Tuesday, July 24, 2012

பேப்பரில் பேர் - சுஜாதா - சிறுகதை

http://www.instablogsimages.com/images/2007/10/14/14akhtar1_60.jpg 

படிப்பு முடிந்து வேலை கிடைப்பதற்கு முன் கொஞ்ச காலம் சும்மா இருந்தேன். வேலை கிடைப்பதைப் பற்றி அப்போது சந்தேகங்களோ கவலையோ இல்லை. எப்படியாவது யாராவது ஏமாந்து வேலை கொடுத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருந்ததால் இப்போதைய இளைஞர்களைப் போல கோபமும் கம்யூனிசமும் இல்லாமல் ஹாய்யாக ஸ்ரீரங்கத்தில் சில மாதங்கள் இருந்தேன். அம்மா காலையில் காட்டமாகக் காப்பி கொடுப்பாள். குடித்துவிட்டுச் செய்தித்தாளை வரி விடாமல் படிப்பேன். காவேரிக்குப் போய்க் குளிப்பேன். பத்து மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு பிற்பகல் காப்பி வரை அரட்டை அடிக்க ரங்கு கடைக்குப் போய்விடுவேன்.


ரங்கு கடை என்பதைக் கடை என்று சொன்னால் கடைகள் எல்லாம் கோவித்துக்கொண்டு கூட்டம் கூட்டி நோட்டீஸ் விசிறி என்னைத் திட்டும். கீழ வாசலில் ஸப்-போஸ்ட் ஆபீசாக இருந்த இடம். நாலைந்து கைமாறி ஒருத்தருக்கும் செழிக்காமல் ரங்கு கடை போடலாம் என்று குத்தகை எடுத்த இடம். சுமார் ஆறுக்கு ஒன்பது அடி இடம். அதைப் பாதியாய்ச் சாக்கில் மறைத்து, அந்தப் பின் பாதி வருகிற சிநேகிதர்கள் சிலர் சிகரெட் குடிப்பதற்கும், கிடைத்தால் ஜிஞ்சர்பரிஸ் போன்ற கலக்கல்களைச் சப்பிப் பார்ப்பதற்கும் இருட்டான இடம். முன் பாதியில் நாலைந்து பலகைகளால் செய்த நொண்டி ஸ்டாண்டு. அதில் பழைய சிகரெட் டின்களில் ‘பலப்பம்’ என்று சொல்லப்படும் ‘ஸ்லேட்டுக்குச்சி’, நாற்பது பக்கம் அன் ரூல்டு, நன்கு அழிக்கும் ரப்பர், வாய் பூரா லிப்ஸ்டிக் போட்டது மாதிரி பண்ணிவிடும் ‘பப்பரமுட்டு’, கொஞ்சம் உப்புக் கடலை; இவ்வளவுதான் கடை.


இந்த மாதிரிப் பொருள்களை வியாபாரம் செய்து எப்படிப் பிழைக்க முடியும் என்று உங்களுக்கு யோசனை ஏற்படலாம். ரங்குவுக்கு ஒரு வீடு, கொஞ்சம் நிலம், கொஞ்சம் மனைவி எல்லாம் உண்டு. வசதியானவன். தன் மனைவியிடமிருந்து தினத்துக்கு ஒரு எட்டு மணி நேரமாவது தப்பிக்கிற ஆசையால் ரங்கு அந்தக் கடையை ஆரம்பித்திருந்தான். அதில் வேலை இல்லாத இளைஞர்கள் நாங்கள் அத்தனை பேரும் கூடுவோம்.


இன்றும் எப்போதும் போலக் காப்பி சாப்பிட்டுவிட்டு குளித்துவிட்டுப் பளபளவென்று ரங்கு கடைக்குப் போனேன். மேலவீதி அம்பி என்கிற சுந்தர் வந்திருந்தான்.


‘தன்னன்னே’ என்று அழுவது போல முகத்தை வைத்துக்கொண்டு பாடினான். ”ரங்கா! என்னடா ராகம் இது?” என்று கேட்டான்.

”ஆரபியா?”

”தேவகாந்தாரி. பல்லைப் பேத்துருவேன்.”

”வாடா இன்ஜினீயர்!”
என்னைத்தான்.



http://www.cricturf.com/thumbnails/remote/http--despardes.com-wp-content-uploads-2012-03-Match-Fixing-Cartoon.jpg
நான் அவர்களுடன் அதிகம் பேச மாட்டேன். எது சொன்னாலும், என்ன கிண்டல் செய்தாலும் லேசாகச் சிரித்து மழுப்புவேன். அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பதில் எனக்கு இஷ்டம்.
”என்ன, வேலை கிடைச்சுதா?”
”இல்லை அம்பி.”
”அடுத்த வாரம் ஊர்ல இருக்கியோல்லியோ?”
”ஏன்?”
”தஞ்சாவூர் டீமோட கிரிக்கெட் மாட்ச், ஐஸ்கூல் மைதானத்தில். உன்னை லெவன்ல போட்டிருக்கேன். காலேஜுக்கு ஆடிருக்கேன்னு சொன்னியே?”
சொல்லியிருந்தேன். ஆனால், ரிஸர்வாக இருந்ததைச் சொல்லவில்லை.
”தஞ்சாவூர் டீமா?”
”ஆமா பெரிய டீம். கேவி ஏற்பாடு பண்ணியிருக்கான்!”
”மொத்தம் நம்மகிட்ட பதினோரு பேர் இருக்காளா?”
”தேத்திரலாம். ஸ்கூல் பசங்களை ஒண்ணு ரெண்டு பேர் சேத்துக்கலாம்.”
”என்னிக்கு மாட்ச்?”
”வர ஞாத்திக்கிழமை. நீ நன்னா ஆடுவியோல்லியோ? உன்னைத்தான் நம்பியிருக்கேன்.”
”சுமாரா ஆடுவேன்” என்று ஜகா வாங்கினேன்.
”பாட்ஸ்மனா, பௌலரா?”
”ரெண்டும் சுமாரா.”
”உங்ககிட்ட பாட், பந்து ஏதாவது இருக்கா?” பாட் என்றால் Bat.
”ஸாரி, இல்லையே!”
”பந்து வெச்சிருக்கறவனா பாத்து ஒருத்தனை டீம்ல சேர்த்துக்கணும். நம்ம வரதன் வரேன்னான். மண்ணச்சநல்லூர் போயிருக்கான். இன்னிக்கு பிராக்டிஸ் ஆரம்பிச்சாகணும். வரப்போறது அயனான டீம்.”

”கேவி ஒருத்தன் போதுமே.”
”இல்லையே. இந்தப் பக்கம் ஸ்டாண்டு குடுக்கணுமே அவனுக்கு.”

சொல்லப்பட்ட கேவி நிஜமாகவே ரொம்ப சாமர்த்தியமான கிரிக்கெட் ஆட்டக்காரன். கச்சலாகத்தான் இருப்பான். அவனுக்கு ஏறக்குறைய எல்லா ஆட்டமும் ஒழுங்காக வரும். கிரிக்கெட்டில் அவன் பாட்டிங் பார்க்க அப்படி ஒன்றும் அழகாக இருக்காது. இருந்தாலும் எப்படியாவது பந்தைத் தேக்கி அடித்துவிடுவான். பௌலிங் ஒரு மாதிரி ‘த்ரோ’ மாதிரிப் போடுவான். எப்படியாவது சாலக்காக விக்கெட் எடுத்துவிடுவான். அவன்தான் டீமுக்கு முதுகெலும்பு. மற்ற பேர் எல்லாம் எப்போதோ துணிப் பந்திலும் ரப்பர் பந்திலும் வீதி கிரிக்கெட் விளையாடியவர்கள்.

அப்போது கேவி வந்தான். கையில் ஒரு பழைய பாட் வைத்திருந்தான். அதில் பலவிதமான பாண்டேஜுகள் போட்டிருந்தன. ”சத்தியத்துக்கு இதுதான் கிடைச்சுது. பந்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.”

”கேவி… மாட்ச் நிஜ மாட்சா?”

”ஆமாடா! அம்பி சொல்லலை?”
நிஜ மாட்ச் என்றால் ரப்பர் அல்லது துணிப் பந்தில்லாமல், நிஜமாகவே கிரிக்கெட் பந்தில் மாட் விரித்து இரண்டு பக்கமும் ஸ்டம்ப் வைத்து அம்பயர்கள் சகிதமாகப் பாதுகாப்புக்கு கிளவுஸ் எல்லாம் போட்டுக்கொண்டு ஆடுவது. அந்த மாதிரி மாட்சுகள் எல்லாம் சமீபத்தில் எங்களிடையே வழக்கொழிந்து போயிருந்தன. ஏதோ பால்காரர் இல்லாதபோது தெருவில் சுவரில் கரிக்கோடிட்டு ரப்பர் பந்து தொலையும் வரை ஆடுவோம்.

கேவி ஒரு திசையில் பார்த்துக்கொண்டு ”ரெண்டு நாளாவது பிராக்டீஸ் பண்ணுவியோல்யோ? வரப் போறது பெரிய டீம்.”

”உனக்கேண்டா இந்த வம்பெல்லாம்? கேவி, பெரிய டீம்னா எங்கயாவது எக்கச்சக்கமா பந்து போட்டு மர்மஸ்தானத்துல பட்டுரப் போறது” என்றான் ரங்கு.
”அதெல்லாம் நான் பாத்துக்கறேன். என்னைப் பார்த்து நீ வரயோல்லியோ?” என்றான்.
”நெட் பிராக்டீஸ் போட்டு நல்லா விளையாடறவங்களை செலக்ட் பண்ணேன் கேவி.”




http://photogallery.sandesh.com/cms/uploadimages/Celebrity-cricket-match/02052010_201523750.jpg

”செலக்ட்டாவது ஒண்ணாவது. பதினோரு பேருக்கே இங்க சிங்கியடிக்கிறது..! நீ எதுக்கும் நாளைக்கு சாயங்காலம் ஹைஸ்கூல் மைதானத்துக்கு வந்துரு. புறப்பாடு ஆயிருக்கும். பெருமாள் சேவிக்கப் போகணும்” என்று விரைந்தான்.

கேவி கோவிலில் சில்லரை கைங்கர்யங்கள் எல்லாம் செய்வான். கூட்டத்தை விலக்க மாந்தோல் அடிப்பான். தேரின்போது பின்னால் கட்டை போட்டு நெம்புவான். டமாரம் அடிப்பான். முட்டுக்கட்டை போடுவான். வையாளியின்போது முன் வரிசையில் ஸ்ரீபாதந் தாங்கியாக இருப்பான்.

எனக்கு அப்போதே தஞ்சாவூர்க்காரர்களுடன் கிரிக்கெட் மாட்சைப் பற்றிக் கவலையாக இருந்தது. இதுவரை நான் ஆடின கிரிக்கெட் எல்லாம் ஓரங்கட்டின கிரிக்கெட்தான். அதாவது பன்னிரண்டாவது ஆசாமி, அல்லது ஸ்கோரர் என்று. ஒரு தடவை அம்பயர் ஆக இருந்தபோது எங்கள் காலேஜ் கட்சி அதட்டிக் கேட்டார்களே என்று எல்பிடபிள்யூவுக்குக் கைதூக்கிவிட்டேன்.

அந்த பாட்ஸ்மன் ‘நீ வெளிய வருவில்ல’ என்று பேனாக் கத்தியைக் காட்டி, முறைத்துவிட்டுப் போனான். ஆட்டம் முடிந்ததும் என்னை நாலு பேர் கக்கூஸ் கதவு வழியாக அடைகாத்துக் கடத்திக்கொண்டுபோக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இப்போது மறுபடி என் கிரிக்கெட் திறமைக்கு பரீட்சை! பார்க்கலாம். கேவி எல்லாம் பார்த்துக்கொள்வான். எனக்கு சந்தர்ப்பம் வருவதற்குள் ‘டிக்ளேர்’ செய்துவிடலாம். ஃபீல்டிங்கின்போது எங்கேயாவது டீப் தர்ட் மேனாக நின்றால் போயிற்று. தப்பித்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டேன்.


மறுநாள் அவசரமாகத் தயாரிக்கப்பட்ட ‘ஸ்ரீரங்கம் கிரிக்கெட் கிளப்’பின் முதல் வெள்ளோட்டம் பள்ளி மைதானத்தில் துவங்கியது.  கால் பாதுகாப்புக்காக இரண்டு பேடும் (Pad ) கட்டைவிரல் பகுதியில் ஓட்டையாக இருந்த ஒரு ஜோடி கிளவ்சும் விக்கெட் கீப்பருக்காக அதே ஏழ்மையுடன் பாதுகாப்புச் சாதனங்களும் திரட்டிவிட்டான். ஸ்டம்புகள் சிதைந்திருந்தன. சிங்க வாத்தியார் அன்றைக்கு மட்டும் ஸ்கூல் ஸ்டம்பு கொடுக்கிறதாகச் சொல்லியிருக்கிறாராம். என்னைப் பந்து போடச் சொல்லி கேவியே பாட்டிங் பயிற்சி செய்தான். எகிறி எகிறி அடித்து முள்ளுச் செடிகளில் எல்லாம் போய்ப் பந்து பொறுக்கச் சொன்னான். இருட்டினதும் எனக்கு பாட்டிங் கொடுத்தான். இரண்டே பந்தில் என் ஸ்டம்பைப் பெயர்த்துவிட்டான். ”கேவி நான் வரலைடா!” என்றேன்.


”பரவாயில்லை, தைரியமா ஆடு, சுமாரா ஆடறியே!”

அம்பிதான் கேப்டன். அவன் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். சின்னச் சின்ன பையன்களாக நான்கு பேர் உற்சாகமாகப் பந்து பொறுக்கிக்கொண்டிருந்தார்கள். ”பாக்கி ப்ளேயர்ஸ் எல்லாம் வரலையா?” என்று கேட்டதற்கு கேவி, ”இவங்கதான் ப்ளேயர்ஸ்! இவன் பாட் கொண்டு வரான். இவனைச் சேர்த்துண்டுதான் ஆகணும்” என்று ஒரு குழந்தையைக் காட்டினான்.

”நிச்சயம் தோத்துப் போயிருவோம்” என்றேன்.

”நீ ஏன் கவலைப்படறே? தோத்தா ஸ்கோர் ஏத்தறதுக்கு வேம்பு வரான். ஒரு பக்கம் எல்பிடபிள்யூ கொடுக்கறதுக்கு அம்பயர் நம்பாளு. இதெல்லாம் தேவைப்பட்டாத்தானே?”

தஞ்சாவூர் டீம் ஞாயிற்றுக்கிழமை ஜங்ஷனில் ரயில் மாறி பாசஞ்சர் பிடித்து வந்தார்கள். அம்பியும் கேவியும் நானும்தான் ஸ்டேஷனுக்கு அவர்களை வரவேற்கப் போயிருந்தோம். டீம் வந்து இறங்கினபோது எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ஒவ்வொருத்தரும் மாமா மாமாவாக, தடித்தடியாக இறங்கினார்கள். சிலர் கூடவே மனைவி மக்களையும் அழைத்து வந்திருந்தார்கள். எல்லோரும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். ”பெரியவங்க யாரும் வரலையா தம்பி?” என்று கேட்டார் இருக்கிறதிலேயே உயரமாக இருந்த ஒருத்தர்.

”நாங்கதான் வந்திருக்கோம்.”

”உங்க டீம் கேப்டன் வரலையா?”

”இதோ இவன்தான் கேப்டன்” என்று அம்பியை முன்னே தள்ளினான்.

”இந்தப் பையனா?” என்று அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விஷமமாகச் சிரித்துக்கொண்டார்கள். ”தம்பி! நாங்க விளையாட வந்தது ஸ்ரீரங்கம் பி டீமோட இல்லை” என்றார்.

”ஏபி ஒண்ணும் கிடையாதுங்க. இருக்கறது ஒரே டீம்தான்” என்றான் கேவி.

”கிரிக்கெட் பால்தானே, கவர் பால் இல்லையே?” என்றார் சிரிப்புடன்.

”கிரிக்கெட் பால்தான்.”

”இல்லை, ரொம்ப சின்னவங்களா இருக்கிங்களே. பெரியவங்கள்லாம் கிரவுண்டில இருக்காங்களா?”

”இல்லைங்க. இருக்கறதுக்குள்ள பெரியவங்க நாங்கதான்.”
”அப்ப ராம்கி வா போயிரலாம். டீம் ரொம்ப தேசல். இவங்களோட எப்படி ஆடுறது?”
”பரவால்லை, ஆடிப்பாருங்க” என்றான் கேவி.

”எப்படி தம்பி ஆடறது? இதபார், ராம்கியைப் பாத்தல்ல, தென் மண்டலத்திலேயே ஃபாஸ்ட் பௌலர். மண்டை கிண்டை எகிறிக்கிச்சுன்னா யார் பொறுப்பு? எங்களை போலீஸ் புடிச்சுக்கும்! குழந்தைகளோட வெளையாட நாங்க வரலை. அதபாரு ஜான். எங்க விக்கெட் கீப்பர், உங்க மூணு பேத்தையும் இடுப்பில தூக்கி வெச்சுப்பார். சேச்சே, உங்ககூட நாங்க விளையாட முடியாதுப்பா. என்னவோ ஸ்ரீரங்கம்னா பெரிய டீம்னு அந்த சாமிநாதன் சொன்னாரு. அதனாலதான் பிக்னிக் போற மாதிரி கிளம்பி வந்தோம். ராம்கி, வா பேசாம கோயில் பார்த்துட்டு திரும்பிப் போயிரலாம். ரொம்பப் பொட்டி டீம் இது.”


நான் விக்கெட் கீப்பரைப் பார்த்தேன். ஆங்கிலோ இந்தியர். தன் மனைவி, சிவப்பு சிவப்பாக இரண்டு பெண் குழந்தைகளுடன் வந்திருந்தார். ஸ்டைலாக உதட்டில் சிகரெட் பொருத்தியிருந்தார். என்னைப் பச்சைக் கண்களால் பார்த்து சிரித்தார். ”வாட் ஆர் யூ? பாட்ஸ்மன் பௌலர்?” என்று நக்கலாகக் கேட்டார்.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoqvL8V4qlGrqdROfZEaoa3cNOYQXh8QAn7S7Wu6JGRYI9p7XsO9ZEmvaMNn-w7QQlaxt40ZeifqjvFKnVuFHQjdgo_QZ5TOLZ92xbIphSmcfkRLLtiFV72wBW_n2OwRA5OWSayXKRj_2O/s400/valaimanai6.jpg

கேவி ”அப்ப வரமாட்டிங்க?” என்றான்.
”சேச்சே, நான்தான் சொன்னேனே.”
”பயப்படறிங்களா?”
ராம்கி சிரித்தார்.
”பயந்தாங்குள்ளி! ஆட்டம் தெரியாம என்னவோ காரணம் சொல்லித் தப்பிச்சுக்கப் பாக்கறீங்களா? பயந்தாங்குள்ளி! பயந்தாங்குள்ளி!” என்று இரைந்தான்.
”என்னடா சொன்னே?”
”நாங்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டோம். இப்ப போய் ஆடமாட்டேன்னு சொன்னா பயந்தாங்குள்ளின்னுதான் சொல்வோம்.”
அவர்கள் சிரித்துக்கொண்டே ”என்ன ராம்கி? சின்னப் பயங்களோட ஆடணுமா?”
”வந்தது வந்தோம், பாத்துரலாமே.”
”நீ ஃபுல் ஸ்பீட் போடாதே. பசங்க மேல எக்கச்சக்கமா பட்டுதுன்னா பிராணனை விட்டுருவாங்க.”
”அதெப்படி? பௌலிங்னா ‘பேஸ்’ போடத்தான் போடுவேன்.”
”கமான் பாய்ஸ், லெட்ஸ் ஹேவ் ஃபன்” என்று அவர்கள் கடைசியில் இசைந்தார்கள்.


எல்லோரும் பெரியவர்கள். துல்லியமாக வெள்ளைச் சட்டை, பேன்ட் எல்லாம் அணிந்திருந்தார்கள். அவர்கள் கொண்டுவந்த எல்லாம் புத்தம் புதுசாக இருந்தன. பாட்டில் விஜய் ஹஸாரேயின் கையெழுத்து பொறித்திருந்தது. புதுசாகப் பந்து பளபளவென்று செங்கல் சிவப்பில் மூன்று வைத்திருந்தார்கள். பிராக்டீஸ் பந்து வேறு ஆறு வைத்திருந்தார்கள்.

கிட் நிறைய கிளவ்ஸ், பேடுகள் என்று பயங்கரமாக நிரம்பி வழிந்தது. நாங்கள் இதுவரை பார்த்தே இராத அப்டாமன் கார்டு வைத்திருந்தார்கள். மைதானத்தில் அவர்கள் பளபளவென்று வந்து சேர்ந்தபோது வரதன் ”சைடு கட்டாதுடா, நான் போறேன்” என்றான். கேவி அவனைச் சமாதானப்படுத்தி உட்கார வைத்தான். எனக்கு நெர்வஸாகத்தான் இருந்தது. வயிற்றை என்னவோ சங்கடம் பண்ணியது.


அவர்கள் சிரித்துக்கொண்டே மைதானத்தைச் சுற்றி வந்தார்கள். சின்னப் பையன்கள் மாட்ச் பார்க்க நூறு பேர் கூட்டம். கேவி சேர்த்திருந்தான். எல்லோரும் அந்த விக்கெட் கீப்பர் மாமா சிகரெட் பிடிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ராம்கி என்பவர் ஆறைரை அடி உயரம் இருந்தார். அங்கேயிருந்து ஓடிவந்து மாதிரிக்கு ஒரு பந்து போட்டுக் காட்டினார். திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் போல தூள் பறந்தது. எனக்கு இப்போது வயிற்றில் பட்டுப் பூச்சிகள் விளையாடின.


அம்பிதான் டாஸ் போடப் போனான். தோற்றுவிட்டான்.



http://3konam.files.wordpress.com/2011/03/cricketcartoon.jpg

அவர்கள் ”மாட்சை சீக்கிரம் முடிக்கணும். நீங்களே பாட் பண்ணுங்க முதல்ல” என்று எங்களிடம் கொடுத்துவிட்டார்கள்.
பதினோரு மாமாக்களும் உற்சாகமாகப் பழைய பந்தைப் பிடித்துக்கொண்டு மைதானத்தில் இறங்கினார்கள். புதிய பந்தைச் சின்னக் குழந்தை போலப் போற்றித் தேய்த்துக் கன்னத்தைச் சிவக்க வைத்துக்கொண்டிருந்தார்கள்.


கேவிதான் ஓப்பனிங். அவனுடன் செல்ல எல்லோரும் மறுத்தோம். கேவி கொஞ்ச நேரம் யோசித்து என்னைப் பார்த்தான். ”நீதான்டா வரணும்” என்றான்.
”அய்யோ, நான் மாட்டேம்பா. நான் எய்ட் டவுன் வரேன்!”
”சேச்சே, அனுபவம் உள்ள ஆள் யாரும் இல்லை. நீ வந்துதான் ஆகணும். என்ன விளையாடறே?”
”டீம்னு வந்தாச்சுன்னா கேப்டன் சொல்றதைக் கேட்கணும்” என்றான் அம்பி.
”அடப்பாவி, காவு வாங்கறீங்களேடா” என்று ஒற்றைப் பேடைக் கட்டிக்கொண்டு ”கொஞ்சம் இரு. நம்பர் டூ போய்ட்டு வந்துடறேன்” என்று ஓடினேன்.
அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற மாட்ச் துவங்கியது. கேவிதான் முதலில் பாட் செய்தான். நான் ரன்னர். அந்த ராம்கி அதிக தூரத்தில் புள்ளியாக நின்றுகொண்டிருக்க விக்கெட் கீப்பர் இருபது கெஜம் தள்ளி ஏறக்குறைய கேர்ள்ஸ் ஹைஸ்கூல்கிட்ட நின்றுகொண்டு ‘டேக் இட் ஈஸி ராம்கி’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

முதல் பந்து சரியாக பிட்சில் விழாமல் எங்கேயோ போக விக்கெட் கீப்பர் அதைப் பிடிப்பதற்குள் கேவி ”ஓடுரா” என்று ஒரு ‘பை’ எடுத்து என் பக்கம் ஓடி வந்து என்னைப் பந்தை எதிர்க்க அனுப்பிவிட்டான்.

‘கார்டு’ வாங்கிக்கொள்வதற்கு எல்லாம் எனக்குத் தோன்றவில்லை. உடல் பூரா எலக்ட்ரிக் ஹாமர் மாதிரி நடுங்கிக்கொண்டிருக்க, மறுபடி பாத்ரூம் போகும் இச்சையுடன் ஸ்ரீரங்கப் பெருமாளைப் பற்றிச் சில சுலோகங்களும் கலந்திருந்தன. அதோ… தூரப் பிரயாணி போல் அந்த ராம்கி என்கிறவர் தடதடவென்று சூட்டில் இருக்கும் காட்டெருமை போல் ஓடி வருகிறார். கை, ர் ர் ரென்று சுழல ஒரு கரு ரத்தக் கட்டிபோல் பந்து என்னை நோக்கி வந்து டமால் என்று என் காலில் படுகிறது. ‘ஹெளஸாட்!’ என்று மைதானம் முழுவதுமே அலறுகிறது! ஆனால் எங்கள் கட்சி அம்பயர் பையாக் குட்டி ஞானம் பெற்ற புத்தர்போல் அசங்கவில்லையே! ராம்கி அவனை அற்பப் புழுபோலப் பார்த்தார்.


அடுத்த பந்து பற்றி என்னால் ஏதும் எழுத முடியவில்லை. கம்பராமாயணத்தில் வில் உடைத்ததுபோல வந்தது. என் பாட்டில் எங்கோ பட்டு பவுண்டரிக்குப் பிய்த்துக்கொண்டு ஓடியது. எல்லோரும் சிரித்துக்கொண்டே என்னைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டாலும் எனக்கு நான்கு ரன்கள் கிடைத்ததற்குச் சின்னப் பயல்கள் விசிலடித்துக் கைதட்டினார்கள். எனக்குக் கொஞ்சம் புளகாங்கிதமும் பயத்துடன் சேர்ந்துகொண்டது. அடுத்த பந்து மற்றொரு ‘ஹெளஸாட்!’ கேட்டு முடிப்பதற்குள் கேவி ஓடுரா ஓடுரா என்று ‘லெக் பை’க்கு ஓடிவந்துவிட்டான்.


மொத்தம் ஆறு ரன் ஆகிவிட அந்த ராம்கி சற்றுக் கோபத்துடன் டீப் ஃபைன் லெக்கில் ஒரு ஆளை நிறுத்தி இன்னும் கொஞ்சம் அடியெடுத்து இன்னும் கொஞ்சம் தூரம் போய் ஓ…டி வந்து கேவியின் தலைக்குமேல் பெரிசாக பம்பர் போட்டார்.

கேவி அஞ்சா நெஞ்சன்! என்னவோ மாதிரி பாட்டை வைத்துக்கொண்டு ஒரு வீசு வீச பந்து பட்டு ஏறக்குறைய இரண்டு தென்னைமர உயரத்துக்கு எவ்வியது. ராம்கி நிறுத்தி வைத்திருந்த ஃபீல்டருக்கு, அருமையாக அழகாக ஒரு காட்ச் வந்தது. அவருக்கு நிதானமாக பந்தின் கீழ் அட்ஜஸ்ட் பண்ணி நின்றுகொள்ள ஏக சமயம் இருந்தது. சிரித்துக்கொண்டு கையைத் தேய்த்துக்கொண்டு கீழே வரும் பந்தை வாங்கி வழியவிட்டார்! சற்று அசட்டு முகத்துடன் ”ஸாரி கேப்டன். தி ஸன் வாஸ் ஆன் மை ஐஸ்!” என்றார். இதற்குள் கேவி கவலைப் படாமல் என்னுடன் ஓடி இரண்டு ரன் எடுத்துவிட்டான்.


கேப்டன் ராம்கி, ”பரவாயில்லை. அடுத்த பால்ல எடுத்துரலாம்” என்று திரும்பி தன் பௌலிங் ஆரம்பத்துக்குப் போனார்.
அடுத்த பாலும் கேவியை எடுக்க முடியவில்லை. அதற்கு அடுத்த பாலும் முடியவில்லை. நானும் கேவியும் முதல் விக்கெட்டுக்கு ஐம்பத்து ஐந்து ரன்கள் செய்தோம். அதில் நாற்பத்தெட்டு கேவி. முதலில் அடித்த நான்குக்கு அப்புறம் என்னை ஆடவே விடவில்லை. ஆறாவது பந்து, டாண் என்று ஒரு ரன் எப்படியாவது எடுத்து விடுவான். ‘ஓடுரா ஒடு!’ எங்கள் முதல் விக்கெட் ஜோடியைப் பெயர்க்க ராம்கி ஆங்கிலோ இந்தியரிடமும் மற்ற ஸீனியர் மெம்பர்களிடமும் அடிக்கடி கூடிப் பேச வேண்டியதாகிவிட்டது.


கடைசியில் என்னைக்கூட ரன் அவுட்தான் செய்ய முடிந்தது. கேவி பேராசையுடன் எடுக்க முயற்சித்த மூன்றாவது ரன்னுக்கு விழுந்தேன். நான் திரும்பி வந்தபோது என்னவோ செஞ்சுரி போட்ட மாதிரி எல்லோரும் கை தட்டினார்கள். கேவி என்னை மாதிரியே மற்ற பேரையும் நாக்கு உலர ஓடவைத்தே, மொத்தம் 152 ரன் எடுத்துவிட்டோம். கேவி அதில் 93, கேவி சைபரில் இருக்கும்போது அந்த லட்டு மாதிரி காட்சை விட்ட அந்த ஆசாமிகளை எல்லோரும் சபித்துக்கொண்டே வந்தார்கள். அவன் தாழ்த்தப்பட்டவன்போல மூலையில் அடிக்கடி தலையை ஆட்டிக்கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான்.

அந்த மாட்சில் நாங்கள் வென்றது செய்தியல்ல. இதிலும் கேவியின் தந்திரம்தான் அவர்களை 139இல் அவுட் ஆக வைத்துவிட்டது.

தஞ்சாவூர்க்காரர்கள் திரும்பிப்போகும்போது ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. மறு மாட்சுக்கு தஞ்சாவூர் கூப்பிட்டார்கள். எங்கள் ஸ்டார் ப்ளேயர் வரவில்லை என்றார்கள். கேவி புன்னகையுடன் ”ஊம். தாராளமாக வரோம்” என்றான். ”தோத்தாங்குள்ளி தோல் புடுங்கி” என்று நடனமாடிய சிறுவர்களைக் கட்டுப்படுத்தினான்.

சும்மா பொழுது போகவில்லை என்று அன்று அங்கு வந்திருந்த ‘எக்ஸ்பிரஸ்’ ஏஜண்டும் நிருபரும் மறுநாள் எங்கள் வெற்றியைப் பற்றிச் செய்தி அனுப்பி K.V.Srini vasan was ably supported by Rangarajan, varadan and Ambi sundar….made a Sparkling 93′ என்று ஒரு மஹா ஓரத்தில் பேப்பரில் பேர் வந்தது. இப்போது எல்லா பேப்பரிலும் எத்தனையோ முறை என் பேர் வருகிறது. ஆனால் அந்த ஒரு தினம் ஒரு மூலையில் ஒரு வரியில் கிடைத்த துல்லியமான சந்தோஷம் எனக்குத் திரும்பக் கிடைக்கவில்லை.


அந்த மறு மாட்ச் நடக்கவில்லை. எல்லோரும் அதன் பின் சிதறிவிட்டோம். சிலர் மணந்துகொண்டோம். சிலர் இறந்துவிட்டோம். இருபத்தைந்து வருஷம் கழித்து சமீபத்தில் ஸ்ரீரங்கம் போயிருந்தபோது கேவியைப் பார்த்தேன். என்னதான் நரைத்த தலையாக இருந்தாலும் கண்களில் பிரகாசம் போகவில்லை. ‘என்ன, இன்னொரு மாட்ச் ஏற்பாடு பண்ணட்டுமா?’ என்றான்.





http://www.writermugil.com/wp-content/uploads/2010/02/doni-krish.jpg

வேணாம் மச்சான் வேணாம்... இந்தப் பொண்ணுங்க காதலு(ஓகேஓகே) வேல் முருகன் பேட்டி’

வேணாம் மச்சான் வேணாம்... இந்தப் பொண்ணுங்க காதலு(ஓகேஓகே)’ பாடலுக்கு ஆடாத குழந்தை ஒன்று உண்டா? ‘ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் (கழுகு)’, ‘போட்டது பத்தலை மாப்பிள்ளை (சகுனி)’ பாடல்களுக்கு ஆடாத இளைஞர்கள் உண்டா? வேல்முருகன் பாடிய சமீபத்திய மூன்று பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். குக்கிராமத்திலிருந்து கிளம்பி வந்து தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பவரின் முத்து முத்தான அனுபவங்கள்:

விருத்தாசலத்துக்குப் பக்கமுள்ள முதனை கிராமத்தைச் சேர்ந்தவன் நான். 10-ம் வகுப்பு வரை உள்ளூரில் படித்துவிட்டு, கோயம்புத்தூரில் .டி.. சேர்ந்தேன். பள்ளி, கல்லூரிகளில் நான் பாடும் மண் சார்ந்த பாடல்களுக்கு எப்போதும் வரவேற்பும் மரியாதையும் இருக்கும். இந்த ஊக்கத்தால், இசையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்து அடையாறு இசைக் கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரிப் படிப்பை முடித்து எல்லா இசையமைப்பாளர்களிடமும் சென்று வாய்ப்பு கேட்டேன். தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தேன்.


விஜய் டி.வி.யில், யார் மனசுல யாருநிகழ்ச்சிக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு ஒரு கிராமியப் பாடலைப் பாடினேன். என் குரலைக் கேட்ட ஜேம்ஸ் வசந்தன், ‘சுப்ரமணிய புரம்படத்துக்காகமதுரை குலுங்கக் குலுங்கபாடலைப் பாட வாய்ப்புத் தந்தார். அந்தப் படமும் பாட்டும் ஹிட்டானாலும்கூட, பிறகு எனக்குப் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. திருமணம் வேறு ஆகிவிட்டது.


இயக்குனர் சசிகுமாரைச் சந்தித்தேன். ‘இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். பட வாய்ப்பும் மேடை நிகழ்ச்சி வாய்ப்பும் சரியாகக் கிடைப்பதில்லைஎன்று வேண்டுகோள் வைத்தேன். ‘நாடோடிகள்படத்தில் வருகிறஆடுங்கடா மச்சான் ஆடுங்கடாபாடலை வேறொரு பாடகர் பாடி முடித்துவிட்டார். ஆனாலும், எனக்காக சமுத்திரக்கனியுடன் பேசி, வாய்ப்பு வாங்கித் தந்தார் சசிகுமார். அவர் செய்த பேருதவியால், அந்தப் பாடல் ஹிட்டாகி, எனக்கு வாய்ப்புகள் பெருக ஆரம்பித்தன.



‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்படத்தில் நான் பாடிய பாடலைக் கேட்ட ஆடுகளம் தயாரிப்பாளர், ‘ஒத்த சோல்லால...’ பாடலுக்கு என்னைப் பரிந்துரைத்தார். அந்தப் பாட்டில் வருகிற பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழைபேஞ்சிஎன்கிற வரியை ஹைபிட்சில் மற்றவர்களால் பாடமுடியவில்லை.



 ஜி.வி. பிரகாஷ் இந்த வரியை முதலில் பாடச் சொல்லி டெஸ்ட் செய்தார். என் குரல் எகிறிப் போய் பாடிய விதத்தைக் கண்டு, ‘நீங்கதான் இந்தப் பாட்டைப் பாடறீங்கஎன்று சொல்லிவிட்டார். ‘விஷுவலுக்கு ஏத்த வாய்ஸ். பாடலை அருமையாய் படமாக்க முடியும்னு தோணுதுஎன்றார் வெற்றிமாறன். சிறந்த நடனத்துக்கான தேசிய விருதை அப்பாடல் பெற்றது.


ஓகே ஓகேபடத்தில்வேணாம் மச்சான் பாடலைவேறொரு வரை வைத்துப் பாட வைத்தும் ஹாரிஸ் ஜெயராஜுக்குத் திருப்தி வரவில்லை. அந்தப் படத்தின் வேறொரு பாடலுக்காக அழைத்தவர், பிறகு, இந்தப் பாடலைப் பாடவைத்தார். ஹைபிட்சில் நான் பாடியதைக் கேட்டுப் பெரிதாக மகிழ்ச்சியடைந்தார். ‘உங்க ஹைபிட்சுல ஸ்டூடியோவுல இருக்குற எல்லா இசைக் கருவிகளும் அதிருதுஎன்று பாராட்டி உற்சாகப் படுத்தினார். இப்போ, இந்தப் பாட்டை ரசிக்காதவர்களே தமிழ்நாட்டில் இல்லை.
இளையராஜா இசையில் நாலைந்து படத்தில் பாடினதையெல்லாம் மறக்கவே முடியாது. ‘என் குழந்தைங்க உங்க பாடல்களின் ரசிகர்கள்னு விக்ரம் ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறார். ரஹ்மானிடம் அறிமுகப்படுத்துறேன் என்று சுஹாசினி சொல்லியிருக்காங்க.
சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ரக்ஷனா என்று பெயர் சூட்டியிருக்கிறேன். 500 ரூபாய் பணத்தோடு சென்னைக்கு வந்தவன், இப்போது, ஒரு சாண்ட்ரோ காரும் .சி.ஆர். ரோட்டில் ஒரு ஃபிளாட்டும் வாங்கிக் கடுமையான உழைப்பால் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறேன். கிராமத்திலிருந்து வந்ததால் சில இடங்களில் மரியாதை கிடைக்காது. சார் என்றுகூட கூப்பிடத் தயங்குவார்கள். ஆனாலும், என் பாடல்களால் எனக்கான மரியாதை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது."






நன்றி - கல்கி வார இதழ்  

4  வருடங்க ளுக்கு முன் அவரது பேட்டி





"செக்கச் சிவந்தவளே கண்ணம்மா ‍என்
பக்கம் வந்து பேசினாக்கா என்னம்மா
கண்ஜாடை காட்டுற காலில் கோலம் போடுற
தாவித் தாவி நடக்குற தாவணிய முறுக்குற''

கண்கள் முழுக்க காதலோடு கலாவைப் பார்த்து வேல்முருகன் பாடினால் மெட்டி ஒலி நெஞ்சைத் தழுவும்படி ஆடுகிறது கால்கள். வீட்டுக்குள் மூடுக்கேத்த மாதிரி தெம்மாங்குப் பாட்டு, திரையிசை பாட்டு, கர்னாடக இசை என மாறி மாறி ஒலிக்கிறது. தாளத்திற்குத் தகுந்தபடி ஆட்டம் மாறினாலும், மாறாத அன்போடு ஜொலிக்கிறது காதல்.

சென்னை குட்டி கிராமணித் தெருவில், அந்த ஒண்டுக் குடித்தனத்தில் உலை கொதிக்கும் ஓசைகூட ராகத்தை அடிப்படையாகக் கொண்டே ஒலிக்கிறது. மூடியிருக்கும் தட்டு கலாவைக் காப்பியடித்து 'தையத் தக்கா, தையத் தக்கா'வென ஆடிக்கொண்டிருக்கிறது. எத்தனை பேருக்கு வாய்க்கும்? இந்த "இசைபட வாழ்தல்".


விஜயகாந்த் ஜெயித்த விருத்தாசலம் அருகே முதனை கிராமம் தான் வேல்முருகன் பிறந்தது. "காலைல பனம்பழம் சாப்டுட்டு பள்ளிக்கூடம் போனா, மத்தியானம் மாங்கா அடிக்கிறது, வேப்பங்கொட்டைய வெரல்ல நசுக்கி ரத்தம் வரவக்கிறது, திரும்பி வரும்போது சோறு வாங்குற‌த் தட்டுல மோளம் அடிச்சிக்கிட்டே பாட்டுப் பாடுறதுனு கள்ளங் கபடமில்லாத கிராமத்து வாழ்க்கை அது.

வருஷா வருஷம் எங்கப்பா ஐய்யப்பன் கோயிலுக்கு மாலை போடுவாரு. எனக்கு அம்மா இல்ல. அவருகூடவே எந்த நேரமும் 'சாமியே! அய்யப்பா...'ன்னு பாடிக்கிட்டே திரிவேன். அப்ப நான் எட்டாவது படிச்சினு இருந்தேன். புஷ்பவனம் குப்புசாமி பாட்டு ஊரெல்லாம் பேமஸா இருந்தது. வகுப்புல வாத்தியாரு இல்லாத நேரமாப் பாத்து 'ராசாத்தி உன்ன என்னி ராப்பகலா கண் விழிச்சேன், ராப்பகலா கண் விழிச்சேன் ராணி உன்ன கைப்புடிச்சேன்'னு ராகத்தோட பாடினேன்.

திடீர்னு வாத்யார் வந்துட்டாரு. 'யார்ரா அவம் பாட்டுப் பாடுனது? மரியாதையா எழுந்து நில்லு. இல்லனா தொலச்சிருவேன்'ன்னு மெரட்டி, 'வாடா எச்.எம்.கிட்ட'ன்னு இழுத்தும் போய்ட்டாரு. என்னை வெளியில நிக்க வச்சிட்டு எச்.எம்.மும் அவரும் குசுகுசுன்னு பேசிக்கிட்டாங்க. நான் நடுங்கிக்கிட்டே நிக்கிறேன். எச்.எம். என்ன‌க் கூப்ட்டு 'என்னாடா! ஆளில்லாத நேரம் பாத்து க்ளாஸ்ல பாட்டுப் பாடறியாமே... எங்க, பாடு பாப்போம்'னு கேட்டாரு. நான், 'ராசாத்தி உன்ன என்னி' பாடினேன். அடிக்கப் போறார்னு பாத்தா! எம் முதுகுல தட்டிக் குடுத்துட்டு, 'நம்ம ஸ்கூல் திறப்பு விழாவுக்கு கலெக்டர் வர்ராரு. அப்ப இதப் பாடி அசத்துற. உனக்குத் தான் பர்ஸ்ட் பிரைஸ்'னு சொல்லிட்டாரு. அதே மாதிரி கலெக்டர் முன்னாடி மேடைல பாடி பரிசு வாங்கினேன். அது தான் என்னோட முதல் அங்கீகாரம்'' என்று தன் ஆசிரியர் ராஜேந்திரனைப் பற்றி நெகிழ்ந்து கூறுகிறார் வேல்முருகன்.

"அதுக்கப்புறம் எங்கப் போனாலும் பாட்டுத்தான். விருத்தாசலத்துல சில நன்பர்கள் டீ வாங்கித் தருவாங்க, நாம் பாடுவேன். 'வேல் முருகா! உன் தெறமைக்கு எங்களால டீ தான்டா வாங்கித் தர முடியும். அதனால எப்பாடு பட்டாவது நீ மெட்ராஸ் போய் முறைப்படி சங்கீதம் கத்துக்கடா. நிச்சயம் பெரியாளா வருவே'ன்னு ஊக்கப்படுத்துவாங்க. அதன் பிறகு அடையாறு அரசு இசைக் கல்லூரில சேர்ந்து வாய்ப்பாட்டு கத்துக்க ஆரம்பிச்சேன்.

சைதாப்பேட்டை எம்.சி.ராஜா ஆஸ்டல்தான் நான் தங்கிப் படிச்சது. காலேஜ்ல இருந்து ஹாஸ்டலுக்கு நடந்தே போவேன். ஏன்னா, பஸ் காசு மிச்சம். அதோட ஹாஸ்டல்ல சாதகம், பிராக்டீஸ்னு பண்ண முடியாது. சினிமாப் பாட்டுன்னா பசங்க கேப்பாங்க. அங்க போய் ச..ரி..க..ம..னு சொன்னா அவ்ளோ தான். அதனால இப்டி வழியில நடக்கும் போதே பிராக்டீஸ் பண்ணிக்குவேன். இப்படி நடக்குறதுல இன்னொரு அட்வான்டேஜும் இருக்கு. வழி நெடுக ஒரு போஸ்டர் விடாம படிச்சிக்கிட்டே வருவேன். எங்கயாவது இசை நிகழ்ச்சி நடந்தா, போய் ஆஜராகிடுவேன்.

அப்படித்தான் ஒரு நாள் காமராஜர் அரங்குல ஜானகி அம்மாவோட கச்சேரி. கொறஞ்சது 50 ரூபா டிக்கெட். எங்கிட்ட நையா பைசா இல்ல. எப்படியாவது உள்ள போய்டனும்னு தவிக்கிறேன். அப்பத்தான் கடவுள் மாதிரி அந்த போட்டோகிராபர் உதவி பண்ணாரு. அவர் பேர் சந்ரு. 'அய்யா! அய்யா! இந்த மாதிரி நான் மியூசிக் காலேஜ்ல படிக்கிறேன். ஜானகி அம்மாவ நேர்ல பாக்கனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. நீங்க தான் உதவனும்'னு அவர்கிட்ட கெஞ்சினேன். என்ன உத்துப் பாத்துட்டு, அவரோட கேமிரா பேகை தூக்கி என் தோள்ல மாட்டி, உள்ள கூட்டிட்டுப் போய்டாரு. நிகழ்ச்சி முடிஞ்சு ஜானகியம்மா வர்றப்போ தொபீர்னு போய் கால்ல விழுந்துட்டேன். இதே போல எஸ்.பி.பி, இளையராஜா, எம்.எஸ்.வி'னு எல்லாரையும் நேர்ல பாத்துட்டேன்.


பர்ஸ்ட் இயர் படிக்கும் போது ஒரு நாள் சன் டி.வி. பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சில கலந்துக்க வாய்ப்புக் கெடச்சிது. அந்தப் போட்டியில சிறந்த குரல் வளம் மற்றும் முதல் பரிசு, ஒரு பவுன் தங்கக் காசு ஜெயிச்சேன். 'எவ்ளோ பெரிய சாதனை பண்ணிட்டோம்'னு மனசு பூரா சந்தோஷம். இந்த வெற்றிதான் என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு போச்சு'' என்ற வேல்முருகனை இடை மறித்து உங்கள் காதல் எப்ப ஆரம்பிச்சது? என்றோம்.

"ஒரு சமயம் கார்கில் போர் வீரர்கள் பத்தி கவிதை எழுதி, அதை நம்ம அப்துல் கலாம் சாருக்கு அனுப்பி வச்சேன். 'ரொம்ப நல்லா இருந்தது'ன்னு அவர் பதில் கடிதம் போட்டார். அந்தக் கவிதைகளை காலேஜ் ப்ரேயர்ல பிரின்சிபல் வாசிச்சுக் காட்டினாங்க. எங்க காலேஜ்லயே பரதநாட்டியம் பதிச்சிட்டிருந்த கலா, அப்போ என்னை சந்திச்சு வாழ்த்து தெரிவிச்சாங்க. அது தான் நாங்க முதன் முதலா அறிமுகம் ஆனது. எதிர் பாராத விதமா ஒரு நிகழ்ச்சி முடிஞ்சு நாங்க ரெண்டு பேரும் புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு தனியா வந்துட்டிருந்தோம். அப்போதான் 'என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்கள?'ன்னு கலாவிடம் கேட்டேன்'' என்பவரை கையமர்த்திவிட்டு

"இப்படி திடீர்னு கேட்டது உங்களுக்குக் கோபத்தை உண்டாக்கலையா?" என கலாவிடம் கேட்டால், "இல்லை. ஏன்னா, அவர் எங்கிட்ட 'ஐ லவ் யூ'ன்னு சொல்லாம 'பிடிச்சிருந்தா வீட்ல கேட்டுட்டு பதில் சொல்லு'ன்னார். அதோட இவரைப் பத்தி காலேஜ் முழுக்க நல்ல அபிப்ராயம் இருந்ததும் தெரியும். அதனால, 'யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டேன்'' என்கிறார்.

"அதுக்கப்புறம் ஒரு மாசத்துக்கு மேல ஆயிருச்சி. ஊருக்குப் போறதுக்காக காலேஜ் பஸ் ஸ்டாப்ல கலா நின்னுட்டிருந்தாங்க. வேலூர் பக்கத்துல வாலாஜாப்பேட்டைதான் கலாவோட சொந்த ஊர். சரி வாஙக, நான் வந்து பஸ் ஏத்தி விட்டுட்டு வரேன்னு சொல்லிட்டு, புரசைவாக்கத்துல இருக்கிற சிவன் கோவிலுக்குப் கூட்டிட்டுப் போனேன். அங்க வச்சி தான் என்னைப் பத்தின எல்லாத் தகவல்களையும் கலாவிடம் சொன்னேன். நான், என்னோட வீடு, எனக்கு இப்ப அப்பா, அம்மா யாருமே இல்லை என்பது, மாங்கா திருடி அடி வாங்கினதுன்னு ஆரம்பிச்சி கடைசியா நான் ஒரு 'தலித்' என்பதையும் சொன்னேன்" என்கிற வேல்முருகனிடம்,

"நீங்க ஒரு தலித். அதுவும் ஏழைன்னு வேற சொல்றீங்க. இவங்களோ பணக்கார குடும்பம். ஜாதியிலயும் சௌராஷ்டிரா. கண்டிப்பா ஜாதி பிரச்சினை வரும். அப்படி இருக்கிறப்போ எந்த தைரியத்துல நீங்க காதலைத் தெரிவிச்சீங்க?"

"நீங்க சொல்றது வாஸ்தவம்தான். ஆரம்பத்துல எனக்கு பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப தாழ்வு மனப்பாண்மை இருந்தது. நாம கருப்பா, உயரம் இல்லாம, அழகில்லாம இருக்கோம்னு வருத்தப்பட்டிருக்கேன். ஆனா பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கச்சேரிகள்னு பண்ண ஆரம்பிச்சேன். எம்மேல எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வந்துட்டது. கண்டிப்பா நாம பெரிய ஆளா வருவோம். இவளை ரொம்ப சந்தோஷமா வச்சுக்குவோம்ன்ற தெம்பு வந்தது. அதோட கலா என்ன ஜாதி, எவ்ளோ வசதிங்கறது பத்தி சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது சார்" என்கிறார் வேல்முருகன்.

விட்டதைத் தொடர்கிற கலா, "ஊர் போய் சேர்ந்ததும் இவர் சொன்ன மாதிரியே வேல்முருகனைப் பத்தி எடுத்துச் சொல்லி வீட்ல பர்மிஷன் கேட்டேன். 'உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா படிக்க அனுப்பிச்சா, லவ் பண்றதைப் பத்தி எங்ககிட்டயே சொல்லுவ. நீ படிக்கவே வேணாம்'னு சொல்லி ஹவுஸ் அரஸ்ட் வச்சிட்டாங்க. ரொம்பக் கஷ்டப்பட்டு இவருக்கு தவல் அனுப்பிச்சேன். அதுக்குப் பிறகு..." கலாவை இடைமறித்துவிட்டு வேல்முருகன் சொல்கிறார்...

"கலா வீட்டுக்குப் போன் பண்ணி நானே அவங்க அப்பா, அம்மாகிட்ட பேசினேன். இதப் பாருங்க. நீங்க நெனைக்கிற மாதிரி நாங்க மோசமான ஆளா இருந்தா, இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எங்கயாவது ஓடிப் போயிருப்போம். இப்ப எக்ஸாம் ஆரம்பிக்கப் போறாங்க. நீங்க உங்க பொண்ண காலேஜ் அனுப்பலைன்னா பாதிக்கப்படப்போறது நீங்கதான். கலாவோட மூனு வருஷப் படிப்பு வீணாப் போயிரும். ஏன் எக்ஸாம் எழுதப் போகலைன்னு அக்கம் பக்கத்துல சந்தேகமா பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. அதனால எங்க மேல நம்பிக்கை இருந்தா தயவு செஞ்சு காலேஜ் அனுப்புங்கன்னு கேட்டேன். அவங்களும் அனுப்பிச்சுட்டாங்க. கலா இங்க வந்த பிறகு, 'கண்டிப்பா எங்க வீட்ல இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க எனக்கு வேற மாப்பிள்ளை தேடுறாங்க. அதன்னால நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்'னு கேட்டாங்க. ரொம்ப யோசனைக்குப் பிறகு பரிட்சைக்கு பத்து நாள் முன்னாடி பதிவுத் திருமணம் பண்ணிக்கிட்டோம்".

"அது சரி. எந்தப் பெற்றோர்தான் எடுத்த உடனே காதலுக்குப் பச்சைக் கொடி காட்டுவாங்க. இத்தனை வருஷமா பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை மறந்து இப்படி செய்தது நியாயமா?" கலாவிடம் கேட்டால்,

"அவங்க ஜாதியை மட்டும்தான் பெரிய குற்றமா பாத்தாங்க. அது எனக்கு சுத்தமா பிடிக்கல. வேல்முருகன் மீது வேறு எந்தக் குற்றமும் சொல்ல முடியல. மிஞ்சிப் போனா அவங்க என்ன பண்ணியிருப்பாங்க. அவசர அவசரமா ஒரு பையனைப் பாத்து கல்யாணம் முடிச்சிருப்பாங்க. அவன் நல்லவனா இருப்பாங்கறது என்ன நிச்சயம்? என்னோட பரதநாட்டியத்தை தொடர வாய்ப்பு கிடைச்சிருக்குமா? இல்ல... மேற்கொண்டு மாஸ்டர் டிகிரி தான் படிச்சிருக்க முடியுமா? இப்ப நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம். எத்தனை கோடி செலவழிச்சிருந்தாலும் இது எனக்கு கிடைச்சிருக்காது. இப்பவும் எங்க குடும்பத்து மேல பாசம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக வேல்முருகனையா விட்டுக் கொடுக்க முடியும்?'' என்று நெத்தியடியாகக் கேட்கிறார்.

இன்றுவரை இவர்களை கலாவின் குடும்பம் ஏற்றுக் கொள்ளவில்லை. பதிவுத் திருமணத்திற்கு பிறகு தாலி கட்டாமல் ஒரு வருடம் குடும்பம் நடத்திய இந்த ஜோடி, கடந்த ஆண்டு மே 13ம் தேதி விருத்தாசலத்தில் வைத்து விமரிசையாக கல்யாணம் செய்து கோண்டது. வரவேற்பில் "மனமகன் பாடினார், மனமகள் ஆடினார்'. என்ற தலைப்பிட்டு நாளிதழ்கள் இந்த ஜோடியை அமர்க்களப்படுத்தின. பிறகு நிறைய பத்திரிகைகள் இவர்களை தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ளாமல் செய்தி வெளியிட்டிருக்கின்றன. குங்குமம் ரெண்டு பக்கம், ராணி ஒரு பக்கம் என்று அவர்களாகவே பேட்டி என்று எழுதிக்கொண்டார்களாம்.

தற்போது டி.வி. நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகள் ஆகியவற்றில் கிராமியப் பாடல்கள், கர்னாடக இசைப்பாடல்கள் என்று வேல்முருகன் பொளந்துகட்ட, பரதநாட்டியத்தால் அரங்கத்தைக் கட்டிப் போடுகிறார் கலா. தூர்தர்ஷன் வேல்முருகனது பாடலை பதிவு செய்தபின் அவரது கிராமத்திற்கே போய் அவரது யதார்த்தமான வாழ்வியல் பின்னனியோடு ஒளிபரப்பிய‌து குறிப்பிடத்தக்கது. தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, தேவராட்டம் என்று சகல ஆட்டங்களும் கலாவுக்கு அத்துப்படி. இன்று வேல்முருக்கனுக்கு அப்பாவும் இல்லை அம்மாவும் இல்லை. கலாவுக்கு இருவரும் இருந்தும் யாருமில்லை. ஆனால் ரசிகர்கள் இருக்கிறார்கள். தொடர்புக்கு 98408 31341.





நன்றி - திங்கள் சத்யா

ஷிஃபான் சேலையை கணவன்மார்கள் ஏன் விரும்பறாங்கன்னா.....

adap paavigalaa!!
அம்மான்னா சும்மா இல்லடா..............
1.நடுநிலைமை வகித்தல்னா பஸ்ல,ரயில்ல,தியேட்டர்ல எங்கே போனாலும் சென்ட்டர் சீட்ல உக்காந்துக்குவதா? # CENTRE OF ATTRACTION



-------------------------



2. கைதுக்கு பயந்து டி.ஜி.பி.,யிடம் மனு அளிக்கவில்லை: கருணாநிதி # உடன்பிறப்பே! பயம் வேறு, அச்சம் வேறு,இப்போ அச்சத்தில் நான்



----------------------------


3.விஸ்வரூபம் படத்துல டைரக்‌ஷன் பற்றி சொல்லுங்க .


. கமல் - வடக்கு,தெற்கு, கிழக்கு,மேற்கு என 4 டைரக்‌ஷன்லயும் ஷூட்டிங்க் நடந்திருக்கு


--------------------------------

4. நாத்திகவாதிகள் கூட தங்கள் பெற்றோருக்கான திதிகளுக்கான கடமையை, சடங்குகளை செய்ய வேண்டி தற்காலிக ஆன்மீகவாதி ஆகின்றனர்




------------------------

5. டீக்கடைல போட்ட டீல பாலே கலக்கலைன்னு கரெக்ட்டா கண்டு பிடிச்சா அவருக்கு பால் உணர்வு ஜாஸ்தின்னு சொல்லலாமா?


------------------------




6. குடும்பப்பாங்கான பொறுப்புள்ள பொறுக்கி-ன்னா யாரு? எப்படி? யோசிச்சு சொல்லுங்க பார்ப்போம் 10 நிமிஷம் டைம் ;-) # கே கே ( கேவலமான கேள்வி)




புளியமரங்கள் நிறைந்திருக்கும் சாலை ஓரங்களைத்தாண்டி பயணிக்கையில் புளியங்காய்களை பொறுக்கி வீட்டுக்கு கொண்டு வந்து ரசம் வைத்தால் நீ கு பா பொ


-------------------------


7. நித்தியானந்தா + ஆர்த்திராவ் = பிடிச்ச படம் - எனக்கு 20 உனக்கு 20 = 40


---


8. ஹவுஸ் ஒயிஃப் தான்னு நிறைய லேடீஸ் பெருமையா சொல்லிக்கறாங்க, ஆனா ஹவுஸ் ஹஸ்பெண்ட்னா ஏன் ஆண்கள் பம்மறாங்க?அவங்க மட்டும் லாட்ஜ்லயா தங்கறாங்க?



--------------------------


9. எதிரிங்க மேல வலையை வீசுனா அது ஸ்பைடர்மேன், பொண்ணுங்க வேணும்னு வலையை வீசுனா “காமன்” மேன்


-------------------------------


10. மாப்ளே.. பொண்ணு பார்த்துட்டு வந்தியே.. பொண்ணு எப்படி?


 சினிமா பைத்தியம் - ஒரு டைம் பார்க்கலாம்


----------------------------




11. பெண்கள் வலை வீசி பழக்கம் இல்லை.பூக்கள் எப்போதும் செடியை விட்டு போவதில்லை, வண்டுகள் தான் பூவைத்தேடி போகின்றன்


--------------------------


12. சென்னை சத்யம் திரை அரங்கில் “ தீ " என்ற செய்தியை கேட்டு ரஜினி நடிச்ச தீயா?சுந்தர் சி நடிச்ச தீயா? என கேட்டால் நீயும் ஒரு சராசரித்தமிழனே




----------------------------


13. சரக்குல தண்ணீர் கலக்காம ராவா அடிக்கற குடும்பம் தான் ராவ் ஃபேமிலியா? # சரக்கு சங்கரலிங்கம் எழுப்பும் சந்தேகங்கள்



----------------------------


14. சச்சின், விஸ்வநாதன் ஆனந்த் போன்ற விளையாட்டு வீரர்கள் ப்ளே பாய் கேட்டகிரில வர மாட்டாங்களா?



------------------------------

15. மனைவிக்கு லைட் வெயிட் சேலையான ஷிஃபான் சேலை எடுத்துக்கொடுத்தா அந்த கணவன் தான் சேலையை துவைப்பவனாக இருப்பான்



-------------------------------




16. கணவனுக்குத்தெரியாமல் பணம் சேர்க்கும் மனைவிமார்கள் பணத்தை, பேங்க் பாஸ்புக்கை மறைத்து வைக்கும் இடம் பீரோவில் அதிகம் யூஸ் பண்ணாத சேலைக்குள்



----------------------------------


17. சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுக்க மத்தியஅரசு அறிவுரை # நாங்க வேலை ஏதும் செய்யாம ஆல்ரெடி ரெஸ்ட்ல தான் இருக்கோம் - அரசுஅதிகாரி


--------------------------------



18. ஹோட்டலில் அமலாபால் ரகளை...!  # ரூம் பாய் ஏகப்பட்ட ஆடையுடன் பால் கொண்டு வந்துட்டானா?


------------------------


19. பணி புரியும் பெண்கள்,திருமண விசேஷங்களுக்கு செல்லும் பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் சேலை கொசுவ மடிப்பு எண்ணிக்கை முறையே 4,6,3


----------------------------


20. வெரைட்டி மீல்ஸில் லெமன் சாதம் சாப்பிடுகையில் அதிக தண்ணீர் தாகம் எடுப்பது போல வெரைட்டி கேர்ள்ஸ் தேடும் ஆண்கள் பேங்க் அக்கவுண்ட்டில் பணம் அடிக்கடி எடுக்கப்படும்


------------------------------------


.

Monday, July 23, 2012

சாருநிவேதிதா-வின் சிறுகதை -முள்



இன்றோடு பதினஞ்சு நாளைக்கு மேல் இருக்கும் தொண்டையில் இந்த முள் சிக்கி. மீன்
சாப்பிட்ட போதுதான் சிக்கியிருக்க வேண்டும். இதுக்குத்தான் நான் ருசியா
இருக்கிற மீனாயிருந்தாலும் முள் மீனாக இருந்தால் தொடுவதேயில்லை. சில மீன்களில்
நடுமுள் மட்டும் இருக்கும். கோழிச் சிறகுமாதிரி. சில மீன்களில் சதைக்கு
உள்ளேயெல்லாம் ஒரே முள்ளாயிருக்கும். கார்த்திகை வாளை, முள்ளு வாளை எல்லாம்
இந்த வகையறாதான்.




ஆனால் இந்த இரண்டு ரகத்திலும் சேராத ஒரு மீன்… கோலா மீன். இதுக்கும் நடுமுள்
உண்டு. அதோடு பாதி பாகம் சதையோடு முள் கலந்தும், பாதி வெறும் சதையாகவும்
இருக்கும். இந்தக் கோலா வருஷம் பூரா கிடைத்துக் கொண்டிருக்காது. வைகாசி, ஆனி
மாசங்களில் மட்டும்தான் கோலா.. ஆடி வந்தாலே கோலா குறைய ஆரம்பித்து விடும்.
இதுக்குக்கூட ஒரு சொல் வழக்கு… ‘ஆடி மாசம் வந்தா கோலா ஆத்தா வூட்டுக்குப்
போய்டும்.’





கோலா மீன் பிடிப்பதே ஒரு அலாதி… அதைப் பார்க்க வேண்டுமென்று கட்டு மரத்தில்
ஒரு முறை போயிருக்கிறேன்… கோலா பிடிக்க லாஞ்சில் போவது கிடையாது… காரணம், கோலா
பிடிக்க குறைந்தபட்சம் இருபது மைலிலிருந்து அறுபது மைல் வரையிலும் கூட போவது
உண்டு… லாஞ்ச் என்றால் இத்தனை மைல்கள் போக டீஸல் செலவு…?






ஆறு அல்லது ஏழு பேர் ஒரு கட்டுமரத்தில் காலை மூன்று மணிக்குக் கிளம்பினார்கள்
என்றால் வருவதற்கு இரண்டு நாள் கூட ஆகும்! ஒரு தடவைக்கு மூணாயிரத்திலிருந்து
இருபதாயிரம் மீன்கள் வரை அகப்படும். கட்டுமரத்திலேயே தாழை, புல் தழை
இவற்றையும் எடுத்து வந்து விடுவார்கள்… இதை ஒரு மரச்சதுரத்தில்
பிணைத்துக்கட்டி ஒரு சின்ன பசுந்தழைத் தீவு மாதிரி தண்ணீரில் மிதக்க விட்டு
விடுவார்கள்…


 கோலா இந்தப் பச்சையைப் பார்த்ததும் கூட்டம் கூட்டமாகத் துள்ளி
வரும், பசுந்தழையில் முட்டையைப் பீச்ச…. சில சமயம் இந்தத் ‘தீவுகளை’ கரைக்கு
எடுத்து வந்த பிறகும் கூட அவற்றில் தங்கியுள்ள இந்த முட்டைகளைப் பார்க்க
முடியும். இன்னொன்று… கோலாவை வலை ’வீசிப்’ பிடிப்பது இல்லை. இதுதான் கண்ணால்
பார்த்துப் பிடிக்கிற மீன்… கோலாவுக்குத் தனி வலை… அந்த ஏந்து வலையை
வைத்துக்கொண்டு அப்படியே ஏந்தி ஏந்திப் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.. இந்த
வலையைத்தான் கச்சா வலையென்று சொல்வது…









சில சமயங்களில் ஒரு கோலா கூடக் கிடைக்காமல் போவதும் உண்டு. இதுக்குக் காரணம்
‘பர்லா’… இந்தப் பர்லா மீன் வந்தாலே அந்த இடத்துக்கு ஒரு கோலா கூட வராது…
மற்றபடி அமாவாசை நாளில் கோலா அதிகம் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை. பொதுவாக
கோலா சீஸன்தான் இவர்களின் ’அறுவடைக் காலம்’…




கோலாவுக்காக ஒரு தடவை கடலுக்குச் சென்றால் ஒரு ஆளுக்கு முன்னூறு ரூபாய்கூடக்
கிடைக்கும். ஆனால் இதைவிட அபாயமான வேலை உலகத்தில் ரொம்பக் குறைச்சல்…
முன்னேயெல்லாம் கோலா பிடிக்கப் போகிறவர்களுக்கு ‘வாய்க்கரிசி’ போட்டு
அனுப்புவார்களாம். இப்போதெல்லாம் அந்தப் பழக்கம் கிடையாது.





