Wednesday, August 13, 2025

ட்ரெண்டிங்க் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் (சைக்கலாஜிக்கல் டெக்னோ த்ரில்லர் )

   

      அறிமுக  இயக்குனர்  சிவராஜின்  இயக்கத்தில் வெளி  வந்திருக்கும்    த்ரில்லர் படமான இது  18/7/2025  முதல்  திரை  அரங்குகளில் வெளியாகி  மீடியாக்களின் வரவேற்பைப்பெற்ற படம் . இன்னமும் ஓ  டி டி  யில் வெளி வரவில்லை 


இது வித்தியாசமான  த்ரில்லர் மூவி . ஒரே  பங்களா தான் லொக்கே ஷன் .. நாயகன் , நாயகி ,, நாயகியின் அம்மா, , நாயகியின் தோழி, நாயகன் -ன் அண்ணன்  ஐவர் தான்  நடிக , நடிகையர் .லோ பட்ஜெட்டில் உருவான  மாறுபட் ட  த்ரில்லர் மூவி . இது  அனைவருக்குமான படம் அல்ல, ஏ செண்ட்டர்  ஆடியன்ஸ்க்கான  படம்                 


ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாயகன் -, நாயகி  இருவரும்  பிரபலமான  யு  ட்யுபர்ஸ் . ஹிட்டுக்காக  என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் .. அதில் வந்த வருமானத்தில் பங்களா எல்லாம் கட் டி விட் டார்கள் .. ஒரு நாள்  அவர்களது சேனல்   லாக் ஆகிறது . கடன் காரர்கள் நெருக்குகிறார்கள் . பணத்தேவை  இருக்கிறது . இப்போது  ஒரு மர்ம நபர்  சில டாஸ்க்குகள் கொடுத்து வி ளையாட அழை க்கிறது . ஜெயித்தால் 2 கோடி ரூபாய் .


 தம்பதி  விளையாட சம்மதிக்கிறது . ஆனால்  இதில் பல பிரச்சனைகள்  வருகிறது . இறுதியில் என்ன ஆனது ? என்பதே  மீதி திரைக்கதை 


 நாயகன் -, நாயகி  ஆக கலையரசன் , பிரியாலயா  ஆகிய இருவரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள் . 


 சாம் சி எஸ்  இசை  சுமார் ரகம் தான் , பிரவீன்  பாலுவின் ஒளிப்பதிவு அருமை 

நாகூரான் ராமச்சந்திரன்  எடிட்டிங்கில் படம் 140 நிமிடங்கள் ஓடுகிறது 

திரைக்கதை  எழுதி   இயக்கி இருப்பவர்  என் சிவராஜ் 



சபாஷ்  டைரக்டர்

1   நாயகன் , நாயகி இருவர் நடிப்பும்   அருமை . நாயகியின்  இளமையும்  அழகும்  கூடுதல் பிளஸ் 


2  பிக் பாஸ்   பார்ப்பது  அகில இந்திய அளவில்  ட்ரெண்டிங்கில்  இருப்பதால்  எல்லோருக்கும் இக்கதை கனெக்ட் ஆகும் 


3  இந்தக்கதை மூலம் இயக்குனர் சொல்ல வந்த சோசியல் மெசேஜ் 


ரசித்த  வசனங்கள் 


1 பெரும்பாலானவர்கள் காதலில் பிரச்சனை நிகழ் காலத்தில் இல்லை அவங்க கடந்த காலத்தில் தான் இருக்கு 


2   முதல்ல காபி 

 நோ  , முதல்ல  கண்டடென்ட் 


 சரி காபி தான் நம்ம  கண்டடென்ட் 


3  இன்னைக்கு ஆன்லைன்  ல திறமையைக்காட்டிப்பெரிய ஆள் ஆனவங்களை விட கெத்து காட்டிப்பெரிய ஆள் ஆனவங்க தான் அதிகம் 


4       நாலு   வார்த்தைக்கோர்வையாகப்பேசத்தெரியாத தத்திங்களையே   ஆன் லைன் செலிபிரிட்டி (  பெரிய  ஆள் )ஆக்கறோம் , இதெல்லாம் ஒரு மேட்டரா ? 


5 இப்படி  உயிரைப்பணயம் வெச்சுதான் லைக்ஸ் வாங்கணுமா? என்ன ? 


 நாங்க ( ஆண்கள் ) எல்லாம் சட் டையைக்கழட்டினா யாரு பார்ப்பாங்க ? 


6 மாடிக்கு மாடி தாவி மங்கிஸ்கான்  வேலை செஞ்சாலும்  நாநூறு  லைக்ஸ் தாண்டலையே ? 


