Monday, January 27, 2025

DOMINIC AND THE LADIES PURSE (2025) - மலையாளம் -சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

           

                

இயக்குனர்  கவுதம்  வாசுதேவ்  மேனனின்  நடுநிசி நாய்கள் (2011)  மட்டும் தான்  அவர் இயக்கிய படங்களிலேயே குப்பைப்படம் மற்ற  அனைத்துப்படங்களையுமே ரசிகர்கள் கொண்டாடினார்கள் .இயக்குனர் பாலாவுக்கும்  , இயக்குனர் கவுதம்  வாசுதேவ்  மேனனுக்கும்  ஒரு எதிர் மறை ஒற்றுமை உண்டு . தனது படங்களில்  நாயகனை அலங்கோலமாகக்காட்டுவதில் விற்பன்னர் பாலா  தனது படங்களில்  நாயகியை  மிக அழகாகக்காட்டுவதில் விற்பன்னர் கவுதம்  வாசுதேவ்  மேனன் அவர் படங்களின் நாயகி இதற்கு முன் 50 படங்களில் நடித்திருந்தாலும் அவர் படத்தில் தான் அதிக பட்ச  அழகுடன் இருப்பார் ,



மெகா ஸ்டார் மம்முட்டி யின் சொந்தப் படம் இது இயக்குனர்  கவுதம்  வாசுதேவ்  மேனனின்  இயக்கத்தில் வெளி வரும் முதல் மலையாளப் படம் இது , 8 கோடி ரூபா பட்ஜெட்டில் எடுக்கப்பட் ட இப்படம் ரிலீஸ் ஆன முதல்  4 நாட்களில்  6 கோடி ரூபாய் வசூ லை  அடைந்துள்ளது  ஆனால்  இந்தியன்  எக்ஸ்பிரஸ்  உள்ளிட் ட  முன்னணிப்பத்திரிக்கைகள்  1.75/ 5  ரேட்டிங்க் தான் கொடுத்திருக்கிறார்கள்  திரைக்கதை , இயக்கத்தில்  

கோட் டை  விட்ட்தாக  எழுதி இருக்கிறார்கள் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  முன்னாள்  போலீஸ் ஆபீசர்   இப்போது  பிரைவேட்டாக   டிடெக்டிவ்   ஏஜென்ஸி  நடத்தி வருகிறார் ..பெரிய அளவில்  வருமானம் இல்லை .இவர் குடி இருக்கும்  வீட்டுக்கே வாடகை பாக்கி 3 மாதங்கள் . இப்படி இருக்கும் சூழலில்  நாயகனின் ஹவுஸ் ஓனர்  ஒரு லேடீஸ்  பர்ஸ்  தனக்குக்கிடைத்ததாகவும் , அது யாருடையது என்று கண்டு பிடிக்க வேண்டும் என்றும்  கூறுகிறார் . அப்படிக்கண்டு பிடித்தால்  பழைய   வாடகை பாக்கி தர  வேண்டாம்  என ஆபர் வைக்கிறார் 


அந்த பர்சுக்கு சொந்தக்காரர்  ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் பூஜா  என்பதை  நாயகன் கண்டு பிடிக்கிறார் . இரண்டு வருடங்கள் முன்  தன்  காதலன் கார்த்திக்கைப்பார்க்கப்போன தினத்தில் இருந்து  அவளைக்காணவில்லை என தெரிய வருகிறது . கார்த்திக் தான்  தகராறில்  அவளைக்கொலை  செய்திருப்பாரோ  என சந்தேகித்தால்  அவனையும்  இரண்டு   வருடங்களாகக்காணவில்லை . கார்த்திக்கின் சகோதரி  மட்டும் தான்  இருக்கிறாள் . இதற்குப்பின்  இந்தக்கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான் மீதி திரைக்கதை 


