Showing posts with label TOURIST FAMILY - டூரிஸ்ட் பேமிலி(2025) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label TOURIST FAMILY - டூரிஸ்ட் பேமிலி(2025) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Sunday, May 04, 2025

TOURIST FAMILY - டூரிஸ்ட் பேமிலி(2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா )


சுப்ரமணியபுரம்  மூலம்  அறிமுகமான   எம் சசிகுமாருக்கு  நாடோடிகள்  நல்ல  நண்பன்   என்ற  இமேஜைக்கொடுத்தது .அயோத்தி  படம் மூலம்   சிறந்த  மனித நேயம்  மிக்க  மனிதர் என்ற   பெருமை  கிடைத்தது . அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்   இயக்கிய  இந்த படம்  அவருக்கு இன்னொரு பரிமாணத்தைத் தந்திருக்கிறது ,இனியாவது  அவர் வன்முறை மிக்க  படங்களில்  நடிக்காமல்  குடும்பப் படங்களில் நடிப்பாரா? பார்க்கலாம் 



ஸ்பாய்லர் அலெர்ட் 

நாயகன்  தன் மனைவி , இரு மகன்கள்  உடன்  இலங்கையிலிருந்து  பிழைப்பு தேடி தமிழகம்  வருகிறார் . சடட விரோதமாக கள்ளத்தோணி யில்  தான்   வருகிறார் . அதனால் அவரிடம்  போதிய ஆவணங்கள் இல்லை . அவருக்கு இருக்கும்  ஒரே சொந்தம் அவரது மச்சினன் . அதாவது  நாயகியின் சகோதரன் . அவர்கள்  தங்க  ஒரு இடம்  ரெடி செய்து  கொடுக்கிறான் . நாயகன்  இனி ஏதாவது  வேலைக்குப்போக வேண்டும் . நாயகன்  வேலைக்குப்போக  படும் சிரமங்கள் , அந்த ஏரியா  மக்களிடம்  எப்படி  நாயகனின் குடும்பம் பழகுகிறது  என்பதுதான் 90%  திரைக்கதை  சம்பவங்கள் . ராமேஸ்வரத்தில்  ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடக்கிறது . அந்த சம்பவத்துக்கு  தமிழகம்  வந்திருக்கும் ஒரு இலங்கைக்குடும்பம் தான் காரணம் என நினைத்துப் போலீஸ் தீவிரமாகத்தேடுகிறது . போலீசிடம்  அவர்கள்  மாட்டினார்களா? என்பது க்ளைமாக்ஸ் 


ஒன்  லைன் ஆக   இந்தப்படத்தின்  கதையைக் கேட்கும் யாருக்குமே  இதில்  இரண்டரை மணி நேரம் தாக்குப்பிடிக்க போதிய  வலு  இல்லையே எனத்தோன்றும்  , ஆனால்   சாமார்த்தியமான  திரைக்கதையால்  நம்மைக்கட்டிப்போட்டு இருக்கிறார் இயக்குனர் 

நாயகன் ஆக  எம்  சசிக்குமார்  பாந்தமான நடிப்பு . குடித்து  விட்டு வீட்டுக்கு   வரும் இடத்தில்   மகனிடம் மன்னிப்பு க்கேட்பது , மனைவியிடம்  முதலில்  கோபமாகவும்,  பின் வேலை கிடைக்காமல்  இயலாமையையும் காட்டும் இடம் அருமை . பக்கத்த்து  வீட்டில்  ஒரு சாவு விழுந்ததும்  அந்த ஏரியாவில் இருக்கும் அனைவருக்கும் தகவல் சொல்வது . ஓடியாடி வேலை செய்வது   அருமை . நாடோடிகள்  படத்தில்  ஓடும் பஸ்  பின்னால்  ஓடி   தன கழுத்தில்  இருக்கும் செயினைக்கழற்றிக்கொடுக்கும் சீனில் தியேட்டரே  கை  தட்டியது .அந்த சீனு க்கு  நிகரான நடிப்பு இதிலும் 