7   24   மணி நேரமும் கடவுளையே நினைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் முன்னாள் கடவுளே வந்தாலும் அதைக்கடவுளா  அவன் நினைக்க மாட் டான் ,  பேய்   என்று தான் நினைப்பான் 


8   தேவையான நேரத்தில் தேவையானதைக்கொடுப்பது பேயா இருக்காது , அந்த நேரத்தில் அது தான் கடவுள் 


9   கேமை ரியல் லைஃபா பார்க்காத 


ரியல் லைஃபை நீ கேமா பார்க்காத 


10  ஒருத்தர் தோற்றால்தான்  இன்னொருத்தர் ஜெயிக்க முடியும் , அதுதான் வாழ்க்கைத்தத்துவம் 


11  முகமும்  அடையாளமும் இல்லைன்னா இங்கே எல்லாருமே பர்வர்ட் தான் 


12  காதல் என்பது எது   தெரியுமா? 


 ஒருவரை  ஒருவர் புரிந்து கொள்வது 


 இல்லை , ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற் சிக் காமல் இருப்பது 


13  நம்மைப்பற்றி நமக்கு  எப்ப முழுதாகத்தெரிய வருதோ அன்னைக்கு நாம ஒன்றாக இருக்க மாட் டோ ம் 


14   பணம் இருக்கும், ஆனா நிம்மதி இருக்காது . பணத்தைத்தேடிப்போய் நாம தொலைந்து விடக்கூடாது 


15  அமுக்கி  வைக்கப்பட் ட  உணர்ச்சிகள்  சாகாது . பின்னால் அசிங்கமா வெளி வரும் 


16   நீ  அழுவது கூட டாஸ்க் மாதிரி இருக்கு 


17 ஒரு மனுஷனுக்கு மிகச்சிறந்த நண்பனும், மிக மோசமான எதிரியும் யார் தெரியுமா? அவனோட கடந்த காலம் தான் 


18 திரும்பவும் என் கடந்த காலத்துக்குப்போக நான் விரும்பலை 


19 எங்க எமோஷன்ஸை யாருக்கோ விற்கப்பார்க்கறீங்க 


20 இத்தனை நாட்களாக  நீங்க உங்க பொய்யான  உணர்ச்சி களை  உங்க சேனலுக்காக  வித்துட்டு இருந்தீங்க . இப்போதான் உங்க உண்மையான உணர்ச்சி களை  இந்த கேம்  டாஸ்க் குக்காக வித்துட்டு இருக்கீ ங்க . 


21 எங்க இருவருக்குள்ளும் இருப்பது  அன்  கண்டிஷனல் லவ் 


 இந்த உலகத்துல அன் -  கண்டிஷன் என ஒன்னு கிடையவே கிடையாது 


22  வாழ்க்கைல   நாம சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு எதோ ஒன்னு கத்துக்கொடுப்பாங்க 


23  இங்கே   வாய்ப்புக்கிடைக்கும் வரை எல்லாருமே ஜென்ட்டில் மேன் சூப்பர் மே ன் தான் 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   நாயகனின் அண்ணன்  20 லட்ச ரூபாய்  மதிப்புள்ள   வைரம்    தந்து  அதை  வெளியில்  விற்றுத்தரச்சொல்கிறான் . அதை வங்கியிலோ .  நகைக்கடையிலோ  விற்க முடியாதா? 


2  தம்பதியாக இருக்கும்  இருவரும் வீடு பூரா  சி சி டிவி  கேமரா  மூலம் தாங்கள்  கண்காணிக்கப்படுவதை எப்படி  ஏற்றுக்கொள்கிறார்கள் ? பிக் பாஸ் கதை வேற , இது  பர்சனல்   லைப் ஆச்சே ? 


3  நாயகனின்   அண்ணனை  தங்கள்   குடும்ப நண்பர் என நாயகன் எதனால் மாற்றி  சொல்கிறார் ?


4 பர பரப்பாகப்போகும் திரைக்கதையில்  நாயகனின் அண்ணனின்  சோகக்கதை  படத்தின் வேகத்துக்கு வேகத்தடை 

5  டாஸ் க்குக்காக , பணத்துக்காக  தாலி கட் டிய சொந்த சம்சாரத்தை  கணவனே  இன்னொருவரிடம் நெருக்கமாக  இருப்பதாக நடிக்கச்சொல்வது நம்ப முடியவில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மாறுபட் ட  த்ரில்லர்  மூவி பார்க்க விரும்புவர்கக்ள்  பார்க்கலாம் . விகடன் மார்க் யுயுகம் 41 , ரேட்டிங்க்  2.75 / 5 


டிரெண்டிங்
நாடக வெளியீட்டு சுவரொட்டி
இயக்கியவர்சிவராஜ் என்
எழுதியவர்சிவராஜ் என்
தயாரித்தவர்
  • மீனாட்சி ஆனந்த்
  • ஆனந்த் ஜி
நடிப்பு
ஒளிப்பதிவுபிரவீன் பாலு
திருத்தியவர்நாகூரான் ராமச்சந்திரன்
இசையமைத்தவர்சாம் சிஎஸ்
தயாரிப்பு
நிறுவனம்
ராம் பிலிம் ஃபேக்டரி
விநியோகித்தவர்ஐந்து நட்சத்திர கே. செந்தில்
வெளியீட்டு தேதி
  • 18 ஜூலை 2025
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: