Wednesday, September 19, 2012

அணு உலை பாலிடிக்ஸ் @ கல்கி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJuzKTqPkOBNET9ttxJVtnRh3EEGnbUCuKMkz1gis3WnPWmoLBi2sM1qbTR4BLu8oBKMQQR7S8nLHdtZWm7io8DL5RrEGyqNNX76qcINFGltlYXhep41OgebcWvoYpI4qmD_HOrIPpdE_S/s400/koodankulam.jpg 

அணு உலை பாலிடிக்ஸ்

கொதிக்கும் கூடங்குளம்... அடக்கும் அரசாங்கம்!

ப்ரியன்

போலீஸ் துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகை என்று கூடங்குளமும், சுற்று வட்டாரமும் கலவரப் பூமியாகி இருக்கிறது. ‘என்னைக் கைது செய்தாலும், அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடரும்என போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் சொல்லி இருக்கிறார். எதிர்ப்பலை ஓயவில்லை. இப்போது கூடங்குளம் தேசியப் பிரச்னையாக மாறியிருக்கிறது.

‘கூடங்குளம் அணுமின் உற்பத்திக்குத் தடைவிதிக்க வேண்டும்என்று உயர் நீதிமன்றத்தை அணுகியது, ‘பூவுலகின் நண்பர்கள்என்ற சுற்றுச்சூழல் அமைப்பு. அதைப்போல வேறு தனிப்பட்ட சமூக ஆர்வலர்களும் வழக்குப் போட்டார்கள். வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ‘பூவுலகின் நண்பர்கள்அமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறது. இது தொடர்பாக தில்லியில் இருந்த அந்த அமைப்பின் அறங்காவலர் ஜி.சுந்தர்ராஜனிடம் பேசினோம்.

 http://tamil.oneindia.in/img/2011/09/16-kudankulam-nuclear-power-pl.jpg

அணுமின் எரிபொருள் கசிவால் ஏற்படும் கதிர்வீச்சு மாபெரும் பேராபத்தை, மனிதகுலத்துக்கு உருவாக்கும் என்பது பல முறை சொல்லப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள எந்த அணுஉலையும் நூறு சதவிகிதம் பாதுகாப்பானது என்று யாராலும் உறுதியாகக் கூற முடியாது. ‘ஆபத்தான தொழில்நுட்பம், அதிகமான உற்பத்திச் செலவு, கதிரியக்க ஆபத்து ஆகியவை காரணமாக அணுமின் உற்பத்தி மனிதகுலத்துக்குப் பேரழிவை உருவாக்கும்என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் சொல்லியிருக்கிறார்


 அணுமின் நிலையத்தின் கழிவுகள் சாகாத் தன்மை கொண்டவை. அவற்றின் கதிரியக்க வீரியத்தை முற்றிலும் அழித்துவிடும் தொழில்நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்கா (த்ரீ மைல் ஐலேண்ட்) மற்றும் ரஷ்யாவில் (சென்னோ பில்) ஏற்பட்ட அணுமின் நிலைய விபத்துக்களுக்குப் பிறகு அந்த நாடுகள் அணுமின் நிலையம் குறித்து மறுபரிசீலனையில் இருக்கின்றன. ஆனால் தொழில்நுட்பம், மற்றும் அணுஉலை போன்றவற்றில் வர்த்தக நோக்கில் நம்மைப் போன்ற நாடுகளை வளைத்துப் போடுகின்றன.



நமது நாட்டில் அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் ஒரு விசித்திரமான அமைப்பு. அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை முற்றிலும் உறுதிசெய்து கொள்ளும் பொறுப்பு இந்த அமைப்புக்கு உண்டு. ஆனால் இது அணுசக்தித் துறையின் கீழ் இயங்குகிறதே தவிர, சுதந்திர அமைப்பு அல்ல. ‘இந்த அமைப்பு சுதந்திர அமைப்பும் கிடையாது; நம்பத்தகுந்ததும் அல்லஎன்று நமது கணக்குத் தணிக்கை அதிகாரி சொல்லியிருக்கிறார். இந்த அமைப்பின் தலைவராக இருந்த டாக்டர் கோபாலகிருஷ்ணன், ‘இது போலித்தனமான, மதிப்பில்லாத அமைப்புஎன்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட அமைப்பு கொடுக்கிற பாதுகாப்புச் சான்றிதழ் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும்?

 http://tamil.oneindia.in/img/2011/11/17-kudankulam-plant-300.jpg

ஜப்பானில் புகோஷிமா அணுஉலை விபத்துக்குப் பிறகு இந்தியாவில் உள்ள அணுஉலைகளின் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்திக் கொள்ள, மத்திய அரசு வல்லுனர்கள் பணிக்குழு (Task force) ஒன்றை நியமித்தது. அந்தப் பரிந்துரைகளில் ஆறு பரிந்துரைகள்தான் செயல் வடிவம் பெற்றிருக்கின்றன. இன்னமும் 11 பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை


 இவற்றை நிறைவேற்ற ஆறு மாதம் முதல் இரண்டு வருடம் வரை ஆகலாம் என்று அணுமின் ஒழுங்கு முறை வாரியம் சொல்லியிருக்கிறது. அப்படியிருக்க, அணுமின் நிலையம் இயங்க அவசரம் காட்டுவது ஏன்? இதில் ஒரு முக்கிய பரிந்துரை, இயற்கை பேரிடர்களால் (பூமி அதிர்வு, சுனாமி) அணுமின் உலை பாதிப்புக்கு உள்ளாகும்போது அதை குளிர்விக்கத் தேவையான மற்றும் தானாக இயங்க மாற்று நன்னீர் வசதி (fresh water). சுனாமி உருவாக வாய்ப்புள்ள கடல் பகுதியிலிருந்து கூடங்குளம் 1300 கி.மீட்டருக்கு தள்ளியிருக்கிறது என்கிறார்கள். சமீபத்தில் கூட கூடங்குளத்திலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள கடல் பகுதியில் அலைகள் ஆக்ரோஷம் காட்டின. இயற்கையின் செயல்பாடுகளை யாரும் வரையறுக்க முடியாது.



நமது நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் இயங்கிய காலத்தை விட, பழுதாகி இருந்த காலம் மிக அதிகம். அதேபோல் உற்பத்தியிலும் முழு அளவு எட்டவில்லை. எனவே, நமது எதிர்காலச் சந்ததிகளை மனத்தில் கொண்டு கூடங்குளம் பணிகளை உடனே நிறுத்த வேண்டும். ஆபத்தில்லாத மாற்று எரிசக்தி திட்டங்கள் தீட்ட வேண்டும். உச்சநீதிமன்றமும் எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிடில் மக்கள் மன்றத்தில் எங்கள் போராட்டம் தொடரும்." என்கிறார் ஜி.சுந்தர்ராஜன்.

13,500 கோடி செலவில் கடந்த 23 வருடங்களாக உருவாக்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு இறுதிக்கட்டத்தில் தடைகள் ஏற்படுத்துவது சரியல்ல; அதிலும் குறிப்பாக 3000 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ள தமிழகத்தின் தேவையில் சிறிதேனும் ஈடுகட்ட கூடங்குளம் அவசியம். மத்திய, மாநில வல்லுனர் குழுக்கள் ஆய்வு செய்து பாதுகாப்பானது என்று உறுதியளித்துள்ளன.


 அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் திருப்தியளிப்பதால்தான் உயர்நீதிமன்றமும் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி கொடுத்துவிட்டது. முக்கியக் கட்சிகள் எதுவும் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மக்கள் ஆதரவு இல்லாத அமைப்புகளும், கட்சிகளும்தான் எதிர்ப்பைக் காட்டுகின்றன. தமிழக மக்களிடம் கூடங்குளம் எதிர்ப்புக்கு ஆதரவு இல்லை. காரணம், தமிழகம் சந்திக்கும் மின் பற்றாக்குறை


 கல்பாக்கம் பகுதியில் மீனவர் வாழ்வாதாரத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. கூடங்குளத்தில் 8000 மெகா வாட் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே, திட்டத்தை முடக்க வேண்டாம்" என்கிறார்கருத்துக்களம்ஆசிரியர் இரா. தங்கத்துரை.

நன்றி - கல்கி , புலவர் தருமி 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYo5WXppL687OCr3DJphXr2jyeyQHLFd2k45YHvKhTNGCQKwQS-LH-RrtEAWWoD5yQ3GindCbtnO68mdIf6Q3oMJr66o2oDEM82NtylZq5J4PAGYr7QAJoh6QxhZNLl_0n3NO1bTH-9dJW/s1600/koodangulam+anumin+nilayam+%25282%2529.jpg

ரெட்டை ஜடை போட்டிருக்கும் பொண்ணுங்க மட்டும் சாப்பிடுவது எது?

1. கோயிலில் பொண்ணுங்க கண்ணை மூடி சாமி கும்பிடறப்போ அவங்களை ரசிக்காம நீயும்  கண்ணை மூடிக்கிட்டா உனக்கு மோட்சமே கிடைக்காது  ;-0



-------------------------


2. பிபாசா பாசு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் # விசாரிக்கப்போறேஙகற சாக்குல அவனவன் கிளம்பிடுவான் பாருங்க




--------------------------------


3. உன் காதலியின் பெயர் "விக்"னேஸ்வரியாக இருந்தாலும் அவள் கூந்தலை நீ இழுத்துப்பார்க்கவெல்லாம் கூடாது



--------------------


4. நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொப்பை உள்ள லேடிசை ,லேடி போலீசை சைட் அடிக்கும் நாளாக கொண்டாடினால் நீயும் ஒரு தமிழனே




---------------------------------


5. ரெகுலரா முருகன் கோயிலுக்குப்போகும் ஆணின் இலக்கு 2 சம்சாரமாகவும் இருக்கக்கூடும்




------------------------------

☼ SOCCER MASCOT ☼
Tatu-bola (Tolypeutes tricinctus) is the 2014 world cup soccer mascot! This animal lives only in Brazil (host of the world cup) and can transform itself in a soccer ball.



6. சூரியனைப்போல் சுறுசுறுப்பா இரு.உதய சூரியனைப்போல் சுயநலமாய் இருக்காதே




-------------------------------


7. ஏ சி ஹால்ல ,ஏ சி ரூம்ல செய்யப்படும் பிஸ்னெஸ் எல்லாமே சில்லறை வர்த்தகம் தான் # சில் அறை ஏ ஸி ரோசியின் டைரியிலிருந்து




----------------------------


8. நீ சரியானவன்தான் என நிரூபிக்க மத்தவங்க தவறானவங்கன்னு காட்ட முயலாதே




------------------------------


9. சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டால் கட்சியிலிருந்து விலகுவேன்: எடியூரப்பா # ஆமா இவரு பெரிய கவரி மான் பரம்பரை




-------------------------



10. ஐடியா ஸிம் 160 ரூபாய்க்கு வாங்குனா 1300 ரூபாய்க்கு டாக் டைம் இலவசமாம்.காதல் ஜோடிங்க கள்ளக்காதல் கேடிங்க யூஸ் பண்ணிக்குங்க



-------------------------


Ramesh shared thatsTamil - Oneindia.in's photo.



11. 100 பேருடன் உறவு கொண்ட பெண் 6 மாத கர்ப்பம்...5 பேரில் ஒருவர்தான் அப்பா என்கிறார்! # குழந்தைக்கு பஞ்ச் பாஞ்ச்-னு பேர் வைப்பாங்களோ?




----------------------------


12. ஜொள் மாணவன் -சிறுக்கி க்கு சின்ன ரு வருமா?பெரிய று வா?


லொள் மிஸ் - மைனர் பொண்ணுன்னா சின்ன ரு,மேஜர்னா பெரிய று




------------------------------



13. தனுஷ்க்கு கூட பெண் ரசிகைகள் இருக்காங்க எனும்போது நமக்குள் தன்னம்பிக்கை பிறக்கிறது :-)



-------------------------


14. ஆஸ்கர் விருதுக்கு Film Federation of India ஏழாம் அறிவு, வழக்கு எண் 18/9 தேர்வு #ஒரே நெம்பர் படமா இருக்கே.எண்கணித ஜோதிடரோ?




