Monday, May 05, 2025

HIT 3 THE THIRD CASE -ஹிட் 3 (2025) -( தெலுங்கு ) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் )


 60 கோடி ரூபாய்   பட்ஜெட்டில் உருவான இந்தப்படம்  1/5/2025 அன்று ரிலீஸ்  ஆகி முதல்  நான்கு நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலைத்தொட்டுள்ளது . இதன் முதல் பாகம்,  இரண்டாம்  பாகம்   எல்லாமே  தனித்தனி  கதைகள் தான் .  அவை  இரண்டும்  க்ரைம் இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லர்  வகை , திரைக்கதைக்கு  முக்கியத்துவம் தந்த படங்கள் . . இந்த மூன்றாம் பாகம்  அடிதடி , வெட்டுக்குத்து , வன்முறைக்காட் சிகள்  அதிகம் கொண்ட மசாலாப்படம் . எனவே  முதல் இரு பாகங்கள்  போல  தரமான திரைக்கதையை  எதிர்பார்க்க வேண்டாம் 


 இதன்  விநியோக  உரிமையை  நெட்  பிளிக்ஸ்   நிறுவனம்  54  கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது . கிட் டததட் ட    முதலீட்டில் 90%  இதன் மூலமாகவே கிடைத்து விட்ட்து .  தமிழ்  டப்பிங்க் வெர்சனிலும் ரிலீஸ் ஆகி உள்ளது ,கொடூரமான  வன்முறைக்காட்சிகளுக்காக   ஏ  சர்ட்டிகெட்  பெற்ற படம் என்பதால்  குடும்பத்துடன் பார்க்கத்தகுதி அற்ற படம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  ஒரு போலீஸ்  ஆபீசர் . எஸ்  பி .. சூப்பரிண்டெண்ட்   ஆப் போலீஸ் . இவரது  அனுமதி இல்லமால் இவரது  அப்பா  இவருக்குப்பெண்பார்க்க இவரைப்பற்றிய தகவல்களை ஒரு மேட்ரிமோனியல் சைட்டில் பதிவு செய்து விடுகிறார் . நாயகி  அதன் மூலம் தொடர்பு  கொண்டு நாயகனை நேரில் சந்தித்துப்பேசி  அவரது மனம் கவர்ந்து  விடுகிறார் .இவரும்    ஒரு போலீஸ்  ஆஃபீசர்  தான் . அது  பின்னர் தெரிய வருகிறது .. போலீஸ் ட்ரெயினிங்கிலேயே நாயகனை ரசித்தவர்  தான்   நாயகி . பின்னாளில்  நாயகனின் போலீஸ் டீமிலேயே சேர்ந்து ஆக்சன்   அவதாரம் எடுக்கிறார் 


 பல  இடங்களில்  பல கொடூரமான  கொலைகள்  ஒரே  பேட்டர் னில்  நடக்கிறது . அந்தக்கொலைகளை எல்லாம் செய்வது  குறிப்பிடட ஒரு அமைப்பு என்பதும்  பயங்கரவாத கும்பல் என்பதும் தெரியவருகிறது .. அவர்களைப்பிடிக்க நாயகன் ஒரு ஸ்பெஷல்  டீம் அமைத்து தேடுகிறார் . இந்த சமயத்தில்  நாயகனின்  டீமில் வேலை செய்யும்  ஒரு ஏ எஸ் பி   நாயகன்  அதே   பேட்டர் னில்   இரு கொலைகள்   செய்ததைக்கண்டு பிடிக்கிறார் . நாயகனை ஜெயிலுக்கு அனுப்புகிறார் 


குருதிப்புனல்  படத்தில்  நாயகன் கமல்   எப்படி  எதிரியின் கூடாரத்தில் நுழைகிறாரோ  அதே  டெக்னி க் தான் இதிலும் நாயகன் செய்வது . அதாவது  கொடூரமான  ஆட்கள்  இருவரைக்கொடூரமாகக்கொலை செய்து   வெப்சைட்டில் அப்டேட்டுவது . அந்த குறிப்பிடட  க்ரூ ப்பில் இணைவது . பின்னர் அவர்களை பிடிப்பது . இதுதான்   நாயகனின்   திட் டம் . 500 லி ட்டர்  ரத்தம்  189 கொலைகள்  நடந்தபின்  நாயகன்  வில்லன் க்ரூப்பைப்பிடிப்பதுதான் மீதிக்கதை 


நாயகன் ஆக   நான் ஈ  புகழ் நாணி . சாக்லேட் பாய் ஆக  அதில்  இருந்தவர்  இதில் தாடி  எல்லாம் வைத்து பிச்சைக்காரன் மாதிரி  இருக்கிறார் . போலீஸ் ஆபீசர் எப்படி   தாடி வைக்கலாம் என லாஜிக்  கொஸ்டீன்  யாரும் கேட்டு விடக்கூடாது என   தீவிரவாதிகளைப்பிடிக்க மாறுவேடம் என சமாளிக்கிறார்கள் 

நாயகி ஆக ஸ்ரீநிதி செட் டி  அழகாக  வந்து  போகிறார் . நாயகன் உடனான  ரொமாண்டிக் போர்சன்  ரசிக்கும்படி இருக்கிறது .இரண்டு  இடங்களில்  லிப் லாக் சீன்களும் உண்டு . அதற்குத்தனி சம்பளமாம் 


 நாயகனின்   அப்பாவாக சமுத்திரக்கனி  வருகிறார் . அதிக   வாய்ப்பில்லை . நாயகனை  ஜெயிலில் தள்ளும்  ஆபீசர் ஆக   கோமாளி பிரசாத்  நடித்து இருக்கிறார் . இவர் ஒரு லேடி . பெயரே  அதுதான் . இவர் கூட   கனவில் ஒரு டூயட்  எதிர்பார்த்தேன் , ஏமாந்தேன் 


மிக்கி ஜெ  மேயரின் இசையில்  3 பாடல்கள்   ரசிக்கும்படி இருக்கின்றன . பின்னணி  இசை  ஒரே இரைச்சல் . காது வலிக்கிறது .ஷானு  ஜான் வர்கீசின்   ஒளிப்பதிவு   அருமை . ஹாலிவுட் படங்களுக்கு   இணையாக  பிரமிக்க வைக்கிறது கார்த்திகா சீனிவாசன்  எடிட்டிங்கில்  படம்  156 நிமிடங்கள்   ஓடுகிறது . கதை , திரைக்கதை  எழுதி   இயக்கி இருப்பவர் ஷைலேஷ் கொலானு 

சபாஷ்  டைரக்டர்

1   நாயகன்  வில்லனால் கத்திக்குத்து  பட் டதும்   கத்திகுத்து  உன் உடலில்  படடால்  அந்தக்கத்தியை மீண்டும்  வெளியே  எடுக்க  விடாதே   என போலீஸ்  ட்ரெய்னிங்கில்  ஒலித்த   குரலை நினைவு கூர்வது , அதைத்தொடர்ந்து வரும் ஆக்சன் சீக்வன்ஸ் அபாரம்  


2  வில்லனின்   மர்டர்  பேட்டர்னில்       நாயகன்   இரு கொலைகள்   செய்வது , ஜெயிலுக்குப்போவது . பின்னர் அவை எல்லாமே மாஸ் டர் பிளான் என தெரிய வருவது 


3  மெயின் கதைக்கு சம்பந்தம்  இல்லை என்றாலும்   நாயகியுடனான ரொமான்ஸ்  போர்சன்  ரசிக்க வைத்தது 




  ரசித்த  வசனங்கள் 


1   அன்பு காட்டுவதற்கும், அன்பாப்பேசுவதற்கும்  அம்மாவுக்கு மட்டும் தான் தெரியும் 


2   உங்க  பேசில் இருந்தே அம்மாவின் அன்புக்காக ஏங்குபவர் என்பது தெரியுது 


3   உங்களைப்பார்ப்பவர்கள்   எல்லாருமே  இப்படித்தான் ஓடிப்போவாங்களா?


 ஏன் ? நீயும் ஓடிப்போகப்போறயா?


4  எப்போ தான் உன்னோட  முத்தம் கிடைக்கும் ? 


 ஒரு  நல்ல நாள்  பார்த்து  சொல்றேன்  


5      சி டி கே  = கேப்சர்  டார்ச்சர் கில்லிங்க் 


6      உன்   வாழ்க்கைக்காக நீ ஓடிக்கொண்டே இரு 


7 மனிதனால்   கிராஸ்   பண்ண   முடியாத   ஒரு லைன்  ,  ஒரு சர்க்கிள் .. அதைத்தேடிட்டு இருக்கேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   நாயகனின்   இன்ட் ரோ   சீனில்   கேன்சர்  பேஷண்ட்   மாதிரி   எதனால்   தம் அடித்துக்கொண்டே   வருகிறார் ? பரிதாபமாக இருக்கிறது 



2  நீ   சிரிச்சா   அழகா   இருப்பே , ஆனா   சிரிக்க மாட் டேங்கற   என்ற   நாயகியின்  டயலாக்கைக்கேட்டதும்   ரெட்ரோ  படம்   நினைவு   வருகிறது . அதே  டெய்லர்   அதே  வாடகை .  ரெண்டு  டைரக்டர்களும்   வேறு எதோ  ஒரு படத்தைப்பார்த்து  இன்ஸ்பையர்  ஆகி விட் டார்களோ ? 


3  நாயகன் படம்  முழுக்க  68  முறை   தம் அடிக்கிறார் . எதுக்கு ? 


4  ஹீரோக்கள்   எல்லாம்   தாடி வைத்தால்  ஸ்டைலிஸாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள் . ராப்பிச்சை மாதிரி தான் இருக்கு 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - சிரஞ்சீவி  ரசிகர்கள்   பார்க்கலாம் . பெண்கள்   தவிர்க்கவும் . எங்களுக்கும் சம  உரிமை  வேண்டும் என நினைப்பவர்கள் பார்த்துத்தொலைக்கவும் . ரேட்டிங்  2 / 5 


HIT: The Third Case
Theatrical release poster
Directed bySailesh Kolanu
Written bySailesh Kolanu
Produced by
Starring
CinematographySanu John Varghese
Edited byKarthika Srinivas
Music byMickey J. Meyer
Production
companies
Wall Poster Cinema
Unanimous Productions
Release date
  • 1 May 2025
Running time
157 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget₹60–65 crore[2]
Box office₹101 crore[3]

Sunday, May 04, 2025

TOURIST FAMILY - டூரிஸ்ட் பேமிலி(2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா )


சுப்ரமணியபுரம்  மூலம்  அறிமுகமான   எம் சசிகுமாருக்கு  நாடோடிகள்  நல்ல  நண்பன்   என்ற  இமேஜைக்கொடுத்தது .அயோத்தி  படம் மூலம்   சிறந்த  மனித நேயம்  மிக்க  மனிதர் என்ற   பெருமை  கிடைத்தது . அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்   இயக்கிய  இந்த படம்  அவருக்கு இன்னொரு பரிமாணத்தைத் தந்திருக்கிறது ,இனியாவது  அவர் வன்முறை மிக்க  படங்களில்  நடிக்காமல்  குடும்பப் படங்களில் நடிப்பாரா? பார்க்கலாம் 



ஸ்பாய்லர் அலெர்ட் 

நாயகன்  தன் மனைவி , இரு மகன்கள்  உடன்  இலங்கையிலிருந்து  பிழைப்பு தேடி தமிழகம்  வருகிறார் . சடட விரோதமாக கள்ளத்தோணி யில்  தான்   வருகிறார் . அதனால் அவரிடம்  போதிய ஆவணங்கள் இல்லை . அவருக்கு இருக்கும்  ஒரே சொந்தம் அவரது மச்சினன் . அதாவது  நாயகியின் சகோதரன் . அவர்கள்  தங்க  ஒரு இடம்  ரெடி செய்து  கொடுக்கிறான் . நாயகன்  இனி ஏதாவது  வேலைக்குப்போக வேண்டும் . நாயகன்  வேலைக்குப்போக  படும் சிரமங்கள் , அந்த ஏரியா  மக்களிடம்  எப்படி  நாயகனின் குடும்பம் பழகுகிறது  என்பதுதான் 90%  திரைக்கதை  சம்பவங்கள் . ராமேஸ்வரத்தில்  ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடக்கிறது . அந்த சம்பவத்துக்கு  தமிழகம்  வந்திருக்கும் ஒரு இலங்கைக்குடும்பம் தான் காரணம் என நினைத்துப் போலீஸ் தீவிரமாகத்தேடுகிறது . போலீசிடம்  அவர்கள்  மாட்டினார்களா? என்பது க்ளைமாக்ஸ் 


ஒன்  லைன் ஆக   இந்தப்படத்தின்  கதையைக் கேட்கும் யாருக்குமே  இதில்  இரண்டரை மணி நேரம் தாக்குப்பிடிக்க போதிய  வலு  இல்லையே எனத்தோன்றும்  , ஆனால்   சாமார்த்தியமான  திரைக்கதையால்  நம்மைக்கட்டிப்போட்டு இருக்கிறார் இயக்குனர் 

நாயகன் ஆக  எம்  சசிக்குமார்  பாந்தமான நடிப்பு . குடித்து  விட்டு வீட்டுக்கு   வரும் இடத்தில்   மகனிடம் மன்னிப்பு க்கேட்பது , மனைவியிடம்  முதலில்  கோபமாகவும்,  பின் வேலை கிடைக்காமல்  இயலாமையையும் காட்டும் இடம் அருமை . பக்கத்த்து  வீட்டில்  ஒரு சாவு விழுந்ததும்  அந்த ஏரியாவில் இருக்கும் அனைவருக்கும் தகவல் சொல்வது . ஓடியாடி வேலை செய்வது   அருமை . நாடோடிகள்  படத்தில்  ஓடும் பஸ்  பின்னால்  ஓடி   தன கழுத்தில்  இருக்கும் செயினைக்கழற்றிக்கொடுக்கும் சீனில் தியேட்டரே  கை  தட்டியது .அந்த சீனு க்கு  நிகரான நடிப்பு இதிலும் 

  நாயகி ஆக  சிம்ரன்  குடும்பப்பாங்கான நடிப்பு . ஒரு விழாவில்   ஆல்   தோட் ட  பூபதி  நானடா   பாட்டு டான்ஸ் ஸ்டெப்    போடும்போது   அரங்கம் அதிர்கிறது . ஆனால்  வயோதிகம் காரணமாக  அவர் உடலில் முதுமை தென்படுவது  காலத்தின்    கட்டாயம் . நேருக்கு நேர்  படத்தில்  வரும்  மனம் விரும்புதே உன்னை   பாடலில் வரும் துள்ளாட் ட சிம்ரனை எதிர்பார்த்தால் ஏமாற நேரிடும் 

 நாயகியின்  சகோதரர் ஆக   வரும் யோகி பாபு  ரசிக்க வைக்கிறார் . வழக்கமாக மொக்கை போட்டு எரிச்சல் ஏற்படுத்தும் அவர்  இதில்  மனம்   கவர்கிறார் நாயகனின்   மகன்களாக வரும்  மிதுன் , கமலேஸ்   இருவரும் பிரமாதமான நடிப்பு . சின்னவன்  சுட்டித்தனமான நடிப்பு எனில்  பெரியவன் பாந்தமான நடிப்பு . அப்பா சென்ட்டிமெண்ட் சீன்களில் அப்ளாஸ்  வாங்குகிறார் 

 பக்கத்து  வீட்டுக்காரர்களாக வரும் எம் எஸ்  பாஸ்கர் , இளங்கோ குமாரவேல்  இருவரின் குணச்சித்திர  நடிப்பும் அருமை . போலீஸ்  இன்ஸ்பெக்ட்டர்   ஆக வரும்   பகவதிப்பெருமாள் , ரமேஷ்  திலக் ,ஸ்ரீ  ஜா ரவி , ராம் குமார்  பிரசன்னா   என அனைவரும்  அவரவருக்குக்கொடுக்கப்பட் ட   வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள் 

அர்விந்த்  விஸ்வநாதனின் ஒளிப்பதிவு அருமை .  இசை   ஷான் ரோல்டன் . இரு பாடல்கள்  ஹிட் ஆகி இருக்கின்றன . பி ன்னணி    இசையும்   அருமை . பரத்   விக்ரமனின்  எடிட்டிங்கில்  படம் 150  நிமிடங்கள்  ஓடுகிறது . எங்கும் தொய்வில்லை 

 சபாஷ் டைரக்டர் 

1   ஒரு நல்ல சிறுகதை  முதல் வரியிலேயே வாசகனைக்கவர்ந்து இழுத்து விடும்  என அமரர்  மேஜிக் ரைட் டர்   சுஜாதா சொல்வார் . இந்தப்படத்தின் கதையும்  முதல்   காட் சியிலிருந்தே  ரசிகனைக்கட்டிப்போடுகிறது 

2  படத்தில்  வில்லன்     என யாரும்  இல்லை . எல்லோரும் நல்லோரே   என்ற   கான்செப்ட்  அழகு 

3  ஒரு   சீரியஸான   சீனை  பினிசிங்கில்   காமெடி ஆக்குவது , கலாட்டாவாக  தொடங்கும்   சீனை  சென்ட்டிமென்ட்  ஆக   முடிப்பது   திரைக்கதை   மன்னன் கே  பாக்யராஜ்க்குக் கை வந்த  கலை . புதுமுக   இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் அவரது  பாணியில்  அசத்தி   இருக்கிறார் 

4  நாயகனின்   மூத்த   மகன் , ஹவுஸ் ஓனரின் மகள்  இருவரும்   இணைந்து  நடிக்கும்        காட் சிகள்  கவிதை 

5  என்  புருஷன்  என்னவா இருக்கார்னா   காமெடி   நன்றாக  ஒர்க் அவுட் ஆகி   இருக்கிறது . அந்த   சீனில்   நடித்த நடிகை யின் சிரிப்பு அருமை 

6  நாயகன் - முதலாளி   எம் எஸ்  பாஸ்கர்   இருவருக்குமான   பாண்டிங்க்   அருமை 

7  கண்களை க்கலங்க வைக்கும் க்ளைமாக்ஸ் காடசி 



 ரசித்த வசனங்கள்

1  ஒரு   ,மனுஷனுக்குப்பின்னால் ஒரு கூட் டம்    இருக்குதுன்னா   பதவியோ , பவரோ   காரணமா இருக்கும் ,  ஆனா  முதல்   முறையா   மனித நேயத்தால கூட் டம்    கூடியதைப்பார்க்கிறேன் 

2  ஒருத்தர்   அமைதியா  இருக்கார் எனில்   அவருக்கு எதுவும் தெரியாது என்ற  அர்த்தம்  இல்லை . ஒரு மரியாதை காரணமாகவும் மவுனமாக இருக்கலாம் 


3  இங்கே  எந்தத்தமிழில்  பேசுறோம் என்பதுதான் பிரச்சனையா? தமிழில் பேசுவதே பிரச்சனையா? 

4   இவங்களைப்பார்த்தா   பிழைக்க   வந்தவங்க மாதிரி   தெரியலை  டூர்   வந்த மாதிரி   இருக்கு 

5  இன்னைக்கு ஸ்கூல்  போகலையா? '

இன்னைக்கு  சன் டே 

 அதனால   என்ன ? போக வேண்டியதுதானே? 

 முன்னே   பின்னே   ஸ்கூல்   போய் இருந்தாத்தான் தெரியும் ? 

6    என்    அம்மாவுக்குபின்   என் கிட் ட   சாப்பிட்டியா ? எனக்கேட்ட ஒரே மனிதர் இவர் தான் 

7       அவர் பதில் சொல்ல மாட் டாரா? அவருக்கு    வாய் இல்லையா? 

 உங்க  அளவுக்கு இல்லை 

8    ரொம்ப   தேங்க்ஸ்பா 

 டீ   நான் போடலை , டீக்கடைக்காரர்  தான்   போட் டார் ''

 அட   அதில்லை , செய்த உதவிக்கு நன்றி சொன்னேன் 

 லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்

1   நாயகனுக்கு  இன்னும்   வேலை கிடைக்கவில்லை . கையில் காசில்லை , ஆனால்  வாடகைக்குப்பார்த்திருக்கும் வீடு   பெரிய   வீடு . ஒரு சாதா   வீட்டில்  குடி  இருப்பது  போலக்காட்டி இருக்கலாம் 


2  இலங்கையிலிருந்து   ஒரு குடும்பம் வரும்போது   போலீஸ்  என்ன எது  என எதுவும்   விசாரிக்காமல்   விடுவது இடிக்கிறது 

3   ஒரு  போலீஸ்   ஆபீசர்   தன வீட்டின்  மாடியில்   இரு க்கும் போர்சனை    இலங்கைத்தமிழர்களுக்கு   வாடகைக்கு விடுவது   எப்படி ? பின்னாளில்   பிரச்சனை   வரும் என்பது தெரியாதா? ஐ டி   கார்டு , ஆதார்   கார்டு   எதுவும் கேட்காமல்   இருபப்து   எதனால் ? 

4    தன்  வீட்டில்   வயதுக்கு   வந்த  பெண்   இருக்கும்போது  மேல் போர்சனில்   குடி   இருக்க   வருபவர்கள்  குடும்பத்தில் ஒரு டீன் ஏஜ்    பையன்  இருப்பது   பெண்ணின்   தந்தைக்கு உறுத்தாதா? 


 அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்  -  க்ளீன்  யூ


 சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் -  TOURIST FAMILY(2025)- புது வசந்தம் விக்ரமன் ,மொழி ராதா மோகன் பாணியில் பாசிட்டிவ் கேரக்டர்கள் மட்டுமே உலவும் ஒரு நல்ல திரைக்கதை.அயோத்தி க்குப்பின் எம் சசிகுமார் க்கு மற்றும் ஒரு FEEL குட் மூவி.ஆடியன்சுக்கு எமோஷனல் கனெக்ட் தரும் ஒரு நல்ல படம்.பிரம்மாண்டமான பட்ஜெட்டில் டப்பாப்படங்களை ,குப்பைப்படங்களைத்தரும் புகழ் பெற்ற இயக்குனர்கள் மத்தியில் ஒரு அறிமுக இயக்குனர் குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த நல்ல படம் தந்திருப்பது மகிழ்ச்சி.விகடன் மார்க் (யூகம்)-46.ரேட்டிங். 3.5 / 5

Friday, May 02, 2025

ரெட்ரோ(2025)-தமிழ் - சினிமா விமர்சனம் ( கேங்க்ஸ்டர் மசாலா)

 


ஜகமே தந்திரம் எனும் தோல்விப்படம் கொடுத்த கார்த்திக் சுப்புராஜூம்,கங்குவா எனும் டப்பாப்படத்தில் நடித்த சூர்யா வும். இணைந்திருக்கிறார்கள் என்றாலும் பாடல்கள் ஹிட்ஆனதால் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு.

ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் சின்னக்குழந்தையாக இருந்த போது வில்லனால் தத்து. எடுத்து   வளர்க்கப்பட்டவன்.நாயகன் மீது பாசம் எல்லாம் இல்லை.அடியாள் மாதிரி வளர்க்கிறான் வில்லன்.நாயகன் பெரிய ஆள் ஆனதும். நாயகியைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டு அதற்கு நாயகி போடும் கண்டிசன் ஆன வன்முறையை விட வேண்டும் என்பதற்கு ஒத்துக்கொள்கிறான்

டாண் ஆன வில்லனிடம் விடை பெறும்போது ஒரு முறை தொழில் ரீதியாகக்கொள்ளை அடித்த தங்க நகைகள் பற்றிய விபரத்தை வில்லன் கேட்க நாயகன் சொல்ல மறுத்து அப்போது நடந்த அடிதடியில் வில்லனின் கையை வெட்டி ஜெயிலுக்குப்போகிறான்
நாயகி கண்காணாத இடத்துக்குப்போகிறாள்.ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன நாயகன் நாயகியைத்தேடி ஒரு தீவுக்குப்போக வில்லநும் அங்கே ஆஜர்
முதல் 35 நிமிடங்களில் இது முடிகிறது.இதற்குப்பின் வரும் இரண்டு மணி நேரத்திரைக்கதை தான்  நம் பொறுமையை சோதிக்கிறது
நாயகன்  ஆக சூர்யா.அருமையான நடிப்பு.பைட் சீன்கள் கலக்கல் ரகம்
நாயகி ஆக பூஜா ஹெக்டே.நாயகனை விட 10 செமீ உயரம் அதிகம்.வயது மிகக்குறைவு.பொங்கும் இளமை.கண்களாலேயே கவிதை சொல்கிறார்
வில்லன் ஆக ஜோஜூ ஜார்ஜ் அதிக வாய்ப்பில்லை.சிரிப்பு டாக்டர் ஆக வரும் ஜெயராம் ஆள் அடையாளமே தெரியவில்லை
டம்மி வில்லன்கள் ஆக நாசர் ,பிரகாஷ் ராஜ்  வேஸ்ட்
சிக்ஸ் பேக் வில்லன் பாவம்
இசை அருமை.பாடல்கள் செம ஹிட்டு.ஒளிப்பதிவு குட்
சபாஷ் டைரக்டர்

1. திருமண மண்டபத்தில் எடுக்கப்பட்ட சிங்கிள் ஷாட் செம

2 பாடல்கள் 2 செம ஹிட்.பி ஜி எம் குட்.ஆக்சன் சீக்வன்ஸ் அருமை

3 சிரிப்பே வராத ஹீரோ. கண்ணாடி முன்   சிரிக்க ரிகர்சல் பார்க்கும் இடம் தரமான நடிப்பு 




லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 சிரிப்பு டாக்டர் போர்சன் எடுபடவில்லை.அத்தனை சீன் கள் அந்த டாபிக்கில் எடுத்தவர்கள் ஒரு ஜோக் கூட சொல்லவில்லை.அட்லீஸ்ட் மதுரை முத்து ,ஈரோடு மகேஷ்  செய்வது போல பத்திரிக்கைகளில் வந்த அடுத்தவர்கள் ஜோக்சை திருடியாவது  உபயோகப்படுத்தி இருக்கலாம்.மக்கள் விழுந்து விழுந்து சிரிப்பதை மட்டும் காட்டினால் போதுமா?

2 படத்தில் 4 வில்லன்கள் இருந்தும் எந்த கேரக்டரையும் வலிமையாகக்காட்டவில்லை.எல்லோரும் டம்மிகள்.பின் எப்படி சுவராஸ்யம் வரும்?

3. ஒரு சிக்ஸ்பேக் வில்லன் கிறுக்கனா இருக்கான்.அடியாட்கள் அனைவரும் துப்பாக்கியுடன் இருக்கிறார்கள்.ஈசியாக ஹீரோவை சுட்டிருக்கலாம்.மாங்கா மடையன் மாதிரி ஐ வாண்ட் எண்ட்டர்டெயின்மெண்ட். நோ கன்ஸ் என்கிறான்

4 சிறப்பான தரமான சம்பவங்கள் இனிமேதான் இருக்கு என்ற ,"பேட்ட"பஞ்ச் டயலாக்கை இதிலும் ஹீரோ சொல்றார்.டயலாக் ரைட்டருக்கு சொந்தமா யோசிக்கத்தெரியாதா?

5 இளையராஜா பாட்டை யூஸ் பண்ணியது ஓக்கே.ஆனால் ரசிக்க முடியவில்லை .கேஸ் போடுவாரோ என்ற கவலை தான் ஆக்ரமிக்கிறது

 


ரசித்த வசனங்கள்

1 இந்தக்குழந்தையை நாம் வளர்க்க முடியாது.யார் வீட்டு வாரிசோ?

குழந்தைல என்ன தராதரம்?கடவுளாப்பார்த்துத்தந்திருக்காரு


2. எந்த ஒரு ஆம்பளையும் எந்த ஒரு. பெண்ணுக்காகவும் தன்னை முழுசா மாத்திக்க மாட்டான்

3 கடவுள் மனிதனுக்குக்கொடுத்த வரம் சிரிப்பு.சிரிப்பால் குணப்படுத்த முடியாத வியாதியே கிடையாது

4 கடவுள் மனிதனைக்காப்பாற்றுவது கதைகளில் மட்டும் தான்.நிஜத்தில் இல்லை

5' அடிமை அடிமையாக இருந்தால் தான் அரசன் அரசனாக இருக்க முடியும் ,அதுதான் ராஜ தந்திரம்

6 சண்டை செய்வதைப்பாவமா நினைக்கும் புத்தரா அவன். இருக்கனும்னு நீ நினைக்கறே!.ஆனா அவன் சண்டை போடுவதைக்கடமையா நினைக்கற கிருஷ்ணரா ஆகிட்டான்

7. நேத்துத்தான் இவங்களை எல்லாம் பொளந்தேன்.மறுபடி அவங்களையே அடிக்க போர் அடிக்குது

சி பி எஸ். பைனல் கமெண்ட்

ரெட்ரோ(2025)-தமிழ்- முதல் 35 நிமிடங்கள் அனைவரும் ரசிக்கும்படி இருக்கிறது.அதற்குப்பின் வரும் 2 மணி நேரக்காட்சிகளை சூர்யா ரசிகர்கள் மட்டுமே ரசிக்க முடியும்.பின் பாதி திரைக்கதை எம் ஜி ஆரின் ஆயிரத்தில் ஒருவன் காலத்துலயே பார்த்து விட்டோம்.ஆடியன்சுக்கு பிளாஸ்பேக் போர்சன் கனெக்ட் ஆகவில்லை.கங்குவா,தங்கலான் அளவுக்கு டப்பா இல்லை.டி வி ல போடும்போது பார்க்கலாம் .விகடன் மார்க் ( யூகம்) 39.ரேட்டிங். 2/5



 சென்னிமலை சி.பி. செந்தில்குமார்,

Thursday, May 01, 2025

கேங்கர்ஸ் (2025) -(தமிழ் ) - சினிமா விமர்சனம் ( கமர்ஷியல் மசாலா காமெடி டிராமா )


 சுந்தர்  சி +  வடிவேலு காம்பினேஷன் படங்கள் வின்னர் (2003) ,தலைநகரம் (2006) ,நகரம் (2010) ஆகிய  மூன்றும் காமெடியால் செம ஹிட் அடித்த படங்கள் சில  காரணங்களால்  பிரிந்த இந்த ஜோடி  15  வருட இடைவெளிக்குப்பின்  மீண்டும்   இணைந்திருக்கிறது அரண்மனை 4 (2024) , மதகஜராஜா (2025)  ஆகிய  இரு வெற்றிப்படங்களை  அடுத்தடுத்துத்தந்த சுந்தர்  சிக்கு  இது ஹிட் ஆனால் ஹாட்ரிக் ஹிட் 

24/4/2025   அன்று  வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்களைப்பெற்று வருகிறது .நிச்சயமாக வடிவேலுவுக்கு இது ஒரு கம் பேக் படம் தான் . சுந்தர்  சி க்கு இது வெற்றிப்படமா ? என்பதைப்பார்ப்போம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு அரசுப்பள்ளி டீச்சர் . அந்தப்பள்ளி   மாணவி    ஒருத்தி மர்மமான  முறையில் காணாமல்

போகிறாள் . உள்ளூர்  போலீஸ் ஸ் டேஷனில் புகார் கொடுத்தும்  பலன் இல்லை .அந்த  ஊரில் செல்வாக்கு மிக்க அண்ணன் , தம்பி  இருவரும் தான் வில்லன்கள் . எனவே  நாயகி  போலீஸ்   கமிஷ்னருக்குக்கடிதம் எழுதுகிறாள் . இதனால்  இது பற்றித்துப்பு துலக்க ஒரு போலீஸ் ஆபீசரை  கமிஷனர்   நியமிக்கிறார் . ஒரு ஆசிரியர் மாதிரி  அங்கே  போய்  மர்மத்தை  கண்டறிந்து   வா என்கிறார் 


அந்தப்பள்ளிக்கு  இரண்டு  பேர்   புது ஆசிரியர்களாக வருகிறார்கள் . ஒருவர் நாயகன் , மற்றவர்  காமெடியன் .இருவரில் யார் போலீஸ் என்பது  தெரியாது . ஆனால் நாயகி நாயகன் தான் போலீஸ் என நினைக்கிறாள் . அந்தப்பள்ளியில்  ஆல்ரெடி ஒரு காமெடியன் பி டி மாஸ் டர் ஆக இருக்கிறார் .நாயகன்  இன்னொரு பி டி மாஸ் டர் ஆக வந்திருக்கிறான் 



இன்னொரு புது  வில்லனிடம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள  பணம்  ஒரு ரகசிய இடத்தில் இருக்கிறது . அதை  ஆட் டையைப்போட நாயகன் திட்டம் தீட்டுகிறான் . தனது  திட் டத்துக்கு  உதவியாக  நாயகி , இரு காமெடியன்களை துணைக்கு சேர்த்துக்கொள்கிறார் .நாயகனின்  திட் டம்  வெற்றி அடைந்ததா?  காணாமல் போன மாணவி  பற்றிய   மர்மம்  வெளியானதா? என்பது மீதி திரைக்கதை 

அரதப்பழசான  கதை தான் . பார்த்துப்பார்த்து சலித்துப்போன திரைக்கதை தான் . ஆனால்  சுந்தர் சி யின் மேஜிக்  தான்  படத்தைக்காப்பாற்றுகிறது , அவருக்குப்பக்கபலமாக வடிவேலு 


நாயகன் ஆக சுந்தர் சி   வந்து போகிறார் . அவரது   முகத்தில் உணர்ச்சிகளே இல்லை .எந்த  சூழ்நிலைக்கும் ஒரே மாதிரியான முக பாவம் தான் 


காமெடியன் ஆக  வடிவேலு  ஓவர் மேக்கப் . பல இடங்களில் சிரிக்க வைக்கிறார் .பழைய வடிவேலு படங்களில் இருந்தே காட் சிகளை உருவி  பட்டி   டிங்கரிங்க்   செய்திருக்கிறார்கள் .தியேட் டரில்  பெண்கள் , குழந்தைகள் சிரிப்பு அலை ஓயவில்லை .குறிப்பாக  கடைசி  40 நிமிட  காமெடி  நன்றாக  ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது 

நாயகி  ஆக  கேத்ரீன்  தெரசா  கிளாமருடன்  வந்து   போகிறார் .அவரது  வசன உச்சரிப்பு லிப் சிங்க் ஆகவில்லை . நாயகனின்  மனைவி ஆக வாணி போஜன் கெஸ்ட் ரோலில் வருகிறார் 


இன்னொரு காமெடியன் ஆக பகவதி பெருமாள்  வருகிறார் .பெண்வேடத்தில்   அவரது  கெட்டப் கச்சிதம் .


 வில்லன்கள்  ஆக மைம் கோபி ,யம்   அருள் தாஸும்  மிரட்டுகிறார்கள் . மெயின் வில்லன் ஆக  ஹரீஸ்  பெரோடி  வருகிறார் .ஓகே ரகம் 


முனீஷ் காந்த் ,ரெடின் கிங்க்ஸ்லி , ஜான் விஜய் , சிங்கம்புலி   என   வீணடிக்கப்பட் ட  நல்ல   கலைஞர்கள் பட் டியல் நீளம் 

சி சத்யனின் இசையில் இரு பாடல்கள் பரவாயில்லை ரகம் , பின்னணி இசை சுமார்  ரகம். கிருஷ்ண சாமியின் ஒளிப்பதிவு  கச்சிதம் .பிரவீன் ஆண்டனி இ எடிட்டி ங்கில் படம் 158  நிமிடங்கள் ஓடுகிறது .முதல் பாதி  கொஞ்ச்ம போர் தான் .பின்பாதியில்  பின் பாதி   அதாவது   கடைசி 45 நிமிடங்கள்  காமெடி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது 

பத்ரி ,வெங்கட்  ராகவன் ஆகிய இருவரும் வசனம் எழுதி   இருக்கிறார்கள் ,வெங்கட்  ராகவன்,சுந்தர் சி   ஆகிய இருவரும் இணைந்து  திரைக்கதை எழுதி   இருக்கிறார்கள்.  இயக்கி இருப்பவர் சுந்தர் சி   



சபாஷ்  டைரக்டர்


1   வழக்கமாக சுந்தர் சி  படங்களில்  எதிர்பாராத திருப்பங்கள் எதுவும் இருக்காது .ஆனால்  விதிவிலக்காக இந்தப்படத்தில் இடைவேளை யில் ஒரு டிவிஸ்ட்  , க்ளைமாக்சில்  ஒரு டிவிஸ்ட்   வருகின்றன . மெயின் வில்லன் , இரு வில்லன்களான அண்ணன் ,தம்பி   ஆகிய  யாருமே   மாணவி  காணாமல்  போன  மர்மத்துக்கு   காரணகர்த்தா  அல்ல . புது ஆள் .அந்த திருப்பம்  அருமை 


2  வழக்கமாக  வடிவேலு  உடல்மொழி , முகபாவனைகள்  கொண்டு   காமெடி  ஒர்க் அ வட செய்வார் , இதில் சந்தானம் , விவேக்   பாணியில் கவுண்ட் டர்  அடிக்கும் காமெடியும் செய்கிறார் 



3  பகவதி பெருமாள் , வடிவேலு   இருவரும் பெண் வேடத்தில்   வரும் காமெடி  களை  கட்டுகிறது 


4  வசனம்  எழுதிய இருவரும் நன்கு உழைத்திருக்கிறார்கள் , மொத்தம் 42 ஜோக்ஸ் . அவற்றில்  30 அருமை 



  ரசித்த  வசனங்கள் 

1  இனி  நான்  பி . டி   மாஸ்டர்  இல்லை , உனக்குப்போட்டி   மாஸ்டர்


2   டேய் , மொட் டை   மண்டையா 



ஏய் 


நீங்க  எதுக்கு கதற னும் ?நீங்க அரை  மண்டையன் தானே? 



3   நான்   சொல்லலை ?  ( அப்பவே   சொன்னேனே  தொனியில் , )


 நானும் சொல்லலை, நீங்களும்   யார் கிட்டே யும் சொல்லிடாதீங்க 


4  என்னைப்பார்த்தா உனக்கு  எப்படித்தெரியுது ? 


 கொம்பு இல்லாத எருமை மாடு மாதிரி தெரியுது 


5   நாம  எல்லாரும் ஒரே விஷயத்தைப்பார்த்தாலும் ஒரே மாதிரி  யாரும்பார்ப்பதில்லை 


6 என்னம்மா? போன தடவை  பார்த்ததை  விட ஒரு சுத்து  பெருத்திருக்கே? 


நாங்க   வெயிட் போட் டாலும் வெயிட் டா ஆடுவோமில்ல? 


7  பாம்புக்குப்பயந்து பாம்புப்புத்துக்குள் நுழைந்த கதையா 


8   அவனைப்பார், டேபிள்   பேன்  மாதிரியே  திரும்பறானே? 


9  குழந்தையைப்பெத்துக்கச்சொன்னா குள்ள சாத்தானைப்பெத்திருக்காங்க 


10  டேய் , நீ தான் அடிச்சதா நீயா சொன்னாலும் நான் நம்ப மாட் டேன் , ஏன்னா   நீ ஒரு டோமரு 


11  எதிர்லயே அரை  மணி நேரமா நிக்கறான்  பிடிக்க முடியலை .இவனுங்க நண்டு பிடிக்கக்கூட லாயக்கில்லை 


12   கோடிக்கணக்கில் பணம்  கிடைக்குதுன்னா  குறளி  வித்தை  வரை காட்ட தயாரா இருக்கோம் 


13   தப்பான திசைல நாம் வேகமாப்போய்க்கிட்டு இருக்கோம் 


14 குடிகாரன்   குடியை   விடுவதும் , புருஷன் ஆடி மாசத்தில்  சம்சாரத்தைத்தொடாம  விடுவதும் 

ஒண்ணு தான் , ரெண்டும் ,நடக்காது 


15   கொஞ்ச்ம   பிசிறு தட்டினாலும்  உசிரு போய்டும் . சார்லெசா  இரு , கேர்லெசா  இருக்காத


16  காட்டெருமைக்குப்பயந்து ரத்தக்காட்டே ரி  கிட் டே   மாட்டிக்கிட்டே ன் 


17  என்ன?   உன் கைகள்  ஸ்ட்ராங்கா  இருக்கு , ஆனா  முகம் மட்டும் வயசான  மாதிரி   இருக்கு ?


 கழுத்துக்குக்கீழ்   யோகா பண்றேன் சார் 


18   லாரி   ஹெட் லைட்ஸ்   மாதிரி     கண்ணை வெச்சுக்கிட்டு  மாட்டி  விட்டுடுவான் போலயே? 


19   போலீஸ் னா  கெத்தா  இருப்பான்னு பார்த்தா  செத்த பாம்பு மாதிரி   இருக்கான் ? 


20   நான்   தலைமறையா இருந்தப்போ  என் தலையை மட்டும் மறைத்தேன் ,என்     குணத்தை  மறக்கலை  

21       ஆபரேஷன்  சிங்காரம்னா  சும்மாவா? 


 நான்  எப்படாஆபரேஷன் செஞ்சென் ?



22    சரவணன்  , ஜாக்கிரதை 


 கூடபோறது   நான் 


 அதனாலதான் ஜாக்கிரதை னு  சொன்னேன் 



23  என்ன  மரம்     சாயுது    செக் போஸ்ட்  மாதிரி ? 


24   இந்த     வீட்டில் 50  ,   60 பேரு  வேலை பார்க்கறாங்க , ஒருத்தன் கூட நம்மைப்பார்க்கலை , நாமரெண்டு பேரும்தான் ஒருவரை   ஒருவர்  ஒருத்தர்   மாத்தி ஒருத்தர்  பார்த்துக்கிட்டே   இருக்கோம் 


25    கீ  எங்கே ?


 நீ எங்கே  என் அன்பே 


26  முடியாதுன்னு நீ  சொல்ற   விஷயத்தை       எங்கோ  இருந்து   ஒருத்தன் முடிச்சுக்கிட்டு தான் இருக்கான் 


27   லேடிஸ்    டாய்லெட் ல நீ என்னடா பண்ணிட்டு இருக்கே? 


 இது சிசிடிவி ரூம் 


28  இவளை   நான் கெடுத்தேனா ?இவளே  கெட்டுப்போன பலாப்பழம்  மாதிரி  இருக்கா 


 என்ன ?கரெக்ட்டா   சொல்றான் ?


29  இவன் பேண்ட் டைக்கழட்டிப்பாருங்க .தொடைல  ஒரு ஓட் டை  இருக்கும் 



ஓட் டையா?  நான் என்ன உளுந்து வடையா? 


30   நீ  அந்த   100  கோடியை  அப்புறமாக்கொ டு , இப்போதைக்கு  ஒரு 12  ரூபா கொடு . ஒரு ஜூஸ் வாங்கிக்குடிக்கணும் , தெம்பில்லை 


31   இவங்களோட  சேர்ந்ததுக்கு  எதுனா  சர்க்கஸ்ல  போய் வேலைக்கு சேர்ந்து  இருந்திருக்கலாம் போல 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   என்னதான்  காமெடியன் என்றாலும்   பி டி  மாஸ் டர்  தொப்பையுடன் இருக்கலாமா?ட்ரிம் ஆக இருக்க வேண்டாமா? 


2  இரு   வேறு  முக்கியமான  கட்டங்களில்  இரு நாயகிகளும்  நாயகனுக்கு போன் செய்யும்போது   இரைச்சல் ,பேசுவது கேட்கவில்லை .வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பி இருக்கலாமே? 


3   சினிமா  தியேட்ட்ர்  மேனேஜரின் மனைவிக்கு 4 கள்ளக்காதலர்கள் , அவர்கள்   பெயரை  ஹஸ்பெண்ட் 1 , ஹஸ்பெண்ட் 2  ,  ஹஸ்பெண்ட்3  ஹஸ்பெண்ட் 4   என  செல் போனில் அவர் சேவ்   செய்து   வைத்திருக்கிறார் . கணவர் பார்க்க மாடடாரா? 


4  பெண்கள்  , குழந்தைகள்  பார்க்கும்படி என் படம் இருக்கும் என சுந்தர் சி பேட்டி கொடுத்திருந்தார் , 4 இடங்களில் டபுள் மீனிங்க் டயலாக்ஸ் வருது 


5  டீச்சர் ஆக வரும் நாயகி  கிளப் டான்சில்  குத்தாட் டம் போடுவது எல்லாம்  மன்னிக்க முடியாத குற்றம் 


6   லுங்கி டான்ஸ்   பாட்டின்  பிஜிஎம்மை  சுட்டிருக்கிறார்கள் 

7   வடிவேலு  அடிக்கடி   நான் கருப்புத்தான் என டயலாக்காக படத்தில் சொல்கிறார் , ஆனால்   ராமராஜன் மாதிரி ரோஸ் பவுடர் அடித்து கலராக வருகிறார் .ஓவர் மேக்கப் 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -கேங்கர்ஸ்   (2025) பலரும்   சிலாகித்தபடி  இந்தப்படம் பிரமாதமான காமெடி எல்லாம் இல்லை . முதல்   பாதி  சராசரி  மசாலாக்கதை , பின் பாதியில் பின் பாதி  40 நிமிடங்கள்  காமெடி   ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது . குழந்தைகள் ரசிப்பார்கள் , விகடன்  மார்க்  ( யூகம் ) -41..ரேட்டிங்   2.75 / 5 


thanx  to anicham  1/5/2025 

Wednesday, April 30, 2025

FIRE FLY(2025) -( கன்னடம் ) - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா )

 

24/4/2025  முதல்  திரை அரங்குகளில்  ரிலீஸ் ஆன இந்தப்படம்  அனைவரும் பார்க்கக்கூடிய ஜனரஞ்சசகமான படம் அல்ல .. பெண்கள் ,  மற்றும்  பெண்களைப்போல பொறுமை  கொண்ட  ஆண்களால் மட்டுமே பார்க்க முடிகிற  படம் .இந்தப்படத்தில்  டூயட் , காமெடி டிராக் ,வில்லன் , ஹீரோயின் ,என எதுவும் இல்லை .பெற்றோர் மீது  அன்பு வைத்திருப்போர் ,அவர்களை இழந்தோர் ,அவர்களைப்பிரிந்து வாழ்வோருக்கு மட்டுமே இக்கதை கனெகட்   ஆகும் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  வெளிநாட்டில் இருக்கிறான் . நான்கு வருடங்களாக தன ,அம்மா  அப்பாவைப்பார்க்க சொந்த ஊருக்கு வரவில்லை .நெருங்கிய   உறவினரின் திருமணம் .அந்த  விழாவில்    கலந்து  கொள்ள  சொந்த ஊருக்கு வருகிறான் .நீண்ட இடைவெளிக்குப்பின்  மகன்   வருவதால்    அவனை பிக்கப் செய்ய அம்மா , அப்பா இருவரும் ஏர்போர்ட் வருகிறார்கள் . சந்தோஷமாக சிரித்துப்பேசி க்கொண்டே  காரில் வீட்டுக்கு  வரும் வழியில் ஒரு விபத்தில் அம்மா , அப்பா இருவரும்  அகால மரணம்  அடைந்து  விடுகிறார்கள் 



 நாயகன்  உயிர்   தப்பி விடுகிறான் .ஆனால்   அவனால் அந்த சோகத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை . சரியாக தூக்கம் வரவில்லை .இன்சோம்னியா   வியாதியால்   பாதிக்கப்படுகிறான் .தூக்கமின்மையை சரி செய்ய  யோகா ,  பிராணயாமம்  , என  என்ன  என்னவோ  முயற்சி செய்தும்  அவனால்  உறங்க  முடியவில்லை .



 நாயகனுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பில்லை ,இனி எதற்காக , யாருக்காக வாழ  வேண்டும் என விரக்தியாக இருக்கிறான் .இதற்குப்பின்  நடக்கும் சம்பவங்கள் தான் மீதி   திரைக்கதை 


நாயகனாக  நடித்து  படத்தை   இயக்கி இருப்பவர்   வம்சி   கிருஷ்ணா அப்பாவாக  அச்சியுத்    குமார்  , அம்மாவாக சுதா ராணி  இருவரும் அருமையான    குணச்சித்திர  நடிப்பை   வழங்கி  இருக்கிறார்கள் 


படத்தில்     மற்ற   சின்ன   சின்ன  பாத்திரங்களில்   நடித்த அனைவரும்   சிறப்பான  நடிப்பை வழங்கி  இருக்கிறார்கள்


சரண்  ராஜின்   இசையில்   இரு பாடல்கள்   சுமார் ரகம் .பின்னணி இசை  மெலோடி  ராகம் .  அபிலாஷ் கலாதியின்  ஒளிப்பதிவு   அருமை . ரிஸ்க்    ஆனா இந்தக்கதையை  துணிச்சலுடன் படமாக்கி  இருக்கும் தயாரிப்பாளர்    நிவேதிதா சிவராஜ் குமார் 


சபாஷ்  டைரக்டர்


1   படத்தில்  உயிர் நாடியாக இருப்பது வசனங்கள் . வார்த்தை  ஜாலக்காமெடி 


2   வாழ்வின்  அர்த்தத்தை  கவிதையாக சொன்ன க்ளைமாக்ஸ் சீன் 


  ரசித்த  வசனங்கள் 


1   வாழ்க்கை  என்பது   எல்லாவற்றையும்  அறிந்து கொள்ளும் பயணம் அல்ல . எதையும் அறிந்து கொள்ளாமல் இருபப்து 


2    வாழ்க்கை   யில் எல்லா விதமான சவால்களையும் நாம் எதிர்கொண்டு ஆக வேண்டும் 


3  எதேச்சையான நிகழ்வுகளே நம் வாழ்வில் இல்லை , எல்லாமே   விதியின் கையில் தீர்மானிக்கப்பட்டவை 


4   பார்மல்  டிரஸ்  வயசை  குறைத்துக்காட்டிடாது 


5  நம் வாழ்க்கையில் நமக்கு ஏதாவது ஒரு இழப்பு ஏற்படும் எனில் ஏதாவது சகுனம் காட்டிக்கொடுக்கும் 


6   இவன்   கூட இருப்பதால் என் புருஷன் கூட சண்டை  கூடப்போடமுயலை . ஒரு பிரைவசி இல்லை 


7   அக்கார்டிங்க்  டூ  த தியரி ஆப் ரிலேட்டிவிட்டி .... 


 இவரு   உங்க ரிலேடிவா? 


 நோ 


8   பூ என்பது   தானாக மலரினும் ,போர்ஸ்  பண்ணி  மலர வைக்க முடியாது  , அது மாதிரி தான் சிரிப்பும்  


9    அம்மா  , அப்பா கூட இருக்கும் தருணங்கள் தான் வாழ்நாளில் மகிழ்வான நிமிடங்கள் 


10   எதிலும் ஒரு நிச்சயமின்மை என்பது வாழ்வின் ஒரு அங்கம் 


11    இத்தனை இசைக்கருவிகள் இருக்கே , எதுனா எடுத்து ஒலி  எழுப்பு 


 சங்கு  எடுத்து ஊதவா? 


12  மேடம் , நீங்க கர்நாடகா தானே?  கன்னடம் பேசத்தெரியாதா? 


 நோ .ஒன்லி  ஹிந்தி ..கர்நாடகாவில் இருக்கும் உங்களுக்கு ஹிந்தி தெரியாதா? 


 எல்லாம் நேரம் ..கர்நாடகாவில் இருந்துட்டு   கன்னடம்  தெரியல . ஆனால் ஹிந்தி தெரியாதது ஒரு   குத்தமா? 



13  சாப்பிடும்போது  பேசக்கூடாதுனு உங்க அம்மா, அப்பா சொல்லிக்கொடுத்து வளர்க்கலையா? 


14   மிஸ் , நீங்க   ரொம்ப அழகா இருக்கீங்க 


 எனக்கு ஏற்கனவே தெரியும் 


15   நீ   கூப்பிட் டா நரகத்துக்குக்கூட உன் கூட வருவேன் 


16  அங்க்கிள் .. வாட் ஈஸ்   மெச்சூரிட்டி ?


 என் புருசனுக்கு அது இல்லை 


17  நான் உன்னை மாதிரி   அநாதை இல்லை . வீட்டில் எனக்காக என் மனைவி காத்திருப்பா 


18 கடந்த காலத்தை   யாராலும் துரத்த முடியாது , எதிர்காலத்தை யாராலும்  கணிக்க  முடியாது ,


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   30 நிமிடத்தில் முடிக்க வேண்டிய குறும்படம் அளவுக்குத்த்தான் கண்டென்ட் .இரண்டே கால  மணி நேரம் இழுத்து விட் டார்கள் 


2   கன்னடத்தில்  புலமை பெற்றவர்கள் மட்டுமே பார்க்க முடியும் .பல ஒன்  லைனர்கள்   கிரேசி  மோகன் .,மவுலி  ஸ்டைலி ல் இருக்கின்றன 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - CLESN  U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 


தூக்கம் வராத   நாயகனைப்பற்றிய கதை . ஆனால் பார்க்கும் நமக்கு நன்றாகத்தூக்கம் வருகிறது . ரேட்டிங்க் 2.5 / 5 

Tuesday, April 29, 2025

SARANGAPANI JATHAGAM-சாரங்கபாணி ஜாதகம் (2025) -( தெலுங்கு ) - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா )

 

25/4/2025  முதல்  திரை அரங்குகளில்  வெளியான இந்தப்படம்  கமர்ஷியலாகவும் ஹிட் அடித்துள்ளது .விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைக்குவித்து வருகிறது , கமல் நடித்த பேசும் படம் ,மைக்கேல்  மதன  காம ராஜன்  ஆகிய படங்களிலிருந்து  இன்ஸ்பையர்  ஆகி  சில காட்சிகளை  உருவாக்கி இருந்தாலும்  இதன் இயக்குனர் மைக்கேல்  மதன காமராஜன் படத்திற்கு மட்டும் டைட்டிலில் கிரெடிட் கொடுத்துள்ளார் .மெயின் கதை  புதுசு .

ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லனுக்கு  ஒரு காதலி உண்டு . ஒரு கோடீஸ்வரனை மயக்கி காதல் வலையில் வீழ்த்தி  திருமணம் செய்து கொள்ள காதலியிடம் சொல்கிறான் வில்லன் .காதலியும்  அது போலவே  செய்ய  இப்போ சொத்துக்களை அடைய  அந்தக்கோடீஸ்வரனைக்கொல்ல  வேண்டும் . ஏதாவது  இளிச்சவாயன் கிடைத்தால்  அவன்  மூலம்  கொலையை செய்ய  வில்லன் திட்டம் போடுகிறான் 


நாயகன்  ஒரு ஜோசியப்பைத்தியம் .வாழ்வில்  எந்த ஒரு நிகழ்வையும் செய்யும் முன்  ஜாதகம் பார்த்து  அதன்படி தான் செய்வான் கார்  விற்கும் கம்பெனியில் சேல்ஸ்  எக்ஸ்க்யூட்டிவ் ஆக நாயகன் பணியாற்றுகிறான் .அதே கம்பெனியில் மேனேஜர் ஆக  நாயகி பணி ஆற்றுகிறார் 


நாயகனுக்கு   இரு வருடங்களாக நாயகி மீது லவ் , ஆனால்  அவளிடம் சொல்லவில்லை .தயக்கம் தான் .நாயகனின் ஜாதகப்படி    இன்று  ஒரு எதிர்பாராத  அதிர்ஷ்டம் நிகழும்  என இருக்க   நாயகன் இன்று தன்  காதலை வெளிப்படுத்தத்திட்டம் போடுகிறான் .


இப்போ  ஒரு டிவிஸ்ட் , நாயகி நாயகனிடம் தன காதலை  வெளிப்படுத்துகிறாள் .நாயகனுக்கு ஒரே கொண்டாட் டம் . நாயகன் ,நாயகி இரு  தரப்புப் பெற்றோரும்  சந்தித்துப்பேசி திருமணம்  நிச்சயம் செய்கிறார்கள் 



இப்போ ஒரு டிவிஸ்ட் . நாயகன் ஒரு பிரபல  கை  ரேகை  நிபுணரிடம்  தன்  எதிர்காலம் பற்றிக்கேட்க  அவர் ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்கிறார் . நாயகன்  தன வாழ்நாளில் ஒரு முறையாவது ஒரு கொலை செய்து  விடுவான்   என்பதே அது 


 இதைக்கேட்டு  நாயகன் அதிர்ச்சி  அடைகிறான் . திருமணம் ஆனபின்  கொலை நடந்தால்  பிரச்சனை என்பதால்   திருமணத்தைத்தள்ளிப்போடுகிறான் .நாயகிக்கு நாயகன் மீது சந்தேகம் வருகிறது 


சாகும் தருவாயில் உள்ள   சுகர் பேஷண்ட்  ஆன ஒரு பாட்டியைக்கொலை செய்ய  திட் டம் போடுகிறான் . ஆனால்  அது ஒர்க் அவுட் ஆகாமல்  அவள் தானாகவே இறந்து விடுகிறாள் .இரண்டாவது   முயற்சியாக  இன்னொரு நபரைப்போட்டுத்தள்ளப்பார்க்கிறான் .அது வும்  பெய்லியர் 


 இப்போது  நாயகன்  வில்லனிடம் வந்து ஐடியா கேட்கிறான் . வில்லன்  தான் கொல்ல  இருக்கும் கோடீஸ்வரனைக்காட்டி  இவனைக்கொன்று விடு என்கிறான் . நாயகன்  அதற்கான  முயற்சிகளில் ஈடுபடும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதி திரைக்கதை 


 நாயகன் ஆக பிரியதர்ஷி புலிகொண்டா  அசால்ட் ஆக நடித்து இருக்கிறார் . தமிழ் ரசிகர்களுக்குப்பிடித்துப்போகும் தமிழ்  நாட்டு முக வெட்டு இவருக்கு . காமெடி , காதல் , ஆக்சன்  எல்லாம் நன்கு வருகிறது இவருக்கு 


நாயகி ஆக ரூபா கொடுவாயூர் அழகாக  வந்து  போகிறார் .இவர் உண்மையில் ஒரு டாக்டர் . அதனால் தானோ  என்னவோ  இவருக்கு  ரொமான்ஸ் சரியாக வரவில்லை 


நாயகனின் நண்பன் ஆக வெண்ணிலா கிஷோர்   காமெடிக்காக .இப்போதெல்லாம் 90% தெலுங்குப்படங்களில் இவர் இருக்கிறார் 


படத்தில் நடித்த  மற்ற  அனைவருமே அவரவர்  பாத்திரங்களை சிறப்பாக செய்து இருக்கிறார்கள் 

விவேக் சாகரின்  இசையில்  ஒரு காமடிப் படத்துக்கு  என்ன மாதிரி  பிஜிஎம்  வேண்டுமோ அதைத்தந்திருக்கிறார் .பி ஜி விந்தா வின்  ஒளிப்பதிவு  கச்சிதம் . நாயகன் , நாயகி . காமெடியன் மூவரையும் அழகாககாட்டி இருக்கிறார் மார்த்தாண்ட கே வெங்கடேஷின்  எடிட்டிங்கில்  படம் இரண்டே கால் மணி நேரம் ஓடுகிறது . எங்கும் போர் அடிக்கவில்லை திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர் மோகன் கிருஷ்ண  இந்திராகாந்தி 

சபாஷ்  டைரக்டர்


1  கண் மூடித்தனமாக  ஜாதகத்தை  நம்ப வேண்டாம் என்ற  கதைக்கருவை எந்த அளவுக்குக்காமெடியாக சொல்ல முடியுமோ  அந்த அளவுக்கு சொல்லி இருக்கிறார்  இயக்குனர் 


2  குடும்பத்துடன் பார்க்கத்தக்க  கண்ணியமான கலாட்டாக்காமெடி காட்சிகள்  படத்திற்கு பலம் 


3 வசனகர்த்தா  கிரேசி மோகன் பாணியில்  வார்த்தை ஜாலக்காமெடியில்  விளையாடி இருக்கிறார் 


  ரசித்த  வசனங்கள் 


1  மேடம் , இந்த ட்ரஸ்ல  நீங்க ரொம்பஅழகா இருக்கீங்க 


 இரண்டு வருடங்களாக இதே டிரஸ் தான் போட்டுட்டு கம்பெனிக்கு வர்றேன் ,ஏன்னா இதுதான் கம்பெனி யூனிபார்ம் 


2  ஒரு பொண்ணுக்கு  பையனிடம் எதிர்பார்ப்பது , தேவைப்படுவது லாயல்ட்டி ,  ஹானஸ்ட்டி .,ப ர்சனாலிட்டி .இவை மூன்றும் உன் கிட் டே  இருக்கு .அது போக நீ  ஒரு ஸ்வீட் பர்சன் 


3  இந்த   உலகத்தில் எத்தனையோ கிரிமினல்ஸ் தனக்கான தண்டனையை அடையாம இருக்காங்க 


4 யாரு இவன் ? உங்க வீட்டுப்பால் காரனா? 


 யோவ் , அவரு  மாப்பிள்ளை 


5   ஹி ஈஸ் சிங்கிள்  வாண்ட்  டு  மிங்கிள் 


6  விஷ யூயூ   ஏ ஹேப்பி  புரடக்டிவ்  மர்டர் 


7  ஐ ஆம்   ஹெட்  வெயிட்டர் , ஆல் சோ   ஹெவி  வெயிட்டர் 


8 உங்க பையனுக்கு உங்க முக சாயல் இல்லை , ஆனா உங்க மனைவி முக சாயல் இருக்கு 


 ஏண்டி , நிஜமா அவன் என் பையன் தானா? 



 சுத்தம் , 30 வருடங்கள் கழித்து  என் மேல சந்தேகமா? 


9   அவரு  ஒரு ஆல்பா மேல் 


 இவை சிக்மா பீமேல் 


ஓ , காமாவா? 


 ஆமா 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  ரொமாண்டிக்  சப்ஜெக்ட்டில்  நாயகன் - நாயகி கெமிஸ்ட்ரி  ஒர்க் அவுட் ஆகவில்லை .காதல் காட்சிகள் : கம்மி 


2  இரண்டு   வருடங்களாக   நாயகனுடன் ஒரே கம்பெனியில் ஒரே  செக்சனில்  பணியாற்றும் நாயகிக்கு நாயகனின் ஜாதகப்பைத்தியம் தெரியாமல் இருப்பது எப்படி ?


3  கோடீஸ்வரர்  பார்ட்டிக்கு வரும்போது  செக்யூரிட்டி இல்லாமலா வருவார் ?


4  நாயகன்  ஒரு கர்ச்சீப்பால் முகத்தை மறைத்துக்கொண்டால்  நாயகிக்கு அவனை அடையாளம் தெரியாதா? உயரம் , உடல் மொழி   காட்டிக்கொடுக்காதா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+   CLEAN U  



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாலியான  காமெடி டிராமா  பார்க்க நினைப்பவர்கள் ரசிக்கலாம் . ரேட்டிங் - 2.5 / 5 



Monday, April 28, 2025

THUDARUM -தொடரும் (2025) -( மலையாளம் ) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 



25/4/2025  முதல் திரை  அரங்குகளில்  வெளியான இந்தப்படம்  வெளியான  முதல் 3 நாட்களிலேயே உலகம் முழுவதும் 90  கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது , விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களையும் ரசிகர்களின் பலத்த கரகோஷத்தேயும்  பெற்றிருக்கும்  இந்தப்படம்   மோகன் லாலுக்கு இன்னும் ஒரு த்ரிஷ்யம் என சொல்லப்படுகிறது  


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு  கார் டிரைவர் கம் கார் ஓனர் .ஒரு மனைவி  ஒரு டீன் ஏஜ்  மகன் , டீன் ஏஜ் மகள்  என அழகிய குடும்பம் இவருடையது .இவர் ஒரு காலத்தில்  சினிமாவில்  ஸ்டண்ட்  மாஸ்டருக்கு உதவியாளராகப்பணி புரிந்தவர் . இவரது குரு  இவருக்குப்பரிசாக ஒரு அம்பாசிடர் கார் தந்தார் ., அதைத்   தன உயிராக மதித்துப்பாதுகாத்து வருகிறார் 


 நாயகனின் மகன்  தன நண்பர்களுடன்  சேர்ந்து  நாயகனின் காரை  அவருக்குத்தெரியாமல்  எடுத்து  ஒரு சின்ன விபத்து  செய்து  காரை டேமேஜ்  ஆக்கி விடுகிறான் .இதனால் டென்சன்  ஆன நாயகன் மகனை அறைந்து   விடுகிறார் .மகன் கோபித்துக்கொண்டு வீட்டுக்கு வரவில்லை 


நாயகனின் காரில் கஞ்சா  கடத்தப்பட்டதாக ஒரு கேஸ் பைல் செய்து போலீஸ்  ஸ்டேசனில் காரை  வைத்திருக்கிறார்கள் .அந்தக்காரை மீட்க நாயகன் போலீஸ்  ஸ்டேசனுக்குப்போகிறான் .அங்கே  சப் இன்ஸ்பெக்டருடன்  மோதல் ஆகி விடுகிறது .  காரை  நாயகன்  எடுத்துச்செல்லவே கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு  அந்த  சப் இன்ஸ்பெக்ர்   செயல்படுகிறார் 


நாயகன் அதே போலீஸ்  ஸ்டேசன் இன்ஸ்பெக்டரிடம்   முறையிடுகிறான் . அவர்  காரை   ரிலீஸ்  செய்ய அனுமதி அளிக்கிறார் . ஆனால்  அந்த ஸ்டேசன்  கான்ஸடபிள்  உறவினரின் திருமணத்துக்கு  செல்ல வேண்டி இருக்கிறது . குடித்திருப்பதால் எங்களால் ட்ரைவ் செய்ய முடியாது , எனவே எங்களை கல்யாண மண்டபம் வரை டிராப் செய்ய வேண்டும் என டீல்  பேசுகிறார் . வேறு    வழி இல்லாமல் நாயகன் ஒத்துக் கொள்கிறான் 


அந்தப்பயணத்தில்  ஒரு உண்மை வெளிப்படுகிறது . நாயகனின் காரின் டிக்கியில்  ஆல்ரெடி ஒரு பிணத்தை  போலீசே வைத்திருக்கிறார்கள் .அதை  டிஸ்போஸ்  செய்யத்தான்  நாயகனின் உதவியை நாடி இருக்கிறார்கள்.


போலீஸ்   செய்த  அந்தக்கொலையை   நாயகனே  செய்ததாக கேஸ்  ஜோடிக்கப்பார்க்கிறார்கள் . நாயகன்  அதை எப்படி முறியடித்தார் என்பது மீதி திரைக்கதை  


நாயகன்   ஆக மோகன் லால்  பிரமாதமாக நடித்திருக்கிறார் .பாத்ரூமில்  அழும்  சீனில் கலங்க வைக்கிறார் .அவரது மனைவி ஆக இது நம்ம ஆளு ஷோபனா  அதிக   வாய்ப்பில்லை . வந்தவரை   ஓக்கே  . க்ளைமாக்சில்  வில்லனிடம்  அடி வாங்கும்போது ஒரு பார்வை வீசுகிறாரரே ?கிளாசிக் . 


மெயின் வில்லன் ஆக பிரகாஷ்  வர்மா   கலக்கி இருக்கிறார் .இவரது கேரக்ட்டர்  டிசைன் கமலின்  சத்யா  பட வில்லன் கிட்டியை நினைவு படுத்துகிறது , சிரித்துக்கொண்டே கழுத்தை அறுக்கும் கேரக்ட்டர்

இன்னொரு வில்லன்  ஆக பினு  பாப்பு  கச்சிதம் 


பாரதிராஜா , இளவரசு  போன்ற தமிழ்  ,முகங்களும் உண்டு . ஆனால் ஒரு சீன்  தான் 

ஷாஜி குமாரின்  ஒளிப்பதிவு   பிரமாதம் . கேரளா  இயற்கை அழகைக் கண்  முன் நிறுத்துகிறது  . ஏரியல் ஷாட்டில்   கவனம் ஈர்க்கிறது . பூகம்பம்  வரும் சீனையும்  , மழை பொழியும் தருணங்களையும் அழகியல் ரீதியாக  பதிவு  செய்த விதம் அருமை , ஜேக்ஸ்  பிஜாயின் இசை கனகச்சிதம் . த்ரில்லிங்க்கான  இடத்தில் , ஆக்சன் சீக்வன்ஸ் வரும் இடத்தில் என பல தருணங்களில்  பிஜிஎம்   செம .. நிசாத்  யூஸுப் ,  ஷபீக்  ஆகிய இருவரும்தான் எடிட்டிங்க் . கச்சிதம் . இரு ட்விஸ்ட்களை புகுத்திய இடம் அருமை .ஆனால்  படத்தின் நீளம்   அதிகம் .166 நிமிட ங்கள்


 கே ஆர்   சுனில் தான்   கதை .நிஜத்தில் நடந்த  ஒரு என்கவுண்ட் டர்   மேட்டரிலிருந்து  இன்ஸ்பையர் ஆகி  இந்தக்கதையை எழுதினாராம் . கே ஆர்   சுனில்  உடன் இணைந்து   திரைக்கதை   அமைத்து தனியாக இயக்கி இருப்பவர் தருண் மூர்த்தி 


சபாஷ்  டைரக்டர்

1   வில்லன்களுடன் நாயகன் காரில்  பயணிக்கும் அந்த  சம்பவம் செம த்ரில்லிங்க் . யூகிக்க முடியாத திருப்பமும் அருமை 


2   நான்   லீனியர்  கட்டில்  கதை   சொன்ன விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   யானைகள்   கூட் டமாக   நம் எதிரே வந்தால் ஆபத்து இல்லை .ஒற்றை யானையிடம் தான் நாம் மாட் டிக்கொள்ளக்கூடாது 


2   புலியை    நீ  நேரில்  பார்த்திருக்கிறாயா? 


 இல்லை , சபரி மலை ஐயப்பன் கூட புலி இருப்பதைக்காலண்டரில் வேணா பார்த்திருக்கிறேன் 


3  என்னங்க ?நானும்  மாஸ்டரோட  இழவுக்கு   வர்றேன் 


 வேணாம்  , அவரோட சிரித்த முகத்தை மட்டும் தான் நீ இதுவரை பார்த்திருக்கே .அப்டியே இருக்கட்டும் உன் நினைவுகள் 


4  காரில்   500   கிராம் கஞ்சா தான் கிடைச்சது .சட் டப்படி  800  கிராமுக்கு மேலே  கஞ்சா   சிக்கினாத்தான் காரை சீஸ் பண்ணலாம் 


5   தேவை   இல்லாத   காரியத்தில் தலை இட்டா தேவை   இல்லாத    தலை வலி தான் வரும் 

6     இது நான்     உருவாக்கிய  கதை , என் கதைக்கு நான் தான் ஹீரோ 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   இரண்டே  முக்கால்மணி   நேரக்கதையில் முதல் 40 நிமிடங்கள்  மெயின் கதைக்குள் செல்லவில்லை .பாத்திர அறிமுகங்கள்  இழுவை 


2   முதல்  பாதியில் இருந்த த்ரில்லிங்க்   பின் பாதியில்   இல்லை .காரணம்  முதல் பாதி க்ரைம் த்ரில்லர் . பின் பாதி ரிவெஞ்ச்   த்ரில்லர் 


3  த்ரிஷ்யம்  படத்தை நினைவு படுத்தும் போலீஸ் ஸ் டேசன்  சீன்ஸ்  , குடும்பம்  சம்பந்தப்பட் ட   சீன்கள் 


4  போலீஸ் ஸ் டேசனில்  நாயகன் தன மகனின் பைக் நிற்பதைப்பார்த்து  இது என் மகன் பைக் மாதிரி தெரியுதே என சந்தேகமாக சொல்கிறார் . நெம்பர் பிளேட்டைப்பார்க்க மாட் டாரா? 



5   சொந்த   மகனின் மணிபர்ஸை  ஒரு அப்பா  அடையாளம்  கண்டு கொள்ள  மாட் டாரா? 


6    வில்லன்கள்  இருவரும் போலீஸ் ஆபீஸர்ஸ் ... .  பிணத்தை  சாக்கு  மூட்டை யிலிருந்து   வெளியே     எடுக்காமல்   புதைப்பது  ஆபத்து   என்பதை அறிய   மாட் டார்களா?

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+   வன்முறைக்காட் சிகள் அதிகம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி க்ரைம் த்ரில்லர் . பின் பாதி ரிவெஞ்ச்   த்ரில்லர் . த்ரிஷ்யம்      லெவல்     எல்லாம்  இல்லை  ரேட்டிங்க்    3/ 5 


Thudarum
Theatrical release poster
Directed byTharun Moorthy
Screenplay by
Story byK. R. Sunil
Produced byM. Renjith
Starring
CinematographyShaji Kumar
Edited by
Music byJakes Bejoy
Production
company
Rejaputhra Visual Media
Distributed by
Release date
  • 25 April 2025[1]
Running time
166 minutes
CountryIndia
LanguageMalayalam
Box office70 crore[2]

Sunday, April 27, 2025

KESARI CHAPTER 2 - THE UN TOLD STORY OF JALLIANWALA BAGH(2025) -ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ஹிஸ்ட்டாரிக்கல் கோர்ட் ரூம் டிராமா )


  13/4/1919 -ஜாலியன்  வாலா பாக் கில்  இந்தியர்கள்30,000 பேர்  ஜெனரல்  டயரால்  சுட்டுக்கொல்லப்பட் ட சம்பவம்  அனைவருக்கும் தெரியும் .அந்த  சம்பவத்தில்  மக்களுக்குத்தெரியாத  பல விஷயங்களை இந்தப்பட,ம் பேசுகிறது .இந்தியாவின் புகழ்  பெற்ற  வக்கீல் சங்கரன் நாயர்   என்பவர் தான்  இந்த வழக்கில் ஜெனரல்  டயருக்கு எதிராக வாதாடினார் . அந்த வக்கீலின்  வாரிசுகளான புஷ்பா பலட் , ரகு பலட்  ஆகிய இருவரும் இணைந்து எழுதிய  புத்தகம் ஆன THE CASE THAT SHOOK THE EMPIRE ஐ  தழுவி  திரைக்கதை  எழுதப்பட்டது ,திரைக்கதை எழுதியவர்கள் அமிர்தபால் சிங்க்  பிந்த்ரா  மற்றும்  ட்யாகி  ஆகிய இருவரும்தான் .இயக்கி  இருப்பவர்  கரண் சிங்க் ட்யாகி 

18/4/2025       அன்று  திரை  அரங்குகளில்   வெளியான இந்தப்படம்  கமர்ஷியலாக வசூலில்  கலக்கிக்கொண்டு இருக்கிறது ,150   கோடி ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான இந்தப்படம்  முதல்  7 நாட்களில்  90 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஜெனரல்  டயர்  சிறுவனாக இருந்தபோது  படித்த பள்ளியில்  இந்திய  மாணவர்கள்  அதிகமாக  இருந்ததால்  அவன்  அவர்களால்  ராக்கிங்க்  செய்யப்பட்டான் .மனோவியல் ரீதியான  பாதிப்புக்கு உள்ளான அவன் இந்தியர்கள்  மீது  பொதுவான   வெறுப்பைக்கொண்டிருந்தான் .மிலிட்ரியில் சேரும்போது கூட   அவனுக்கு அளிக்கப்பட் ட மெடிக்கல்   சர்ட்டிபிகேட்டில் இவன் மன ரீதியாக    பாதிக்கப்பட்டவன் என்றே  குறிப்பு இருந்திருக்கிறது 



  13/4/1919 -ஜாலியன்  வாலா பாக்  படுகொலை  சம்பவம் நடப்பதற்கு 3 நாட்கள் முன்னர் ஒரு ஆங்கிலேயப்பெண்மணி  ஒரு இந்திய மாணவனால்  பாலியல் வன்கொடுமை      செய்யப்பட்டார்    என்று புகார் வருகிறது .அந்த  இந்திய மாணவன்   கைது செய்யப்படுகிறான் .அந்த   மாணவனுக்கு  ஆதரவாக  சில இந்தியர்கள் போராட் டம்       நடத்த இருக்கிறார்கள் என்ற தகவல்  மிலிட் ரி ஆபீசர் ஆன ஜெனரல்  டயர் க்கு கிடைக்கிறது .உடனே  அவன்  திட் டம்     போடுகிறான் . இந்த  ரேப் கேசில்  ஒரு டிவிஸ்ட்  இருக்கிறது . அந்த ஆங்கிலேயப்பெண்மணியும் , இந்திய மாணவனும் காதலர்கள் . இருவரும்   தனிமையில் இருந்தபோது பெண்ணின் அப்பா   பார்த்து   விடுகிறார் . அவர்  செல்வாக்கு  மிக்கவர்  என்பதால்  இந்திய மாணவனை  சிறையில் அடைத்து விட்டு தன்  மகளைப்புகார்   தரச்சொல்லி மிரட்டிப்   பணிய வைக்கிறார் 


நாயகன்  ஆங்கிலேயே    அரசாங்கத்திடம்  சம்பளம் வாங்கும் பிரபல வக்கீல் . இவர்  ஒரு முறை  வில்லன் ஆன ஜெனரல் ட யரால்  அவமதிக்கப்படுகிறார் . ஓர் பார்ட்டி   நடக்கிறது .அங்கே  நாயகனும், வில்லனும் கலந்து கொள்ள செல்லும்போது நாயகன் தடுத்து நிறுத்தப்படுகிறார்  . இந்தியர்களும்  , நாய்களும்  இங்கே  அனுமதிக்கப்படுவதில்லை என்று போர்டு வைத்து அவமானப்படுத்துகிறார்கள் . இதனால்   நாயகன்   வில்லனைப்பழி வாங்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்   

ஜாலியன்  வாலா பாக்  படுகொலை  சம்பவம்  தொடர்பாக  ஒரு அறிக்கை  சமர்ப்பிக்குமாறு  ஆங்கிலேயே அரசாங்கம்  நாயகன்  ஆனா வக்கீல்  சங்கரன்   நாயரைக்கேட்டுக்கொள்கிறது .


ஜெனரல் டயரைப்பற்றிய  விபரங்களை  சேகரிக்கிறார் . மிலிட்ரியில்   அவருக்கு எதிராக  இருக்கும் ஆட் களைக்கண்காணிக்கிறார் ., பல தகவல்களைத்திரட்டுகிறார்      ஜாலியன்  வாலாபாக்  படுகொலை  சம்பவம் நடந்த பின்பு  ஜெனரல் டயர் மீது வழக்கு தொடுக்கிறார் .அந்த வழக்கில்  நாயகன்  எப்படி வாதாடினார் ?என்பதுதான் படத்தின் மொத்த திரைக்கதையும் .      


நாயகன் ஆக, வக்கீல்  சங்கரன் நாயர் ஆக  அக்சய் குமார் பிரமாதமாக நடித்திருக்கிறார் . குறிப்பாக   அவர் அவமானப்படுத்தப்படும் காட்சியிலும் , க்ளைமாக்சில்  ஜட்ஜையே  எதிர்த்துப்பேசும் காட் சியிலும் கை  தட்டலை  அள்ளும்   நடிப்பு .


வில்லன்  ஜெனரல் டயர் ஆக   சைமன் பைஸ்லே டே கலக்கலாக நடித்திருக்கிறார் . அவர் முகத்தைப்பார்த்தாலே  வெறுப்பு வரும் அளவுக்கு  அவரது கேரக்டர்  டிசைன்   வடிவமைக்கப்பட்டிருக்கிறது 


நாயகனுக்கு  உதவி ஆக வரும்   வக்கீல் ஆக அனன்யா பாண்டே  சிறப்பாக நடித்திருக்கிறார்.அவருக்கான ஒப்பனை , ஆடை வடிவமைப்பு , உடல் மொழி அனைத்தும்  அருமை 


வில்லன்  ஜெனரல் டயர்க்கு   ஆதரவாக   வாதாடும்   வக்கீல் ஆக மாதவன்  அசால்ட்   ஆக   நடித்திருக்கிறார் .  நாயகனின்  மனைவி ஆக ,பார்வதி  நாயர்  ஆக ரெஜினா கசாண்ட் ரா   வருகிறார் . அதிக வாய்ப்பில்லை . வந்தவரை ஓகே 


முக்கியமான   பாத்திரங்களில்  வ்ரும்   மற்ற   அனைவருமே  சிறப்பான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள்  


 நிதின் பைட்டின்  எடிட்டிங்கில்  135  நிமிடங்கள்   ஓடுகிறது .ஒரு சீன்  கூட   போர்   அடிக்கவில்லை .தெபோஜித்  ரே வின் ஒளிப்பதிவு அட் டகாசம் .பிரம்மாண்டமான  படமாக்கும் . கோர்ட் ரூம்  சீன்களில்   லைட்டிங்க்  சிறப்பு . இசை   மூவர் . சஷ்வத் சச்  தேவ் , கவிதா சேத்  , கனிஷ்க் சேத்  . நாயகன்  கோர்ட்டில் ஆஜர் சீன்களில்   வரும் ட்ரம்ஸ்  பிஜிஎம் கலக்கல் ரகம் ., கூஸ்பெம்ப்ஸ் மொமெண்ட்ஸ் .இயக்கி ருப்பவர் கரண்  சிங்க்  ட்யாகி                                 


சபாஷ்  டைரக்டர்


1  படத்தின் ஓப்பனிங்க் சீனிலேயே ஜாலியன்  வாலா பாக்  படுகொலை   சம்பவம் காட்டப்படுகிறது , பிரமாதமான மேக்கிங்க் , எக்சிக்யூஸன் . ஒளிப்பதிவு  , ஆர்ட் டைரக்சன் அனைத்தும்   அருமை .பிணக்குவியல்களுக்கு அடியில் மாட்டிக்கொள்ளும் சிறுவனின்  குரல்  கிணற்றிலிருந்து   வருவது போல   தத்ரூபமான  சவுண்ட்   டிசைனிங்க் 


2   நாயகன் அக்சய் குமார்  , வில்லன்  ஜெனரல்  டயர் ,   அனன்யா  பாண்டே , மாதவன்  ஆகிய   நால்வர் நடிப்பும் அருமை 


3  நாயகன்  கோர்ட்டில்   வாதாடும்போது , கோர்ட்டில் என்ட் ரி   கொடுக்கும்போது   தரப்படும்   பிஜிஎம் செம 


4  க்ரைம்   த்ரில்லர் போலவே  சீன்கள்   சுவராஸ்யமாக சொல்லப்பட் ட விதம் 


ரசித்த  வசனங்கள் 


1    ரெஸ்ட்  எடுத்தா  வாழ்க்கைல   இலட் சியத்தை அடைய முடியாது 


2  கோர்ட்டில்  சரி எது ? தப்பு  எது? என பார்க்க மாட் டாங்க , வெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள்  இப்படித்தான் இரு பிரிவுகளாகப்பார்ப்பார்கள் 


3   நீ    நல்ல   லாயர் தான் , ஆனா  ராங்க்   சைடில்  இருக்கே 


 நீங்க   நல்ல கவிஞர் தான் , ஆனா நாட்டுக்கு உங்களால ஒரு பிரயோஜனமும் இல்லை 



4   பிரிட்டிஷ்  இங்க்கால் தான்  அவங்க சரித்திரம் எழுதப்பட்டிருக்கு , அதை எப்படி மாற்றுவது என்பது தெரியவில்லை 


5  தீவிரவாதிகள்  1650 பேர்  சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள்  என மிலிட்ரி  ரிப்போர்ட் சொல்லுது , ஆனா   ஹாஸ்ப்பிடல்  மெடிக்கல் ரிப்போர்ட் 10,312  பேர்  பிணமாக்கிடைத்ததா சொல்லுது 



6  உங்க   மிலிட் ரி ஆளுங்க  சுட்டதால 1650 பேர்   இறந்துட்டாங்க   என சொல்றீங்களே?  உங்க சைடு இறப்பு எவ்ளோ ?


 ஒரு ஆள்  கூட மிலிட்ரில இறக்கலை 



7   ஜாக்கிரதையா யோசிச்சு சொல்லுங்க அவங்க பாதிக்கப்பட் ட மக்களா?தீவிரவாதிகளா? 


8   உண்மை   லீவ்   எடுக்காது 


9  அமைதியா இருப்பதால் யார் பாதிப்பு அடைகிறார்கள் ? 


10 இது தான்   அவளோட  முதல் கேஸ் ,கடைசி கேஸாகவும் இதுதான் ஆகப்போகுது 


11  சம்பவம்   நடந்தப்ப சாட் சிகளாக  புகைப்படங்கள்  இல்லை , சாட்சிகள் இல்லை , கன்பெசன்ஸ்  இல்லை   எப்படி நிரூபிப்பீங்க ? 


 பெயிண்ட்டிங்க்ஸ் இருக்கே? 


12   நீ  பிரிட்டிஷ்  கவர்மெண்ட்டின்  அடிமை என்பதை மறக்காதே 


பேரரசே  பயத்தில் சுருங்கிப்போயிடுச்சு போல 


13   எதிரியை  பிரித்தாளு , வெற்றி பெறு 


14    சிகரெட்  உடல் நலனுக்குக்கெடுதல் , அதனால   நான் பைப்   தான் புகைக்கிறேன் 


15 உங்க எதிர்பார்ப்புக்கு நான் ஈடு கொடுக்க மாட் டேன் 


16    சில   மோசமான   விஷயங்களை   மறப்பது   நல்லது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நாம்  அறிந்திடாத   பல சுவராஸ்யமான  சம்பவங்கள்  விவரிக்கப்படுவதால்   அனைவரும் பார்க்க வேண்டிய தரமான படம் இது . ரேட்டிங்க்   3.75 / 5