இந்த வைகாசி வந்தாலே போதும்… எல்லார் பேச்சிலும் ரொம்ப அடிபடுவது கோலாதான்…
கொஞ்சம் வேகமா காற்று அடித்தால் கூடப் போச்சு… ‘சே… சே.. என்னா காத்து… முகம்
வாயெல்லாம் ஒரே மண்ணு.. சனியன் புடிச்ச கோலா காத்து’ என்று அலுத்துக்
கொள்வார்கள்.





அத்தையும், மாமாவும் வந்து இன்னையோட பதினஞ்சு நாளா ஆவுது…? பதினஞ்சு நிமிஷமா
ஓடிப்போச்சு.. எனக்கு இந்த முள் தொண்டையிலெ சிக்கியதே இவர்கள் வந்த
அன்றைக்குத்தான்.. மாமா வந்ததுமே நைனா மார்க்கெட் கிளம்பிட்டாங்க… மீன்
இல்லாவிட்டால் சாப்பாட்டையே தொடமாட்டார் மாமா… அதுவும் கோலா மீன் என்றால்
அவருக்கு உயிர்…





அவரோடு அன்று சாப்பிட்டபோது சிக்கியதுதான்… அதுக்குப் பிறகு மீனையே தொடவில்லை
நான்… இந்த முள்ளை நினைத்தால் மீன் ஆசையே விட்டுப்போய்விடுகிறது… என் அத்தை
மீனெல்லாம் சாப்பிடுவதில்லை… எப்பவாவது எங்கள் கட்டாயத்துக்காக
சாப்பிடும்போதெல்லாம் சாப்பிட்ட பிறகு ‘வாந்தி’ எடுக்கவும் தவறுவதில்லை…
மாமாவுக்கு எதிர் என் அத்தை… படிப்பது என்றால் அத்தைக்குக் கொள்ளை ஆசை… சமையல்
முடிந்து விட்டால் கையில் புத்தகம் தான்…. மாமாவோ ஏதாவது படிக்கிறார் என்றால்
அது வாரா வாரம் ராசிபலன் மட்டுமாகத்தான் இருக்கும்!






எழுதுவதிலும் அப்படித்தான்… அத்தை எனக்கு எழுதின எல்லா கடிதங்களையும்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். கவித்துவ மிக்க அந்தக் கடிதங்களை எத்தனை
முறை படித்திருக்கிறேன் தெரியுமா…! மாமாவோ தன் பேனாவைத் திறப்பது கையெழுத்துப்
போட அல்லது தன் அம்மாவுக்குக் கடிதம் எழுத இந்த இரண்டுக்கும் மட்டும்தான்.
(தேவரீர் அம்மாவுக்கு உங்கள் மகன் எழுதிக்கொள்வது. க்ஷேமம், க்ஷேமத்திற்கு
பதில். நான் வரும் பத்தாந்தேதி அங்கு வருகிறேன். வேறு ஒன்றும் விசேஷம் இல்லை.
இப்படிக்கு…)




ஆரம்பத்தில் தன் அம்மாவுக்குக்கூட அத்தையின் மூலம்தான்
எழுதிக்கொண்டிருந்தாராம். ஆனால் அவர் அம்மாவிடமிருந்து “எனக்கு நேரடியாக ஒரு
லெட்டர் எழுதக்கூட உனக்கு நேரம் இல்லையா? இனிமேல் உன் பெண்டாட்டியை விட்டு
எழுதாதே… இஷ்டமிருந்தால் நீயே உன் கைப்பட எழுது” என்று ‘பாட்டு’ வாங்கிய
பிறகுதான் அந்தக் கடிதம் கூட அவர் எழுதுகிறார். இதுக்குப் பிறகு மாமா எழுதச்
சொன்னாலும் அத்தை எழுதுவதில்லை. இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.






“டேய் ராஜா… நான் வெளியே போறேன்.. வர்றீயா…?”



மாமாவின் பிசிறான குரல் கேட்டு என் சிந்தனை அறுந்தது. அப்போது அங்கு வந்த என்
அத்தை என்னை முந்திக் கொண்டு சொன்னார்கள்.



“ராஜாவுக்கு உடம்பு சரியில்லை… அது வராது”



“சரி சரி… நீயே அவனைப் பூட்டி வச்சுக்க…”



-மாமா கோபத்துடன் சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்.

மாமாவுக்கு சாயங்காலம் ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை வெளியே போய் ஊர்
சுற்றாவிட்டால் தலையே வெடித்துவிடும்… பாவம்… அத்தை… வீட்டில் தனியாவே
இருந்திருந்து எப்படித்தான் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறதோ…?



அத்தையின் பேச்சில் இப்போதெல்லாம் ஒன்றைக் கவனித்தேன். கொஞ்ச நாளாக அத்தை
என்னிடம் ‘டா’ போட்டுப் பேசுவதில்லை. பத்து வருஷ வித்யாஸம் பெரிசு இல்லையா?
ஆனால் இப்படிப் பேசுவதுதான் எனக்குப் பிடிக்குது..



நெற்றியில் ஒரு மென்மையான ஸ்பரிஸத்தை உணர்ந்து நிமிர்ந்து பார்க்கிறேன்….



அத்தை…



”ராஜா… நெத்தியெல்லாம் ரொம்ப சுடுதே..” என்று சொல்லிக்கொண்டே படுத்திருந்த என்
பக்கத்தில் அமர்ந்து என் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டார்கள்.
நெற்றி சுடுவதென்ன…? இந்தத் திண்ணை இருட்டில் இப்படிக் கிடைத்த அத்தையின் இந்த
அண்மைக்காக அப்படியே நான் எரிந்து போவதற்கும் தயார்….



வெகுநேரம் இருவரும் பேசவே இல்லை.



திடீரென்று அத்தை கேட்டார்கள்.



”தொண்டையிலே முள் சிக்கிட்டுன்னியே..  போய்டுச்சா..?”



“ம்ஹூம்.. இல்லெ…”


“அப்படின்னா நான் சொல்ற மாதிரி செய்… சாப்பிடும்போது சூடான வெறும் சாதத்தை ஒரு
பெரிய உருண்டையா உருட்டி வாயில் போட்டு விழுங்கு. போய்டும்…”



இதுக்கு நான் பதில் சொல்லவில்லை… என் கையைப் பிடித்துக் கொண்டிருக்கிற
அத்தையின் கைகளை அப்படியே எடுத்து ஒரு முத்தம் கொடுத்தால் என்ன என்று
யோசித்துக் கொண்டிருக்கிறேன்… ஆனால்?




இதைச் செய்ய என்னைத் தடுப்பது எது?



‘Love has no taboos’ என்று படித்திருக்கிறேன். ஆனால் அத்தையின் மேல் நான்
கொண்டுள்ளது காதலா…? காதல்.. சே.. தொடர்கதைகள்ளேயும், சினிமாவிலேயும் இந்த
வார்த்தையைப் போட்டு ரொம்ப அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

Is it sex-love…?

நோ… அப்படி என்னால் நினைக்க முடியவில்லை. இது ஒரு tender devotion…. ஆனா இதன்
எல்லை எதுவாக இருக்கும்….?



அனாவசியமாக மனசைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறேன்… அத்தையின் மேல்
எனக்குள்ள ப்ரேமை இன்று நேற்று ஏற்பட்டதா என்ன?



அப்போது ஆறு வயசிருக்கும்… அத்தை அடிக்கடி என்னிடம் “ராஜா.. நீ யாரைக்
கல்யாணம் பண்ணிக்கப் போற…?” என்று கேட்பார்கள். நான் ஒவ்வொரு முறையும்
‘உங்களைத்தான்… உங்களைத்தான்’ என்று சொல்வேன்.



கொஞ்சங்கூட மறக்கவில்லை.



“அத்தை… உங்களைத்தான் நான் கட்டிக்குவேன். ஆனா நான் உங்களைக் கட்டிக்கிறப்போ
உங்க கை தோலெல்லாம் அவ்வாவுக்கு இருக்கிற மாதிரி கொழ கொழன்னு சுருங்கி
இருக்கக்கூடாது… இப்ப இருக்கிற மாதிரியே இருக்கணும்” என்று சொல்லி அத்தையின்
கைச்சதையைத் தொட்டுக் காண்பிப்பேன்…



உடனே அத்தை சிரித்துக்கொண்டே என் அம்மாவிடம் “பார்த்தீங்களா வதினை… ராஜா
சொல்றதெ” என்று ஆரம்பித்து நான் சொன்னதையெல்லாம் சொல்லிச் சொல்லி
சிரிப்பார்கள்.



இப்போது மீண்டும் அதை நினைத்துப் பார்க்கிறேன்.. ஆனால் இப்போதெல்லாம் அத்தை
ஏன் அந்தக் கேள்வியைக் கேட்பதே இல்லை…?





’ராஜா நீ யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போற…?’



அப்படியே அத்தை கேட்டாலும் முன்பு சொன்னது போல் என்னால் பதில் சொல்ல முடியுமா?



’அத்தை… உங்களைத்தான் நான் கட்டிக்குவேன்… ஏன்னா உங்கள் கை பதினஞ்சு
வருஷத்துக்கு முந்தி இருந்த மாதிரி இல்லன்னாலும் உங்க மனசு அப்படியேதான்
இருக்கு…’



திடீரென்று தெரு நாய்களின் காதைக் கிழிக்கிற சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தது.
அட எப்படி இங்கே வந்து படுத்திருக்கிறேன்…? கடைசியில் அத்தையோடு பேசிக்
கொண்டிருந்தது நினைவிருக்கு… அப்புறம் தூக்கக் கலக்கத்தில் இங்கே வந்து
படுத்தது நினைவு இல்லை. இனிமேல் எப்படித் தூக்கம் வரும்? விடிகிற நேரம்… கொஞ்ச
நேரம் ஸ்ரீஸ்ரீளம் புரண்டு கொண்டிருந்து விட்டு எழுந்தேன்…




பாத்ரூமுக்குப் போய் பேஸ்ட்டும், ப்ரஷ்ஷும் எடுத்துக்கொண்டு கொல்லைப் பக்கம்
போனேன். ப்ரஷ் பண்ணிக்கொண்டிருக்கும் போதே முள் நெருடுவது தெரிகிறது… பல்லைத்
துலக்கிவிட்டு கட்டை விரலால் நாக்கை வழித்தேன். இதுக்கு நான் tongue cleaner
பயன்படுத்துவது இல்லை. Tongue cleaner என்றால் நாக்கில் ஒரு குறிப்பிட்ட
‘ஏரியா’வைத்தான் சுத்தப்படுத்த முடியும். அடி நாக்குக்கெல்லாம் அது போகாது…
அதனால் உசிதம், கட்டை விரல். ஆனால் விரல் நகத்தில் ஏதேனும் பிசிறு இருந்தால்
நாக்கைக் கீறி விடும்… எச்சிலோடு ரத்தமும் வரும்… அப்புறம்  அது க்ஷயரோக
ரத்தமா அல்லது நாக்குக் கீறலின் ரத்தமா என்று சந்தேகப்பட்டு பயப்பட
வேண்டியிருக்கும்!


 அதுக்காக கட்டை விரல் நகத்தை மட்டும் பிசிறு இல்லாமல்
வைத்திருக்க வேண்டும். சரி… இன்று எப்படியும் இந்த முள்ளை எடுத்துவிட
வேண்டும்… கட்டை விரலையும், சுட்டு விரலையும் மாற்றி மாற்றித் தொண்டைக்குள்
விட்டுக் குடைந்தேன்… ஏகமாய் வாந்தி வந்ததுதான் மிச்சம்.



முள் அப்படியேத்தான் இருந்தது….



இதுக்கு முன்னால் கூட மீன் சாப்பிட்டபோது முள் சிக்கியிருக்கிறது… ஆனால் இந்த
மாதிரி பதினஞ்சு நாள் இருபது நாளென்று உயிரை வாங்கியதில்லை.



சின்ன வயசில் ஒரு வேடிக்கை நினைவு வருது. அப்போது நான் அவ்வா வீட்டில்
இருந்தேன். ஒரு நாள் சாப்பாட்டுக்கு கருணைக்கிழங்கு வறுவல் செய்திருந்தார்கள்.
அந்த வயதில் அது கருணைக்கிழங்கு என்றெல்லாம் எனக்குத் தெரியாது… ஏதோ ருசியாய்
இருக்கவும் நிறைய சாப்பிட்டேன். சாப்பிட்டு முடித்தது தாமதம்…


 ‘அய்யோ… அம்மா…’
என்று அலற ஆரம்பித்து விட்டேன். தொண்டையில் பயங்கர அரிப்பு… அதை அரிப்பு என்று
சொல்லத் தெரியாமல் ‘தொண்டையிலே முள் குத்திடுச்சி’ என்று ரகளை
பண்ணிக்கொண்டிருந்தேன். அப்பறம் மெதுவாக வேலைக்காரி வந்து ‘இது கருணைக்கிழங்கு
சமாச்சாரந்தான்’ என்று சொல்லி எல்லார் பயத்தையும் போக்கி என்னைத் தேற்றினாள்.




டிஃபனை முடித்துவிட்டு அத்தையுடன் பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். தம்பி
வந்து சொன்னான், யாரோ கூப்பிடுவதாக. வெளியே வந்து பார்த்தால்…. பேபி.

“என்னடா இது அதிசயமா இருக்கு.. பதினொரு மணி வரைக்கும் மார்க்கெட்லெயில்ல
சுத்திக்கிட்டு இருப்ப…”

”இன்னைக்கு நான் மார்க்கெட்டுக்குப் போகலெ.. சரி வா… கொஞ்சம் ஈச்சந்தோட்டம்
வரைக்கும் போயிட்டு வரலாம்.”



“இதோ வர்றேன்… சித்த இரு” என்று அவனிடம் சொல்லிவிட்டு உள்ளே வந்தேன்.
அத்தையிடம் போய் “கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்திர்றேன் அத்தை…” என்றேன்.



“சீக்கிரமா வந்திடு ராஜா…”



-நான் இப்போது வெளியில் போவதை அத்தை விரும்பவே இல்லை. இருந்தாலும் பேபியின்
முகத்தில் தெரிந்த அந்த சீரியஸ்னஸ்..



கிளம்பிவிட்டேன்.

பேசிக்கொண்டே ஈச்சந்தோட்டம் வந்தோம். பெயர்தான் ஈச்சந்தோட்டம். ஆனால் ஒரு ஈச்ச
மரம் கூடக் கிடையாது.. எப்பவோ ஈச்சந்தோட்டமாக இருந்திருக்கலாம்.. இப்போது
எஞ்சி நிற்பதென்னவோ பெயர் மட்டுந்தான்… பேசாமல் புளியந்தோப்பு என்று பெயரை
மாற்றி விடலாம்… அவ்வளவு புளிய மரங்கள்…



ஒரு புளிய மரத்தடியில் அமர்ந்தோம்… ஒரு பெரிய வேரில் முதுகைச் சாய்த்து
திண்டில் அமர்ந்திருக்கும் செட்டியார் மாதிரி உட்கார்ந்து கொண்டான் பேபி….



மெதுவாக விஷயத்தை ஆரம்பித்து பிறகு சரமாரியாகப் பொழிய ஆரம்பித்தான்…



விஷயம் வேறொன்றுமில்லை.. இவன் அப்பாவுக்கு ஏகமான சொத்து இருக்கு… இருந்தாலும்
மகன் தன்னை மாதிரி நிலத்தில் இறங்காமல் ஒரு டாக்டராகி விட வேண்டும் என்று
தீவிரமான ஆசை. இவனோ பி.யூ.சி.யைத் தாண்டவில்லை. பயாலஜி, ஜூவாலஜி புத்தகத்தை
எடுத்தாலே தூக்கம் வருதுங்கிறான். விவசாயத்தில்தான் ஈடுபாடு. இவன் M.B.B.S.
போகாததால் ஜன்ம எதிரியாகப் பார்க்கிறார் தந்தை.. அப்புறம் சச்சரவுக்கு
கேட்கணுமா… இன்னும் கடிக்கிட்டுப் புரளலை… அவ்வளவுதான்.



உணர்ச்சிவேகத்தில் என்னென்னவோ முடிவுகள் எடுத்துக்கிட்டு இருக்கான்…



“சரி வா, ரொம்ப தாகமா இருக்கு… அந்த வீட்லே போயி கொஞ்சம் தண்ணி குடிப்போம்.”

-பேச்சை மாற்றி அவனைக் கிளப்பினேன்.



தண்ணீரைக் குடித்துவிட்டு அங்கேயே தீப்பெட்டி வாங்கி சிகரெட்டைப் பற்றவைத்துக்
கொண்டான்… எனக்குத் தண்ணீரைக் குடித்ததும் முள் அதிகமாக நெருட ஆரம்பித்தது…



குமட்டியது.


இவனுக்கும் தெரியும். கோலா மீனைச் சாப்பிட்டு எனக்கு முள் சிக்கிக்கொண்டது.
அதுதான் எந்நேரமும் புலம்பிக் கொண்டே இருக்கிறேனே…



“ராஜா.. இந்த முள் இவ்வளவு நாள் போகாம இருக்கிறதப் பாத்தா இது முள்ளு தானான்னே
எனக்குச் சந்தேகமா இருக்கு. ஒரு வேளை முடி கிடி சாப்பாட்டில் கிடந்து
சிக்கிக்கொண்டிருந்தால்….?”



எனக்கு முடி என்றதும் பயமாகி விட்டது… அதோடு விடாமல், “ஒரு வேளை ஒன்னோட
ப்ரமையாவும் இருக்கலாம்” என்றான்.



எனக்கு எரிச்சல் வந்துவிட்டது.

“அப்படின்னா… உன் அப்பாவோட நான் நேத்து ராத்திரி சினிமா பார்த்தேனே.. அவர்
எப்படி அந்த நேரத்துலெ உன்னோட சண்டை போட்டிருக்க முடியும்… ஏதாவது கனவு கினவு
கண்டிருப்பெ…”



”எனக்குக் கோபம் வரல்லெ…”


என் எரிச்சல் இன்னும் அதிகமாகியது.



“என்ன ராஜா.. இவ்வளவு நேரம்? இனிமே நீ வெளியே போகக் கூடாது நாளைக்கு நாங்க
ஊருக்குப் போற வரைக்கும் வீட்லயேதான் இருக்கணும்…”



வீட்டில் நுழைவதற்குள் அத்தையின் ஆர்டர்…



“இப்ப என்ன ஊருக்கு அவசரம்? இன்னும் அஞ்சாறு நாள் கழிச்சுக் கிளம்பறது…”



“நான் என்ன பண்றது ராஜா… உன் மாமாதானே…”



“ஆமா, நீங்களும்தான் ஊருக்குப் போகணும் போகணும்னு பறக்கறீங்க…”



-இதுக்கு அத்தை பதில் சொல்லவில்லை.



நான் போய் கொல்லைக் கிணற்றில் குளித்துவிட்டு, திண்ணைக்கு வந்தேன்… அத்தை
இல்லை. அறையில் படுத்திருக்கலாம் என்று அறைக்கு வந்தேன். அங்கே….



டேபிளின்மீது தலையைக் கவிழ்த்துக்கொண்டு சின்னக் குழந்தை மாதிரி குலுங்கிக்
குலுங்கி…

“அத்தை… என்ன இது?”


தலையின் மீது கைவைத்து நிமிர்த்தினேன்.


“இப்ப உனக்குத் திருப்திதானே ராஜா… இவ்வளவுதான் நீ என்னத் தெரிஞ்சுக்கிட்டது…”



-எனக்கு என் மேலேயே வெறுப்பு ஏற்பட்டது. எவ்வளவு மென்மையான மனசைப் புண்படுத்தி
இருக்கிறேன்.


தலையின் மீது வைத்த கையை நான் எடுக்கவே இல்லை.


இன்னும் சில நிமிஷங்கள்தான்… அப்புறம் வீடே வெறிச்சோடிக் கிடக்கும்…


இதோ புறப்பட்டு விட்டார்கள்… அத்தையும் மாமாவும்.. நானும் கிளம்பினேன்,
ஸ்டேஷன் வரைக்கும்….



ட்ரெய்ன் எட்டு மணிக்குத்தான் கிளம்பும்… ஒரு மணி நேரம் முன்னாலேயே
வந்தாச்சு.. தம்பியும், மாமாவும் ஜன்னலோரத்தில் இடம் பிடித்துவிட்டார்கள்.



அத்தை என்னுடனேயே நின்று கொண்டிருக்கிறார்கள். “அடிக்கடி லெட்டர் எழுதுவியா…”
என்று கேட்டுக்கொண்டே என் கைகளைப் பற்றிக் கொள்கிறார்கள்…



கண்ணீர்….

எனக்கு அப்படியே அத்தையைக் கட்டிக்கொண்டு கதற வேண்டும் போல் இருக்கு… ஆனால்
கண்களில் ததும்பிய கண்ணீரைக்கூட கீழுதட்டைப் பற்களால் கடித்துக்கொண்டு
அடக்கிக் கொள்கிறேன்…



எவ்வளவு நேரம் இப்படிப் போனதோ தெரியவில்லை. திடீரென்று அத்தை கண்களைத்
துடைத்துக்கொண்டு உள்ளே போய் தம்பி உட்கார்ந்திருந்த இடத்தில் அமர்ந்தார்கள்.
தம்பி கீழே இறங்கினான்….



நான் ஜன்னலருகில் போய் அத்தையின் கையைப் பிடித்துக்கொண்டேன்.



‘இந்தக் கைக்கு இப்படியே ஒரு முத்தம் கொடுத்தால் என்ன…?’



ட்ரெய்ன் லேசாக நகர்ந்தது. நான் கைகளை எடுத்துக்கொண்டேன்…. ட்ரெய்ன் கொஞ்சங்
கொஞ்சமாக வேகம் பெறுகிறது.

வெளிச்சம் தெரிகிற வரை ஒரு கை மட்டும் அசைந்து கொண்டிருந்தது தெரிந்தது.

வீட்டிற்கு வந்து அறைக்குள் போய் லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு நாற்காலியில்
அமர்ந்தேன். ஒரு பெண்ணின் குரல். ‘கோலா…. கோலா… ரூபாய்க்கு ஏழு கோலா… கோலா….’
என்று ஒரு ராகத்துடன் ஒலித்தது…



கொல்லைப்பக்கம் போய் சுட்டுவிரலைத் தொண்டைக்குள் விட்டுக் குடைந்தேன்…



குமட்டல்தான் வந்தது…


முள்….?