Tuesday, August 12, 2025

ஹவுஸ் மேட்ஸ் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் (பேண்ட் டசி காமெடி சயின்ஸ் பிக்சன் டிராமா )


                          

காளி  வெங்கட்  நடிக்கும் படங்கள் எல்லாமே  எதோ ஒரு விதத்தில் மனதைக்கவர்வதாகவே அமைந்து விடுகிறது . லோ பட்ஜெட்டில் உருவான இந்த பேண்ட் டசி காமெடி சயின்ஸ் பிக்சன் டிராமா நம்ப முடியாத கதையாக இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது . குறிப்பாக க்ளைமாக்ஸ் சீன்  பெண்களைக்கவரும் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  வாடகை வீட்டில் குடி இருக்கிறான் . ஹவுஸ் ஓனர் பெண்ணையே லவ் பண்ணிக்கல்யாணம் பண்ணிக்கொள்கிறான். காதல் மனைவியுடன்  குடி இருக்க சொந்தமாக ஒரு அபார்ட்மெண்ட் வீட் டை விலைக்கு வாங்குகிறான்  . அந்த வீட்டுக்கு இருவரும் குடி போன பின்  அமானுஷ்ய விஷயங்கள்  நடக்கின்றன . முதல் 20 நிமிடங்கள்  ஹாரர்  டிராமாவாக படம் நகர்கிறது 


அதே வீட்டில்  இன்னொரு ஜோடி குடி இருப்பது தெரிய வருகிறது . 2012ல்  அந்த ஜோடி , 2022 ல் இந்த ஜோடி இது  எப்படி என்ற குழப்பத்துடன் இடைவேளை வருகிறது 


பின் பாதியில்  2012ல் குடி இருந்த அந்த ஜோடியைப்பற்றி இவர்கள் விசாரிக்க  சில உண்மைகள் தெரிய வருகின்றன . இதற்குப்பின்  நடக்கும்  சம்பவங்கள்  தான் பின் பாதி திரைக்கதை 


நாயகன்  - நாயகி ஆக தர்ஷன் - ஆர்ஷா  இருவரும் கனகச்சிதம் . குறிப்பாக  ஆர்ஷா  ஸ்லிம்  பியூட்டி ஆக நடிப்பில் ஜொலிக்கிறார் . இன்னொரு ஜோடி ஆக  காளி  வெங்கட் - வினோதினி  யின்  குணச்சித்திர நடிப்பு  அருமை . இவர்கள்  இருவரும்  2012- 2022  ஆகிய இரு கால கட்ட  கெட் டப்பில்  வருவது  செம 


படத்தில்  வில்லன் என யாரும் இல்லாதது ஆறுதல் .  பேய் வீட் டை  வாங்க வரும்  நபர் ஆக டி  எஸ் ஆர்   சீனிவாசன் கலக்கல் நடிப்பு 

ஒளிப்பதிவு  எம் எஸ் சதீஷ் . ஒரே  வீட்டை  இரு    வேறு  கால   கட்டங்களில்  வித்தியாசப்படுத்திக்காட்டி இருப்பது அருமை .  மெகா ஹிட் ஆனா பிரேமம் படத்தின் இசை அமைப்பாளர் ராஜீஷ்  முருகேசன்  இதில் ஏமாற்றி விட் டார் 

சபாஷ்  டைரக்டர்


1  நம்ப முடியாத  கதையாக இருந்தாலும் மாறுபட் ட  கற்பனை   அருமை 


2   இரு ஜோடிகளின் அருமையான நடிப்பு 


3 ஆல்ரெடி   இறந்த ஒருவரை டைம் டிராவல்  செய்து  உயிரைக்காப்பாற்றும்  இடம் அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  பேய்  நம்ம பே ரு கேட் குதே? அடுத்து ஆதார் பாண் நம்பர் கேட்குமோ ? 


2   நீ   பாட்டுக்கு ஒரு பேயை வர வெச்சுடாத . ஆல்ரெடி ஒரு பேய் கூட குடித்தனம் பண்ணிட்டு இருக்கேன் 


3  என்னது > பேய் ஸ்பெல்லிங்க் மிஸ் டே க்கோட எழுதுது ?


 போய் டியூஷன் எடு 


4  என்னது  ? ஸ்பென்சரா? 


 அது சென்சார் 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   என்னதான்  இயக்குனர் சிரமப்பட்டு இரு கேரக்ட்டர்கள் மூலம் விளக்கினாலும் புரியாத குழப்பமான கதை  மைனஸ் 


2  மெயின் கதைக்கு வர 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறார்கள் 


3 தேவை இல்லாத பல காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்   - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்


 வித்தி யாசமான  கதை அம்சம்  வேண்டுபவர்கள்  பார்க்கலாம் , விகடன் மார்க் 42 . ரேட்டிங்க் 3 / 5 

0 comments: