Wednesday, September 17, 2025

குமார சம்பவம் ( 2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் காமெடி டிராமா )

             

        இயக்குனர் பாலாஜி வேணுகோபால்  யோகிபாபு நடித்த லக்கி மேன் (2023)  படத்தை இயக்கி இருக்கிறார். விஜய் டி வி யில் வசூல் ராணி என்ற நிகழ்ச்சித் தொடரையும்     , ஜெயா டி வியில்  ராகமாலிகா  என்ற நிகழ்ச்சித் தொடரையும்   நடத்தி இருக்கிறர் . பானிபூரி (2023)   என்ற  வெப்சீரிசை இயக்கி இருக்கிறார். சுட்டகதை ( 2013) ல் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார் . 2015ல்   மெட்ராஸ் மீட்டர் என்னும் யூ ட்யூப் சேனல் மூலம் பல காமெடி  ஷாட் பிலிம் எடுத்து  இருக்கிறார்


2008ல் இருந்து  சினி பீல்டில்  உழைத்திருந்தாலும்  இவரது  முதல் மெகா வெற்றி இந்தப்படம் தான் . 12/9/2025 முதல் திரைக்கு வந்திருக்கும் இந்தப்படம்   எ  செண்ட்டர்   ஆடியன்சுக்கான காமெடிப்படம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்

     சினிமா டைரக்டர்  ஆக வேண்டும்  என்ற லட்சியம் உள்ள நாயகன்  தன் தாத்தாவிடம் பண உதவி கோருகிறான் . தாத்தாவை முக்கியமான கட்டத்தில் காப்பாற்றிய சமூக சேவகர் ஒருவர்  தாத்தாவுக்கு நெருக்கம் ஆகிறார். தாத்தாவின்  வீட்டுக்காம்பவுண்டில் ஒரு வீட்டில் குறைவான வாடகையில் தங்குகிறார். அப்படிப்பட்ட சமூக  சேவகர்  ஒரு நாள் கொலை செய்யப்படுகிறார். போலீஸ்  நாயகனை சம்தேகப்படுகிறது .  இதனால் நாயகன் நண்பர்களுடன் சேர்ந்து அந்தக்கொலையை துப்பு துலக்குகிறான். . இதில்  நடக்கும் காமெடி சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக பாண்டியன் ஸ்டோர்  டி வி சீரியல் புகழ்   குமரன் தங்கராஜன் நடித்து இருக்கிறார் பாஸ் மார்க் தான் , நாயகி ஆக  பயல்   ராதாகிருஷ்ணன் நடித்து இருக்கிறார் , அதிக வாய்ப்பில்லை .. சமூக  ஆர்வலர் ஆக இளங்கோ குமாரவேல் பிரமாதமாக நடித்து இருக்கிறார் . தாத்தாவாக ஜி எம் குமார்  அசத்தலான நடிப்பு 


நண்பன்  ஆக பால சரவணன் காமெடி நடிப்பு அருமை , அவரது ஒன் லைனர்கள் பட்டாசு . சி பி ஐ  ஆபீசர ஆக  நடிப்பவர் நடிப்பு அருமை . அரைமணி  நேரம்,  அவர் ராஜ்ஜியம் தான் . லிவிங்க்ஸ்டன் கெஸ்ட் ரோல் 


 ஒளிப்பதிவு , இசை எடிட்டிங்க்  போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் ஓக்கே ரகம் . படத்தின் முதுகெலும்பே காமெடி வசனங்கள் தான் 




சபாஷ்  டைரக்டர்


1   பின் பாதி  திரைக்கதை அமைப்பு கலக்கல் ரகம் , குறிப்பாக சி பி ஐ  ஆபீசர்  3  வில்லன்களை  விசாரிக்கும் சீன்கள் செம 

2   பல   காமெடி காட்சிகள்  , ஒன் லைனர்கள்  புதிய சிந்தனைகள் தான்  ( ஈரோடு மகேஷ் , மதுரை முத்து போல பத்திரிக்கை ஜோக்ஸ்களை  காப்பி அடிக்காமல் சொந்தமாக யோசித்து எழுதி இருக்கிறார்  இயக்குனர் . அவருக்கு ஒரு சபாஷ் 


3 க்ளைமாக்சில்  வில்லனை  நாயகனும்,  நண்பனும்  துப்பாக்கி முனையில் மரட்டும்போது  நடக்கும் காமடி கலாட்டாக்கள்   செம 


4    ஒரு சீனில்  பால சரவணன்  ஆமா இந்த சீனில் நான் எதுக்கு வெட்டியா? எனக்கேட்கும் சீன் 



  ரசித்த  வசனங்கள் 


1   முயலோட  நோக்கம் ஆமையை ஜெயிப்பது அல்ல 


2  ஒரு பொருளோட விலையைக்குறைக்கனும்னா அது மேல வீண் பழி போடனும் 


3   சமுத்திரம் என்னைக்கும் அமைதியாத்தான் இருக்கும், அலைகள்,  தான் ஆர்ப்பரிக்கும் அலட்டிக்கும் 


4  குழந்தையோட பசிக்கு முன்னாடி அப்பாவோட மானம் , வெட்கம்  வேலைக்கு ஆகாது 


5 கல்  கிடைக்கும் வரை நாயுடன் பேச்சு வார்த்தை நடத்துவதுதான் புத்திசாலித்தனம் 

6  உலகம்  ரொம்பக்குரூரமானது . ஒருத்தன்  ஜெயிக்கலைன்னா அவன் தோற்றவன் தான்  என  சொல்றாங்க 


7 பாதிக்கப்பட்டவன் சிந்திக்க ஆரம்பிச்சா அது புரட்சி , யாருமே பாதிக்கப்படக்கூடாது  என   சிந்திக்க ஆரம்பிச்சா அது  வளர்ச்சி 


8  உன்னால   முடியாதுனு யார்  எல்லாம் சொன்னாங்களோ அவங்க வாயால உன்னால மட்டும் தான் முடியும்னு சொல்ல வைக்கனும் 


9   ஒரு தடவை  வந்தா அது ஆசை , ரெண்டு  மூணு  தடவை வந்தா அது கனவு , வாழ்க்கை பூரா துரத்திட்டே இருந்தா அது லட்சியம் 


10 நீங்கள்  எல்லாம் யார் என உங்களுக்குத்தெரியாதவரை  அடுத்தவங்க உங்களைப்பத்தி என்ன சொல்றாங்களோ அதுதான் நீங்களா இருப்பீங்க 


11  நேரத்துலயே  எழுவது முக்கியம் இல்லை எழுந்து எதாவது செய்யனும் 


12  போகப்போக சரி ஆகிடும், 


 அய்யோ ராமா, எனக்கு பைல்ஸ் , டாக்டர்  சொன்ன போகப்போக வேற அர்த்தம் 


13   வேட்டியைக்கோவணம் ஆக்கலாம், ஆனா கோவணத்தை வேட்டி ஆக்க முடியாது 


14   அவார்டு வின்னிங்க் ஷார்ட் ஃபிலிம் ஒண்ணு எடுத்திருக்கேன் 


 ஓஹோ என்ன அவார்டு ? 


 ஐ மீன் டைட்டிலே    அவார்டு வின்னிங்க்  தான் ஹிஹி 


15   சார் , சிசிடிவி வெச்சதுல இருந்து க்ரைம்  குறைஞ்சிருக்கு , ஆனா சிசிடிவி  இப்போ வேலை செய்யலை . இது கிரிமினல்சுக்கு தெரியும் முன் சரி செய்யனும் 


 இது போலீஸ்  ஸ்டேஷன், சர்வீஸ் ஸ்டேஷன்  அல்ல 


 அப்போ  போலீஸ்க்கு   சர்வீஸ்  கிடையாதா? 


14  காவல் துறை உங்கள் நண்பன், நண்பனை விட்டுட்டு  சாப்பிடலாமா? 


15  ஆறு  மாதிரி  போய்க்கிட்டு இருந்த என் வாழ்க்கைல டேம் மாதிரி குறுக்கே வந்தா ,  டாமிட் 


16   என்  வாழ்க்கைல  ஐ லவ் யூ  ஐ சி யூ ல  தான் ஆரம்பிச்சது 


17   ஏய்  மிஸ்டர் , நீங்க கமிட்டடா? 


 ஒமிட்டட்


 புரியல \\\


  ஐ மீன்  யாரும் என்னைக்கண்டுக்கலை 


18   சார், 4 பேரு இருக்கோம், 2  டீ சொல்லி இருக்கீங்க ? சரி  2/ 4  போட்டுக்கலாம் 


19  பெக்கர்ஸ் ஆர்   நாட் சூசர்ஸ்


20   நல்லா  கதை சொல்லலாம், ஆனா ஜனங்க தூங்கிட்டா? 


21   எப்பவும் தாத்தாதான் பேரனுக்குக்கதை சொல்வாரு  ,, உல்டாவா நடந்தா இப்படிதான் ஏடாகூடமா நடக்கும் 


22   திருவள்ளுவர் சிலையைப்பார்த்துத்துடை 


 அது புத்தர் சிலை 


 சின்ன வயசுல அது வள்ளுவர் சிலையா இருந்தது சி பி ஐ ஆபீசர் சொன்னா சரியாத்தான் இருக்கும் 


23   ஒரிஜினல் கன்  காட்டியும் முகத்தில் எக்ஸ்பிரசன் காட்டாம இருக்கியே உன் பேரென்ன? 


 கமல் , சிவாஜி கமல் 


24  என்னையே  வேவு பார்க்கறீங்களா? 


 நீங்க தான் கட்ல் ஓரமா இருக்கீங்க, அடிக்கடி வேவ்  பார்க்க முடியும் 


25   நீ  ஃப்ரீயா  இருக்கியா ? 


 பிஅந்ததுல இருந்தே நான் ஃப்ரீ தான் 


26  ஏற்கனவே என் கிட்டே  ஒரு கன் இருக்கு , இன்னொரு கன் எதுக்கு ? நான் என்ன கவ்பாயா? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  எடுபடவில்லை , ஒட்டவில்லை 


2  நாயகியை  பாதிக்கதையில் அம்போ என விட்டது 


3    மூல வியாதிக்காரர்களை நக்கல் அடித்தவிதம் 


4   சி செண்ட்டர்  ரசிகர்களுக்குப்பெரும்பாலான காமெடிகள் புரியாது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  க்ளீன் யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   வித்தியாசமான  காமெடி  த்ரில்லரை ரசிப்பவர்கள் பார்க்கலாம் . விகடன் மார்க் யூகம் 44  ( ரியலா 43) . ரேட்டிங்க் 3 / 5 



Monday, September 15, 2025

பிளாக்மெயில் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர் )

             

            

இரவுக்கு ஆயிரம் கண்கள் (2018)  கண்ணை நம்பாதே (2023)  ஆகிய  க்ரைம் த்ரில்லர் படங்களை இயக்கிய  இயக்குனர் மு மாறன் இயக்கிய மூன்றாவது  படம் தான் இது . இவர் 1998 கால கட்டத்தில்  உல்லாச  ஊஞ்சல்   உங்கள்  ஜூ னியர்   ஆகிய மாத இதழ்களில் ஹைக்கூ கவிதைகள் எழுதியவர் . 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி ஒரு கோடீஸ்வர தொழில் அதிபரின் மனைவி , இவர்களுக்கு ஒரு மகள் . நாயகிக்கு திருமணத்துக்கு முன் ஒரு காதலன் இருந்தான் . அவனுடன் பிரேக்கப் ஆகி விட்ட்து . அவன் இப்போது நாயகியிடம் வந்து நாம் நெருக்கமாக இருந்த படங்களை  உன் கணவனிடம் காண்பிக்காமல் இருக்க ரூ 2 கோடி பணம் வேண்டும் என மிரட்டுகிறான் 


 நாயகன்   ஒரு டிரைவர் . போதைப்பொருள் கடத்துக்கிறோம்   என்பது தெரியாமல் வேலை செய்பவன் .,  இவனுக்கு ஒரு காதலி உண்டு . காதலி திருமணத்துக்கு   முன்பே  கர்ப்பம்  ஆகிறாள் . ஒரு நாள் நாயகன்   வண்டியுடன்  சரக்கைப்பறி  கொடுக்கிறான் . உடனே   ஓனர்   நாயகனின் காதலியை  பிடித்து வைத்துக்கொண்டு சரக்கையோ அதற்கு ஈடான பணத்தையோ செட்டில் செய்து விட்டு காதலியை மீட்டுக்கொள் என்கிறான் 


 இந்த   இரண்டு  மிரட் டல்களும்  என்ன ஆனது என்பது மீதி திரைக்கதை 



 நாயகி ஆக பிந்து மாதவி . சிறப்பான நடிப்பு . அவரது கணவன் ஆக ஸ்ரீ காந்த்  கச்சிதம் . நாயகன் ஆக ஜி வி பிரகாஷ் . துடிப்பான நடிப்பு . இவரது காதலி ஆக தேஜு அஸ்வினி , அதிக வாய்ப்பில்லை , வந்தவரை ஓகே 



நாயகியின் முன்னாள் காதலன் ஆக வில்லன் ஆக லிங்கா பரவாயில்லை ரகம் தான் . நாயகனின் நண்பன் ஆக வரும் ரமேஷ் திலக் நல்ல நடிப்பு . ரெடின் கிங்க்ஸ்லி வழக்கம் போல மொக்கைக்காமெடி செய்கிறார் 


 சாம் சி எஸ் சின்  பின்னணி இசை அருமை கோகுலின்  ஒளிப்பதிவு  கன கச்சிதம் .  எடிட்டிங்கில் படம் 117 நிமிடங்கள் ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர்


1    வாய்ப்பிருந்தும் ஹீரோ பில்டப் சீன்கள் இல்லை , டூயட் இல்லை 


2 முதல் பாதி முழுக்க செம பரபரப்பில்   திரைக்கதை பறக்கிறது 


3   பிந்து மாதவியின்  உணர்ச்சிகரமான நடிப்பும், ஜி வி பிரகாஷின் அண்டர் பிளே ஆக்டிங்கும் அருமை 


4  கண்ணியமான காட் சி    அமைப்புகள்:  


  ரசித்த  வசனங்கள் 

1   செட்டில்  ஆன பின் தான்  வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் எனில் இந்த உலகில் யாரும் வாழவே முடியாது 


2  ரிஸ்க்  பார்த்தா வருமானம் பார்க்க முடியாது 


3  சரி , தப்பு என எதுவும் இல்லை , நமக்குத்தேவை இருக்கா? இல்லையா? என்பதில் தான் இருக்கு 


4  யாரையும் நம்பாதே , ஜெயிக்க என்ன வேணா செய் 


5 சுயநலமா  இருக்கக்கத்துக்க 


6   எந்த பிரச்சனை வந்தாலும் போலீஸ் ஸ் டேஷன் போயிடாத 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 கதை நடக்கும்   ஊர்   கோவை , ஆனால் யாரும் கோவை வட் டார வழக்கில்  பேசவில்லை 


2   கோவை மால் தவிர படம்  முழுக்க கோவையில் ஷூட் செய்யப் படவில்லை 


3  இடைவேளைக்குப்பின் ஏகப்பட் ட திருப்பங்கள் ஓவர் டோஸ் 


4 கடத்தப்பட் ட   சிறுமிக்கு எதுவும் ஆகி விடக்கூடாதே  என்ற பதை பதைப்பு ஆடியன்ஸுக்கு வரவில்லை 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம் த்ரில்லர்  ரசிகர்கள் அவசியம் காண வேண்டிய தரமான படம். விகடன் மார்க்   யூ கம்   43 . ரேட்டிங்க் 3 / 5 



Blackmail
Theatrical release poster
Directed byMu Maran
Written byMu Maran
Produced by
  • Jayakkodi Amalraj
Starring
CinematographyGokul Benoy
Edited bySan Lokesh
Music bySam C. S
Production
company
JDS Film Factory
Distributed byCreative Entertainers & Distributors
Zinema
Release date
  • 12 September 2025
CountryIndia
LanguageTamil

Monday, September 01, 2025

கிங்க்டம் (2025) - தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் ) @நெட் பிளிக்ஸ்

   


                      

மல்லி ராவா (2017) , ஜெர்சி (2019)-தெலுங்கு ,ஜெர்சி(2022) -ஹிந்தி  ஆகிய படங்களை  இயக்கிய கவுதம் தின்னாநூரி  இயக்கிய  நான்காவது  படம்தான்  இது .130 கோடி ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான  இந்தப்படம்  80 கோடி  ரூபாய்  மட்டுமே  வசூல்   செய்து  பாக்ஸ் ஆபீசில்  தோல்வியைத்தழுவியது 31/7/2025  அன்று  திரை அரங்குகளில்  வெளியான இந்தப்படம்  விரைவில்  நெட் பிளிக் ஸ்  ஓ டி டி  இல்  வெளிவர இருக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


சிறுவனாக இருந்தபோதே  நாயகனின் அண்ணன்  தன அம்மாவை டார்ச்சர் செய்த  அப்பாவைக்கோலை செய்து விட்டு ஊரை விட்டு ஓடி விடுகிறான் . பெரியவன் ஆன நாயகன்  போலீஸ்  கான்ஸடபிள்  ஆகிறான் .தன அண்ணனை எப்படியாவது  தேடிக்கண்டுபிடித்து  தன்  அம்மா முன்  நிறுத்த வேண்டும் என்பதே ஆசை .


 நாயகன்  ஒரு முன் கோபி . ஒரு கட்டத்தில்  தன உயர் அதிகாரியையே  பளார் என அறைந்துவிடுகிறார் . சஸ்பென்ஷனா? டிஸ்மிசா?  என  எதிர்பார்த்த வேளையில்  நாயகனுக்கு ஒரு  ஆபர்   வருகிறது .சிலோனில்  ஒரு  கேங்க்ஸ்டர்   க்ரூப்  இருக்கிறது , அதன் தலைவனை வேவு பார்த்து  தகவல் சேகரித்து  அனுப்பவேண்டும் . இதுதான் நாயகனுக்குக்கொடுக்கப்பட்டிருக்கும் டாஸ்க் .


 ஒரு சாதா கான்ஸடபிளுக்கு  ஒரு ஸ்பை  ஆக்சன்  ஹீரோ  வாய்ப்பு எப்படிக்கிடைத்தது ? அந்த கேங்க்ஸ்டர்   க்ரூப் தலைவன்  தான் நாயகனின் அண்ணன் 


நாயகன்  சம்மதிக்கிறான் .ஒரு உண்மையான போலீஸாக  நாயகன்  நடந்து கொண்டானா? தம்பியாக   நடந்து கொண்டானா?  என்பது மீதித்திரைக்கதை 


நாயகன் ஆக  விஜயதேவரகொண்டா  கச்சிதமான நடிப்பு , ஆகிருதியான உயரம் , ஜிம் பாடி  அவரது பிளஸ் .நீண்ட   இடைவெளிக்குப்பின் அவருக்குக்கிடைத்திருக்கும் நல்ல ரோல் 


நாயகன்  -ன்  அண்ணன்  ஆக  சத்யதேவ்  பாராட் ட வைக்கும் நடிப்பு .இவரது கேரக்ட்டர்  டிசைன்  நாயகன்  -ன் கேரக்ட்டர்  டிசைனை  விட  நன்கு வடிவமை க்கப்பட்டிருக்கிறது 


நாயகன்  -ன்   அம்மாவாக ரோகிணி  அதிக வேலை இல்லை , வந்தவரை ஓகே 


 நாயகி ஆக பாக்யா ஸ்ரீ  சும்மா வந்து  போகிறார் . ஒரு டூயட் கூட இல்லை 

நாயகன்  -ன்    அண்ணி  ஆக பூமி  ஷெட்டி  நல்ல குணச்சித்திர நடிப்பு . ஜொலிக்கிறார் 


அனிருத்தின் இசையில்  நான்கு பாடல்கள் .அவற்றில்  ஒரு பாடல்  படத்தில் இடம் பெறவில்லை .பின்னணி இசை  வழக்கம் போல் அருமை , நவீன்  நூலியின்  எடிட்டிங்கில்  படம்  160  நிமிடங்கள் ஓடுகிறது , ரொம்ப நீளம் .இன்னமும்  ட்ரிம் பண்ணி இருக்கலாம் கிரிஷ்  கங்காதர + ஜோமோன் டி ஜான்  இருவரின் இணைந்த  ஒளிப்பதிவு அபாரம் .திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் கவுதம் தின்னாநூரி 


சபாஷ்  டைரக்டர்

1  முதல்  35 நிமிட  திரைக்கதை  நம்மை மிகவும் ஒன்ற வைத்து விடுகிறது . சென்ட்டிமென்ட் சீன்கள் ஆடியன்ஸுக்கு நல்ல கனெக்ட்டைத்தருகிறது 


2 1920 ல்  நடப்பதாக வரும் போர்ககளக்காட் சிகள் , டைட்டிலில்  வரும் அனிமேஷன் காட் சிகள்  ரசிக்க வைத்தன 


3  பிளாஸ்பேக் சீன்  15 நிமிடங்கள் என்றாலும்  மனதில்  தங்கும் அளவு  பாதிப்பை உருவாக்கியது 


4  நாயகன்  போலீஸ்  ஆபீசரையே  மிரட்டும்  காட் சி , நாயகன் - அண்ணன்  இருவருக்கும் இடையே   ஆன பாண்டிங் க் 


5   டெக்கினிக்கல்  டீமின் அபார உழைப்பு , குறிப்பாக ஒளிப்பதிவு , சேசிங்க்  சீன்ஸ் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   ரகிலே ரகிலே  பாட்டு   அப்படியே  ஜெயிலர்  படத்தில்  வரும்  ஹுக்கும்  பாட்டின்  பாட்டின் டிங்கரிங்க் உல் டா 


2  செல்வா ராகவனின் ஆயிரத்தில் ஒருவன் , விஷாலின் தோரணை , ஜீவாவின் வந்தான் வென்றான் , தேவரா , சத்ரபதி , சூர்யாவின் ன் ரெட்ரோ ஆகிய  படங்கள்  அனைத்தும்  ஒரே  டி வி டியைப்பார்த்து  சுடப்பட் டவை யோ என எண்ண  வைக்கும் அளவு  பல சீன்களோடு இந்தப்படமும் .சீன்களும்    ஒத்திருக்கின்றன ( இந்த  இயக்குனர்    இயக்கிய  ஜெர்சி   படமே செல்வா ராகவனின் மயக்கம்  என்ன  சாயல் தான் ) 


3 செக் போஸ்ட்டில்  நாயகன்   தப்பிக்கும் சீன்  காதில்  பூ ரகம் . அத்தனை  பேர்  கையில் துப்பாக்கி  இருந்தும் யாருமே நாயகனை சுடவில்லை 


4  முதல் பாதி அளவு  பின் பாதி  நம்பகத்தன்மை இல்லை 


5  க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட்  எடுபடவில்லை .கதையில்  நிகழு ம் முக்கியமான  மரணங்கள் தேவை இல்லாதவை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 


விஜயதேவரகொண்டா  ரசிகர்கள் , தெலுங்குப்பட   மசாலா ரசிகர்கள் பார்க்கலாம் .மற்றபடி  இது சராசரி  ஆக்சன் மசாலா தான், ரேட்டிங் 2.25 /5 

thanx - ANICHAM   SEPTEMBER  ISSUE


Kingdom
Theatrical release poster
Directed byGowtam Tinnanuri
Written byGowtam Tinnanuri
Produced by
Starring
Cinematography
Edited byNaveen Nooli
Music byAnirudh Ravichander
Production
company
Release date
  • 31 July 2025
Running time
160 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget₹130 crore[2][3]
Box office₹80 crore[4]

Monday, August 18, 2025

NIGHT ALWAYS COMES (2025) - அமெரிக்கன் மூவி - ஆங்கிலம் /தமிழ் -சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் டிராமா ) @நெட் பிளிக்ஸ்

                   

       15/8/2025 முதல் நெட் பிளிக்ஸ்  ஓ டி டி யில் நேரடியாக வெளியான இந்தப் படம்  விமர்சகர்களிடையே  பாசிட்டிவான கருத்துக்களைப்பெற்று வருகிறது .2021ல் வெளியான நாவல் ஆன நைட்  ஆல்வேஸ்  கம்  அதே டைட்டிலில் படம் ஆகி உள்ளது . படத்தின் நாயகி தான் படத்தின் தயாரிப்பாளர் . ஒரே நைட்டில் நடக்கும் கதை என்பதால்  அதிக செலவில்லை . லோ பட்ஜெட் படங்கள்  என்றாலே  திரைக்கதையை நம்பும் படங்களாக இருக்கும் என்பதால் நம்பிப்பார்க்கலாம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி ஒரு நைட் க்ளப்  பாரில்  பணிப்பெண்ணாகப்பணி புரிகிறார் . இவருக்கு அம்மா, ஒரு அண்ணன் . இவர்கள் ஒரு வாடகை வீட்டில் குடி இருக்கிறார்கள் .  , ஹவுஸ்  ஓனர்  ஒரு நாள்  இவர்களிடம் வந்து  இந்த  வீட் டை  விற்கப்போகிறேன் . காலி பண்ணிடுங்க என்கிறார் . இன்னொரு சாய்ஸும் தருகிறார் . நீங்களே  வாங்கிக்கொள்வதாக இருந்தாலும்     ஓகே , 25,000    டாலர்  ரெடி  கேஷ்  தந்துடுங்க  என்கிறார் . நாயகிக்கு  இந்த   வீட் டை  வாங்க ஆசை . 


 நாயகியின்  அம்மா விடம்  உதவி  கேட்கிறார். அம்மா தருவதாக சொல்லி  காலை வாரி விடுகிறார் .அக்ரிமெண்ட்  தேதி  நாளை காலை 10 மணிக்கு .இன்று இரவில்  பணம்  ரெடி பண்ண    வேண்டும்  . நாயகி  தனக்கு பணம் தர  வேண்டிய தோழியிடம்   பணம் கேட்கிறார்.. ஆனால்   அவர்  தரவில்லை . ரொம்பவும்  நெருக்கவே  போனாப்போகுது என  தனது பாய் பிரண்டின்   லாக்கரில் இருந்து கொஞ்சம்  பணம் தருகிறார் . அது போதாது 


 தோழி  வெளியே  போனதும்  தோழியின்  பாய் பிரண்டின்  லாக்கரை  அபேஸ்  பண்ணி  நாயகி  ஒரு இடத்துக்குப்போகிறார் . அந்த  லாக்கரில் இருக்கும் பணத்தை  அவர் எடுத்தாரா? என்ன என்ன பிரச்சனைகளை சந்தித்தார் என்பது மீதித்திரைக்கதை 


நாயகி  ஆக வெனிஷா  கிர்பை  பிரமாதமாக நடித்திருக்கிறார் . அழகுப்பதுமை , அம்மா , அண்ணன் , பாய் பிரெண்ட் , வில்லன்  எல்லோருக்கும் அதிக வாய்ப்பில்லை . வந்தவரை ஓகே  தான் 

சபாஷ்  டைரக்டர்


1 ஒரு சீன்  கூட போர் அடிக்காத பரபரப்பான திரைக்கதை 

2  டெக்கினிக்கல்  அம்சங்கள்  கச்சிதம் 

3  நாயகியின்  பிரமாதமான  நடிப்பு 

4 ஒரே  இரவில் நடக்கும் கதை என்பதால்    குழப்பம்  இல்லாத  தெளிவான  திரைக்கதை 

  ரசித்த  வசனங்கள் 


1   நான் சந்தோஷமா  இருக்கத்தான் உனக்குப்பணம் தர்றேன் , உன் குடும்பப்பிரச்சனைகள் எல்லாம் எனக்குத்தேவை  இல்லை 


2 நண்பர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகளை பின்னாளில் சொல்லிக்காண்பிக்க மாட் டார்கள் 


3  ட்ரில் மிஷின்ல  தான் இந்த லாக்கரை உடைக்கணும், சைலன்சரா போட முடியும் ? சத்தம் வரத்தான் செய்யும் 


4  வாழ்க்கைல  யாரை எல்லாம் நேசித்தேனோ  அவங்களை  எல்லாம் காயப்படுத்தி இருக்கேன் 


5  நீ  ஒரு குப்பைத்தொட்டி . எல்லாக்குப்பைகளையும் உனக்குள்ளே சேர்த்து வைத்திருக்கறே 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகியின்  பணத்தேவை  தெரிந்தும்  தோழி  நாயகியை  தன வீட்டில் தனியாக  விட்டு விட்டு  வெளியே செல்வது எப்படி ? லாக்கரை அபேஸ் செய்வாள் என யூகிக்க முடியாதா? 


2  தோழி  நாயகி மேல் போலீஸ்   புகார் தரவில்லையா? 


3   காரை  இழந்த  நாயகியின்  பாய் பிரண்ட்  அதை மீட்க  எந்த   முயற்சியும் எடுக்க மாட் டாரா? 


4 சொந்த அம்மா பொறுப்பில்லாமல் இருப்பாரா ? 


5   மெயின் கதைக்கும் நாயகியின் அண்ணன்  கேரக்ட்டருக்கும்  சம்பந்தம் இல்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பரபரப்பான  க்ரைம் த்ரில்லர்  பார்க்க விருப்பம் உள்ளவர்கள் பார்க்கலாம் , ரேட்டிங்க்  3 / 5 


Night Always Comes
Release poster
Directed byBenjamin Caron
Screenplay bySarah Conradt
Based onThe Night Always Comes
by Willy Vlautin
Produced by
Starring
CinematographyDamián García
Edited byYan Miles
Music byAdam Janota Bzowski
Production
companies
  • H2L Media Group
  • Aluna Entertainment
  • Square Eyed Pictures
Distributed byNetflix
Release date
  • August 15, 2025
Running time
108 minutes[1]
CountryUnited States
LanguageEnglish

Saturday, August 16, 2025

SEA OF LOVE (2025)-KADALOLAM SNEHAM-மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா )

                         



ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  சிங்கப்பூரில் பணி  புரிபவன் . அவனது அம்மா கிராமத்தில் இருக்கிறார் . நாயகனுக்கு சொந்த ஊரில் வந்து  செட்டில் ஆக வேண்டும் என்ற கனவு உண்டு . நாயகன் வீட்டுக்கு எதிர் வீட்டில் நாயகி குடி இருக்கிறாள் . அவளிடம் தன விருப்பத்தை  சொன்னபோது அவள் அதை ஏற்கவில்லை .


நாயகி நாயகனின் அம்மாவுடன்  பிரியம் வைத்திருக்கிறாள் . இவர்கள் இருவரின்  காதல் பற்றி  நாயகனுக்குத்தெரிய வருகிறது . இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 


 நாயகன் ஆக ஜிப்னு  சாக்கோ ஜோசப்   நடித்திருக்கிறார் . இவருக்கு அதிக வாய்ப்பில்லை . வந்தவரை ஓகே .நாயகி ஆக ஓ  சிண்ட்ரெல்லா (2023) அமிகோ (2024) படங்களின் நாயகி தில்ஷா  பிரசன்னன்  நடித்திருக்கிறார் . அழகான முகம், அமைதியான நடிப்பு . கண்ணியமான ஆடை வடிவமைப்பு . நாயகனின்  அம்மாவாக ஜீனத்  நடித்திருக்கிறார் , மங்களகரமான முகம் . கச்சிதமான  நடிப்பு 


கோட் டயம்  ரமேஷ்  முக்கியமான  ரோலில்  வருகிறார் .


தேவகிருஷ்ணன் , சாய் கிருஷ்ணா   ஆகிய இருவரும் இணைந்து திரைக்கதை எழுதி  இருக்கிறார்கள் ,தேவகிருஷ்ணன் , ஒரு சின்ன ரோலில் நடித்திருக்கிறார் .சாய் கிருஷ்ணா  இயக்கி இருக்கிறார் 



சபாஷ்  டைரக்டர்


1 பிரமாதமான  ஒளிப்பதிவு . ஆர்ட் பிலிம்க்கே  உரித்தான  மெதுவான திரைக்கதை 


2  மீராநாயரின்  பயர் படம் போல் இல்லாமல்  கலைநேர்த்தியான கண்ணியமான காட் சி அமைப்புகள் 


3   76 நிமிடங்களில்  ஷார் ப் ஆக ட்ரிம் செய்யப்பட் ட எடிட்டிங்க் 


  ரசித்த  வசனங்கள் 

1   யாருக்காகவும் உன் விருப்பத்தை நிறைவேற் றாம இருந்துடாத 


2  பொண்ணுக்கு  குறிப்பிட்ட வயசு  வந்ததும் திருமணம் பண்ணி வைத்து விட வேண்டும் 


3 நம்ம உடம்பில் இருக்கும் அக்கினியை காலாகாலத்தில் அணைக்கணும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகனின்  அம்மாவின் கேரக்ட்டர்  டிசைனில் குழப்பம் . நாயகியைத்தன் மகள் போல என ஒரு சீனில் சொல்கிறார் , இன்னொரு சீனில்  அவளைப்பிரிந்து இருக்க முடியாது என்கிறார் 


2 நாயகியின்  கேரக்ட்டர்  பேசிக்கலாவே  அவர் லெஸ்பியன் தான்  என்பதை க்ளியர்   கட்  ஆக சொன்ன மாதிரி  நாயகனின் அம்மா  நீண்ட கால தனிமை காரணமாகவா ? வேறு  என்ன காரணத்தால்      அப்படி  ஆனார்   என்பதில் தெளிவு  இல்லை 


3  நாயகன்  தன அம்மாவிட ம்  நீங்க  பை  செக்ஸுவலா?  என போல்டாக கேட்பது உறுத்துகிறது 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களுக்குப்பிடிக்கும், பெண்களைப்போல பொறுமைசாலிகளுக்குப்பிடிக்கும் . ரேட்டிங்க்  2.25 / 5 

Friday, August 15, 2025

கூலி (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரிவெஞ்ச் ஆக்சன் மசாலா )

                          




ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்  விசாகபபட்டினத்தில்  ஒரு துறைமுகத்தை  தனது  கட்டுப்பாட்டில்  வைத்துக்கொண்டு சட்டத்துக்குப்புறம்பான வேலைகளை செய்கிறான் . அவனுக்குக்கீழே  மேனேஜர் ஆக  இருக்கும் சைடு வில்லன்  எல்லா  வேலைகளையும் பார்த்துக்கொள்கிறான்.அங்கே  தொழிலாளர்களோடு  சில  போலீஸ்  உளவாளிகளை  கலந்து இருக்கிறார்கள் . சைடு  வில்லன் ஒரு போலிசைக்கண்டு பிடித்துக்கொலை செய்கிறான் 


 நாயகன்  சென்னையில் ஒரு மேன்ஷன் நடத்தி வருகிறான் . அவனது  நண்பனை  விசாகப்பட்டினத்தில்  யாரோ கொலை செய்து விட் டார்கள் என்பதைக்கண்டு பிடிக்கிறான் . பிணங்களை  டிஸ்போஸ்  செய்யும்  எலக்ட்ரிக் சேரை  உருவாக்கி  வில்லனுக்காக வேலை பார்த்தவன் தான் நாயகனின் நண்பன் . எதனால் கொலை செய்யப்பட் டான் . யார் அவனைக்கொன்றது  என்பதைக்கண்டு பிடித்துப்பழி வாங்க  நாயகன்  முயற்சிக்கிறான் . இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதிக்கதை 



 வில்லன் ஆக  நாகார்ஜுன்  இளமை மாறாத  பொலிவுடன் இருக்கிறார் . இவருக்கு அதிக வாய்ப்பில்லை .

 சைடு வில்லன் ஆக சவுபின்  சாஹிர்  பிரமாதப்படுத்தி இருக்கிறார் . மோனிகா  பாடலில் செம டான்ஸ்  வேற .


நாயகன் ஆக  ஒன்  அண்ட் ஒன்லி  சூப்பர் ஸ் டார் ரஜினி .வழக்கமாக அவர் செய்யும் காமெடி , ரொமான்ஸ் , கலா ட்டாக்கள் எதுவும் இல்லை  . ஆக்சன் , சோகம்      மட்டும் தான் . ஆனாலும் பிளாஸ்பேக்கில் இளமை ரஜினியாக கலக்கி விட் டார்  


நாயகனின்   நண்பன் ஆக  சத்யராஜ் . மேடைகளில்  ரஜினியை எதிரியாக விமர்சித்தவருக்கு நண்பன் ரோல் .பாவம்  அவர் நிலைமை .அவரது மகளாக சுருதி கமல் . ஒரே சோகம் 


உபேந்திரா , அமீர்கான்  இருவரும் தேவை இல்லாத ஆணிகள் ரச்சிதாராம்  கலக்கலான நடிப்பு  .சார்லி  வேஸ்ட் பீஸ் , காளி  வெங்கட்  கெஸ்ட் ரோல் 


 இசை அனிரூத் . பிஜிஎம்மில்  கலக்கி விட் டார் . மோனிகா பாட்டு செம ஹிட்டு .. கிரிஷ் கங்காதர்   ஒளிப்பதிவு அருமை . பிலோமின் ராஜ்   எடிட்டிங்கில்  படம் 170 நிமிடங்கள் ஓடுகிறது . திரை க்கதை , இயக்கம்  லோகேஷ் கனகராஜ் 


 




சபாஷ்  டைரக்டர்

1   படம் போட் ட  16 வது நிமிடத்தில் ஹீரோ  இன்ட் ரோ , 44 வது நிமிடத்தில்   லேடிஸ்  ஹாஸ்ட்டலில்  நடக்கும் அரங்கம் அதிர  விசிலு பறக்க   நடக்கும் ஆக்சன்சீக்வன்ஸ்  அதகளம் 


2  ஆந்திராவில்  தனக்கு யாரை எல்லாம்  தெரியும்   என்பதை ரஜினி சொல்லும் சீனில் தியேட்டரில் கரகோஷம் 


3  மோனிகா  பாட்டில்  கொரியோ கிராப் , காஸ்ட்யூம்  டிசைன்   கலக்கல் ரகம் , செம ஹிட்டு மெட்டு 

4  வா வா  பக்கம் வா  பாட்டு  சீனை  ப்ளேஸ்   செய்த  விதம்  செம + இன் ட்டர் வெல் பிளாக்  சீன் 

6   லைலா   காலேஜ்  லைலா பாட்டு  சீனை    மேன்ஷன்  பைட் சீனுக்கு மேட் ச்  செய்த  விதம்  செம

7  சைடு வில்லனின்  மனைவி  செய்யும் வில்லித்தனம் , அதில் வரும் ஒரு டிவிஸ்ட் 


8  நாயகனின்  பிளாஷ்பேக்  சீனை  க்ளைமாக்சில்  ஓப்பன் செய்த விதம் , அந்த ஐடியா 


  ரசித்த  வசனங்கள் 

1  தெய்வம் நின்னு கொல்லு ம், மது தினம் தினம் கொல்லும்


2  அது   என்ன டெய்லு ? 


 காக்டெயிலு 


 நீ டீ டோட்டலர் ? 


3   பழி  வாங்குவது முக்கியமா? வாழ்க்கை முக்கியமா?  எனப்பார்த்தா எங்களுக்கு வாழ்க்கை தான்  முக்கியம் .


4   பாப்பா  , நீயா வந்து வண்டில  ஏறிட் டா நல்லது , இல்லைன்னா நான் கண்ட இடத்துல தொடுவேன் 


 தொட் றா  பார்க்கலாம் 


5  அவன்  ஏதாவது சொன்னானா? 


 நான் சொன்னா யார் கிட் டயாவது   சொல்லிடுவியா?ன்னு கேட் டா ன் , சொல்ல  மாட் டேன்னு   சொன்னேன் . அப்புறம் எதுக்கு நான் உன் கிட்டே    சொல்லணும் கறான் ? 

6 வில்லி  - நான்  எது  சொன்னாலும் நம்பிடுவியாடா? 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   துறைமுகம்    நடத்தும்  வில்லன்  பிணங்களை  கடலுக்குள்  கல் கட்டி  தூக்கி வீசாமல்  அதை அப்புறப்படுத்த எலெக்ட்ரிக் சேரை நம்புவது எனோ ? 


2 எலெக்ட்ரிக் சேரை   டிசைன்   பண்ணிய டீம்  10 பைசா  செலவில்லாமல் டம்மியாக அதைக்காண்பித்த விதம் பரிதாபம் 


3   எலெக்ட்ரிக் சேரை  ஆப்பரேட்  செய்வது   எப்படி ? என்பதை  வில்லன்  தெரிந்து கொள்ளாமல் இருப்பது அவன் மகா தத்தி என்பதைக்காட்டுகிறது  


4  எலெக்ட்ரிக் சேர்   டெக்னிக் எல்லாம் எம் ஜி ஆர் காலத்துலயே  பாரத்தாச்சே? புதுசா   சொந்தமா யோசிக்கக்கூடாதா? 

5 தேவையே  இல்லாமல் ஓவர் வயலன்ஸ் 

6 மெயின்  வில்லனை  விட அவனிடம் வேலை பார்க்கும் சைடு வில்லனுக்கு அளிக்கப்படட அதிக முக்கியத்துவம் 

7 ரஜினிக்கு  பஞ்ச்  டயலாக்  வைக்காதது பெரிய மைனஸ் 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18 + 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் கூலி(2025)-தமிழ்- நண்பனைக்கொன்றவனைப்பழி வாங்கும் மாமூல் ஆக்சன் மசாலா தான். ரஜினி மேஜிக், அனிருத் பிஜிஎம் மட்டுமே பிளஸ். முதல் பாதி சுமார், பின் பாதி அதை விட சுமார்.விகடன் மார்க் யூகம் 41.ரேட்டிங்க் 2.5 /5

பிளாக்கில் டிக்கெட் வாங்கிப்பார்க்கும் அளவு ஒர்த் இல்லை.ரஜினி ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.ஒரு படி ஜெயிலருக்குக்கீழே,ஒரு படி அண்ணாத்த க்கு மேலே.
ஒரு படி மாஸ் டருக்குக்கீழே , ஒரு படி லியோவுக்கு மேலே

Coolie
Theatrical release poster
Directed byLokesh Kanagaraj
Screenplay byLokesh Kanagaraj
Chandhru Anbazhagan
Story byLokesh Kanagaraj
Produced byKalanithi Maran
Starring
CinematographyGirish Gangadharan
Edited byPhilomin Raj
Music byAnirudh Ravichander
Production
company
Release date
  • 14 August 2025
Running time
170 minutes[1]
CountryIndia
LanguageTamil
Budget350–400 crore[2]
Box office150 crore[3]

Wednesday, August 13, 2025

ட்ரெண்டிங்க் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் (சைக்கலாஜிக்கல் டெக்னோ த்ரில்லர் )

   

      அறிமுக  இயக்குனர்  சிவராஜின்  இயக்கத்தில் வெளி  வந்திருக்கும்    த்ரில்லர் படமான இது  18/7/2025  முதல்  திரை  அரங்குகளில் வெளியாகி  மீடியாக்களின் வரவேற்பைப்பெற்ற படம் . இன்னமும் ஓ  டி டி  யில் வெளி வரவில்லை 


இது வித்தியாசமான  த்ரில்லர் மூவி . ஒரே  பங்களா தான் லொக்கே ஷன் .. நாயகன் , நாயகி ,, நாயகியின் அம்மா, , நாயகியின் தோழி, நாயகன் -ன் அண்ணன்  ஐவர் தான்  நடிக , நடிகையர் .லோ பட்ஜெட்டில் உருவான  மாறுபட் ட  த்ரில்லர் மூவி . இது  அனைவருக்குமான படம் அல்ல, ஏ செண்ட்டர்  ஆடியன்ஸ்க்கான  படம்                 


ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாயகன் -, நாயகி  இருவரும்  பிரபலமான  யு  ட்யுபர்ஸ் . ஹிட்டுக்காக  என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் .. அதில் வந்த வருமானத்தில் பங்களா எல்லாம் கட் டி விட் டார்கள் .. ஒரு நாள்  அவர்களது சேனல்   லாக் ஆகிறது . கடன் காரர்கள் நெருக்குகிறார்கள் . பணத்தேவை  இருக்கிறது . இப்போது  ஒரு மர்ம நபர்  சில டாஸ்க்குகள் கொடுத்து வி ளையாட அழை க்கிறது . ஜெயித்தால் 2 கோடி ரூபாய் .


 தம்பதி  விளையாட சம்மதிக்கிறது . ஆனால்  இதில் பல பிரச்சனைகள்  வருகிறது . இறுதியில் என்ன ஆனது ? என்பதே  மீதி திரைக்கதை 


 நாயகன் -, நாயகி  ஆக கலையரசன் , பிரியாலயா  ஆகிய இருவரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள் . 


 சாம் சி எஸ்  இசை  சுமார் ரகம் தான் , பிரவீன்  பாலுவின் ஒளிப்பதிவு அருமை 

நாகூரான் ராமச்சந்திரன்  எடிட்டிங்கில் படம் 140 நிமிடங்கள் ஓடுகிறது 

திரைக்கதை  எழுதி   இயக்கி இருப்பவர்  என் சிவராஜ் 



சபாஷ்  டைரக்டர்

1   நாயகன் , நாயகி இருவர் நடிப்பும்   அருமை . நாயகியின்  இளமையும்  அழகும்  கூடுதல் பிளஸ் 


2  பிக் பாஸ்   பார்ப்பது  அகில இந்திய அளவில்  ட்ரெண்டிங்கில்  இருப்பதால்  எல்லோருக்கும் இக்கதை கனெக்ட் ஆகும் 


3  இந்தக்கதை மூலம் இயக்குனர் சொல்ல வந்த சோசியல் மெசேஜ் 


ரசித்த  வசனங்கள் 


1 பெரும்பாலானவர்கள் காதலில் பிரச்சனை நிகழ் காலத்தில் இல்லை அவங்க கடந்த காலத்தில் தான் இருக்கு 


2   முதல்ல காபி 

 நோ  , முதல்ல  கண்டடென்ட் 


 சரி காபி தான் நம்ம  கண்டடென்ட் 


3  இன்னைக்கு ஆன்லைன்  ல திறமையைக்காட்டிப்பெரிய ஆள் ஆனவங்களை விட கெத்து காட்டிப்பெரிய ஆள் ஆனவங்க தான் அதிகம் 


4       நாலு   வார்த்தைக்கோர்வையாகப்பேசத்தெரியாத தத்திங்களையே   ஆன் லைன் செலிபிரிட்டி (  பெரிய  ஆள் )ஆக்கறோம் , இதெல்லாம் ஒரு மேட்டரா ? 


5 இப்படி  உயிரைப்பணயம் வெச்சுதான் லைக்ஸ் வாங்கணுமா? என்ன ? 


 நாங்க ( ஆண்கள் ) எல்லாம் சட் டையைக்கழட்டினா யாரு பார்ப்பாங்க ? 


6 மாடிக்கு மாடி தாவி மங்கிஸ்கான்  வேலை செஞ்சாலும்  நாநூறு  லைக்ஸ் தாண்டலையே ? 


7   24   மணி நேரமும் கடவுளையே நினைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் முன்னாள் கடவுளே வந்தாலும் அதைக்கடவுளா  அவன் நினைக்க மாட் டான் ,  பேய்   என்று தான் நினைப்பான் 


8   தேவையான நேரத்தில் தேவையானதைக்கொடுப்பது பேயா இருக்காது , அந்த நேரத்தில் அது தான் கடவுள் 


9   கேமை ரியல் லைஃபா பார்க்காத 


ரியல் லைஃபை நீ கேமா பார்க்காத 


10  ஒருத்தர் தோற்றால்தான்  இன்னொருத்தர் ஜெயிக்க முடியும் , அதுதான் வாழ்க்கைத்தத்துவம் 


11  முகமும்  அடையாளமும் இல்லைன்னா இங்கே எல்லாருமே பர்வர்ட் தான் 


12  காதல் என்பது எது   தெரியுமா? 


 ஒருவரை  ஒருவர் புரிந்து கொள்வது 


 இல்லை , ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற் சிக் காமல் இருப்பது 


13  நம்மைப்பற்றி நமக்கு  எப்ப முழுதாகத்தெரிய வருதோ அன்னைக்கு நாம ஒன்றாக இருக்க மாட் டோ ம் 


14   பணம் இருக்கும், ஆனா நிம்மதி இருக்காது . பணத்தைத்தேடிப்போய் நாம தொலைந்து விடக்கூடாது 


15  அமுக்கி  வைக்கப்பட் ட  உணர்ச்சிகள்  சாகாது . பின்னால் அசிங்கமா வெளி வரும் 


16   நீ  அழுவது கூட டாஸ்க் மாதிரி இருக்கு 


17 ஒரு மனுஷனுக்கு மிகச்சிறந்த நண்பனும், மிக மோசமான எதிரியும் யார் தெரியுமா? அவனோட கடந்த காலம் தான் 


18 திரும்பவும் என் கடந்த காலத்துக்குப்போக நான் விரும்பலை 


19 எங்க எமோஷன்ஸை யாருக்கோ விற்கப்பார்க்கறீங்க 


20 இத்தனை நாட்களாக  நீங்க உங்க பொய்யான  உணர்ச்சி களை  உங்க சேனலுக்காக  வித்துட்டு இருந்தீங்க . இப்போதான் உங்க உண்மையான உணர்ச்சி களை  இந்த கேம்  டாஸ்க் குக்காக வித்துட்டு இருக்கீ ங்க . 


21 எங்க இருவருக்குள்ளும் இருப்பது  அன்  கண்டிஷனல் லவ் 


 இந்த உலகத்துல அன் -  கண்டிஷன் என ஒன்னு கிடையவே கிடையாது 


22  வாழ்க்கைல   நாம சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு எதோ ஒன்னு கத்துக்கொடுப்பாங்க 


23  இங்கே   வாய்ப்புக்கிடைக்கும் வரை எல்லாருமே ஜென்ட்டில் மேன் சூப்பர் மே ன் தான் 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   நாயகனின் அண்ணன்  20 லட்ச ரூபாய்  மதிப்புள்ள   வைரம்    தந்து  அதை  வெளியில்  விற்றுத்தரச்சொல்கிறான் . அதை வங்கியிலோ .  நகைக்கடையிலோ  விற்க முடியாதா? 


2  தம்பதியாக இருக்கும்  இருவரும் வீடு பூரா  சி சி டிவி  கேமரா  மூலம் தாங்கள்  கண்காணிக்கப்படுவதை எப்படி  ஏற்றுக்கொள்கிறார்கள் ? பிக் பாஸ் கதை வேற , இது  பர்சனல்   லைப் ஆச்சே ? 


3  நாயகனின்   அண்ணனை  தங்கள்   குடும்ப நண்பர் என நாயகன் எதனால் மாற்றி  சொல்கிறார் ?


4 பர பரப்பாகப்போகும் திரைக்கதையில்  நாயகனின் அண்ணனின்  சோகக்கதை  படத்தின் வேகத்துக்கு வேகத்தடை 

5  டாஸ் க்குக்காக , பணத்துக்காக  தாலி கட் டிய சொந்த சம்சாரத்தை  கணவனே  இன்னொருவரிடம் நெருக்கமாக  இருப்பதாக நடிக்கச்சொல்வது நம்ப முடியவில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மாறுபட் ட  த்ரில்லர்  மூவி பார்க்க விரும்புவர்கக்ள்  பார்க்கலாம் . விகடன் மார்க் யுயுகம் 41 , ரேட்டிங்க்  2.75 / 5 


டிரெண்டிங்
நாடக வெளியீட்டு சுவரொட்டி
இயக்கியவர்சிவராஜ் என்
எழுதியவர்சிவராஜ் என்
தயாரித்தவர்
  • மீனாட்சி ஆனந்த்
  • ஆனந்த் ஜி
நடிப்பு
ஒளிப்பதிவுபிரவீன் பாலு
திருத்தியவர்நாகூரான் ராமச்சந்திரன்
இசையமைத்தவர்சாம் சிஎஸ்
தயாரிப்பு
நிறுவனம்
ராம் பிலிம் ஃபேக்டரி
விநியோகித்தவர்ஐந்து நட்சத்திர கே. செந்தில்
வெளியீட்டு தேதி
  • 18 ஜூலை 2025
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Tuesday, August 12, 2025

ஹவுஸ் மேட்ஸ் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் (பேண்ட் டசி காமெடி சயின்ஸ் பிக்சன் டிராமா )


                          

காளி  வெங்கட்  நடிக்கும் படங்கள் எல்லாமே  எதோ ஒரு விதத்தில் மனதைக்கவர்வதாகவே அமைந்து விடுகிறது . லோ பட்ஜெட்டில் உருவான இந்த பேண்ட் டசி காமெடி சயின்ஸ் பிக்சன் டிராமா நம்ப முடியாத கதையாக இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது . குறிப்பாக க்ளைமாக்ஸ் சீன்  பெண்களைக்கவரும் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  வாடகை வீட்டில் குடி இருக்கிறான் . ஹவுஸ் ஓனர் பெண்ணையே லவ் பண்ணிக்கல்யாணம் பண்ணிக்கொள்கிறான். காதல் மனைவியுடன்  குடி இருக்க சொந்தமாக ஒரு அபார்ட்மெண்ட் வீட் டை விலைக்கு வாங்குகிறான்  . அந்த வீட்டுக்கு இருவரும் குடி போன பின்  அமானுஷ்ய விஷயங்கள்  நடக்கின்றன . முதல் 20 நிமிடங்கள்  ஹாரர்  டிராமாவாக படம் நகர்கிறது 


அதே வீட்டில்  இன்னொரு ஜோடி குடி இருப்பது தெரிய வருகிறது . 2012ல்  அந்த ஜோடி , 2022 ல் இந்த ஜோடி இது  எப்படி என்ற குழப்பத்துடன் இடைவேளை வருகிறது 


பின் பாதியில்  2012ல் குடி இருந்த அந்த ஜோடியைப்பற்றி இவர்கள் விசாரிக்க  சில உண்மைகள் தெரிய வருகின்றன . இதற்குப்பின்  நடக்கும்  சம்பவங்கள்  தான் பின் பாதி திரைக்கதை 


நாயகன்  - நாயகி ஆக தர்ஷன் - ஆர்ஷா  இருவரும் கனகச்சிதம் . குறிப்பாக  ஆர்ஷா  ஸ்லிம்  பியூட்டி ஆக நடிப்பில் ஜொலிக்கிறார் . இன்னொரு ஜோடி ஆக  காளி  வெங்கட் - வினோதினி  யின்  குணச்சித்திர நடிப்பு  அருமை . இவர்கள்  இருவரும்  2012- 2022  ஆகிய இரு கால கட்ட  கெட் டப்பில்  வருவது  செம 


படத்தில்  வில்லன் என யாரும் இல்லாதது ஆறுதல் .  பேய் வீட் டை  வாங்க வரும்  நபர் ஆக டி  எஸ் ஆர்   சீனிவாசன் கலக்கல் நடிப்பு 

ஒளிப்பதிவு  எம் எஸ் சதீஷ் . ஒரே  வீட்டை  இரு    வேறு  கால   கட்டங்களில்  வித்தியாசப்படுத்திக்காட்டி இருப்பது அருமை .  மெகா ஹிட் ஆனா பிரேமம் படத்தின் இசை அமைப்பாளர் ராஜீஷ்  முருகேசன்  இதில் ஏமாற்றி விட் டார் 

சபாஷ்  டைரக்டர்


1  நம்ப முடியாத  கதையாக இருந்தாலும் மாறுபட் ட  கற்பனை   அருமை 


2   இரு ஜோடிகளின் அருமையான நடிப்பு 


3 ஆல்ரெடி   இறந்த ஒருவரை டைம் டிராவல்  செய்து  உயிரைக்காப்பாற்றும்  இடம் அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  பேய்  நம்ம பே ரு கேட் குதே? அடுத்து ஆதார் பாண் நம்பர் கேட்குமோ ? 


2   நீ   பாட்டுக்கு ஒரு பேயை வர வெச்சுடாத . ஆல்ரெடி ஒரு பேய் கூட குடித்தனம் பண்ணிட்டு இருக்கேன் 


3  என்னது > பேய் ஸ்பெல்லிங்க் மிஸ் டே க்கோட எழுதுது ?


 போய் டியூஷன் எடு 


4  என்னது  ? ஸ்பென்சரா? 


 அது சென்சார் 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   என்னதான்  இயக்குனர் சிரமப்பட்டு இரு கேரக்ட்டர்கள் மூலம் விளக்கினாலும் புரியாத குழப்பமான கதை  மைனஸ் 


2  மெயின் கதைக்கு வர 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறார்கள் 


3 தேவை இல்லாத பல காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்   - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்


 வித்தி யாசமான  கதை அம்சம்  வேண்டுபவர்கள்  பார்க்கலாம் , விகடன் மார்க் 42 . ரேட்டிங்க் 3 / 5