Monday, March 21, 2016

.சேட்டு அபிசியலா?சேட்டு பர்சனலா?சேட்டு ஜெனரலா?

தலைவரே!,5 வருசம் கழிச்சு தொகுதிக்கு வந்திருக்கீங்களே எதுக்கு?

இதென்ன கேள்வி?ஒவ்வொரு தேர்தலும் 5 வருசத்துக்கு ஒரு வாட்டி தானே வருது?


============

2 மிஸ்! எப்பவும் கைல குங்குமம் வார இதழை வெச்சிட்டிருக்கீங்களே ஏன்?

தமிழர்களுக்கு குங்குமம் வைத்திருக்கும் பெண்களைத்தான் பிடிக்கும்னு சொன்னாக


===========

3 டியர்.என் புருசன் நைட் ஷிப்ட் முடிஞ்சு காலைல 8 க்கு வருவார்.நீங்க 5 க்கு கிளம்பிடறீங்களா?எப்போ போறீங்க?

முடியட்டும்
விடியட்டும்


==========

4 சாரி சார்.எங்கப்பா ஒரு சேட்டு.நம்ம காதலுக்கு ஒத்துக்க மாட்டார்

ஓஹோ.சேட்டு அபிசியலா?சேட்டு பர்சனலா?சேட்டு ஜெனரலா?சொல்லுங்க.பேசிப்பார்ப்போம்


===========

5 அமைச்சரே ! மாதம் மும்மாரி பொழிகிறதா?

ஆம் மன்னா! ஆட்சி புரிவது கேப்மாரியா,மொள்ளமாரியா இருந்தாலும் மாரி தன் கடமையை செய்துவிடுகிறது

===========

6 டாக்டர்.ஒரு கொசுவத்தி பத்து சிகரெட்க்கு சமமாமே?நிஜமா?

ஆமா.அதுக்காக நைட் தூங்கறப்ப 10 சிகரெட் குடிச்சா கொசு வராதுனு நினைக்கப்படாது

============

7 சார். படப்பிடிப்பில் காயம் அடைந்த நடிகர் னு அடிக்கடி நியூஸ் வருதே.எப்டி?

ஹீரோயின்ட்ட சேட்டை பண்ணினா நகத்தால கீறி.விட்டுடுவாக.


===========

8 ஜட்ஜ்= தாசில்தாரரான நீங்க அந்த லேடியோட பாடி வில் போல் இருக்குனு வர்ணிச்சீங்களா?

வில்லங்க சான்றிதழ் கேட்டாங்க.வில் அங்கம் னு நினைச்ட்டேன்


=============

9 சார்.சினிமா பிரபலங்கள் கூட போட்டோ எடுத்து அப்டேட்டிக்கறீங்களே எதுக்கு?

அந்தந்த ரசிக ரசிகைகளை கவர் பண்ணிக்கலாம்.கவர் எக்ஸ்ட்ரா.


==============


10 மிஸ்! உங்க தமிழ் ல சந்திப்பிழை அதிகமா இருக்கே?

ட்விட்டர் /ஃபேஸ்புக் சந்துக்கு வந்தவங்க சந்திப்பிழையைக்கண்டுக்க மாட்டாங்க


===============

11 டியர்.எனக்கு உடம்பு சரி இல்லைனு டாக்டர் சொல்றார்

நம்பாதே.நான் சொல்றேன்.உன் உடம்பு முகம் எல்லாமே செம


==============

12 மிஸ்! எப்படிங்க? இந்தியாவை விட்டு தொலை தூரத்தில் ஃபாரீனில் இருந்தாலும்் அத்தனை விஷயங்களையும் விரல்நுனியில வச்சிருக்கீங்க.?

விரல் நுனில மருதாணி தான் வெச்சிருக்கேன்


==========


13 தலைவரே! திராவிடம்ன்னா தமிழ் மட்டுமா? 🤔"

தெரில.ராகுல் திராவிட் டிடம் கேட்டு சொல்றேன்


================

14 தலைவரே!,அரசியல்ல உண்மையான திராவிடன் யாரு?

அது தெரில.சினிமால சத்யராஜ். அவர் தான் திராவிடன் பட ஹீரோ


=================

15 ஜட்ஜ் = உன்னைத்தொட்டு தாலி கட்ன புருசன் இவர்தானா?

லேடி = ஒரு கரெக்சன்.தாலி கட்டிட்டு அதுக்கப்புறமாதான் தொட்டாரு


===============

16 ஒரு பொண்ணு முகம் கண்ணுலயே நிக்குது.... ஒரு வேளை இதான் காதலா"

இல்லை.இது இன்பாக்சுவேசன்.உக்காந்தா தான் காதல்


==============

17 டாக்டர். பகல் கனவு பலிக்குமா?

தினம் அதிகாலையில் எழுந்து விட்டால் நீ கண்ட ,காணாத கனவெல்லாம் பலிக்கும்.உன் மனம் களிக்கும்

==============

18 தலைவரே! மேடைல பேசும்போது ஏன் நடந்துட்டே இருக்கீங்க?
ஸ்கூல்ல படிக்கும்போது நடந்துட்டே மெமரி பண்ணி அதே பழக்கம் ஆகிடுச்சு


============

19 தலைவரே! காலைல வாக்கிங்க் போக மறந்துட்டீங்களா?
ஆமா, எப்டி தெரியும்?
மேடைல பேசும்போது இப்டிக்கா அப்டிக்கா நடந்தே 4 கிமீ போய்ட்டீங்களே?


=============

20 தலைவரே! எந்த பேப்பரையும் பார்க்காம 2 மணி நேரம் எப்டி பேச முடிஞ்சது ?


இதை மனப்பாடம் பண்ண நான் பட்ட கஷ்டம் எனக்குத்தானே தெரியும்?எம்பிபிஎஸ் எக்சாம்க்குக்கூட இப்டி படிக்கலை

==========


Sunday, March 20, 2016

ஊட்டி பியூட்டி

முதல்வர் கனவில் உள்ளோர் வாக்கு வங்கி வரிசைப்படி
1 ஜெ
2 கலைஞர்
3 கேப்டன்
4 அன்புமணி 
5 வை.கோ
6 ஜிகே வாசன்
7 சீமான்


==============


2 நல்ல மனம் ,போராட்ட குணம்,பேச்சுத்திறன் இவை மட்டுமே ஒரு தலைவனுக்குப்போதாது என்பதற்கு உதா வை கோ


============

3 நிர்வாகத்திறன் ,ஆளுமை இவற்றில் டாப் 3
1 எம் ஜி ஆர்
2 ஜெ
3 கலைஞர்

===========

4 அபிமான ஹீரோ ஹீரோயினுடன் நீங்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை விட உங்கள் பெற்றோருடன் எடுத்துக்கொள்ளும் படத்தில் தான் நீங்கள் அழகாவீர்கள்


==========

5 தானைத்தலைவரும் ,புரட்சித்தலைவியும் ஊழல் பண்ணி சம்பாதிச்ச பணத்தை இப்போ செலவு பன்றாக.அன்பு மணி க்கு ஏது இவ்ளோவ் பணம் ?

============


6 அரசியல்வாதிகளை விமர்சிகும்  உனக்கு இந்த மொபைல் வாங்க ஏது பணம்


ஊரை ஏமாத்தாம யார் கிட்டேயும் வாக்குப்பிச்சை கேட்காம கூழைக்கும்பிடு போடாம சம்பாதிச்சேன்

==============

7 எம்ஜிஆர்,கலைஞர் ஆட்சியில் MLA,MP க்கள் சம்பாதித்தது போல் ஜெ ஆட்சியில் சம்பாதிக்க முடியாது என கணிக்கிறேன்.90% ஜெ வுக்கே போய்டும்



==============

8 எல்லோரும் சம்பாதிக்கனும் எனும் நல்லெண்ண அடிப்படையில் முதல்வர் ,MLA,MP பதவி ஒவ்வொருவர் வாழ்நாளிலும் ஒரு முறையே எனும் சட்டம் வந்தால்.


============

9 ஒரு குடும்பத்துக்கு (ரேசன் கார்டு படி) ஒருவர்க்கு மட்டுமே அரசு வேலை என்பது சாத்தியம் ஆனால் நல்லது

===============


10 அகல முதுகு கொண்டோர் ப நெக் ஜாக்கெட்டும் ,போஷாக்கான உடல்வாகு உள்ளோர் யு நெக் ஜாக்கெட்டும் அணிகின்றனர் # கேள்வி அறிவு


==============

11 எதிரி ஆள் பலம் ,பண பலம் கொண்டிருந்தால் மனம் கலங்கி விடாதே! சாணக்யன்,சகுனி எல்லாம் மூளை பலத்தால் முன்னுக்கு வந்தார்கள் என்பதை மறக்காதே!


==============

12 நெட் தமிழர்களில் கமல் ரசிகர்கள் தான் கண்ணியக்குறைவாக பேசுவதில்லை.ஏ சென்ட்டர் ரசிகர்களைப்பெற்றதில் கமல் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்


============
13 உன் எதிரி உன் அருகில் இருந்தால் நீ இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.எதிரி ஒரு பெண் எனில் பன் மடங்கு எச்சரிக்கையுடன் இரு!


==============

14 யாரைப்பற்றி யாரிடம் நீ குறை கூறினாலும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்ட நபரை அது சென்றடைந்து விடும் என்பதை மனதில் கொண்டு பின் புரணி பேசு

===========

15 2016 ல் கேப்டனால் முதல்வர் ஆக முடியாது.ஆனால் யார் முதல்வர் என மக்கள் தீர்மானிப்பதில் கேப்டனின் முடிவை சார்ந்தே இருக்கும்


============

16 யாருக்கும் தெரியாமல் ஒரு பெண்ணிடம் தணிமையில் நீ குழைந்து பேசினால் எப்படியும் அப்பெண் அதை பெருமையாக 4 பேரிடம் பகிர்வாள் என்பதை நினைவு கொள்


==============

17 ஒரு பெண்ணிடம் எப்படியாவது பேசி விட வேண்டும் என்பதற்காக ஆணுக்குண்டான கம்பீரத்தை விட்டு விடாதே!கெத்து நம் சொத்து



===========

18 நீ எப்போதும் தேன் போல் இரு.எத்தனை நாட்கள் ஆனாலும் எந்த சூழ்நிலையிலும் கெட்டுப்போகாத ஒரே உணவு தேன் மட்டுமே!


============


19 போட்டியில் பங்கேற்பாளனாக இரு .வெற்றியோ தோல்வியோ விரைவில் நெ 1 ஆவாய்! .வேடிக்கை பார்ப்பவனாக இருந்தால் பத்தோடு பதினொன்றாய் ஆவாய்!


===============

20 ஊட்டின்னா என்ன நினைவு வருது?னு ஒரு பியூட்டி போட்ட ஸ்டேட்டஸ்க்கு 50% நெட் தமிழன்கள் நீங்க தான் மிஸ்!ங்கறாங்க.செம டெக்னிக்பா


=============

கலெக்”சன்” இல்லா ஆட்சி கரப்”சன்” இல்லா ஆட்சி

தலைவரே! தேர்தல் நிதி அளிப்பீர்!னு பிச்சை எடுத்தீங்களே! இப்போ media adக்கு 40 கோடி ஏது?

என் பெயரிலேயே நிதி இருக்கையில் என்னிடம் இருக்காதா?

===========

2 எடிட்டர் சார்.உங்க புக் ல ஒரு மாற்றம் தெரியுதே?

நீங்க கூட FB வந்த புதுசுல பேசவே மாட்டீங்க.இப்போ செம கடலை போடறீங்க இல்ல?