  நாயகி ஆக  சிம்ரன்  குடும்பப்பாங்கான நடிப்பு . ஒரு விழாவில்   ஆல்   தோட் ட  பூபதி  நானடா   பாட்டு டான்ஸ் ஸ்டெப்    போடும்போது   அரங்கம் அதிர்கிறது . ஆனால்  வயோதிகம் காரணமாக  அவர் உடலில் முதுமை தென்படுவது  காலத்தின்    கட்டாயம் . நேருக்கு நேர்  படத்தில்  வரும்  மனம் விரும்புதே உன்னை   பாடலில் வரும் துள்ளாட் ட சிம்ரனை எதிர்பார்த்தால் ஏமாற நேரிடும் 

 நாயகியின்  சகோதரர் ஆக   வரும் யோகி பாபு  ரசிக்க வைக்கிறார் . வழக்கமாக மொக்கை போட்டு எரிச்சல் ஏற்படுத்தும் அவர்  இதில்  மனம்   கவர்கிறார் நாயகனின்   மகன்களாக வரும்  மிதுன் , கமலேஸ்   இருவரும் பிரமாதமான நடிப்பு . சின்னவன்  சுட்டித்தனமான நடிப்பு எனில்  பெரியவன் பாந்தமான நடிப்பு . அப்பா சென்ட்டிமெண்ட் சீன்களில் அப்ளாஸ்  வாங்குகிறார் 

 பக்கத்து  வீட்டுக்காரர்களாக வரும் எம் எஸ்  பாஸ்கர் , இளங்கோ குமாரவேல்  இருவரின் குணச்சித்திர  நடிப்பும் அருமை . போலீஸ்  இன்ஸ்பெக்ட்டர்   ஆக வரும்   பகவதிப்பெருமாள் , ரமேஷ்  திலக் ,ஸ்ரீ  ஜா ரவி , ராம் குமார்  பிரசன்னா   என அனைவரும்  அவரவருக்குக்கொடுக்கப்பட் ட   வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள் 

அர்விந்த்  விஸ்வநாதனின் ஒளிப்பதிவு அருமை .  இசை   ஷான் ரோல்டன் . இரு பாடல்கள்  ஹிட் ஆகி இருக்கின்றன . பி ன்னணி    இசையும்   அருமை . பரத்   விக்ரமனின்  எடிட்டிங்கில்  படம் 150  நிமிடங்கள்  ஓடுகிறது . எங்கும் தொய்வில்லை 

 சபாஷ் டைரக்டர் 

1   ஒரு நல்ல சிறுகதை  முதல் வரியிலேயே வாசகனைக்கவர்ந்து இழுத்து விடும்  என அமரர்  மேஜிக் ரைட் டர்   சுஜாதா சொல்வார் . இந்தப்படத்தின் கதையும்  முதல்   காட் சியிலிருந்தே  ரசிகனைக்கட்டிப்போடுகிறது 

2  படத்தில்  வில்லன்     என யாரும்  இல்லை . எல்லோரும் நல்லோரே   என்ற   கான்செப்ட்  அழகு 

3  ஒரு   சீரியஸான   சீனை  பினிசிங்கில்   காமெடி ஆக்குவது , கலாட்டாவாக  தொடங்கும்   சீனை  சென்ட்டிமென்ட்  ஆக   முடிப்பது   திரைக்கதை   மன்னன் கே  பாக்யராஜ்க்குக் கை வந்த  கலை . புதுமுக   இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் அவரது  பாணியில்  அசத்தி   இருக்கிறார் 

4  நாயகனின்   மூத்த   மகன் , ஹவுஸ் ஓனரின் மகள்  இருவரும்   இணைந்து  நடிக்கும்        காட் சிகள்  கவிதை 

5  என்  புருஷன்  என்னவா இருக்கார்னா   காமெடி   நன்றாக  ஒர்க் அவுட் ஆகி   இருக்கிறது . அந்த   சீனில்   நடித்த நடிகை யின் சிரிப்பு அருமை 

6  நாயகன் - முதலாளி   எம் எஸ்  பாஸ்கர்   இருவருக்குமான   பாண்டிங்க்   அருமை 

7  கண்களை க்கலங்க வைக்கும் க்ளைமாக்ஸ் காடசி 



 ரசித்த வசனங்கள்

1  ஒரு   ,மனுஷனுக்குப்பின்னால் ஒரு கூட் டம்    இருக்குதுன்னா   பதவியோ , பவரோ   காரணமா இருக்கும் ,  ஆனா  முதல்   முறையா   மனித நேயத்தால கூட் டம்    கூடியதைப்பார்க்கிறேன் 

2  ஒருத்தர்   அமைதியா  இருக்கார் எனில்   அவருக்கு எதுவும் தெரியாது என்ற  அர்த்தம்  இல்லை . ஒரு மரியாதை காரணமாகவும் மவுனமாக இருக்கலாம் 


3  இங்கே  எந்தத்தமிழில்  பேசுறோம் என்பதுதான் பிரச்சனையா? தமிழில் பேசுவதே பிரச்சனையா? 

4   இவங்களைப்பார்த்தா   பிழைக்க   வந்தவங்க மாதிரி   தெரியலை  டூர்   வந்த மாதிரி   இருக்கு 

5  இன்னைக்கு ஸ்கூல்  போகலையா? '

இன்னைக்கு  சன் டே 

 அதனால   என்ன ? போக வேண்டியதுதானே? 

 முன்னே   பின்னே   ஸ்கூல்   போய் இருந்தாத்தான் தெரியும் ? 

6    என்    அம்மாவுக்குபின்   என் கிட் ட   சாப்பிட்டியா ? எனக்கேட்ட ஒரே மனிதர் இவர் தான் 

7       அவர் பதில் சொல்ல மாட் டாரா? அவருக்கு    வாய் இல்லையா? 

 உங்க  அளவுக்கு இல்லை 

8    ரொம்ப   தேங்க்ஸ்பா 

 டீ   நான் போடலை , டீக்கடைக்காரர்  தான்   போட் டார் ''

 அட   அதில்லை , செய்த உதவிக்கு நன்றி சொன்னேன் 

 லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்

1   நாயகனுக்கு  இன்னும்   வேலை கிடைக்கவில்லை . கையில் காசில்லை , ஆனால்  வாடகைக்குப்பார்த்திருக்கும் வீடு   பெரிய   வீடு . ஒரு சாதா   வீட்டில்  குடி  இருப்பது  போலக்காட்டி இருக்கலாம் 


2  இலங்கையிலிருந்து   ஒரு குடும்பம் வரும்போது   போலீஸ்  என்ன எது  என எதுவும்   விசாரிக்காமல்   விடுவது இடிக்கிறது 

3   ஒரு  போலீஸ்   ஆபீசர்   தன வீட்டின்  மாடியில்   இரு க்கும் போர்சனை    இலங்கைத்தமிழர்களுக்கு   வாடகைக்கு விடுவது   எப்படி ? பின்னாளில்   பிரச்சனை   வரும் என்பது தெரியாதா? ஐ டி   கார்டு , ஆதார்   கார்டு   எதுவும் கேட்காமல்   இருபப்து   எதனால் ? 

4    தன்  வீட்டில்   வயதுக்கு   வந்த  பெண்   இருக்கும்போது  மேல் போர்சனில்   குடி   இருக்க   வருபவர்கள்  குடும்பத்தில் ஒரு டீன் ஏஜ்    பையன்  இருப்பது   பெண்ணின்   தந்தைக்கு உறுத்தாதா? 


 அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்  -  க்ளீன்  யூ


 சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் -  TOURIST FAMILY(2025)- புது வசந்தம் விக்ரமன் ,மொழி ராதா மோகன் பாணியில் பாசிட்டிவ் கேரக்டர்கள் மட்டுமே உலவும் ஒரு நல்ல திரைக்கதை.அயோத்தி க்குப்பின் எம் சசிகுமார் க்கு மற்றும் ஒரு FEEL குட் மூவி.ஆடியன்சுக்கு எமோஷனல் கனெக்ட் தரும் ஒரு நல்ல படம்.பிரம்மாண்டமான பட்ஜெட்டில் டப்பாப்படங்களை ,குப்பைப்படங்களைத்தரும் புகழ் பெற்ற இயக்குனர்கள் மத்தியில் ஒரு அறிமுக இயக்குனர் குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த நல்ல படம் தந்திருப்பது மகிழ்ச்சி.விகடன் மார்க் (யூகம்)-46.ரேட்டிங். 3.5 / 5