 நாயகன் ஆக   மம்முட்டி  அசால்ட் ஆக நடித்திருக்கிறார் . சண்டைக்காடசிகளில் ,நடனக்காடசிகளில்  ரஜினி போல சமாளிக்கிறார் . அவரது  உதவியாளர் ஆக   வரும்  கோகுல் சுரேஷ்  கோபி  அருமையான  நடிப்பு . நல்ல எதிர் காலம் உண்டு 



 நாயகி ஆக  சுஷ்மிதா பட்    கலக்கி இருக்கிறார் , பாரத நாட்டியம் ஆடுகையில் ,  க்ளைமாக்சில்  அவரது நடிப்பு அடிப்பொழி . வினீத்  வில்லத்தனமான  ரோல் . ஆனால்  வில்லன் இல்லை . ஹவுஸ்  ஓனர் ஆக வரும் விஜி  வெங்கடேஷ்  கவனிக்க வைக்கும் யதார்த்த நடிப்பு 


தற்புகா  சிவாவின் இசையில் இரு பாடல்கள்  சுமார் ரகம் . பின்னணி இசை   ஓகே ரகம் அந்தோணியின்  எடிட்டிங்கில்  152  நிமிடங்கள்   டைம் டியூரேஷன் .விஷ்ணு  தீவின் ஒளிப்பதிவு   அருமை . நாயகியை அழகாகக் காட்டி இருக்கிறார் 


கதை நீரஜ்   ராஜன்   என டைட்டிலில்  போடுகிறார்கள் . திரைக்கதை   என மூவர்  பெயர் வருகிறது , ஆனால் டைட்டிலில்   ஒரிஜினல்  படத்தின்  விபரத்தை தரவில்லை . முன்னணி  பத்திரிகைகள்   கூட இது ஒரு சுட் ட கதை என்பதை சொல்லவில்லை 

சபாஷ்  டைரக்டர்

1   டிடெக்டிவ்  ஏஜெண்சி   மாதிரி  செட் டப்பில்  நாயகனின் ஆபீஸ்  ரூம்  பக்கா . ஆர்ட்  டைரக் டருக்கு ஒரு ஷொட்டு .  பிகேபி  கதைகளில்  வரும் பரத் சுசீலா  வின் மூன்  லைட் டிடெக்டிவ்  ஏஜென்சி , சுபாவின் நாவல்களில் வரும் நரேன் வைஜயந்தியின் ஈகிள்ஸ் ஐ   நிறுவனங்கள்  போலவே  அருமையான  அலங்கரிப்புகள் 


2   சுபாவின் நாவல்களில் வரும்  செல்வா - முருகேசன்  ஜோடி போலவே  நாயகனுக்கு அஸிஸ் டெண்ட் ஆக  வரும் கோகுல் சுரேஷ் கோபி  கேரக் டர்  டிசைன் , அவரது  கெட் டப் , நடிப்பு  எல்லாம் பக்கா ( இவர்  நடிகர்  சுரேஷ் கோபியின் மகன் )   


3   நாயகன்  டீல்   செய்யும் முதல் கேசில்  கள்ளக்காதலியுடன் ஹோட் ட ல் ரூமில்  தங்கி இருக்கும் ஆளிடம்  50,000  ரூபாய் கறக்கும் காட்சி  காமெடி  


4    ஆங்கில   வசனங்கள் அதிகம் இல்லை , அது ஒரு ஆறுதல் 

5   க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட் அட் டகாசம் .அந்த சீனில்  வில்லனின் நடிப்பு  செம 


  ரசித்த  வசனங்கள் 


1   சந்தேகப்படும்படி   யாரையாவது  பார்த்தா  உடனே  எனக்கு இன்பார்ம் பண்ணு 


சார் ,  சந்தேகப்படும்படி  இருக்காங்கனு எப்படிக்கண்டுபிடிக்க? 


இப்போ  என்னைப்பார்த்தா சந்தேகப்படும்படி  இருக்கா?


 இல்லை 

அதையே  பாலோ  பண்ணு 


2 இவன் தான் என்  புது அஸிஸ்டெண்ட் 

    இவனுக்காவது  சம்பளத்தை  ஒழுங்காக்குடு 


3   பணம்  தந்தா இந்த  உலகத்துல அம்மாவைத்தவிர யாரை  வேண்டுமானாலும் விலைக்கு வாங்க முடியும்  

4  ஒரு தும்பை ( துப்பு )  கிடைச்சா  போதும்  , மும்பை  வரை போய்ட்டு வருவேன் 


5  நான்  டான்சில்  கொஞ்சம்  வீக் 



ஓ , உங்களுக்கு டான்ஸ் ஆடத்தெரியுமா? 


 ஜஸ்ட்  வாட்ச் 


6   ஒரு ஆளைப்பற்றித்தெரிஞ்சுக்கணும்னா அவனோட பூர்விக இடத்தில் இருந்து விசாரிக்க ஆரம்பிக்கணும் 


7  சிம்பிள்  ஐடியா  வில்  ஒர்க் அவுட் 

8  எவ்ளோ  பிரில்லியண்ட்டான ஆளா இருந்தாலும் 20 % அவனோட ஐ டியா சொதப்ப வாய்ப்பு இருக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   க்ளைமாக்ஸ்   ல  வில்லனை  நெருங்கும் நாயகன் தனி ஆளாக வந்து மாட்டிக்கொள்வது எதனால் ? போலீசுக்கு தகவல் கொடுத்து பாதுகாப்பாக வந்திருக்கலாமே?


2   இரண்டு   வருடங்களுக்குப்பின் மீட்கப்படும்  பூஜாவின்   டெட் பாடியின் முகம்  சிதையாமல் இருப்பது எப்படி ? 


3  பெண்   தன்மை   உள்ள  ஆள்  13  வயதில்  இருந்தே  தான் பெண்ணாக மாறியதாக  வசனம்   வருது . ஆனால்  18 வயதில்   காதலி எப்படி ? 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U/A 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் DOMINIC AND THE LADIES PURSE (2025) - மலையாளம் --- கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய முதல் மலையாளப்படம் பிரமாதம் எல்லாம் இல்லை . சுமார் ரகம் தான் .கதை , திரைக்கதை அமைப்பில் பட் டி டிங்கரிங்க் அட்லி வெர்சன் ஆப் சவுத் கொரியன் க்ரைம் த்ரில்லர் மூவி 1 Rainbow Eyes (2007) + 2 பாரதிராஜாவின் பொம்மலாட்டம் (2008) (அன் அபிஷியல் ரீ மேக்) + 3 திட் டம் 2 (2021). ( அபிஷியல் ரீ மேக்) கேரக்டர் டிசைனில் தெலுங்குப்படமான ஏஜென்ட் சாய் சீனிவாசா ஆத்ரேயா (2021) +சந்தானம் நடித்த ஏஜென்ட் கண்ணாயிரம் (2022) - அபிஷியல் ரீ மேக் இவற்றின் சாயல் உண்டு .மம்முட்டிக்கு ஒரு சுமார் ரகப்படம் , இன்ட் டர்வெல் பிளாக் சீன் கற்பனை வறட்சி க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் குட் ரேட்டிங் 2.25 / 5 . உங்க பர்சில் இருந்து பணத்தை இழக்க வேண்டாம்


Dominic and the Ladies' Purse
Theatrical release poster
Directed byGautham Vasudev Menon
Screenplay byGautham Vasudev Menon
Neeraj Rajan
Sooraj Rajan
Story byNeeraj Rajan
Produced byMammootty
StarringMammootty
Gokul Suresh
Sushmitha Bhatt
CinematographyVishnu Dev
Edited byAnthony
Music byDarbuka Siva
Production
company
Distributed byWayfarer Films
Release date
  • 23 January 2025
Running time
152 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget8 crore[citation needed]
Box officeest. 6.10 crores(kerala) [2]

0 comments: