Monday, January 27, 2025

DOMINIC AND THE LADIES PURSE (2025) - மலையாளம் -சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

           

                

இயக்குனர்  கவுதம்  வாசுதேவ்  மேனனின்  நடுநிசி நாய்கள் (2011)  மட்டும் தான்  அவர் இயக்கிய படங்களிலேயே குப்பைப்படம் மற்ற  அனைத்துப்படங்களையுமே ரசிகர்கள் கொண்டாடினார்கள் .இயக்குனர் பாலாவுக்கும்  , இயக்குனர் கவுதம்  வாசுதேவ்  மேனனுக்கும்  ஒரு எதிர் மறை ஒற்றுமை உண்டு . தனது படங்களில்  நாயகனை அலங்கோலமாகக்காட்டுவதில் விற்பன்னர் பாலா  தனது படங்களில்  நாயகியை  மிக அழகாகக்காட்டுவதில் விற்பன்னர் கவுதம்  வாசுதேவ்  மேனன் அவர் படங்களின் நாயகி இதற்கு முன் 50 படங்களில் நடித்திருந்தாலும் அவர் படத்தில் தான் அதிக பட்ச  அழகுடன் இருப்பார் ,



மெகா ஸ்டார் மம்முட்டி யின் சொந்தப் படம் இது இயக்குனர்  கவுதம்  வாசுதேவ்  மேனனின்  இயக்கத்தில் வெளி வரும் முதல் மலையாளப் படம் இது , 8 கோடி ரூபா பட்ஜெட்டில் எடுக்கப்பட் ட இப்படம் ரிலீஸ் ஆன முதல்  4 நாட்களில்  6 கோடி ரூபாய் வசூ லை  அடைந்துள்ளது  ஆனால்  இந்தியன்  எக்ஸ்பிரஸ்  உள்ளிட் ட  முன்னணிப்பத்திரிக்கைகள்  1.75/ 5  ரேட்டிங்க் தான் கொடுத்திருக்கிறார்கள்  திரைக்கதை , இயக்கத்தில்  

கோட் டை  விட்ட்தாக  எழுதி இருக்கிறார்கள் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  முன்னாள்  போலீஸ் ஆபீசர்   இப்போது  பிரைவேட்டாக   டிடெக்டிவ்   ஏஜென்ஸி  நடத்தி வருகிறார் ..பெரிய அளவில்  வருமானம் இல்லை .இவர் குடி இருக்கும்  வீட்டுக்கே வாடகை பாக்கி 3 மாதங்கள் . இப்படி இருக்கும் சூழலில்  நாயகனின் ஹவுஸ் ஓனர்  ஒரு லேடீஸ்  பர்ஸ்  தனக்குக்கிடைத்ததாகவும் , அது யாருடையது என்று கண்டு பிடிக்க வேண்டும் என்றும்  கூறுகிறார் . அப்படிக்கண்டு பிடித்தால்  பழைய   வாடகை பாக்கி தர  வேண்டாம்  என ஆபர் வைக்கிறார் 


அந்த பர்சுக்கு சொந்தக்காரர்  ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் பூஜா  என்பதை  நாயகன் கண்டு பிடிக்கிறார் . இரண்டு வருடங்கள் முன்  தன்  காதலன் கார்த்திக்கைப்பார்க்கப்போன தினத்தில் இருந்து  அவளைக்காணவில்லை என தெரிய வருகிறது . கார்த்திக் தான்  தகராறில்  அவளைக்கொலை  செய்திருப்பாரோ  என சந்தேகித்தால்  அவனையும்  இரண்டு   வருடங்களாகக்காணவில்லை . கார்த்திக்கின் சகோதரி  மட்டும் தான்  இருக்கிறாள் . இதற்குப்பின்  இந்தக்கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான் மீதி திரைக்கதை 


 நாயகன் ஆக   மம்முட்டி  அசால்ட் ஆக நடித்திருக்கிறார் . சண்டைக்காடசிகளில் ,நடனக்காடசிகளில்  ரஜினி போல சமாளிக்கிறார் . அவரது  உதவியாளர் ஆக   வரும்  கோகுல் சுரேஷ்  கோபி  அருமையான  நடிப்பு . நல்ல எதிர் காலம் உண்டு 



 நாயகி ஆக  சுஷ்மிதா பட்    கலக்கி இருக்கிறார் , பாரத நாட்டியம் ஆடுகையில் ,  க்ளைமாக்சில்  அவரது நடிப்பு அடிப்பொழி . வினீத்  வில்லத்தனமான  ரோல் . ஆனால்  வில்லன் இல்லை . ஹவுஸ்  ஓனர் ஆக வரும் விஜி  வெங்கடேஷ்  கவனிக்க வைக்கும் யதார்த்த நடிப்பு 


தற்புகா  சிவாவின் இசையில் இரு பாடல்கள்  சுமார் ரகம் . பின்னணி இசை   ஓகே ரகம் அந்தோணியின்  எடிட்டிங்கில்  152  நிமிடங்கள்   டைம் டியூரேஷன் .விஷ்ணு  தீவின் ஒளிப்பதிவு   அருமை . நாயகியை அழகாகக் காட்டி இருக்கிறார் 


கதை நீரஜ்   ராஜன்   என டைட்டிலில்  போடுகிறார்கள் . திரைக்கதை   என மூவர்  பெயர் வருகிறது , ஆனால் டைட்டிலில்   ஒரிஜினல்  படத்தின்  விபரத்தை தரவில்லை . முன்னணி  பத்திரிகைகள்   கூட இது ஒரு சுட் ட கதை என்பதை சொல்லவில்லை 

சபாஷ்  டைரக்டர்

1   டிடெக்டிவ்  ஏஜெண்சி   மாதிரி  செட் டப்பில்  நாயகனின் ஆபீஸ்  ரூம்  பக்கா . ஆர்ட்  டைரக் டருக்கு ஒரு ஷொட்டு .  பிகேபி  கதைகளில்  வரும் பரத் சுசீலா  வின் மூன்  லைட் டிடெக்டிவ்  ஏஜென்சி , சுபாவின் நாவல்களில் வரும் நரேன் வைஜயந்தியின் ஈகிள்ஸ் ஐ   நிறுவனங்கள்  போலவே  அருமையான  அலங்கரிப்புகள் 


2   சுபாவின் நாவல்களில் வரும்  செல்வா - முருகேசன்  ஜோடி போலவே  நாயகனுக்கு அஸிஸ் டெண்ட் ஆக  வரும் கோகுல் சுரேஷ் கோபி  கேரக் டர்  டிசைன் , அவரது  கெட் டப் , நடிப்பு  எல்லாம் பக்கா ( இவர்  நடிகர்  சுரேஷ் கோபியின் மகன் )   


3   நாயகன்  டீல்   செய்யும் முதல் கேசில்  கள்ளக்காதலியுடன் ஹோட் ட ல் ரூமில்  தங்கி இருக்கும் ஆளிடம்  50,000  ரூபாய் கறக்கும் காட்சி  காமெடி  


4    ஆங்கில   வசனங்கள் அதிகம் இல்லை , அது ஒரு ஆறுதல் 

5   க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட் அட் டகாசம் .அந்த சீனில்  வில்லனின் நடிப்பு  செம 


  ரசித்த  வசனங்கள் 


1   சந்தேகப்படும்படி   யாரையாவது  பார்த்தா  உடனே  எனக்கு இன்பார்ம் பண்ணு 


சார் ,  சந்தேகப்படும்படி  இருக்காங்கனு எப்படிக்கண்டுபிடிக்க? 


இப்போ  என்னைப்பார்த்தா சந்தேகப்படும்படி  இருக்கா?


 இல்லை 

அதையே  பாலோ  பண்ணு 


2 இவன் தான் என்  புது அஸிஸ்டெண்ட் 

    இவனுக்காவது  சம்பளத்தை  ஒழுங்காக்குடு 


3   பணம்  தந்தா இந்த  உலகத்துல அம்மாவைத்தவிர யாரை  வேண்டுமானாலும் விலைக்கு வாங்க முடியும்  

4  ஒரு தும்பை ( துப்பு )  கிடைச்சா  போதும்  , மும்பை  வரை போய்ட்டு வருவேன் 


5  நான்  டான்சில்  கொஞ்சம்  வீக் 



ஓ , உங்களுக்கு டான்ஸ் ஆடத்தெரியுமா? 


 ஜஸ்ட்  வாட்ச் 


6   ஒரு ஆளைப்பற்றித்தெரிஞ்சுக்கணும்னா அவனோட பூர்விக இடத்தில் இருந்து விசாரிக்க ஆரம்பிக்கணும் 


7  சிம்பிள்  ஐடியா  வில்  ஒர்க் அவுட் 

8  எவ்ளோ  பிரில்லியண்ட்டான ஆளா இருந்தாலும் 20 % அவனோட ஐ டியா சொதப்ப வாய்ப்பு இருக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   க்ளைமாக்ஸ்   ல  வில்லனை  நெருங்கும் நாயகன் தனி ஆளாக வந்து மாட்டிக்கொள்வது எதனால் ? போலீசுக்கு தகவல் கொடுத்து பாதுகாப்பாக வந்திருக்கலாமே?


2   இரண்டு   வருடங்களுக்குப்பின் மீட்கப்படும்  பூஜாவின்   டெட் பாடியின் முகம்  சிதையாமல் இருப்பது எப்படி ? 


3  பெண்   தன்மை   உள்ள  ஆள்  13  வயதில்  இருந்தே  தான் பெண்ணாக மாறியதாக  வசனம்   வருது . ஆனால்  18 வயதில்   காதலி எப்படி ? 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U/A 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் DOMINIC AND THE LADIES PURSE (2025) - மலையாளம் --- கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய முதல் மலையாளப்படம் பிரமாதம் எல்லாம் இல்லை . சுமார் ரகம் தான் .கதை , திரைக்கதை அமைப்பில் பட் டி டிங்கரிங்க் அட்லி வெர்சன் ஆப் சவுத் கொரியன் க்ரைம் த்ரில்லர் மூவி 1 Rainbow Eyes (2007) + 2 பாரதிராஜாவின் பொம்மலாட்டம் (2008) (அன் அபிஷியல் ரீ மேக்) + 3 திட் டம் 2 (2021). ( அபிஷியல் ரீ மேக்) கேரக்டர் டிசைனில் தெலுங்குப்படமான ஏஜென்ட் சாய் சீனிவாசா ஆத்ரேயா (2021) +சந்தானம் நடித்த ஏஜென்ட் கண்ணாயிரம் (2022) - அபிஷியல் ரீ மேக் இவற்றின் சாயல் உண்டு .மம்முட்டிக்கு ஒரு சுமார் ரகப்படம் , இன்ட் டர்வெல் பிளாக் சீன் கற்பனை வறட்சி க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் குட் ரேட்டிங் 2.25 / 5 . உங்க பர்சில் இருந்து பணத்தை இழக்க வேண்டாம்


Dominic and the Ladies' Purse
Theatrical release poster
Directed byGautham Vasudev Menon
Screenplay byGautham Vasudev Menon
Neeraj Rajan
Sooraj Rajan
Story byNeeraj Rajan
Produced byMammootty
StarringMammootty
Gokul Suresh
Sushmitha Bhatt
CinematographyVishnu Dev
Edited byAnthony
Music byDarbuka Siva
Production
company
Distributed byWayfarer Films
Release date
  • 23 January 2025
Running time
152 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget8 crore[citation needed]
Box officeest. 6.10 crores(kerala) [2]

Tuesday, January 21, 2025

PRAVINKOODU SHAPPU(2025)-மலையாளம் -சினிமா விமர்சனம்(க்ரைம் திரில்லர்)

                   

       PRAVINKOODU SHAPPU(2025)-மலையாளம் -சினிமா விமர்சனம்(க்ரைம் திரில்லர்) 


பிறாவின் கூடு கள்ளுக்கடை  என்பதுதான் டைட்டில்    .பலரும் பிரவின்கூடு என தவறாக உச்சரிக்கிறார்கள்.புறாவின் கூடு என்னும் இடத்தில் உள்ள கள்ளுக்கடையில் நடந்த   கொலையை. விசாரணை செய்யும் போலீசின் கதை        இது          


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் புதிதாக அந்த ஏரியாவிற்கு வந்திருக்கும் போலீஸ் ஆபீசர்.வந்ததும் முதல் கேசாக இந்தக்கள்ளுக்கடைக்கொலைக்கேஸ்


கள்ளுக்கடை உரிமையாளர். பாபு தூக்கில் தொங்கி இறந்திருக்கிறார்.தற்கொலை போல தோற்றம் அளித்தாலும் இது திட்டமிட்ட. கொலை என நாயகன் நினைக்கிறான்


விசாரணயில் இரு விஷயங்கள்  தெரிய வருகிறது.1 கொலை நடந்த தின்ம் 11 பேர் கடையில் இருந்திருக்கிறார்கள்.அந்த 11ல் ஒருவன் தான் கொலையாளி. 2.பாபு பெண்கள் விஷயத்தில் வீக்.பண பலத்தைக்காட்டி பல பெண்களை கரெக்ட் பண்ணியவர்.அப்படி அவர் கரெக்ட் பண்ணிய ஒரு பெண்ணின் புருசன் தான் கொலை செய்திருக்க வேண்டும் 


முதல் பாதி முழுக்க நாயகனின் பார்வையில் திரைக்கதை. நகர்கிறது.பின் பாதியில் ஒரு திருப்பம்.நாயகனின் அப்பாவும் இதே. பாணியில் கொல்லப்பட்டவர்தான்.அதனால் நாயகன் தான் தன் அப்பாவின் மரணத்துக்குப்பழி தீர்க்கிறாரோ என்ற கோணத்தில் கதை நகர்கிறது.இதற்குப்பின் நடக்கும் திடுக்கிடும் திருப்பஙகள். மீதி திரைக்கதை


நாயகன். ஆக பசீல் ஜோசப் காமெடி யில் கலக்கி இருக்கிறார்.தன்னைப்பற்றி அவர் விடும் பில்டப்கள் ,மிசஸ் மிராண்டாவிடம் பம்முவது எல்லாமே செம.


கள்ளுக்கடையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஆக. சவுபின் சாஹிர் அசர வைக்கும் குணச்சித்திர நடிப்பு.


அவரது அழகு  மனைவி.மிராண்டா. ஆக. சாந்தினி ஸ்ரீதரன் இளமைத்துள்ளலுடன். கூடிய நடிப்பு.


செம்பன் வினோத் சில காட்சி கள் வந்தாலும் மனதில் நிற்கிறார்.

ஒளிப்பதிவு.சைஜூ. காயத்.அசத்தலான ,துல்லியமான பதிவுகள்.சபாஷ்

சபீக் முகமது அலியின் எடிட்டிங் கில். படம் 149 நிமிடஙகள் ஓடுகிறது.

இசை. விஷ்ணு விஜய்.பிஜி எம் மில் மிரட்டி விட்டார்..


திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர். ஸ்ரீராஜ் சீனிவாசன




சபாஷ்  டைரக்டர்


1. டைட்டில் சாங்கில் கள் உருவாகும் விதத்தைப்படம் பிடித்த விதம். கவிதை


2. டெட்பாடியின் திறந்த கண்ணில் ஈ , வில்லன். சிகரெட் பற்றி எரிக்கும் காட்சியின் துல்லிய ஒலி ,மிராண்டா. கண்ணுக்கு மை இடும் க்ளோசப் ஷாட் கலக்கல் ரகம்

3. மாறுபட்ட எடிட்டிங் கட்,சவுண்ட் டிசைனிங் ஒர்க் அசத்தல்.மேஜிக் சீன் ,சீட்டு ஆடும் விதம் எல்லாம் பிரமிப்பு


4 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்

5 க்ரைம் இன்வெஸ்டிகேசன் போர்சனில் காமெடியைக்கலந்த விதம்


6 நாயகனிடம் மிராண்டா 5000 ரூ கைமாத்துக்கேட்கும் காட்சி,நாயகன். மழுப்பும் சீன் செம


7 ஸ்கூல் பஸ் சேசிங் சீன் அட்டகாசம்


8 மிராண்டாவை வில்லன் கொலை செய்ய முயலும்போது நாயகனுக்கு போன் போட அவர் பைக்கில் வரும் சீன் விறுவிறுப்பு ,காமெடி கலக்கல்


  ரசித்த  வசனங்கள் 

1  எனக்கு மைக்ராஸ்கோப் கண்கள்


2 அவன் ரவுடியா இருந்தாலும் பக்கா டீசண்ட்


3 டெட் பாடிக்கு வெளிச்சமும் ,காத்தோட்டமும் இருக்கட்டும்.எல்லாரும் தள்ளி விலகி நில்லுங்கப்பா

4  உன் பேரென்னம்மா?

மிராண்டா

மிரண்டா?

5  உனக்கு மேரேஜ் ஆகி 5வருசம் இருக்கும்.சரியா?


10 வருசம். ஆகுது


கழுத்தில் போட்டிருக்கும் செயின் பார்த்தா 5 வருசம் மாதிரி தெரியுதே?


அது 6 வருசம்


6. உன்னை மாதிரி ஒரு ஆள் கிட்டே மிராண்டா. மாதிரி. ஒரு அழகி. எப்படி வசியம் ஆனா?


7 எந்தக்குடிகாரனையும். நம்பாதீஙக


8  நான் கொலைக்கேசில் உள்ளே போனவன்


கொசுவையா கொன்னே?

9  அது ஏண்டா எல்லாரும் என் சம்சாரம் பின்னாடியே சுத்தறீங்க?


10 சார் அந்த கன் ல சுடுவீங்களா?


கோல்டு மெடலிஸ்ட் அதுல


11. ஒரு மேஜிக் மேன் கிட்டே மற்றவர்கள் கண்களுக்குப்புலப்படாத ஒரு ட்ரிக் இருக்கும்


12. நம்பிக்கை துரோகத்தை விடப்பெரிய வலி இல்லை



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 முதல் பாதி ரொம்ப ஸ்லோ.பின் பாதி பல்க விறுவிறுப்பு.இன்னமும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்

2 என்னதா காமெடிக்கு என்றாலும் நாயகன் அண்டர்வேருடன் பைக்கில் சேஸ் செய்வது போலீஸ் பணியை அவமதிக்கிறது



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    காமெடிவிரும்பிகள்,க்ரைம். திரில்லர் ரசிகர்களை க்கவரும்.ரேட்டிங். 3/5


Monday, January 20, 2025

REKHA CHITHRAM (2025)- ,மலையாளம் -சினிமா விமர்சனம்- மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர்

         


    வெறும் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயார் ஆன லோ பட்ஜெட் படமான இது 9/1/2025. அன்று ரிலீஸ் ஆகி முதல் 10 நாட்களில் 46 கோடி ரூபாய் வசூலித்து ஹிட் அடித்துள்ளது.சாதாரண கதைதான்.அதிர்ஷ்டக்காற்று     அடித்ததில் இவ்ளோ பெரிய வெற்றி    


ஸ்பாய்லர்  அலெர்ட்

வேலைக்காரியா உள்ளே நுழைந்து எஜமானி அம்மாவைக்கைக்குள்ள போட்டுக்கிட்டு  தானே எஜமானியாக  ஆக முயன்றவர்கள் கதை நமக்குத்தெரியும்.அந்த மாதிரி. தான். படத்தின் வில்லியும்.பணிப்பெண்ணாக  ஒரு பெரிய இடத்தில் வேலை பார்ப்பவர். அங்கே பணம் திருடும் வில்லனைப்பார்த்து சிரிக்கிறாள்.இருவரும் திருட்டில் பார்ட்னர்.லைப் பார்ட்னர் ஆகி விடுகிறார்கள்


நாயகி ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்.சின்ன சின்ன ரோல்களில் நடிக்கும் துணை நடிகையான அவருக்கு மெயின் ஹீரோயின் ஆக ஆசை.ஷூட்டிங் ஸ்பாட் க்கு அருகே தான் வில்லி பணி புரியும் இடம் இருக்கிறது.அங்கே ஒரு நாள்வ்தஙக நாயகிக்கு சந்தர்ப்பம் அமைகிறது


நாயகன் ஒரு போலீஸ் ஆபீசர்.ட்யூட்டி டைமில்  சீட்டு ஆடினார் என சஸ்பென்ஸ் ஆனவர் ஒரு வித்தியாசமான கேஸ் அவர் கையில் கொடுக்கப்பட இன்வெஸ்டிகேசனை. ஆரம்பிக்கிறார்


ஒரு ஆள் சரக்கு அடித்த மப்பில் ஒரு வீடியோ காட்சி பதிவு செய்கிறார்.அதில் தானும் இன்னும் இரு ஆண்களும் இணைந்து இதே இடத்தில் ஒரு பெண்ணுடைய டெட் பாடியைப்புதைத்தோம் என. வாக்குமூலம் தந்து விட்டு ஆன் த ஸ்பாட் தற்கொலை செய்து கொள்கிறார்


அந்த இடத்தைத்தோண்டிப்பார்த்தபோது ஒரு பெண்ணின் மண்டை ஓடு கிடைக்கிறது.இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை.

கொலை நடந்தது.1985ல்.40 வருடங்கள் கழித்துத்தான். தெரிய வருகிறது.இந்த சிக்கலான கேசை நாயகன் டீல் செய்வதுதான் கதை


நாயகன் ஆக ஆசிப். அலி கச்சிதம்.அதீத நடிப்பில்லை.பில்டப் இல்லை.யதார்த்த நடிப்பு.

நாயகி   ஆக அனஸ்வரா ராஜன்.அப்பாவி முகம் ,அழகு ராணி.நல்ல நடிப்பு


வில்லன் ஆக மனோஜ் கே ஜெயன். வில்லி ஆக சலிமா செம ஆக்டிங.சித்திக் ,இந்திரன்ஸ் உட்பட அனைவர் நடிப்பும் கச்சிதம்


அப்பு. பிரபாகர் ஒளிப்பதிவு இதம்.சமேர் முகமது வின் எடிட்டிஙகில் படம் 137 நிமிடஙகள் ஓடுகிறது.இசை. முஜீப் மசித்.பிஜி எம் அருமை


ராமுசுனிலின் கதையை. வாங்கி அவர்உடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ஜாபின் டி சாக்கோ



  ரசித்த  வசனங்கள் 

1. பணம் சம்பாதிக்க துரத்திட்டே போய் வாழ்க்கையை இழந்தேன்


2. எல்லோருக்கும் மரணம் உண்டு.ஆனால்  மரணத்துக்காகக்காத்திருப்பது கொடுமை

3 உனக்கு. என உண்டான ஒரு ரோல் காலம் கடந்தாலும் யாராலும் தட்டிப்பறிக்க முடியாது

4 இதுவரை நாம. கண்டுபிடித்ததை அவஙக கொண்டு போயிருக்கலாம்.ஆனா இனி. நாம் கண்டுபிடிக்க இருப்பதை அவங்களால. அபகரிக்க முடியாது


5  நேற்று ஒரு படி முன்னேறினோம்.இன்று. இரு படிகள் பின்னேற்றம்




லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ஒரு சாதா திருட்டுக்கேசை தேவை 

இல்லாமல் கொலைக்கேசாக மாற்றும். வில்லி


2 கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் ஈசியா. அப்ரூவர் ஆவது




அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ரொம்ப ஸ்லோ மூவி.பெண்கள் பார்க்கலாம்.பெண்களைப்போல ப்பொறுமை உள்ள ஆண்கள் பார்க்கலாம்.ரேட்டிங் 2.5. /5

Sunday, January 19, 2025

EMERGENCY (2025) - ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ஹிஸ்டாரிக்கல் பயோபிக்சர் டிராமா )

   

                        

படம்  ரிலீஸ் ஆகும் முன்பே  ஏகப்பட்ட  சர்ச்சைகளை உருவாக்கிய படம் . காரணம்   கங்கனா  ரனாவத்  பாஜக  கட்சிக்காரர் , முன்னாள்  பிரதமர்  இந்திரா காந்தி  காங்கிரஸ்  காரர் . இவர் அவராக நடித்தால்  சரி வருமா?  என்று  பிரச்சனை கிளப்பினார்கள் .    சென்சார்  போர்டிலும்  பல  பிரச்சனைகள் .17/1/2025  முதல்  திரை  அரங்குகளில்  வெளியாகி ஓடுகிறது .60 கோடி   ரூபாய்  -பட்ஜெடடில்  எடுக்கப்பட் ட  இப்படம்  முதல் நாள் பாக்ஸ் ஆபீசில்   3  கோடி  ரூபாய்  வசூலித்து  இருக்கிறது .இது  கங்கனா  ரனாவத்  தின் சொந்தப்படம் . அவர் தான் தயாரிப்பாளர்  + நாயகி + இயக்குனர் + திரைக்கதை  மேற்பார்வை 

ஸ்பாய்லர்  அலெர்ட்

இது   இந்திரா காந்தியின் முழு வாழ்க்கை  வரலாறு அல்ல .  அவர் பிரதம  மந்திரியாக இருந்த போது  நடந்த  முக்கிய அரசியல் நிகழ்வுகளை மட்டும்  படம் பிடித்து இருக்கிறார்கள் ,இரண்டு  வரலாற்று  நூல்களால்  ஈர்க்கப்பட்டு , மூன்று திரைக்கதை  ஆசிரியர்களால்  வடிமைக்கப்பட்ட்து என சொல்லப்பட் டாலும்  டைட்டிலில்  திரைக்கதை  ரித்தீஷ் ஷா  என்றே  வருகிறது 


 இந்திய  சீனா போரின் போது அப்பாவுக்கும்  , மக்களுக்கும் நிகழ்ந்த  மனத்தாங்கல்கள்  காட் டப்படுகிறது எமர்ஜென்சி  எதனால்  அறிவிக்கப்பட்ட்து  என்பது  தெளிவாக விளக்கப்படவில்லை . ஆனால் அது மக்களுக்கு எந்த அளவு துன்பங்களை விளைவித்தது ? அதனால்  கட் சிக்கும், ஆட் சிக்கும் எப்படி கெ ட்ட பெயர் உருவானது என்பதை விலாவாரியாகக்காட்டுகிறார்கள் . முழுமையான  வரலாற்று நிகழ் வுகளின் தொகுப்பாக , தொடர்ச்சியாக   திரைக்கதை  அமைக்கப்பட வில்லை . சில  முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாக மட்டுமே காட்டப்படுகிறது மகன்  சஞ்ச்ய காந்தியின் தலையீடு  அதிகமாக இருந்தது  அவரால் தான்  எல்லா  கெட் ட பெயரும் என்பது மாதிரி   காட்டுகிறார்கள் 


கங்கனா  ரனாவத்   இந்திராகாந்தியாக  அசத்தி இருக்கிறார் .அவரது ஒப்பனை , உடல் மொழி , கண்பார்வை , அனைத்தும் அட் டகாசம் . தேசிய  விருது  பெறு ம் அளவுக்கு நிறைவான நடிப்பு .வேறு ஒருவரை அந்த கேரக்ட்டரில்  கற்பனை கூட பண்ணிப்பார்க்க முடியவில்லை . சஞ்சய்  காந்தியாக  விஷாக் நாயர்  செமையாக  நடித்து இருக்கிறார் , கிட் டத்தட் ட   வில்லன் ரோல் , ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆக  அனுபம் கேர்    தனது அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி  இருக்கிறார் , படத்தில்  பங்கேற்ற  அனைவருமே    உணர்ந்து நடித்திருக்கிறார்கள் 

பாடல்களுக்கு  ஆன இசையை ஜி வி பிரகாஷ் குமார் வழங்கி இருக்கிறார் , நான்கு பாடல்களுக்கு இ வரும் ஒரு பாடலுக்கு மட்டும்  அ ர்கோ என்பவரும் இசை அமைத்து இருக்கிறார்கள் .பின்னணி   இசையை  மூவர் வழங்கி இருக்கிறார்கள்.படத்திற்கு ஜீவனே   பின்னணி இசைதான்  

டெட்ஸோ நகாடா  என்பவர் தான் ஒளிப்பதிவு .நாயகிக்கு லைட்டிங்க்  அமை ப்பதில் சிறப்பான பணி செய்திருக்கிறார் . கலவரக்காட் சிகளை உயிரோட் டமாக படம் பிடித்து இருக்கிறார் 


ராமேஸ்வர்  எஸ்  பகத்  தின் எடிட்டிங்கில்  படம் 146 நிமிடங்கள் ஓடுகிறது . முதாழ் 50 நிமிடங்கள் மிக மெதுவான திரைக்கதை 

சபாஷ்  டைரக்டர்


1  முதல்  முக்கால் மணி நேரம்  வரலாற்று நிகழ்வுகளை  மிக மெதுவான திரைக்கதையால்  எனோதானோ   எனப்பார்த்துக்கொண்டிருந்த  ஆடியன்ஸை  எழுந்து நின்று  கை  தட்ட   வைத்தது  கோர்ட்டில்  இந்திராகாந்தி  கூண்டில்  சேர் போட்டு அமர்ந்து  விசாரணைக்கு பதில் சொல்லும் காட்சி . அந்த சீனில்  கங்கனா ரன்வத்தின் உடல் மொழி , நடிப்பு , நடை , பிஜிஎம்  அனைத்தும் கலக்கல் ரகம் 


2  இந்திராகாந்தி   க்கு   மன பதட் ட  நோய் , ஹாலுசினேஷன்  எல்லாம்  இருந்ததாக  பதிவு  செய்திருக்கிறார்கள் .இது இதுவரை  நான் படிக்காத   தகவல் .  கண்ணாடி  முன்  அவர் நிற்கும்போது  பிம்பமாகத்தோன்றும்  உருவம் கண்டு அவர் மிரள்வது  திகில் படத்துக்கு இணையான காட் சி 


3    சஞ்சய காந்தி -  இந்திராகாந்தி   உரையாடல்கள் , மோதல்கள்   அனைத்தும் அருமை . இருவருக்குமான பாண்டிங்க்  சிறப்பாக காட் டப்பட்டுள்ளது 

4  சஞ்சய்    காந்தியின் விமான விபத்தில் மரணம்  நிக ழ்ந்த  தருணம் ., இந்திராகாந்தி அவரது பாதுகாப்பு அதிகாரியாலேயே  கொலை செய்யப்பட்டது  ஆகிய நிகழ்வுகள் அருமையாகப் படமாக்கப்பட்டு உள்ளன 


5 தனது   மகன்    சஞ்சய்    காந்தியின்  மரணத்தை   மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை   நேரில் கண்ட  , இந்திராகாந்தி  மனம்   பதறி   அழுவது   அருமையான   காட்சிப்படுத்தல் 


  ரசித்த  வசனங்கள் 

1   நான் ஒன்னும் சின்னக்குழந்தை இல்லை 


 அப்புறம் எதனால அப்பா அப்பா என என் பின்னால் சுற்றிக்கொண்டு இருக்கிறாய் ? 


2  90% பேர்  வெய்ட்டிங்க்  , 10% பேர்  பைட்டிங்க் 


3  எந்த   சூழலிலும்  அம்மாவை மறக்கக்கூடாது .பெற்ற  அம்மா,பாரத மாதா  இரண்டும் சமம் 


4 இந்தியா  என்றால் இந்திரா  ,இந்திரா என்றால்  இந்தியா


5    சின்னக்குழந்தைல இருந்து அப்பா கையைப்பிடிச்சுக்கிட் டே  இருந்தா  எப்படி ? கையை  விடணும் 


6  உங்க பதவியைக்காப்பாத்திக்க வேண்டியது உங்க கடமை 


7   வாட்   கேபினட் ? கிச்சன் கேபினட் ? 


8   நான் தான்  கேபினட் .இந்த ஸீட்   உங்களுக்கு  எப்படிகிடைச்சுது ? 


9   டெல்லி , இந்தியாவின்   தலைநகரம் .லண்டன் மாதிரி  மாத்தப்போறேன் 


10  ஏமர் ஜென்சி  யை வாபஸ்   வாங்கிய உடனேயே  தேர்தல்  வைத்தது  பொலிட்டிக்கல்   சூசையிடு 


கடந்த இரண்டு வருடங்களாக நீ   செய்த  தப்புக்கள் எல்லாம் உன் கண்ணுக்குத்தெரியலையா?  



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வன்முறைக்காட் சிகள்  அதிகம் , ஒரு குழந்தையை  சுவரில் அடித்துக்கொலை செய்யும்  சீன்  கொடூரம் 


2   கட்சி  மேலிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும், விருது பெற வேண்டும் இந்த இரண்டு எண்ணங்கள்மட்டுமே கங்கனா  ரனாவத்திற்கு . முழுமையான  அரசியல்  நிகழ்வுகளின்  தொகுப்பாக திரைக்கதை இல்லை ,இந்திரா காந்தியின் நெகடிவ்  பக்கங்களை  மட்டுமே   காட்டி இருப்பது பலவீனம் 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  U / A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வரலாற்று நிகழ்வு களில்  ஆர்வம் உள்ளவர்கள்  பார்க்கலாம் . பொது  ரசிகர்கள் ,ஜனரஞ்சகப்பட விரும்பிகள்  தவிர்க்கலாம் .ரேட்டிங்   3 / 5 


Emergency
Theatrical release poster
Directed byKangana Ranaut
Screenplay byRitesh Shah
Story byKangana Ranaut
Produced byKangana Ranaut
Zee Studios
Renu Pitti
Starring
CinematographyTetsuo Nagata
Edited byRameshwar S. Bhagat
Music bySongs:
G. V. Prakash Kumar
Arko
Score:
Sanchit Balhara and Ankit Balhara
Production
companies
Manikarnika Films
Zee Studios
Distributed byZee Studios
Release date
  • 17 January 2025
Running time
146 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budgetest.₹25 crore[2]
Box office₹2.9 crore[3]

Friday, January 17, 2025

நேசிப்பாயா? (2025) - தமிழ் --சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் க்ரைம் த்ரில்லர்)

               

            

ஆரம்பம்  புகழ்  இயக்குனர்  விஷ்ணுவர்தன்  தான் கதை , இயக்கம் ,நாயகி  அதிதி ஷங்கர்  ஆகிய இரு விஷயங்கள் தான் இப்படத்தைப்பார்க்க தூண்டுகோலாக இருந்தன .டைட்டிலைப்பார்த்ததும்  இது எதோ  ரொமாண்டிக் சப்ஜெக்ட் என்று நினைத்தால் இது ஒரு க்ரைம் த்ரில்லர் என்பது ஆச்சர்யம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ,நாயகி  இருவரும்  காதலர்கள் . நாயகன் நாயகி மீது அதீத அன்பு வைத்திருக்கிறான் .சல்மான்கான் - ஐஸ்வர்யாராய் , சிம்பு - நயன் தாரா  இந்த ஜோடிகளின்    பிரிவுக்குக்காரணம்  ஓவர் பொசசிவ்னெஸ் தான் . ஒரு கட்டத்தில்  நாயகனின் அன்புத்தொல்லை தாங்காமல்  நாயகி-பிரேக்கப்  சொல்லிவிட்டு  வெளிநாடு போகிறாள் .அங்கே  ஒரு கொலைக்கேஸில்  மாட்டிக்கொள்கிறாள் .இந்த விஷயம் நாயகனுக்குத்தெரிந்ததும் நாயகி இருக்கும் நாட்டுக்கு வந்து அந்தக்கேஸை  டீல் செய்து  நாயகியை எப்படிக்காப்பாற்றுகிறான் என்பது மீதிக்கதை 

 நாயகன்   ஆக -புதுமுகம் ஆகாஷ் முரளி . அறிமுகம் ஆன முதல் படத்திலேயே  காதல் , ஆக்சன் , பைட்  என அசத்தி இருக்கிறார் , நல்ல எதிர் காலம் உண்டு . ஆனால்  இவர் எதனால் -பிச்சைக்காரன்  போல  தாடியுடன்  அலைகிறார்? என்பது தெரியவில்லை 


நாயகி ஆக  அதிதி  ஷங்கர் . மேடையில்  செய்வது போல  இவர் மொக்கை  ஜோக் எதுவும் அடிக்காமல்  இருப்பது ஆறுதல் . அழகான  முகம் , உணர்ச்சிகரமான நடிப்பு , இளமைத்துள்ளல்  என ஒரு நாயகிக்கு  உரிய அனைத்து அம்சங்களும் உண்டு 


சரத் குமார் , குஷ்பூ  இருவரும்   கெஸ்ட் ரோல் தான் என்றாலும்  உணர்ச்சிகரமான நடிப்பு . குறிப்பாக குஷ்பூ கலக்கல் .கடலோரக்கவிதைகள் ராஜா  தான் வில்லன் என்றால்  அந்த  ராஜாவே நம்ப மாடடார் ..ஆடியன்ஸ்   எப்படி நம்புவார்கள் ?என்று இயக்குனர்  நினைத்திருக்க வேண்டும், அதனால் க்ளைமாக்சில் ஒரு டிவிஸ்ட் வைத்தருக்கிறார் 


நாயகியின்  வக்கீல் ஆக கல்கி கோச்லின்  கச்சிதமாக நடித்திருக்கிறார் 


யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில்  5 பாடல்கள் .அவற்றில் 3    அருமை .பின்னணி இசை  வழக்கம் போல கலக்கல் .ஸ்ரீகர்  பிரசாத்தின் எடிட்டிங்கில் படம்  146  நிமிடங்கள்  ஓடுகின் றது ,கேமரூன் எரிக் பிஸ்மென்  தான் ஒளிப்பதிவு .போர்ச்சுகல்  பகுதியின்  அழகைக் கண்  முன் கொண்டு வருகிறார் .நீலன் சேகர்  உடன் இணைந்து  திரைக்கதை  எழுதி  தனியாக இயக்கி இருக்கிறார் விஷ்ணு வர்தன் 

சபாஷ்  டைரக்டர்


  1  நான் - லீனியர்  கட்டில்  திரைக்கதை  அமைத்து  நாயகன் - நாயகி காதல்  போர்சன்,  நிகழ் கால  க்ரைம்  கதை என்று  மாற்றி மாற்றிக் காட்டிய விதம்  குட் 


2   வெளிப்புறப்படப்பிடிப்பை  லைவ் லொக்கேஷனில் நடத்தி  சுவராஸ்யம் கூட்டிய விதம் 


3     பாடல்களைப் படம்  ஆக்கிய விதம் , பிஜிஎம் ,, ஒளிப்பதிவு  போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் தரம் 

செம  ஹிட்  சாங்க்ஸ்

1  யார்ரா இவ? 


2   சோலோ வயலின் நீதான் செம பீலிங்க் 


3 சொல் , நீ   சொல்  , மனதுக்குள்  மறுபடி வருவாயா? 


4  உடைந்த  மனசு திரும்பக்கிடைக்குமா? 

  ரசித்த  வசனங்கள் 

1  இந்த உலகத்தில் யாருமே  இல்லாதவங்க என யாருமே  இல்ல


2     சில பொண்ணுங்களைப்பார்க்கும்போது சின்னதா ஒரு மணி அடிக்கும், ஆனா  உன்னைப்பார்த்தப்ப பெரிய மணி அடிச்சது 


3  நீ இப்போ எப்படி இருக்கியா அதே மாதிரி எப்பவும் இருப்பியா? 


4  காலில்  கட்டிய கல் மாதிரி  எப்பவும் என் கூடவே இருக்கே . எனக்குக் கொஞ்சம் ஸ்பேஸ் வேண்டும் 


5   எந்தப்பிரச்சனைக்காக நீங்க பிரிய முடிவு எடுத்தீங்களோ அதே ;பிரச்சனை ஒரு நாள் இல்லாமயே போகலாம் 


6  மகனைப்பிரிந்த ஒரு அம்மாவின் வலி அபாயகரமானது 


7    அவன் "கேட்"டுக்கிடத்தே தான் இருக்கான்,இதைக்கேட்டுக்கிட்டு தான் இருக்கான் 


8  உன்னை விட்டுட்டுப்போனப்புறம் தான் நிறைய விஷயங்கள் எனக்குப்புரிய ஆரம்பித்தது 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1  வில்லனின்  மகன்  ஒரு ஹோமோ  என்பதும்  அது சம்பந்தமான காட் சிகளும்  தேவையற்றவை .


2 பாஸ்போர்ட், விசா  எல்லாம் ரெடி பண்ணாம   டி வி  நியூஸ் -பார்த்த அடுத்த நிமிடமே  நாயகன் பாரீன் பயணம் செய்வது எப்படி ? 


3   நாயகன்  க்ளைமாக்சில்  ஒரு ஸ்கூல்  பஸ்ஸை  கிட் னாப்  செய்து  மிரட்டி  காரியம் சாதிப்பது நம்ப முடியாத காதில் பூ 


4  சிறையில்  நடந்த  சண்டையில்  நாயகிக்கு வயிற்றில் கத்திக்குத்து  விழுகிறது . ஆனால் நாயகி கழுத்தில்  பேண்டேஜ் போட்டிருக்கிறார் 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பெண்ணுக்கு அவசர புத்தி , ஆணுக்கு  உண்மை-யான காதலுக்காக உயிரையும் பணயம் வைக்கும் தியாக -புத்தி   என  சொன்ன கருத்துக்காக  படம் பார்க்கலாம் . விகடன்  மார்க் - 4-0 .ரேட்டிங்  2.75 / 5 


Nesippaya
Theatrical release poster
Directed byVishnuvardhan
Written byVishnuvardhan
Neelan Sekar
Produced byS. Xavier Britto
Sneha Britto
Starring
CinematographyCameron Eric Bryson
Edited byA. Sreekar Prasad
Music byYuvan Shankar Raja
Production
company
XB Film Creators
Distributed byRomeo Pictures
Release date
  • 14 January 2025
Running time
146 minutes
CountryIndia
LanguageTamil

Thursday, January 16, 2025

காதலிக்க நேரமில்லை (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா)

                            


கிருத்திகாஉதயநிதி -   சிவா  நடிப்பில் இவரது இயக்கத்தில் வந்த  முதல் படமான  வணக்கம்  சென்னை (2013) ரொமாண்டிக் காமெடி டிராமாவாக  நன்றாக  இருந்தது .இரண்டாவது  படமாக  விஜய் ஆண்ட னி நடிப்பில் வெளிவந்த  காளி (2018)  ஓடவில்லை .மூன்றாவது  படைப்பு  படம் அல்ல, வெப் சீ ரிஸ் . ஜீ  5 ல்  வெளியான  பேப்பர் ராக்கட்  நல்ல  வரவேற்பைப்பெற்றது . நான்காவது  படம்  எப்படி  வந்துள்ளது  எனப்பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  முற்போக்குவாதி ,, சரக்கு , தம்  எல்லாப்பழக்கங்களும் உண்டு   நான்கு வருடங்களாக ஒருவனைக்காதலிக்கிறாள் . தன் பெற்றோரிடம் சொல்லி  திருமணம்  நிச்சயம் செய்தாகி விட்ட்து .விரைவி.ல்  காதலனுடன் திருமணம்  நடக்க இருக்கும் சூழலில்  தன காதலன்  குடி இருக்கும் அபார்ட்மெண்டுக்கு சர்ப் பரைஸ் விசிட் அடிக்கிறாள் .அங்கே  காதலன்  வேறு ஒரு பெண்ணுடன்  குடும்பம்  நடத்திக்கொண்டு  இருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சி  ஆகி ;பிரேக்கப் செய்கிறாள் .ஆண்  துணை இல்லாமல்  குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்கிறாள் 


நாயகன்  ஒரு ஜாலி டைப் . காதலி உண்டு . திருமணம்  செய்ய  இருக்கிறார்கள் . ஆனால்  ஜாலியா  வாழ்ந்தாப்போதும் , குழ்ந்தை  குட்டி  எல்லாம் வேண்டாம், சிக்கல் என நினைக்கிறான் . ஒரு கட்டத்தில்  தன நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  ஸ்பெர்ம்  பேங்க்கில்  ஸ்பெர்ம்  டொனேசன் செய்கிறான் . இது காதலிக்குப்பிடிக்கவில்லை . குழ்ந்தை  வேண்டாம் என  சொல்லி விட்டு  ஊருக்கு   குழந்தை கொடுக்கலாமா? என்பது அவள் கேள்வி . இந்தக்காதலும் பிரேக்கப் ஆகிறது 



நாயகனின் உயிர் அணு  நாயகியின் வயிற்றில் கருவாக உருவாகி வளர்கிறது . இந்த விஷயம்  தெரியாமலேயே  இவர்கள் சந்திப்பு நடக்கிறது . நாயகனுக்கு  நாயகி மீது  காதல் . அதை முறையாக வெளிப்படுத்தவில்லை .நாயகிக்குக் குழந்தை  பிறக்கிறது . எட்டு வருடங்கள் இடைவெளிக்குப்பின் நாயகன் - நாயகி சந்திப்பு மீண்டும் நிகழுகிறது .நாயகனின் முன்னாள் காதலி தேடி வருகிறாள் . இதற்குப்பின் நடந்தது என்ன? நாயகன் - நாயகி சேர்ந்தார்களா? என்பது மீதி திரைக்கதை 


