Sunday, January 19, 2025

EMERGENCY (2025) - ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ஹிஸ்டாரிக்கல் பயோபிக்சர் டிராமா )

   

                        

படம்  ரிலீஸ் ஆகும் முன்பே  ஏகப்பட்ட  சர்ச்சைகளை உருவாக்கிய படம் . காரணம்   கங்கனா  ரனாவத்  பாஜக  கட்சிக்காரர் , முன்னாள்  பிரதமர்  இந்திரா காந்தி  காங்கிரஸ்  காரர் . இவர் அவராக நடித்தால்  சரி வருமா?  என்று  பிரச்சனை கிளப்பினார்கள் .    சென்சார்  போர்டிலும்  பல  பிரச்சனைகள் .17/1/2025  முதல்  திரை  அரங்குகளில்  வெளியாகி ஓடுகிறது .60 கோடி   ரூபாய்  -பட்ஜெடடில்  எடுக்கப்பட் ட  இப்படம்  முதல் நாள் பாக்ஸ் ஆபீசில்   3  கோடி  ரூபாய்  வசூலித்து  இருக்கிறது .இது  கங்கனா  ரனாவத்  தின் சொந்தப்படம் . அவர் தான் தயாரிப்பாளர்  + நாயகி + இயக்குனர் + திரைக்கதை  மேற்பார்வை 

ஸ்பாய்லர்  அலெர்ட்

இது   இந்திரா காந்தியின் முழு வாழ்க்கை  வரலாறு அல்ல .  அவர் பிரதம  மந்திரியாக இருந்த போது  நடந்த  முக்கிய அரசியல் நிகழ்வுகளை மட்டும்  படம் பிடித்து இருக்கிறார்கள் ,இரண்டு  வரலாற்று  நூல்களால்  ஈர்க்கப்பட்டு , மூன்று திரைக்கதை  ஆசிரியர்களால்  வடிமைக்கப்பட்ட்து என சொல்லப்பட் டாலும்  டைட்டிலில்  திரைக்கதை  ரித்தீஷ் ஷா  என்றே  வருகிறது 


 இந்திய  சீனா போரின் போது அப்பாவுக்கும்  , மக்களுக்கும் நிகழ்ந்த  மனத்தாங்கல்கள்  காட் டப்படுகிறது எமர்ஜென்சி  எதனால்  அறிவிக்கப்பட்ட்து  என்பது  தெளிவாக விளக்கப்படவில்லை . ஆனால் அது மக்களுக்கு எந்த அளவு துன்பங்களை விளைவித்தது ? அதனால்  கட் சிக்கும், ஆட் சிக்கும் எப்படி கெ ட்ட பெயர் உருவானது என்பதை விலாவாரியாகக்காட்டுகிறார்கள் . முழுமையான  வரலாற்று நிகழ் வுகளின் தொகுப்பாக , தொடர்ச்சியாக   திரைக்கதை  அமைக்கப்பட வில்லை . சில  முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாக மட்டுமே காட்டப்படுகிறது மகன்  சஞ்ச்ய காந்தியின் தலையீடு  அதிகமாக இருந்தது  அவரால் தான்  எல்லா  கெட் ட பெயரும் என்பது மாதிரி   காட்டுகிறார்கள் 


கங்கனா  ரனாவத்   இந்திராகாந்தியாக  அசத்தி இருக்கிறார் .அவரது ஒப்பனை , உடல் மொழி , கண்பார்வை , அனைத்தும் அட் டகாசம் . தேசிய  விருது  பெறு ம் அளவுக்கு நிறைவான நடிப்பு .வேறு ஒருவரை அந்த கேரக்ட்டரில்  கற்பனை கூட பண்ணிப்பார்க்க முடியவில்லை . சஞ்சய்  காந்தியாக  விஷாக் நாயர்  செமையாக  நடித்து இருக்கிறார் , கிட் டத்தட் ட   வில்லன் ரோல் , ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆக  அனுபம் கேர்    தனது அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி  இருக்கிறார் , படத்தில்  பங்கேற்ற  அனைவருமே    உணர்ந்து நடித்திருக்கிறார்கள் 

பாடல்களுக்கு  ஆன இசையை ஜி வி பிரகாஷ் குமார் வழங்கி இருக்கிறார் , நான்கு பாடல்களுக்கு இ வரும் ஒரு பாடலுக்கு மட்டும்  அ ர்கோ என்பவரும் இசை அமைத்து இருக்கிறார்கள் .பின்னணி   இசையை  மூவர் வழங்கி இருக்கிறார்கள்.படத்திற்கு ஜீவனே   பின்னணி இசைதான்  

டெட்ஸோ நகாடா  என்பவர் தான் ஒளிப்பதிவு .நாயகிக்கு லைட்டிங்க்  அமை ப்பதில் சிறப்பான பணி செய்திருக்கிறார் . கலவரக்காட் சிகளை உயிரோட் டமாக படம் பிடித்து இருக்கிறார் 


ராமேஸ்வர்  எஸ்  பகத்  தின் எடிட்டிங்கில்  படம் 146 நிமிடங்கள் ஓடுகிறது . முதாழ் 50 நிமிடங்கள் மிக மெதுவான திரைக்கதை 

