பிறாவின் கூடு கள்ளுக்கடை என்பதுதான் டைட்டில் .பலரும் பிரவின்கூடு என தவறாக உச்சரிக்கிறார்கள்.புறாவின் கூடு என்னும் இடத்தில் உள்ள கள்ளுக்கடையில் நடந்த கொலையை. விசாரணை செய்யும் போலீசின் கதை இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் புதிதாக அந்த ஏரியாவிற்கு வந்திருக்கும் போலீஸ் ஆபீசர்.வந்ததும் முதல் கேசாக இந்தக்கள்ளுக்கடைக்கொலைக்கேஸ்
கள்ளுக்கடை உரிமையாளர். பாபு தூக்கில் தொங்கி இறந்திருக்கிறார்.தற்கொலை போல தோற்றம் அளித்தாலும் இது திட்டமிட்ட. கொலை என நாயகன் நினைக்கிறான்
விசாரணயில் இரு விஷயங்கள் தெரிய வருகிறது.1 கொலை நடந்த தின்ம் 11 பேர் கடையில் இருந்திருக்கிறார்கள்.அந்த 11ல் ஒருவன் தான் கொலையாளி. 2.பாபு பெண்கள் விஷயத்தில் வீக்.பண பலத்தைக்காட்டி பல பெண்களை கரெக்ட் பண்ணியவர்.அப்படி அவர் கரெக்ட் பண்ணிய ஒரு பெண்ணின் புருசன் தான் கொலை செய்திருக்க வேண்டும்
முதல் பாதி முழுக்க நாயகனின் பார்வையில் திரைக்கதை. நகர்கிறது.பின் பாதியில் ஒரு திருப்பம்.நாயகனின் அப்பாவும் இதே. பாணியில் கொல்லப்பட்டவர்தான்.அதனால் நாயகன் தான் தன் அப்பாவின் மரணத்துக்குப்பழி தீர்க்கிறாரோ என்ற கோணத்தில் கதை நகர்கிறது.இதற்குப்பின் நடக்கும் திடுக்கிடும் திருப்பஙகள். மீதி திரைக்கதை
நாயகன். ஆக பசீல் ஜோசப் காமெடி யில் கலக்கி இருக்கிறார்.தன்னைப்பற்றி அவர் விடும் பில்டப்கள் ,மிசஸ் மிராண்டாவிடம் பம்முவது எல்லாமே செம.
கள்ளுக்கடையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஆக. சவுபின் சாஹிர் அசர வைக்கும் குணச்சித்திர நடிப்பு.
அவரது அழகு மனைவி.மிராண்டா. ஆக. சாந்தினி ஸ்ரீதரன் இளமைத்துள்ளலுடன். கூடிய நடிப்பு.
செம்பன் வினோத் சில காட்சி கள் வந்தாலும் மனதில் நிற்கிறார்.
ஒளிப்பதிவு.சைஜூ. காயத்.அசத்தலான ,துல்லியமான பதிவுகள்.சபாஷ்
சபீக் முகமது அலியின் எடிட்டிங் கில். படம் 149 நிமிடஙகள் ஓடுகிறது.
இசை. விஷ்ணு விஜய்.பிஜி எம் மில் மிரட்டி விட்டார்..
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர். ஸ்ரீராஜ் சீனிவாசன
சபாஷ் டைரக்டர்
1. டைட்டில் சாங்கில் கள் உருவாகும் விதத்தைப்படம் பிடித்த விதம். கவிதை
2. டெட்பாடியின் திறந்த கண்ணில் ஈ , வில்லன். சிகரெட் பற்றி எரிக்கும் காட்சியின் துல்லிய ஒலி ,மிராண்டா. கண்ணுக்கு மை இடும் க்ளோசப் ஷாட் கலக்கல் ரகம்
3. மாறுபட்ட எடிட்டிங் கட்,சவுண்ட் டிசைனிங் ஒர்க் அசத்தல்.மேஜிக் சீன் ,சீட்டு ஆடும் விதம் எல்லாம் பிரமிப்பு
4 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்
5 க்ரைம் இன்வெஸ்டிகேசன் போர்சனில் காமெடியைக்கலந்த விதம்
6 நாயகனிடம் மிராண்டா 5000 ரூ கைமாத்துக்கேட்கும் காட்சி,நாயகன். மழுப்பும் சீன் செம
7 ஸ்கூல் பஸ் சேசிங் சீன் அட்டகாசம்
8 மிராண்டாவை வில்லன் கொலை செய்ய முயலும்போது நாயகனுக்கு போன் போட அவர் பைக்கில் வரும் சீன் விறுவிறுப்பு ,காமெடி கலக்கல்
ரசித்த வசனங்கள்
1 எனக்கு மைக்ராஸ்கோப் கண்கள்
2 அவன் ரவுடியா இருந்தாலும் பக்கா டீசண்ட்
3 டெட் பாடிக்கு வெளிச்சமும் ,காத்தோட்டமும் இருக்கட்டும்.எல்லாரும் தள்ளி விலகி நில்லுங்கப்பா
4 உன் பேரென்னம்மா?
மிராண்டா
மிரண்டா?
5 உனக்கு மேரேஜ் ஆகி 5வருசம் இருக்கும்.சரியா?
10 வருசம். ஆகுது
கழுத்தில் போட்டிருக்கும் செயின் பார்த்தா 5 வருசம் மாதிரி தெரியுதே?
அது 6 வருசம்
6. உன்னை மாதிரி ஒரு ஆள் கிட்டே மிராண்டா. மாதிரி. ஒரு அழகி. எப்படி வசியம் ஆனா?
7 எந்தக்குடிகாரனையும். நம்பாதீஙக
8 நான் கொலைக்கேசில் உள்ளே போனவன்
கொசுவையா கொன்னே?
9 அது ஏண்டா எல்லாரும் என் சம்சாரம் பின்னாடியே சுத்தறீங்க?
10 சார் அந்த கன் ல சுடுவீங்களா?
கோல்டு மெடலிஸ்ட் அதுல
11. ஒரு மேஜிக் மேன் கிட்டே மற்றவர்கள் கண்களுக்குப்புலப்படாத ஒரு ட்ரிக் இருக்கும்
12. நம்பிக்கை துரோகத்தை விடப்பெரிய வலி இல்லை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 முதல் பாதி ரொம்ப ஸ்லோ.பின் பாதி பல்க விறுவிறுப்பு.இன்னமும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்
2 என்னதா காமெடிக்கு என்றாலும் நாயகன் அண்டர்வேருடன் பைக்கில் சேஸ் செய்வது போலீஸ் பணியை அவமதிக்கிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -U/A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - காமெடிவிரும்பிகள்,க்ரைம். திரில்லர் ரசிகர்களை க்கவரும்.ரேட்டிங். 3/5
0 comments:
Post a Comment