Saturday, September 01, 2012

ஆர்ஷ்கா"ங்காசனம்” - கில்மா யோகாசனம்

ithai enga naagesh anthakkaalaththileye senjuttaare!
really talented guy !!!
Photo: really talented guy !!!
1.மானாட மயிலாட 7’ சிறப்பு விருந்தினர் டாப்ஸி # எல்லாரும் மேலேயே பார்ப்பாங்க ,ஐ மீன் ஸ்டெஜ் மேலே 



--------------------


2. தன்னையே காதலிக்கு கொரியர் செய்த காதலன் : செத்து பிழைத்த கதை -செய்தி # சைக்கோ செல்வராகவன் ்,நோட் இட்,அடுத்த படத்துக்குKNOT சிக்கிடுச்சு 




-------------------------


3. மனைவி அடித்தார்னு யாரும் கேஸ் குடுக்கறதில்ல.அவமானத்துக்கு பயந்தும்,குழந்தை நலன் கருதியும் பலர் அடக்கி வாசிக்கிறார்கள் 



----------------------


4. மனைவியைத் தாக்க முயன்ற கன்னட நடிகர் அர்ஜுன் கைது: # தனி ஒரு மனிதனுக்கு சொந்த சம்சாரத்தை அடிக்கக்்கூட உரிமை இல்லையா? 



---------------


5. தலைவா! FACE BOOK அக்கவுண்ட்டை ஏன் க்ளோஸ் பண்ணீட்டீங்க?



 மு க - யாரும் என் கிட்டே முகம் குடுத்துப்பேசலை 


--------------------


ippadiyum adikkalaam bittu!
Photo

6. மேத்ஸ் மிஸ் - பிதாகிரஸதேற்றம் -சிறுகுறிப்பு வரைக.



 லொள் மாணவன்-"பிதா" கிரஸ் தேற்றம்தானே?நாளை அப்பா கிட்டே கேட்டு சொல்றேன் மிஸ்் 


--------------------


7. ஆர்யாவுக்கு யோகா கிளாஸ் எடுத்த அனுஷ்கா! # "ஆர்ஷ்கா"ங்காசனம்”


-----------------


8. விதியை நம்பாதே ! ரதியை நினைத்து வெம்பாதே!உன் மதியை மட்டும் நம்பு # தத்"தி"வம் 


----------------------


9. தமிழகத்தில் அரேஞ்சு மேரேஜ்க்கு 59% பேர் ஆதரவு #அவங்கள்ல பாதிப்பேர் ஆல்ரெடி லவ்மேரேஜ் செஞ்சவங்களாம்.செகண்ட் இன்னிங்க்ஸாம் 



-------------------

10. இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு யார் காரணம்? ஜெயலலிதாவா நானா? - கலைஞர் # முக்கியக்காரணம் நீங்க, வேடிக்கை பார்த்தது அவங்க 



---------------------


Photo: The Parthasarathy Temple (Tamil: பார்த்தசாரதி கோயில்) is an 8th century Vaishnavite temple dedicated to Lord Krishna, located at Triplicane, Chennai, India. It is one among the 108 divyadesams or holy abodes of Lord Vishnu. The name 'Parthasarathy', in Sanskrit, means the 'charioteer of Arjuna', and Lord Krishna is worshipped in that role in this temple.
It was originally built by the Pallavas in the 8th century by king Narasimhavarman I. One of the distinguishing features of is that it has four of the incarnations or avatars of Vishnu: Narasimha, Rama, Varaha and Krishna. 
The temple is one of the oldest structures in Chennai. There are shrines for Sri Vedhavalli Thayaar, Sri Ranganatha, Sri Rama, Sri Gajendra Varadharaja Swamy, Narasimha, Sri Andal, Sri Anjaneya, Alwars, Ramanuja, Swami Manavala Mamunigal and Vedanthachariar. The temple subscribes to Vaikhanasa agama and follows Thenkalai tradition
The temple has grand brahmotsavams for Sri Parthasarathy swami during the Tamil month of chittirai (April-May).
Among the 12 alwars (the great saints in Vaishnavite tradition) three of them namely Peyalwar, Thirumazhisai alwar and Thirumangaialwar have sung on the different forms of God in this temple. Many acharyas have also written songs on the various forms of God in this Temple.-wiki

Taken during Brahmotsavam festival,2012.


11.  என்னை குறை கூறுபவர்களே,இலங்கைத் தமிழர்களுக்காக நீங்க ஏன் உயிரை விடலை?''- கருணாநிதி # தமிழ் இனத்தலைவருக்கு ஒரு வாய்ப்பு தரலமானுதான் 


------------------------


12. 'தமிழக அரசின் சாதனையே டாஸ்மாக் வசூலாகத்தான் உள்ளது.''- விஜயகாந்த் # அதுல உங்க பங்களிப்பும் அபா”ரம்”



---------------------

13. வாரிக்குவித்த வள்ளல்களே! கல் குவாரில எவ்ளவ் வாரிக்குவிச்சீங்க ?



-------------------


14. தம்பிக்கு முன்னால அரியனை ஏறத்துடிக்கும் அண்ணன் அழகிரி, கம்பிக்குப்பின்னால போகப்போறாராம் # அரசியல்,  ஜெயில்  கிசு கிசு




---------------------


15. மட்டமா பேசறவங்க மாடில நின்னுட்டு பேசுனா அது உயர் மட்ட பேச்சு ஆகிடுமா? # எ கீ 




------------------------



Photo: I told that i will upload my second best photo.. It is that.. Hard work click. Bt 1st uploaded pic is better dhan this.. Rate it plz all my dr frndz...?


16, தினமும் உன் முகத்தில் விழிக்க ஆசைப்படுவதால்தான் உன்னுடன் படுத்திருக்க ஆசைப்படுகிறேன் ;-0



-----------------------

17. நான் சின்னப்பையனா இருக்கும்பொது ( 10 வருஷம் முன் ) ரயில்வே ஸ்டேஷன்ல யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்-னா உடனே எந்திரிச்சு நிப்பேன் ;-0




-----------------------------


18. நீ எனக்கு உமையவள் ஆனாய்! நான் உனக்கு ”இமை” யவன் ஆனேன்




-------------------------


19.  பீன்ஸ் -டாக்டர், என் 32 பல்லும் ”ஆடு”து.



 டாக்டர் ரியாஸ் - அப்போ ஒண்ணு கூட உங்களுது இல்லையா?



---------------------------

Photo


20. நீ என்னை பார்த்து சிரித்தாய்! நான் லூஸ் என்பது உனக்குத்தெரிந்து விட்டதோ என நான் பயந்தே போனேன் ;-0 




---------------------------------



21. நீ மல்லாக்கப்படுத்தாய்! 10 அடி தள்ளி இருந்த  நான் குப்புறப்படுத்து விட்டேன்! 



--------------------

22. ரைட்டர் -நீ தானே என் பொன் வசந்தம்! 




 மிஸ் மாஆஆ - என்னது?



 ரைட்டர் - சினிமாவுக்கு போறேன், வர்றீங்களா?ன்னு கேட்க வந்தேன் ;-)



-------------------

22. இன்னும் நீங்க சின்னப்பையனாவே இருக்கீங்க, எதுக்கு என்னை மாஸ்க் போட்டுக்க சொல்றீங்க?



  க்ளோசப்ல உன்னை பார்க்க பயமா இருக்கு  # காதல் கடலை


--------------------


23. அன்பே! நான் கற்றது கையளவு! கல்லாதது  நீ பீரோவில் வைத்திருக்கும் உன் சேலைகள் அளவு!! 



--------------


24. விதி வலியது! சம்சாரம் கொடியது! ஊடல் வந்து விட்டால் எவ்வளவு கெஞ்சினாலும் படியாது !





---------------------


25. நான் பிற பெண்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, ஏன்னா ஒரு சம்சாரத்துக்கே என்னால செலவு பண்ண முடியலை ;-0



-----------------


பூம்பூம் மாட்டுக் காரர்களின் வாழ்வு -ஒரு பார்வை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxLa7im6z-OzDLMGzOKp3Z7bcgbY_1s48ddGICy8bwm62BlrsaafZsxIDRrp0krdVYKmhZuONeKNhMcwwfbF99UxTvGJC9xLljlKtdB8az5SAmXwNafF2SpDsGTpvCFnzuRi8fN-M_XMkl/s1600/boom%252Bboom%252Bmaadu.jpgவெளிச்சத்துக்கு வரும் வித்தியாச வாழ்வுகள்!



நல்ல காலம் பொறக்குமா?





நல்ல காலம் பொறக்குது... இந்த வூட்ல அய்யாவுக்கு நல்ல காலம் பொறக்குது. அம்மாவுக்கு நல்ல காலம் பொறக்குது. வூட்ல உள்ள எல்லாருக்கும் நல்ல காலம் பொறக்குது!" என்று விடியற்காலை வாசலில் வந்து நிற்கிற பூம்பூம் மாட்டுக் காரர்களின் மாடுகள் வண்ணங்களால் ஈர்த்தாலும் குழந்தைகளின் மனசுக்குள் ஒருவிதப் பயத்தை உண்டு பண்ணும். கிராமத்தில் பிறந்து இன்றைக்கு முப்பதை நெருங்கும் இளைஞர்கள் பலர் தம் வீட்டுத் திண்ணையிலுள்ள தூண்களில் ஒளிந்து கொண்டு இந்த பூம்பூம் மாட்டுக்காரர்களை நோட்டம் விட்டிருப்பார்கள்.


 ஒவ்வொரு வீட்டுவாசல்களில் நின்றவர்களை வாழ்க்கை தன் விளிம்பில் நிற்க வைத்து வேடிக்கை பார்க்கிறது. ‘தங்களுக்கு நல்ல காலம் பொறக்குமா?’ என்கிற கேள்வி சுமந்து விரக்தியுடன் வாழ்கின்றனர். பூம்பூம் மாடுகளின் அலங்காரப் பட்டைகள் இருக்கின்றன; சலங்கைகள் இருக்கின்றன; ரும் ரும்ரும் என உறுமிய உறுமிகள் இருக்கின்றன. ஆனால், பூம்பூம் மாடுகள் மட்டும் இல்லை; பாரம்பரிய தொழிலிலிருந்து விலகி, பொம்மை தொழிலுக்குச் சென்று விட்டனர் பூம்பூம் மாட்டுக்காரர்கள்.



ஒரு காலைப் பொழுதில் சென்றிருந்த நம்மிடம், மனகந்த்தா தேவுடு அய்யாவை. மூர்த்திலே கண்ட்ட போதே மனந்த்த லேது!" என்றனர். நமக்கு ஏதும் புரியவில்லை. ஓர் இளைஞர் விளக்கினார். எங்களுக்கெல்லாம் கடவுள் மாதிரி அய்யாவை.மூர்த்தி. அவர் இல்லாட்டி நாங்களே இல்லை!"


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtlcYZMCKoc1lnDrpRHMUmqs6ayUbS6FbLA2Pmqy5J61taahsMFpoJLU2xg8r5VeNkUFwHfT7XTUGfVN0OQOOkGF1eb_sOGqMli4K9cLdIX_A_i-ZHU9xdTnlQpf1chWRjUJxhbzzXpdc/s1600/311661-001.jpg



திருச்சி, மணிகண்டம் யூனியன் (முதல்வர் தொகுதி) நாகமங்கலம் அருகே உள்ளது ஆதியன் குடியிருப்பு. இந்து ஆதியன் இனத்தைச் சேர்ந்தவர்களே பூம்பூம் மாட்டுக்காரர்கள். நாடோடிகளாக ஊர்ஊராய்ச் சுற்றித் திரிந்தவர்களுக்கு, 2001இல் அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டித் தந்து ஆதியன் குடியிருப்பினை உருவாக்கியவர் அப்போதைய திருச்சி கலெக்டர் வை.மூர்த்தி.



எங்க பூர்விகம் திருவண்ணாமலை பக்கம் பெண்ணாத்தூர். பூம்பூம் மாடு ஓட்டிக்கிட்டு நாடோடிகளாய் சுத்தித் திரிவோம். திருவானைக்காவல் பக்கமாய் ரொம்ப வருஷம் தங்கியிருந்தோம்," என்கிறார் ஆதியன் குடியிருப்பு முக்கியஸ்தர் கண்ணன்!



ஆதியன் குடியிருப்பில் 96 வீடுகள். நூற்றியிருபது குடும்பங்கள். அங்குள்ள பிள்ளைகளுக்கென மூன்று ஆசிரியர்கள் ஊராட்சித் தொடக்கப் பள்ளி. ஓர் அங்கன்வாடி. ஊராட்சியின் இரண்டாவது வார்டு உறுப்பினர் கண்ணன், முன்னாள் பூம்பூம் மாட்டுக்காரர்; இந்நாள் பொம்மை விற்பனையாளர். நாம் பேசிக் கொண்டிருக்கும்போது, புன்னை மரத்தடியில் உறுமிச் சத்தம்.



பழைய ஞாபகத்துல இப்படி அப்பப்போ எடுத்து அடிப்பாருங்க. இப்ப எல்லாம் அவரும் அவர் மவனும் கண்ணாலக் கச்சேரிக்குப் போய் வர்றாங்க," என்றார் கண்ணன். தலையில் பிரம்மாண்ட முண்டாசு மற்றும் வெற்று மார்புடன் மரத்தடியின் கீழே நின்று உறுமி அடித்துக் கொண்டிருந்தார் கண்ணப்பன். நாம் வந்திருக்கும் தகவல் கேள்விப்பட்டு அவரது மகன் ரமேஷ் குமார், தவிலுடன் வந்தார். தோளிலே நாகஸ்வர பை. பிறகு என்ன? அப்பா கண்ணப்பன் நாகஸ்வரம் வாசிக்க, மகன் ரமேஷ்குமார் தவில் அடிக்க அரை மணி நேரக் கச்சேரி அந்த இடத்தில் அரங்கேறியது.



பத்து வருஷமாய் சுபகாரியங்களுக்கு கச்சேரி செய்யக் கூப்பிடுறாங்க! வூட்ல விசேஷம், கோயில் திருவிழான்னு எங்க ஜோலி ஓடிட்டிருக்கு. ஏதோ பரவாயில்லே. ஆனா சுத்தமாய் எங்க தொழிலை விட்டுவந்து பத்து பதினஞ்சு வருஷத்துக்கு மேல ஆகுது. காடு மலை கல்லு முல்லுன்னு பாக்காம ஊரூராய் சுத்தித் திரிஞ்ச எங்க கால்களை அடக்கி வைக்கிறது பெரும்பாடாய் இருக்கு. எங்க தொழிலை விட்டதுக்கு ரெண்டு காரணங்கள்.


ஒண்ணு வருமானம் கொறைஞ்சுடுச்சு. ரெண்டாவது மாட்டுத்தீவனம் வெலை ஏறிப்போச்சு. வேட்டைக்குப் போறது மட்டும்தான் எங்களை இவன் ஆதியன்னு சொல்ல வைக்குது. சுதந்திரமாய் ஊரச் சுத்தி வந்தப்போ கிடைச்ச ஆத்மதிருப்தி இப்போ இல்லை. மரத்தடியில பொங்கித் தின்னாலும் மனசு முழுக்க றெக்கை கட்டிப் பறக்கும். அதனால எங்க சனங்க இப்போகூட வீட்டுல சோறு பொங்கறது கிடையாது. இன்னைக்கு தமிழ்நாட்டுல ஒரு பூம்பூம் மாட்டுக்காரனையும் பாக்க முடியாது. நாகரிகம் அதிகமாய் வாரி இறைச்ச பகட்டான நெறத்துல எங்க நிறம் மாறிப் போயிருந்தா கூட கவலை இல்லை; ஆனால் வெளுத்துப் போச்சு" பேசுகிற கண்ணையனின் கண்களில் விரக்தி வழிகிறது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZYAQTtdthK1tGiabdoCHm9WZaFtEQs3bbRHiPwcfUn3oWJnpQfUwvA8v54q2hz1UjdhFdQGD1tx5HL1YnIh6xD00p3PwTJmzDUO_TexrgVXKE6Vtd_RHys4xIaB82aP4cnJs4vSCoYiA/s1600/kudukuduppai.jpg

சின்ன மளிகைக் கடை. விறகு அடுப்பில் பால் காய்ச்சும் டீ ஸ்டால். நடத்துபவரும் ஆதியன் இனத்தவரே! ஆங்காங்கு அவர்கள் பேசிக் கொண்டதை நம்மால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியவில்லை. என்ன பாஷை... இது என்றால், தெலுங்குதான் சார். ஆனா ரொம்பவும் மட்டம்" என்று ஒப்புக் கொள்கின்றனர்.



‘மாயவா கோயிந்தா ரெங்கனாதா... அழகர் மலையானே... கள்ளங்குறிச்சி கலிய பெருமாளே... என்னைக்கும் நல்ல காலம் இந்த வீட்ல பொறக்கணும். ஏதோ இந்த பூம்பூம் மாட்டுக்காரனுக்கு அய்யா கண்டு ஒரு வேட்டி போடணும்... அம்மா கண்டு ஒரு புடைவை போடணும். சீரங்கம் ரெங்கனாத மூர்த்தி அவுங்களுக்கு நல்ல காலம் கொடுக்கணும்!’ இதைத்தாங்க நாங்க ராகமா பாடிட்டு ஒவ்வொரு வீட்டு வாசல்லயும் நிப்போம். புதுசா வேட்டியும் புடைவையும் தருவாங்க.


அஞ்சு பத்து பணம் தருவாங்க. சில நாள் நல்ல வசூல் ஆவும். சில நாள் ஏதும் ஆவாது. ஜனங்க மத்தியில எங்களுக்கு வரவேற்பும் படிப்படியாய் கொறைஞ்சிப் போச்சு. மாட்டுக்குத் தீவனம் வாங்கக்கூடத் தடுமாறிப் போனோம். அப்ப எங்ககிட்டேயிருந்து பிரிஞ்சு போன மாடுகள்தான். அத்தோட இந்தத் தொழிலுக்கு முழுக்குப் போட்டுட்டு அவுங்கவுங்களுக்குத் தோதான தொழிலுக்கு மாறிப் போனோம்!" என்கிறார் கண்ணன்.



அவர் வீட்டில் பொம்மை வியாபாரச் சாமான்கள் குவிந்து கிடக்கின்றன. அதென்னங்க பொம்மை வியாபாரம்? கண் திருஷ்டி முகப் பொம்மை, திருஷ்டி சங்கு, கனரக வாகனங்களிலும் டூ-வீலர் வண்டிகளிலும் கட்டப்படும் கறுப்புக் கயிறு போன்றவை இவர்களது பொம்மை வியாபாரத்துக்குள் அடக்கம். ஊர்த் திடலின் மர நிழலில் நான்கைந்து இளைஞர்கள் வட்டமாகச் சுற்றியமர்ந்து கறுப்புக் கயிறு தயாரித்துக் கொண்டிருந்தனர். அதற்கு இன்னொரு பெயர் கம்பளிக் கயிறு.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu_1pu5V0dCbJIvE-BqsgnAHfaUhqTO9yQ8TPRcs9tkKhTDJmDKxZdPhq7sM8xrMDdRFjwlfe3PiZSwNf2zxhgqe49y9nRJlCzXeVHMjyRhiUO4h2PK5ZTw_CD9PVYTQmoMfLH8q4OA6qj/s1600/photo%252B%2525281%252529.JPG

ஒரு வீதிக்குள் பிரவேசித்த நம்மை, கூந்தல் உலர்த்திக் கொண்டிருந்த இளம் பெண்ணின் அதட்டல் குரல் தடுத்து நிறுத்தியது. ‘யார் சார் நீங்க...? என்ன வேணும் உங்களுக்கு?’ என்றது. நம்மைத் தொடர்ந்து வந்த கண்ணன், விவரம் கூறி நம்மை விடுவித்தார். ஒன்பதாவது படிச்சிட்டு பக்கத்து ஊர்ல பஞ்சுமில் வேலைக்குப் போகிறாராம் அதட்டல் போட்ட மணிமேகலை. எங்க சனத்துல பொண்ணுங்க இப்போதான் வேலைக்குன்னு வெளியில போறோம்" என்கிறார் அவர்.



‘மாரியாத்தா முத்து’ வாங்கச் சென்றிருந்த காசியம்மாள், தங்கள் குடியிருப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போல்லாம் ஆண்களுக்கு பூம்பூம் மாடு. பெண்களுக்கு ‘மகமாயி முத்து’. ஒரு தாம்பாளத்தில் கொஞ்சம் அரிசி, வேப்பிலைக் கொத்து போட்டுக்கிட்டு வீடுவீடா முத்து கேட்போம். சில வீடுகளில் அரிசி; சில வீடுகளில் காசு பணம் போடுவாங்க. ஒரு நாளைக்கு பத்து கிலோ அரிசியும் கிடைக்கும்; அஞ்சாறு கிலோவும் கிடைக்கும். சில நாளைக்கு அம்பது நூறு பணம் மட்டும் கிடைக்கும்" என்கிறார் காசியம்மாள்.



மின் விசை நீர்த்தொட்டியில் தண்ணீர் பிடிக்க வந்த சின்னப் பொண்ணுவிடம் விசாரித்தோம். பொம்மை ஏவாரத்துக்குப் போய் வருகிறவராம் அவர். நான் பொறந்தது மோதலோடு கோத்திரம். எம் புருசன் முங்கோடு கோத்திரம். எங்கள்ல பல கோத்திரம் இருக்கு. ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவங்க கண்ணாலம் பண்ணிக்க மாட்டாங்க" என்று சுவாரஸ்யம் கூட்டினார் அவர்.



கண் திருஷ்டி முகப் பொம்மை விழுப்புரம் அருகே வாங்கி வருகின்றனர். பிறகுதான் வேண்டிய மாடல்களில் அதைத் தயாரிக்கின்றனர். கண் திருஷ்டி சங்குதான் வேலை வாங்குமாம். கடல் சங்கு, வில்வக் காய், ஐந்து முக கடல் நட்சத்திரம், படிகாரக் கல் எனக் கலைநேர்த்தியாகக் கட்டினால் உருவாகிறது கண் திருஷ்டி சங்கு.



மாலை ஐந்து - ஆறு மணிக்கு தெருவில் மண் அடுப்பு மீது சோறு, குழம்பு சமைக்கின்றனர். அத்தோடு சரி. பிறகு மறுநாள் மாலைதான் சோறு, குழம்பு சமைக்கின்றனர்.



லயன்ஸ் க்ளப் உதவியோடு திருமணம்(காதல் திருமணம்) செய்து கொண்ட செல்வம்-லட்சுமி தம்பதியினர் வீட்டுக்கு வெளியே சமைத்துக் கொண்டிருந்தனர். செல்வம் முருங்கைக்காய் அறுத்துக் கொடுக்க, மனைவி லட்சுமி சோறு பொங்கிக் கொண்டிருந்தார். மடியில் ஒரு குழந்தை. அடுத்த வாரிசு வயிற்றில். இரவு உங்கள் வீட்டு முருங்கைக்காய் சாம்பார்தான் எனக்கு!" என்றதும், இருவர் முகத்திலும் புன்முறுவல்.



நீண்ட குச்சி, தோள்களில் கனத்த வலை சுமந்து நெடிய உருவம் நம்மை நோக்கி வந்தது. அட... காலையில் பார்த்த பெரியவர் கண்ணப்பன். மனுஷன் வேட்டைக்குக் கிளம்பி விட்டார். சிக்கிமுக்கிக் கல்லில் எப்படி தீப்பொறி உண்டாக்குவது, பஞ்சுதான் விளக்கு... என தீ மூட்டிக் காண்பித்தார். அதற்குள் வேட்டைக்குச் சென்றிருந்த சிலர் திரும்பி வந்திருந்தனர்.



காட்டுப் பூனைக்கறியை ஒருவர் ஏரித் தண்ணீரில் சுத்தம் செய்து கொண்டிருந்தார். கல்லணை வரை சென்று வந்த இரண்டு பேர் நான்கைந்து ஆமைகளைப் பிடித்துப் பொசுக்கி வந்துள்ளனர். அதன் ஒரு பகுதியைப் பிய்த்து அப்படியே தின்ன ஆரம்பித்தார் ஓர் இளைஞர்.



இரவு நேரம். இரண்டு மூன்று பெண்கள் அப்பகுதிக்குள் வந்தனர். நீங்களுமா எனக் கேட்டால், படம் மட்டும் புடிச்சிடாதீங்க. டவுன்ல போயி பிச்சை எடுத்துட்டு வர்றோம்," என்றனர்.



செய்யும் தொழிலை இழந்தது ஒருபுறம் என்றால், அடுத்த வேளை சோற்றுக்கே கையேந்தும் அவல நிலை மறுபுறம். நாக மங்கலம் குடியிருப்புவாசிகளுக்கு நல்ல காலம் எப்போது பிறக்கும்?



ஆதியன் இன மக்களிடையே ஆகுலோடு, முங்கோடு, மோதலோடு, காஞ்சானோடு, எரபினோடு, தாரம் ஓடு, ராயலோடு, கிலகாலோடு, ஈதாலோடு, குராண்ட போடு என்று மேலும் பற்பல கோத்திரங்கள் உள்ளன. காதல் மணம் தவிர ஏனைய திருமணங்களில் கோத்திரம் அறிந்தே சம்பந்தம்.



பெற்றோர்கள் பார்த்துச் செய்யும் திருமணம், காதல் திருமணம் இரண்டும் உண்டு. வரதட்சணை இல்லை. மதியம் மதுச் சரக்கு மற்றும் பிரியாணியுடன் அமர்க்களமான விருந்து. மாலை நேரத்தில், திடலில், கோயில் முன்பாக மணமகள் கழுத்தில் மண மகன் தாலி கட்டுதல். திருமணப் பத்திரிகைகள் ஏதும் அச்சடிப்பதில்லை.

http://puducherrynews.com/news/wp-content/uploads/2009/03/poompoommadu-300x238.jpg

அம்மா - அப்பாக்களில் பெரும்பாலோர், எஸ்.டி. கம்யூனிட்டி சர்டிஃபிகேட் இந்து ஆதியன் எனப் பெற்றுள்ளனர். ஆனால், அவர்களது பிள்ளைகளுக்கு எஸ்.டி.சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.



பெண் பிள்ளைகளில் பலரும் நடுநிலைப் பள்ளி கல்வி வரை படித்துள்ளனர். ஆண்களில் ஒருவர் பி.காம்., இன்னொருவர் டிப்ளமோ முடித்துள்ளார். எங்களுக்கு எஸ்.டி. சாதிச் சான்றிதழ் கிடைத்திருந்தால், அரசு வேலை கிடைத்திருக்கும்" என்கின்றனர்.

நன்றி - கல்கி , புலவர் தருமி, மழை ரேணு,கானா ப்ரபா அண்ணன்


நாடக தினம் -அசோகமித்திரன் - சிறுகதை,

சண்முக சுந்தரம் அதிகாலையிலேயே எழுந்து முகச்சவரம் செய்துகொண்டார்.குளித்து உலர்ந்த வேட்டியை உடுத்திக் கொண்டு சுவரில் மாட்டியிருந்தமுருகன் படம் முன்பு நின்று பிரார்த்தனை செய்தார். அன்று அவருடைய புதுநாடகம் எட்டாம்முறை சென்னையில் நடக்கவிருந்தது. ஏழுமுறை நல்லபடியாக நடந்து முடிந்ததுபோல இதுவும் நடந்து முடியக் கடவுளை வேண்டிக்கொண்டார். தலையில் எங்கோ ஒரு மூலையில் சுளீரென்று ஒரு வலி தோன்றி மறைந்தது.

“அண்ணே, அந்தப் பொண்ணு நம்மை ஒழிச்சுடப் போறாண்ணே” என்று சிங்காரம் கவலையோடு ஓடிவந்து சொன்னார். சிங்காரம் அந்த நாடகக் குழுவின் தையற்காரர்.

“யாரு? என்னப்பா சொல்லறே?”

“நீங்க தலைமேலே தூக்கி வைச்சுண்டீங்களே, அந்த ஹீரோயினிதான்.”

“ஏன், என்னாச்சு?”

“அந்த வழியா வந்த என்னைச் செண்பகத்தோட அம்மா கூப்பிட்டு இன்னிக்குப்
பொண்ணு நாடகத்துக்கு வராதுன்னு சொல்லச் சொன்னா.”

“என்ன? என்ன?”

“ஆமாங்க. இன்னிக்கு அது வராதாம்.”

சண்முக சுந்தரத்துக்கு இன்னும் விஷயம் விளங்கவில்லை. அந்த நாடகத்தின் கதாநாயகி செண்பகந்தான். ஆட்டத்துக்கு ஆட்டம் அவள் நன்றாகவே செய்தாள்  என்று ஊரெல்லாம் நல்ல பெயர். பழைய நடிகைகளுக்கே நாடகத்துக்கு இருபது  ரூபாய் கொடுத்தபோது இந்தப் பெண்ணுக்கு முப்பது ரூபாய் என்ன ஆயிற்று?

“ஏன், அம்மை, கிம்மை ஏதாவது போட்டிருக்கா?” அப்போது ஊரெல்லாம் அம்மையாக இருந்தது.

“இல்லீங்க. நன்னாக் கொழக்கட்டையாகத்தான் இருக்கு. தாய்க்காரி ஒண்ணுமே சொல்லமாட்டேங்கறா.”

சண்முக சுந்தரம் ஒரு கணம் திகைத்து நின்றார். சிங்காரத்திடம், “உடனே வேலுவை வரச்சொல்லு” என்றார். வேலு அவருக்கு வழக்கமாக வரும் ரிக்ஷாக்காரன்.ரிக்ஷா வந்துவிட்டது. சண்முக சுந்தரம் சிங்காரத்தைக் கேட்டார், “நீயும் வரயா?”

“வேண்டாங்க. பிடிவாதமா வரமாட்டேன்னு சொல்லிடும். நீங்க தனியாப் போய்ச் சத்தம் போட்டுட்டு வாங்க.”

நாலு சந்து தாண்டிச் செண்பகத்தின் வீடு. நடந்தே போய்விடலாம்.  ஆனால் வீட்டு வாசலில் வண்டி நின்றால்தான் அந்தப் பெண்பிள்ளைகள் மதிப்பார்கள்.

இவ்வளவு சீக்கிரமாக அவரைச் செண்பகத்தின் அம்மா எதிர்பார்க்கவில்லை.
அவசரமாகத் தலையை முடிந்துகொண்டு “வாங்க” என்றாள்.

“பாப்பா ஏதோ வராதுன்னு சொல்லியனுப்பிச்சயாமே?”

“ஆமாங்க. இன்னிக்கு ஒரு நாளைக்கு வேறே ஏற்பாடு பண்ணிக்குங்க.”

“என்ன உளர்றே? ஆறு மணிக்கு நாடகம். இப்போ போய் வரமாட்டேன்னா?”

“என்னங்க செய்யறது? சினிமாச் சான்ஸு திடீர்னு வந்தது.”

சண்முக சுந்தரம் தான் அப்போதே தோற்கடிக்கப்பட்டதை உணர்ந்தார்.

“நாடகத்தை முடிச்சிட்டுப் போறது.”

“சேலம் போகணும். இன்னிக்கு மத்தியானமே கிளம்பனும்.”

“மத்தியானமா? சேலத்துக்கு மத்தியானம் ரயில் கிடையாதே?”

“ரயிலு இல்லீங்க. பிளஷர்லே அழச்சிட்டுப் போறாங்க. நானும் போறேன்.”

சண்முக சுந்தரம் நாக்கு நுனிக்கு வந்த வசவை அடக்கிக்கொண்டார்.

“செம்பகம் எங்கே?”

“கடைக்குப் போயிருக்குங்க. புதுசா சோப்பு சீப்பெல்லாம் வாங்கணுமில்லியா?”

அவளைத் திரும்பிப் பார்க்காதபடி சண்முக சுந்தரம் விடுக்கென்று தெருவுக்கு
வந்தார். “ஐயா,” என்று வேலு குரல் கொடுத்த பிறகுதான் அவர் ரிக்ஷாவில் வந்தது ஞாபகத்துக்கு வந்தது. சண்முக சுந்தரம் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டார்.

“ஐயா, வீட்டுக்குத்தானே?”

“ஆமாம்.”

அந்தத் தெருவைத் தாண்டு வதற்குள் சண்முக சுந்தரம், “பாக்கியம் வீட்டுக்குப் போ,” என்றார்.

வேலுவின் நடை தடைபட்டது. “அது எங்கேங்க இருக்கு?”

“உனக்குப் பாக்கியம் வீடு தெரியாது?”

“தெரியாதுங்களே.”

இரண்டு வருஷமாகத்தான் வேலு அவருக்கு வாகனம். பாக்கியத்தின் தொடர்புவிட்டு ஐந்து வருஷங்கள் ஆகின்றன.

“இந்தத் தெருவிலேயே நேரே போய் வலது பக்கம் திரும்பினா அங்கே குட்டிக்
குட்டி வீடா இருக்கும். அங்கே போ.”

ஒரு காலத்தில் பாக்கியம் அவருடைய நாடகக் குழுவின் கதாநாயகியாக இருந்தாள்.  மாதம் இரண்டு முறை நான்குமுறை இருபது இருபது ரூபாய் வாங்கி எப்படி அவளும் அவள் அம்மாவும் காலம் தள்ளுவது? அவள் ஒரு நகைக் கடைக்காரர் வீட்டில் சமையல் செய்துவிட்டு வர ஆரம்பித்தாள். சீரான, கௌரவமான தொழில் அவளைச் சதைபோட வைத்திருந்தது. சண்முக சுந்தரத்தைப் பார்த்ததும்,

மகிழ்ச்சி பொங்க,

 “வாங்க, வாங்க” என்றாள்.

சண்முக சுந்தரம் விஷயத்தை எப்படிச் சொல்வது என்று யோசித்தார்.

“பாக்கியம், இன்னிக்கு நீ நாடகத்திலே நடிக்கிறே.”

பாக்கியம் புன்னகை புரிந்தாள். “இந்த உடம்பை வைச்சுண்டா? காமெடிக்குத்தான் சரி.”

“நீதான் கதாநாயகி.”

“ஹீரோயினியா?”

“ஆமாம்.” அவருக்கு வாழ்க்கையில் பிடிக்காதது இந்த ஹீரோயினி, ஹீரோயினி என்று சொல்வது. ஆனால் நாடகத் துறையில் இருந்தவர்கள் எல்லாருமே அப்படித்தான் சொன்னார்கள்.

“நீங்க சொல்லலாம். ஆனாப் பாக்கறவங்க ஒத்துக்கணுமில்லையா?”

“பாக்கியம், முதல்லே ஒரு நிமிஷம்தான் உடம்பு. அதுக்கப்புறம் நடிப்புதான்
பாக்கறவன் மனசிலே உரைக்கும்.”

“எதுக்கும் வயது இல்லீங்களா?”

“எனக்கு அம்பது வயது. நான்தான் கதாநாயகன்.”

“ஆம்பளைங்க சரீங்க. பொம்பளைங்களை ஏத்துக்கமாட்டாங்க.”

சண்முக சுந்தரம் சடாரென்று அவள் காலில் விழுந்தார். “என் மானத்தைக் காப்பாத்து, பாக்கியம்.”

“ஐயோ, இதென்னங்க? என்ன பாவம் பண்ணினேன்? சும்மாச் சொன்னாப் போதாதா?”

சண்முக சுந்தரம் பேச்சே எழாமல் நின்றார். “சரி, நான் வரேங்க. உங்க நாடகத்தை நான் பாத்தது கூட இல்லை.”

“என்னை மன்னிச்சுக்கோ, பாக்கியம். எவன் எவன் காலிலையோ விழுந்து நாடகத்துக்குக் கூப்பிட்டேன். உன்னைக் கூப்பிடலே.”

“இப்படிப் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க. சரி, பாடம் எங்கேங்க?”

சண்முக சுந்தரம் நாக்கைக் கடித்துக்கொண்டார். வாசலில் எட்டிப்பார்த்து,
“வேலு!” என்று அழைத்தார்.

“என்னங்க?”

“இப்போ நாம போனோமே, அந்த வீட்டுக்குப் போய்ப் பாடத்தை வாங்கிட்டு வாங்க.”

“என்னங்க அது?”

“தாள் தாளாக இருக்கும். ஜாக்கிரதையாக் கொண்டா.”

ஐந்து நிமிஷத்துக்கு அந்த வீட்டில் மௌனம் நிலவியது. பாக்கியத்தின் அம்மா
உள்ளிலிருந்து இருமினாள். இன்னும் அதிக நாட்கள் தாங்காது என்று சண்முக
சுந்தரம் நினைத்துக் கொண்டார்.

வேலு கசங்கிய காகிதக் கொத்தை எடுத்துவந்தார். சண்முக சுந்தரம் பக்கங்கள்
சரிபார்த்து அடுக்கி வைத்துப் பாக்கியத்திடம் கொடுத்தார். “இந்த நாடகம் எப்படியிருக்கும்னுகூட எனக்குத் தெரியாது” என்று பாக்கியம் சொன்னாள்.

“நீ சரியாப் பண்ணிடுவே, பாக்கியம். உன் டயலாக்கை எடுத்துக்கொடுக்க, இந்தப் பக்கம் அந்தப் பக்கம் இரண்டு பையன்களை வைச்சுடறேன். உனக்கு என்னிக்குமே யாரும் சொல்லித் தரத் தேவை இருந்ததில்லை.”

“அதெல்லாம் அஞ்சு பத்து வருஷம் முன்னாலே, எந்த மண்டபங்க? நாலு மணிக்கு வந்தாச் சரியாயிருக்குமா?”

“ராமராயர் ஹால்” நாலு நாலரைக்கு வந்தாக்கூடப் போதும். உனக்குச் சரியா
இப்பவே டிரஸ் எடுத்து வைக்கச் சொல்லிடறேன்.”

“நீங்க கிளம்புங்க. எவ்வளவோ ஜோலியிருக்கும். நான் அரை மணியிலே அந்த
வீட்டுச் சமையலை முடிச்சிட்டுப் பாடத்தைப் படிச்சுக்கறேன்.”

வீட்டில் இறங்கும்போது சண்முக சுந்தரம், “மூணு மணிக்கு அந்த அம்மா
வீட்டுக்குப் போய் அவுங்களை அழைச்சிண்டு வந்துரு.” என்று வேலுவிடம்
சொன்னார்.



 சுவரிலிருந்த முருகன் அவரைப் பார்த்துப் புருவத்தை
உயர்த்தியது போலிருந்தது.