=========

3 தலைவரே!முகப்புத்தகத்தை விட்டு ஏன் விலகிட்டீங்க?

படிப்புக்கும் நமக்கும் ரொம்ப தூரம்


=========

4 5 வருசமா ஏன் டாக்ஸ் கட்டலை?

5 வருசத்துக்கு ஒரு தடவை தானே ஓட்டு போடறோம்?வரியும் அப்டினு நினைச்ட்டேன்


=========

5 படம் தயாரிச்சே நான் நடுத்தெருவுக்கு வந்துட்டேன்.

அப்டி ஓரமா உட்காருங்க.நடுத்தெரு நாராயணன் கள் இங்கன ஜாஸ்தி


=============

6 தலைவருக்கு ஜிகே கம்மி

எப்டி சொல்றே?
ராம்ராஜ் வேட்டிகள் விளம்பரத்துல ராமராஜனைக்காணோம் ?ஆனா அர்ஜூன் இருக்காரு?னு அப்பாவியா கேட்கறாரே?


============


7 ஜட்ஜ் =,ஐம்பொன் சிலையை கடத்துனியா?

கைதி = ஒரு சிலை தாங்க கடத்துனேன்.5 எல்லாம் இல்ல


============

8 டாக்டர்.எல்லாரும் க்ளினிக் னு போர்டு வெச்சிருக்காங்க.நீங்க மட்டும் கிளினிக் னு வெச்சிருக்கீங்க?

நர்சுங்க எல்லாம் கிளி மாதிரி இருப்பாங்க


===========

9 மிஸ்! 10 என்றதுக்குள்ளே என் கிட்டே ஐ லவ் யூ சொல்ங்க
உனக்குதான் படிப்பே இல்லையே? எப்டி 10 வரை எண்ணுவே?

=============

10 படம் பூரா ஹீரோ டேபிள் ஃபேன் பக்கத்துல உக்காந்து இருக்காரே? ஏன்?
இது ”டேபிள் ஃபேன்”ட்டசி ஃபிலிம்



==============

11 கொலைகாரன் டெக்னாலஜியால மாட்டிக்கிட்டானா? எப்படி?
மேக்கிங்க் ஆஃப் மர்டர்னு வீடியோ எடுத்து வாட்சப்ல உலாவ விட்டானாம்


==========


12 சார். ஹீரோ சான்ஸ் வேணும்.
இதுக்கு முன்னால உன் முகத்தை கண்ணாடில பார்த்திருக்கியா?
கண்ணாடில முகம் பார்த்தா சான்ஸ் தருவீங்களா? அடடே!

==============

13 டாக்டர், 5 கிலோ அஸ்கா சர்க்கரை வேணும்

யோவ், இது என்ன ரேஷன் கடையா?

சுகர் ஃப்ரீ மாத்திரை கிடைக்கும்னு போர்டு இருக்கெ? அப்போ சுகர் ஃப்ரீதானே?


===========
14 டைரக்டர் சார், பேய்னா வெள்ளை டிரஸ் தானே?ப்ளூ கலர் சேலை ஜாக் போட்டிருக்கு?
பேயோட பேரு நீலவேணி, எப்டி?மேட்சுக்கு மேட்ச்?


============

15 அப்பா சம்பாதிச்ச காசுல ஊர் சுத்திட்டு இருக்கியே?ஊர் உலகம் என்ன சொல்லும்?
நமக்கு நாமே டூர் பிளான்னு சொல்லும் டாடி


============

16 என் பையன் கணக்குல புலி
எப்படி?
ஸ்டெப்ஸ் எதுனா மறந்துட்டாக்கூட ஃபேண்ட்டசியா எதுனா எழுதி சமாளிச்சிடுவான்


=============


17 தலைவரே! பிளாட்டினப்பேரன்னு சொந்தப்படம் எடுக்கறீங்களாமே?

ஆமா, தங்க மகன்னு தான் தனுஷ், ரஜினி ஆல்ரெடி நடிச்ட்டாங்களே?


=============

18 டாக்டர்! பப்பாளி சாப்ட்டா பொலிவு வருமா? முகத்தில் தேய்ச்சுக்கிட்டாலா?
எதுக்கு டவுட்? ஒரு பழம் சாப்ட்டுட்டு ஒரு பழம் தேய்ச்சுக்குங்க


==============

19 மாஸ் ஹீரோயின்னு பேர் வாங்க ஆசை
அது முடியாது மிஸ்!வேணா பப்ளி”மாஸ்” ஹீரோயின்னு பேர் எடுக்கலாம் நீங்க


=============


20 தலைவரே! பிரச்சாரத்துல தனக்குத்தானே ஆப்பு வெச்சுக்கறீங்க
எப்டி? கலெக்”சன்” இல்லா ஆட்சி
கரப்”சன்” இல்லா ஆட்சி தருவோம்னீங்களே?

============

Saturday, March 19, 2016

மிஸ்! விடிய விடிய ஒரு பய இன்னைக்கு தூங்க மாட்டான்

1 தப்பு செய்தும் ஜெயில் தண்டனையிலிருந்து பண பலத்தால் தப்பியவர்கள்

1 ஜெ
2 கலைஞர்
3 கனிமொழி
4 ஆ ராசா
5 சல்மான் கான்
6 சஞ்சய் தத்


===============

2 தேர்தல் வருவதற்குள் ஏதோ ஒரு ஊழல் வழக்கில்  கலைஞர் , ஜெ இருவரும் ஒரு முறை ஜெயிலுக்குப்போய் விட்டால் தேர்தல் களை கட்டும்


=============

3 கூடல் அழகி  எனில் என்ன பொருள்? கூடலூர் நகரிலேயே அவர் தான் அழகி என்றா?இன்னொரு அர்த்தமா?


=============


4 பச்சபுள்ள, மழையின் காதலன் ஆன் லைனில் இருப்பதால் அங்காங்கே இருக்கும் கன்னிப்பெண்கள் பத்திரமாக வீட்டுக்குப்போகும்படி கேட்டுக்கொள்கிறோம்

===============

5 சுவரின் கிறுக்கல்களில் தெரியும் அவ்வீட்டு குழந்தையின் உயரம் என எண்ணாதீர்! சுட்டிக்குழந்தை சேர்/ஸ்டூல் போட்டு ஏறியும் கிறுக்கும்

=====================


6 சொந்த போட்டோ டிபி வைக்கனும் ஆசை. ராத்திரி யாருக்கும் தெரியாம டிபி வைச்சு எடுத்துறனும்

மிஸ்! விடிய விடிய ஒரு பய இன்னைக்கு தூங்க மாட்டான்

===============


உன் உதடு பட்டு பட்டு என் டச் ஸ்க்ரீன் இச் ஸ்க்ரீன் ஆகி விட்டதே அடடே!


============



8 இயல்பா சொன்னாலே அழகுன்றப்போ எதுக்கு மெனக்கெட்டு செந்தமிழ்ல சொல்றாங்க?"



அழகுக்கு அழகு சேர்ப்பது தமிழன் பழக்கம்



===========

9 வாசுகி மேடம்.ஏன் கோபமா இருக்கீங்க?


சிம்ம வா"கனி" இருப்ப வாசுகி கவர்ந்தற்று னு கவிதை எழுதறாரு என் புருசன்



===========

10 சொந்த போட்டோ டிபி வைக்கனும் ஆசை. ராத்திரி யாருக்கும் தெரியாம டிபி வைச்சு எடுத்துறனும்


மிஸ்! விடிய விடிய ஒரு பய இன்னைக்கு தூங்க மாட்டான்



============


11 அன்பே! நீ சிவப்பு , உன் சேலை கறுப்பு, அப்போ நீ திமுக வா?


===========

12 அரசியல் தலைவருக்காகவோ சினிமா ஹீரோவுக்காகவோ உங்கள் நேரத்தை வீணாக்காமல் அவரவர் முன்னேற்றத்துக்கு நேரத்தை செலவழித்தால் வீடும் நாடும் முன்னேறும்


=========

13 அஞ்சாங்கல்லோ தாயக்கரமோ பரமபதமோ சித்ரா எது விளையாண்டாலும் அது சித்து விளையாட்டு என்றே கருதப்படும்


=============

14 குறிப்பிட்ட இசை அமைப்பாளர் படம்,குறிப்பிட்ட ஹீரோ படம் பாடல்களை மட்டுமே ரசிப்பேன் என சொல்வதும் கிட்டத்தட்ட ஜாதி வெறி போல் தான்


============

15 மாறி மாறி நம்மை ஆட்சி செய்வது ஏதோ ஒரு மாரி தான்.முதல் 5,வருசம் கேப்மாரி.அடுத்த.5,வருசம் மொள்ளமாரி.


=============


16 கப்பலோட்டிய தமிழன் பிறந்தநாளைக்கொண்டாட நெட் தமிழனுக்கு நேரம் இருக்காது.பிகர் ஓட்டவே நேரம் சரியா இருக்கு ( 27/2/2016- வ் உ சி பிறந்த நாள்)


=============

17 ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் அஜித் ,விஜய் க்கு சம்பளம் ஏறிக்கிட்டேதான் இருக்கு.ஆனா ரசிகர்கள் சம்பளம் அதே லெவல்ல தான் இருக்கு.


==============

18 நெட் தமிழன் புதுசா ஒரு டெக்னிக் கண்டுபிடிச்சிருக்கான்.பாலோயர்ஸ் கவுன்ட்ஸ் ரவுன்ட் அப் ஆகும்போது அதை ஹேண்டில் முன் ஏத்திக்கறான்


==============


19 Homeopathy..
Allopathy....
அம்பிகா பதி
யாரையும் நம்பாதீர் உங்கள் ஆரோக்யம் உங்கள் உணவுப்பழக்கத்தில்

=============


20 ஒரு தமிழன் ஆந்திரா பிகரை கரெக்ட் பண்ணிட்டா அதுதான் திராவிடத்திருமணம்

================

30 சதவீத பெண்கள் கணவர்களுக்கு துரோகம் செய்வதாக எழுத்தாளர் கூறிய கருத்தால் சர்ச்சை

1 நன்னடத்தையால் விடுதலையானார் நடிகர் சஞ்சய் தத் -செய்தி # 10 கோடி ரூபா லஞ்சம் கொடுத்தா அதுக்குப்பேரு நன்னடத்தையா?


=============


2 ரயில் டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு #அப்பாடா, ஏ சி போடாமயே இனி ரயில் எல்லாம் மயில் கூட்டமா ஜில்லுனு இருக்கும்

============


3 காங்கிரஸ் நேர்காணலில் குஷ்பு.. யசோதாவுடன் சேர்ந்து கேள்வி கேட்டார். # அன்பே சிவம் படத்தை இயக்கியது சுந்தர் சி யா? கமலா?ன்னு கேளுங்க,


=============

4  ஏப்ரலில் வெளியாகிறது தனுஷின் 'அம்மா கணக்கு'  # மே மாசத்தில்  அய்யா கணக்கு VS அம்மா கணக்கு VS டாக்டர் மனக்கணக்கு



================5

5 மாஜி எம்.எல்.ஏக்கள் 10 பேரின் பிராண்ட் மாறியது..அதிமுகவில் இணைந்தனர்  # BRAND, front,BACK, எல்லாமே கூன் விழுந்து பெண்ட் ஆகி மாறி இருக்குமே?


