Monday, February 02, 2026

SARVAM MAYA (2025)-சர்வம் மாயா -மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( சூப்பர் நேச்சுரல் ரொமாண்டிக் காமெடி ட்ராமா)@ஜியோ ஹாட்ஸ்டார்

                              

25/12/2025 அன்று வெளியாகி மெகா ஹிட் ஆகி 150 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த இந்தப்படம் நிவின் பாலிக்கு நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.இப்போது  30/1/2026 முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் தமிழ் டப்பிஙகில் கிடைக்கிறது

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  ஒரு  வசதியான நம்பூதிரி  குடும்பத்தில் பிறந்தவன் . அப்பா  பூஜை , புனஸ்காரம் என்று இருக்க  , 18  வது வயதில் அம்மா திடீர்  என இறந்து விட்டதால்  கடவுள்  நம்பிக்கை இல்லாத நாத்திகன்  ஆகிறான் .குடும்பத்தைப்பிரிந்து நகரத்துக்கு வருகிறான்  கிதார்  வாசிக்கும்  கலையைக்கற்று  சினிமாவில்  சாதிக்கும்  ஆசையை   வளர்த்துக்கொள்கிறான் . ஆனால் சான்ஸ்   கிடைக்கவில்லை . ஒரு கட்டத்தில்  வருமானத்துக்காக  சொந்த ஊருக்கு  திரும்ப வருகிறான் . இரண்டு  மாதங்கள்  இங்கே  இருந்தாக  வேண்டிய சூழல் .



 அப்போது  ஒரு வீட்டில்  ஒரு பையனுக்குப் பேய்  பிடித்து விட்டது எனவும் . அந்தப்பேயை ஓட்ட  வேண்டும்  எனவும் நாயகன் அழைக்கப்படுகிறான் . அங்கே  போய்  பூ ஜை   செய்யும்போது  பாதியிலேயே   திடீர்   என அந்தப்பையனுக்கு குணம் ஆகி விடுகிறது . நாயகன்   வீட்டுக்குத்திரும்பி விடுகிறான் .


 ஆனால்   அன்று   இரவில்  இருந்து  நாயகன்  வாழ்க்கையில்   ஒரு பெரிய  திருப்பம் உருவாகிறது . நாயகன்  வீட்டில் அவனது அறையில் ஒரு இளம் வயது  பெண்  பேய்  அவன் கண்களுக்குத்தெரிகிறது .


 வழக்கமான  பேய்கள்  போல  அது அவனை   பயமுறுத்தவில்லை , கோர முகம்  கா ட்ட வில்லை , ஒரு தோழியைப்போல பழகுகிறது 


 ஆரம்பத்தில்   தயங்கிய   நாயகன்  பின் அந்தப்பெண் பேயுடன்   சகஜமாகப்பழகி ஆரம்பிக்கிறான் . அந்தப்பெண்  பேய்க்கு  தன பெயர் என்ன? தான் எதனால் இறந்தோம் என்பது தெரியவில்லை 

உன்னிடத்த்தில்   என்னைக்கொடுத்தேன்  படத்தில் கார்த்திக் ரோஜாவுக்கு  பாடகி ஆக உதவுவது போல  அந்தப்பெண் பேய்  நாயகன்  சினிமாவில்  கிடாரிஸ்ட்  ஆக உதவுகிறது 



சினிமாவுக்கு கிடார்  வாசிக்க மும்பை   போகும்   சூழலில்  நாயகனுக்கு  ஒரு பெண்ணின்   நட் புக்கிடைக்கிறது . அது   காதலாக  உருமாறும்  வேளையில்  அந்தப்பெண்  பேய்க்கு  பொஸசிவ்னெஸ்   வருகிறது . ஐ லவ் யூ  சொல்கிறது . 



அந்தப்பெண்  பேயின்   முன்   கதை   என்ன?  நாயகன் என்ன  முடிவு எடுத்தான்   ? என்பது  மீதித்திரைக்கதை 

 நாயகன்  ஆக நிவின் பாலி   பிரமாதமாக நடித்து  இருக்கிறார் . சங்கோஜம் , பயம் , ஈகோ ,  அப்பா மீதான பாசம் . இரு  பெண்களிடையே  சிக்கித்தவித்தல்  என  பல காட் சிகளில்   அருமையாக   ஸ்கொர்   செய்கிறார் .

 நாயகி ஆக   , பெண் பேயாக , துறுதுறு பேச்சு  அழகி ஆக  ரியாஷிபு அட் டகாசமான  நடிப்பு . அவரது   உடல் மொழி , குரல் , நடிப்பு எல்லாம் அபாரம்  .மாடர்ன்  டிரஸ்  போட்ட   கலர் புல்  நதியாவாக  ஜொலிக்கிறார் .அவரது  பிளாஸ்பேக்  காட் சியில்  கண் கலங்க வைக்கிறார் 

இன்னொரு நாயகி ஆக  பிரித்தி    முகுந்தன்  பின் பாதியில்  வந்தாலும்   குறைவான நேரத்தில் நம் மனதில்   நிறைந்து விடுகிறார் . அவரது  முக அழகும் , கண்ணியமான   உடைகளும் , நடன அசைவுகளும்  சிறப்பு 

முதல்   நாயகியின் அம்மாவாக  மெதில்  தேவிகா , அப்பாவாக   வினீத்   இருவருக்கு ம்  நல்ல குணச்சித்திர  நடிப்பு 

 நாயகனின்   கசின்  ஆக வரும்  அஜூ   வர்கீஸ்   காமெடியில்   களை  காட்டும் நடிப்பு 

ப்ரியா  பிரகாஷ்  வாரியர்  கெஸ்ட்  ரோலில்   வருகிறார் 

ஒளிப்பதிவு  சரண்  வேலாயுதன் .  இரு நாயகிகளையு ம் , நாயகியின் அம்மாவையும்  கூட க்ளோஸப்பில்ம் அழகாகக் காட்டி இருக்கிறார் .ஜஸ்ட்டின்   பிரபாகரன்  இசையில்  இரு பாடல்கள்   அருமை . பின்னணி இசையும் சிறப்பு  அகில் சத்யன் , ரத்தின்  ராதாகிருஷ்ணன்  ஆகிய   இருவரும் இணைந்து  எடிட்   செய்து  இருக்கிறார்கள் . 146  நிமிடங்கள்   ஓடுகிறது . கதை , திரைக்கதை   எழுதி  இயக்கி   இருக்கிறார் அகில் சத்யன்



சபாஷ்  டைரக்டர்


1   பயமுறுத்ததும்  பேய் , காமெடிப்பேய்   வரிசையில்  ஒரு  பீல் குட்  ரொமாண்டிக் பேய்  கேரக்ட்டர்   அருமை 


2 முதல்  30 நிமிடங்கள்  மெதுவான திரைக்கதையில்  அனைத்துக்கதாப்பாத்திரங்களை  அறிமுகம்  செய்து அவர்களோடு  ஆடியன்ஸுக்கு    எமோஷனல் கனெக்ட்   கொடுத்த விதம் 


3  யாரம் எதிர்பாராத  க்ளைமாக்ஸ்   டிவிஸ்ட் 



  ரசித்த  வசனங்கள் 


1  பொதுவாக  சிடுமூஞ்சிகளாக  இருக்கும் அப்பாக்கள்  அறுபது , எழுபது  வயசுல   பாசத்துக்கு  ஏங்குவாங்க 


2 பணம் இன்னைக்கு வரும் , நாளைக்குப்போகும்


நாளைக்குப்போக  இன்னைக்கு   இன்னமும்  பணம்   வரலையே? 


3   நம்மை நல்லபடியா   பார்த்துக்கறதுக்கும்,நம்ம  கிட்டே  அன்பு  காட்டிடவும்    ஒரு  ஆள்  வேணும் 


4   கல்யாணம்   ஆகாத பிரம்மச்சாரிகளுக்கு  பார்க்கிற  பொண்ணுங்க எல்லாரும் அழகாக  இ ருப்பதாத்தான் தோணும் 


5     நல்ல  தூக்கத்தை விட சிறந்த  மருந்து   வேற   எதுவும்   இல்லை 


6   பெரியப்பா  , என்   ரூமுக்கு  ஒரு பெண்  பேய்  வருது 


 அடுத்த டைம் வந்தா என் ரூம்க்கு அனுப்பு , பேச்சுத்துணைக்கு ஆகும் 


7   ஒருத்தரோட பிரச்சனை பண்ணிட்டு அப்படியே மெயிண்ட் டெ யின் பண்றது கஷ்டம் ஆகிடும் 


8  உன் குரல் அருமை , நீ மட்டும் சாகாம இ ருந்திருந்தா  பெரிய ஸ்டார்  ஆகி  இருக்கலாம் 


 அதுதான் செத்துட் டே னே , இனி ஸ் டார் ஆகறதுதான் பாக்கி 


9  பயம் இருப்பது நல்லதுதான் , பயம் இருப்பதால் தான் மனித குளம் இந்த அளவு அசுர வளர்ச்சி அடைஞ்சிருக்கு 


10     பேயை இவ்ளோ  பக்கத்தில் பார்த்துட்டு கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லைன்னு சொன்னா எப்படி ? 


உன் கேள்வில யே பதிலும் இருக்கு.  நான் இன்னமும் கடவுளை நேரில் பார்க்கலையே ? 

 11     பிரிவு ஒரு பயங்கரமான  வலி தான் , ஆனா அதைக்கடந்துதானே போயாகணும் ?

12      நாம்  நேசித்த ஒருத்தர் நம்ம வாழ்க்கையை விட்டுப்போகும்போது நம்ம மனசைத் தெளிவா வெச்சுக்கறது முக்கியம் 

13   உங்களுக்கு இந்தப்பேய் ,பிசாசு  இதுல எல்லாம் நம்பிக்கை இல்லைன்னு  நினைச்சேன் 


நம்பிக்கை இல்லை , ஆனா பயம் உண்டு 


14  உன்னை மாதிரி  சிங்கிளா  சுத்தறவங்க தான்  ரொம்ப ரொமாண்டிக்கா இருப்பாங்க 


15    நீ  அவளை லவ் பண்றியா ?


 மியூஸிக்   தான் என் ஒரே லவ் 


 மண்ணாங்கட்டி , அதை  ஒரு ஓரமா வை 


16   நான்   எப்படி உன்னை லவ் பண்ண முடியும்?, நீ ஒரு பேய் , உன்னை தொடக்கூட முடியாது 


லவ்  ஈஸ்   நாட்  ஒன்லி   பிசிக்கல் டச் , எமோஷனல்  கனெக்ட் 


17   பொதுவா  ஒரு  ஆத்மாவுக்கு   மோட்சம்  கிடைக்கணும்னா  அது அனுபவிக்கும் தூக்கத்துல இருந்து  அதுக்கு  விடுதலை கிடைக்கனும் 



=============================================================

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகனின் கண்களுக்குமட்டும்  அந்தப்பெண்  பேய்  எதனால்   தெரிகிறது   என்பதற்கு  க்ளைமாக்சில்  விடை கிடைக்கிறது , ஆனால்  அந்தப்பெண்  பேயின்     அம்மா, அப்பாவுக்கு  காட்சி  அளித்து   ஆறுதல்   சொல்லாதது ஏன் ? 


2  கடவுள்   நம்பிக்கை இல்லாத நாயகன்  மீண்டும்   எப்படிக்கடவுளை   நம்புகிறான்  என்பதற்கு   விளக்கம் இல்லை 


3   காதலில்  பிரேக்கப்பில்    சோகம்  ஆகும் இரண்டாம்   நாயகி  கால அவகாசம்  எடுத்துக்கொள்ளாமல்  திடீர்   என  நாயகனுடன்  காதலில்   விழுவது எப்படி ?   


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  13 +   குடும்பத்துடன்   பார்க்கலாம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஒரு பீல்   குட்  ரொமாண்டிக் மூவியைப்பார்க்க விரும்புபவர்கள்  அவசியம்   பார்க்கலாம் .. ரேட்டிங்க் 3.25 / 5




Sarvam Maya
Theatrical release poster
Directed byAkhil Sathyan
Written byAkhil Sathyan
Produced byAjayya Kumar
Rajeev Menon
StarringNivin Pauly
Riya Shibu
Aju Varghese
Janardhanan
Preity Mukhundhan
CinematographySharan Velayudhan
Edited byAkhil Sathyan
Rathin Radhakrishnan
Music byJustin Prabhakaran
Production
companies
Firefly Films
Akhil Sathyan Films
Distributed byCentral Pictures
Release date
  • 25 December 2025
Running time
146 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Box office₹145.30 crores[2]

Sunday, February 01, 2026

மாய பிம்பம் (2026)-தமிழ்-சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)

   

              மாய பிம்பம் (2026)-தமிழ்-சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)


100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் பெரிய ஹீரோ நடிக்க ,பிரம்மாண்டமான இயக்குநர் இயக்க ,பெரிய கம்பெனி தயாரிப்பாக     வரும் பல படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன் ரசிகர்களிடையே ஆர்வத்தையும் ,எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டுப்பின் ரிலீஸ் ஆன பின் டப்பா ஆவதுண்டு.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க அறிமுக இயக்குநர் இயக்கும் படங்கள் சத்தம் இல்லாமல் வெளிவந்து நம் புருவங்களை ஆச்சரியத்தில் உயர்த்த வைப்பதுண்டு.அப்படிப்பட்ட எளிமையான ,தரமான நல்ல படம் தான் இது   


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின் மூன்று நண்பர்களில் ஒருவன் தான் நாயகனுக்கும்,இந்த திரைக்கதைக்கும் வில்லன்.


நாயகன் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவன்.நாயகியை முதன் முதலாக ஒரு பஸ்சில் பார்க்கிறான்.இரண்டாவது சந்திப்பில் சாதா ஆட்டோவை ஷேர் ஆட்டோ ஆக்கி இருவரும் பயணிக்கிறார்கள்.மூன்றாவது சந்திப்பில் நாயகியைப்பார்த்து பின் தொடரும் வேகத்தில் நாயகன் ஒரு விபத்தை சந்திக்கிறான்.

லேசான அடிபட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கும் நாயகனை ,நாயகி அடிக்கடி வந்து சந்திக்கிறாள்.முதல் பாதி முழுக்க நாயகன்,நாயகி, இருவரின் சந்திப்பு ,நண்பர்கள் கலாட்டா என படம் ஜாலியாகப்போகிறது.


நாயகனின் ஒரு நண்பன் தான் வில்லன் என்று முதல் பத்தியில் சொன்னேனே?அவன் பெண்களைப்பார்க்கும் பார்வை வேறு.பெண்களைப்பற்றி நண்பர்களிடத்தில்  செய்யும் கற்பிதங்களும் வேறு.


திருமணம் ஆன பெண்,ஆகாத பெண் யாரைக்கண்டாலும் இது சுலபமாக மடஙகி விடும்,இது கிறஙகி விடும் என்று தவறாக வழி நடத்துகிறான்.

நண்பனின் தவறான வழி காட்டலின் படி நாயகன் ,நாயகியைத்தனிமையான ஒரு சந்தர்ப்பத்தில்  தவறாக நடக்க முயல நாயகி அதிர்ச்சி அடைந்து நாயகனை விட்டு விலகி ஓடுகிறாள்.


இடை வேளை.


விருமாண்டி படத்தில் ஒவ்வொருவர் கோணத்திலும் ஒரே கதை புதுப்புது கோணத்தில்  சொல்லப்படுவது போல பின் பாதியில்  நாயகியின் பார்வையில் கதை நகர்கிறது,முதல் பாதியில் நடந்த நாயகன்- நாயகி சந்திப்புகள் நாயகியின் கோணத்தில் சொல்லப்படுகிறது.

இறுதியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் உடன் படம் முடிகிறது.


நாயகன் ஆக புதுமுகம் ஆகாஷ் நாகராஜன் இயல்பான ,அமைதியான நடிப்பில் மனம் கவர்கிறார்.பின் பாதியில் நாயகியின் டைரியைப்படித்து குற்ற உணர்ச்சியில் குமுறும்போது  முகத்தில் உணர்வுகளை நன்கு வெளிப்படுத்துகிறார்.

நாயகி ஆக வரும் புதுமுகம் ஜானகி சீனிவாசன் கல்லுக்குள் ஈரம் அருணா போல் முக சாயல்,நந்திதாதாஸ்,அர்ச்சனா போல் திராவிட நிறம்,கண்களாலேயே கதை சொல்கிறார்.இவருக்கும் வசனஙகள் குறைவு.ஆனால் நடிப்பு மிக பாந்தம்

வில்லன் ஆக அதாவது நாயகனின் நண்பர்களில் ஒருவராக ஹரி நடித்திருக்கிறார்.கவனிக்க வைக்கும் நடிப்பு.

நாயகனின் பெற்றோர் ,நாயகியின் அம்மா ,நண்பர்கள் என அனைவரின் நடிப்பும் அருமை.புது முகங்கள் போலவே தெரியவில்லை.


ஒளிப்பதிவு எட்வின்.கச்சிதமான கேமரா கோணஙகள்.நாயகியைக்ளோசப்பில் காட்டும் போது ரசனை.

எடிட்டர் வினோத் தின் எடிட்டிஙகில் படம் 135 நிமிடங்கள் ஓடுகிறது.பின் பாதியில் கொஞ்சம் மெதுவான திரைக்கதை.

இசை நந்தா.ஒரு பாடல் செம ஹிட் ஆகி இருக்கிறது.பின்னணி இசையும் கச்சிதம்


கதை,திரைக்கதை ,இயக்கம், தயாரிப்பு என அனைத்தும்  கே ஜே சுரேந்திரன்



சபாஷ்  டைரக்டர்


1 கதை நடக்கும் கால கட்டம் 2005 என்பதால் ஆடை வடிவமைப்பு,ஹேர் ஸ்டைல்,உடல் மொழி என  அனைத்திலும் காட்டிய கவனம்

2  நாயகி,நாயகன் உட்பட புதுமுகஙகள் அத்தனை பேரின் யதார்த்தமான நடிப்பு

3  யாரும் எதிர்பார்க்காத பிரமாதமான க்ளைமாக்ஸ்


  ரசித்த  வசனங்கள் 

பல வசனஙகள் ஜாலியாக ,கிண்டலாக ரசிக்கும்படி இருந்தாலும் அனைத்துமே பெண்களை கிண்டல் செய்யும் ,குறைத்து மதிப்பிடும் வசனஙகளே


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 என்னதான் ஒரு ஆள் தூண்டி விட்டாலும் நாயகன்,நாயகி இடம் ஸ்டெப் பை ஸ் டெப் ஆக முன்னேறாமல்,ஐ லவ் யூ கூட சொல்லாமல் திடீர் என அணைப்பது நம்ப முடியவில்லை


2 நாயகனின் நண்பன் ஆக வரும் வில்லன் ஏதோ ஒரு பெண்ணிடம் செமையாக மாத்து வாங்குவது போல் ஒரு சீன் வைத்து இருக்க வேண்டும்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -13+ குடும்பத்துடன் பார்க்கலாம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அனைத்துத்தரப்பினரும் ரசிக்க வேண்டிய மனதுக்கு இதமான ஒரு நல்ல படம்.ரேட்டிங்க் 3/5


Maayabimbum
Theatrical release poster
Directed byJ. K. Surendar
Written byJ. K. Surendar
Produced byJ. K. Surendar
Starring
  • Akash Natarajan
  • Janaki
CinematographyEdwin
Edited byVinoth
Music byNandha
Production
company
Self Start Productions
Release date
  • 23 January 2026
Running time
145 minutes[1]
CountryIndia
LanguageTamil

Monday, January 26, 2026

TERE ISHK MEIN (2025)ஹிந்தி- தேரே இஸ்க் மே-உன் காதலில் -தமிழ்- சினிமா விமர்சனம்(ரொமாண்டிக் ட்ராமா)@நெட் பிளிக்ஸ்,

                 


    85 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 149 கோடி வசூல் செய்த இந்தப்படம் 28/11/2025 முதல் திரை அரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி இப்போது தமிழ் டப்பிங்கில் நெட் பிளிக்ஸ் தளத்தில் 23/1/2026 முதல் காணக்கிடைக்கிறது.


ராஞ்சனா(2013) படம் எடுத்த அதே யூனிட் இந்தப்படத்தை எடுத்துள்ளது.ஹிந்திப்படம் என்றாலும் தனுஷ் ஹீரோ,ஏ ஆர் ரஹ்மான் இசை என்பதால் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.      


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  வன்முறையை மாற்ற நினைக்கும்  சப்ஜெக்ட்டில் பிஹெச் டி க்காக  ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் மாணவி.நாயகன்  வன்முறை குணம் கொண்ட கோபக்கார ரவுடி மாணவன்.டில்லி யில் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கிறான்.பாதி நேரம் யாரையாவது அடிக்கிறான்.


நாயகனின் அப்பா சாதாரண நடுத்தரக்குடும்பத்தை சேர்ந்த ஏழை.நாயகியின் அப்பா மிகப்பெரிய செல்வந்தர் ஆக இருக்கும் ஐ ஏ எஸ் ஆபீசர்.


நாயகன் நாயகியை ஒரு தலையாகக்காதலிக்கிறார்.நாயகிக்குக்காதல் இல்லை.ஆனால் பிஹெச் டி படிப்புக்காக நாயகன் தேவைப்படுகிறார்.

நாயகன் நாயகியின் அப்பாவிடம் பெண் கேட்கப்போனபோது நீ முதல்ல ஐ ஏ எஸ் ஆகு ,அப்புறம் பார்க்கலாம் எனக்கூறி விடுகிறார்.

நாயகன் மிக சிரமப்பட்டு ஐ ஏ எஸ் எழுதி பாஸ் ஆகிறார்.நாயகியின் வீட்டுக்கு வந்தால் அன்று நாயகிக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம்.இதற்குப்பின் நடக்கும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை.


நாயகன் ஆக தனுஷ் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்,ரவுடி மாணவனாக,காதலன் ஆக,பைலட் ஆபீசர் ஆக என மாறுபட்ட 3 கதா பாத்திரங்களில்  அருமையாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.


நாயகி ஆக க்ரித்தி சரோன் அழகு முகம்,அருமை நடிப்பு என நம் மனம் கவர்கிறார்.குற்ற உணர்ச்சியுடன் நாயகனிடம் பேசும் காட்சிகள்,க்ளைமாக்சில் பேசும் உயிரோட்டமான வசனங்களில் மிளிர்கிறார்.


நாயகனின் அப்பாவாக பிரகாஷ ராஜ் பண்பட்ட ,அனுபவம் மிக்க நடிப்பு.நாயகியின் அப்பாவாக வருபவரின் வில்லத்தனமான நடிப்பும் ரசிக்க வைத்தது.

மற்ற அனைவர் நடிப்பும் மெச்சும்படி இருக்கிறது.ஏ ஆர் ரஹ்மானின் இசையில் நான்கு பாடல்கள்.ஒன்று மட்டும் செம ஹிட் ஆகி இருக்கிறது.பின்னணி இசையில் பெரிய அளவிம் மனம் கவரவில்லை.

துஷார் காந்தி ரே வின் ஒளிப்பதிவில் நாயகியை அழுகையிலும் அழகாகக்காட்டி உள்ளார்.

ஹேமல் கோத்தாரியின் எடிட்டிங் கில் படம் 169 நிமிடஙகள் ஓடுகிறது.கடைசி 40 நிமிடஙகள் நம் பொறுமையை சோதிக்கிறது.இன்னமும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்

நீரஜ் யாதவ்,ஹ்மான்சு சர்மா ஆகிய இருவரும்  திரைக்கதை எழுத ஆனந்த் எல் ராய் இயக்கி இருக்கிறார்.



சபாஷ்  டைரக்டர்

1. பிரகாஷ ராஜ் அனைவரிடமும் மன்னிப்புக்கேட்கும் சீன் கண் கலங்க வைக்கிறது

2 பிளாஷ்பேக் சீன்கள் ,தற்காலத்தில் நடப்பவை என மாறி மாறி நான் லீனியர் கட்டில் திரைக்கதை அமைத்த விதம் சுவராஸ்யம்

3 நாயகன்,நாயகி இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.


  ரசித்த  வசனங்கள் 


1 மனிதர்களை அதிகம் பாதிக்கும் விஷயம் வன்முறை தான்

2 வன்முறையால் யாருக்கும் ,எந்தப்பயனும் இல்லை,ஆனால் எல்லார் மனதிலும் இது ஒட்டிக்கிட்டுத்தான் இருக்கு.

3 மிஸ்,நீங்க கொஞ்சம் அழகு கம்மின்னாலும் நான் இப்படிப்பண்ணி இருக்க மாட்டேன்

4  நான் எல்லாம் லவ் பண்ண ஆரம்பிச்சா மொத்த டெல்லியையும் எரிச்சிடுவேன்

5 உன் கிட்டே உனக்க்ய்ப்பிடிச்சது எது?

எல்லாம் தான்.

என் கிட்டே?

உன் உடம்பு

6  வறுமையைப்பார்க்கும்போது உஉனக்கு என்ன தோணும்?

பணக்காரஙகளை சாகடிக்கனும்னு தோணும்.

நீ என்னவா ஆகனும்னு ஆசை?

யாராலும் சாகடிக்க முடியாத பணக்காரனா  ஆக ஆசை.


7 ஏழையோட அம்மான்னா வெறும் 20% தீக்காயஙகள் ஆனால் செத்துடுவாங்களாம்.

8 கட்டாயத்தால் காதல் வராது.

9 வாழ்க்கை அமையாது.நாம் தான் அமைச்சுக்கனும்

10. பசஙக சைக்காலஜி எனக்குத்தெரியும்.தான் காதலித்த பெண்ணைக்கல்யாணக்கோலத்தில் பார்த்தா  பேசாம போயிடுவாங்க.

11 உலகம் பூரா எல்லாருக்கும் கிடைக்குது முக்தி,ஆனா உனக்கு மட்டும் கிடைக்கலை முக்தி,அதானே அவ பேரு?


12 காதலில் மரணம் தான் இருக்கு,முக்தி இல்லை.

