Sunday, October 21, 2012

நிஜமாகத் தோன்றிய நிழல்கள்! - ருக்மணி ஜெயராமன் -சிறுகதை

நிஜமாகத் தோன்றிய நிழல்கள்!
ருக்மணி ஜெயராமன்

புறப்பட்டபோது வானம் வெளுப்பாகத்தான் இருந்தது. மழை வருவதற்கான அறிகுறியே இல்லை. லேசான தூறலாக ஆரம்பித்த மழை வலுக்கவே, கையில் குடை கொண்டு வராத நளினா, பக்கத்திலிருந்த ஒரு கடைக்குள் நுழைந்து ஒதுங்கிக் கொண்டாள். புடைவையில் ஒட்டிக் கொண்டிருந்த தண்ணீர்த் துளிகளைப் புறங்கையால் தட்டி விட்டுக் கொண்டே அவள் சுற்றிலும் பார்த்தாள். பலதரப்பட்ட வீடியோக்களை வாடகைக்குக் கொடுக்கும் கடை அது. அவள் தம் நண்பர்களுடன் அடிக்கடி அங்கு வருவாள். நளினா கடையில் சுற்றிப் பார்த்தாள்.
சமூகம், விஞ்ஞானம், அறிவியல், சினிமா என்று பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நூலகத்தை நினைவூட்டும் வகையில் ஒழுங்காக சி.டி.க்களும் டி.வி.டி.களும் அடுக்கப்பட்டிருந்தன. கடையில் கூட்டம் அதிகமில்லை. விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட டி.வி.டி.கள் இருந்த இடத்தில் இரு பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண் கையில் ஒரு டி.வி.டி.
உங்கள் வாழ்க்கைக் கதை!’ - தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே! நீ பார்த்தாயா?"
அதைப் பற்றி என்னை எதுவுமே கேட்காதே! வாங்கிக் கொண்டு போய் பத்து நிமிடங்கள் கூடப் பார்த்திருக்க மாட்டேன். உடம்பில் ஏதோ ஊர்வதைப் போன்ற ஓர் உணர்வு; டி.வி.யை அணைத்து விட்டேன்."
ஏன்?"
அதுதான் முதலிலேயே சொன்னேனே! என்னை எதுவும் கேட்காதே. இது ஒரு சீரிஸ்! 10 டி.வி.டி.கள் வரிசையாகப் பார்க்க வேண்டும்" பேசிக்கொண்டே அவர்கள் நகர்ந்து விட்டார்கள்.
அதில் என்னதான் இருக்கும்? ஏன் அவள் சொல்ல மறுக்கிறாள்? பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது நளினாவுக்கு. அவர்கள் போனவுடன் அங்கு நகர்ந்த நளினா, ஷெல்பில் அவசரமாகத் தேடினாள். கீழ்த்தட்டில் இடதுபக்க ஓரத்தில் 10 சி.டி.கள் கொண்ட ஒரு பெட்டி. முதலாவதாக இருந்த சி.டி.யை எடுத்த நளினா அதன் கவரின் மேலிருந்த தூசியைக் கையால் லேசாகத் துடைத்தாள். ‘உங்கள் வாழ்க்கைக் கதை’ - கறுப்புக் கவரின் மேல் பளிச்சென்று தெரிந்தன அந்த வெள்ளை எழுத்துக்கள்! கீழே சற்றே சிறிய எழுத்துகளில் - ‘உண்மையில் அறிந்துகொள்ள உங்களுக்கு விருப்பமா?’
ஒரே ஒரு சி.டி.யை மட்டும் எடுத்துக்கொண்ட நளினா, கவுண்டரில் அதைக் காட்டினாள். சி.டி.யைத் திருப்பித் திருப்பிப் பார்த்த முதலாளி, பார்கோடை எங்கேயும் காணவில்லையே" என்று கூறிக்கொண்டே நளினாவின் பக்கம் திரும்பி, ஏம்மா! இதை எந்த ஷெல்பிலிருந்து எடுத்தீர்கள்" என்று கேட்டார். கையை நீட்டி, அதோ அந்த விஞ்ஞானப் பிரிவிலிருந்து" - காட்டினாள் நளினா.
அந்த சி.டி.யை மறுபடியும் பார்த்த அவர், ‘உங்கள் வாழ்க்கைக் கதைஇந்த வீடியோவை நான் இது வரை பார்த்ததே இல்லை; கம்ப்யூட்டரிலும் பதிவு இல்லை." ஏதோ யோசனையுடன் அவர் சி.டி.யை அவளிடம் கொடுத்தார்.
எவ்வளவு கொடுக்க வேண்டும் சார்?"
20 ரூபாய்!"
பணத்தை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டார்.
திருப்பி எப்போது கொடுக்க வேண்டும்?"
எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதற்கு ரெக்கார்டே கிடையாது" என்றார் புன்சிரிப்புடன்.
நளினா கடையை விட்டுச் சென்றபோது மழை நின்றுவிட்டிருந்தது.
நளினாவை நீங்கள் எப்படி கற்பனை செய்திருப்பீர்களோ தெரியாது. உண்மையான நளினாவின் வயது 23. மனதை வசீகரிக்கும் அபூர்வமான அழகு. சுட்டியான பெண். சென்னையில் ஒரு .டி. கம்பெனியில் வேலை. அப்பா, அம்மா ஒரு கல்யாணத்துக்காக மதுரை போயிருக்கிறார்கள். வர பத்து நாட்கள் ஆகும். அதுவரை நளினா மட்டும்தான் இந்த வீட்டில்! முக்கியமான ஒரு விஷயம். அவள் கம்பெனியில் வேலை பார்க்கும் தேஜு என்ற தேஜஸுக்கும் இவளுக்கும் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது. ஒருவரோடு ஒருவர் ஒரு வருடமாகப் பழகிப் புரிந்துகொண்டு செய்து கொள்ளப் போகும் காதல் திருமணம்! பெயருக்கு ஏற்ற மாதிரி தேஜஸும் நல்ல அழகன். ஜோடிப் பொருத்தம் பற்றிப் பேசாதவர்களே இல்லை. நளினாவுக்கு சுருக்கென்று கோபம் வந்து விடும். கத்துவாள். தேஜஸ் அவளுக்கு நேர்மாறாக மிகப் பொறுமைசாலி.
காஃபி போடுவதற்காக அடுப்பில் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீரை வைத்த நளினா, வெளியில் வந்து, அங்கிருந்த கம்ப்யூட்டரில் தாம் எடுத்து வந்த சி.டி.யைச் செருகினாள்.
மேலே படிப்பதற்கு முன்னால் வாசகர்களுக்கு ஒரு வார்த்தை, ‘எனக்கு எல்லாம் தெரியும்; எனக்குத் தெரிந்தது மட்டும்தான் உண்மைஎன்று தீர்மானமாக நம்பிக் கொண்டு, தெரியாதது, புரியாதது ஆகியவற்றை ஏமாற்று வித்தை என்று ஒதுக்கித் தள்ளிவிடும் குணம் படைத்தவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் விலகிக் கொள்ளலாம். இந்தக் கதையை மேலே படிக்க, கொஞ்சம் திறந்த மனம் வேண்டும். வேர்ட்ஸ்வொர்த் பாஷையில் சொன்னால் 'Willing suspension of disbelief.' நீங்கள் தயாரா? அப்படியானால் வாருங்கள்... மேலே போகலாம்.
சமையலறைக்குச் சென்று காஃபி போட்டு, அதை ஒரு பீங்கான் கோப்பையில் ஊற்றிக் கொண்டு வந்த நளினா, கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தாள். கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் இன்னும் உயிரில்லாமல் கறுப்பாகவே இருந்தது.
டேப்பில் ஏதாவது கோளாறு இருக்குமோ?" சரிசெய்யலாம் என்று நளினா எழுந்த அதே நேரத்தில் ஸ்க்ரீனில் பளிச் சென்று வெளிச்சம்! கையில் ஒரு குழந்தையுடன் ஒரு பெண். பின்னால் ஓர் ஆண்! இருவரும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தனர். அவ்வப்போது குழந்தையையும் கொஞ்சிக் கொண்டிருந்தனர். குழந்தையை அவர்கள் கூப்பிட்ட பெயர்: நளினாச் செல்லம், நளினாக் கண்ணு, நளினா... நளினா.
தம் கண்களையே நம்ப முடியாத நளினா அருகில் சென்று பார்த்தாள். அவளது சிறு வயது ஃபோட்டோவைப் பார்த்திருக்கிறாள். இது நானேதான். என் ஃபோட்டோதான் இது." அவள் குரல் சற்றே உயர்ந்திருந்தது.
நளினாவின் கையிலிருந்த காஃபி கோப்பை கீழே விழுந்து உடைந்தது. இதைப் பற்றிக் கவலைப்படாத நளினா, அந்த சி.டி. உரையை எடுத்து, விலாசம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தாள்.
உண்மையில் அறிந்துகொள்ள உங்களுக்கு விருப்பமா?’ என்று கீழே எழுதப்பட்டிருந்த வரிகள் தவிர வேறு எதுவுமே இல்லை. யார் இதை எடுத்திருப்பார்கள்? அந்த சி.டி. எப்படி கடைக்கு வந்தது? எல்லாமே மர்மமாக இருந்தது.
வீடியோ ஓடிக்கொண்டிருந்தது. அதை முழுதும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் நளினாவுக்கு அதிகமாயிற்று. அவள் தொடர்ந்து பார்த்தாள். அவளது முதல் பிறந்தநாள், முதலில் பேசிய வார்த்தை, முதலில் கையை விட்டு விட்டு நடந்த நேரம் -ஒவ்வொன்றாக அவள் அந்த வீடியோவில் பார்த்து முடித்தபோது அவளுக்கு ஐந்து வயதாகியிருந்தது.
மறுநாள் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் கடைக்குள் நுழைந்து 2,3,4 வது சி.டி.க்களை எடுத்து வந்தாள. இதை எல்லாம் பார்க்கிறேனே, அது எனக்கு நல்லதா? அடிக்கடி இந்தக் கேள்வி நளினாவை பயமுறுத்தும். ஆனால் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற உந்துதல் பார்க்கத் தூண்டியது.
இரண்டாவது சி.டி.யில் குழந்தைப் பருவத்தின் மீதி நாட்கள். மூன்றாவது சி.டி. முழுக்க பள்ளிப் பருவம். பள்ளிக்கூடத்தில் மாம்பழம் பறிக்க மரம் ஏறி மாட்டிக் கொண்டது... சாம்புவுக்குக் காப்பி அடிக்க விடைத்தாளைக் காட்டியது - இதுபோன்ற வெளியில் யாருக்குமே தெரியாத சம்பவங்கள் எல்லாம்... ஒருவேளை இது பேய், பிசாசின் வேலையாக இருக்குமோ? நிச்சயமாக இருக்காது. பேய், பிசாசு என்று எதுவுமே கிடையாது. வெறும் கற்பனைதான்!
நான்காவது சி.டி.யையும் பார்த்து விட்டுத் தூங்கலாம் என்ற முடிவுக்கு வந்த நளினா பார்க்க ஆரம்பித்தாள். இதுவரை பார்த்த சி.டி.க்கள் போலல்லாமல் அது முற்றிலும் மாறுபட்டிருந்தது. நளினா என்ன செய்கிறாளோ அதையே அந்த பிம்பமும் செய்தது. நளினாவுக்குத் தாங்க முடியாத பயம். என்ன செய்வது என்றே புரியவில்லை. கடிகாரத்தின் டிக்... டிக்... ஒலி தவிர வேறு சப்தமே இல்லை.
மரண அமைதி. அவளுக்குத் தன்னையே யாரோ பார்ப்பது போல் தோன்றியது. அவள் அசையாமல் கற்சிலை போலிருந்தாள். 10 நிமிடங்களில் அந்த வீடியோ ஸ்க்ரீனில் ஓர் எச்சரிக்கை!
இனிவரும் டேப்புக்களில் பதிவாகி இருப்பது உங்கள் எதிர்காலம். நீங்கள் விரும்பாத விஷயங்களும் இருக்கலாம். அதில் எதையுமே உங்களால் மாற்ற முடியாது.’
இன்றைய அனுபவத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நளினா, மீதி வீடியோக்களைப் பார்க்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து தூங்கச் சென்றாள்.
மறுநாள் ஆஃபீஸில் நுழைந்ததும் அவளுக்கு தேஜஸிடமிருந்து ஃபோன் வந்தது. வேலை விஷயமாக ஊருக்குப் போயிருந்த அவன் ஒரு வாரம் கழித்து இன்றுதான் வருகிறான். ரொம்ப போரடிக்கிறது, நளின்... நாளைக்கு நம்ப மீட் பண்ணலாமா?"
கட்டாயமாக! எனக்கும் உன்னிடம் நிறையவே பேசணும்."
நளினாவுக்குக் குழப்பமாக இருந்தது. இந்த சி.டி.விஷயத்தை தேஜுவிடம் சொல்லலாமா? இப்போது சொல்ல வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாள். இதே யோசனையிலிருந்த நளினாவுக்கு நேரம் போனதே தெரியவில்லை. ஆஃபீஸ் முடிந்து வீட்டுக்குப் போகும் போது அவளை அறியாமல் அவள் கால்கள் வீடியோக் கடையை நோக்கிச் சென்றன.
பாக்கி 5 வீடியோகளையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. 8வது வீடியோ அங்கு இல்லை. யாரோ எடுத்துக் கொண்டு போயிருந்தார்கள். மற்ற 5 வீடியோகளையும் எடுத்துக் கொண்டு வந்தாள்.
வீட்டில் நுழைந்தவுடன் 5-வது சி.டி. யைப் போட்டாள். அதில் பிரபலமான ஒரு ஹோட்டல் திறந்தவெளி புல் தரையில் பூச்செடிகளின் மத்தியில் நூதனமான நாற்காலிகள். அவற்றுக்குப் பொருத்தமாக உயர் ஜாதி மரத்தினால் செய்யப்பட்ட கலைநயம் மிக்க மேஜைகள். இதயத்தை வருடும் சங்கீதம்.
டி.வி.திரையில் நளினாவும், தேஜுவும் உள்ளே நுழைந்தனர். தேஜு - கறுப்பு ஷெர் வாணியில் இருந்தான். அதுபோன்ற உடையில் அவனை நளினா பார்த்ததே இல்லை. ‘அதுவும் அவனுக்கு நன்றாகத்தான் இருக்கிறது.’ ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்தான். இரு வரும் சிரித்துப் பேசிக் கொண்டே சாப்பிட்டனர். அவள் சற்றும் எதிர்பார்க்காத போது அவன் கீழே குனிந்து, மறைத்து வைத்திருந்த பூச்செண்டை அவளிடம் கொடுத்தான். அவளைக் கட்டிக் கொண்டு, அவள் விரலில் வைர மோதிரத்தைப் போட்டான். அவன் காட்டிய அன்பில் நெகிழ்ந்து போன நளினாவின் கண்கள் குளமாயின. அத்துடன் அந்த வீடியோ முடிந்து விட்டது. மகிழ்ச்சியில் நளினாவுக்கு இரவு தூக்கமே வரவில்லை.
மறுநாளும் அவள் மகிழ்ச்சி தொடர்ந்தது. ஒரு வருடமாகப் பழகியிருந்தும் கூட இப்போதெல்லாம் தேஜுவின் நினைவே மனத்தில் கிளர்ச்சி ஏற்படுத்துவதை உணர்ந்தாள். மாலை 6 மணிக்குச் சற்று முன்பாகவே தயாராகிவிட்ட நளினா, ஹோட்டலுக்குப் புறப்பட்டாள். தேஜு ஏற்கெனவே அங்கு வந்து காத்திருந்தான். அவன் கறுப்பு ஷெர் வாணி அணிந்திருந்தான். ஐஸ்க்ரீம் சாப்பிட்டனர். அப்போது பூச்செண்டு கீழே வைத்திருக்கிறானா என்று பார்க்க நளினா ஸ்பூனைக் கீழே தவறவிட்டாள். வேகமாகக் குனிந்து தேஜஸ் அதை எடுத்துக் கொடுத்தான். பிறகு பூச்செண்டு, பிறகு வைர மோதிரம். எல்லாம் நேற்றுப் பார்த்தது போலவே நடந்தன.
வீட்டுக்குள் நுழைந்த நளினா மகிழ்ச்சியின் எல்லையிலிருந்தாள். 6வது வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தாள். இதுவரை அவள் பார்த்திராத ஓர் அறை. சுவரில் நளினா, தேஜுவின் திருமண ஃபோட்டோ. இருவரும் புதுமணத் தம்பதியராக சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகின்றனர். இது முதல் பாதி. வீடியோவின் கடைசிப் பகுதி முழுதும் ஒரே சண்டை. தேஜு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்று நளினா கூற, அவன் மறுக்க, வாக்குவாதம்- வாயிலிருந்து உமிழும் நெருப்புத் துண்டங்கள். தினசரி வாழ்க்கையே போராட்டமாகிக் கொண்டிருந்தது.
நான் உனக்கு ஃபோன் பண்ணியபோது அந்த லிப்ஸ்டிக்தானே ஃபோனை எடுத்தாள். ‘தேஜு மீட்டிங்கில் இருக்கிறார். இப்போது கூப்பிட முடியாதுஎன்று முகத்தில் அடித்தாற்போலச் சொல்கிறாள். துளிக் கூட மரியாதையே கிடையாது. எல்லாம் நீ கொடுக்கும் இடம்தான்."
ஆமாம்! ஆபீஸில் உன்னைப் பற்றிப் பேசுவதைத் தவிர வேறு வேலையே கிடையாது."
சண்டை... சண்டை... சண்டை...
வீடியோ முடிவில் கையில் டைவோர்ஸ் பேப்பர்களுடன் கோர்ட் வாசலில் நளினா!
பார்த்து முடித்த நளினாவுக்குத் தாங்க முடியாத கோபம். தாம் ஏமாற்றப்பட்டதாக நம்பினாள். வீடியோவில் பார்த்தது நடக்காமல் போகலாம் என்று நம்பக்கூட அவள் தயாராக இல்லை. அம்மா அடிக்கடி சொல்லுவாள்நாடி பார்ப்பவர்கள், கைரேகை பார்ப்பவர்கள், ஓலைச்சுவடி பார்த்து ஜோசியம் சொல்லுபவர்கள் - இவர்களில் 80 சதவிகிதத்தினர் நடந்து முடிந்து விட்டதைப் பற்றிப் பேசும்போது, இவர்களுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது என்று நமக்கே மலைப்பாக இருக்கும். ஆனால் இனி நடக்கப் போவதை - எதிர் காலத்தைப் பற்றி அவர்கள் சொல்வது பாதிக்கு மேல் தவறாகவே இருக்கும்.’ அம்மா சொல்வதில் உண்மை இருக்குமோ? ஒரு வினாடி கூட அவள் நிதானமாக யோசிக்காமல் மனம் நிறைய ஆத்திரத்துடன் தேஜு வீட்டுக்குச் சென்றாள்.
இந்த மோதிரத்தைக் கொடுத்து என்னை விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறாயா? இது எனக்குத் தேவையில்லை. நீயே வைத்துக்கொள்" கையிலிருந்த மோதிரத்தை அவனிடம் வீசி எறிந்தாள்.
உனக்கு என்ன ஆகிவிட்டது நளினா... ஏன் இப்படி எல்லாம் பேசுகிறாய்?"
நீ ஒரு மோசக்காரன். உன்னைக் கலியாணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை. நீ பெண்கள் பின்னால் அலைபவன். உனக்கு மனைவியாக இருக்க எனக்கு இஷ்டமில்லை!" கத்திவிட்டு அவள் போய்விட்டாள்.
வீட்டுக்கு வந்தவுடன் 7வது சி.டி.யைப் போட்டாள். தேஜஸுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணமாகியிருந்தது. தேஜுவைத் திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படாமல் நல்லவேளையாகத் தம் வாழ்க்கையை மாற்றிக் கொண்டு தப்பிக்க முடிந்ததே என்று சந்தோஷப்பட்டாள்.
8வது வீடியோ அவளிடம் இல்லை. 9வது சி.டி.யைப் போட்ட அவளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீடியோவில் அவள் இருந்த இடம் ஒரு சிறைச்சாலை. அதாவது ஒரு ஜெயில். எப்படி அவள் ஜெயிலுக்கு வந்தாள், என்ன குற்றம் செய்தாள் என்ற ஒரு விவரமும் அதில் இல்லை. கடைசி வீடியோவையும் பார்த்தாள். அதிலும் அவளுக்குச் சிறை வாசம்தான். நளினாவுக்குப் பயத்தில் நெஞ்சு அடைத்தது. சிறைக்கு வந்ததன் காரணம் 8வது சி.டி. யைப் பார்த்தால் தெரியும். சிறைக்குப் போவதையும் தவிர்க்கலாமே.
வீடியோக் கடையை நோக்கி ஓடினாள். வீடியோ இன்னும் கடைக்குத் திரும்பி வரவில்லை.
எனக்கு உடனே அந்த வீடியோ தேவைப்படுகிறது. வாங்கிக் கொண்டு போனவரது விலாசம் கொடுங்கள்."
விலாசம் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்பது எங்கள் பாலிஸி. உங்களுக்கு வேண்டுமானால் இந்த ஸ்லிப்பைப் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டுப் போங்கள். வந்தவுடன் ஃபோன் செய்கிறோம்."
உடனே திருப்பிக் கொடுக்கச் சொல்லி அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்..."
சரி... பார்க்கிறோம்."
அவளுடைய அவசரத்தைச் சற்றும் புரிந்துகொள்ளாமல் அவன் நிதானமாக சூயிங்கம் மென்று கொண்டிருந்தான்.
சி.டி.யைத் திருப்பிக் கொடுக்கும் வரை காத்திருப்பது சாத்தியமில்லை என்று புரிந்தது நளினாவுக்கு. அதில்பார்கோட்கிடையாது. திரும்பி வராவிட்டால் கூட யாருக்கும் தெரியாது. எப்படியாவது அந்த விலாசத்தைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும். ஒரு ஷெல்ப்பின் பின்புறம் ஒளிந்து கொண்டாள். முதலாளி போனவுடன் கடைப்பையன், வாயில் கதவைப் பூட்டி விட்டுப் புறப்பட்டான். நளினா கம்ப்யூட்டரில், வெகு நேரத் தேடலுக்குப் பிறகு அந்த விலாசத்தைக் கண்டுபிடித்தாள். கீழே கிடந்த ஒரு கசங்கிய காகிதத்தில் அவசர அவசரமாக அந்த விலாசத்தைக் கிறுக்கி எடுத்துக் கொண்டு கடையின் பின்புறம் வழியாக வெளியே ஓடினாள்.
இரவு மணி 10. விலாசம் அவளுக்குத் தெரிந்த இடத்தில் இருந்தது. உடனே போக வேண்டுமென்று முடிவெடுத்தாள். இப்போது இதைத் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும். இல்லாவிட்டால்... அவளுக்கு அந்த டிசம்பர் மாதக் குளிரிலும் வியர்த்தது.
யார் அது...? இந்நேரத்தில் மணி அடிப்பது?" உள்ளேயிருந்து ஒரு அதிகாரமான பெண் குரல் கேட்டது.
கதவு லேசாகத் திறந்தது. அச்சிறிய திறந்த பகுதி வழியே பார்த்தாள் நளினா. அவருக்கு 70 வயது இருக்கலாம். முகத்தில் அசாத்திய கோபம் தெரிந்தது.
யார் நீ... இந்த நேரத்தில்... எதற்காக இங்கு மணி அடித்தாய்?" குரலிலிருந்த எரிச்சல் நளினாவை அவசரப்படுத்த, அவள் எந்த முன்னுரையுமில்லாமல், உங்களிடமிருக்கும் வீடியோ டேப்பை வாங்கிக் கொண்டு போக வந்தேன்" என்றாள்.
உங்கள் வாழ்க்கை என்ற அந்த டேப்..." நளினா முடிப்பதற்குள் அதற்கு இதான் நேரமா? இங்கு எதுவும் கிடையாது" கூறிக் கொண்டே அந்த வயதான அம்மாள் கதவைச் சாத்த முற்பட, பொறுமையிழந்த நளினா, வெளிப்பக்கத்திலிருந்து தன்னை நோக்கிக் கதவை இழுத்தாள். அந்த வேகத்தில் மூதாட்டி கீழே விழ, அவள் பின் மண்டை மேஜை விளிம்பில் இடித்து, ரத்தம் கொட்டியது. முதலுதவி செய்யலாமென்று உள்ளே நுழைந்த நளினாவுக்கு, தாம் இங்கு வந்ததன் காரணம் நினைவுக்கு வந்தது. அம்மாளின் உடலில் அசைவே இல்லை. இங்கு இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்த நளினா வேகமாக வாசலுக்கு வந்தாள். அதே நேரத்தில் அவளை உரசிக் கொண்டு அங்கு வந்து நின்றது ஒரு போலிஸ் ஜீப்!
நன்றி - கல்கி, புலவர் தருமி

இளையராஜா பேட்டி @ குமுதம்

Why Ilayaraaja Not Working With K Balachander

ரஜினி கேட்டும் கூட, பாலச்சந்தரின் படத்துக்கு இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.


பிரபல  குமுதம் வார இதழில் இளையராஜா வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்துக்குப் பிறகு பாலச்சந்தர் படங்களுக்கு அவர் இசையமைக்காமல் போனது, அதுவும் ரஜினி கேட்டும் கூட இசையமைக்க மறுத்தது பற்றி வாசகர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.



அந்த கேள்வி பதில்:



கேள்வி: புது புது அர்த்தங்கள் படத்திற்கு பிறகு நீங்கள் பாலசந்தர் படங்களுக்கு இசையமைக்கவில்லையே, ஏன்?



பதில்: புது புது அர்த்தங்கள் படத்திற்கு ரீரெக்கார்டிங் நடக்க வேண்டிய நேரத்தில் இங்கே ஸ்ட்ரைக் இருந்தது. அதனால் சிவா என்கிற படத்துக்காக நான் பாம்பே போயிருந்தேன். அப்போ கவிதாலயாவிலிருந்து அனந்தும் நடராஜனும் வந்து என்னைச் சந்திச்சாங்க.


'சார் படம் ரிலீஸ் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. ஆனால் ஸ்டிரைக் நடந்துகிட்டிருக்கு. நீங்களும் பாம்பேயிலிருந்து வர முடியாது. நாங்க உங்களுக்காக காத்திருந்து ரெக்கார்ட் பண்ணுறதுக்கும் டைம் இல்லாமல் இருக்கு. அதனால் நாங்க ட்ராக் எடுத்து போட்டுக்குறோம்,' என்றார்கள்.


'அப்போ உங்களுக்கு டைட்டிலில் இளையராஜா என்று பெயர் மட்டும்தான் போட வேண்டும். என் மியூசிக் உங்களுக்கு தேவையில்லைன்னு தெரியுது. என்னோட பெயரை வியாபாரத்திற்காக பயன்படுத்திக்கப் போறீங்க. இதுக்கு டைரக்டரும் உடந்தையா இருக்காரு இல்ல. நீங்க பண்றதை பண்ணிக்கோங்க,' என்று சொல்லி விட்டுவிட்டேன்.



அப்புறம் ரொம்ப நாள் கழித்து கவிதாலயாவிலிருந்து வந்து மியூசிக் பண்ண சொன்னபோது 'இவங்களுக்கு நம் பெயர் மட்டும்தான் முக்கியமா இருக்கு. நம்மோட இசை இல்ல. அதனால் நாம் ஏன் மியூசிக் பண்ணணும்'னு நினைச்சேன்.


அப்புறம் ரஜினியை வெச்சு படம் எடுத்தபோது ரஜினியையே பாலசந்தர் என்கிட்ட அனுப்பினார். ஆனால் 'ஏன் நீங்க அவர் படத்துக்கு இசையமைக்க மறுத்தீங்கன்னு' அவரும் என்கிட்ட கேட்கல. நானும் சொல்லல.


அவர் என் படத்துக்கு மியூசிக் பண்ணணும்னுதான் கேட்டார். பாலசந்தரே ரஜினிகிட்ட நடந்த விஷயங்களை சொல்லி என்கிட்ட அனுப்பியிருக்கலாம். இல்ல ரஜினியாவது கே.பி சாரை நான் பேச சொல்றேனு சொல்லியிருக்கலாம். எதுவும் நடக்கல. அதனாலதான் ரஜினி கேட்டும்கூட நான் அந்த படத்துக்கு மியூசிக் பண்ணல. இதுதான் காரணம்."

அனிருத் - கொலை வெறி ஹிட்டர்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtUnAjFOu6HR0sWEQywYCaXyNx9X8X3a-EubnvsMYH218iJTnGVESSZdMIOHyaz078RQJxtKQgCzaMWdMZGpOCwiIvkBibyPSG6emapOKqWwJM_ETlAmBTRnsap6V9Tru8zCCTSAbNrKQ/s1600/0.jpg 

கொலவெறி பாடலுக்கு இசை சேர்த்த அனிருத் ரவிச்சந்தர், தற்போதுதான் லயோலா கல்லூரியில் பி.காம் முடித்திருக்கிறார். இனி இசைதான் வாழ்க்கையின் பயணம். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத். ஐஸ்வர்யாவின் மாமா ரவிச்சந்தரின் மகன். தனது அத்தை மகள் இயக்கிய பத்து குறும்படங்களில் பள்ளியில் படிக்கும்போதிருந்தே பின்னணி இசை சேர்த்தவர் அனிருத். ஒரே பாடலில் உச்சத்தைத் தொட்ட அதிர்ஷ்டசாலி.

அனிருத்  நான்காவது வயதிலிருந்து பியானோவை கற்றுக்கொள்ளத் தொடங்கியவர். பதினோராம் வகுப்பில் படிக்கும்போது கர்நாடக இசையுடன் சேர்ந்த வெஸ்டர்ன் மியூசிக் பியூஷன் செய்திருக்கிறார். அவர் மேற்கத்திய இசை பயின்றது டிரினிட்டி மியூசிக் ஸ்கூலில்.


"பள்ளியில் படிக்கும்போதிருந்தே இசைதான் ஒரே நோக்கமாக இருந்தது. பத்மாசேஷாத்ரி பாலபவன் பள்ளியில் சிங்க்ஸ் என்ற பெயரில் பேண்ட் வைத்திருந்தோம். லயோலா கல்லூரி வந்ததும் ராக் பேண்ட் ஆரம்பித்தோம். அதற்காக நானே டியூன் போட்டு பாடல்கள் எழுதினேன். ஐநூறுக்கும் அதிகமான சிறு பாடல்களை எழுதியிருக்கிறேன். பெரும்பாலும் அவை வரிகளாக இருக்காது. டியூன்களாக இருக்கும். ஆனாலும் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று பாடல்களுக்கான வடிவம் இருக்கும்" என்று பேசத் தொடங்கும் அனிருத், பதினொன்றாம் வகுப்பு  படிக்கும்போது ஏ.ஆர்.ரகுமான் நடுவராக இருந்த ஊ...ல...லா என்ற  சன் டிவி  போட்டியில் வென்றிருக்கிறார்.


"அந்தப் போட்டியில் கலந்து கொள்ளும்வரை விளையாட்டாகத்தான் இருந்தேன். ஏதோ இசைக்குழு வைத்திருந்தோம் என்பதைத்தவிர உருப்படியான முயற்சிகள் எதையும் செய்யவில்லை. ரகுமான்  கையால் பரிசு வாங்கிய கணத்திலிருந்தே இசையில் தீவிரமாக இருக்க ஆரம்பித்தோம். அதன் விளைவுதான் ஐஸ்வர்யாவின் குறும்படங்களில் இசையமைக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அது ஒய் திஸ் கொல வெறிடி  பாடலின் உச்சகட்ட வெற்றி வரை வந்திருக்கிறது" என்கிறார்.


3 படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன. அதற்கான இசை வேலைகளில் கவனம் செலுத்திவரும் அனிருத், இந்தப் பாடல் அடைந்த வெற்றியை நம்பமுடியாமல் இருக்கிறார். "ஒரு பாடலில் இப்படியொரு புகழை யாரும் அடைந்த தில்லை என்று சொல்கிறார்கள். எனக்கு அந்த வரம் கிடைத்திருக்கிறது. ஆண்டவன் கருணையால் எனக்கு அது நடந்திருக்கிறது. இந்த அளவுக்கு பாடல் மக்களிடம் போய்ச் சேரும் என்று நினைக்கவில்லை. கீபோர்டில் விளையாட்டாக ஒரு ட்யூனை வாசித்துக்காட்டினேன். அதற்கு டம்மியாக தனுஷ் பாடிக்காட்டினார். அதுவே எல்லோருக்கும் பிடித்துப்போய் விட்டது. அந்தப் பாடலில் தமிழ் நாட்டுப்புற இசையின் கூறுகளும் இருக்கும். அந்தப் பாடலே காமெடியாக இருக்கும். இதை  ரஜினி சார் கேட்டுவிட்டு கண்டிப்பாக பெரிய ஹிட் ஆகும் என்று சொன்னார். இது உண்மையில் நடந்துவிட்டது" என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.


ஸ்காட்லாந்திலிருந்து 70 வயதான ஒரு மனிதர் அனிருத்துக்கு பேஸ்புக்கில் செய்தி அனுப்பியிருக்கிறார். ஒய் திஸ் கொலவெறிடி பாடலை ஆயிரம் தடவை கேட்டிருப்பேன். எனக்கு மொழி தெரியாது. ஆனாலும் அதை கேட்கும்போதெல்லாம் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொல்லி யிருக்கிறாராம்.


"இந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததும்  மனம் பரபரப்பாக இருந்தது. இரண்டு நாட்கள் அப்படி இருந்தேன். அதுவே எல்லாம் அல்ல என்¢று புரிந்துகொண்டேன். இப்போது இசையில் ஆத்மபூர்வமாக நான் ஈடுபடுகிறேன்" என்று ஞானம் பெற்ற இளைஞராகப் பேசுகிறார் அனிருத்.   
நன்றி - த சண்டே இந்தியன் 

பி பாசிடிவ் பிளட் குரூப் ஃபிகர்களே!

1.சேர நன்னாட்டிளம் பெண்ணுடன் சேர ஆசைப்படாத ஆண்கள் இவ்வுலகில் இல்லை



---------------------



2. டாடி.மம்மிகிட்டே பம்முற மாதிரி எங்க ஸ்கூல் மிஸ் பார்த்தும் ஏன் பம்முறீங்க? # மகள் வினா 


 விடம்மா, மம்மின்னாலே பம்மிங்க் தான்



----------------------


3. ஆதீன பதவி இழப்பால் எனக்கு பொருளாதார இழப்பு இல்லை-நித்தி.# தார இழப்பு உண்டு 




----------------------


4. நீ என்னை நான்சென்ஸ் என்று திட்டினாய்! நான் சென்ஸ் என்று நீ சொன்னதாக நினைத்துக்கொண்டேன் # பிளட் க்ரூப் பி பாசிடிவ்் 




---------------------

5. நவராத்திரி கொலு பார்க்க நீ கோயிலுக்கு சென்றால் கொலு வைக்கும் அழகிய பொம்மைகளை கண்டு ரசிக்கலாம் 



---------------------



6. அன்பே! நீ ஒரு பீட்சா போல.நல்லா கதை விடறே ! 




-------------------


7. ஆண்கள் உபயோகிக்க ஒரே ஒரு நிறம் .பெண்களுக்கு மட்டும் பல வண்ணமயங்கள் # குடை 




---------------------

8. மழையில் நான் நனையும்போதெல்லாம் முந்தானயால் என் தலை மூடி குடை வள்ளல் ஆகிறாய் நீ! 


-------------------


9. மழைக்காலத்தில் மலையாளக்கரையோரம் ஒதுங்கினால் கம்பளிகள் தேவைப்படாது 



----------------------

10. ஷவர் பாத்தில் குளிக்க ஆசைப்பட்ட ஏழைக்குழந்தைகளுக்கு வானம் அளிக்கும் விலை இல்லா ஷவர் பாத் # மழை 



---------------------

11. மழைக்காகிதங்கள் வழக்கொழிந்தன.நல்ல வேளை மழைக்காலம் இன்னும் வழக்கொழியாமல்...




--------------------

12. மண் வாசத்தையும் ,உன் நேசத்தையும் அழைத்து வந்தது மழை் 



-----------------------


13. அன்பே! மழையில் நனைந்து விடாதே! ஹாஸ்பிடல் செலவு எனக்குத்தான் 



-----------------------


14. கோலம் போட தொடர்ச்சியா புள்ளிகளை அனுப்புது வானம் பூமிக்கு # மழை 



-----------------------


15. டச் போன் உபயோகிப்பாளரின் விரல்கள் லாவகமான ,கூர்மையான குச்சியாய் மாறி விடுகிறது 




---------------------

16. உன் உடம்பில் ஒரு மச்சம் கூட இல்லை என்றாலும் மச்சினி இருந்தால் நீ மச்சக்காரன் என்றேஅழைக்கப்படுவாய் 



-------------------



17. தி மு க தலைவருக்கு பிடிக்காத இடம் ஜெராக்ஸ் கடைதான் # ஜெ ராக்ஸ் 


-------------------

18. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் ஓக்கே எதை சுட்டா கறுப்பு மை ஐ டெகஸ் மை தரும்? 



------------------------


19. மனைவி தூங்கிட்டு இருக்கும்போது நைசா கிள்ளி வெச்சுடனும்.கட்டெறும்பு கடிச்சிருக்கும்னு கதை விடலாம் # கிள்ளி வளவன் டைரியிலிருந்து 



-------------------


20. இந்த சம்சாரங்க எல்லாம் புத்திசாலிங்க.புருஷன் கூட சண்டை போடும்போது குழந்தையை கேடயமா வெச்சுக்கறாங்க.நாம திருப்பி அடிக்கவே முடியறதில்லை 



------------------------

21. இடியால் பாதிக்கப்பட்டவர்களை விட மனைவியின் அடியால் பாதிக்கப்பட்ட அபலை கணவர்களே அதிகம் # சர்வே 


---------------


22. சின்ன வயசுல இருந்தே பீட்ரூட் ரெகுலரா டெய்லி சாப்பிட்டா பொண்ணுங்களுக்கு நல்லா ரூட் விடலாமாம் #சென்னிமலை கில்மா சித்தர் டைரியிலிருந்து :-))


----------------------


23. புத்தகத்துக்குள் காதல் கடிதம் வைத்துக்கொடுத்தால் அது நூல் விடுதலா? 


-------------------


24. சமையல் கலை கற்றவனுக்கு சம்சாரம் ஊருக்குப்போயிருந்தாலும் மிதப்பு 



----------------------

25. டீக்குடிக்கும் பழக்கம் இல்லை என்பதற்காக ஹார்லிக்ஸ் அல்லது போர்ன்விட்டா சர்ட் தேடுகிறேன் # டிசர்ட் 


------------------------


26. யாரா இருந்தாலும் நமீதா அவங்களை மச்சான்னு கூப்பிடுவாங்க.அதுக்காக மச்சான்னு கூப்பிடும் பெண்களெல்லாம் நமீதா ஆகி விட முடியுமா?



------------------------


27. புத்தாடை யார் எப்போ உடுத்தினாலும் ஒரு புத்துணர்ச்சி இருக்கும் 



----------------------

28.. உங்க ஜோக்ஸ் எல்லாம் வெரி நைஸ்னு யாராவது சொன்னா சந்தோஷப்பட்ரக்கூடாது.அரைச்ச மாவையே அரைக்கறோம்னு கிண்டலா க்கூட இருக்கும் 




-----------------------


29. THE POSSESSIONS = பேய் நிலா # சபாஷ் துபாஷ ் 


-----------------

30. பி பாசிடிவ் பிளட் குரூப் இருக்கற பொண்ணு கிட்டே லவ் லெட்டர் குடுத்தா ரீ ஆக்‌ஷன் பாசிட்டிவ்வா இருக்கும்னு நெகடிவ்வா எண்ணிவிடாதே!




--------------------------------------

Saturday, October 20, 2012

நீர் விளையாட்டு – பெருமாள்முருகன் - சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQ553LKJjZ7fkIxbRNyLaWHBLV8-BEXshEMasG1tLCMKf6gninYC9fLTOZsgfTX1mxaXQZDkxwSMg9hm699cFlBYDL7zVuWXCphFgvpZBJfMh0f6XZTBA7yg7lygfW6LqGnT0RoY7sLIA/s220/perumalmurugan.jpg

அவனை அவர்கள் அழைத்தபோது மிகுந்த தயக்கத்தைக் காட்டினான். ‘நானா’ என்று வாய்க்குள்ளே மெல்ல இழுத்தான். ஆனால், அவன் நினைவுப் பாசிகள் துடைக்கப்பட்ட பளிச்சிடலின் அடியில் விருப்பமும் ஆர்வமும் புடைத்தெழும்பின. குழந்தைகள் அவனை மேலும் வற்புறுத்தலாயினர். அங்கே விருந்தாளியாக வந்திருந்தான் அவன். ஓரளவுக்கு நெருங்கிய உறவுதான். அடிக்கடி வரவில்லை என்பதே இயல்பாக இருக்க விடவில்லை. 



கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தைகள், எட்டிலிருந்து பன்னிரண்டு வயதிற்குள்ளான மூவர் – சிறுமி, இரண்டு சிறுவர்கள் – அவன் மடிமீது புரளவும் விளையாட்டின் நடுவராக அவனைப் பாவிக்கவுமான அளவிற்குத் தயாராகிவிட்டிருந்தனர். அதன் உச்சபட்சமாகத்தான் இந்த அழைப்பு. மனதில் மெலிந்த குறுகுறுப்பு உணர்வைத் தோற்றுவிப்பதாக, மூழ்கிவிட்ட நினைவுப் பொருள் ஒன்றைப் பெற்றுவிட்டதாக அவன் கிளர்ச்சி அடைந்தான். உடனே எழுந்து சென்றுவிடவும் முடியவில்லை. தயக்கத்தின் மெலிந்த நூல் முனைகள் அவன் கால்களை இறுகக் கட்டியிருந்தன. பாதம் வியர்த்து ஊன்றியிருந்த தரை பிசுபிசுத்தது. அங்கும் இங்குமாகக் கண்களை ஆசை நிரப்பி அலைபாய விட்டான். குரல் எழும்பாமல் உள்ளடைத்தது. 



குழந்தைகள் கைகளை இடுக்கிக் கொண்டு அவன் தாடையில் கைவைத்துக் கெஞ்சவும், கைகளை உரிமையுடன் பற்றி இழுக்கவும் தொடங்கினர். அவன் அசைவில் கட்டில் கிரீச்சிட்டுக் கத்தியது. ஏதாவது ஒரு குரல் ’அவரத் தொந்தரவு பண்ணாதீங்கடா’ என்று உயர்ந்து இந்தச் சூழலைச் சிதைத்துவிடுமோ என அஞ்சினான். அதற்குள்ளாக அவர்களோடு எழுந்துவிடுவது நல்லது என்று பட்டது.


 தன் ஆர்வத்தை மனதிற்குள் சுருட்டிக்கொண்டு தயவு செய்யும் பாவனையில் ‘துண்டு இல்லையே’ என்றான். அதுதான் இப்போது பெரிய பிரச்சினைப் போல. அவர்கள் வெகு உற்சாகமாகக் கூவிக் கொண்டு எங்கெங்கோ ஓடி ஆளுக்கொரு துண்டை இழுத்து வந்தனர். முகம் முழுக்கப் பரவிய வெட்கச் சிரிப்போடு அவனும் எழுந்து கொண்டான்.



பசுமை மணம் பரவிய காடுகளுக்கிடையே நிலத்தின் பிளந்த வாய்போல சட்டென்று கிணறு தோன்றியது. சீரான சுவர்களையோ சமமான வடிவத்தையோ அது பெற்றிருக்கவில்லை. அங்கங்கே கதைகள் பிதுங்கி குழிப் பொந்துப் புண்கள் நிறைந்து ‘ஆ’வென இருந்தது. படிகளெனத் தோன்றும்படி சுவடுகள் பதிந்த தடமொன்றும் தெரிந்தது. மோட்டாரின் குழாய் பாதியளவுக்கு மூழ்கி அசைவற்றிருந்தது. தென்னங்கீற்றுகளில் நுழைந்த கதிரொளி கிணற்றைத் துளைத்து ஆழ்மண்ணைக் காட்டியது. 


குதிப்பதற்குக் கால்களைத் துறுதுறுக்க வைக்கும் தோற்றமுடைய கிணறுதான் இது. குழந்தைகள் யார் முதலில் குதிப்பது என்று தர்க்கித்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. குதித்தலில் தொடக்கம்தான் முக்கியம். ஒரு முறை நீர் சிதறிக் கிணறலையும் சத்தம் கேட்டுவிட்டால் போதும். கிணற்றின் உறைந்த மௌனத்தை முதலில் உடைக்க வேண்டும். அதன் பின் உற்சாக வெறி எல்லோரையும் தொற்றிக் கொள்ளும். அதைத் தொடங்குவதில்தான் அத்தனை சிரமம். முதலில் குதிப்பவரைக் காவு கொள்ளவெனக் கிணறு காத்திருப்பதான அச்சம். அவர்களின் கவனம் குவிந்திருந்த போது, குலையிலிருந்து கழன்று விழும் நெற்றுத் தேங்காயென அவன் குதித்திருந்தான்.


 உடனே கிணற்றின் மூலைகள் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களும் குதித்தனர். உறைந்திருந்த கிணறு இப்போது பலவித ஓசைகளில் பேசத் தொடங்கிற்று. இடைவிடாமல் நீர் அலைந்து சுவர்களில் மோதும் ஒலிகள். குழந்தைகள் அங்கங்கே பற்றி ஏறிக் குதிப்பதற்கான வழிகளை வைத்திருந்தன. குதிப்பதன் மூலம் நீரைத் துன்புறுத்துவதே அவர்களின் லட்சியம் போல தொடர்ந்து குதிக்கும் சத்தம்.



கிணற்றை அவன் வேறுமாதிரி உணர்ந்தான். பூங்குழந்தையை அள்ளி அணைக்கும் மென்மையுடன் நீரைக் கைகளால் வருடிக்கொண்டு நீந்தினான். கிணற்றின் ஒழுங்கற்ற உருவம் பெரும் சந்தோசத்தைக் கொடுத்திருந்தது. வெயில் வேளையில் தண்ணீரின் ஜில்லிப்பு உடலுக்கு ஒத்தடம்.  அடிக்கடி தலையை முழுகுவதிலும் மல்லாந்து நீச்சலடிப்பதிலும் அவன் விருப்பமுற்றான். சிதறி விழுந்திருந்த வெயில் ஆழ்பள்ளத்துக்குள் கிடக்கும் அவனைத் தேடி வந்து முகத்திலடித்தது.


 அற்புதத்தைத் தேக்கி வைத்திருக்கிறது கிணறு. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு வழங்குகிறது. கிணற்றின் மீது அன்பு வெறி முகிழ்த்தது. அதன் ஒவ்வொரு அணுவையும் தொட்டுத் தழுவ ஆசையுற்றான். அலைவில் தூசிக் கோல்கள் ஒதுங்கிக் கிடக்கும் அதன் மூலைகள் ஒவ்வொன்றையும் நோக்கி வெகுநேரம் பயணம் செய்தான். ஒவ்வொரு மூலையும் நின்று ஓய்வெடுப்பதற்கான சிறு இடத்தை ஏற்படுத்தி வைத்திருந்தது. குறைந்தபட்சம் பற்றி நிற்பதற்கான பிடிமானங்களையேனும் கொண்டிருந்தது. கருணை மிக்கது கிணறு.



மூலைகளில் பனி நீரின் சுகம். பின் ஆழத்தை நோக்கிச் சென்று கிணற்றின் அடி மேனியை அறிய ஆவல் கொண்டான். நடுக்கிணற்றில் மூழ்கிய சில விநாடிகளில் வெகுதூரம் உள்நோக்கி அமிழ்ந்துவிட்டதாக உணர்ந்தான். கிணறு இன்னும் போய்க்கொண்டிருந்தது. எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம். ஒன்றும் புரிபடாது மூச்சுத் திணறியது. சட்டெனக் கைகளை அழுத்தி மேல்நோக்கி வந்தான். கிணற்றுள் எத்தனையோ ரகசியங்கள். எல்லாவற்றையும் எப்போதோ வரும் ஒருவனுக்குச் சில நிமிடங்களில் அவிழ்த்துப் பரப்பிவிடுமா? என்ன மாதிரியான முட்டாள்தனத்தில் ஈடுபட்டோம் என்று தன்னைக் கடிந்துகொண்டான். 



படியோரப் பலகைக்கல்லில் உட்கார்ந்து ஆசுவாசமானான். தண்ணீரின் அசைவில் சுவரைப் பற்றிக் கொள்ளும் தவளையையும், மேலிருந்து நீருக்குள் தாவும் தவளையையும் புதிதான வியப்போடு கண்டான். சற்றுநேரம் வெறும் பார்வையாளன் மட்டுமேதான் என்று தோன்றியது.



குழந்தைகளோ சற்றும் களைக்கவில்லை. சரியும் மண்ணைப் பொருட்படுத்தாமல், சுவர்களைப் பற்றியேறி மாறி மாறிக் குதித்துக் கொண்டேயிருந்தனர். தவளைகளுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் தோன்றவில்லை. கிழவனின் வாயிலிருந்து எழும் புன்சிரிப்பைப் போல, மெல்ல நகைத்துக்கொண்டு அவர்களைக் கிணறு பார்த்துக் கொண்டிருப்பதாகப் பட்டது. குஞ்சம் கலைந்த ரிப்பன் காற்றிலாட அந்தச் சிறுமி எட்டிக் குதிக்கையில், வெயில் பட்ட மினுக்கத்தில் இறங்கி வரும் குட்டி தேவதையைத் தணிவாகக் கிணறு ஏந்திக் கொள்வதாய் இருந்தது. மேலேறுவதும் குதிப்பதும் தெரியாமல் பையன்கள் அத்தனை வேகம். அவர்களின் பொருளற்ற கூச்சல்களைப் பெருமிதத்தோடு கிணறு வாங்கிக் கொண்டது. துணையற்ற தனிமையில் வெகுகாலமாக லயித்துச் சலிப்புற்றுப் போய்விட்ட மனோபாவத்தோடு இவற்றையெல்லாம் கிணறு ரசித்துக்கொண்டிருக்கிறது போலும்.



 அவன் உடம்பைத் தழுவிய ரகசியக் காற்று குளிரைப் பரப்பியது. மேனியிலிருந்து உருண்டோடிய நீர்த்திவலைகள் அனைத்தும் கிணற்றில் கலந்துவிட்டன. உடல் காய்ந்து போனது. நடுக்கம் பற்றியது. நீருக்குள் இருக்கையில் தெரியாத குளிர், சற்று மேலேறியதும் சட்டெனப் பிடித்துக்கொள்கிறது. உண்மையில், இது கிணற்றின் தந்திரம். தன்னுள் இறங்கச் சொல்லும் அதன் அழைப்பு.


ஒரு முறை வந்துவிட்டவனை மீண்டும் மீண்டும் தூண்டுவதற்கான மந்திரத்தைக் கிணறு தூவிவிடுகிறது. அலையினூடே பாய்ந்தான். இப்போது வெதுவெதுப்பான நீர் அவன் உடலைத் தடவி அரவணைத்தது. அவனையறியாமலே கிணற்றை வட்டமாகப் பாவித்து வலம் வந்தான். அவன் காலடிகள் உடனுக்குடன் மறைந்தாலும் சுளிவுகள் இருந்தன. மறுபடியும் வலம் வரத் தூண்டிற்று. அதற்குள் அந்தச் சிறுமி அவனைப் பார்த்துக் கேட்டாள்.


“சித்தப்பா… கெணத்தச் சுத்தி நிக்காம எத்தன ரவுண்டு வருவீங்க?”

அவனால் எண்ணிக்கை சொல்ல முடியவில்லை. கிணற்றை அளவிட்டான். அதன் கோணமற்ற பரப்பு
எந்தத் தீர்மானத்தையும் கொடுக்கவில்லை. பதிலின்றி மெலிதாக மழுப்பிச் சிரித்தான். அவள் விடவில்லை.
“பத்து ரவுண்டு வர முடியுமா?”
சிறுவன் அதற்குப் பதில் சொன்னான்.
”சித்தப்பாவால ரண்டு ரவுண்டே வரமுடியாது.”
அவனைக் கிளப்புவதற்காக அந்தச் சிறுவன் சொல்கிறான் என்பதை உணர முடிந்தாலும், இதையும்தான் பார்ப்போமே என்ற சவால் மனம் வந்திருந்தது. படியிலிருந்து தொடங்கி ஒவ்வொரு மூலையாக தொட்டு மீண்டும் படிக்கே வருவது ஒரு சுற்று. முதல் வட்டம் முடிந்து அடுத்த வட்டத்தின் பாதியில் அவன் மூச்சுறுப்புகள் பலகீனமடைந்தன. வாய் வழியாக மூச்சு வாங்கினான். கைகள் சோர்ந்து கால்கள் ஒத்துழைக்க மறுத்தன.


எவ்வளவோ முயன்றும் அவனால் முடியவில்லை. மறுபடியும் கிணறு அவனைத் தோல்வியுறச் செய்துவிட்டது. ஒரு மூலையில் நின்றுகொண்டு உடல்குறுகி மூச்சு வாங்கினான். கிணற்றின் எக்களிப்புத் தானோ என அஞ்சும்படி அவர்களின் ஆரவாரம் காதடைத்தது. அவமானத்தை மிகுவிக்கும் கூச்சல். மேலேறிப் போய்விடவேண்டும் போலிருந்தது. கிணறு யாராலும் ஜெயிக்க இயலாத பிரம்மாண்டம். இதன் முன் தோல்வியை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதனோடு போட்டியிட்டுத் தோற்பதே தைரியம்தான். கர்வத்தோடு பெருமூச்செறிந்தான். படியை நோக்கி நீந்தினான். தேர்வடத்தைப் பிடிக்கும் அடக்கத்தோடு கை துழாவியது. படியோரம் வந்து இறுதி முழுக்குப் போட்டுத் தலையைப் பின்னோக்கி நீர்ச்சீப்பினால் சீவிக்கொண்டான். பின் அறிவித்தான்.



“நான் ஏர்றன். நீங்க குதிக்கறதுன்னா குதிச்சுட்டு வாங்க.”
அவன் அறிவிப்பு குழந்தைகளிடம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும். சில நொடிகள் கிணற்று அலை டிமிக்கிடும் ஓசை. சிறுமியின் முகத்தில் துயரத்தின் சாயை முற்றிலுமாகப் படிந்துவிட்டது. பையன்கள் சோர்ந்து போயினர். கிணற்றுச் சுகம் இத்தனை சீக்கிரம் தீர்ந்து போய்விடுவதை அவர்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அவன் ஏறிவிட்டால் அவர்களும் ஏறிவிடவேண்டியதுதான். பெரிய ஆள் யாரும் இல்லாமல்
கிணற்றுக்குள் இருக்க அவர்களுக்கு அனுமதியில்லை. கிணறு எத்தனையோ அச்சுறுத்தல்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது. அதன் மேற்பொந்துகளில் விஷமேறிய கிழட்டுப் பாம்புகள் அடைகிடக்கலாம். துஷ்டக்கணம் ஒன்றில் அவை தலை நீட்டி வெளிவரலாம். நீருக்குள் மூழ்கிச் செல்பவர்களை மாட்டி இழுக்கும் கொடங்குகள் மறைந்திருக்கலாம். வழுக்கலின் பிடி எந்த நேரத்திலும் இறுகலாம். அந்தச்
சூழல்களைப் பெரியவர்கள் சமாளித்து விட முடியும். சிறுவர்கள்? அத்தோடு, சுற்றிலும் உயர்ந்த தென்னைகள் நிற்க, நடுவில் ஆடிச்செல்லும் கிணரு, அமானுஷ்யமான தன்மை வாய்ந்தது.  குரல்களின் எதிரொலி எந்தத் திசையிலிருந்தும் வரும். பயமூட்டும் மௌனம் நீரின் கருமைக்குள் நிரந்தரமாகி இருக்கிறது. இவற்றிலிருந்தெல்லாம் பாதுகாக்கும் கவசமான அவன் மேலேறிவிட்டால் அவ்வளவுதான்.



சிறுமி, அவனை அழைப்பதற்குக் கெஞ்சியதைப் போன்றே மறுபடியும் தொடங்கினாள். இப்போது அவளுடைய கெஞ்சல் அவனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஏறிப் போய்விடும் முடிவில் தீர்மானமாயிருந்தான். அசட்டையான புன்னகையோடு அடி எடுத்தான். கிழக்கு மூலையில் நின்றிருந்த சிறுமி நீரில் லாவகமாகப் பாய்ந்து அவனருகில் வந்து எங்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள். நனைந்து படிந்திருந்த சடை ஆட, ’போவ் வேண்டாஞ் சித்தப்பா’ என்று தயவானாள். அவன் இதை
எதிர்பார்க்கவில்லை. 


அவள் கைகள் முறுக்கிச் சுற்றிய பாம்பெனப் பிடித்திருந்தன. ‘உடு கண்ணு… உடு கண்ணு’ என்றான். இந்தச் சாதாரணமான சொற்களே அவள் பிடிவாதத்தைப் போக்கிவிடுமென நினைத்தான். அவள் விடுவதாயில்லை. வரம் தரும்வரை விடமாட்டேன் என்று இறைஞ்சுவதுபோல அவள் குனிந்திருந்த தோற்றம் காட்டியது. அவனுக்கு எதுவும் விளங்கவில்லை. தடுமாற்றத்தோடு மெல்லக் குனிந்து அவள் விரல்களைப் பிரிக்க முயன்றான். மேலும் மேலும் இறுகியதே தவிர நெகிழவில்லை.



“சித்தப்பாவ உட்ராத பிள்ள” என்னும் குரல் எங்கிருந்தோ கேட்டது. அப்போதும்கூட பிள்ளை விளையாட்டின் பிடிவாதம்தானே இது என சாவதானமாகச் சிரித்தான். எதிர்பார்க்காத நொடியில் சிறுமியின் கை அவனை வாரி உள்ளே தள்ளியது. சுவரில் துருத்திக்கொண்டிருக்கும் கல்லொன்று பெயர்ந்து விழுவதைப் போல நீரில் படாரென விழுந்தான். வயிற்றில் நீர்ச்சாட்டை பளீரென வெளுத்து வாங்கியது. உடலெங்கும் அச்சத்தின் மின் துகள்கள் பாய்ந்தன. சுதாரித்து நீந்தி படிக்கு வந்தான். இதுவும் கிணற்றுக்கு எதிரான தோல்விதானோ என்று தோன்றியது. அப்படியொன்றுமில்லை என்று காட்டிக்கொள்பவனாய் ‘ஏங்கண்ணு இப்பிடிப் பண்ணுன’ எனச் சமாதானம் பேசிக்கொண்டு ஏறலானான். இப்போது அவனுக்கு மேல்படியில் -  அது படியில்லை துருத்திக்கொண்டிருந்த பையன் அவனைப் பார்த்து கைகளை விரித்து ஆட்டிக் கொண்டு ‘உடமாட்டனே’ என்று கூச்சலிட்டான். ஏறிவிடும் வைராக்கியத்தோடு கால்தூக்க, பையன் குனிந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு புரண்டான். இரண்டு பேரும் ஒருசேரக் கிணற்றுக்குள் விழுந்தனர். பையனை நீருக்குள் இழுத்துக் கால் உந்தி ஓர் அழுத்து அழுத்திவிட்டுப் படியை நோக்கி வேகமாக நீந்தினான். பையன் அடிமண்ணைத் தொட்டுத்தான் திரும்ப முடியும். அவன் கழுத்தைக் கட்டிக் கொள்ள குறி வைத்து வந்த சிறுமியைத் தள்ளிவிட்டுப் பாய்ந்து படியேறினான். ‘ஏய்’ என்று உற்சாகக்
கத்தலோடு இன்னொரு பையன் அவன் மீது தாவினான். சற்றும் அவன் எதிர்பார்க்காத கணம். மீண்டும் நீருக்குள் விழுந்திருந்தான். நீரைத் துளைத்து வந்த ஒளி கண்களைக் கூசியது. திவலைகளினூடே அவன் பார்க்க முயன்றான். புரியாத காட்சிகளே எங்கும் நிறைந்தன. பரபரப்பானான். ஏறி ஓடி விடுதலை தவிரத் தப்பிக்க வழியேதுமில்லை. ஆனால், படிக்கு மேலே இன்னொரு பையன். அவர்களுக்குள் ஓர் ஒழுங்கு
வந்திருந்தது. 



நீருக்குள் அவனோடு போராட ஒருவர், படியேற விடாமல் காலைக் கவ்வ ஒருவர். கொஞ்சம் உயரத்தில் நின்றுகொண்டு மேலே தாவிக் குதிக்க ஒருவர். மாற்றி மாற்றி அவர்கள் அந்தந்த இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர். அவனைச் சுற்றி உடைக்க இயலாத கனத்த விலங்கென அவர்கள் மாறியிருந்தனர்.



இந்த விளையாட்டு எத்தனை நேரம் தொடருவது? இது என்ன விளையாட்டு? விளையாட்டெனக் கிணற்றின் தந்திரம். விருந்தாளியாக அவன் யார் வீட்டுக்கும் வரவில்லை. கிணறு வரவழைத்திருக்கிறது. நீச்சலுக்கு அவனை யாரும் அழைக்கவில்லை. தன் தூதுவர்களை உருவம் கொடுத்துக் கிணறு அனுப்பியிருக்கிறது. அவர்கள் முகங்களை அவனுக்குத் தெரியாது. மாயத்தின் பிறப்பிடம் கிணறு, மரணக்குழி. காவு கேட்கத்
தொடங்கிவிட்டது. கிணற்றின் பகாசுர வாய்க்குள் வசமாக வந்து சிக்கிக்கொண்டிருக்கிறான். குழந்தைகள் என அவன் நினைத்தது எவ்வளவு தவறு. கிணற்றின் ஏவலாளர்களான மூன்று பிசாசுகள். கழுத்தைக் குறிவைத்துப் பாய்கிறது ஒன்று. காலை வாரி விடுகிறது ஒன்று. நீருக்குள் கட்டிப்புரண்டு இழுக்கிறது
ஒன்று. அவற்றின் சிரிப்புகள் உயிர் உறிஞ்சும் அழைப்பு. குட்டிப் பிசாசுகள் பசி வெறி கொண்டுவிட்டன. அவன் எவ்விதம் தப்பிப் போவான்?



கிணற்றின் பொந்துகள் மரணம் ஒளிந்திருக்கும் இருட் குகைகளென மாறின. தோல் கருக்கும் அமிலக் கரைசல் தண்ணீர். இவற்றை வெற்றி கொள்ளும் நீச்சல் பலம் அவனிடம் இருக்கிறதா? சுவர்களின் மீது ஏறிக்கொண்டு கழன்ற கண்களோடு வாய் பிளந்து நிற்கின்றன தவளைக் குட்டிகள். அவை எந்த நேரத்திலும் அவனை வீழ்த்திவிடத் தயாராய் இருக்கின்றன. பிசாசுகள் துவண்டு போகையில் அவை பாயக்கூடும். அச்சம் அவன் உடல் முழுக்கப் பரவி நிலைகொண்டது. எதையும் யோச்கிக்கக் கூடவில்லை. ஏறி
ஓடிவிடுகிற  முன்னமுன்ன, மீண்டும் மீண்டும் முயன்று சரிந்தான். தண்ணீரைக் குடித்துக் குடித்து வயிறு உப்பிப் போய்விட்டது. உடல் முழுவதும் நடுக்கம் வேறோடியிருந்தது. எசகுபிசகாக விழுந்ததில் எங்கெங்கோ கற்களின் சிராய்ப்புகளும் காயங்களும் எரியத் தொடங்கின. அவன் அதனைப் பொருட்படுத்தவில்லை. தப்பிப்பதில் குறியாக இருந்தான். அவற்றின் இலக்கு கொஞ்சம் கொஞ்சமாய்ச்  சிதைத்து ஆள்விழுங்கி விடுவதுதான் போலும். மிரண்ட விழிகளோடு சாவுடன் போராடும் மிருகமாய்
மூர்க்கமானான். கைபற்ற வரும் பிசாசுகளை இழுத்து அடித்தான். கால் வைத்துக் கிணற்றின் ஆழம் நோக்கி உந்தினான். ஆனால் அவற்றின் மூர்க்கமும் அதற்கேற்ப அதிகரித்தன.



மரணக்குழி வேறு ஏதேனும் வழிகளைக் கொண்டிருக்கலாம். மூலையை நோக்கித் தாவினான். நிற்க இயலவில்லை. கால்கள் வெடவெடத்தன. மேனியில் வழியும் நீரை முந்தி வியர்வை பெருகியது. அவையோ அவனின் மூலை நகர்வு தங்களுக்குக் கிடைத்த வெற்றியெனக் கும்மாளமிட்டன. துழாவிய விழிகளில் மோட்டார் பம்ப் பட்டது.  பற்றுக் கிடைத்த வேகத்தில் கைகள் தாவின. குழாயைப் பிடித்துக் கொண்டு சரசரவென மேலேறத் தொடங்கினான். அது ஒன்றுதான் அங்கிருந்து வெளியேற வைக்கப்பட்டிருக்கும் சூட்சும வழியென ஊகித்தான். வழவழத்த அதன் உடலோடு வெகுவாகப் போராடி ஏறிக் கொண்டிருந்தான். அப்படியும் இப்படியுமாய் அசைந்தாலும் தன் நிலைவிட்டு மாறாமல் கடினமாகவே இருந்தது.  விளையாட்டின் உச்சவெறி எங்கும் பற்றிக் கொண்டது. வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் கடைசி நொடிகள் இதுவாகவே இருக்கலாம். அவன் ஏற ஏற கூச்சலிட்டுக் கொண்டே பாகுக் குழம்பென உருவம் ஒன்று அதிவேகத்தில் பம்ப்பில் வழுக்கி வந்து அவன் மீது மோதிற்று. பிடிப்புத் தளர்ந்து நேராக நீருக்குள் போய் விழுந்தான். அவ்வளவுதான். எல்லாம் தீர்மானிக்கப்பட்டு விட்டதுபோல. குழறத்
தொடங்கினான்.



 கைகள் அனிச்சையாக நீந்திக் கொண்டிருந்தன. திசை எதுவெனத் தெரியவில்லை. எங்கே பிடிப்பென உணர இயலவில்லை. எதை எதையோ கை பற்றியது. கால்கள் நடுக்கத்தோடு எவற்றின் மீதோ ஏறின. அது கிணற்றின் ஏதோ பக்கச்  சுவராக இருக்கலாம். நீட்டிக் கொண்டிருக்கும் கல் விளிம்புகளில் கைகள் பதிகின்றன போலும். சிறிது தூரம் ஏறிவிட்டதான உணர்வு கொண்டான். அது நம்பிக்கை அளித்து
ஈர்த்தது. மேலும் மேலும் தாவலானான். அப்போது கிணறு குரலெழுப்பி எதிரொலித்தது. ‘பாம்பு பாம்பு’. துவண்டு கைகளின் பிடி நெகிழ்ந்தது. வாய் பிளந்து கை கால்கள் விரிய மல்லாந்து விழுந்தான் நீருக்குள், தவளை ஒன்றாய்.



நன்றி – பண்புடன்