Friday, March 11, 2016

ஆர் யூ ஜோக்"கிங்"?

1  கூட்டணிக்காகதொண்டர்களைஅடகுவைக்க மாட்டேன்' - விஜயகாந்த் # அதிமுக வை எதிர்த்த நீங்க 2011 ல் அதிமுக கூடவே கூட்டு வெச்சீங்களேஅதுக்குப்பேர் என்ன?




=============



கிங்'கா? கிங் மேக்கரா? பிரேமலதா கேள்வி # தீபாவளிக்கு சங்கா? ( சங்கு சக்கரம்) புஷ்வாணமா? எது வேணும்?னு கேட்கற மாதிரி இருக்கு




=================



ஜெயலலிதாவை கும்பிடுபவர்கள் எல்லாம் ஆண்களா ?- பிரமலதா  # சாதாக்கும்பிடு இல்லை, கூழைக்கும்பிடு,முக்கியமான சொல்லை விட்டுட்டீங்க





=============




4  அடிமை ஆட்சியை அதிமுக நடத்திக் கொண்டிருக்கிறது.- பிரேமலதா  # அடிமைப்பெண் படம் பார்த்து  தமிழன் குழம்பிட்டான் மேடம்





================



5  மூத்த குடிமக்களுக்கு பேருந்தில் இலவச பயணம்: ஜெ  20 வருசமா  சரக்கு அடிக்கறேன், அப்போ மூத்த குடிமகன் தானேன்னு எவனாவது கிளம்பிடப்போறான்





===============




6  பதவிக்காக அடித்துக் கொள்ள வேண்டாம்: கருணாநிதி அறிவுரை  # அழகிரிக்கு சொல்ல வேண்டியதை  நம்ம கிட்டே சொல்றாரு, சாணக்கியரு



===============




திமுகவிடம் 60 தொகுதிகளை கேட்போம் - காங்கிரஸ்  # 100 கூட கேளுங்க, ஆனா 25  தான் தருவோம் - கலைஞர் மைண்ட் வாய்ஸ்




===============




8  தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் பி.வி. ரமணா டிஸ்மிஸ் # பால் வளத்துறை அமைச்சர் பதவிக்கு பால் ஊத்திட்டாங்களா?சபாஷ்


============

9 நான் கிங் ஆக இருக்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம்: விஜயகாந்த் பேச்சு.# ஆர் யூ ஜோக்"கிங்"?


===========

10 வெற்று அறிவிப்பு அரசியல் செய்கிறார் ஜெயலலிதா: தே.மு.தி.க. மாநாட்டில் பிரேமலதா ஆவேச பேச்சு.# வெற்றி அறிவிப்பு வரும் வரை அப்டிதான் தெரியும்


==========

11 ப்ரீடம் 251 நிறுவனத்தில் வருமான வரித்துறை ஆய்வு - முன்பதிவு நிறுத்தம். # சோனா முத்தா போச்சா? பேராசை பெரு நஷ்டம்

===========

12 ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை புறக்கணியுங்கள்: அமெரிக்கர்களுக்கு டோனால்ட் டிரம்ப் வேண்டுகோள்..# ஆப்பிள் பழம் கூட சாப்பிடக்கூடாதா?


============

13 சல்மான்கானுடன் நடிப்பதற்காக கோலி காதலை முறித்த அனுஷ்கா சர்மா. # நாம எதை வேணாம்னு சொல்றமோ அதை வேணும்னே (னு) செய்பவர்கள் பெண்கள்


===========

14 நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா இல்லையான்னே தெரியவில்லை: சரத்குமார் # 1 தொகுதி பிச்சை போட்டா இருக்கீங்க.அதுவும் இல்லைன்னா இல்லை

=========

15 சரத்குமார் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகல். -செய்தி # அதிமுக கூட்டணியில் இருந்து விடுவிப்பு அப்டினு சரியாச்சொல்லுங்கப்பா


=============

16 திமுக கூட்டணி அமையாமல் தடுக்க உளவுத் துறை சதி: கருணாநிதி குற்றச்சாட்டு # விட்டா  அழகிரி  சண்டைக்குக்காரணமே ஜெ தான்னு சொல்வாரோ?


==============

17  தேமுதிக- MLA  8  பேர் ராஜினாமா செய்ததால் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தகுதியை விஜயகாந்த் இழந்து விட்டார். # MONEY MAKE"KING" MANY


=============


18 தனித்துப் போட்டியிடுகின்ற துணிச்சலும், திறமையும் பாமகவுக்குதான் உள்ளது - ராமதாஸ் # போட்டி இட்டா போதாது, 10 லயாவது டெபாசிட் வாங்கனும்


=================

19   காங் கூட்டணியில் இணைய மாட்டோம் என மாநாட்டில் விஜய்காந்த்  கூறவில்லை - EVKS  # அப்போ அவர் பேசுனது உங்களுக்கு மட்டும் புரிஞ்சிடுச்சு?


================

20  அதிமுக ஆட்சி மீதானஎன்குற்றச்சாட்டில்உண்மையில்லைஎன்றால் வழக்கு தொடரலாம் - EVKS  # ஏய் நானும் ரவுடி தான்  கேஸ் போடு, எல்லாரும் பார்த்துக்குங்க


===================

Thursday, March 10, 2016

ராம் நாடு என்பது அயோத்தி தானே? அது எப்டி தமிழ் நாட்டில் வரும்?

1  ஜட்ஜ் = ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்திப்பேசுனியா?

நித்தியானந்தா = பொய் யுவர் ஆனர், நான் ஆம்பளைங்க கிட்டே/ஆண் பற்றி  பேசுவதே இல்லை



=============

2 என் கிளாஸ்மேட்க்கு 65 வயசு ஆகுது, அப்போ என் வயசு  எவ்ளோவ் இருக்கும்?

குமாரசாமி = மேடம், அனேகமா 32 1 /2  வயசு இருக்கும்


==============


3  ராமானுஜத்துக்கும், குமாரசாமிக்கும் என்ன வித்தியாசம்?

 அவர்  கணித  மேதை. இவர் சாதா கூட்டல் கணக்கே வராத பேதை



================


4  நம்ம நாட்டுல மாங்கா மடையர்கள்  எத்தனை பேரு இருப்பாங்க?

சுமாரா 3 லட்சம் பேர், ஏன் தலைவரே!

 வித்தியாசமான  மா” நாடு”  1  நடத்தலாம்னு இருக்கேன்


===============


5  மிஸ்! உங்க செருப்பு சைஸ் 8 இன்ச் தானே?

 எதுக்குக்கேட்கறே?

 அளவில்லாம புகழ்பவன் ஆபத்தானவன்னீங்களே?அதான் அளவு சொன்னேன்


==============

6  டியர்!  நான் கிங்கா இருக்கனுமா? கிங்க் மேக்கரா  இருக்கனுமா?

 கிச்சன் ல காபி மேக்கரா இருங்க போதும்


================

7  தலைவரே!  நம்ம கட்சில அமலா பாலை  சேர்க்கனுமா? எதுக்கு?

  ஆளுங்கட்சி ஆட்சிக்கு  பால் ஊற்றத்தான்


================


8  பதவிக்காக யாரும் அடிச்சுக்காதீங்க
தலைவரே! அப்போ உங்க பதவியை எங்களுக்கு , எங்கள்ல ஒருவருக்கு விட்டுக்கொடுக்க தயாரா?


=============

9  சார், இந்த கம்பெனி ஷூ எவ்ளோவ்?

1000 ரூபாய்ங்க


 500 ரூபாய்க்கு தருவீங்களா?

1 ஷூ மட்டும் தர்றேன், வல்து வேணுமா? இடதா?

==============

10  தலைவரே! எதுக்காக கட்சியை 500 கோடிக்கு  வித்துட்டீங்க?

 அடகு வைக்க மாட்டேன்னுதானே  சொன்னேன், விற்க மாட்டேன்னு சொல்லலையே?


=================


11  ஏய்  மிஸ்டர்!  நீ சாதாரண  ஆள் தானே?

 ஆமா மிஸ், எப்பவும் ஆண்கள் சாதா ரண ஆள் தான் , பொண்ணுங்க தான் ஸ்பெஷல் ரண  ஆள். காயப்படுத்துவீங்க


===============

12  திருப்பி இங்கவே வந்துட்டேன்.. உங்க வீட்டு  பொண்ணா நினைச்சு மன்னிச்சு ஃபாலோ பன்னிடுங்க

சாரி மிஸ், எதிர் வீட்டு ப்பெண் எனில் ஃபாலோவலாம். எங்க வீட்டுப்பெண் எனில் தங்கச்சி  முறை ஆகும் இல்ல


==============

13 விபத்து நடந்த இடத்தில் காயம் பட்டவங்களுக்கு ஆறுதல் சொன்னது குத்தமாய்யா?
என்னாச்சு தலைவா? விபத்தை ஏற்படுத்துனதே நான் தான்னு பரப்பிட்டாக


===========

14 ஜட்ஜ் = கிரானைட் ஊழல் செய்யலை என்பதற்கு ஆதாரம் இருக்கா?்



கைதி = எனக்கு மாலைக்கண் நோய் இருக்கு.நான் எப்டி கிரா"நைட்"ல ஊழல் பண்ண முடியும்?

==============

15 மிஸ்.தயவு செஞ்சு இன்னைக்கு மட்டும் என்னை இங்க்லீஷ்ல திட்டாதீங்க
ஏன்? இன்னைக்கு தாய் மொழி தினம் தமிழ் ல யே திட்டுங்க.ஐ லைக் இட்


===============

16 தலைவரே!! கிங்கா இருப்பீங்களா? கிங்க் மேக்கரா இருப்பீங்களா?
அது எப்டியோ? ஆனா யாருக்கும் ஜிங் சக் க்கா இருக்க மாட்டேன்

=============

17 நான் நடத்துன பாடத்தை எல்லாம் டெய்லி படிச்சுடறீங்க்ளா?
டீச்சர்.மறக்காம bookmark பண்ணி வைக்கிறேன்.. படிக்கணும்" இனி தான்


================

18 மிஸ்! உருளைக்கிழங்கு சாதம் நீங்களே செஞ்சீங்களா?

யா

 எப்டி?

அம்மா வெச்சிருந்த உருளைக்கிழங்கு பொடிமாசை அப்பா வெச்ச சாதத்தில் பிசைஞ்சேன்

==============


19  அம்மா, தாயே ! ஒரு தொகுதியாவது பிச்சை போடுங்கம்மா


 போப்பா போப்பா  வேற இடம் பாரு


 அட போம்மா!உங்களுக்கு  ஒரு கட்சி, எனக்கு ஏகப்பட்ட கட்சி


==============


20 ராம் நாடு என்பது அயோத்தி தானே? அது எப்டி தமிழ் நாட்டில் வரும்?


 அய்யோ ராமா, தலைவரே! ராமநாத புரம் தான் ராம்நாடு சுருக்கமா



===================

கமல் க்கும் , கேப்டனுக்கும் என்ன ஒற்றுமை?

1  மன்னா! 4 1/2,வருசமா சும்மா இருந்துட்டு திடீர்னு ஏகப்பட்ட சலுகைகளை அறிவிக்கிறீரே ஏன்?

தேர்தல் வரும் முன்னே
சலுகை வரும் பின்னே

===========


2 காஞ்சி புரம் மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிப்பீங்களா?

விரைவில் அறிவிப்போம்னு அறிவிப்போம்

=================


3 உங்க வீட்டுக்கு ஏன் கூட்டிட்டுப்போக மாட்டேங்கறீங்க.வீட்டைப்பார்த்தா உங்களைப்பிடிக்கலாம் இல்லையா?

ஹவுஸ் ஓனரை பிடிச்ட்டா?


==========


4 விஷ்ணு கோயிலுக்கு  வர மாட்டேன், ஆனா பெருமாள் கோவிலுக்கு வருவியா? என்னடி குழப்பறே?2 சாமியும் 1 தானே?


ஆனா விஷ்ணு  விஜய் படம் ஆச்சே? நான் அஜித் ரசிகை


==================


5  மேடம், எதுக்காக பால் வளத்துறை அமைச்சரை  பதவி நீக்கம் செஞ்சீங்க?


கட்சிப்பணியை கவனிக்காம  அமலா பால் கிட்டே கடலை போட்டுட்டு இருந்திருக்கார்


======================================


6  நம்ம தலைவர் கிங்கா? கிங்க் மேக்கரா?

 சோடா மேக்கரா ஆகாம இருந்தா சரிதான்


==================

7 தலைவரே! உங்களை கிங்க் மேக்கர்னு உங்க சம்சாரம் தான் சொல்லுது

 மக்கள் என்ன சொல்றாங்க?


ஜோக்கர்னுதான்


===============

8 தலைவரே! நீங்க மப்ல மேட்டர் உங்க சம்சாரத்துக்கு தெரிஞ்சிடுச்சு போல 

 எப்டி சொல்றே?

 தெளிவு பெற வேண்டிய நேரம் வந்துடுச்சுனு சொல்தே?


==============

9  தலைவரே! மாநாட்டுக்கு வரும்போது ஏன் குடிச்ட்டு வந்திருக்கீங்க?


அப்போதான் எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியும், ஓவர் கூட்டம்னு சந்தோசப்பட்டுக்கலாம்


=============


10  தலைவரே! மாநாட்ல  என்ன அறிவிச்சீங்க?

 என் மனைவி பேரை எல்லாருக்கும் அறிவிச்சேனே?


=============


11 தலைவரே! உங்க இனிஷியல் ஓவா? ஜீரோவா?கிண்டல் பண்றாங்க?

ஜீரோ ( ஜீர்+ஓ) , ZERO  எப்படிச்சொன்னாலும்  மேட்ச் ஆகுதே, நோ பிராப்ளம்


================


12  மேடம், பன்னீர் செல்வம்  கேரக்டர் சத்ரியன் ல  ஆல்ரெடி  பண்ணி இருக்காரே? நீங்க திட்றது  அவரைன்னு நினைச்சு கோவிச்சுக்க மாட்டாரா?


================

13    எதிர்க்கட்சிகள்  வாக்குகள் பிரியும்போது அது ஆளுங்கட்சிக்கே சாதகமாக அமையும், .இதை உணர்ந்து எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டால் நல்லது


==============

14   தலைவரே! நியூஸ் பேப்பர் படிக்க மாட்டீங்களா? அது ஏன்?

 யோவ், அதெல்லாம் படிக்கத்தெரிஞ்சா நான் ஏன் அரசியலுக்கு வாரேன்?


==============


15  கிங் ஆக இருக்கணுமா? கிங் மேக்கராக இருக்கணுமா? 


தலைவரே! ஆல்ரெடி நடிகர் விக்ரம் கிங் கா இருந்தாரு  எடுபடலை, கிங்க் மேக்கரா ட்ரை பண்ணுங்க


==================


16 தலைவரே! திருப்பு முனை  மாநாடுனு  எப்டி சொல்றீங்க?  

முடிவே அறிவிக்காம  முடிச்ட்டேனே அது திருப்பு முனை தானே?



=================


17  தலைவரே! மாநாட்டில் ஏன் நைட் 9  மணிக்கே பேச்சை முடிச்ட்டீங்க?

 10 மணி  ஆகிட்டா டாஸ்மாக் பூட்டிடுவாங்களே?


=================


18  எதுக்காக  எல்லாருக்கும் கிங்க் ஃபிஷர் பீர் வாங்கிட்டு வந்திருக்கே?


தலைவர் தான் பூடகமா  கிங்க்கா  இருக்கனுமா?ன்னு கேட்டுட்டே இருந்தாரே?

==============


19  தலைவரே! நம்ம அடுத்த மாநாட்டை  ஊட்டி. கொடைக்கானல், கொல்லிமலை இங்கே  எங்கயாவது வெச்சுடுவோம்

ஏன்?

 அதான் நிஜமான திருப்பு முனை மாநாடு


==================


20  கமல் க்கும் , கேப்டனுக்கும் என்ன ஒற்றுமை?

 கமல் சினிமா ல பேசுவதும் , கேப்டன் மேடைல  அரசியல் பேசுவதும் யாருக்கும் புரியாது


========================

Wednesday, March 09, 2016

நெல்லுக்குப்பாயும் நீர் அப்டியே ஃபுல்லுக்கும் பாயட்டும்

2016 தேர்தலை சந்திக்க திமுக
பலமாக உள்ளது -பொன்முடி# பயமாக உள்ளது னு ஓப்பனா சொல்ல முடியுமா?

=========


2  விஜய்யின் தெறி படத்தை லைகா வெளியிடுகிறதா?- எஸ்.தாணு விளக்கம் #,கடை ஓனர் நான் தாங்க.ஆனா வரியை அவர் கட்டுவார்ங்க


==========

இமான் அண்ணாச்சி திமுகவில் இணைந்தார்." "அண்ணா"தி மு க " வில் இணைந்தார்னு நியூஸ் போட்றாதீங்க.குழப் பம் வந்துடும்

============

4 திமுக கூட்டணி மூழ்கும் கப்பல்.. "கேப்டன்" போக மாட்டார்.. பொன்.ராதா # மூழ்கும் கப்பலை காப்பாத்த வேண்டியது ஒரு கேப்டனோட கடமை இல்லையா?

=========

5 பொய் சொல்வதில் கருணாநிதி, ஜெயலலிதா இடையே கடும் போட்டி: மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள். # கவிதைக்கு மட்டுமில்லை.கழகத்துக்கும் பொய் அழகு

==========

6 தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா  நீக்கம் #  மாநாடு நடக்கும் நாள் ரமணா மேல கை வெச்சிருக்காங்க, எதுனா குறியீடா?


=================


அம்மாவிடம் கூழைக்கும்பிடு போடும் ஆட்களின் வீட்டில் பெண்கள் மதிப்பார்களா? - பிரேமலதா # மொத்தத்தில் வீட்டிலும், நாட்டிலும் மரியாதை ;போச்சு


====================


எங்களாலும் கீழ்த்தரமாக பேச முடியும், பேசத் தெரியும் - பிரேமலதா ஆவேசம் # கேப்டனின் தாரமா பேசாதீங்க, தரமா பேசுங்க

=================

தமிழகத்தை போராட்டக் களமாக மாற்றியதுதான் ஜெ செய்த ஒரே சாதனை - பிரேமலதா # சுடும் வரை சூரியன்,போராடும் வரை மனிதன் நீ மனிதன் - வைர முத்து


====================

10 தமிழ்நாடு மக்கள் தெளிவு பெற வேண்டிய நேரம் வந்துருச்சு -பிரேமலதா   # நம்ம கட்சில நீங்க தான் தெளிவா இருக்கீங்க


================


11 கேப்டன் எது செஞ்சாலும் அதுதான் சோசியல் மீடியாவில் ட்ரண்ட் - பிரேமலதா # மீம்ஸ் ல நல்லா வெச்சு செஞ்சாலும் பாசிட்டிவா எடுத்துக்கற மனசு இருக்கே

==================

12 தேமுதிக தனி அணி அமைக்கும் என்பதை சூசகமாக உணர்த்தினார் பிரேமலதா விஜயகாந்த் # விழலுக்கு இரைத்த நீர் போல அந்த 12% ம் வீணாப்போகப்போகுது


===============

13 வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பாடுபட வேண்டும்: தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம்   # தலைவலி வந்தாக்கூட WIN WIN வின் என தான் வலிக்கனும்


=============


14 ஸ்டிக்கர் ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்... வேடல் மாநாட்டில் பொங்கிய பிரேமலதா # பிரேமம் ஹிட் ஆன மாதிரி பிரேமலதா ஸ்பீச்சும் ஹிட் ஆகிடுச்சே?


===============

15 சில செய்திபத்திரிக்கைகளை நான் படிப்பதில்லை - விஜயகாந்த்  # பொதுவா நான்எதுவுமே படிப்பதில்லை, மனைவி படிப்பதை கேட்டுக்குவேன் -னு ஓப்பனா சொல்ங்க


===============

16 கடைசி வரைக்கும் யாருடன் கூட்டணி என்று அறிவிக்கவேயில்லை விஜயகாந்த் # கடைசி வரை சஸ்பென்ஸ் மெயிண்ட்டெயின் பண்றாராம்



-----------=============


17  கிங் ஆக இருக்கணுமா? கிங் மேக்கராக இருக்கணுமா? தொண்டர்களிடம் கேட்டார் விஜயகாந்த்  # கேப்டன், ஜோக்கிங்கா? ரேக்”கிங்க்கா?

==============


18  நெல் கொள்முதலில் கூட கொள்ளையடிக்கின்றனர் - விஜயகாந்த் # நெல்லுக்குப்பாயும் நீர் அப்டியே ஃபுல்லுக்கும் பாயட்டும்னு நீங்க நினைக்கறீங்களா?


=============


19 முதல்வர் ஜெ விற்கு ஊடகங்கள் ஜால்ரா அடிக்கின்றனர் - விஜயகாந்த் # பத்திரிக்கைன்னா பக்கம் இருக்கும்,பக்க வாத்தியம் இருக்கும்


===============

20  ஜெ ஆட்சியை தமிழக மக்கள் நிராகரிக்க வேண்டும்: தேமுதிக தீர்மானம்  # அப்போ கலைஞர் ஆட்சி தான் அப்டினு சொல்றாரா? 


=================

“ உதய சூரியன்” வரும் வரைக்கும் தாமரை காத்திருக்கும்?

1  கருணாநிதியை ராகுலுடன் ஒப்பிட்டு பேசிய திக கி.வீரமணி  யாரை  அவமதிக்க நினைக்கறாரு? கலைஞரையா? ராகுலையா?



=================




2  சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன் - EVKS இளங்கோவன் # குஷ்பூ மனசை நோகடிக்காதீங்க சார், நீங்க சி எம் ஆவீங்கன்னாரே?





=============




தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தேர்வு # நல்ல சவுண்ட் பார்ட்டி இல்ல? அதான், தக்க வெச்சுக்கிட்டாரு




================




4  நைஜீரியாவை அச்சுறுத்தும் லாசா காய்ச்சலுக்கு 101 பேர் பலியானதாக தகவல்  # அய்யோ, லாசா காய்ச்சல் வந்தா உயிரே லாஸ் சா?





===============




5  மலேசியாவில் நயன்தாராவிடம் விசாரணை: புகைப்படம் வெளியிட்ட விமான நிலைய ஊழியர் சஸ்பெண்டு. # 9 கிரகங்களும் உச்சத்தில் இருந்துட்டாங்க போல




===============




6  தேர்தல் நேரங்களில் மக்களிடம் மன்னிப்பு கேட்பதும், மறப்பதும் தி.மு.க.வுக்கு கைவந்த கலை-பொன்.ராதா  # அதை  சாணக்கியத்தனம்னு வேற சொல்வாக





=============




மகளுக்காக நில ஒதுக்கீட்டில் சலுகை: குஜராத் முதல் மந்திரி மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு  # ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கலைஞர்




================

சல்மான்கான் குடிபோதையில் தான் காரை ஓட்டினார்: சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய அரசு வாதம் # அவர் இதுவரை பச்சைத்தண்ணியைக்கூட தொட்டதில்லையாம்


===============

9  மணமக்களுக்கு கூட மரியாதை இல்லையா. அம்மா ஸ்டிக்கர் பற்றிகுஷ்புகொதிப்பு # சாமி சிலைக்கு முன் கால் மேல கால் போட்டபடி உட்கார்ந்ததுக்கு இது தேவல


==========




10  கூட்டணிக்காக திமுக தரப்பில் தூது அனுப்பவில்லை, திருமண அழைப்பிதழ் மட்டுமே அளித்தனர்- ராமதாஸ் # தானைத்தலைவர் டெக்னிக்கே அதுதான் டாக்டர் அய்யா




========================




11 காமராஜர் இறந்தபோதே அரசியலை விட்டு விலகியிருக்க வேண்டும்- பழ.கருப்பையா வருத்தம் # சனி பிடிக்கனும்னு இருந்தா விடாது கறுப்பு



==============




12  தமிழகத்துக்கு இனி நல்ல காலம் வரப்போகிறது - ராமதாஸ்  # கவர்னர் ஆட்சி வர வாய்ப்பே இல்லையே? டாக்டர் அய்யா




=============




13 வாக்காளர்களை கவர காதணி விழா மூலம் தேர்தல் பிரச்சாரம்:புதுக்கோட்டை பாமக 80,000 அழைப்பிதழ் விநியோகம்# காது குத்து விழா , குறியீடு?




=============




14  சென்னை ஏர்போர்ட்- 55-வது முறையாக கண்ணாடி விழுந்து விபத்து # அங்கே இருக்கறவங்க இதை எல்லாம் எண்ணிப்பார்க்க மாட்டாங்களா?எண்ணிட்டே இருப்பாங்களா




===============



15  ட்விட்டரில் விடுத்த கோரிக்கையை ஏற்று நோயாளிக்கு உதவிய ரயில்வே அமைச்சர் # வெரிகுட், பிரதமரின் பாராட்டுகள் ஆன் த வே




===============



16 ஐஐடி.யில் படிக்கும் வெல்டிங் தொழிலாளியின் மகனுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை # வெல்டன் மை பாய்,வெல்டிங்




==============



17 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த ரூ.5க்கு ஆயுர்வேத மருந்து-செய்தி # சபாஷ்! சுகர் க்கு அஞ்சத்தேவை இல்லை, அஞ்சு ரூபாதான்




===============



18  இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடு அல்ல: தஸ்லீமா # ஆமாங்கோ, ஊழல்,கடமையிலிருந்து தவறுதல் எல்லாத்தையும் சகிச்சுக்கறோமே?




===================



19  அரசின் திட்டப் பணிகள் தாமதமாக காங்கிரஸ்தான் காரணம்: - மோடி # பிரதமரா இருந்துட்டு இப்டி சொல்லலாமா? உங்க ‘கை” வரிசையை கை யிடம் காட்டவும்




=============


20 பாஜக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை-தமிழிசை # “ உதய சூரியன்”  வரும் வரைக்கும் தாமரை காத்திருக்கும்னு  பாலிடிக்ஸ் பாட்டனி சொல்லுது


===================