85 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 149 கோடி வசூல் செய்த இந்தப்படம் 28/11/2025 முதல் திரை அரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி இப்போது தமிழ் டப்பிங்கில் நெட் பிளிக்ஸ் தளத்தில் 23/1/2026 முதல் காணக்கிடைக்கிறது.
ராஞ்சனா(2013) படம் எடுத்த அதே யூனிட் இந்தப்படத்தை எடுத்துள்ளது.ஹிந்திப்படம் என்றாலும் தனுஷ் ஹீரோ,ஏ ஆர் ரஹ்மான் இசை என்பதால் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி வன்முறையை மாற்ற நினைக்கும் சப்ஜெக்ட்டில் பிஹெச் டி க்காக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் மாணவி.நாயகன் வன்முறை குணம் கொண்ட கோபக்கார ரவுடி மாணவன்.டில்லி யில் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கிறான்.பாதி நேரம் யாரையாவது அடிக்கிறான்.
நாயகனின் அப்பா சாதாரண நடுத்தரக்குடும்பத்தை சேர்ந்த ஏழை.நாயகியின் அப்பா மிகப்பெரிய செல்வந்தர் ஆக இருக்கும் ஐ ஏ எஸ் ஆபீசர்.
நாயகன் நாயகியை ஒரு தலையாகக்காதலிக்கிறார்.நாயகிக்குக்காதல் இல்லை.ஆனால் பிஹெச் டி படிப்புக்காக நாயகன் தேவைப்படுகிறார்.
நாயகன் நாயகியின் அப்பாவிடம் பெண் கேட்கப்போனபோது நீ முதல்ல ஐ ஏ எஸ் ஆகு ,அப்புறம் பார்க்கலாம் எனக்கூறி விடுகிறார்.
நாயகன் மிக சிரமப்பட்டு ஐ ஏ எஸ் எழுதி பாஸ் ஆகிறார்.நாயகியின் வீட்டுக்கு வந்தால் அன்று நாயகிக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம்.இதற்குப்பின் நடக்கும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை.
நாயகன் ஆக தனுஷ் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்,ரவுடி மாணவனாக,காதலன் ஆக,பைலட் ஆபீசர் ஆக என மாறுபட்ட 3 கதா பாத்திரங்களில் அருமையாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.
நாயகி ஆக க்ரித்தி சரோன் அழகு முகம்,அருமை நடிப்பு என நம் மனம் கவர்கிறார்.குற்ற உணர்ச்சியுடன் நாயகனிடம் பேசும் காட்சிகள்,க்ளைமாக்சில் பேசும் உயிரோட்டமான வசனங்களில் மிளிர்கிறார்.
நாயகனின் அப்பாவாக பிரகாஷ ராஜ் பண்பட்ட ,அனுபவம் மிக்க நடிப்பு.நாயகியின் அப்பாவாக வருபவரின் வில்லத்தனமான நடிப்பும் ரசிக்க வைத்தது.
மற்ற அனைவர் நடிப்பும் மெச்சும்படி இருக்கிறது.ஏ ஆர் ரஹ்மானின் இசையில் நான்கு பாடல்கள்.ஒன்று மட்டும் செம ஹிட் ஆகி இருக்கிறது.பின்னணி இசையில் பெரிய அளவிம் மனம் கவரவில்லை.
துஷார் காந்தி ரே வின் ஒளிப்பதிவில் நாயகியை அழுகையிலும் அழகாகக்காட்டி உள்ளார்.
ஹேமல் கோத்தாரியின் எடிட்டிங் கில் படம் 169 நிமிடஙகள் ஓடுகிறது.கடைசி 40 நிமிடஙகள் நம் பொறுமையை சோதிக்கிறது.இன்னமும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்
நீரஜ் யாதவ்,ஹ்மான்சு சர்மா ஆகிய இருவரும் திரைக்கதை எழுத ஆனந்த் எல் ராய் இயக்கி இருக்கிறார்.
சபாஷ் டைரக்டர்
1. பிரகாஷ ராஜ் அனைவரிடமும் மன்னிப்புக்கேட்கும் சீன் கண் கலங்க வைக்கிறது
2 பிளாஷ்பேக் சீன்கள் ,தற்காலத்தில் நடப்பவை என மாறி மாறி நான் லீனியர் கட்டில் திரைக்கதை அமைத்த விதம் சுவராஸ்யம்
3 நாயகன்,நாயகி இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
ரசித்த வசனங்கள்
1 மனிதர்களை அதிகம் பாதிக்கும் விஷயம் வன்முறை தான்
2 வன்முறையால் யாருக்கும் ,எந்தப்பயனும் இல்லை,ஆனால் எல்லார் மனதிலும் இது ஒட்டிக்கிட்டுத்தான் இருக்கு.
3 மிஸ்,நீங்க கொஞ்சம் அழகு கம்மின்னாலும் நான் இப்படிப்பண்ணி இருக்க மாட்டேன்
4 நான் எல்லாம் லவ் பண்ண ஆரம்பிச்சா மொத்த டெல்லியையும் எரிச்சிடுவேன்
5 உன் கிட்டே உனக்க்ய்ப்பிடிச்சது எது?
எல்லாம் தான்.
என் கிட்டே?
உன் உடம்பு
6 வறுமையைப்பார்க்கும்போது உஉனக்கு என்ன தோணும்?
பணக்காரஙகளை சாகடிக்கனும்னு தோணும்.
நீ என்னவா ஆகனும்னு ஆசை?
யாராலும் சாகடிக்க முடியாத பணக்காரனா ஆக ஆசை.
7 ஏழையோட அம்மான்னா வெறும் 20% தீக்காயஙகள் ஆனால் செத்துடுவாங்களாம்.
8 கட்டாயத்தால் காதல் வராது.
9 வாழ்க்கை அமையாது.நாம் தான் அமைச்சுக்கனும்
10. பசஙக சைக்காலஜி எனக்குத்தெரியும்.தான் காதலித்த பெண்ணைக்கல்யாணக்கோலத்தில் பார்த்தா பேசாம போயிடுவாங்க.
11 உலகம் பூரா எல்லாருக்கும் கிடைக்குது முக்தி,ஆனா உனக்கு மட்டும் கிடைக்கலை முக்தி,அதானே அவ பேரு?
12 காதலில் மரணம் தான் இருக்கு,முக்தி இல்லை.
13 உனக்குப்பிறக்கறது ஒரு பையனா இருக்கட்டும்,அப்போதான் காதலில் தோத்து சாகறது ஒரு பையன் தான் எனப்புரியும்
14 பெண்கள் எப்போதும் ராஜகுமாரனைப்பற்றித்தான் கனவு காண்பார்கள் ,வேலைக்காரனை அல்ல
15 பெண்கள் காதலில் எப்போதும் புத்திசாலித்தனனாதான் முடிவு எடுப்பாஙக.
16 நான் சாப்பிடறது எல்லாம் ரத்தமா மாறாம வெறுப்பா மாறுது.
17 என் குழந்தையை நீ பார்த்துக்குவியா?
என்னையே என்னால பார்த்துக்க முடியல.
18 ஒரு சிலரோட தலை எழுத்து காதலில் எழுதி இருக்கும்,ஒரு சிலரோட தலை எழுத்து வன்முறைல எழுதி இருக்கும்
19 காதல் என்றால் என்ன?என்று தெரிஞ்சு ,புரிஞ்சு காதலித்த கடைசித்தலைமுறை நாமாத்தான் இருப்போம்
20. இப்போ வர்ற தலைமுறை எல்லாமே பண்றாஙக ,காதலைத்தவிர
21 நான் இதை வேலையாப்பார்க்கிறேன்,நீ காதலாப்பார்க்கிறே
நீ வேலைக்காக சட்டையைக்கழட்டலாம்.ஆனா காதலிலுக்காக நான் அதை செய்ய முடியாது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1. நாயகியின் கேரக்டர் டிசைன் சரியாக வடிவமைக்கப்படலை.மாற்றி மாற்றிப்பேசுகிறார்.ஒரு சீனில் காதல் இல்லை என்கிறார்.இன்னொரு சீனில் வா,நாம் இருவரும் செத்துடலாம்கறார்.இன்னொரு சீனில் அவன் வர்றதுக்குள் என்னை எங்காவது கூட்டிட்டுப்போயிடுங்கறார்.சைக்காலஜி படிச்சவருக்கே ஒரு சைக்காலஜிஸ்ட் தேவைப்படுவார் போல.
2 ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த காதலன் கதை தான் பட்டி டிங்கரிங்க் செய்து இருக்கிறார்கள்
3 1980 களில் வந்திருக்க வேண்டிய படம்.
4 நாயகன்,நாயகி இருவரில் யார் மீதும் நமக்கு பரிதாபம் வரவில்லை.ஒரு எமோஷனல் கனெக்ட்டே இல்லை
5 நாயகியின் வீட்டை எரித்து போலீசால் எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்ட கிரிமினல் ரெக்கார்ட் ஸ் பல உள்ள நாயகன் எப்படி ஐ ஏ எஸ் ஆக முடியும்?
6 நாயகி தம் அடிப்பது ,தண்ணி அடிப்பது தேவை இல்லாத காட்சிகள்.
7 ஒரு ஐ ஏ எஸ் ஆபீசர் வீட்டில் செக்யூரிட்டி இருக்காதா? தனி ஆளாக நாயகன் வந்து அசால்ட்டா பங்களாவை எரிக்கிறார்.தடுக்க ஆளில்லாமல் போலீசுக்கு ,பயர் சர்வீசுக்கு போன் பண்ணிட்டு இருக்கார் நாயகியின் அப்பா
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -16+ குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - காதலர்கள் ,தனுஷ ரசிகர்கள் பார்க்கலாம். சராசரி காதல் கதை.ரேட்டிங் 2.5 / 5