சபாஷ்  டைரக்டர்


1  முதல்  முக்கால் மணி நேரம்  வரலாற்று நிகழ்வுகளை  மிக மெதுவான திரைக்கதையால்  எனோதானோ   எனப்பார்த்துக்கொண்டிருந்த  ஆடியன்ஸை  எழுந்து நின்று  கை  தட்ட   வைத்தது  கோர்ட்டில்  இந்திராகாந்தி  கூண்டில்  சேர் போட்டு அமர்ந்து  விசாரணைக்கு பதில் சொல்லும் காட்சி . அந்த சீனில்  கங்கனா ரன்வத்தின் உடல் மொழி , நடிப்பு , நடை , பிஜிஎம்  அனைத்தும் கலக்கல் ரகம் 


2  இந்திராகாந்தி   க்கு   மன பதட் ட  நோய் , ஹாலுசினேஷன்  எல்லாம்  இருந்ததாக  பதிவு  செய்திருக்கிறார்கள் .இது இதுவரை  நான் படிக்காத   தகவல் .  கண்ணாடி  முன்  அவர் நிற்கும்போது  பிம்பமாகத்தோன்றும்  உருவம் கண்டு அவர் மிரள்வது  திகில் படத்துக்கு இணையான காட் சி 


3    சஞ்சய காந்தி -  இந்திராகாந்தி   உரையாடல்கள் , மோதல்கள்   அனைத்தும் அருமை . இருவருக்குமான பாண்டிங்க்  சிறப்பாக காட் டப்பட்டுள்ளது 

4  சஞ்சய்    காந்தியின் விமான விபத்தில் மரணம்  நிக ழ்ந்த  தருணம் ., இந்திராகாந்தி அவரது பாதுகாப்பு அதிகாரியாலேயே  கொலை செய்யப்பட்டது  ஆகிய நிகழ்வுகள் அருமையாகப் படமாக்கப்பட்டு உள்ளன 


5 தனது   மகன்    சஞ்சய்    காந்தியின்  மரணத்தை   மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை   நேரில் கண்ட  , இந்திராகாந்தி  மனம்   பதறி   அழுவது   அருமையான   காட்சிப்படுத்தல் 


  ரசித்த  வசனங்கள் 

1   நான் ஒன்னும் சின்னக்குழந்தை இல்லை 


 அப்புறம் எதனால அப்பா அப்பா என என் பின்னால் சுற்றிக்கொண்டு இருக்கிறாய் ? 


2  90% பேர்  வெய்ட்டிங்க்  , 10% பேர்  பைட்டிங்க் 


3  எந்த   சூழலிலும்  அம்மாவை மறக்கக்கூடாது .பெற்ற  அம்மா,பாரத மாதா  இரண்டும் சமம் 


4 இந்தியா  என்றால் இந்திரா  ,இந்திரா என்றால்  இந்தியா


5    சின்னக்குழந்தைல இருந்து அப்பா கையைப்பிடிச்சுக்கிட் டே  இருந்தா  எப்படி ? கையை  விடணும் 


6  உங்க பதவியைக்காப்பாத்திக்க வேண்டியது உங்க கடமை 


7   வாட்   கேபினட் ? கிச்சன் கேபினட் ? 


8   நான் தான்  கேபினட் .இந்த ஸீட்   உங்களுக்கு  எப்படிகிடைச்சுது ? 


9   டெல்லி , இந்தியாவின்   தலைநகரம் .லண்டன் மாதிரி  மாத்தப்போறேன் 


10  ஏமர் ஜென்சி  யை வாபஸ்   வாங்கிய உடனேயே  தேர்தல்  வைத்தது  பொலிட்டிக்கல்   சூசையிடு 


கடந்த இரண்டு வருடங்களாக நீ   செய்த  தப்புக்கள் எல்லாம் உன் கண்ணுக்குத்தெரியலையா?  



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வன்முறைக்காட் சிகள்  அதிகம் , ஒரு குழந்தையை  சுவரில் அடித்துக்கொலை செய்யும்  சீன்  கொடூரம் 


2   கட்சி  மேலிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும், விருது பெற வேண்டும் இந்த இரண்டு எண்ணங்கள்மட்டுமே கங்கனா  ரனாவத்திற்கு . முழுமையான  அரசியல்  நிகழ்வுகளின்  தொகுப்பாக திரைக்கதை இல்லை ,இந்திரா காந்தியின் நெகடிவ்  பக்கங்களை  மட்டுமே   காட்டி இருப்பது பலவீனம் 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  U / A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வரலாற்று நிகழ்வு களில்  ஆர்வம் உள்ளவர்கள்  பார்க்கலாம் . பொது  ரசிகர்கள் ,ஜனரஞ்சகப்பட விரும்பிகள்  தவிர்க்கலாம் .ரேட்டிங்   3 / 5 


Emergency
Theatrical release poster
Directed byKangana Ranaut
Screenplay byRitesh Shah
Story byKangana Ranaut
Produced byKangana Ranaut
Zee Studios
Renu Pitti
Starring
CinematographyTetsuo Nagata
Edited byRameshwar S. Bhagat
Music bySongs:
G. V. Prakash Kumar
Arko
Score:
Sanchit Balhara and Ankit Balhara
Production
companies
Manikarnika Films
Zee Studios
Distributed byZee Studios
Release date
  • 17 January 2025
Running time
146 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budgetest.₹25 crore[2]
Box office₹2.9 crore[3]

0 comments: