண்டிப்பா வாங்கிடறேன்" என்றவாறே பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.
மறுநாள் வீட்டினர் மீண்டும் நினைவுபடுத்த, ஞாபகமாக தமதுமுதல்முதல் வகுப்பு பாஸை வாங்கி கம்பீரமாக ஃபர்ஸ்ட் க்ளாஸில் ஏறினாள். கசகசவென இல்லாமல், சற்றே சௌகரியமாக நின்று கொண்டு போக முடிந்ததென்றாலும் செகண்ட் க்ளாஸ் ஃப்ரெண்ட்ஸ் கூட்டம் மிஸ் ஆனது வருத்தமாகத்தான் இருந்தது.
அலுவலகம் சென்றவுடன் முதல் வேலையாக, மாமியார் லக்ஷ்மி, கணவர் மற்றும் ஆனந்த், ரேகா எல்லோரிடமும் பாஸ் எடுத்த விவரத்தைத் தெரிவித்தாள்.
சாப்பாட்டு நேரத்தில், தமது நெருங்கிய அலுவலக நண்பிகளிடம் இதைப் பகிர்ந்து கொண்டாள். ஃபர்ஸ்ட், ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸாச்சே!
மாலை மூன்று மணியளவில், ராதா, சிவராஜனுக்கு ஃபோன் செய்து, தனக்கு பிரமோஷன் கிடைத்திருக்கும் செய்தியை சந்தோஷமாகச் சொன்னாள்.
கங்கிராட்ஸ்" என வாழ்த்தியவனிடம், நான் கொஞ்சம் சீக்கிரமாகக் கிளம்பலாம்னு இருக்கேன். முடிஞ்சா நீங்களும் வாங்களேன். தாதர் ஸ்டேஷனில் மீட் பண்ணி, இரண்டு பேரும் அந்தேரிக்குச் சேர்ந்தே போகலாம்" என்றாள்.
எனக்கு வேலை எக்கச்சக்கமாy இருக்கு. நாளைக்குச் சேர்ந்து போகலாம் ஓகே?" என்று ஃபோனை வைத்தான் சிவராஜன்.
சிவராஜனிடம் சீக்கிரம் வீடு திரும்புவதாகச் சொல்லிவிட்டாளே தவிர, முக்கியமான திடீர் மீட்டிங் காரணமாக, ராதாவால் கிளம்ப முடியவில்லை. திரும்பவும் சிவராஜனிடம் பேசவும் நேரமில்லை.
சிவராஜனுக்கு அன்றைக்கென்று பார்த்து, அலுவலகத்தில் நிறைய வேலை. ராதாவுடன் சேர்ந்து போக முடியவில்லை. என்ன செய்வது? ப்ரைவேட் கம்பெனியாச்சே. அவசர அவசரமாக வேலையை முடித்து சர்ச் கேட் ஸ்டேஷன் வருகையில் ஆறு மணியாகி விட்டது. இலேசாக வானம் இருட்டிக் கொண்டு வர ஆரம்பித்தது. கூட்டத்துக்கு நடுவே அடித்துப் பிடித்து சர்ச்கேட் - போரிவிலி ட்ரெயினில் ஏறினான். பிறகு தான் தெரிந்தது ஏதோ யோசனையில் ஃபர்ஸ்ட் க்ளாஸுக்கு அடுத்து இருந்த செகண்ட் க்ளாஸில் ஏறியது. ‘பரவாயில்லை. ஒருநாள் இதில் பயணம் செய்தால் குறைந்து போக மாட்டோம்என்று நினைத்துக் கொண்டான். மழை ஆரம்பமானது.
மெதுவாக சாந்தா க்ரூஸ் ஸ்டேஷனை நெருங்குகையில், ‘டமால்என்ற சத்தம். காதுகள் அடைத்துப் போயின. வண்டி நின்று போனது. ஒரே புகைமயம்.
பாம்! பாம்!" உடீமாரோ! ஜல்தி!" (பாம் வெடித்து விட்டது. கீழே குதியுங்கள், சீக்கிரம்) என்று கத்தல். பாம் வெடித்தது முதல் வகுப்புப் பெட்டியில். சிவராஜனும், தான் தினமும் வணங்கும் சாயிபாபாவை நினைத்துக் குதித்தான்.
நல்லவேளை ஃபர்ஸ்ட் க்ளாஸில் ஏறவில்லை. ராதா முதலிலேயே வீட்டுக்குப் போயிருப்பாள் என்ற சமாதானத்துடன் மற்றவர்களுடன் வேகமாக நடக்க ஆரம்பித்தான். வழியில் கண்ட அவலங்கள் நெஞ்சைப் பிழிந்தன. உடன் நடந்து வந்த பயணி ஒருவர் மயங்கி விழ, அவருக்கு உதவி செய்து, பிறகு வெளியே வந்து டாக்ஸி பிடித்து வீடு வருகையில் இரவு மணி ஒன்பது.
லக்ஷ்மி, ஆனந்த், ரேகா மூவரும் பேயறைந்த மாதிரி வாசலில் நின்று கொண்டிருந்தார்கள் . ராதா எங்கே?
ராதா! ராதா! வரலையா?" பதற்றத்துடன் உள்ளே சென்றான் சிவராஜன். சின்னத் திரையில், ‘தொடர் பாம் வெடித்ததினால் பயணிகள் அதுவும் முதல் வகுப்புப் பயணிகள் மரணம்; ரயில் பெட்டிகள் சேதம்என டீ.வி.யில் அவலக் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. எல்லோரும் உறைந்து போனார்கள். ராதாவை தொடர்புகொள்ள முடிய வில்லை. ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என வந்தது.

‘ஒருவேளை நாம வந்த லோகல் அல்லது அடுத்த லோகல் ஃபர்ஸ்ட் க்ளாஸில் வந்திருப்பாளோ? அநாவசியமாக ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினோமே என்று மனத்துக்குள்ளேயே மருகினார்கள். சிவராஜன்சாயிராம்என்றவாறே கண்களை மூடி அமர்ந்து விட்டான்.
நான் வேணா போய்ப் பார்க்கிறேன்" என்று கிளம்பிய ஆனந்தை நிறுத்தினாள் லக்ஷ்மி.
மழைல நீ போய்த் தனியா மாட்டிக்காதே" என்று சொல்கையில், கரண்ட் கட்டானது. யாரிடம் கேட்க, என்ன செய்வது என்று புரியாமல், தவிப்புடன் உட்கார்ந்திருந்தனர்.
இரவு 10.25 மணிக்கு கரண்ட் வர, ராதா இன்னும் வரலையா?" என்றவாறே எதிர் வீட்டு சீதாவும் ரவியும் வந்தனர்.
ஆனந்த்! நீயும் அங்கிளும் சேர்ந்து போய்ப் பாருங்க. இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்திருந்தா எப்படி?" அதட்டினாள் சீதா.
யாருக்கும் வார்த்தைகளே வரவில்லை.
வாடா ஆனந்த்! நாம கிளம்பலாம். சீதா, லக்ஷ்மி மாமியைப் பார்த்துக்கோ. ரேகா, அப்பாவைக் கவனிச்சுக்கோ" கிடுகிடுவென உத்தரவிட்டார் ரவி.
ரவியும், ஆனந்தும் கிளம்பி நாலு அடி எடுத்து வைத்திருப்பார்கள். அப்போது ஸ்கூட்டர் ஒன்று வேகமாக வந்து நின்றது. ராதாவின் அலுவலக ப்யூன் வந்திறங்கினான்.
ராதா மேடம்" என்று அவன் கூறியவுடன் ராதாவுக்கு என்ன ஆச்சு?" என்று பதறினார்கள்.
கவலைப்படாதீங்க சார். மேடமுக்கு ஒண்ணும் ஆகலை. முக்கியமான மீட்டிங் திடீர்னு முடிய நேரமாயிடுச்சு. புறப்படறப்போ, பாம் நியூஸ் வரவே ரொம்பவே பதறிட்டாங்க. எல்லா ஸ்டாஃபும் இப்போ ஆஃபீஸ்ல இருந்து கிளம்பியாச்சு. உங்ககிட்ட விவரம் சொல்லச் சொல்லி என்னை அனுப்பினாங்க. மேடம் செல்ஃபோனில் சார்ஜ் இல்லையாம். வீட்டுக்கு ஃபோன் செய்தால்டெட்டோன் கேட்குதாம். ட்ராஃபிக் நிறைய இருந்ததால் நான் வருவதற்கும் நேரம் ஆகிவிட்டது. ஸாரி சார்!"
ஏதேதோ உணர்ச்சிகள் மோத மலைத்துப் போய் நின்ற சிவராஜனிடம், பயப்படாதீங்க ஸார், நாமெல்லாம் இங்க ஃபீனிக்ஸ் பறவைங்க மாதிரி. எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையிலிருந்தும், உத்வேகத்துடன் மீண்டு விடுவோம்" என்று சொல்லி புறப்படத் தயாரானான்.
தாங்க்யூ! தாங்க்யூ வெரி மச்!" என்றவாறு கண்களில் கண்ணீர் அருவி போலக் கொட்ட, சிவராஜன் ஓடிச் சென்று, அவனை இறுக அணைத்துக் கொண்டான்.
உன் பேர் என்னப்பா?"
சாயிராம்!" என பதில் வந்தது.

 நன்றி - கல்கி