==============


6 திமுகவில் என்னை வஞ்சம் தீர்த்து அவமானப்படுத்தி விட்டனர்- கருப்பசாமி பாண்டியன் # அதிமுக வில் சேர்ந்துடுங்க, முதல்ல அவமானப்படுத்திடுவாங்க


===================


7 56 மாதமாக எதிர்கட்சிகள் என்னையும் எனது அரசைபற்றியும் பொய் பிரச்சாரம் செய்கின்றன .-ஜெ # கர்நாடகா கோர்ட் ஜட்ஜ் கூட கலைஞர் ஆள்னு சொல்லிடுவாரோ?


=================

8  திமுக, அதிமுக போல் சேற்றை வீச மாட்டோம், நாகரீகமான பிரச்சாரம் மேற்கொள்வோம்- அன்புமணி # அரசியல் நாகரீகம் தெரியாதவரா இருக்கீங்களே அய்யா


==================

9  இந்தியாவிற்காக உயிரையும் கொடுப்பேன் - சஞ்சய் தத் # நீங்க நாயக்கா? கல்நாயக்கா?


=================


10 ஜான்சன் & ஜான்­ச­ன்-ன் பேபி பவுடர்உபயோகித்து கேன்சரால் உயிரிழந்­த­பெண்  குடும்­பத்­திற்கு, 500 கோடி ரூஇழப்பீடு # ஜாண் ஏறினா முழம் சறுக்குது

=============


11 மநகூக்கு தேமுதிக வந்தால் விஜயகாந்தை முதல்வர் ஆக்குவோம்-வைகோ  # முதல்வார் வேட்பாளர் ஆக்குவோம்னு சொல்ங்க, முதல்வர் ஆக்குவது மக்கள் கைல


================


12 இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் - சஞ்சய் தத் # இதே குற்றத்துக்கு மற்றநாடுகள்னா தூக்கு தண்டனை கொடுத்திருக்கும்,இந்தியாஎன்பதால் எஸ்கேப்


===============


13 தமிழக அரசுக்கு போட்டியாக, திரை அரங்குகளில் ஸ்டாலினின் நமக்கு நாமே குறும்பட விளம்பரம் ஒளிபரப்ப திமுக திட்டம் # ஏற்கனவே 14 ரீல் பார்க்கனும், இதுல இந்த ரீலையும் சேர்த்துக்கனுமா?


==================


14 தியாகம் செய்ய வேண்டும்!- ராமதாஸ் # அதெல்லாம் தேவை இல்லை, யாகம் செய்ய வேண்டும், ஜெயிச்சுடலாம், போன தேர்தல்ல அதான் செஞ்சேன் - ஜெ


===============


15 செவ்வாய் கிரக அதிசயமா ஸ்டாலின் ? -  'காடுவெட்டி' குரு # இல்லையே? அவர் என்ன ராமராஜனா? லிப்ஸ்டிக் போட்டு செவ் வாய் உடன் இருக்க?


=============

16 234 தொகுதிகளிலும் சமக போட்டியிட தொண்டர்கள் விருப்பம் - சரத்குமார் # 100 பேரோட பேர் சொல்லுங்க பார்ப்போம்்

============

17 திமுக விளம்பரம் எதிரொலி... தொகுதி மக்களை சந்திக்கப் போகிறார் ஜெ # அடடே!,தலைவரால நல்லது எல்லாம் நடக்குது போல

==========

18 திருமணம் செய்து ஏமாற்றியதாக நடிகை மேக்னா ராஜ் மீது தர்மபுரி வாலிபர் புகார் #,என்ன தம்பி?கற்பு போய்டுச்சா? சொத்து போய்டுச்சா?


============

19 ”ப்ரீடம் 251” ஸ்மார்ட் போன் மோசடியான திட்டம்: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி பேச்சு # ப்ரீ பெய்டு மோசடித்திட்டம்னு சொல்லுங்க


=============

20 30 சதவீத பெண்கள் கணவர்களுக்கு துரோகம் செய்வதாக எழுத்தாளர் கூறிய கருத்தால் சர்ச்சை # அதெப்டிய்யா இதெல்லாம் துல்லியமா கணக்கெடுக்கறீங்க?


==============