----------------------------


15. இன்று பெரியாரை நினைவு கூறும் விதமாய் ஆனியன் தோசை,ஆனியன்பக்கோடா சாப்பிட்டால் நீயும் கழகத்தமிழனே:-)



--------------------------

நதியின் அருமை புரிந்தவர்கள்...
நதிக்கு அடியில் சுரங்க பாதை அமைத்து
சாலையை தொடர்கின்றனர்.
நம்ம அறிவாளிகள்..வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம்
ஆறு, குளம், வாய்க்கால்....என மண்ணை, குப்பையை போட்டு
மூடி...ஆக்கிரமித்து பிளாட் போடுறான்..நாடு ... விளங்கிடும் ..


என்னது?ரெட்டை ஜடை போட்டிருக்கும் பொண்ணுங்க மட்டும்தான் இதை சாப்பிடனுமா? அடப்பாவிகளா!:-)




------------------------


16. நான் சின்னப்பையனா இருந்தப்போ "அப்பக்கோ"லிப்"டா பட போஸ்டரை பார்த்து அதுல லிப் கிஸ் சீன் இருக்கும்னு நினைச்சேன்:-)



--------------------------


17.  பெண்களுக்கு வயதை குறைத்து காட்டுவது எளிதாக இருக்கிறது - ஒரு க்ளோஸ் அப் புன்னகை, ஒரு லாங்க் ஷாட்  ரெட்டை ஜடை#அவதானிப்பு



-----------------------


18. தலைக்கு குளித்து ,எண்ணெய் வைக்காமல் , லூஸ் ஹேர் விட்டு ,காட்டன் சேலை அணிந்து வந்தால் பெண்ணின் வயதை கொஞ்சம் குறைத்துக்காட்டலாம்



-----------------------------


19. ஆண்களை காயப்படுத்துவதும் ஒரு பெண் தான், அந்த காயத்துக்கு, வேற காயத்துக்கு மருந்து போடுவதும் ஒரு பெண் தான் # நர்ஸ் நளினாப்ரியன் ரியாஸ்



--------------


20. “என்னோட படங்களில் கண்டிப்பாக கவர்ச்சி சீன்ஸ் இருக்கனும்” – ஸ்ரேயா கண்டிசன்! # உங்களை மாதிரி ஜிகிடிங்கதான் சினிமாவுக்கு தேவை





------------------



Tuesday, September 18, 2012

துள்ளி எழுந்தது காதல் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoKnllIOkBjyWAkuPEwAfJCQahmUWSkvb-965L8GM0mAV5gsCyw-XMl5JXP0UKD_jh4YLb6D9KiiJY00DmOW1XFGGIKqF73VXhaZs_IFkE063tpoTsCM90xpERUUQdhipON9-yId0ZVkje/s1600/Thulli+Ezhunthathu+Kadhal+Movie+Posters.jpg

ஸ்கூலுக்குப்போய் படிக்கட்டும்னு பேரன்ட்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்டி ஸ்கூலுக்கு அனுப்பினா தத்திங்க படிக்கறதைத்தவிர எல்லா வேலையையும் செய்ய்துங்க..ஹீரோ , ஹீரோயின் 2 பேரும்  ஸ்கூல்ல ஸ்கூல் மேட்ஸ், க்ளாஸ் மேட்ஸ். 2 பேருக்கும் பாய் மேட்ஸா, பெட் மேட்ஸா ஆக ஆசை. அதாவது காதலிக்கலாம்னு  உள்ளூர ஆசை.. ஆனா 2 பேரும் வெளில சொல்லலை.. 

 ஒரு நாள் இவங்க ஃபிரன்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து டூர் போறாங்க. அங்கே ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கறாங்க.. யாரும் பதற வேணாம். ஒண்ணும் நடக்கலை. அந்த டைம்ல ஹீரோ , ஹீரோயின் 2 பேர் மட்டும் ராத்திரி பூரா  ஹோட்டல் அட்ரஸை மறந்துட்டு ரோடு ரோடா சுத்தறாங்க. அப்போ போலீஸ் ஜீப் வருது. இந்தக்காலத்துல  ரவுடிங்களை விட போலீஸ்ங்கதான் பெண்களுக்கு பெரிய எதிரி.. 


போலீஸ் ஆஃபீசர் ஹீரோயினை ரேப் பண்ணப்பார்க்கறான், ஹீரோயின் கன்னால GUN - போலீஸ் கால்ல சுட்டுட்டு எஸ் ஆகிடறாங்க.. மத்த மாணவர்கள் கேட்டப்போ நடந்த உண்மையை சொல்லாம ஹீரோ ஹீரோயின் கூட தனியா தங்குனதா அளந்து விடறான் ( ஹீரோயினை காப்பாத்தவாம்)


 இது ஹீரோயினுக்கு பிடிக்கலை.. 2 பேரும் லவ்வை வெளிப்படுத்தலை. இந்த மதில் மேல் பூனை சமயத்துல ஸ்கூல் கேண்ட்டீன்ல இருக்கும் ஒரு லவ் ஜோடிங்க மேரேஜ் லைஃபை நடத்த முடியாம தற்கொலை பண்ணீக்குறாங்க.. அதனால ஹீரோயின் மனசு மாறிடறா.. 

http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-thulli-ezhunthathu-kadhal-movie-stills/images/tamil-cinema-thulli-ezhunthathu-kadhal-movie-stills07.jpg


 ஹீரோயின் வீட்ல பார்த்த மாப்ளைக்கு  அல்வா குடுத்தாளா? அல்லது தன் ஸ்கூல் மேட் கம் லவ்வர்க்கு அல்வா குடுத்தாளா? என்பது பயங்கர சஸ்பென்ஸ் .. ஏன்னா நானே தூங்கிட்டேன்.. 


2010  ல தெலுங்குல ரிலீஸ் ஆன தகிட தகிட என்ற படத்தின் டப்பிங்க் தான் இது. போஸ்டர்ல பூமிகா, அனுஷ்கா வை போட்டு ஏமாத்திட்டாங்க.. அவங்க கெஸ்ட் அப்பியரன்ஸ் தான்.. 


ஹர்சவர்தன் ரானே தான் ஹீரோ.. தேறிடுவார். ஆள் நல்லா இருக்கார். நடிப்பும் தோடா தோடா மாலும் ஹை.. 


 ஹரிப்ரியா தான் ஹீரோயின். படத்தோட முதல் 4 ரீல்களில் இவர் குட்டைப்பாவாடை , வெள்ளை சட்டையில் வருவது செம கிளு கிளு.


ஸ்லீவ்லெஸ் லெக்சரரா பூமிகா வந்து லீ ஹிப்ல காட்டு காட்டுனு காட்டிட்டு போறார். ஆறடி உயர நெகு நெகு அல்வாவா அனுஷ்கா சும்மானாச்சுக்கும் 2 சீன் வர்றார்.. 


 படம் பூரா ஏகப்பட்ட கூட்டம். யார் யார் என்ன ஒண்ணும் புரியல. 


http://www.cineindya.com/wp-content/uploads/2011/12/Tamil-Movie-Thulli-ezhunthathu-kadhal-Online-Pictures-Moment-3337.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்


1. இதுவரைக்கும் உன் லைஃப்ல எத்தனை பேர் உன்னை கோபப்படுத்தி இருக்காங்க? அவங்களை எல்லாம் விட்டுட்டு ஏன் உன் மனசுக்கு பிடிச்சமானவங்க  மேல மட்டும் ஆக்‌ஷன் எடுக்கனும்னு நெனைக்கறே?



2. கடவுளே! நான் மட்டும் 100 க்கு 100 மார்க் வாங்குனா  உனக்கு 120 தேங்காய் உடைக்கிறேன்.


 இவன் எக்ஸாம் எழுத வந்தானா? சாமி கும்பிட வந்தானா? அடேய்



3. எல்லாமே தெரிஞ்ச கொஸ்டீனாத்தான் இருக்கு.. ஆனா என்ன ஒரு பிராப்ளம் ஆன்சர் மட்டும் தெரியல.



4. அன்புள்ள பேப்பர் திருத்துவோரே.. என்னை பாஸ் பண்ண வெச்சா இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் செக்கும் பாஸ் ஆகும்



5. பரிட்சைக்கு வந்து பாடம் எழுதுவான்னு பார்த்தா உலகத்துல இருக்கற எல்லா நாட்டு கடவுள் ஃபோட்டோவையும் வரைஞ்சு வெச்சிருக்கானே? 


http://chennai365.com/wp-content/uploads/movies/Thulli-Ezhunthathu-Kadhal/Thulli-Ezhunthathu-Kadhal-11-11-Stills-011.jpg


6. உஷ் அப்பாடா.. பிங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டுப்பார்த்தே எல்லா கேள்விகளுக்கும் ஆன்சர் பண்ணியாச்சு



7. ஹீரோயின் - என்ன கிஸ் இது? கோயில்ல தீர்த்தம் கொடுத்த மாதிரி 


8. டேய்.. பின்னால பார்றா.. தியேட்டர்ல பிட் ஓடிட்டு இருக்கு.. 



9. என் பேரை இனிமே நீ சொன்னா நான் செத்துடுவேன்.. என்னையும் மீறி எப்போவாவது உன் பேரை நான் சொல்ல வேண்டி வந்தா நான் செத்துடுவேன்.. 


10 . கடவுள் ஏன் நமக்கு 2 காது கொடுத்திருக்காரு  தெரியுமா? 


பெரியவங்க ஏதாவது திட்டுனா இந்தக்காதுல வாங்கி அந்தக்காதுல விட்டுடத்தான்


http://galleries.celebs.movies.pluzmedia.com/albums/pictures/kollywood/movies/2011/Thulli%20Ezhunthathu/Thulli%20Ezhunthathu%20Kadhal%20Movie%20Pictures/Thulli%20Ezhunthathu%20Kadhal%20Movie%20Pictures-d3f6562b527db5463f193bced9e3c8a2.jpg


சொதப்பலான லாஜிக் மிஸ்டேக்ஸ்,இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் ஹை குவாலிட்டி செல் ஃபோன் வெச்சிருக்காங்க. டூர் போன இடத்துல ஹோட்டல் எதுன்னு மறந்துடறாங்க. விடிய விடிய அதைத்தேடிட்டு இருக்காங்க.. படத்தின் முக்கியமான டர்னிங்க் பாயிண்ட் சீன் இது ஆனா படு லாஜிக் சொதப்பல். கூட வந்த ஃபிரண்ட்ஸ்ங்க 6 பேர்ல யாருக்காவது ஃபோன் பண்ணி கேட்டிருக்கலாம்.. அல்லது எஸ் எம் எஸ் அனுப்பி கேட்டிருக்கலாம்.. 


2. தன்னை ரேப் பண்ண வந்த போலீசை ஹீரோயின் கால்ல சுட்டுடறா. இது பெரிய குத்தமா? என்னமோ பெரிய தப்பை அவ பண்ணிட்டதா ஹீரோ பில்டப் குடுத்து அந்த மேட்டரை மறைக்கறாரே? தன் கற்பை காப்பாற்றிக்க அவ கொலையே செஞ்சாலும் சட்டம் சலுகை அளிக்கும் கறதை இயக்குநர் மறந்துட்டாரா? 



3. அப்படியே அதை மறைப்பதாக இருந்தாலும் ஹீரோ என்ன சொல்லி இருக்கனும்.. 2 பேரும் ரோடு ரோடா அட்ரஸ் தெரியாம சுத்திட்டு இருந்தோம்னு உண்மையை சொல்ல வேண்டியதுதானே? எதுக்கு  2 பேரும் ஒண்ணாத் தங்குனோம்னு சொல்லனும்?



4. டூர் போற எல்லாரும் கைல ஆளுக்கு ஒரு பேக் தான் எடுத்துட்டு வர்றாங்க. ஆனா ஹோட்டல் ரூம் எடுக்க வரும்போது ஹீரோயின் மட்டும் தன் பேக்கை மறந்து பஸ் ஸ்டேண்ட்லயே வெச்சுட்டு வந்துடறதா சொல்றா.. அது எப்படி? ஆளுக்கு 3 பேக்னா 4 பேக்னா மறக்கலாம்.  எல்லார் கைலயும் ஒரு பேக் தான் இருக்கு.. இவ கை வீசிட்டு பேக்கு மாதிரி வரும்போது பேக் ஞாபகம் வர்லையா? 


5. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை கால்ல சுட்டுட்டு ஹீரோயின் எஸ் ஆகறா. ஆனா அந்த டீம் அவளை தேடவோ பழி வாங்கவோ , துரத்தவோ எந்த ஸ்டெப்பும் எடுக்கலை.. 


6. இந்தப்படத்துல பிளாஸ்பேக் உத்தியே தேவை இல்லாதது.. கதையை குழப்புது.. 


http://haihoi.com/Channels/cine_gallery/Thulli-Ezhunthathu-Kadhal-Movie-Stills-81_S_105.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. படம் போட்ட 52 வது நிமிஷத்துல ஹீரோயின் ஓடி வர்ற சீன்ல டாப் ஆங்கிள்ல  கேமராமேன் ஷூட் பண்ண  ஒரு செம சீன் இருக்கு டோண்ட் மிஸ் இட்.. 




2.  முதல் முறை உன்னை நினைத்து என் கண்கள் அழுகின்றதே பாடல் காட்சி, படமாக்கப்பட்ட விதம், பாடல் வரிகள் அனைத்தும் ஓக்கே.. 




3. படம் போட்ட முதல் 30 நிமிஷம் திரை முழுக்க அலங்கரிப்பது ரம்பா ஸ்டைலில் தொடை வரை மட்டும் ஸ்கர்ட் போட்டு வரும் ஸ்கூல் கேர்ள்ஸ் தர்ம தரிசனம் செம கிளு கிளு.. 



4. படத்துக்கு சம்பந்தமே இல்லாம வந்தாலும்  பூமிகா தன் திறமையை காட்டிச்செல்லும் இடங்கள். வர்ற சீன்ஸ் எல்லாம் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் , லோ ஹிப் சேலை. ட்ரான்ஸ்பேரண்ட்  டிரஸ் தான்.. இப்படி ஒரு காலேஜ் லெக்சரர் இருந்தா எவன் படிப்பான்? 



5. அனுஷ்கா வரும் காட்சிகள் இளமைப்பட்டாசு.. படத்தின் மார்க்கெட்டிங்க்குக்கு  அனுஷ்கா, பூமிகா 2 பேரும் நல்லா யூஸ் ஆகி இருக்காங்க.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdG-orlCR49mC5xaSEzcP_UWWyDZStWV1hxhTzX92kV3MjfLzatR19H-5vYqgjTMj8WEimtJnXyakCnvb8qgufl77E_t_780R7bbUIhbuNa_e9nIn6IivMAxQrHqL_uJVHeQd1uRyEOlM/s1600/Bhoomika+Latest+Spicy+Pictures+in+Saree+on+Thulli+Ezhunthathu+Kadhal+Movie+Gallery+%25286%2529.jpg





ஆனந்த விகடன் மார்க் - 39 ( இது டப்பிங்க் படம் என்பதால் விமர்சனம் வராது )



 குமுதம் ரேங்க் - சுமார் 


 சி பி கமெண்ட் - காங்கிரஸ்க்கு எதிரானவர்கள் அதாவது பி ஜே பி பார்ட்டீஸ் மட்டும் தியேட்டர்ல போய் பார்க்கலாம்.. மற்றபடி டீசெண்ட் ஆசாமிகள் எல்லாம் டி வி ல போடறப்ப பார்த்தா  போதும்


இந்த படத்தை ஈரோடு ஸ்ரீநிவாசாவில் பார்த்தேன்

 http://www.indiancinemagallery.com/Gallery2/d/895677-1/Anushka+in+Thulli+Ezhunthathu+Kadhal++movie+stills+06_09_12+_24_.jpg

அணுசக்தி வேண்டாம் - சுஜாதா -தினமணி (1-10-1988 -)

https://lh3.googleusercontent.com/-ME9RMc11jZI/Tp2IbxlOPxI/AAAAAAAAG3g/9145FLzFF5I/azsolarfarm1.jpg 

அணுசக்தி வேண்டாம்; சுஜாதா எழுதியது!!


அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.





எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.


விபத்துகள்:-


முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல
.

அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.

ஆபத்தான கதிரியக்கம்:-


அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.


அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.


சாம்பலை என்ன செய்வது:-


அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவு தகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.


ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-

உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.



சூரியனே கதி


சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி.


இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.


(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது.)


நன்றி - ஃபேஸ்புக் - கே ஆர் விஜயன் 

http://www.kalachuvadu.com/issue-143/pics/KUDANKULAM3.jpg

நான் சைக்கோ இல்லை # திவ்யா திவ்யா

's photo.
Dhanush Birthday Pic taken few hour back (Thanks to Simbu):
1.பலரது வாழ்க்கை மெழுகுவர்த்தி போல.தூரத்தில் இருந்து பார்க்கையில் ஒளி மட்டும் தெரியும ,அருகில் சென்று பார்த்தால் கண்ணீர்த்துளி ,வலி் 



-------------------------

2. கீப் இன் டச் = சின்ன வீடு கிரிஜா தொட்டுட்டு இருக்கேன்



---------------------------

3. போர்ன்விட்டா = கோட் வொர்ட் ஆப் "வீட்ல போர்னோகிராபி புக் ரீடிங்" ? 



-------------------------------


4. க்ளாசிக்கல் மூவி = க்ளாஸ்ல வாத்தியார் பாடம் நடத்தறப்போ அதை கவனிக்காம செல் போன்ல பார்க்கற கில்மா மூவி? # சபாஷ் துபாஷ் 



-------------------------------


5. டுடே பிக்கிள் -நெல்லிக்கா ஊறுகா ,டுமாரோ பிக்கிள் - ஆவக்கா ஊறுகா ,எஸ்டர்டே பிக்கிள் - பாவக்கா ஊறுகா 



-----------------------------



HAND PHONE + TELEFON BOOTH = EAR PHONE..!
NEW DESIGN PHONE 2013.

6. ஐ ஹேவ் குட் கலெக்சன்ஸ் ஆப் ஜேம்ஸ்பாண்ட் டிவிடி = அந்த டிவிடி எல்லாம் வாடகைக்கு விட்டு நல்ல வசூல் கலெக்ட் ஆச்சு? # சபாஷ் துபாஷ் 



--------------------------

7. சனி நீராடு = வாட்டர் தீம் பார்க் போய் ஜாலியா ஆடு ? 



-------------------------


8. அத்தான் உங்க வாய்ல ரகசியமே தங்காதா? 


என் வாய் என்ன லாட்ஜா? ஆசிரமமா? 


---------------------------


9. திருப்பூர் பனியன் பக்கத்துலகொஞ்சம் இஞ்சி இருந்தா சாப்ட்வேர் இஞ்சி நியர் (இஞ்சினியர்)னு சொல்லலாமா?



-----------------

10. டியர் மேக்கப் போட்டு முடிச்சுட்டியா? 



வெயிட் இப்போதான் 2 கோட்டிங்க் முடிஞ்சிருக்கு 


---------------------------





11. டாக்டர் எனக்கு ஸ்கின் அலர்ஜி.


 ஓஹோ பலாப்பழம் அன்னாசிப்பழம் இதெல்லாம் தோல் எடுக்காம அப்டியே சாப்டீங்களா? 



---------------------------


12. தனுஷ் - நான் சைக்கோ கிடையாது.எனக்கு மனப்பிறழ்வு நோய் ஏதும் இல்லை.ஆனா எங்கண்ணனால இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு.திவ்யா திவ்யா 


---------------------------


13. தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு நாளை அனைத்து தனுசு ராசிஅன்பர்களுக்கும் ஹிட்சாக்கின் சைக்கோ டி வி டி இல்வசம் - ஸ்ருதிி 



-----------------------


14. க்ளிண்டன் -ஹூம் ஒரு பி ஏ வை கரெக்ட் பண்ணுனதுக்கே நம்மை கழுவி கழுவி ஊத்தினாங்க.நித்தி புத்தி ம் ம் 



---------------------------


15. நித்தி - என் ஆசிரமத்துல ஒவ்வொரு நடிகையும் ஒவ்வொரு பொண்ணும் ஏன் ஒவ்வொரு பையனும் தானா செட் ஆனதுடா 



---------------------------



Must be a crazy fan of Olympics...
--------------------------------------

16. ஜட்ஜ் - ஆசிரமத்தை மூடி சீல் வைங்க .



 அது முடியாது யுவர் ஆனர் ,உள்ளே லட்சக்கணக்கான லேடீஸ் இருக்காங்க 



---------------------------


17. எச்சரிக்கை - அருகில் ஆசிரமம் உள்ளது .ஆண்கள்,பெண்கள் ,குழந்தைகள்.நடிகைகள் அனைவரும் கவனமாக செல்லவும் 



--------------------------


18. ஆண்மை பரிசோதனை ரிசல்ட் வந்தாச்சா? 



ஸாரி யுவர் ஆனர் டெஸ்ட் பண்ணபோன லேடி கூட ஒன் டே மேட்ச் ஆடிட்டாரு 



-----------------------------


19. ஜட்ஜ் - பல நடிகைகளை உங்களால எப்படி கரெக்ட் பண்ண முடிஞ்சுது?



 நித்தி - அஸ்கு புஸ்கு அது தொழில் ரகசியம் 



-----------------


20. நடிகைகள் இரு வகை 1, நித்தியிடம் தீட்சை பெற்றவர்கள 2 பெறாதவர்கள்் 



---------------------------




21. 4 எழுத்தில் என் நா இருக்கும் - நித்தி # ரஞ்சிதா ,கவுசல்யா,யுவராணி .சமந்தா 



--------------------------

22. நித்தி-சென்னை சங்கமம் மாதிரி பிடதி சங்கமம் ஆரம்பிச்சு எல்லா நடிகைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துடனும் 



---------------------------


23. நடிகைகளின் சரணாலயம் - நித்தியானந்தாவின் ஆசிரமம் 


---------------------



How many like for this sincereness..?!

Image - near MARINA - CHENNAI


Monday, September 17, 2012

நெல்லை சந்திப்பு - சினிமா விமர்சனம்

-nellai-santhippu-movie-wallpapers-8.jpg (1024×724)தமிழ்நாட்ல சமீபத்தில் நடந்த போலீஸ் என்கவுண்ட்டர் பல போலி என்கவுண்ட்டரே என ஒரு டாக் இருந்துச்சு. நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கூட  அதீஷாவின் கதைல அப்டி ஒரு படம் வந்துச்சு.. அதே மாதிரி போலீஸ் நடத்திய போலி என்கவுண்ட்டர் கதை தான் இது..


ஹீரோ ஃபேமிலி ஒரு அபார்ட்மெண்ட்ல குடி இருக்காங்க. அங்கே எதிர் வீட்ல சிவகாசி ஜெயலட்சுமி மாதிரி, சஹானா மாதிரி ஒரு உத்தம பத்தினி இருக்கு.அவங்க கிட்டே வரும் ரெகுலர் கஸ்டமர்ஸால இவங்களுக்கு அசூயை. அதாவது அசைவம் சாப்பிடறவங்களைப்பார்த்து சைவம் சாப்பிடறவங்க முகம் சுளிப்பது போல்


 ஹீரோவோட அக்கா போலீஸ்க்கு ஃபோன் பண்ணி புகார் தர்றா.உ பத்தினி கைது. வெளில வந்து அவ பயங்கர ரகளை வீட்டை காலி பண்ண வேண்டிய சூழல். அவசர அவசரமா வீடு பார்த்து புது வீடு குடி போறாங்க. அந்த வீட்ல ஆல்ரெடி 2 ரவுடிங்க தங்கி இருந்தாங்க.. ( சில காட்சிகளில் டெரரிஸ்ட்னும்  சில இடங்களில் ரவுடிஸ்னும் வசனம் வருது)

எப்பவுமே இந்த போலீஸ் குற்றவாளிங்களை விட்டுட்டு நல்லவங்களைத்தான் டார்ச்சர் பண்ணுவாங்க. என்கவுண்ட்டர் பண்றப்போ ரவுடினு நினைச்சு ஹீரோவை சுட்டுடறாங்க. அவங்க தப்பு தெரிஞ்சு ஹீரோவை ரவுடிமாதிரி  செட்டப் ஆதாரம்  எல்லாம் வைக்கறாங்க. 


 ஹீரோ சாகலை. உயிர் இருக்கு.செத்துட்டதா நினைச்ச போலீஸ்க்கு இது ஷாக். ஏன்னா அவங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுமே.. ஹீரோ குடும்பமே போலீஸால நாசம் ஆகுது. 


 பழி வாங்க எஸ் ஏ சந்திர சேகர் பட பாணில் ஹீரோ 3 போலீஸ் ஆபீசரை பழி வாங்கறதுதான் கதை.

16592638738.jpg (600×400)




 இயக்குநரிடம் பல கேள்விகள் , திரைக்கதையில் சில ஆலோசனைகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள்


1. இப்போ நான் சொன்ன மாதிரி சிம்ப்பிளா கதை சொல்லி இருந்தா நல்லாருந்திருக்கும். ஆனா நீங்க கதைக்குள்ளே வரும்போது இடைவேளை வந்துடுது. அப்புறம் அவசர அவசரமா அந்த பழி வாங்கல் சம்பவங்களை மூணே ஷாட்ல முடிச்சுட்டீங்க.. 


2. ஹீரோ அவருக்கு ஒரு லவ்வர், ஹீரோவின் அக்கா, அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்ளை , அவங்க கொஞ்சல்ஸ், காதல், ஊடல் இதெல்லாம் இந்த கதைக்கு தேவை இல்லாதவை. முன் பாதி முழுக்க அதான் காட்டறீங்க..  ஒய் ?


3. போலீஸ்க்கு ஒரு இன்ஃபர்மேஷன் வருதுன்னா உடனே போலீஸ் அந்த வீட்டுக்குள்ளே புகுந்து சுடமாட்டாங்க.. மினிமம் 4 மணி நேரமாவது வாட்ச் பண்ணுவாங்க . ( குப்பி படம் பார்க்க ) ஆனா இந்தப்படத்துல போலீஸ் டகார்னு வீட்டுக்குள்ளே நுழையுது. 


4. போலீஸ் ஹீரோவை சுட்டதும் அவனுக்கு உயிர் இருக்கா? இல்லையா?ன்னு கூட செக் பண்ண மாட்டாங்களா? அதுவும் அது ராங்க் என் கவுண்ட்டர்னு தெரிஞ்சும்?அப்புறமா ஜி ஹெச் டாக்டர் சொல்லித்தான் தெரியுது.. அட ஆண்டவா .. 


5. ஹீரோ புது வீடு குடி போரார்னு சிம்ப்பிளா ஒரு ஷாட்ல சொல்ல வேண்டிய விஷயத்தை எதுக்கு தேவை இல்லாம 3 ரீல் இழுக்கனும்? அந்த உத்தம பத்தினி கேரக்டர் எதுக்கு? நான் கூட ஏதோ ஒரு டர்னிங்க் பாயிண்ட் க்ளைமாக்ஸ்ல இருக்கும்னு நினைச்சேன்.. 



6,. மனைவிக்கு முன்னால், காதலிக்கு முன்னால் சரக்கு அடிப்பவன் கூட தன் பெற்றோருக்கு முன்னாலோ, மகள் முன்னாலோ சரக்கு அடிக்க மாட்டான். மரியாதை.. கம்  பாசம்.. அக்கறை.. ஆனா ஹீரோயின் அப்பா தன்  மக முன்னால் சரக்கு அடிக்கறார். அம்மா ஊத்தி தருது.. அதைக்கூட தாங்கிக்கலாம். வயசுக்கு வந்த பொண்ணு கண் முன்னால சரி நீ தூங்கு நான் மேலே போறேன், அப்பா கூப்பிடறார்னு சொல்லி ஃபிரிட்ஜ் திறந்து 6 முழம் மல்லிகைப்ப்பூ வெச்சுட்டு போறா.. என்ன கொடுமை சார் இது?


16592761790.jpg (600×400)



7. ஹீரோ நெஞ்சுல புல்லட் பாய்ஞ்சிருக்கு. ஹாஸ்பிடல் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு அடுத்த சீன்ல டாப்லெஸ்ல ஐ மீன் ஹீரோ டாப்லெஸ்ல ஒரு ஷாட். அதுல தழும்பே இல்லை.. ஒண்ணா தழும்பு மேக்கப் போட்டிருக்கனும். அல்லது ஹீரோ சட்டை போட்டிருக்கனும்.. அவர் என்ன கமல் ஹாசனா? ஒரு சீனிலாவது பாடியை காட்டியே ஆகனும்னு அடம் பிடிக்க?


8. ஹீரோவின் அக்காவை பிராத்தல் கேஸ்ல பொய்யா போலீஸ் பிடிச்சுட்டு கோர்ட்டுக்கு போகுது. ஃபைன் கட்டிட்டு வெளீல வரும்போது போலீஸ் வில்லன் அவ கிட்டே இன்னைக்கு எல்லா பேப்பர்லயும் உன் ஃபோட்டோ தான் மானம் போச்சு என்கிறார். என்னய்யா ஸ்கிரிப்ட் இது? காலைல 10 மணிக்கு பிடிக்கறீங்க.. 11 மணிக்கு கோர்ட்ல சப்மிட்.. 11.30 மணிக்கு  அவ வெளீல வர்றா . அதுக்குள்ளே பேப்பர்ல ஃபோட்டோ நியுஸ் எப்படி வரும்?


9. ஹீரோவின் பழி வாங்கும் படலத்துல முதல் கொலை செம காமெடி.. ஒரு வெறி நாயை சாக்கு மூட்டைல சுமந்துட்டு போறாரு ஹீரோ.. வில்லனை பார்த்ததும் சாக்கை அவுத்து விட அது கரெக்டா வில்லனை கடிக்குது.. வெறிநாயை கூண்டுல அடைச்சு வெச்சிருந்து அந்த கூண்டுக்குள்ளே வில்லனை அனுப்பினார்னா ஓக்கே.. சாக்கு மூட்டைகுள்ளே நாயை தூக்கிட்டு போனா அது திமிறும், கடிக்கும்.. குலைக்கும், மக்கள் அது என்ன?னு கேள்வி கேட்கமட்டாங்களா? பழக்காத வெறி நாய் ஹீரோவை கடிச்சிடாதா?


10. மெஷினரி ஜிம்ல எப்பவும் செஸ்ட் எக்சசைஸ் பண்றப்ப நெஞ்சை  தொடாத மாதிரி லிமிட் லாக் வெச்சிருப்பாங்க.. அதாவது பெஞ்ச் பிரஸ் எக்சசைஸ் பண்றப்போ அந்த ஒர்க் அவுட்ல தவறுதலா நாம கை விட்டாலும்  நம்ம மேல அது விழாது . ஆனா படத்துல வில்லன் அதை செய்யும்போது சைடுல சப்போர்ட்டுக்கு நிக்கும் 2 ஆள்ங்க வெயிட்டை விட்டதும் வில்லனை அது  நசுக்கி கொல்லுது.. அது எப்படி?இந்த சீனை மெஷினரி  ஜிம்ல எடுக்காம ஆர்டினரி மேனுவல் ஜிம்ல எடுத்திருந்தா சரியா இருந்திருக்கும்/./ 



11. க்ளைமாக்ஸ் காளி ஆட்டம் முடிஞ்சு  வில்லனை கொலை பண்றப்போ பொது மக்கள் கிட்டே எந்த ரீ ஆக்‌ஷனும் இல்லையே? அந்த சீன் முடிஞ்சு ஹீரோ மேக்கப்பை கலைத்து அழுவதும் செயற்கை


12. தீவிரவாதியோ,  என்கவுண்ட்டருக்கு குறிவைக்கப்படும் ரவுடியோ போலீஸ் கதவை தட்டுதுன்னு தெரிஞ்சா கதவை திறக்க மாட்டாங்க. பின் வாசல் வழியாத்தான் தப்பிப்பாங்க.. ஆனா போலீஸ் அந்த வீட்டை ரவுண்ட் அப் பண்ணாம என்னமோ  கேபிள் டி விக்கு மாச வாடகை கேட்கப்போறவங்க மாதிரி 2 பேர் மட்டும் போய் கதவைத்தட்டறது செம காமெடி..  


165927504.jpg (600×400)

 மனம் கவர்ந்த வசனங்கள்

1. மஞ்சு, என்ன சாப்பிடறே?

சந்தோஷ்க்கு என்ன பிடிக்குமோ அது..

 சர்வர், இந்த சந்தோஷ், மஞ்சு ரெண்டையும் மிக்ஸ் பண்ணி ஒரு காக்டெயில்..  கொண்டு வாங்க..



2. என்னடி? மச்சான் சிலிர்த்துக்கறாரு?

 பால் குடி மாறாத மறக்காத பையன் போல, பாவம் விட்டுடுடி



3. நான் பொம்பள ரவுடி டி, பால் குடுக்கவும் தெரியும், பால் தெளிக்கவும் தெரியும்..


4. எவ்ளவ் நேரம் தான் நாய் மாதிரி கத்திட்டு இருக்க? கண்டுக்கவே மாட்டேங்கறியே?


 அடடே, நீங்க தானா? நான் நாய் தான் கத்துதோன்னு அசால்ட்டா இருந்துட்டேன் ( திஸ் மொக்கை ஜோக் டேக்கன் ஃப்ரம் கிரேசி மோகன் டிராமா கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்)



5. குடை அங்கே காணோம்னு இங்கே இவ கிட்டே என்ன குடைஞ்சுட்டு இருக்கே?



6. நாட்டை குட்டிச்சுவர் பண்ணும் டெரரிஸ்ட்ஸ் ஏ சி ரூம்ல உக்காந்து டிஸ்கஸ் பண்றாங்க.. அவங்களைப்பிடிக்க வேண்டிய போலீஸ்  இந்த மாதிரி குட்டிச்சுவர்ல உக்காந்து பேசிட்டு இருக்கோம்..



7. மழைல நனையறதுன்னா உனக்குப்பிடிக்குமா?


 அட கேனமே, அதான் நனையறேனே, தெரில?




8. இந்த ஏரியாவில் இவ்ளவ் கம்மியான  வாடகைக்கு வேற எங்கேயும் வீடு கிடைக்காது

 அதான் இங்கே கிடைச்சிடுச்சே, அப்புறம் என்ன?


9. சந்தோஷைத்தேடித்தான் இங்கே வந்தியா?


 பின்னே உன்னைத்தேடி வருவேன்னு நினைச்சியா?

 நீ என்ன என் மாமா பொண்ணா? 


16592619464.jpg (600×400)


 இயக்குநர் பாராட்டு  பெறும் இடங்கள்


1. இடைவேளைக்குப்பிறகு படம் பார்த்தாலும் மொத்தப்படமும் புரியும்படி படத்தின் திரைக்கதையை அமைத்தது. ( முதல் பாதி வேஸ்ட்)


2.  படத்தில் 2 நாயகிகளையும் கண்ணியமாக காட்டியது.. கவர்ச்சியை நம்பாதது


3. க்ளைமாக்ஸ்சில் 3 பேரையும் 3 விதங்களில் பழி வாங்கும் ஐடியாக்கள், அதை படமாக்கிய விதம் திகில்..



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40



 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே


 சி.பி கமெண்ட் - டி வி யில் போட்டா பின் பாதியை மட்டும் பார்க்கலாம்.. லேடீஸும் பார்க்கலாம்.. ஈரோடு அண்ணாவில் படம் பார்த்தேன்

நெல்லை சந்திப்பு படத்தின் இயக்குநர் முன்னாள் ஜோக் ரைட்டர் பாபு.வசனகர்த்தா உங்கள் ஜூனியர் எம் ஜி கன்னியப்பன் # 1998 செட்