Monday, January 20, 2025

REKHA CHITHRAM (2025)- ,மலையாளம் -சினிமா விமர்சனம்- மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர்

         


    வெறும் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயார் ஆன லோ பட்ஜெட் படமான இது 9/1/2025. அன்று ரிலீஸ் ஆகி முதல் 10 நாட்களில் 46 கோடி ரூபாய் வசூலித்து ஹிட் அடித்துள்ளது.சாதாரண கதைதான்.அதிர்ஷ்டக்காற்று     அடித்ததில் இவ்ளோ பெரிய வெற்றி    


ஸ்பாய்லர்  அலெர்ட்

வேலைக்காரியா உள்ளே நுழைந்து எஜமானி அம்மாவைக்கைக்குள்ள போட்டுக்கிட்டு  தானே எஜமானியாக  ஆக முயன்றவர்கள் கதை நமக்குத்தெரியும்.அந்த மாதிரி. தான். படத்தின் வில்லியும்.பணிப்பெண்ணாக  ஒரு பெரிய இடத்தில் வேலை பார்ப்பவர். அங்கே பணம் திருடும் வில்லனைப்பார்த்து சிரிக்கிறாள்.இருவரும் திருட்டில் பார்ட்னர்.லைப் பார்ட்னர் ஆகி விடுகிறார்கள்


நாயகி ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்.சின்ன சின்ன ரோல்களில் நடிக்கும் துணை நடிகையான அவருக்கு மெயின் ஹீரோயின் ஆக ஆசை.ஷூட்டிங் ஸ்பாட் க்கு அருகே தான் வில்லி பணி புரியும் இடம் இருக்கிறது.அங்கே ஒரு நாள்வ்தஙக நாயகிக்கு சந்தர்ப்பம் அமைகிறது


நாயகன் ஒரு போலீஸ் ஆபீசர்.ட்யூட்டி டைமில்  சீட்டு ஆடினார் என சஸ்பென்ஸ் ஆனவர் ஒரு வித்தியாசமான கேஸ் அவர் கையில் கொடுக்கப்பட இன்வெஸ்டிகேசனை. ஆரம்பிக்கிறார்


ஒரு ஆள் சரக்கு அடித்த மப்பில் ஒரு வீடியோ காட்சி பதிவு செய்கிறார்.அதில் தானும் இன்னும் இரு ஆண்களும் இணைந்து இதே இடத்தில் ஒரு பெண்ணுடைய டெட் பாடியைப்புதைத்தோம் என. வாக்குமூலம் தந்து விட்டு ஆன் த ஸ்பாட் தற்கொலை செய்து கொள்கிறார்


அந்த இடத்தைத்தோண்டிப்பார்த்தபோது ஒரு பெண்ணின் மண்டை ஓடு கிடைக்கிறது.இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை.

கொலை நடந்தது.1985ல்.40 வருடங்கள் கழித்துத்தான். தெரிய வருகிறது.இந்த சிக்கலான கேசை நாயகன் டீல் செய்வதுதான் கதை


நாயகன் ஆக ஆசிப். அலி கச்சிதம்.அதீத நடிப்பில்லை.பில்டப் இல்லை.யதார்த்த நடிப்பு.

நாயகி   ஆக அனஸ்வரா ராஜன்.அப்பாவி முகம் ,அழகு ராணி.நல்ல நடிப்பு


வில்லன் ஆக மனோஜ் கே ஜெயன். வில்லி ஆக சலிமா செம ஆக்டிங.சித்திக் ,இந்திரன்ஸ் உட்பட அனைவர் நடிப்பும் கச்சிதம்


அப்பு. பிரபாகர் ஒளிப்பதிவு இதம்.சமேர் முகமது வின் எடிட்டிஙகில் படம் 137 நிமிடஙகள் ஓடுகிறது.இசை. முஜீப் மசித்.பிஜி எம் அருமை


ராமுசுனிலின் கதையை. வாங்கி அவர்உடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ஜாபின் டி சாக்கோ



  ரசித்த  வசனங்கள் 

1. பணம் சம்பாதிக்க துரத்திட்டே போய் வாழ்க்கையை இழந்தேன்


2. எல்லோருக்கும் மரணம் உண்டு.ஆனால்  மரணத்துக்காகக்காத்திருப்பது கொடுமை

3 உனக்கு. என உண்டான ஒரு ரோல் காலம் கடந்தாலும் யாராலும் தட்டிப்பறிக்க முடியாது

4 இதுவரை நாம. கண்டுபிடித்ததை அவஙக கொண்டு போயிருக்கலாம்.ஆனா இனி. நாம் கண்டுபிடிக்க இருப்பதை அவங்களால. அபகரிக்க முடியாது


5  நேற்று ஒரு படி முன்னேறினோம்.இன்று. இரு படிகள் பின்னேற்றம்




லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ஒரு சாதா திருட்டுக்கேசை தேவை 

இல்லாமல் கொலைக்கேசாக மாற்றும். வில்லி


2 கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் ஈசியா. அப்ரூவர் ஆவது




அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ரொம்ப ஸ்லோ மூவி.பெண்கள் பார்க்கலாம்.பெண்களைப்போல ப்பொறுமை உள்ள ஆண்கள் பார்க்கலாம்.ரேட்டிங் 2.5. /5

0 comments: