சார்லி ஹஸ்டான் எழுதிய காட் ஸ்டீலிங் நாவலைத்தழுவி எடுக்கப்பட்ட இந்தப்படம் 29/8/2025 அன்று திரை அரஙகுகளில் வெளியானது.இப்போது நெட் பிளிக்ஸ் ஓ டி டி யில் காணக்கிடைக்கிறது.தமிழ் டப்பிங் இல்லை.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் முன்னாள் பேஸ்பால் பிளேயர்.பிளேயராக இருந்தபோது ஒரு கார் பயணத்தில் தன் நண்பனை விபத்தில் இழந்தவர்.அந்த சோகத்தில் அவர் இப்போது விளையாடுவதும் இல்லை.எதுவும் இல்லை.தினமும் சரக்கு அடித்து விட்டு போதையில் சோகத்தை மறக்க முயற்சி செய்கிறார்.அவருக்கு ஒரு காதலியும் உண்டு. கலிபோர்னியாவில் இருக்கும் அவரது அம்மாவுக்கு தினமும் போன் போட்டு பேசுவார்.
நாயகன் இப்போது குடி இருக்கும் வீட்டுக்குப்பக்கத்து வீட்டில் குடி இருப்பவர் ஒரு வேலை விஷயமாக வெளியூர் போக இருப்பதால் அவர் வீட்டு சாவியை நாயகனிடம் தந்து வீட்டைப்பார்த்துக்குங்க.அப்டியே என் பூனைக்குட்டியையும் கவனிச்சுக்குங்க.நான் செல்லமா வளர்த்த பிராணி என சொல்லி விட்டு செல்கிறார்.
நாயகனும் காதலியுடன் அந்த வீட்டுக்குப்போகிறார்.வெளியூர் போன அந்த ஆள் இரு கேங்கஸ்டர்சிடம் பகைத்துக்கொண்டது நாயகனுக்குத்தெரியாது.கோடிக்கணக்கான பணத்தை ஒரு லாக்கரில் அவர் வைத்ததும் அதன் சாவியை ரகசியமாக வைத்திருப்பதும் நாயகனுக்குத்தெரியாது.
வில்லன்கள் இருவரும் நாயகனை மிரட்டுகிறார்கள்.சாவி இருக்குமிடத்துக்கு எங்களை அழைத்துப்போ என்கிறார்கள்.இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் ,ஆக்சன் சீக்வன்ஸ் தான் மீதித்திரைக்கதை
நாயகன் ஆக ஆஸ்டின் பட்லர் பிரமாதமாக நடித்திருக்கிறார்.ஸ்டைலிஷான அவரது ஆக்சன் சீக்வன்ஸ் ரசிக்க வைக்கின்றன.
லேடி போலீஸ் ஆபீசர் ஆக ரெஜினா கிங் கச்சிதம்.
நாயகி ஆக ஜோ கிராவிட்ஸ் அழகு பொம்மை.
மற்ற அனைவருமே அவரவர் கதாப்பாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு மேத்யூ அருமை.இசை ராப்.பின்னணி இசை தெறிக்கிறது ஆண்ட் ரூ வின் எடிட்டிஙகில் படம் 105 நிமிடஙகள் ஓடுகிறது
சார்லி ஹஸ்டன் தான் திரைக்கதை
சபாஷ் டைரக்டர்
1 வழக்கமான பாணியில் இருந்து விலகி காமெடி ஆக்சன் மூவி தந்தது
2 யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் இருக்கு
ரசித்த வசனங்கள்
1 நீ எதைப்பார்த்துப்பயந்து ஓடறியோ அது உன்னைத்துரத்தும்
2 நான் உங்களை சுட மாட்டேன்
தெரியும்,நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே
அதில்லை.அதோ அவஙக ரெண்டு பேரும் உங்களை சுடப்போறாஙக.நான் எதுக்கு வேஸ்ட்டா?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பல தமிழ்ப்படங்களில் பார்த்து சலித்த அதே டைப் கதை தான்
2 எளிதில் யூகிக்க வைக்கும் அடுத்தடுத்த காட்சிகள்.
3 படம் பூரா லாஜிக் சொதப்பல்கள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கான்வெர்சேசன் ஓவரா இருக்கு.முதல் அரை மணி நேரம் ஸ்லோ.கடைசி அரை மணி நேரம் நல்ல வேகம்.ரேட்டிங்க் 2.25 /5
| Caught Stealing | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Darren Aronofsky |
| Screenplay by | Charlie Huston |
| Based on | Caught Stealing by Charlie Huston |
| Produced by |
|
| Starring | |
| Cinematography | Matthew Libatique |
| Edited by | Andrew Weisblum |
| Music by | |
Production companies | |
| Distributed by | Sony Pictures Releasing |
Release date |
|
Running time | 107 minutes[1] |
| Country | United States |
| Language | English |
| Budget | $40–65 million |
| Box office | $32.5 million[2][3] |
