10/1/2026 முதல் வெளியான இந்தப்படம் தமிழில் வெளிவந்த நான் அவன் இல்லை ஜெமினிகணேசன் வெர்சன் ,ஜீவன் வெர்சன் போல ஆணுக்குப்பதிலாகப்பெண்ணின் வெர்சன்.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு திருமணத்தில் மணப்பெண்ணாக மணமேடையில் அமர்ந்திருக்கிறார்.அப்போது போலீஸ் வந்து அவரைக்கைது செய்கிறது.மாப்பிள்ளை வீட்டாரை மோசடி செய்ய முயன்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
நாயகியைப்போலீஸ் விசாரிக்கிறது.அப்போது அவர் சொல்லும் பிளாஸ்பேக் கதை ....
நாயகிக்கு அப்பா இல்லை ,அம்மா மட்டும் தான்.நாயகிக்கு ஒரு காதலன் உண்டு.காதலன் மூலம் ஏதாவது நல்ல கம்பெனியில் வேலைக்குப்போகலாம் என முடிவு எடுக்கிறாள்.
நாயகன் கை காண்பித்த ஒரு நபரின் ஆபீசுக்கு இண்ட்டர்வ்யூ போகிறார்.ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு ஆள் எடுப்பதாகத்தான் நாயகன் சொன்னான்.ஆனால் அந்த ஆபீஸ் மேனேஜர் தான் வில்லன்.
வில்லன் நாயகியிடம் சொல்வது.இந்தக்காலத்தில் பெண் கிடைக்காமல் பலர் அல்லாடுகின்றனர்.மணப்பெண் கிடைத்தால் தங்க நகை சீராக 25 பவுன் மணப்பெண்ணுக்ன்ப்போட்டு திருமணம் செய்யத்தயாராக இருக்கின்றனர்.
இவங்க வீக்னெசை நான் பயன்படுத்திப்பணம் சம்பாதிக்கப்போகிறேன்.அதாவது நீ மணப்பெண்ணாக நடிக்க வேண்டும்.உனக்கு மாப்பிள்ளை வீட்டார் நகை போடுவார்கள்.திருமணம் முடிந்ததும் நைசாக நீ எஸ்கேப் ஆகி விடு.நகைகளை என்னிடம் கொடுத்து விடு.உனக்கான பங்கை நான் கொடுத்து விடுகிறேன் என்கிறான் வில்லன்.
நாயகிக்கு இந்தத்திட்டத்தில் உடன் பாடு இல்லை.ஆனால் திடீர் என நாயகியின் அம்மாவுக்கு உடல் நிலை சரி இல்லாமல் போக ஆபரேசன் செலவுக்குப்பணம் தேவைப்படுவதால் வில்லனின் திட்டத்துக்கு சம்மதிக்கிறாள்.ஆனால் இந்த ஒரே ஒரு முறை தான் என கண்டிஷன் போடுகிறாள்.
திருமணம் முடிந்ததும் வில்லன் சொன்னபடி நகைககளுடன் கம்பி நீட்டுகிறாள் நாயகி.வில்லனிடம் நகைகளை ஒப்படைக்க வில்லன் நாயகியின் அம்மாவுக்கான ஆபரேசன் செலவைக்கொடுக்கிறான்.
பின் மீண்டும் இதே போல் ஒரு போலித்திருமணம் இருக்கு என வில்லன் சொல்லும்போது நாயகி மறுக்கிறாள்.அப்போது வில்லன் நாயகியின் திருமண கோல போட்டோ ,வீடியோ காட்டி தன் திட்டத்துக்கு உடன் படா விட்டால் போலீசில் மாட்டி விடுவேன் என மிரட்டுகிறான்.
இது போல நாயகி இதுவரை 10 நபர்களிடம் போலித்திருமண மோசடி செய்திருக்கிறாள்.
இந்த ஸ்டேட்மெண்ட்டை போலீசிடம் தந்ததும் நாயகி மீது தப்பில்லை.வில்லன் தான் மெயின் ,அவனைப்பிடிக்க வேண்டும் என போலீஸ் ஒரு திட்டம் போடுகிறது.அந்தத்திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது மீதித்திரைக்கதை.
நாயகி ஆக நிகிலா விமல் பிரமாதமான நடிப்பு,சோக முகம் ,அழுத கண்கள் என படம் முழுக்க அனுதாபம் அள்ளும் நடிப்பு.
நாயகியிடம் ஏமாறும் சோணகிரி மாப்பிள்ளைகளின் வழியல்கள் காமெடி.
நாயகிக்கு உதவும் போலீஸ் ஆபீசர் ஆக அஜூ வர்கீஸ் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
காதலன் கேரக்டர் ஒரு டம்மி பீஸ் தான்.அதிக வேலை இல்லை.
வில்லன் ஆக வருபவர் படத்தின் தயிப்பளாரக இருக்கலாம்.
நான்கு நபர்களுடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் பெபின் சித்தார்த்.
இசை,ஒளிப்பதிவு ,எடிட்டிங போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் ஓக்கே ரகம்
சபாஷ் டைரக்டர்
1 மொத்தப்படமே 105 நிமிடஙகள் தான்
2 கடைசி 30 நிமிடஙகள் செம ஸ்பீடு
3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 போலீஸ் நாயகியிடம் ஆதார் கார்டு ,ஐ டி கார்டு கேட்கவே இல்லை.அவரது செல் போனையும் பறிமுதல் செய்யவில்லை.
2 நாயகியுடன் பைக்கில் பயணிக்கும் போலீஸ் ஆபீசர் செக் போஸ்ட்டில் போலீஸ் நிற்பதைக்கண்டு பைக்கைத்திருப்பும்போது 2 அடி தொலைவில் இருக்கும் போலீஸ் அவர்களைக்கண்டுக்காதா?
3 வில்லனைக்கண்டு பிடிக்க அவனது அங்க அடையாளங்களை ஓவியரை விட்டு வரைய முயலாதது ஏன்?
4 நாயகி பாத் ரூம் போவதாக சொல்லும்போது அருகில் இருக்கும் லேடி போலீசை துணைக்கு அனுப்பாமல் ஆண் போலீஸ் நாயகி கூட பாத் ரூம் வரை வருகிறார்.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -13+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - நான் அவன் இல்லை மாதிரி படம் முழுக்கக்காமெடி எல்லாம் கிடையாது.க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் மட்டும்தான் ஒரே கவனிக்க வைக்கும் விஷயம்
ரேட்டிங்க் 2.25 / 5
