Wednesday, September 05, 2012

திருப்பூர் எஸ்.பி ஆஸ்ரா கர்க் , கேப்டன் , ஜெ -ஈகோ ?- ஜு வி கட்டுரை

ஆஸ்ரா கர்க் டிரான்ஸ்ஃபருக்குக் காரணம் விஜயகாந்த்?
 
 

பரபரக்கும் திருப்பூர்
 
 
திருப்பூர் எஸ்.பி-யாகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் முடிவதற்குள் மீண்டும் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார் அதிரடிக்குப் பெயர் போன ஆஸ்ரா கர்க். குற்றச் செயல்கள் மலிந்துபோன திருப்பூரை, தனது கட்டுக்குள் கொண்டு வந்த ஆஸ்ரா கர்கை ஏன் திடீரென மாற்றினார்கள் என்று புரியாமல் பொதுமக்கள் விழிக்கிறார்கள். 


நம்மிடம் பேசிய சில  போலீஸார், ''ஆஸ்ரா கர்க் வந்ததில் இருந்து திருப்பூர் ஓரளவு அமைதியான மாவட்டமாக மாறிவிட்டது. யார் மீது புகார் என்றாலும், புகார் உண்மையாக இருப்பின் தைரிய​மாக நடவடிக்கை எடுத்தார். அதுதான் இப்போது அவருக்கு வினையாகி விட்டது. மணல் கொள்ளை பற்றித் தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து, அதிரடி நடவடிக்கை எடுத்தார். அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிவந்த லாரிகளுக்குக் கடுமையான அபராதம் விதித்தார். 


இதை முக்கிய அமைச்சர் ஒருவர் கண்டித்தும், அசராமல் தனது நடவடிக்கையைத் தொடர்ந்தார். அதனால் முன்பே இவர் மாற்றப்படலாம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அந்தச்செய்தி ஊட கங்கள் மூலம் வெளியே வந்துவிட்டதால், அப்போது நடவடிக்கை பாயவில்லை.


தமிழகம் முழுக்க மணல் அள்ளும் தொழிலில் கோலோச்சிக்கொண்டு இருக்கும் ஒரு முக்கியப் பிரமுகருக்கும் ஆஸ்ரா கர்க்கின் செயல் எரிச்சலை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன் ஆஸ்ரா கர்க்குக்கு போன் செய்த அவர், 'மணல் ஏற்றி வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டாராம். அதற்கு எஸ்.பி., 'சட்டவிரோதமாக வரும் லாரிகள் என்றால் நிச்சயம் பறிமுதல் செய்யப்படும்’ என்று உறுதியாகப் பதில் சொன்னாராம். 



உடனே மணல் புள்ளி, 'நீங்க இங்கே தொடர்ந்து எஸ்.பி-யாக இருக்கணுமா... வேண்டாமா?’ என்று அதட்ட... 'உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி வைத்து விட்டாராம் ஆஸ்ரா கர்க்.



சில நாட்களுக்கு முன், திருப்பூரில் உள்ள கிளப் ஒன்றில் சீட்டு விளையாடிய பெரும்புள்ளிகள் கைது செய்யப்​பட்டனர். அதில், சாதி கட்சியைச் சேர்ந்த ஒருவரும் தேசியக் கட்சியைச் சேர்ந்த தலைவர்  ஒருவருடைய உறவினரும் அடக்கம். எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் யாராக இருந்தாலும் கைது செய்யுங்கள் என்று கூறிவிட்டார் ஆஸ்ரா கர்க். இதை மானப் பிரச்னையாக கருதிய பெரும் புள்ளிகள் தங்களின் மேலிடச் செல்வாக்கைப் பயன்படுத்தி, இவரை மாற்றுவதற்குத் தொடர்ந்து முயன்று வந்தனர்.  



இந்தப் பிரச்னைகளுக்கு இடையில் கடந்த மாதம் திருப்பூர் வந்த விஜயகாந்த், ஆளும் கட்சியைச் சகட்டுமேனிக்கு திட்டினாலும், 'ஆஸ்ரா கர்க் மிக நேர்மையான அதிகாரி’ என்று அவரைப் பாராட்டிப் பேசிவிட்டார். இது போதாதா மேலிடத்தைக் கடுப்பேற்ற? இத்தனை விஷயங்களும் ஒன்று சேர்ந்துதான், அவருடைய டிரான்ஸ்ஃபருக்குக் காரணமாகி விட்டது'' என்றார்கள்.


ஆனால் வேறு சில அதிகாரிகளோ, ''மதுரை கிரானைட் விவகாரம் பற்றி நன்கு அறிந்தவர் ஆஸ்ரா கர்க். அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சில தர்மபுரியிலும் தொழில் செய்கின்றனர். அதனால், ஆஸ்ரா அங்கு இருந்தால் அதிரடி நடவடிக்கைளை எடுக்க அரசுக்குச் சுலபமாக இருக்கும் என்பதால்தான் தர்மபுரிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.


 டி.என்.பி.எஸ்.சி. தேர்வுத்தாள் வெளியான விஷயத்தில் இன்னும் போலீஸார் திணறிக் கொண்டு இருக்கின்றனர். தர்மபுரியில்தான் கேள்வித்தாள் அவுட்டானது என்று கருதப்படுவதால் இதில் இன்னும் வேகமாக நடவடிக்கை மேற்கொள்ள ஆஸ்ராகர்க்தான் சரியான நபர் என்று நினைப்பதால்தான் இந்த மாற்றம்'' என்கிறார்கள்.


தனக்கு மாற்றல் உத்தரவு வந்த கடந்த சனிக்கிழமை மாலை, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளில் செயல்பட்டு வந்த பெரிய செங்கல் சூளைகளில் அதிரடி நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தார் ஆஸ்ரா. 'விளைநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக செம்மண் எடுத்து செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது.


 சேம்பர்களில் பலரைக் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குகின்றனர்’ என்று அவருக்கு வந்த புகாரின் அடிப்படையில் அதிரடி ஆய்வு நடந்தது. முறைகேடாக இயங்கி வந்த நான்கு சேம்பர்களைக் கண்டுபிடித்து, ஆறு பேரை உடனடியாக கைது செய்தார். நான்கு சேம்பரில் ஒன்று... நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக நின்ற ஒருவருடையது. மற்றவை ம.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்குச் சொந்தமானது.



செங்கல் சூளைக்காக செம்மண் எடுத்ததில் பல நூறு கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு கனிமவளத் துறை அதிகாரிகள் சிலர் துணை போய் உள்ளனர் என்பதையும் கண்டுபிடித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைக்குப் போகும் முன் ஆஸ்ரா கர்க்குக்கு மாற்றல் உத்தரவு வந்ததால், அனைவரும் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.



இந்தச் செம்மண் விவகாரம் தொடர்பாக ஆஸ்ரா கர்க்கிடம் பேசினோம். ''முறைகேடுகளில் ஈடுபட்ட நான்கு சேம்பரைக் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட நபர்களைக் கைதுசெய்து இருக்கிறோம். தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்'' என்றார். தர்மபுரிக்கு மாற்றம் செய்துள்ளதைப் பற்றி கேட்டபோது சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார்.



திருப்பூரைத் தொடர்ந்து தர்மபுரி களைகட்டப் போகிறது!



கழுகார் பதில்கள்!

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.


 'நிலா மனிதன்’ நீல் ஆர்ம்ஸ்ட்ராங் பற்றி...? 


இந்த நூற்றாண்டின் இணையில்லா மனிதர் ஆர்ம்ஸ்ட்ராங். உயிர் வாழ்வதற்கு அவசியமான எதுவும் இல்லாத ஓர் இடத்தில் காலடி வைத்துத் திரும்பிய முதல்மனிதர் அவர்!


அவர் மறைந்த இந்த நேரத்தில் நினைக்கத்தக்க இன்னும் இரண்டு பேர் இருக்கின்றனர். அவர்கள், ஆர்ம்ஸ்ட்ராங் உடன் சென்ற ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகியோர். மூவரும்தான் நிலவுக்குச் சென்றவர்கள். முதலில் கால் வைத்தவர் ஆர்ம்ஸ்ட்ராங். இரண்டாவது காலடி வைத்தவர் ஆல்ட்ரின். இவர்களோடு வந்து ராக்கெட்டில் இருந்தவர் காலின்ஸ். மூவருக்குமே சரி மரியாதையை நம்மனதில் இருத்துவதுதான் முறையானதாக இருக்கும்!


 கலைஞர்ப்ரியா, வேலூர்(நாமக்கல்).


அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்துக்கு சசிகலா போகவில்லையே? 


ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் கூப்பிடவில்​லையே!


 அர்ஜுனன்.ஜி., திருப்பூர்.


6.72 லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனரே? 



கேள்வித்தாள் மிகமிகக் கடினம் என்பது பெரும்பாலானவர்களின் பொதுவான கருத்து. ஆனால், தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் தரமும் இதில் இருந்து தெரிகிறது. பணம் காய்க்கும் மரங்களில் ஒன்றான இந்த பயிற்சிக் கல்லூரிகளில் இருந்து பட்டம் பெற்று வரக்கூடியவர்கள் எத்தகைய தகுதி உடையவர்கள் என்பது இந்தத் தேர்வு முடிவின் மூலமாகத் தெரிந்து விட்டது. இனிமேலாவது, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுப் பதில் தொடங்கி, எண்ணிக்கையை அதிகப்படுத்துவது வரை அரசு கறாராக இருந்தால் மட்டுமே இந்த 'புத்திசாலி’ வாத் தியார்களிடம் இருந்து  பிள்ளைகள் தப்ப முடியும்!



ஆசிரியர் தேர்வில் தகுதிக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்!


 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.



இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு மேலான 129 அதிகாரிகளுக்கு எதிராக, 97-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகளை கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி சொல்லி இருக்கிறாரே? 


பதிவுதானே செய்திருக்கிறார்கள். பயமில்லை! சி.பி.ஐ. இதற்கான தண்டனையை வாங்கித் தருவதற்குள் அவர்கள் எல்லாம் ஓய்வு பெற்று நிம்மதியாகப் போய்விடுவார்கள்!



 எஸ்.ஸ்ரீதர், கொடுங்கையூர்.


ஒன்றுமே புரியவில்லை... இத்தனை காலமும் பதுக்கி, மறைத்து, அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் ஏமாற்றிச் செய்யக்கூடிய காரியமா இந்தக் கிரானைட் முறைகேடு...? 


பதுக்கவும் இல்லை. மறைக்கவும் இல்லை. பட்டப்பகலில் அதி​காரிகள் துணையோடு அமைச்சர்​களின் ஆசீர்வாதத்​தோடுதான் இந்தக் கொடுமை கடந்த 15 ஆண்டுகளாக நடந்துள்ளது. இதை ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டேதான் இருந்தன. 


 ஜூ.வி-யைப் பொறுத்தவரை இந்த ஆட்சி மறுபடி பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் 12 முறைக்கு மேல் எழுதி இருக்கிறோம். எல்லாமே கைமீறிப் போன பிறகுதான் நடவடிக்கை வருகிறது. சரி... இப்போதாவது உஷாரானார்களே என்று சந்தோஷப்படுவோம். கடைசி வரை, கறாராக இருக்கிறார்களா என்பதையும் கண்காணிப்போம்.


 எஸ்.ஜெயகாந்தன், புன்செய்புளியம்பட்டி.


தி.மு.க-வில் 'சகோதர யுத்தம்’ தணிந்துள்ளதா? 


ஆம்! தணிந்துள்ளது. ஆனால், தந்தை - மகன் யுத்தம்’ சூடுபிடித்து விட்டது. எந்த இடத்தை நோக்கி ஸ்டாலினை வளர்த்து விட்டாரோ... அந்த இடத்தை தரத் தயங்குகிறார் கருணாநிதி. இது, வெளியே தெரியவேண்டாம் என்பதற்காகவே 'சகோதர யுத்தம்’ திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதோ என்றுகூட சந்தேகமாக இருக்கிறது!



 சோ.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.


எத்தகைய கருத்தை மக்களுக்கு இன்றைய அரசியல்வாதிகள் போதிக்கிறார்கள்? 


'எங்களில் யாரும் யோக்கியமில்லை’ என்பதைத்தான்!


ரேவதிப்ரியன், ஈரோடு-1.


தீண்டாமையை ஒழிப்பதில் சிறப்பாகச் செயல்படும் கிராமங்களுக்குத் தலா 10  லட்சம் தரப்போவதாக முதல்வர் சொல்லி இருப்பது நடைமுறைக்கு ஏற்ற நல்ல முடிவுதானே..? 


நிச்சயமாக! ஆனால், தீண்டாமை ஒழிப்பின் உண்மையான அர்த்தம் என்ன என்பதைப் புரிந்து இந்தப் பரிசுகள் தரப்பட வேண்டும். கோயில்களில் சமபந்தி போஜனமோ, நடுவில் போலீஸ்காரரை நிறுத்திக் கொண்டு இரண்டு பக்கமும் வெவ்வெறு சாதிக்காரர்களை நிற்க வைத்து டீ குடிப்பதோ மட்டுமே தீண்டாமையை ஒழித்து விடாது.


ஊர்க் கிணற்றை பொதுவாக்குவது, எந்தத் தெருவிலும் யாரும் நடக்கும் உரிமையைக் கொடுப்பது, கோயில் களுக்குள் தயக்கம் இல்லாமல் அனைவரும் சென்று வணங்குவது, ஊர் விழாக்களில் சமமாகப்  பங்கேற்பது, பள்ளிக்கூடங்களில் பாகுபாடு இன்மை, கலப்புத் திருமணங்கள்... ஆகிய செயல்பாடுகளை அமல்படுத்தத் தொடங்கும் கிராமங்களுக்கு ஓராண்டு கவனித்துப் பார்த்த பிறகு விருதும் நிதியும் தரப்பட வேண்டும்.



இப்படிப் பரிசு வாங்கிய கிராமத்தில், அதிகாரத்தில் இருப்பவர்களின் நேரடி அல்லது மறைமுக ஆதரவோடு மறுபடியும் தீண்டா மைச் செயல்பாடு எப்போது நடந்தாலும்... அளித்த நிதியைவிட இரண்டு மடங்கு பணத்தை அரசாங்கத்துக்கு அபராதமாகச் செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிப்பது அதைவிட முக்கியம். கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக விருது வாங்கியவர்கள், பிறந்த குழந்தையின் சான்றிதழில் எந்தச் சாதியைப் போடுவது என்று சண்டை போடுவது எந்த அளவுக்கு அபத்தமோ... அதுபோன்ற விளைவுகள் இதிலும் வராமல் பார்த்துக்​கொள்ள வேண்டும்.



 செ.அ.ஷாதிலி, கோனுழாம்பள்ளம்.


இப்போதைய மாநில அரசின் நிர்வாகம் பற்றி...? 


நிர்வாகத்தில் தேக்கம் இருப்பது உண்மை. எல்லா விஷயங்களையும் முதல்வரே செய்ய முடியாது. முதல்வர் இடத்தில் இருந்து யோசித்துச் செயல்படும் அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் ஒரு சிலராவது வேண்​டும். ஆனால், பலரும் முதல்வர் 'கேட்டால் மட்டும்’ செயல்படு​கிறார்கள். தானே படிக்கும் குழந்தைக்கும், 'அம்மா’ பார்க்கும்போது பயபக்தி​யாகப் படிக்கும் குழந்தைக்கும் உள்ள வித் தியாசம்​தான் இது!


 அ.குணசேகரன், புவனகிரி.



ஆ.ராசா, இன்று பிரதமரைச் சந்தித்தால் என்ன கேட்பார்? 


'மாட்டிக்கினீயா!’



நன்றி - ஜூ வி 

கலைஞர், அன்னா ஹசாரே ஒரு ஒப்பீடு பார்வை ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ் )

1.நித்யானந்தாவுடன் ரஞ்சிதாவும் யாத்திரை சென்றது தெரியாது-மதுரை ஆதீனம் # முக்காலும் உணர்ந்தவர் நீங்க, ரதி யாத்திரை கூட தெரியல, ஷேம் ஷேம்



--------------------------------



2. நாட்டை குட்டிச்சுவர் ஆக்குவது சுனாமி, ஆட்சியை குட்டிச்சுவர் ஆக்குவது  அரசியல்வாதிகளின் பினாமி



---------------


3. பொண்ணுங்க புத்திசாலிங்க, ஆனா அதை வெளில காட்டிக்க மாட்டாங்க, ஆண்கள் முட்டாள்கள், சொல்லாமயே எல்லாருக்கும் அது தெரிஞ்சுடும் ;-0 



-----------------------------


4.ஈரோடு, கோவை, சென்னை போன்ற நகரங்களில்  12 நாள்நடக்கும் புத்தகத்திருவிழாவுக்கு டெயிலி வர்றவன்


1. நிறைய புக்ஸ் ஓசிலயே படிச்சுடறான்


2.ஆல் ஏரியா ஃபிகர்ஸை அட்டெண்டன்ஸ் எடுத்துடறான்



============================


5. நிருபர் -பாஸ்போர்ட்டை முடக்கிட்டாங்க, என்ன செய்யப்போறீங்க?



 நித்தி - அது என் கைக்கு வரும் வரை இந்தியப்பெண்களை மட்டும் கவனிப்பேன்


--------------------------------------




6.  பல முறை சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து  சரித்திரம் படைத்த நாயகர்கள்


1 . டாக்டர் கலைஞர்


 2. அன்னா ஹசாரே 




----------------


7. இந்தியர்கள் இண்டோர் கேமில் இணையற்றவர்கள், அதனால் தான் ஒலிம்பிக்கில் அவுட்டோர் கேமில் கவனம் செலுத்த முடியவில்லை ;-0



--------------------------


8. டியர், நீ சீக்கிரம் டிரஸ் பண்ணிட்டு கிளம்பு, நீ ரெடி ஆகறதுக்குள்ளே நான் ஆஃபிஸ்க்கு போய்ட்டு சாயங்காலம் சீக்கிரமா வந்துடறேன் #  லேட்பிக்கப்லேகா



-----------------------------------


9. உங்க டைம் நல்லா இல்லைனா ஜாதகம் பார்க்காதீங்க , முதல்ல வாட்சை பாருங்க, அதை கரெக்ட் பண்ணுங்க   # எ கீ



-------------------


10. I WILL CORRECT = நான் சரி பண்ணிடறேன் , நான் கரெக்ட் பண்ணிடறேன் = ஃபிகரை கரெக்ட் பண்ணிடறேன் # தமிங்கிலீஷ் வாழ்க 





--------------------



11. ஒலிம்பிக்கில், விளையாட்டில் மட்டும் ஆர்வம் உள்ளவர்கள் தான் இன்று நீச்சல் போட்டியை பார்ப்பாங்கன்னு சொல்லிட முடியாது, ஹி ஹி 



-------------------------------


12. ராகிங்க் = ராவா அடிக்கறதுல சுத்துப்பட்டு வட்டாரத்துல கிங்க் = ”ரா” கிங்க்



----------------------------



13. மக்கள் என்னை அவ்வளவு லேசில் சாக விட்டுவிட மாட்டார்கள்!'' - அன்னா ஹசாரே # சித்திரவதைப்படுத்தி?



---------------------------

14. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே, மது விற்பனை உள்ளது!''
- குமரி அனந்தன்   # காங்க்”கிரேசி” பியூப்பிள்



----------------------------


15.ஏய்! மிஸ்டர், உனக்கு சென்ஸ் ஆஃப் ஹியூமர் கிடையாதா?



எவன் சொன்னது? நீங்க சும்மா 2 லைன் பேசுங்க,  உடனே சிரிப்பேன் ;-0 # கி கி கீ


------------------------------------




16. எங்க ஆஃபீஸ் பொண்ணுங்க அவங்க டிஃபன் பாக்ஸை ஸ்டோர் ரூம் பீரோவுக்கு பின்னால ஒளிச்சு வெச்சிருக்காங்க, ஜாக்கிரதையா இருக்காங்களாம் ;-0



----------------------------------


17. பொண்ணுங்க பசங்களை டா போட்டுக்கூப்பிட்டா அவன் கோபப்படாம  புளகாங்கிதப்படறான்,ஆனா பசங்க டி போட்டு கூப்பிட்டா பொண்ணுங்க பொங்கிடறாங்க #டா ,டி


----------------------------------

18. ஈழ தமிழருக்காக தூக்கமின்றி பாடுபடுபவர் கருணாநிதி - கனி #  குழப்பாதீங்க, ஸ்டாலின் ஈழத்தமிழரா?



---------------------------

19. சோழா பூரி, சோளக்கருது ( சோளக்கதிர்) இதெல்லாம் சோழ பரம்பரைகள் வழித்தோன்றல்கள் தான் சாப்பிடனுமா?




-------------------


20. டேமெஜர் - இந்த டகால்டி வேலை எல்லாம் செய்யாதே!



மீ - போங்க சார், நான் இன்னும் என் வேலையையே செய்யலை ;-0



----------------------------------------

Tuesday, September 04, 2012

பெருமான் - சினிமா விமர்சனம்


நம்மூர் அரசியல்வாதி மாதிரி ஹீரோவுக்கு ஒரு எண்ணம், குறுக்கு வழில பெரிய ஆள் ஆகனும், கை நிறைய சம்பாதிக்கனும்..உழைச்சு சாப்பிட்டு ஒரு பாட்டு முடியறதுக்குள்ளே பெரிய ஆள் ஆகறது விக்ரமன் படத்துல தான் சாத்தியம்னு நினைக்கறவரு..

அவருக்கு ஒரு இல்லீகல் காண்டாக்ட் கிடைக்குது. சட்டத்துக்கு விரோதமா வெளிநாட்ல இருந்து 500 கோடி ரூபாயை  இந்தியாவுக்கு கொண்டு வந்துட்டா அவருக்கு கமிஷன் மட்டும் 21 கோடி . அடேங்கப்பா. செம ஆஃபர் ஆச்சே.. ஹீரோ அதை ஆ ராசா மாதிரி பல தில்லாலங்கடி வேலை செஞ்சு சக்சஸ் பண்ணிடறார். 



 கமிஷன் பணம் ஹாட் கேஷா கிடைக்குது. ( ஹாட் கேஷ்னா செம சூடா இருக்குமா?)பணம் குடுக்கும்போதே வில்லன் ஹீரோ கிட்டே பல கண்டிஷன்ஸ் எல்லாம் போடறாரு


1. தாம் தூம்னு செலவு பண்ணி பணம் நிறைய இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டிடக்கூடாது.


2. என் ஆளுங்க எப்பவும் உன்னை ஃபாலோ பண்ணிட்டு வேவு பார்த்துட்டே இருப்பாங்க . ( ஏன் , அவனுங்களுக்கு வேற வேலை ஏதும் இல்லையா? )


3. மீறி போலீஸ்ல மாட்டற மாதிரி தோணுச்சுன்னா உன்னை போட்டுத்தள்ளிடுவோம்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqvada6H2rH-Lghlwk9gIGmsnxWrfZjWZNFtBK4VI3ibCTxNllXZQOziiX5uDDe4960M-v2kejjg7Wdkn0afkz660T5XyiVFXj3myxkeGL0kPNef7S62AoF-Nf1G8o0juYqQ56inbd-1No/s640/peruman_movie_wallpapers_04.jpg


ஹீரோ அதுக்கு எல்லாம் ஓக்கே சொல்லிடறார்..பணத்தை பேங்க்ல போட முடியாது. செலவும் பண்ண முடியாது. அதனால அவர் ரூம்ல  படுக்கைக்கு கீழே, அங்கே இங்கேன்னு ஒளிச்சு வைக்கிறார். 


 அவரோட க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் கிட்டே வெளியூர் போறேன். வர ஒரு வாரம் ஆகும், மறுபடி பார்ப்போம்னு டகால்டி விட்டு தலை மறைவா இருக்கார்.


ஹீரோவோட அப்பா ஃபோன் பண்ணி அம்மா சீரியஸ்.. உடனே கிளம்பி ஊருக்கு வா அப்டினு சொல்லியும் ஹீரோ போகலை.. ஏன்னா  புதையலை பூதம் காக்கற மாதிரி  இவர் அந்த பணத்தை பாதுகத்துட்டு இருக்காரே.. இவருக்கு ஒரு காதலி..  அவருக்கு இந்த மேட்டர் தெரிஞ்சு இவரை வெறுக்கறார்.


 சொந்த அம்மாவையே பணத்துக்காக உதறுபவர் நாளை நம்மையும் அப்படி கழட்டி விட மாட்டார்னு என்ன நிச்சயம்?  ஊடல்.. ஹீரோவுக்கு செம டென்ஷன்.. இந்த பணத்தால நிம்மதி, உறவு , காதல் , திருப்தி, சந்தோஷம் நட்பு வட்டம் எல்லாம் போச்சு. 


 என்ன ஆகுது? என்பதே மிச்ச மீதிக்கதை..


ஹீரோவாக  அர்ஜூன்.. ம்ஹூம் அந்த தேசபக்தர் கம் ஜெய் ஹிந்த் அர்ஜூன் அல்ல. இது புதுசு..  நிர்மலா பெரிய சாமி மாதிரி இவருக்கு கணீர்க்குரல். நல்ல பிளஸ் பாயிண்ட்.. படம் கிட்டத்தட்ட ஹீரோவையே 80% நம்பி இருப்பதால் பெரும்பாலான காட்சிகள் இவரைச்சுற்றியே நகருது.. முதல்  படம் என்ற அளவில் ஓக்கே.. இவர் ஏன் எப்பவும் தாடியோட இருக்கார்?

ஹீரோயின் ஸ்ருதி .. சித்தார்த் நெத்தில நாமம் போட்டுட்டு ஐஸ்வர்யா தனுஷ் காதுல கம்மல் மாட்டி விட்டாரே அந்த ஸ்ருதி இல்லை.. இது வேற.. 50 மார்க் தான் தேறும்..  க்ளோசப் காட்சிகளில் அவர் அழகு குறைச்சாலாத்தான் தெரியுது.. 


 வில்லன் செம காமெடி.. இயக்குநருக்கு  ஹாரீஸ் ஜெயராஜ் மேல என்ன கோபமோ அதே மாதிரி உருவத்தோற்றம் உள்ளவரை நடிக்க வெச்சிருக்கார். ஹேர் ஸ்டைல் கூட அதே போல். 


http://www.cinemobita.com/uploads/images/a13b407f6b3057dea6790db4f027c418.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.கதைக்களன், களம் எல்லாம் புதுசு.. வழக்கமா ஒரே மாதிரி யோசிக்காம  புதுசா திங்க் பண்ணி இருப்பது குட்.. 



2. சி.ஜே.ராஜ்குமார் தான் படத்துக்கு ஒளிப்பதிவு. லைட்டிங்க் எல்லாம் ஓக்கே.. பெரும்பாலான காட்சிகள் ஒரு ரூமுக்குள்ளேயே வருவதால் இண்ட்டீரியர் டெக்ரேஷன் , லைட்டிங்க் படத்துக்கு ரொம்ப முக்கியம்,. உணர்ந்து செஞ்சுருக்காரு இயக்குநர். கேனான் 5டியில் எடுக்கப்பட்டதாம் இந்தப்படம். பாராட்டுக்கள்



3.  டைட்டில் டிசைன் அழகு.. அதுக்கான பேக் கிரவுண்ட் மியூசிக்கும் ஓக்கே  ( லேசான சுடல் இருந்தாலும் ) .



 மனம் கவர்ந்த ஒரே வசனம் 



1. சாமி கண்ணைக்குத்தி கேள்விப்படிருக்கேன், ஆனா இவன் சாமி கண்ணையே குத்தி ஏமாத்தும் ஆள்


 இவன் இன்னும் சாகலை? போன தீபாவளிக்கே செத்திருப்பான்னு நினைச்சேன்


http://www.kodambakkamtoday.com/wp-content/uploads/2011/05/peruman-movie-still.jpg.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் 



1.  படத்தோட முதுகெலும்பான ஒரு சீன்ல படு பயங்கர லாஜிக் சொதப்பல்..  ஹீரோ 21 கோடி ரூபாயை ஒரு டூரிஸ்ட் பேக்ல என்னமோ 3 செட் டிரஸ் வெச்சு எடுத்துட்டு வர்ற மாதிரி பைக்ல அசால்ட்டா வர்றார்.. 1000 ரூபாய் நோட்டாவே இருந்தாலும் ஒரு கோடி ரூபாய்க்கு  100 கட்டு அப்போ 21 கோடிக்கு 2100 கட்டு வைக்க குறைஞ்ச பட்சம் 4 பேக் வேணும்.. அதே போல் அதன் எடையும் ஜாஸ்தியா இருக்கும். அப்படி அசால்ட்டா எல்லாம் கொண்டு போக முடியாது. புதிய 1000 ரூபாய் நோட்டு கட்டு 10 லட்சம் ரூபா  12 கிலோ வரும் என சொல்றாங்க.அப்போ ஒரு கோடி 120 கிலோ.. 21 கோடி  = 2520 கிலோ வருது. ஒரு மினிடோர் வேன்ல தான் கொண்டு போக முடியும். ஆனா ஹீரோ என்னமோ  காலி கேஸ் சிலிண்டர் கொண்டு போற மாதிரி அசால்ட்டா கொண்டு போறாரே? இதுல சேசிங்க்ல சாகசம் வேற.


2. பேங்க்ல 21 கோடியையும் போட முடியாது என்பது உண்மைதான். 50,000 ரூபாய் போட்டா பேன் கார்டு பேப்பாங்க, இன்கம் டாக்ஸ் காரங்க நோட் பண்ணுவாங்க ஓக்கே.. 49,000  ரூபாயாக பிரிச்சு பிரிச்சு போடலாமே? ஒரு கோடிக்கு  200 பேங்க்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ண மலைப்பு தான், 21 கோடிக்கு 4200 அக்கவுண்ட் ஒப்பன் பண்ணனும், ரிஸ்க் தான், ஆனா சேஃப்டி. போஸ்ட் ஆஃபீஸ்  பிராஞ்ச்சே போதுமே? வேலை, அலைச்சல் அதிகம்.. ஆனா ஹீரோ படற அவஸ்தைக்கு இது பெரிய விஷயம் இல்லை.



3. ஹீரோ தான் குடி இருக்கும் வீட்டில் பணத்தை ஒளித்து வைக்காமல் தன் சொந்த ஊரில் கொண்டு போய் பணத்தை அப்பாவிடமோ ,  அம்மாவிடமோ கொடுத்து வைத்திருக்கலாம்.. பாதுகாப்புக்கு பாதுகாப்பு.  உடல் நிலை சரி இல்லாத அம்மாவையும் பார்த்த மாதிரி ஆச்சு.. 


4. வில்லன் எதுக்கு வேலைப்பொழப்பத்து ஹீரோவை கண்காணிக்க 3 பேரை நியமிக்கறான்? அவன் என்ன எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்ச் ஆஃபீசா நடத்தறார்? அத்தனை பேரை வெச்சு வேலை தர.. தண்டம் வேற முட்டுக்கோல் வேற என்பது போல் பணத்தையும் கொடுத்துட்டு அவன் அதை எப்படி ஹேண்டில் பண்றான்னு பார்க்க ஆளும் போடனுமா? அதுக்கு அவனை போட்டுதள்ளிடலாமே? 


5. கைல 21 கோடி வந்ததும் எந்த லூஸாவது பைக்ல அதை கொண்டு வருவானா? அது பாதுகாப்பா?  ஒரு டாக்சி கூடவா வெச்சுக்க மாட்டான்? சப்போஸ் டிராஃபிக் போலீஸ் பார்த்து டவுட் வந்து விசாரிச்சு செக் பண்ணுனா மாட்டிக்க மாட்டானா? ( டாக்ஸின்னா பேக் பார்க்க வழி இல்லை, ஆனா பைக்ல அவளவ் பெரிய பேக் வெச்சுட்டு போவது டேஞ்சர்.. 



6. ஹீரோ குடி இருக்கும் அபார்ட்மெண்ட்ல ஒரு ஃபிகர் லவ்வரோட ஓடிப்போகுது.. அது பற்றி விசாரிக்க வரும் போலீஸ் என்னமோ ஹீரோவை கிரிமினல் குற்றவாளி மாதிரி விசாரிப்பது ஏன்? மூடு மந்திரமாவே இருக்காரே அந்த போலீஸ்.. எதுக்கு? சஸ்பென்ஸுக்காகவா? சகிக்கலை..



7. அந்நியன் விக்ரம் 3 விதமா மாத்தி மாத்தி நடிச்சது ஷங்கர் டைரக்‌ஷன்ல பார்க்க நல்லாருந்தது, ஆனா இந்தப்பட ஹீரோ ஒரு புதுமுகம். நடிகர் திலகம் ரேஞ்ச்க்கு அவர் அடிக்கடி கண்ணாடி முன்னால நின்னு பண்ணும் மோனோ ஆக்டிங்க் செம கடுப்ஸ்.. ஒரு சீன் வைக்கலாம் . 6 டைம் ஓவரோ ஓவர்..



8. ஹீரோ விலை உயர்ந்த காரை வாங்கி அதை பார்க் பண்ண மாசம் ரூ 3500 வாடகை ல ஒரு கார் ஷெட் பிடிக்கறார். இது தேவை இல்லாத சீன். படத்துக்கு எதுக்கு இந்த சீன்? வில்லனோட கண்டிஷனே பணம் இருப்பதை காட்டிக்கக்கூடாதுன்னு தானே? எதுக்கு ரிஸ்க் எடுக்கறார்? காதலியிடம் பந்தா காட்ட என்றாலாவது பரவாயில்லை. அதுவும் இல்லை.. எதுக்கு பின்னே?


9. இந்தப்படத்தின் கதைக்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, பின்னே எதுக்கு டைட்டிலை பெருமான் என்கிற ரஜினிகாந்த் -னு டைட்டில் வெச்சீங்க? அப்புறம் ரஜினி கூப்பிட்டு கண்டிச்ச பின் மாத்துனீங்க? பேருக்கு நான் ரஜினி மாதிரி ஆக ஆசைப்படறேன்னு ஒரு டயலாக் ஹீரோ பேசறார். அதுக்காக இப்பவும் டைட்டில்க்கு கீழே சம்பந்தம் இல்லாம ரஜினி பேரு வேற..



10. ஹீரோவை ரொம்ப நேரம் காட்றது செம போர். ஹீரோயின் திருப்பதி லட்டு மாதிரி இருக்கா.. அவளை சேர்த்து காட்டி இருந்தா போர் அடிக்காம படம் போகும், ஆனா அவரை சரியா யூஸ் பண்ணலை.. ( ஐ மீன் படத்துல )


11. டைட்டில் இப்படி கேரக்டர் பேர் வைக்கனும்னா ஹீரோ பெரிய ஆளா இருக்கனும். புதுமுகத்தை வெச்சு ப்டம் எடுக்கற யாருமே டைட்டில் அப்டி வைக்கக்கூடாது.. அவர் என்ன அவ்ளவ் பெரிய அப்பாடேக்கரா?ன்னு  ஆடியன்ஸ் நினைப்பாங்க..  நான் தேர்வு செய்திருக்கும் டைட்டில் - கையில் 21 கோடி ஆர் யூ ரெடி?  அல்லது ”21 வயசு, 21 கோடி  ”

https://lh3.googleusercontent.com/-tAfbx56HmGc/UDUyZU2pMGI/AAAAAAAAab0/k6uR4rZyWio/Peruman.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - எல்லாரும் இந்தப்படத்தை ரசிச்சுட முடியாது. 30 வயசுக்கு
உட்பட்டவர்கள் மட்டும் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும் தரத்தில் தான்
படம் இருக்கு. சென்னை ஃபோர் ஃப்ரேம் தியேட்டரில் படம் பார்த்தேன்.


தேநீர் விடுதி உதவி இயக்குநரும், பாடல் ஆசிரியருமான முருகன் மந்திரன் அவர்களுடன், ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுடன் சேர்ந்து படம் பார்த்தது மகிழ்ச்சி . இடைவேளையின் போது படத்தின் ஹீரோயின் , இயக்குநர் இருவரையும் பார்க்க முடிந்தது


 பலராலும் பாராட்டு பெற்ற டைட்டில்  இசை சுடப்பட்ட லெமன் ட்ரீ ஒரிஜினல் 


a
டிஸ்கி- இணை உலகில் புரட்சி -
http://puradsifm.com/ -

பரத நாட்டியக்கலைஞர் ”நம்ம ஆளு ” ஷோபனா பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSEPbYtt0OvcvjF12LNhrceGAOS66oltUS6g2tHtbBLf4NQ3mTA6VYcZ90i7FI0Kx_JDaULkTqyCGCkKF-FZhFZD0BRRS1H5WoBJpnYSGL7wffjjkItuhR45Xvi2dSaq8BWMC7mVSuBx4/s400/actress-shobana-in-maya-ravan-dance-avathar-stills-92.jpg 

கிருஷ்ணா மீது காதல் ஏன்?


மனம் திறக்கிறார் ஷோபனா


பேட்டி: ராகவ்குமார்


படங்கள் உதவி: எஸ்.சந்திரமெளலி



பத்மஸ்ரீ, நிருத்ய சூடாமணி போன்ற பட்டங்களைச் சூடியிருக்கும் ஷோபனா, நாட்டிய மேடையிலும், சினிமா வானிலும் பிரகாசமாக ஒளிரும் தங்கத் தாரகை! ‘கிருஷ்ணா’ என்ற பிரம்மாண்டமான ஆங்கில நாட்டிய நாடகத்தை சென்னையில் சமீபத்தில் மேடையேற்றினார். நடிகர் சூர்யா, ஷப்னா ஆஸ்மி, கொங்கனா சென், நந்திதாதாஸ், ராதிகா, பிரபு, மிலிந்த் சோமன் போன்றவர்கள் பல்வேறு கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்திருக்க, கிருஷ்ணனாகவும், யசோதையாகவும் இரட்டை வேடங்களில் அசத்தியிருக்கிறார் ஷோபனா.



‘யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே’ என்று பாடி நடித்தவரிடம் ஓர் இனிய பேட்டி...



ஆழ்வார்பேட்டை. அமைதியும் பெரிய மரங்களும் சூழ்ந்த ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா சாலையில் நுழைந்தால், ஷோபனாவின் நடனப்பள்ளியான ‘கலார்ப்பணா’விலிருந்து இனிய சலங்கையின் நாதம் காற்றில் மிதந்து வருகிறது. அசோக மர இலைகள்கூட நட்டு வாங்கத்தின் ஜதிக்கு ஆடுவதுபோல் இருக்கிறது.



பள்ளிக்குள் நுழைந்தால் ஷோபனா பல்வேறு நடன அபிநயங்கள் கொண்ட புகைப்படங்களில் நம்மை வரவேற்கிறார். கூடவே நிஜ ஷோபனாவும்.

http://1.bp.blogspot.com/_HOCuXB2IC34/SkMGGQ6uK7I/AAAAAAAACck/0H8cr5wGH8A/s400/21%2Bshobana%2B(www.cute-pictures.blogspot.com).jpg


உங்கள் ‘கிருஷ்ணா’ யார்?



கிருஷ்ணா என்றாலே, கோபியருகளுடன் லீலை செய்வது, வெண்ணெய் திருடுவது, நடனமாடுவது என்ற அளவில் மட்டும் நம்மில் நிறைய பேர் நினைக்கிறோம். கிருஷ்ணாவின் இந்தச் செயல்களுக்குப் பின்னால் பெரிய தத்துவமே உள்ளது. சிறு வயதிலிருந்தே ‘கிருஷ்ணா’ கேரக்டரை நடனத்தில் ஏற்று ஆடி வந்தாலும், கிருஷ்ணாவைப் பற்றி, பல்வேறு அறிஞர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்தும் நிறைய அறிந்துகொண்டேன். நான் உணர்ந்த கிருஷ்ணாவை நாட்டிய நாடகமாகத் தர எண்ணி உருவானதே இந்தக் கிருஷ்ணா.



பொதுவாக நாட்டியத்தை கிளாசிக்கல் டான்ஸ் என்று சொல்வார்கள். ஆனால், என்னுடைய ‘கிருஷ்ணா’ கிளாசிக் (உயர்வான) வடிவம் என்பேன். காரணம் ஒரே ஒரு நடனத்தை மட்டும் தராமல் பல்வேறு வித நடனங்களையும் ‘கிருஷ்ணா’வில் தந்திருக்கிறேன். சினிமா பாடல்கள்கூட இதில் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன.



கண்ணதாசன், ஓஷோ, இப்போ நீங்கள் என கிருஷ்ணா மீது காதல் ஏன்?



கிருஷ்ணாவை ஒரு குறியீட்டுக்குள் அடைத்துவிட முடியாது. குழந்தைத் தனம், கம்சனை வதம் செய்தது, காதல் நல்லவரா - இல்லையா என சில இடங்களில் குழப்பம், பகவத்கீதை அருளியது, தேரோட்டியாக இருந்தது என பன்முகத் தன்மை கொண்டவர் கிருஷ்ணா. ஆண்களில் சிலருக்கு கிருஷ்ணனைப் போல இருக்க வேண்டும் என்ற ஆசைகூட உண்டு!



எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு ‘கிருஷ்ணா’ கடவுள் மட்டுமல்ல; உயரிய படைப்புத் திறனுக்கும் கற்பனைக்கும் உயிரும் ஊட்டமும் தரக்கூடிய களம். எனவே கிருஷ்ணா மீது எங்களுக்கு காதல் வருவது இயற்கைதான்.

http://www.behindwoods.com/tamil-movie-news-1/july-08-02/images/shobana-10-07-08-01.jpg

துபாயில் கிருஷ்ணாவை எப்படி ரசித்தார்கள்?



இஸ்லாமிய நாட்டில் இந்த நாட்டிய நாடகத்தை எப்படி ரசிப்பார்களோ என்ற எண்ணம் இருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஆரம்பித்து சில நிமிடங்களில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பூத்துவிட்டது. அந்த நிகழ்ச்சியை பிற மதத்தினர் பார்த்ததோடு மட்டுமில்லாமல் பாராட்டவும் செய்தனர்.



உங்கள் அத்தை நாட்டியப் பேரொளி பத்மினியிடம் இருந்து என்னக் கற்றுக் கொண்டீர்கள்?



பண்பு, அன்பு. இவையனைத்தையும்விட பெரிய ஸ்டாராக இருந்தபோதும் ஈகோ இல்லாத குழந்தைத்தனத்தைக் கற்றுக் கொண்டேன்.



ஏன் இப்போது சினிமாவில் நடிப்பதில்லை?



என்னிடம் 145 பேர் வரை நடனம் கற்றுக் கொள்கிறார்கள். இதில் பத்து பேர் ஆண்கள். நடனப் பள்ளியிலேயே எனது நேரம் சரியாக இருக்கிறது. பள்ளியை ஆரம்பித்தால் மட்டும் போதாது. மாணவர்கள் மீது சிரத்தையாக அக்கறை செலுத்த வேண்டும். அதனால்தான் சினிமாவுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டுதான் இருக்கிறேன். ‘போடா போடி’ - படத்தில் சிம்புவுக்கு சால்ஸா சொல்லித் தரும் டீச்சராக நடிக்கிறேன்.


http://www.teluguwave.in/wp-content/gallery/shobana-pics/shobhana-3.jpg


ரஜினி, கமல்...



ரஜினி சாரின் ‘கோச்சடையான்’ படத்தில் ஒரு கேரக்டர் செய்கிறேன். ரஜினியைச் சந்தித்தபோது ஒரு குழந்தை பகிர்ந்து கொள்வதைப் போல ஆர்வத்துடன் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். சூப்பர் ஸ்டாருக்குள் இருக்கும் வெள்ளை உள்ளத்தை ரசித்தேன். ‘விஸ்வரூப’ கமல் சாரைப் பார்த்து பிரமிக்கிறேன். அவரது ‘கதக்’ நாட்டியத்தைப் பார்க்க உங்களைப் போலவே ஆர்வமாக இருக்கிறேன்.



பரத நாட்டியம் கற்றுக் கொள்வது காஸ்ட்லியான விஷயமாகப் பார்க்கப்படுகிறதே...



‘ஸ்டார் நைட் ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு ஐயாயிரம் பேர் வந்தால் பரத நாட்டியத்துக்கு ஐந்நூறு பேர்தான் வருகிறார்கள். இதற்கானக் காரணத்தை நாம் இப்போது ஆராய வேண்டாம். நடன ஆசிரியரும் வாழ்க்கை நடத்த வேண்டுமே? பெரும்பான்மையான ஆசிரியர்கள் அதிகக் கட்டணம் வாங்குவது கிடையாது. பல்வேறு பொருளாதாரப் பின்னணி கொண்ட என் மாணவர்களிடமிருந்து நியாயமான கட்டணம்தான் வாங்குகிறேன். இன்றைய சூழலில் பரத நாட்டியத்தை முழு நேரமாக எடுத்துச் செய்’ என்று சொல்ல தைரியமில்லை. இருப்பினும் எட்டு மாணவிகள் கேரளாவிலிருந்து இங்கு வந்து முழு நேரமாக நாட்டியம் பயில்கிறார்கள்.



மறக்க முடியாத பாராட்டு...?



மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்னுடைய நாட்டியத்தைப் பார்த்துவிட்டு, எழுத்துப்பூர்வமாகப் பாராட்டைத் தெரிவித்தார். மறக்க முடியாத பாராட்டு இது.



உங்கள் குடும்பம் பற்றி...?



இந்த நடனப் பள்ளியும், இங்குள்ள மாணவ - மாணவிகளும்தான் என் குடும்பம். முழுக்க முழுக்க கலைக்கே அர்ப்பணம் செய்துகொண்ட இந்த வாழ்க்கை மீதான பிரேமை எனக்குக் குறையவேயில்லை!"



கிருஷ்ணனின் காதலிக்கு வாழ்த்து!



http://media.onsugar.com/files/2011/03/11/4/1429/14297025/fb/shobana-hot-dance-photos_252818_2529.jpg

கிருஷ்ணா - சில துளிகள்!



கிருஷ்ணன் புரிந்த பல மாய லீலைகளைப் போல ஷோபனாவின் ‘கிருஷ்ணா’வும் மேடைகளில் பல்வேறு மாய ஜாலங்களை செய்கிறான். ஆடி பாடும் கோபியர்கள் திடீரென கருடனாக மாறுவது, சிசுபாலனை வதம் செய்ய சங்கு சக்கரத்தை வரவழைப்பது, விஸ்வரூபம் எடுப்பது என பல மேடை மேஜிக்குகள் இந்தக் கிருஷ்ணாவுக்கு அழகூட்டுகின்றன. ஆர்ட் டைரக்டர் ராஜீவனின் செட்டிங்ஸ், முருகனின் லைட்டிங்ஸ் போன்றவை கிருஷ்ணாவின் ஜீவன் என்றே சொல்லலாம்.



ராதேயாக நடித்த அனுருபிதா, ருக்மணியாக நடித்த அபிதா, அர்ஜுனனாக நடித்த ஸ்ரீவித்யா இவர்கள் அனைவரும் ஷோபனாவுக்கு இணையாக நடித்திருக்கிறார்கள்.



தேசிய விருது பெற்ற ரசுல் பூக்குட்டி ‘கிருஷ்ணா’வுக்கு சவுண்ட் டிசைன் செய்திருக்கிறார். பின்னணியில் ‘கிருஷ்ணா’ தொடர்பான பாடல்கள் ஹிந்தியிலும், மலையாளத்திலும் ஒலிப்பது புதுமை. தமிழில் ‘வராக நதிக்கரை ஓரம்’ பாடலுக்கு ஷோபனா குழுவினர் ஆடிய ஆட்டம் ஆடியன்ஸை ஒன்ஸ்மோர் கேட்க வைத்தது.



 நன்றி - கல்கி, புலவர் தருமி, கானாப்ரபா

அமலா பால் முதல் இரவில்.......

1.பசி வந்தா பத்தும் பறந்து போகும். ப. சி வந்தா நடுத்தரமக்கள சொத்தும் அழிஞ்சி போகும்் # ப சிதம்பரம் ராசி 



----------------------


2. கோபத்தோடு எழுபவன் நட்டத்தோடு அமர்வான்.மோகத்தோடு எழுபவன் மனைவியின் உள்ளங்காலை ஒரு திட்டத்தோடு சுரண்டுவான் 



-----------------------------


3. எங்கம்மா மாதிரி உன்னால டேஸ்ட்டா சமைக்க முடியுமா? 



 # எங்கப்பா வை விட பெஸ்ட்டா உங்க்ளால சீர் செய்ய முடியுமா? 


------------------------


4. சம்சாரம் சொல்படி கேட்டா உள்ளே படுக்கலாம்.வெண்ணெய் மாதிரி எதிர்த்து பேசுனா திண்ணைல தான் #மண மானவன் டைரிகுறிப்பு் 



---------------------------


5. ஏய்.பாப்பா தூங்கிட்டாளா பாரு.




 நோ டாடி,முழிச்சுட்டுதான் இருக்கேன் #



 அவ்வ்வ்வ்வ்வ்வ் 



------------------




6. எப்போ பாரு உங்க சொந்தத்தையே கட்டிட்டு அழுங்க. 



நீ கூட என் மாமனார் பொண்ணுதான்.உன்னை கட்டிட்டு அழலையா? 



-----------------------------


7. நைட் டைம் கரண்ட் போறதுல என்ன பிரச்சனைன்னா பக்கத்து வீட்டுக்கு நாம "பேசறது" துல்லியமா கேட்கும்



---------------------


8. பெரும்பாலும் பிரம்மச்சாரிகள் HMT வாட்ச் தான் கட்டுகிறார்கள் # இந்தியா டுடே &டைட்டன் சர்வே 



---------------------


9. அதிகாலையில் எழுபவர்கள் ஹோட்டல்காரர்கள்,பால்காரர்கள்,உழவர் சந்தை வருபவர்கள்,கோல மயில்கள்,அப்பாவிக்கணவர்கள்#அவதானிப்பு 



--------------------------


10. ஆண்களுக்கு மட்டும்தான் பைத்தியத்தை் பிடிக்கிறது!” -- 


----------------------




11. அட!ஒரு பொண்ணு தலைக்கு குளிச்சு 4முழம் மல்லிகைப்பூ வெச்சுக்கிட்டு வாக்கிங் வந்திருக்கு# நடந்த மாதிரிதான் 



--------------


12. மனம் மயக்கும் மணம் ஜாதி முல்லையா?ஜாதி மல்லியா? #ஜாதிக்கலவர நிலவரம. டிஸ்கஷன் வித் மை ஓன் ஒயிஃப்


--------------


13. காதலிக்கு அடுத்த ஸ்டெப் நீ! நீ தான் என் நிரந்தர ஸ்டெப்னி # ஸ்கூட்டர்வாலா வின் டைரிக்குறிப்பு 



------------------------


14. மிஸ் டெயிலி தவறாம உங்களை இந்த பஸ்ல பார்க்கறேன்.



டேய் லூசு.நீ தவறிட்டா எதையும் பார்க்க முடியாது.அண்ணா கிட்டே சொல்லவா? 


--------------------------


15. நான் வாக்கிங்க் போவது வாக்கிங் போறவங்களை பார்க்கவே -உண்மை விளம்பி 


----------------


என்னாங்க, வண்டிய எடுத்துட்டு போயி மாவை வாங்கிட்டு வந்துடுங்க 10 காசு தள்ளுபடியாம்...

(மனசுக்குள்) வண்டிக்கு பெட்ரோல் எத்தினி காசுனு தெரியுமாடி??? (வெளிய) சரிமா-
Shanthi Raj


16. காலையில் எழுந்ததும்,நான் செய்யும் முதல் வேலை-கிச்சு கிச்சு மூட்டுவது 


--------------------

17. எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் உள்ள பெண் ட்ரான்ஸ்பரண்ட் சேலை அணிந்திருக்கக்கூடும் # வாசன் ஐ கேர் வாலிபன் டைரிக்குறிப்பு 


------------------------


18.. நாவடக்கம் = ருசியே இல்லாத சம்சாரம் சமையலை சாப்பிட்டு சாப்பிட்டு நாவை அடக்க்ம் செய்தவன் 



-------------------------

19.இன்றைய சிந்தனை -அமலாபால் தன் திருமணத்திற்குப்பின் வரும் முதல் இரவில் பால் சொம்பில பால்கொண்டுபோவாரா?




------------------------


20. ரெகுலரா பால் ஊற்றும் பால் காரம்மா பால் கேன்ல தான் முதல் இரவில் பால் கொண்டுபோனாராம்# விசாரித்து அறிந்தேன்.ஜி கே டெவலப்பிங்




-----------------------------


 ஆல்தோட்ட பூபதி  கரூர் ஜெகன் உடன் அவினாசி ஆதீனம்

Monday, September 03, 2012

ஆச்சரியங்கள் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiK1gtQiaenWvC6FQBOiLQdRgOgx6ylR6sMr1sCNPgKJMyT26qsSTpbXzfY7DClaR0hFPHELrqn6b_P6vazULZi92AvE72ulnHvpyq4gSD4PZAoBRzi5gI4CWhBiyePBU8aRiVNPjr8QE/s320/Aachariyangal+Movie+Posters+Mycineworld+Com+(1).jpg 

1997 இல் மைக்கேல் டக்ளஸ் நடிச்சு வெளிவந்த  THE GAME  ஹாலிவுட் படம், 2008இல் சல்மான் நடிச்சு வெளி வந்த HELLO  ஹிந்திப்படம்,  சேட்டன் பகத் எழுதுன  ONE NIGHT @ CALL CENTRE நாவல் இந்த மூணையும் மிக்ஸ் பண்ணி தமிழுக்குத்தக்கபடி திரைக்கதை அமைச்சா அதுதான் ஆச்சரியங்கள்.

மெக்கானிக்கல் வாழ்க்கை.. அதாவது ஒரே மாதிரி ரொட்டீன் லைஃப் வாழ்வதில் ஆர்வம் இல்லாதவர் ஹீரோ.. வாழ்க்கை த்ரில்லிங்கா இருக்கனும், ஒவ்வொரு நிமிஷமும் சவால் நிறைந்ததா இருக்கனும்னு நினைக்கறவர்.. அவர் அடிக்கடி கடவுள்கிட்டே அது பற்றி புலம்புவார்.. அவருக்கு ஒரு நாள் கடவுள் கிட்டே இருந்து ஒரு ஃபோன் கால் வருது.. 


 நீ கேட்டபடியே நாளை முதல் உன் லைஃப் அமையும்னு சொல்லுது .. அதுக்குப்பிறகு ஹீரோ வாழ்க்கைல ஏகப்பட்ட திருப்பங்கள்..  



http://www.cinegoer.com/telugu-cinema/gallery/exclusive/aishwaryaa1/aachariyangal-tamil-movie-heroine-aishwarya-stills-2-24.jpg


1. ஹீரோவோட அண்ணன்  பிஸ்னெஸ் லாஸ்ல  வில்லன் கிட்டே கந்து வட்டிக்கு கடன் வாங்கி அதை கட்ட முடியாம திணறிட்டு இருக்கான்.அவனுக்கு தன் தங்கை பொண்ணை கடிக்குடுக்கலாம்னு அப்பா நினைக்கறார். ஆனா அண்ணன் ஆல்ரெடி வேற ஒரு பொண்ணு கூட லிவ்விங்க் டுகெதரா வாழ்ந்துட்டு இருக்கார் கமல் கவுதமி மாதிரி.. கடன் தொல்லை தாங்க முடியாம  வீட்ல இருந்த அத்தை நகையை லவட்டிட்டு ஆள் எஸ் ஆகறார். ஒரு ஆக்சிடெண்ட்ல ஆள் அவுட்


2. ஹீரோவோட அத்தை பொண்ணு  க்கு ஃபாரீன் மாப்ளை கூட நிச்சயம் ஆகுது. அந்த விழாவில் கலந்துக்க கார்ல வர்றப்ப ஒரு விபத்து.. சகுனம் சரி இல்லைன்னு எல்லாம் கேன்சல். அதனால ராசி இல்லாத பொண்ணாகிடும் அவளை கட்டிக்க சொல்லி அப்பா பிரஷர் போடறாரு. ஹீரோ ஓக்கே சொல்றாரு


3. ஹீரோ ஆல்ரெடி ஒரு தலையா ஒரு ஃபிகரை லவ் பண்றாரு.. அந்த பொண்ணு ஆல்ரெடி ஒரு பையனை லவ் பண்ணி ஏமாந்த பொண்ணு .அதனால லவ்னாலே பிடிக்கலை.. ஒன்லி நட்புதான்கற  கண்டிஷனை ஆரம்பத்துலயே போட்டுடுது.


4. ஹீரோவோட அண்ணன் ஏமாத்திட்டு போன  30 லட்சம் ரூபா பணத்தை உடனே தந்தாகனும்னு வில்லன் மிரட்றான்.. கைல நயா பைசா  இல்லைன்னு சொன்னதும்  அட்லீஸ்ட் 3 மாசம் என் கிட்டே குருவியா ஒர்க் பண்ணுனு கேட்கறான் வில்லன்.. விஜய் நடிச்ச குருவியை பார்த்ததே போதும், மறுபடி குருவியா? முடியாதுன்னு ஹீரோ சொல்லி டறாரு


5. வில்லனுக்கு தர வேண்டிய பணத்தை  எப்படி சம்பாதிக்க? ஐடியா . இவர் ஒரு தலையா லவ் பண்ணுனாரே  அந்த பொண்ணு பணக்காரப்பொண்ணு..  அவளை கடத்தி அப்பாவை மிரட்டி பணம் பறிக்கலாம்னு ஐடியா தர்றா.. அதே மாதிரி செஞ்சு பணம் கைக்கு வர்றப்போ  அந்த பொண்ணு  பணத்தோட எஸ் ஆகிடுது.. பழி ஹீரோ மேல விழுது. 


மேலே சொன்ன முக்கியமான அஞ்சு திருப்பங்களும் நடந்து அதை எல்லாம் ஹீரோ கிராஸ் பண்ணின பிறகு  படத்துல ஒரு திருப்பம். இதுவரை நடந்ததெல்லாம் கனவு.. ஆனா இதெல்லாம் நடக்கப்போகுது... இ எஸ் பி பவர் மாதிரி..  ஹீரோ நடக்கப்போற எதையும் தடுக்க முடியாது, ஆனா வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.  


சில வருடங்கள்க்கு முன் அதிகம் பேரால் கவனிக்கப்டாமல் விட்ட கருணாஸ் நடிச்ச புலி வருது படத்தின் முதல் 4 ரீல் இதே போன்ற ஒரு சுவராஸ்ய முடிச்சுத்தான்..  


ஹீரோவாக தமன். எந்த வித ஓவர் பில்டப் எல்லாம் இல்லாம அடக்கி வாசித்திருப்பது ஆறுதல்.. தேறிடுவார்.. ஹீரோயின் ஐஸ்வர்யா ..பாதரசம் போல் பளபளக்கும் கண்கள் , கொழுக் மொழுக் கன்னம்  இவருக்கு பிளஸ்.. 60 மார்க் போடலாம்.. இவருக்கும் வாய்ப்பு இருக்கு.. 



 வில்லனாக மகாநதி சங்கர்.. இவரது கெட்டப் நாடக நடிகர் மாதிரி எடுபடலை.. நடிப்பி ஓக்கே.. ஒப்பனை தான் சரி இல்லை.. ஹீரோவோட ஒன் சைடு காதலி மங்கள் ஹீரோயினை விடவே நல்லா இருக்கார்.. அவருக்கு இன்னும் சில சீன்கள் ஐ மீன் காட்சிகள் சேர்த்திருக்கலாம்.. 


கமல் நடத்திய திரைக்கதை பட்டறையில் பயின்ற ஹர்ச வர்தன் என்பவர் தான் இயக்கம். நல்ல எதிர்காலம் இருக்கு..  இசை, பின்னணி இசை சுமார் ரகம்.. ஒளிப்பதிவு சராசரி.. 

http://chennai365.com/wp-content/uploads/movies/Aachariyangal/Aachariyangal-Stills3729Ee55.jpg



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1. இந்த மாதிரி விறு விறுப்பான திரைக்கதைக்கு முதல் எதிரி பாடல்கள் தான்././ அதை நல்லா தெரிஞ்சுக்கிட்டு  டூயட்டோ, தேவையற்ற பாடலோ வைக்காதது.. இத்தனைக்கும் 2 ஹீரோயின்கள்.. வைக்க வாய்ப்பு இருக்கு.. ஆனாலும் வைக்கலை.. குட் ஒன் 


2. ஹீரோயின்ஸ் செலக்‌ஷன்.. 2 பேருமே நல்ல தேர்வு..  ஆடை வடிவமைப்பு ரொம்பவே பாந்தம்..  ஹோம்லியா ஒரு ஹீரோயின், மாடர்னா ஒரு ஹீரோயின்னு 2 ஏரியாவையும் கவர் பண்ணி இருந்தாலும்  ரெண்டிலும் கண்ணியமோ கண்ணியம்.. வெல்டன்



3. திரைக்கதை, காட்சி அமைப்புகள் எல்லாம் பாராட்டும்படி விறு விறுப்பா இருக்கு.. அங்கங்கே மேடை நாடகம் வசனை அடிச்சாலும் இது நல்ல முயற்சி.. 



4. போஸ்டர் டிசைன்,   அதுல வர்ற பஞ்ச் டயலாக் ஓக்கே. ரசிக்கற மாதிரி இருக்கு.ஆனா லோ பட்ஜெட்ங்கறதால ஈரோட்டில் 7 இடங்கள்ல மட்டும் தான் பார்க்க முடியுது.. சன் பிக்சர்ஸ் படம்னா 400 போஸ்டர்ஸ் ஒட்டுவாங்க. அட்லீஸ்ட்  50 போஸ்டராவது ஒரு  மாநகராட்சில ஒட்ட வேணாமா?


http://www.tamilnow.com/movies/gallery/aachariyangal/tamil-movie-aachariyangal-stills-7428.jpg


மனம் கவர்ந்த வசனங்கள் 


1 டேய், மேனகா  லவ்ஸ் யூ.. நீ ஏன்  அவளை   தவிர்க்கறே? ( ஒய் ஆர் யூ அவாய்டிங்க் ஹெர்?)


 ஒரு பொண்ணைப்பார்த்தா ஃபீலிங்க் வரனும், இவளைப்பார்த்தா எனக்கு அது வர்லையே?



2.  என்னென்னமோ கண்டு பிடிக்கறாங்க.. நைட் சரக்கு அடிச்சா காலைல ஃபிரெஷா எந்திரிக்கற மாதிரி ஒரு சரக்கு கண்டு பிடிக்கறாங்களா? 



3.  நீ எம் பி பி எஸ் படிக்கறது எல்லாருக்கும் தெரியனுமா? எதுக்கு வெள்ளைக்கோட்டை கைல மாட்டிக்கிட்டே திரியறே? உள்ளே வையேன்.. 



4. நீ நினைக்கற அளவுக்கு நான் நல்லவனா?ன்னு தெரியலையே?

 ஐ லைக் யுவர் ஹான்ஸ்டி ( உன் நேர்மையை மதிக்கறேன் ) - மேஜர் சுந்த்கர் ராஜன் பாறைகள் 



5. அவசரப்பட்ட முடிவுதான் இது. ஆனா தப்பான முடிவு அல்ல. 


6. போலீஸ்க்கு மெடல் எப்படியோ , திருடனுக்கு  அவன் மேல் போடப்படும் கேஸ் அதிகமாக அதிகமாக அவன் மதிப்பு அதிகரிக்கும்.. ( சஹானா கணவர்கள் மாதிரி ) 



7.  சரி சரி.. மச மசன்னு நிக்காம ஆகவேண்டியதைப்பாரு.. 


 இது கல்யாண வீடுகள்ல பெருசுங்க சொல்ற டயலாக்ஸ் ஆச்சே?




8. என்னடா பண்றே? 


 இவனுக்கு ஷூட் பண்ண ட்ரெயினிங்க் தர்றேன்.. 


 அவன் என்ன ஒலிம்பிக்ல போய் மெடலா வாங்கப்போறான்?



9. வாழ்க்கை எதிர்பாராத விதமா நம்மை பல விதமா தூக்கி அடிச்சுடுது



10.   ஹீரோ - எப்படியோ என்னை நீ கவுத்துட்டே.. 



ஹீரோயின் - நீ சொன்ன அந்த வார்த்தை எனக்கு பிடிக்குதோ இல்லையோ அந்த அர்த்தம் எனக்கு பிடிச்சிருக்கு.. ( குழப்பாதடி, கன்ஃபியூஸ் கொண்டைக்காரி )



http://www.tamilnow.com/movies/misc/aachariyangal-director-harshavardhan-meets-kamalhaasan/aachariyangal-director-harshavardhan-meets-kamalhaasan-3356.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்



1. திரைக்கதையின் நோக்கம் மூட நம்பிக்கையை வளர்த்தல் அல்ல என்றாலும் ஹீரோயின்  கேரக்டரைசேஷன்  அவ ஒரு ராசி இல்லாதவ, தொட்டது துலங்காது  அப்டிங்கற மாதிரி வருதே.. ஏன்?


2. ஹீரோயின் மனசுல என்ன இருக்கு?னு திட்டவட்டமா சொல்லவே இல்லையே? ஃபாரீன் மாப்ளை நிச்சயம் ஆனப்பவும் அதுக்கு ஓக்கே.. அந்த மேரேஜ் நின்னு ஹீரோவோட அண்ணனுக்கு மேரேஜ் பேச்சு நடந்தப்ப அதுக்கும் ஓக்கே,  அவன் ஓடிப்போனதும் ஹீரோ கூட நிச்சயம்னு சொன்னதும் அதுக்கும் ஓக்கே, நிச்சயம் கேன்சல் பண்ணின ஃபாரீன் மாப்ளை மறுபடி வந்து மன்னிப்பு கேட்டு மேரேஜ் பண்ணிக்கறேன்னு சொன்னா அதுக்கும் ஓக்கே. சஹானாவை விட, நயன் தாராவை விட இவங்க கேரக்டர் குழப்பமா இருக்கே..  உன்னை நினைத்து லைலா கேரக்டர் மாதிரியா? எது கிடைச்சாலும் சரி?



3. ஹீரோவோட சிஸ்டர் வில்லனால் கிட்நாப் பண்ணப்படறார்.. அதுக்கு முந்தின ஷாட்ல இன்ஸ்பெக்டர் ஹீரோ கிட்டே அவர் ஃபோன் நெம்பர் குடுத்து “ ஏதாவது உதவி வேணும்னா பர்சனலா கால் பண்ணுங்கன்னு நெம்பர் தர்றார்.. ஹீரோ ஏன் அவருக்கு ஃபோன் பண்ணி “ சார், இந்த மாதிரி ஒரு ரவுடி என் தங்கயை கடத்திட்டான், ஆனா எஃப் ஐ ஆர் எல்லாம் போட வேணாம். மறைமுகமா நீங்க இதுல உதவி செய்யனும்னு ஐடியா கேட்கல? 



4. அண்ணன் இறந்துடறார், டெட்பாடியை வாங்க தம்பி மறுக்கறார் அதுக்கு அவர் சொல்லும்  ரீசன் வீட்ல பெற்றோருக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க.. அவன் ஓடிப்போனவனாவே இருக்கட்டும். இது கேனத்தனமா இருக்கு.. அப்போ அண்ணன் அனாதைப்பொணமா  இருக்கனுமா? ஏன் தம்பி போய் அந்த பாடியை வாங்கி சுடுகாட்ல சத்தம் இல்லாம அடக்கம் பண்ணிட்டு வர மாட்டாரோ? 


5. ஹீரோ ஒரு தலையா ஒருத்தியை லவ் பண்றாரு.. அப்பா சொன்னதுக்காக அத்தை பொண்ணுக்கு ஓக்கே சொல்றாரு..  அந்த மேட்டரை ஏன் தன் ஒன் சைடு லவ்வர் கிட்டே சொல்லலை? அது பற்றி குற்ற உணர்வே அவர் முகத்துல இல்லையே?

6. ஹீரோ நண்பர்களுடன் சேர்ந்து இருக்கும் சீன்கள் எல்லத்துலயும் அவன் தண்ணி அடிச்சுட்டே தான் இருப்பானா? சமீப காலமா இது அதிகரிச்சுட்டு வருது./. சரக்கு அடிக்காதவங்க, பெண்கள் ( ஐ மீன் சரக்கு அடிக்காத பெண்கள் ) பார்த்தா என்னமோ மாதிரி இருக்கு.. ஒரு சீன் 2 சீன் வெச்சா தேவலை.. 


7. இந்தப்படத்துக்கு அழகிய தமிழ் மகன் மாதிரி திரைக்கதை அமைச்சிருக்கலாம்னு தோணுது.. அதாவது ஹீரோவுக்கு அடுத்து என்ன நடக்கும்னு தெரியும், ஆடியன்ஸுக்கும் தெரியும், அப்போ அவன் என்ன பண்ணப்போறான்.. இது இன்னும் டெம்போ ஏத்தும்னு நினைக்கறேன். 



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41


 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓ கே


சி.பி கமெண்ட் - வித்தியாசமான படங்களை ரசிப்பவர்கள் பார்க்கலாம். உடனே பார்த்துடுங்க.. சீக்கிரம் எடுத்துடுவாங்க.. பெண்களும் பார்க்கும் தரத்தில் மிக கண்ணியமான நெறியாள்கை .  ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்


டிஸ்கி- இணை உலகில் புரட்சி -



http://puradsifm.com/
-