13  உனக்குப்பிறக்கறது ஒரு பையனா இருக்கட்டும்,அப்போதான் காதலில் தோத்து சாகறது ஒரு பையன் தான் எனப்புரியும்

14 பெண்கள் எப்போதும் ராஜகுமாரனைப்பற்றித்தான் கனவு காண்பார்கள் ,வேலைக்காரனை அல்ல

15 பெண்கள் காதலில் எப்போதும் புத்திசாலித்தனனாதான் முடிவு எடுப்பாஙக.

16  நான் சாப்பிடறது எல்லாம் ரத்தமா மாறாம வெறுப்பா மாறுது.

17  என் குழந்தையை நீ பார்த்துக்குவியா?

என்னையே என்னால பார்த்துக்க முடியல.

18 ஒரு சிலரோட தலை எழுத்து காதலில் எழுதி இருக்கும்,ஒரு சிலரோட தலை எழுத்து வன்முறைல எழுதி இருக்கும்

19  காதல் என்றால் என்ன?என்று தெரிஞ்சு ,புரிஞ்சு காதலித்த கடைசித்தலைமுறை நாமாத்தான் இருப்போம்

20.  இப்போ வர்ற தலைமுறை எல்லாமே பண்றாஙக ,காதலைத்தவிர

21 நான் இதை வேலையாப்பார்க்கிறேன்,நீ காதலாப்பார்க்கிறே


நீ வேலைக்காக சட்டையைக்கழட்டலாம்.ஆனா காதலிலுக்காக நான்  அதை செய்ய முடியாது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1. நாயகியின் கேரக்டர் டிசைன் சரியாக வடிவமைக்கப்படலை.மாற்றி மாற்றிப்பேசுகிறார்.ஒரு சீனில் காதல் இல்லை என்கிறார்.இன்னொரு சீனில் வா,நாம் இருவரும் செத்துடலாம்கறார்.இன்னொரு சீனில் அவன் வர்றதுக்குள் என்னை எங்காவது கூட்டிட்டுப்போயிடுங்கறார்.சைக்காலஜி படிச்சவருக்கே ஒரு சைக்காலஜிஸ்ட் தேவைப்படுவார் போல.

2  ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த காதலன் கதை தான் பட்டி டிங்கரிங்க் செய்து இருக்கிறார்கள்

3 1980 களில் வந்திருக்க வேண்டிய படம்.

4 நாயகன்,நாயகி இருவரில் யார் மீதும் நமக்கு பரிதாபம் வரவில்லை.ஒரு எமோஷனல் கனெக்ட்டே இல்லை

5 நாயகியின் வீட்டை எரித்து போலீசால் எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்ட கிரிமினல் ரெக்கார்ட் ஸ் பல உள்ள  நாயகன் எப்படி ஐ ஏ எஸ் ஆக முடியும்?

6 நாயகி தம் அடிப்பது ,தண்ணி அடிப்பது தேவை இல்லாத காட்சிகள்.

7 ஒரு ஐ ஏ எஸ் ஆபீசர் வீட்டில் செக்யூரிட்டி இருக்காதா? தனி ஆளாக நாயகன் வந்து அசால்ட்டா பங்களாவை எரிக்கிறார்.தடுக்க ஆளில்லாமல் போலீசுக்கு ,பயர் சர்வீசுக்கு போன் பண்ணிட்டு இருக்கார்  நாயகியின் அப்பா


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+ குடும்பத்துடன் பார்க்கலாம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதலர்கள் ,தனுஷ ரசிகர்கள் பார்க்கலாம். சராசரி காதல் கதை.ரேட்டிங் 2.5 / 5

Friday, January 23, 2026

AGATHA CHRISTIE'S SEVEN DIALS(2026)-அகதா கிறிஸ்டியின் செவன் டயல்ஸ் - ஆங்கிலம்/தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (க்ரைம் திரில்லர் ) @நெட் பிளிக்ஸ்

                     

         அகதா கிறிஸ்டியின் செவன் டயல்ஸ் மிஸ்ட்டரி என்ற நாவலைத்தழுவி எடுக்கப்பட்ட மினி சீரிஸ் இது.மொத்தம் 3 எபிசோடுகள்,ஒவ்வொன்றும் 55 நிமிடஙகள்.ஆக மொத்தம் 165 நிமிடஙகள் ஆகும்.நெட் பிளிக்சில் தமிழ் டப்பிஙகில் கிடைக்கிறது.


இந்த நாவல் அகதா கிறிஸ்டி புகழ் பெறுவதற்கு முன் 1929ல் எழுதப்பட்ட நாவல்.நாவலும் பெரிய அளவில் பிரபலம் ஆகவில்லை.அதனால் திரைக்கதையில் சில மாற்றஙகளுடன் வெளியாகி இருக்கிறது.


கிறிஸ் சிப்மர் தான் திரைக்கதை எழுதியது.கிறிஸ் வீனி என்பவர் தான் இயக்கி இருக்கிறார்.

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகியின் அப்பா மர்மமான முறையில்  ஒரு எருது மோதி இறக்கிறார்.1920 ல் இந்த சம்பவம் நடக்கிறது.

சில ஆண்டுகள் கழித்து 1925 ல் நாயகியும் ,நாயகியின் அம்மாவும் ஒன்றாக வசிக்கிறார்கள்.அப்பா இல்லாததால் கொஞ்சம் பணக்கஷ்டம்.அதனால் அவர்கள் குடி இருப்பது போக மீதி மேன்ஷன்களை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.


அங்கே ஒரு பார்ட்டி நடக்கிறது.அதற்கு பல பணக்காரர்கள் வருகிறார்கள்.நாயகியின் மனம் கவர்ந்த ஒரு நபரும் வருகிறார்.அவர் தான் நாயகன். நாயகியிடம் அடுத்த வாரம் இன்னொரு இடத்தில் பார்ட்டி நடக்கிறது.அதற்கு உன்னை எதிர்பார்க்கிறேன் என அழைப்பு விடுக்கிறார்.நாயகியும் சம்மதிக்கிறார்.


நாயகன் நன்றாக உறங்கக்கூடியவர்.அதனால் அவர் உறஙகும் அறையில் அவர் அறியாத வண்ணம் 8 அலாரம் அடிக்கும் அலாரம் டைம் பீஸ்களை அந்த அறையில் அவரின் நண்பர்கள் ஒளித்து வைக்கிறார்கள்.காலையில் அவர் பதறி அடித்துக்கொண்டு எழ வேண்டும் என்பது அவர்களது திட்டம்.

ஆனால் அடுத்த நாள் காலையில் அலாரம் அடிக்கும்போது நாயகன் எழவில்லை.மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் சொல்கிறது.


ஆனால் நாயகிக்கு அதில் நம்பிக்கை இல்லை.அடுத்த வாரம் தன் காதலை வெளிப்படுத்த இருக்கும் நபர் எதற்குத்தற்கொலை செய்யப்போகிறார்?என்று நாயகிக்கு சந்தேகம் 


இந்தக்கேசை நாயகி  துப்பு துலக்க முற்படுகிறார்.அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்கக் தான் மீதித்திரைக்கதை.

நாயகி ஆக மியா மெக்கன்னா ப்ரூஸ் அருமையாக நடித்திருக்கிறார்.சோனியா அகர்வால் + வினோதினி இருவரின் கலவையாக அவர் முகம் மிக அழகு.

நாயகியின் அம்மாவாக ஹெலனா போனம் கார்ட்டர் கச்சிதமாக நடித்திருக்கிறார்.


மார்டின் பீமர் போலீஸ் ஆபீசர் ஆக நடித்திருக்கிறார்.

மற்ற அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார்கள்.


ஒளிப்பதிவு,இசை,எடிட்டிஙக் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் சிறப்பு


சபாஷ்  டைரக்டர்

1  நாயகியின் அப்பா,காதலன்,நண்பன்  ஆகிய 3 கொலைகளுக்கும் உள்ள தொடர்பை விவரிக்கும் விதம் அருமை

2 இது ஒரு பீரியாடிக் பிலிம் என்பதால் ஆர்ட் டைரக்சன் பர்பெக்ட்.அந்தக்கால கார்கள்,வண்டிகள் ,ஆடை வடிவமைப்பு அனைத்தும் துல்லியம்

3 கொலையாளி யார் என்று தெரிந்த பின் அதற்குப்பின் வரும் இன்னொரு ட்விஸ்ட் அருமை

4 செவன் டயல்ஸ் என்பது வாட்சா?இடத்தின் பெயரா? பார்ட்டியின் பெயரா?என்று மாற்றி மாற்றிக்குழப்புவது ,பின் தெளிவது அருமை.

  ரசித்த  வசனங்கள் 

1 எல்லார் கிட்டேயும் சொல்லிட்டு இருந்தா அது ரகசியம் இல்லை

2 மருந்தும்,மதுவும் எப்போதும் ஆபத்துதான்

3 ஒருவர் மனதில் என்ன இருக்கு என்பதை யாராலும் சொல்ல முடியாது.

4 பிரச்சனையைத்தேடிப்போறவஙக தான் அதுல மாட்டிக்குவாங்க

5 சொல்றதை விட செய்யறது முதன்மையா இருக்கனும்

6 போலியானவஙகளைக்கண்டுபிடிப்பது ஈசி,தன் மேல் எந்தத்தப்பும் இல்லைன்னு நிரூபித்துக்கொண்டே இருப்பார்கள்.

7 பசஙக தான்  எப்போதும் காவலுக்கு இருக்கனும்

8 என் கணவர் இல்லாததால் நான் கட்டுப்பாடு இல்லாம ஓடிட்டு இருக்கேன்

9 சரியாப்புரிஞசுக்கும்போது வதந்திகள் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 க்ளைமாக்ஸின் போது தெரிய வேண்டிய ட்விஸ்ட் அதற்கு முன்பே நம்மால் யூகிக்க முடிவது பலவீனம்.

2 பொதுவாக க்ரைம் திரில்லரில் முதலில் சந்தேகத்துக்கு இடமாக சிலரைக்காட்டி விட்டு  க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆக வேறு ஒரு நபரைகாட்டி விடுவது செமயாக இருக்கும்.அந்த சுவராஸ்யம் இதில் இல்லை.

3 ஒரிஜினல் நாவலில் கொலையாளி வேறு ஒருவர்,இந்த  வெப் சீரிசில் திரைக்கதைப்படி கொலையாளி வேறு ஒருவர்



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -13+ குடும்பத்துடன் பார்க்கலாம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பிரமாதமான திரில்லர் எனக்கொண்டாடவும் முடியவில்லை.ரொம்ப சுமார் என தள்ளவும் முடியபில்லை.சராசரி ரகம்.ரேட்டிங்க் 2.5 /5


thanx KALKI WEEKLY ON LINE 


https://kalkionline.com/entertainment/chinnathirai-ott/agatha-christies-seven-dials-review

விமர்சனம்: AGATHA CHRISTIE'S SEVEN DIALS (2026) - வெப் சீரிஸ்..!


--

 சென்னிமலை சி.பி. செந்தில்குமார்,

Monday, January 19, 2026

தலைவர் தம்பி தலைமையில் (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் ( பேமிலி காமெடி டிராமா )

             

         2025 பொங்கலுக்கு எதிர்பாராத  வெற்றி  பெற்ற  சுந்தர் சி யின்  மதகஜ ராஜா போல  இந்த  வருட  பொங்கலுக்கு  பராசக்தி , வா வாத்தியார்  ஆகிய  படங்களை  அசால்ட் ஆக ஓவர் டேக்  செய்து  குடும்பங்கள்  கொண்டாடும் வெற்றிப்படமாக  இது அமைந்து விட் டது 


கேரள இயக்குனர் ஆன  நிதிஷ்  சகாதேவ்  பலிமி ( பேமிலி )  என்ற  குடும்பக்கதையை  இயக்கி ஹிட் அடித்தது போலவே  இதையும்  ஹிட் ஆக்கி  விட்டார் . இது மம்முட்டிக்கு   சொல்லப்பட்டு  ஓகே  ஆன கதை . ஆனால்   சில  பிரச்சனைகளால்   அவரால் நடிக்க   முடியாமல் போக  ஜீவா   நடித்தார் . ராம் , கற்றது தமிழ் , சிவா மனசுல சக்தி , கோ   ஆகிய   வெற்றிப்படங்கள்  வரிசையில்   ஜீ வாவுக்கு  இது  ஒரு ஹிட் படம்    




ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  அந்த ஊரின்  பஞ்சாயத்துத்தலைவர் . அடுத்தடுத்த  வீடுகளில்  இருக்கும்  இரு நபர்களின்  வீட்டில்  ஒரே இரவில்  கல்யாணக்கோலமும்  , கருமாதிக்கோலமும்  அரங்கேறுகிறது . இரு வீட்டாருக்கும் ஏற்கனவே  வாய்க்கால் தகராறு  இருக்கிறது . காலை  10.30 க்கு கல்யாண முகூர்த்தம் . வம்படியாக  அதே  டைமில் தான் டெட்  பாடி யையும் எடுப்பேன்  என அடம் பிடிக்கிறார் . இந்த சீரியஸ் ஆன பிரச்சனையை  காமெடியாக   எப்படி சொல்லி இருக்கிறார் இயக்குனர் என்பதே திரைக்கதையின் சிறப்பு அம்சம்


நாயகன் ஆக  ஜீவா  சிறப்பாக    நடித்திருக்கிறார் , ஆனால் சிவா மனசுல சக்தி  அளவுக்கு  அதிக   வாய்ப்பு இல்லை . படத்தில்  இவருக்கு  ஜோடி இல்லை , டூயட்  இல்லை . இளவரசு திருமணப்பெண்ணின்  அப்பாவாகவும் , தம்பி ராமய்யா  இறந்து விட் ட  அப்பாவின்   மகனாகவும்  போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள் . மைனா வுக்குப்பின்  , தம்பி ராமய்யா க்கு  உருப்படியான கேரக்ட்டர் . முத்துக்கு  முத்தாக  படத்ததுக்குப்பின் இளவரசு  இயல்பான கேரக்ட்டரில்  மிளிர்கிறார்   


ஜென்சன்  திவாகர் ,சர்ஜின்  குமார்  இருவரின்  காமெடி  களை  கட்டுகிறது ,மாப்பிள்ளையாக   வரும்   சுபாஷ்  கண்ணன்  நேரம் காலம்   தெரியாமல்  மணப்பெண்ணுக்கு போன்  போட்டு கடலை  போடுவதும் , டார்ச்சர்   தாங்காமல்  மணப்பெண்  பொருமுவதும் கலகல 


மணப்பெண்  சவும்யாவாக  வரும் பிரார்த்தனா  அழகு   முகம் , பாந்தமான  நடிப்பு , கவுரவமான   உடை  என கவர்கிறார் . இப்போது   வரும் படங்களில்   எல்லாம்  நாயகிகளை  அரை குறை யாகவே  பார்த்து  இப்படிப்பார்க்க  நிம்மதியாக இருக்கிறது 


பப்லு அஜூ   தான் ஒளிப்பதிவு . லொக்கேஷன்  இரண்டு   வீடுகள்  மட்டும் தான் என்பதால் சவாலான பனி தான் .அர்ஜுனே  பாபுவின்   எடிட்டிங்கில்   படம்  113   நிமிடங்கள்   மட்டுமே   ஓடுகிறது . ஷார்ப் ட்ரிம்மிங்க் 

இசை   விஷ்ணு விஜய் . கேரள மாநிலத்தவருக்கு   இனி வாய்ப்பு வரலாம் . பாடல்கள்  ஓகே  ரகம் , பின்னணி இசை ஆஹா ரகம் 

சஞ்ஜோ  ஜோசப் ,அனுராப்  ஆகிய   இருவருடன் இணைந்து   திரைக்கதை எழுதிய கேரள இயக்குனர் ஆன  நிதிஷ்  சகாதேவ்   தனித்து   இயக்கி இருக்கிறார் . ஒரு  சிம்ப்பிள்  ஆன ஒன லைன்  , அதை வைத்து   நல்ல திரைக்கதை  எழுதிய  இவரைப்பாராட்டலாம் 

சபாஷ்  டைரக்டர்


1    ஜீவா  இளவரசிடம்  இழவு  செய்தியை சொல்லும்போது வாடா வாடா பையா என் வாசல் வந்து போய்யா என்ற குத்தாட்டப்பாட்டு ஒலிப்பது  கலக்கல் காமெடி 

2  மணப்பெண்  சவும்யாவாக  வரும் பிரார்த்தனா  கண்ணியமான  ஆடை வடிவமைப்பு .,அடக்கமான கிராமத்து அழகி . இது போன்ற  அடக்கமான அழகியைக்கடைசியாக  1998ம் ஆண்டு  நினைத்தேன்  வந்தாய்  படத்தில்   தேவயானியாகப்பார்த்ததுடன் சரி 

3  மணப்பெண்ணின்  ஒருதலைக்காதலனாக  வரும் அந்த தறுதலை  தாலியுடன்  மணப்பெண்  வீட்டுக்கு வந்து செய்யும் காமெடி அலப்பறைகள் 

4  அடுத்த  கட்டமாக  கதையை  எப்படி  நகர்த்துவது   என்று  தெரியாத   நிலையில்  ஒருதலைக்காதலனை  வைத்து  காமெடி  செக்மன்ட் , பதட்டமான  சூழல்  என   விறுவிறுப்பாகக்கதையை நகர்த்திய லாவகம் 

5   கல்யாண  வீட்டுக்கு வந்த   பெண்கள்  நகை , ஒப்பனையை  அகற்றி  அப்படியே  அருகில் இருக்கும் இழவு வீட்டுக்குப்போகும் சீன்   செம கலக்கல்  யதார்த்தம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்

  1  பூவா    சிரிக்கணும், தொட் டா  சிவக்கனும் 


  ரசித்த  வசனங்கள் 



1  அண்ணே! ஜூஸ்  போடவா? 

ஒரு நிமிஷம் இருடா .. டியர் , உனக்கு என்ன கலர் பிடிக்கும்? பிங்க்க்கா? 

கிளிப்பச்சை 

டேய் ,பச்சை க்கலர்ல ஒரு ஜூஸ் போடு 


2    இழவு வீட்டுக்குப்பக்கத்துல கல்யாண வீடு 

அப்போ  ஒரு பக்கம் தப்பு , இன்னொரு பக்கம் தவிலு , அடி  கிழியப்போகுது ? 

3  கல்யாண வீட் டு ல வேணா  நீ ராஜாவா இருக்கலாம், ஆனா சாவு வீட்டில் நான் தான் ராஜா 

4   பக்கத்து வீட்டுக்காரனுக்குப்பிரஷர் தருவதற்காக பெத்த அப்பனையே கொல்வாங்களா? 

5   கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன், நீ யார்வீட்டுத்தாத்தா? இங்கிட்டும் இருக்கே ? அங்கிட்டும் இருக்கே ? 

6  அண்ணா, உங்களுக்காகத்தான் இந்த குவாட்டரை வாங்கி வந்தேன் , திடீர்னு செத்துப்போயிட்டீங்க , இனி யாருன்னா இதை க்குடிப்பாங்க ? 

7  இந்தக்கிறுக்கனை எந்தக்கிறு க்கன்  வரச்சொன்னான்?

நான் தான் 

8  அய்யாவைத்தேருல  கூட்டிட்டுப்போறேன்னீங்க , இப்போ  சேறு ல  கிடக்காரு ? 

8  கன்னி யப்பன்னு உனக்கு யாரு பேரு வெச்சது ? கல்யாணமே ஆகாம இருக்கே ? 

9  சவுமி சவுமின்னா அவ    வந்துடுவாளா ?அவ என்ன சின்னப்பொண்ணா? ஆளாளுக்குத்தே டிட்டு இருக்கீங்க ? 

10 அடப்பாவி , செத்த   அப்பனை மறுபடியும்  கொன்னுட்டியே?  

11  ஆம்பளைங்களுக்கு  கொம்பு மட்டும் தான் இல்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  இழவு வீட்டுக்குப்போனா குளிக்கணும் , ஆனால்  ஜீவா   டீக்கடைக்குப்போவது போல இழவு வீட்டுக்கும் கல்யாண வீட்டுக்கும் மாறி மாறி அசால்டாப்போய்க்கிட் டே இருக்காரே? எப்படி ? 

2  கிராமத்தில் ( மார்த்தாண்டம்   வடடார  வழக்கு )  நடக்கும்  கதையில்  ஆங்காங்கே  சென்னை  பாஷை  புகுந்தது எப்படி ?

3   வாட் டர்   டேங்க்  இடிந்து  விழுந்து   தண்ணீர்   பெருகும்  காடசியில்   சி ஜி ஒர்க்  சரி இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -தரமான   மலையாளப்படம்  பார்த்த   திருப்தி ,  ரூரல்  காமெடி டிராமா   ரசிகர்கள்   பார்க்கலாம் , விகடன் மார்க் யூகம்  45 , குமுதம்  ரேங்க்கிங்க்   அருமை . ரேட்டிங்க்  3 / 5 



Thalaivar Thambi Thalaimaiyil
Film poster
Directed byNithish Sahadev
Written by
  • Sanjo Joseph
  • Nithish Sahadev
  • Anuraj O. B.
Produced byKannan Ravi
Starring
CinematographyBablu Aju
Edited byArjune Babu
Music byVishnu Vijay
Production
company
Kannan Ravi Productions
Release date
  • 15 January 2026
Running time
113 minutes[1]
CountryIndia
LanguageTamil

Friday, January 16, 2026

வா வாத்தியார் (2026) - தமிழ் - சினிமா விமர்சனம் (பேண்ட் டசி டிராமா )

         

            கலைஞர்  டி வி யின்  நாளையை  இயக்குனர்  மூலம்  புகழ்  பெற்ற இயக்குனர்  நலன்  குமார சாமி  சூது  கவ்வும் (2013) , காதலும் கடந்து போகும் (2016) ஆகிய  வெற்றிப்படங்கள்  இயக்கியதன் மூலம்  கவனிக்க வைத்தவர்   தீயா வேலை செய்யணும் குமாரு (2013)  , மாயவன் (20170 ஆகிய  படங்களின் திரைக்கதை  ஆசியராகவும் இருந்திருக்கிறார் . காமெடி + திரில்லர்   தான் இவரது பாணி .14/1/2026  முதல்  திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் ஒர்க்  அவுட்  ஆனதா? என்பதைப்பார்ப்போம்        


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  தாத்தா  தீவிரமான எம் ஜி ஆர் ரசிகன் . எம் ஜி ஆர்  இறந்த அதே  நாளில்  பிறந்த  தனது  பேரன்  உடலில்  எம் ஜி ஆர்  தான் குடி இருக்கிறார்  என்று நம்புபவர் . சின்னவயதில் இருந்தே  அவனை எம் ஜி ஆர் படங்கள் எல்லாம் காட்டி வளர்த்து வருகிறார் . எம் ஜி ஆர்  போல  கடமை தவறாத  வீரனாக பேரன் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் . ஆனால்  நாயகன்  நம்பியார் ஆக வளர்கிறான்.,பெ ரியவன் ஆனதும் போலிஸ்   இன்ஸ் பெக் டர்  ஆகி  லஞ்ச்ம  வாங்கும் கெ ட்ட போலீஸ் ஆக இருக்கிறான் .இந்த  உண்மை  தாத்தாவுக்குத்தெரிய வரும்போது அவர் மாரடைப்பில் மரணம் அடைகிறார் 


நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை எல்லாம் படம் பிடித்து ஒரு இளைஞர் கூட்டம் மஞ்சள் முகம் என்ற அமைப்பின் பெயரில் இயஙகுகிறது.இது வில்லனுக்கு இடைஞ்சல் ஆக இருப்பதால் போலீஸ் என்கவுண்ட்டர் மூலம் அந்தக்கூட்டத்தை அழிக்க நினைக்கிறான் வில்லன்.இதற்கு நாயகனும் உடந்தை.

ஒரு கட்டத்தில் எம் ஜி ஆரின் ஆவி நாயகனின் உடலில் புகுந்து  அவனை நல்லவன் ஆக்குகிறது.இதற்குப்பின் நிகழும்  சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை


நாயகன் ஆக கார்த்தி.பருத்தி வீரன் ல இருந்தே இவரது அசால்ட்டான உடல் மொழியை ரசித்து வந்திருக்கிறோம்.இதில் இவரது கேரக்டர் டிசைன் கச்சிதம்.எம் ஜி ஆர் மேனரிசம் ஓரளவு இவருக்கு வருகிறது.ஆனால் இவருக்கு முன் எம் ஜி ஆர் போல ஸ்டைலிசம் காட்டிய சத்யராஜ்,எஸ் எஸ் சந்திரன் ,அளவுக்கு இல்லை.ஆனால் மு.க .முத்து அளவுக்கு மோசம் இல்லை.


நாயகி ஆக கீர்த்தி ஷெட்டி எடுபடவில்லை.ஆவிகளுடன் பேசும் கேரக்டர்.அவரது முகமும்,நடிப்பும் சுமார் ரகமே.

நாயகனின் தாத்தா ஆக ராஜ்கிரண் நல்ல குணச்சித்திர நடிப்பு.வில்லன் ஆக சத்யராஜ் .கெட்டப் நடிப்பு இரண்டுமே எடுபடவில்லை.

கருணாகரன்,ஆனந்தராஜ்,நிழல்கள் ரவி ,சில்பா மஞ்சுநாத் சும்மா வந்து போகிறார்கள்.


வில்லியம்சின் ஒளிப்பதிவு அருமை.சந்தோஷ நாராயணன் இசையில் பாடல்கள் பெரிதாக ஹிட் ஆகவில்லை.பின்னணி இசை ஓக்கே ரகம்.வெற்றி கிருஷ்ணன் எடிட்டிஙகில் படம் 127 நிமிடஙகள் ஓடுகிறது.


கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் நலன் குமார சாமி

சபாஷ்  டைரக்டர்


1   டூயட் சாங்கில்  பிரேமுக்குள்  இருக்கும் பிம்பங்கள்  உயிர்  பெற்று  ஆடுவதைப் போன்ற  காட்சி  ரசிக்க வைத்தது 


2  தாத்தாவுக்குப்பிடித்தது   எம் ஜி ஆர் , பேரனுக்குப்பிடித்தது  நம்பியார் , அதை  வைத்துக்காட்சிகள்  என்ற   தாட்  பிராசஸ்   அருமை 

3 எம் ஜி ஆர் ரசிகர்களைக்கவரும் வகையில் எம் ஜி ஆர் ஹிட் பாடல்களை பொருத்தமான இடங்களில் சேர்த்த விதம்

4 ரசிகர்களின் கை தட்டலைபெற்ற இண்ட்டர்வெல் பிளாக் சீன்



  ரசித்த  வசனங்கள் 


1 ஒரு  நல்லவனுக்கு  சோதனை  வந்தால் அவனுக்கு நாம் துணை நிக்கணும் .

2   அரசியல்வாதின்னாலே நடிக்கறதுதானே வேலை 

3   எதுக்கு சார்  அடிக்கறீங்க? வாரண்ட் இருக்கா? 

 அடிக்கறதுக்கு  எதுக்குடா  வாரண்ட் ? 

4 பயப்படுவதற்கு ஒன்றும்  இல்லை , கொஞ்சம்   பயந்திருக்கிறார் 

5   கோயிலுக்கு செலவு செய்து தான் புண்ணியம் சேர்க்கணும் என்று இல்லை , சில சமயம் போருக்கும் செலவு செய்யலாம் 

6  நீ பயப்படாதே , நான் இருக்கேன் 


 நான் பயப்படவே இல்லை 

7  என்னய்யா போலீஸ்  நீங்க ? எனக்கும் வேலை  செய்ய மாட் டேங்கறிங்க , மக்களுக்கும் வேலை  செய்ய மாட் டேங்கறிங்க


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1    கோர்ட்  சீனில்  ஜட்ஜ்  எரிந்து  எரிந்து  விழுந்து  கத்திப்பேசுவது எல்லாம் ஓவர் . நிஜத்தில்  எந்த  ஜட்ஜும்  அப்படிக்கிடையாது . அமைதியாகத்தான் பேசுவார்கள் 

2   நாயகன்   6 மாதங்கள் சஸ்பெண்ட்  ஆன செய்தி  பேப்பரில்  வந்திருக்கிறது . அது தாத்தாவுக்குத்தெரியாமல் இருக்க  தாத்தாவின்  கண்ணாடியை  நாயகன்  ஒளித்து   வைக்கிறான் . அக்கம், பக்கம் , சொந்த பந்தம்  யாரும் பேப்பரே  படிக்க மாட்டார்களா? தாத்தாவிடம் விசாரிக்க  மாட்டார்களா? 

3 தாத்தாவாக  வரும் ராஜ்கிரண்  ஓப்பனிங்க் சீனில்  எப்படி இருக்கிறாரோ  அதே கெட்டப்பில்  25  வருடங்களுக்குப்பின்னும்  மாற்றம்  இல்லாமல்  இருக்கிறார் , எப்படி ?

4  எம் ஜி ஆருக்கு  சோக சீன்  செட் ஆகாது , இருந்தும்  தரை மேல்  பிறக்க வைத்தான்  பாடலுக்கு  எம் ஜி ஆர்  போல் வேடம் இட்ட  கலைஞர்கள்  டான்ஸ்  மூவ்மென்ட்  தருவது எடுபடவில்லை 

5  நாயகன்  ஒரே  ஒரு கருப்புக்கர்ச்சிப்பைக்கண்களில் கட்டிக்கொண்டால்  சக போலீஸ் அதிகாரிகளுக்கு அவரை அடை யாளம் தெரியாமல் போய் விடுமா? 

6   ஆவிகளுடன்  பேசும் நாயகி  வரும் போர்ஷன்களும்  எடுபடவில்லை ,நாயகனுடனான  ரொமாண்டிக் போர்சனும் கவரவில்லை 

7   நாயகன்  கெடடவன் ஆகவும்  வாத்தியார்  எம் ஜி ஆர் மாதிரியும்  மாறி மாறி  ஒரே ஷாட்டில் நடிப்பது  அந்நியன் , அம்பி யி  ன்=சீனை  நினைவு படுத்துவதால் ரசிக்க முடியவில்லை 

8   ராஜாவின்  பார்வை ராணியின் பக்கம்   ரீ மிக்ஸ்   சாங்க்  சகிக்கவில்லை  டான்ஸ்   ஸ்டெப்  கொடுமை 

9 திரைக்கதை அமைப்பில் மாஸ்க் ஆப் ஜாரோ ,சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் கண் முன் வந்து போகின்றன.


10 நாயகன் ஸ்பிலிட் பர்சனாலிட்டியால் அப்படி நடந்துகொள்கிறானா? எம் ஜி ஆர் ஆவி புகுந்ததாலா ?என்பதைத்தெளிவாக சொல்லவில்லை


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு ஓரளவு பிடிக்கும்.நலன் குமாரசாமி ரசிகர்களுக்கு ஏமாற்றம்.கார்த்தி ரசிகர்கள் பாவம்.விகடன் மார்க் யூகம் - 40 குமுதம் ரேங்க்கிங்க். சுமார்.ரேட்டிங் 2/5


Tuesday, January 13, 2026

PENNU CASE (2026)-மலையாளம் - சினிமா விமர்சனம் (காமெடி க்ரைம் ட்ராமா)

                             


10/1/2026 முதல் வெளியான இந்தப்படம் தமிழில் வெளிவந்த நான் அவன் இல்லை ஜெமினிகணேசன் வெர்சன் ,ஜீவன் வெர்சன் போல ஆணுக்குப்பதிலாகப்பெண்ணின் வெர்சன்.

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு திருமணத்தில் மணப்பெண்ணாக  மணமேடையில் அமர்ந்திருக்கிறார்.அப்போது போலீஸ் வந்து அவரைக்கைது செய்கிறது.மாப்பிள்ளை  வீட்டாரை மோசடி செய்ய முயன்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.


நாயகியைப்போலீஸ் விசாரிக்கிறது.அப்போது அவர் சொல்லும் பிளாஸ்பேக் கதை ....


நாயகிக்கு அப்பா இல்லை ,அம்மா மட்டும் தான்.நாயகிக்கு  ஒரு காதலன் உண்டு.காதலன் மூலம் ஏதாவது நல்ல கம்பெனியில் வேலைக்குப்போகலாம் என முடிவு எடுக்கிறாள்.


நாயகன் கை காண்பித்த ஒரு நபரின் ஆபீசுக்கு இண்ட்டர்வ்யூ போகிறார்.ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு ஆள் எடுப்பதாகத்தான் நாயகன் சொன்னான்.ஆனால் அந்த ஆபீஸ் மேனேஜர் தான் வில்லன்.


வில்லன் நாயகியிடம் சொல்வது.இந்தக்காலத்தில் பெண் கிடைக்காமல் பலர் அல்லாடுகின்றனர்.மணப்பெண் கிடைத்தால் தங்க நகை சீராக 25 பவுன் மணப்பெண்ணுக்ன்ப்போட்டு திருமணம் செய்யத்தயாராக இருக்கின்றனர்.


இவங்க வீக்னெசை நான் பயன்படுத்திப்பணம் சம்பாதிக்கப்போகிறேன்.அதாவது நீ மணப்பெண்ணாக நடிக்க வேண்டும்.உனக்கு மாப்பிள்ளை வீட்டார் நகை போடுவார்கள்.திருமணம் முடிந்ததும் நைசாக நீ எஸ்கேப் ஆகி விடு.நகைகளை என்னிடம் கொடுத்து விடு.உனக்கான பங்கை நான் கொடுத்து விடுகிறேன் என்கிறான் வில்லன்.


நாயகிக்கு இந்தத்திட்டத்தில் உடன் பாடு இல்லை.ஆனால் திடீர் என நாயகியின் அம்மாவுக்கு உடல் நிலை சரி இல்லாமல் போக ஆபரேசன் செலவுக்குப்பணம் தேவைப்படுவதால் வில்லனின் திட்டத்துக்கு சம்மதிக்கிறாள்.ஆனால் இந்த ஒரே ஒரு முறை தான் என கண்டிஷன் போடுகிறாள்.

திருமணம் முடிந்ததும் வில்லன் சொன்னபடி நகைககளுடன் கம்பி நீட்டுகிறாள் நாயகி.வில்லனிடம் நகைகளை ஒப்படைக்க வில்லன் நாயகியின் அம்மாவுக்கான ஆபரேசன் செலவைக்கொடுக்கிறான்.


பின் மீண்டும் இதே போல் ஒரு போலித்திருமணம் இருக்கு என வில்லன் சொல்லும்போது நாயகி மறுக்கிறாள்.அப்போது வில்லன் நாயகியின் திருமண கோல போட்டோ ,வீடியோ காட்டி தன் திட்டத்துக்கு உடன் படா விட்டால் போலீசில் மாட்டி விடுவேன் என மிரட்டுகிறான்.


இது போல நாயகி இதுவரை 10 நபர்களிடம் போலித்திருமண மோசடி செய்திருக்கிறாள்.


இந்த ஸ்டேட்மெண்ட்டை போலீசிடம் தந்ததும் நாயகி மீது தப்பில்லை.வில்லன் தான் மெயின் ,அவனைப்பிடிக்க வேண்டும் என போலீஸ் ஒரு திட்டம் போடுகிறது.அந்தத்திட்டம் வெற்றி பெற்றதா?  இல்லையா? என்பது மீதித்திரைக்கதை. 


நாயகி ஆக நிகிலா விமல் பிரமாதமான நடிப்பு,சோக முகம் ,அழுத கண்கள் என படம் முழுக்க அனுதாபம் அள்ளும் நடிப்பு.


நாயகியிடம்  ஏமாறும் சோணகிரி மாப்பிள்ளைகளின்  வழியல்கள் காமெடி.


நாயகிக்கு உதவும் போலீஸ் ஆபீசர் ஆக அஜூ வர்கீஸ் கச்சிதமாக நடித்திருக்கிறார்.


காதலன் கேரக்டர் ஒரு டம்மி பீஸ் தான்.அதிக வேலை இல்லை.


வில்லன் ஆக வருபவர் படத்தின் தயிப்பளாரக இருக்கலாம்.

 நான்கு நபர்களுடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார்  பெபின் சித்தார்த்.

இசை,ஒளிப்பதிவு ,எடிட்டிங போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் ஓக்கே ரகம்


சபாஷ்  டைரக்டர்

1 மொத்தப்படமே 105 நிமிடஙகள் தான்

2 கடைசி 30 நிமிடஙகள் செம ஸ்பீடு

3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 போலீஸ் நாயகியிடம் ஆதார் கார்டு ,ஐ டி கார்டு கேட்கவே இல்லை.அவரது செல் போனையும் பறிமுதல் செய்யவில்லை.

2 நாயகியுடன் பைக்கில் பயணிக்கும் போலீஸ் ஆபீசர் செக் போஸ்ட்டில் போலீஸ் நிற்பதைக்கண்டு பைக்கைத்திருப்பும்போது  2 அடி தொலைவில் இருக்கும் போலீஸ் அவர்களைக்கண்டுக்காதா?


3 வில்லனைக்கண்டு பிடிக்க அவனது அங்க அடையாளங்களை ஓவியரை விட்டு வரைய முயலாதது ஏன்?


4 நாயகி பாத் ரூம் போவதாக சொல்லும்போது அருகில் இருக்கும் லேடி போலீசை துணைக்கு அனுப்பாமல் ஆண் போலீஸ் நாயகி கூட பாத் ரூம் வரை வருகிறார்.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நான் அவன் இல்லை மாதிரி படம் முழுக்கக்காமெடி எல்லாம் கிடையாது.க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் மட்டும்தான் ஒரே கவனிக்க வைக்கும் விஷயம்

ரேட்டிங்க் 2.25 / 5

Monday, January 12, 2026

CAUGHT STEALING (2025) -ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( பிளாக் காமெடி க்ரைம் ஆக்சன் திரில்லர் ) @நெட் பிளிக்ஸ் 18+

             

          THE WRESTLER(2008),BLACK SWAN (2010) உட்பட பல கமர்சியல் படங்களை இயக்கிய டாரென் அரோனோஸ்கி சைக்கலாஜிக்கல் திரில்லர் படங்களை இயக்குவதில் விற்பன்னர்.ஏகப்பட்ட விருதுகளை அள்ளிக்குவித்த அவர் இயக்கி இருக்கும் ஒரு ஜாலியான   காமெடி ஆக்சன் படம் தான். இது.


சார்லி ஹஸ்டான் எழுதிய காட் ஸ்டீலிங் நாவலைத்தழுவி எடுக்கப்பட்ட இந்தப்படம் 29/8/2025 அன்று திரை அரஙகுகளில் வெளியானது.இப்போது நெட் பிளிக்ஸ் ஓ டி டி யில் காணக்கிடைக்கிறது.தமிழ் டப்பிங் இல்லை.


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் முன்னாள் பேஸ்பால் பிளேயர்.பிளேயராக இருந்தபோது ஒரு கார் பயணத்தில் தன் நண்பனை விபத்தில் இழந்தவர்.அந்த சோகத்தில் அவர் இப்போது விளையாடுவதும் இல்லை.எதுவும் இல்லை.தினமும் சரக்கு அடித்து விட்டு போதையில் சோகத்தை மறக்க முயற்சி செய்கிறார்.அவருக்கு ஒரு காதலியும் உண்டு. கலிபோர்னியாவில் இருக்கும் அவரது அம்மாவுக்கு தினமும் போன் போட்டு பேசுவார்.


நாயகன் இப்போது குடி இருக்கும்  வீட்டுக்குப்பக்கத்து வீட்டில் குடி இருப்பவர் ஒரு வேலை விஷயமாக வெளியூர் போக இருப்பதால் அவர் வீட்டு சாவியை நாயகனிடம் தந்து வீட்டைப்பார்த்துக்குங்க.அப்டியே என் பூனைக்குட்டியையும் கவனிச்சுக்குங்க.நான் செல்லமா வளர்த்த பிராணி என சொல்லி விட்டு செல்கிறார்.


நாயகனும் காதலியுடன் அந்த வீட்டுக்குப்போகிறார்.வெளியூர் போன அந்த ஆள் இரு கேங்கஸ்டர்சிடம் பகைத்துக்கொண்டது நாயகனுக்குத்தெரியாது.கோடிக்கணக்கான பணத்தை ஒரு லாக்கரில் அவர் வைத்ததும் அதன் சாவியை ரகசியமாக வைத்திருப்பதும் நாயகனுக்குத்தெரியாது.


வில்லன்கள் இருவரும் நாயகனை மிரட்டுகிறார்கள்.சாவி இருக்குமிடத்துக்கு எங்களை அழைத்துப்போ என்கிறார்கள்.இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் ,ஆக்சன் சீக்வன்ஸ் தான் மீதித்திரைக்கதை


நாயகன் ஆக ஆஸ்டின் பட்லர் பிரமாதமாக நடித்திருக்கிறார்.ஸ்டைலிஷான அவரது ஆக்சன் சீக்வன்ஸ் ரசிக்க வைக்கின்றன.

லேடி போலீஸ் ஆபீசர் ஆக ரெஜினா கிங் கச்சிதம்.

நாயகி ஆக ஜோ கிராவிட்ஸ் அழகு பொம்மை.

மற்ற அனைவருமே அவரவர் கதாப்பாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு மேத்யூ  அருமை.இசை ராப்.பின்னணி இசை தெறிக்கிறது  ஆண்ட் ரூ வின் எடிட்டிஙகில் படம் 105 நிமிடஙகள் ஓடுகிறது


சார்லி ஹஸ்டன் தான் திரைக்கதை


சபாஷ்  டைரக்டர்

1 வழக்கமான பாணியில் இருந்து விலகி காமெடி ஆக்சன் மூவி தந்தது

2 யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் இருக்கு



  ரசித்த  வசனங்கள் 

1 நீ எதைப்பார்த்துப்பயந்து ஓடறியோ அது உன்னைத்துரத்தும்

2 நான் உங்களை சுட மாட்டேன்

தெரியும்,நீ அதுக்கு  சரிப்பட்டு வர மாட்டே

அதில்லை.அதோ அவஙக ரெண்டு பேரும் உங்களை சுடப்போறாஙக.நான் எதுக்கு வேஸ்ட்டா?


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள்


1 பல தமிழ்ப்படங்களில் பார்த்து சலித்த அதே டைப் கதை தான்


2 எளிதில் யூகிக்க வைக்கும் அடுத்தடுத்த காட்சிகள்.

3 படம் பூரா லாஜிக் சொதப்பல்கள்



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கான்வெர்சேசன் ஓவரா இருக்கு.முதல் அரை மணி நேரம் ஸ்லோ.கடைசி அரை மணி நேரம் நல்ல வேகம்.ரேட்டிங்க் 2.25 /5


Caught Stealing
Theatrical release poster
Directed byDarren Aronofsky
Screenplay byCharlie Huston
Based onCaught Stealing
by Charlie Huston
Produced by
Starring
CinematographyMatthew Libatique
Edited byAndrew Weisblum
Music by
Production
companies
Distributed bySony Pictures Releasing
Release date
  • August 29, 2025
Running time
107 minutes[1]
CountryUnited States
LanguageEnglish
Budget$40–65 million
Box office$32.5 million[2][3]