நாயகன்   ஆக  ஜெயம்  ரவி . அழுத்தமான நடிப்பு .அமைதியாக  வந்து போகிறார் .இவர் தன் பெயரை மாற்றிக்கொண்டார் .ஆனாலும்  மக்கள்  பார்வையில்  இன்னமும்   ஜெயம் ரவி தான் . டி ராஜேந்தர்   ஒரு கால கட்டத்தில்  தனது  பெயரை  விஜய  டி ராஜேந்தர்  என  மாற்றிக்கொண்டார்  , ஆனாலும்   மக்கள்   அவரை  டி ராஜேந்தர்  ஆகவே   பார்த்தார்கள் .சமீப காலமாக  இவர் படங்கள்   ஓடவில்லை . இது ஓரளவு   கை கொடுக்கலாம் 

 நாயகி ஆக நித்யாமேனன்   அசத்தி  இருக்கிறார் .பார்வையாலேயே  நடிப்பை  அள்ளி  வழங்குகிறார் . நாயகனின் காதலி ஆக டி ஜெ   பானு  அழகாக  வந்து போகிறார் . நாயகனுக்கும்  , பானு வுக்கும்  ஒர்க் அவுட் ஆன  கெமிஸ்ட்ரி  நித்யா மேனன்  உடன் ஒர்க் அவுட் ஆக வில்லை 

நாயகனின் நண்பர்கள் ஆக  வினய் , யோகிபாபு  இருவரும்  சும்மா   வந்து போகிறார்கள் . யோகிபாபு வேஸ்ட் .
நாயகியின்  அம்மா, அப்பாவாக   வரும் லட் சுமி ராமகிருஷ்ணன் + மனோ  இருவரது நடிப்பும் நிறைவு .நாயகியின் 8 வயது மகனாக  வரும் ரோஹன் சிங்க்  நல்ல  நடிப்பு 

இசை ஏ ஆர்   ரஹ்மான் .பாடல்கள்  அருமை .பின்னணி இசையில்  கலக்கி இருக்கிறார் . கேவ்மிக்  ஏரியின் ஒளிப்பதிவில்   நாயகிகள் இருவரின்  க்ளோசப் காட் சிகள்   செம 


சபாஷ்  டைரக்டர்

1   ஒளிப்பதிவும் ,இசையும் , ஒரு ரொமாண்டிக்  சப்ஜெக்ட்டுக்கு ரொம்ப  முக்கியம் என்பதை உணர்ந்து  டெக்னீஷியன்களிடம் வேலை வாங்கிய விதம் 


2   நாயகன் , நாயகி ,  நாயகனின் காதலி   மூவர் நடிப்பும் உயிரோடடம் 


3   பின் பாதியில்   நாயகன் - நாயகி தான் சேரப்போகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந் தாலும்   எப்படி  இணைவார்கள் என்பதை எதிர்பார்க்க வைத்த விதம் 


  ரசித்த  வசனங்கள் 

1   இங்கே  பாருடி , மேரேஜ்க்கு  முன் அவனை வெளி லபோய் மீட் பண்ணுவது எனக்குப்பிடிக்கலை 


அம்மா, 4  வருடங்கள்  முன் வெளில  போய் அவனை மீட்  பண்ணினதால்தான் இப்போ மேரேஜ் வரை வந்திருக்கு 


2   அம்மா,   நான் இன்னும் வெர்ஜின் என நினைத்துக்கொண்டு இருக்கிறாயா? எப்போவோ  என்  கற்பு  போயிடுச்சு 


3 லவ்   பெயிலியர் ஆன ஆண்கள்   தம் அடிப்பாங்க  இல்லையா? அதான் நானும் ட்ரை பண்ணிப்பார்த்தேன் . ஆனா  நல்லால்லை 


 ஏன்னா   நீ  தம் அடித்த விதமே   தப்பு 


 ஓஹோ , அது தப்புன்னு உனக்கு எப்படி  தெரியும் ? 


அது வந்து ..... 


4    சாரி   டியர்   தெரியாம  தப்பு  நடந்திடுச்சு 

 எப்படி ? அவ தடுக்கி விழுந்து   உன் பெட்ல   விழுந்துட் டாளா? 


5   இங்கே  சாப்பிட   என்ன   நல்லாருக்கும் ?


  என் வீட்டில் இதை   விட   நல்;லாருக்கும் 


 இதுதான்   பெங்களூரில்  பிக்கப் லைனா? 


6  அம்மா  , டெஸ்ட்   ட்யூப்  பேபின்னா   என்ன? 


 சூப்பர் ஹீரோஸ்  தான்   டெஸ்ட்   ட்யூப்  பேபி  ஆக  வருகிறார்கள் 


7 எல்லாரையும்   திருப்திப்படுத்த  முடியாது 


8  உன் இதயத்துக்கு நீ உண்மையாக  இரு  


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகன் , நாயகனின்  இரு நண்பர்கள்  , நாயகி , நாயகியின் மூன்று  தோழிகள் , நாயகனின் முன்னாள் காதலி ,   நாயகியின் முதல் காதலன்   இப்படத்தில் வரும் அனைத்துக்கேரக்டர் களும்   தண்ணி  , தம் அடிக்கறாங்க . எதனால் ?  யோகா   செய்பவர்களாக ,ஜிம் போகிறவர்களாக   நல்ல விதமாக்காட்டிடலாமே? 


2   நாயகனின்   நண்பனாகவரும் வினய்  ஒரு கே  கேரக்ட்டர்   என்பதற்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் ? 


3  மவுன  கீதங்கள்  படத்தில்   நாயகன் -  மகன்   பாண்டிங்   போல  இதில்  சரியாக ஆடியன்சுக்குக்கனெக்ட் ஆகவில்லை 


4   நாயகியின் மகன்   காணாமல்   போகிறான் என்பது முதல் முறை அதிர்ச்சி , இரண்டாம் முறையும்  அப்படி ஆவது அயர்ச்சி 


5  நாயகியின் மகன்   காணாமல்  போனதும்   நாயகியை விட   அவள்  தோழி தான் அதிக அதிர்ச்சி  காட்டுகிறாள் . தேவர்  மகன் சூட்டிங்க்  டைமில்   சங்கிலி   முருகன் + வடிவேல்  போர்சனை   தூக்கியதை  மேடையில் வடிவேலு சொன்ன சீன்  தான் நினைவு வருகிறது 


6    திரைக்கதை   ரொம்பவே   மெதுவாக   நகர்கிறது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U /A 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் காதலிக்க நேரமில்லை (2025) =50% The Switch (2010) + 50% Miss shetty Mr Pohlishetty (தெலுங்கு) -இயக்குனர் கிருத்திகா உதயநிதியும் அட்லீ ரசிகைபோல .ஒளிப்பதிவு + ஏ ஆர் ஆர் இசை கலக்கல் ரகம்.மெதுவாக நகரும் திரைக்கதை.ஏ செண்ட்டரில் ஓடலாம். ஜெயம். ரவி + நித்யா மேனன் நடிப்பு குட்.ஆனால் ஜோடிப்பொருத்தம் இல்லை. விகடன் 42.ரேட்டிங் .2.75. /5



Wednesday, January 15, 2025

SANKRANTHIKI VASTHUNAM(2025)-சங்கராந்திகி வஸ்துனம்-(தெலுங்கு)- சினிமா விமர்சனம் ( கிட்னாப் காமெடி ட்ராமா)

                   


        SANKRANTHIKI VASTHUNAM(20025)-சங்கராந்திகி வஸ்துனம்-(தெலுங்கு)- சினிமா விமர்சனம் ( கிட்னாப் காமெடி ட்ராமா)


இயக்குனர் அனில்ரவிபுடி + விக்டரி வெங்கடேஷ் காம்போ மூன்றாம் முறையாக ஹிட் அடித்திருக்கிறது.F1  &  F2 ஆகிய இரு படஙகளும் ஆல்ரெடி ஹிட்.இதுவும் ஹிட் ஆனதால் இது ஹாட்ரிக் ஹிட்.குடும்பத்துடன் பார்க்கத்தகுதியான கண்ணியமான காமெடி டிராமா இது


ஸ்பாய்லர்  அலெர்ட்


உலகின் மிகப்பெரிய கம்பெனியின் சி இ ஓ வை வில்லன் கடத்தி வைத்துக்கொண்டு அவனது கேங் ஆளை ரிலீஸ் செய்தால்தான். எக்சேஞச் ஆபர் முறையில் இவரை ரிலீஸ் செய்வேன் என்கிறான்.


போலீஸ் ஆபீசர் மீனாட்சி ஒரு ஐடியா தருகிறாள்.என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன ஹீரோ பேரை சொல்லி அவர் ட்யூட்டியில் ஜாயின் பண்ணினால் போதும்.ஊதித்தள்ளி விடுவார். என்கிறார்


ஹீரோவும் ,மீனாட்சியும் ஒரு காலத்தில். லவ்வர்ஸ்.இப்போது பிரேக்கப்பில் பிரிந்திருக்கிறார்கள்.ஹீரோவுக்கு   வேறு. ஒரு பெண்ணுடன் மணம் ஆகி விட்டது.மனைவி ஒரு சந்தேகப்பிராணி


ஹீரோ கிட்னாப் மீட்புப்படலத்தில் இறஙக முற்படுகையில் மனைவி தானும் கூட வருவேன். என்கிறாள்.முன்னாள் காதலி ,இன்னாள் மனைவி இருவரையும் ஹீரோ எப்படி சமாளிக்கிறார். என்ற காமெடி போர்சன் முதல் பாதியில்.


வில்லனின் ஆளை ஹீரோவின் மனைவி கை தவறி மலை உச்சியில் இருந்து தள்ளி விட அவன் இறந்து விடுகிறான்.அந்த விஷயம் வில்லனுக்குத்தெரியாது.இறந்த அவன் பிணத்தை வைத்து உயிர் உள்ள ஆள் போல் செட்டப் செய்து. டிராமா போடும் காமெடி பின் பாதியில்


ஹீரோவாக வெங்கடேஷ்.அசால்ட் ஆக நடித்திருகிறார்.பேமிலி ஆடியன்சைக்கவரும் வகையில் காமெடி செய்வது. அவருக்குக்கை வந்த கலை.கெட்டப்பில். ஜெயிலர். ரஜினி ,இது ஜோடி காமெடியில் வீரா ரஜிநி. உதவி இருக்கிறார்


ஹீரோயின் ஆக மனைவி ஆக ஐஸ்வர்யா ராஜேஷ் குட் ஆக்டிங.இன்னொரு ஹீரோயின் ஆக மீனாட்சி சவுத்.ரி கிளாமருடன். கூடிய காமெடி ஆக்டிங.காமெடி செய்வது இவருக்கு இதுதான் முதல் முறை .சமாளிக்கிறார்

சாய்குமார்,விஜய் கிருஷ்ணா,நரேன் உட்பட. அனைவரது நடிப்பும் அருமை..


இசை. பீம்ஸ் செசிரேலியா.கலக்கலான 3 பாட்டுக்கள் ஆல்ரெடி ஹிட்..பிஜி எம் ஆல்சோ குட்.சமீர் ரெட்டியின் ஒளிப்பதிவு கலர்புல்கலக்கல்.137 நிமிடங்கள். படம் ஓடுகிறது.ஒரு சீன் கூட போர் அடிக்கவில்லை



சபாஷ்  டைரக்டர்

1 மெயின் கதைக்குள் போகும் முன் இடைவேளை வந்து விடுகிறது.டைம் பாஸ் காமெடி குட்

2 சக்களத்தி  சண்டைகாமெடி என்றும் அலுக்காது


3. மகளிர் மட்டும் ,மதகஜராகஜா உட்பட பல படஙகளில் ஹிட் அடித்த. டெட் பாடி காமெடி. இதிலும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது

4. க்ளைமாக்ஸ்க்கு முன் வரும் அந்தப்பொஙகல் குத்தாட்டம் கலக்கல் ரகம்



  ரசித்த  வசனங்கள் 

1. பொண்ணுங்க ம்க்கும் என இழுத்தால் வான்னு அர்த்தம்


2. ஓடி டி வெப்சீரிஸ் பார்த்து அவன் எல்லாக்கெட்ட வார்த்தைகளையும் கத்துக்கிட்டான்


3. சும்மா சாதா இருமல் வந்த மாதிரி நடிச்சுக்காட்டுன்னா இவன். லங்க்ஸ் கேன்சர். பேஷண்ட் போல ஓவர் ஆக்டிங்க் பண்றான்


4. ஜோக்கர் ஆக விருப்பம். இல்லாமல். ஹீரோ ஆக முடிவெடுத்தேன்


5. பேரென்ன?


மீனாட்சி


ஏதோ ஒரு பட்சி


6. வாட் த ஹெல்?


என்னது? ஹால்லயே ரெண்டு பேரும். ரூம். புக் பண்ணிட்டீஙகளா?


7 டவுட் எனக்கு டெட் உன்க்கு


8.  ஐ எக்ஸ்பர்ட் பாலொ மீ ஹவ் ஐ ஸ்டேண்ட் ஹவ். ஐ சிட்?


9. பிளான் சி ஆக்டிவேட்டட்.சி பார் கேட்


10 உன். பாடி. இருக்கும் கண்டிசநுக்கு குத்தாட்டம் தேவையா?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


நோ லாஜிக்ஸ்.  ஒன்லி எஞ்சாய் காமெடி மேஜிக்



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மனம் விட்டு சிரிக்க வைக்கும் காமெடி ட்ராமா.ரேட்டிங். 3. /5

Tuesday, January 14, 2025

JUROR#2(2024)-- ஆங்கிலம் - சினிமா விமர்சனம்(கோர்ட் ரூம் ட்ராமா)@அமேசான் பிரைம்

       


                    

JUROR#2(2024)- ஆங்கிலம் - சினிமா விமர்சனம்(கோர்ட் ரூம் ட்ராமா)@அமேசான் பிரைம்

27/10/24 அன்று ஹாலிவுட்டில் ரிலீஸ். ஆன இப்படம். இப்போது அமேசான் பிரைம் ஓடிடி யில் காணக்கிடைக்கிறது.தமிழ் டப்பிங். இல்லை.ஆங்கில சப் டைட்டில் உண்டு.


ஜிகிர்தண்டா படத்தில் ஹாலிவுட் இயக்குனர். க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பற்றிக்குறிப்பிட்டு. இருப்பார்கள்.94 வயதான் இவர் கடந்த 55 வருடங்களாக சளைக்காமல் படஙகளை இயக்கி வருகிறார்.இவரது மைல்  கல் படம் Richard Jewell (2019).இவரது படங்கள் க்ரைம் திரில்லர் ஆக இருக்கும்.ஆனால் மெலோ டிராமாவாக ஸ்லோவாகத்தான் திரைக்கதை நகரும்


இந்தப்படம் பரபரப்பாக ஓடாது.மெலோ டிராமாதான்.படம் பூரா பேசிக்கிட்டே இருப்பாஙக.பொறுமைசாலிகளால் மட்டுமே பார்க்க முடியும்.12 AngryMen(1957) படத்தின் திரைக்கதை பாணியில். இதுவும் இருக்கும்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு சரக்கு சங்கரலிங்கம்.எப்போப்பாரு தண்ணிதான்.நாயகியுடனான காதலுக்கு ப்பின். திருந்தி வாழ்கிறான்.நாயகி இப்போது. நிறைமாத கர்ப்பிணி.


ஒரு கேசில் 20 பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவில் ஜூரி நெம்பர் 2 ஆக ஆகும் வாய்ப்பு. நாயகனுக்குக்கிடைக்கிறது(,பாரினில். பொதுமக்களுக்கும் ஜூரி ஆகும் வாய்ப்பு வழங்க ப்படும்.)


கேஸ் விபரம்.ஒரு வருடத்துக்கு முன் நடந்த சம்பவம்.ஒரு பாரில் காதல் ஜோடி சரக்கு அடிக்கறாஙக.ஒரு விவாதத்தில் காதலன் காதலி தலையில் பீர் பாட்டிலால் அடித்து விடுகிறான்.காதலி கோபித்துக்கொண்டு கிளம்புகிறாள்.காதலன் அவளது பின்னால் துரத்திக்கொண்டே வருகிறான்.வெளியே மழை.காதலி காதலனிடம் இனி என் பின்னால் வராதே .பிரேக்கப் தான் என சொல்லி விட்டு செல்கிறாள்.இந்த சம்பவத்தை பலரும் செல் போனில் படம் பிடிக்கிறார்கள்.அந்த வீடியோ வைரல் ஆகிறது.


அந்தக்காதலி அடுத்த நாள் காலை அதே ஏரியாவில் தலையில் அடிபட்ட நிலையில் காயங்களுடன் பிணமாகக்கிடக்கிறாள்.போலீஸ் காதலனைக்கைது செய்கிறது.ஒரு வருடமாக நடந்த இந்தக்கேஸ் இப்போது தீர்ப்பு வரும் நிலை


இப்போது நாயகனுக்கு நினைவு வருகிறது.ஒரு வருடத்துக்கு முன் தண்ணி அடித்து விட்டு மப்பில் நாயகன் தான் அந்தப்பெண்ணைக்காரில் மோதியது


இப்போது உண்மையைக்கோர்ட்டில். சொன்னால் நாயகனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும்.சொல்லவில்லை எனில் அந்த அப்பாவிக்காதலனுக்கு தண்டனை கிடைக்கும்.நாயகன் என்ன முடிவு எடுத்தான்? என்பது க்ளைமாக்ஸ்


நாயகன் ஆக. நிக்கோலஸ் ஹோல்ட்,அவரது மனைவி ஆக சோயி டோக் ,வக்கீல் ஆக டோனி  காலட் நடித்திருக்கிறார்கள்.


40 நிமிடங்களில் சொல்ல வேண்டிய கதையை ஜவ்வாய் இழுத்து 2 மணி நேரம் பண்ணி விட்டார்கள்


சபாஷ்  டைரக்டர்

1. நாயகன் , மனைவி , வக்கீல் மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பு அருமை


2 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்


  ரசித்த  வசனங்கள் 


1 பதிவாகும் க்ரைம் கேஸ்களில் 32℅ டொமெஸ்டிக் வயலன்ஸ் கேஸ்கள்தான்


2.  ஒரு தரப்பின் நட்டம் இன்னொரு தரப்பின் லாபம்


3.  எப்போதும் உன் கட்சை. நம்பு


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  முக்கியமான ஏரியாவில் சிசிடிவி இல்லாதது எப்படி?


2 கொலையை நேரில் பார்த்த சாட்சி இல்லை.கொலை செய்யப்பயன்படுத்திய ஆயுதம் கைப்பற்றப்படவில்லை


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ரொம்பப்பொறுமை வேண்டும்.பெண்கள் பார்க்கலாம்.ரேட்டிங் 2.5 /5

Monday, January 13, 2025

மதகஜராஜா (2025)- தமிழ் - சினிமா விமர்சனம் (காமெடி கிளாமர் மசாலா)

           


         மதகஜராஜா (2025)- தமிழ் - சினிமா விமர்சனம் (காமெடி கிளாமர் மசாலா)


படம் பார்த்த ரசிகர்களின் ஆரவாரமான கை தட்டலில் பாதி வசனங்கள் காதில் விழவே இல்லை.ஆனாலும் அனைவரும் கொண்டாட்டமாக வீடு திரும்புகிறார்கள்.பிரம்மாண்டமாக செலவு செய்து டப்பாப்படங்களை இயக்குபவர்கள், ஜாதி வெறிப்படங்களைத்தருபவர்கள்,வேண்டும் என்றே சோகத்தை வலுக்கட்டாயமாகத்திணிப்பவர்களுக்கு  இந்தப்படத்தின் வெற்றி ஒரு பாடம்.அதே சமயம் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்கும் சந்தாநத்தை      ஒரு நொடியாவது யோசிக்க வைக்கும் படம் இது


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு போலீஸ் ஆபீசரின் மகன்.ஒரு கேஸ் விஷயமாக ஒரு டுபாக்கூர் ரவுடியைத்தன் வீட்டில் தங்க வைக்க வேண்டிய சூழல் .அந்த ரவுடியின் மகளும் தங்குகிறாள்.நாயகன் ,நாயகி காதல் மலர இந்த ஒரு சிச்சுவேஷன் போதாதா?

நாயகன் தன் நண்பர்கள் நால்வருடன் ஸ்கூல் மாஸ்டரின் மகள் திருமண நிகழ்வுக்குப்போகிறார்.அங்கே நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் முதல் பாதிக்கதை.


நண்பர்கள் இருவர் வில்லனால் பாதிக்கப்படுகிறார்கள்.நாயகன் வில்லனை எப்படி முறியடிக்கிறார்? என்பது பின் பாதி காமெடிக்கதை.கூடவே இரு நாயகிகளின் கிளாமரும் உண்டு.மருந்துக்குக்கூட சோகக்காட்சிகளே இல்லை.

நாயகன் ஆக விஷால் ஜாலியாக. நடித்திருக்கிறார்.க்ளைமாக்சில் வில்லனுடன் போடும் சோலோ பைட்டில் எய்ட் பேக்ஸ் ஜிம் பாடி காட்டுகிறார்


இரண்டாவது நாயகன் ஆக காமெடி கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் சந்தானம்.டைவர்ஸ் கேட்கும் மனைவி,ஆகாவளி மாமியார் இவர்களுடன் அடிக்கும் லூட்டி கல கல


நாயகிகள் ஆக  அஞ்சலி,வரலட்சுமி என இருவர் .அருமையான கிளாமர்.

மகளிர் மட்டும் நாகேஷ் டெட்பாடிக்காமெடி டிராக் போல இதிலும் மனோபாலா காமெடி இருக்கு.செம.


மணிவண்ணன் நடிப்பும் அருமை.வில்லன் ஆக சோனு சூட் குட்.


திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்  சுந்தர் சி.

விஜய் ஆண்ட்டனியின் இசையில் ஆல்ரெடி 3 பாடல்கள் மெகா ஹிட்.  ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு கண்களுக்குக்குளுமை.136 நிமிடங்கள் டைம் ட்யூரேசன்.


சபாஷ்  டைரக்டர்

1.  விஷால் ,அஞ்சலி காதல் மலரும் ஓப்பனிங சீன்

2. சந்தானம் ,அவர் சம்சாரம்,மாமியார் காமெடி டிராக் குட்

3. கிணற்றுக்குள் விஷால்,அஞ்சலி,வரு மூவரும் விழும் காட்சி அழகு அதன் பின். வரும் காமெடி டிராக் செம

4. மனோபாலா டெட் பாடி காமெடி டிராக்

5 சந்தாநத்தின். ஒன் லைனர் காமெடிக்கலக்கள்கள் 38



செம  ஹிட்  சாங்க்ஸ்

1.சற்று முன் இருந்த என்னில் உன்னைக்கண்ட பின்

2  சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு வண்டி

3'டியர் லவ்வரு. டியர் லவ்வரு நீ ஒரு


  ரசித்த  வசனங்கள் 

1 வாழ்க்கைல எதை ஜெயிக்கிறோம்கறது முக்கியம் இல்லை.எதுல ஜெயிச்சு வாழ்க்கையை ஜெயிக்கிறோம்கறதுதான் முக்கியம்

2. எவ்ளோ அழகாப்பேசி அக்யூஸ்ட் பொண்ண. நைசா அவனோட வீட்டுக்குத்தள்ளிட்டுப்போறான் பார்த்தியா?


3  ஒத்தப்பெண்ணைக்காப்பாத்திட்டு எம் ஜி ஆர்ஙகறியே?அப்போ நான் யாரு?சரோஜா தேவியா!?


4  கட்டுன பொண்டாட்டியை வாடி போடிநு. கூப்பிடாம. வதஙகுன கோழின்னா கூப்பிடுவாங்க?

5. அடல்ட்ஸ் ஒன்லி சாமியாரும் ,அடஙகாத மாமியாரும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை


6. முன்னே பின்னே நீ பொண்ணுங்களைப்பார்த்ததே இல்லையா?

முன்னே பார்த்தாச்சு.பின்னே இன்னும். பார்க்கலை


7 உன் மச்சினியை நான் சைட். அடிச்சுக்கறேன்.என் மாமியாரை நீ  பார்த்துக்க


8.   உங்களை. எல்லாம் குழந்தையா. இருந்தப்போ பார்த்தது.இப்போ உங்க கால குழந்தை

என்ன பண்றது? மேரேஜ் மட்டும்தான் பெரியவஙக பண்ணி வைக்கறாங்க.மத்ததெல்லாம் தானா நடந்துடுது.

9 கட்ன பெண்டாட்டி யை க்கை நீட்டி அடிக்கலாமா?

இதுக்காகக்கராத்தே கத்துக்கிட்டு வந்து கால் நீட்டி உதைக்க முடியுமா!?


10. கல்யாண வீட்டில். சாவு விழுந்தா. மேரேஜ் நின்னுடுமா? இது தான் சாக்குனு மாம்யாரைக்காலி பண்ணிடலாமா?


11. பாடில பல வகை இருக்கு.அவனுது. பைட் பண்ற. பாடி.என்னுது ரொமான்ஸ் பாடி.வேனும்னா உன். பொண்ணைக்கேட்டுப்பாரு

.12   ஆயிரம் தான் இருந்தாலும் உன் சம்சாரம் சப்பை பிகருதான்


டேய்


பிரண்ட். சம்சாரத்தை ரசிச்சாதான் தப்பு.திட்டுனா. தப்பில்ல


13  நம்மால முடியுமா? என நினைப்பதை விட நம்னால முடியலைனா. வேற

யாரால். முடியும்னு நினைப்போம்


14.  சென்னை ல பாதிப்பேரு வாழ்க்கையைத்தொலைத்தவர்கள்.மீதிப்பேரு நிம்மதியை. தொலைத்தவர்கள்


15. வேண்டும் என சொல்லும். பெண்ணை விட நம்மை வேண்டாம்னு சொல்ற பொண்ணுதான் சீக்கிரம் கிடைக்கும்


16 நல்ல. நேரம். பார்த்தாச்சா?


உலகம். சுற்றும். வாலிபன் கூடப்பாத்தாச்சி


17  கம்முனு. இருந்த காலநில கும்முனு ஒரு. பிகரு


18 எத்தனை பசஙகளை. நாய் மாதிரி அலைய விட்டிருப்பா நாய் அவளைத்துரத்துனா என்ன ?


19 நான் பார்க்கத்தான் கோமாளி.நிஜத்துலபேமானி


20. கிணத்துல விழுந்துட்டேன்


அது எப்படி விழும்போது ரெண்டு பொண்ணுங்களையும் கூட்டிட்டுப்போய் விழுந்தே?


21.கயிறை எடுத்துப்போடு


நீ நூல் விடுவே.நான் கயிறு விடனுமா?


22 மேல யாரும் இல்ல


கீழே யும். யாரும். இல்லை


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


காமெடிப்படத்துல எதுக்கு லாஜிக் பார்க்கனும்?அஞ்சலி,வரலட்சுமியப்பார்க்கவே டைம் பத்தல




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மதகஜராஜா(2025)- தமிழ் -13 வருடங்களுக்கு முன் வர வேண்டிய படம்,லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக ஹிட் அடித்திருக்கிறது.முதல் பாதி சந்தானத்தின் கலக்கல் காமெடி +மனோபாலா,மணிவண்ணன் பிரமாதமான நடிப்பு+விஷாலின் எய்ட் பேக்ஸ் உழைப்பு ,பின் பாதி மாமூல் மசாலா.பி ,சி செண்ட்டர்களில் பின்னிப்பெடல் எடுக்கும்

விகடன் மார்க் 45. ரேட்டிங். 3.25. / 5