Skip to content

Friday, March 04, 2016

நம் சொல் பேச்சுக்கேட்காத சுந்தரிகள் யார்? யார்?

1  கேப்டன் = என் ஆட்சியில் என் ஆணைப்படி  2,47,000 கோடி கடன் ஏற்பட்டது என சொல்ல திராணி இருக்கா?  # கற்பனை


===========



ரஜினி,அஜித்,விஜய் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை.உங்கள் டிபியாக உங்கள் அபிமான ஹீரோ போட்டோ வைப்பதில் தவறில்லை.தம் அடிக்கும் போஸ்.தவிர்ப்பீர்!




============



3 தனுஷ் ரசிகன் = என் தலைவன் படம் டைட்டில் கொடி.அது ரிலீஸ் ஆகும் வரை பூங்கொடி,அன்னக்கொடி,மலர்க்கொடி வகையாறாக்கள் கூட மட்டுமே கடலை போடுவேன்




=============



4 பெண்கள் எந்த அளவு பயந்த சுபாவிகள் என்றால் பருத்தி வீரன் படம் பார்த்துட்டு உடனே லாரிக்காரன் அக்கவுண்ட்டை அன் பாலோ பண்ணும் அளவு



=============



5 மக்களுக்கு என்ன செய்தோம் என சொல்லித்தான் ஜெயிக்கனும் என்ற நிலை கூடாது என துணிந்த காமராஜர் போன்றவர்கள் தோற்றாலும் அந்த தோல்வியும் வெற்றியே




============



6 நம் சொல் பேச்சுக்கேட்காத சுந்தரிகள்


1 தாலி கட்ன சொந்த சம்சாரம்
2 காதலி
3 கள்ளக்காதலி  # கேள்வி அறிவு


=============


7 அப்பாவின் மனம் கோணாமல் நடந்துகொண்டால் பயன் உண்டு -உதா -ஸ்டாலின்
அப்பாவை மனம் நோக பேசினால் எதிர்காலம் இல்லை- உதா -அழகிரி


==============

16/02/2016 இதை  கண்ணாடியில் பார்த்தால்/   அதே தான் வரும்


==================


9  தமிழா! உன் ஆதரவு யாருக்கு? நக்மாவா? குஷ்பூவா? நெஞ்சில் கை வைத்து சொல்!




=========



10 நடுத்தர மக்களின் சேமிப்பு/டெபாசிட்க்கு வங்கிகளில் அதிக வட்டி அளிக்கப்பட வேண்டும்.நாட்டின் முன்னேற்றத்திற்கு அது மிக முக்கியம்




=============



11 குல தேய்வம் என்பது பேமிலி டாக்டர் போல் பேமிலி GOD




===========



12 உடன் பிறப்பே! திமுக 3,எழுத்து.நமக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போகும் நக்மா ,குஷ்பூ .வாக்கு 3,எழுத்து.எல்லாம் தமிழகத்தின் தலை எழுத்து




==============



13 திமுக வுக்கு ஆதரவா நக்மா வருவார்னு தெரிஞ்சுதான் இளையதளபதி அன்றே பூவே உனக்காக ல பாடினார்.ஓ.பானி பூரி போல பம்பாய் மாமி நீ தான் எந்தன் நக்மா




========





14 ஊரார் க்ளிக்கை உன் க்ளிக் என ஒரு முறை நம்ப வைத்து நீ ஏமாற்றினால், நிஜமாவே உன் க்ளிக் போடும்போது யாரும் அதை நம்ப மாட்டார்




================




15  சமூக வலைத்தளத்தில் இருக்கலாம் ஏராளமான நிலாக்காதலன்கள், ஆனால் கோடம்பாக்கத்தின் முதல் நிலாக்காதலன் எஸ் ஜே சூர்யா தான்




==================




16  விஜய் படம்னா ரிலீஸ் டைம்ல தடையை சந்திப்பதும், பொண்ணுங்கன்னா பசங்க ஜடையைப்பிடிச்சு இழுக்கறதும் சகஜம் தானே?




===============




17 எந்தப்பொண்ணு ஆன் லைன்ல வந்தாலும் அந்தப்பொண்ணுக்கு மென்சன் போட்டு மிஸ்! ஐ மிஸ் யூன்னு மிஸ் பண்ணாம சொல்லிடறான் நெட் தமிழன்




===============




18 ஸ்மார்ட் ஃபோன் 251 ரூக்கு மலிவா வந்தாக்கூட அதென்ன 251கூட்டுனா 8 வருது.கொஞ்சம் பொறுத்தே வாங்கலாம்னு நுனை நாட்டியம் பேசுவார் நெட் தமிழச்சி




===============




19 பிரம்ம முகூர்த்தம் முடிவதற்கு முன் அதி காலையில் நீ துயில் எழுந்து விட்டால் பிரம்மன் எழுத வேண்டிய உன் தலை எழுத்தை நீயே உன் கையால் எழுதலாம்



================


20 கற்றோர் சொல் தினம் கேட்டு
பெற்றோர் சொல்படி நீ நடந்து வந்தால்
உற்றார் உறவினர் போற்ற புகழ் பெறுவாய்!


===================

போக்கிரி ராஜா - சினிமா விமர்சனம்

ஹீரோயின் கேத்ரீன் தெரசா வடிவில் இருக்கும் அன்னை தெரேசா. புரியலையா? ரம்பா மாதிரி டவுசர் மட்டும் போட்டிருக்கும் கிளாமர் கலகல் பார்ட்டி ஆனா சமூக சேவகி.

ஹீரோ ஒரு விநோதமான நோயால் பாதிக்கப்பட்டவர். அதாவது இவர் தேவகவுடா மாதிரி கொட்டாவி விடுவார்.அந்த பாதிப்பில் ஆஃபீசில் இருக்கும் எல்லாரும் கொட்டாவி விட்டு தூங்கிடுவாங்க . இவருக்கு வேலை போய்டும். இப்டியே அடிக்கடி ஆஃபீஸ் மாத்திட்டு இருக்காரு நாஞ்சில் சம்பத் மாதிரி 


சமூக சேவகியான ஹீரோயின் வேலை இன்னான்னா  ரோட்டோரமா நெ 1 போகும் ஆட்கள் மேல லாரி பைப் தண்ணியை அடிச்சு துரத்தும் வேலை. வில்லனை ஒரு டைம்  ஹீரோ ஹீரோயினுக்காக அப்டி  தண்ணி அடிக்கறார், வில்லன் செம காண்ட் ஆகிடறார்.


வில்லன் ஹீரோவை பழி வாங்க சரியான சந்தர்ப்பத்துக்கு காத்திருக்கார்’
 இந்த எண்ணம்  நிறைவேறுச்சா?  ஹீரோ  ஹீரோயின் சேர்ந்தாங்களா?  என்பதை வெண் திரையில் காண்க


ஹீரோவா  ஜீவா. இவர் கற்றது தமிழ் போல்  கோ போல் பிரமாதமான படங்களில் கலக்கி விட்டு இது போல் மாமூல் மசாலா சாதா கதையில் நடிப்பது  ஏனோ? வேஸ்ட்

 ஹீரோயினா நம்ம ஹன்சிகா. துக்ளியூண்டு  ட்ராயருடன் வருவது செம கிளு கிளு. அவருக்கே தெரியாமல் டபுள் மீனிங்கில் பேசுவது புரிந்தவர்களுக்கு கிளு கிளு  ( தமிழ் தெரியாத ஹீரோயின்னா  டைரக்டர்களுக்கு இது ஒரு சவுகர்யம் எதுனா வசனம்  ஏ வா எழுதி பேச வெச்சுடலாம்)


பாட்டு  சீனில் செம கிளாமர். வாழ்க கவர்ச்சி வளர்க


 வில்லனா சிபி ராஜ் ம் சத்ய ராஜ் மாதிரி மேனரிசம் செய்ய வசனம் பேசத்தான் சத்யராஜே இருக்காரே பாஸ். நீங்க எதுக்கு? புதுசா ட்ரை பண்ணுங்க . ஃபிகரை ட்ரை பண்ணும்போது எல்லாரும் புதுசு வேணும்னு ட்ரை பண்றாங்க ஆனா படைப்பில்  நடிப்பில் அடுத்தவங்களை  ஃபாலோ பண்ணுவது  ஏனோ?


இண்ட்ட்ர்வெல்  பிளாக்கில்  வில்லன் ஆடும் ஆட்டம்  சகிக்கல செம செயற்கை

பன்னி மூஞ்சி வாயன்  ஹீரோ ஃபிரண்டா வர்றார்  செம காமெடி  அவர் பாடி லேங்குவேஜ்  கலக்கல்.டயலாக் டெலிவரியும்  செம 


நல்ல காமெடியன் ஆக வாய்ப்பு இருக்கு


 இமான்  இசையில் 3 பாட்டு ஹிட்  பின்னணி இசையும்  ஓக்கே ரகம்


 ஒளிப்பதிவு  எடிட்டிங் எல்லாம்  நார்மல்  ஓக்கே ரகம்



மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  பீஸ் எப்டி?

தண்ணி ஊத்தாத பால் மாதிரி பள பள னு # ஹன் சிகா இன்ட்ரோ

2 அதிகமா தம் அடிக்கறவங்க நாக்கு ருசி போய்டும்

எப்டி சொல்றே?
இவ்ளவ் கேவலமான டீயை இப்டி சப்பி சப்பி குடிக்கறானே?,# போ ரா


3 SHE WILL SING WELL
அப்டின்னா?
கிணத்துக்குள்ளே இருந்தே நல்லா பாடுவா.# போ ரா


4 நீ தப்பானவன்.அதனாலதான் தப்பான ஆளுங்களோட இருக்க # போ ரா

5 என்னடி?தண்ணி அடிச்சிருக்கியா?
ம்ம்
சிக்ஸ்ட்டி சிக்ஸ் னு சரியா சொல்லு பார்ப்போம்.அப்போதான் ஓவர் மப்பில்லைனு ஒத்துக்குவேன்.# போ ரா


6 உன்னை உன்னை என்ன பண்ணலாம்?
என்ன வேணா பண்ணிக்கோடா # போ ரா


7 நீ ஒரு செகண்ட் ஹேன்ட்னு உண்மையை ஒத்துக்கிட்டேயேடா.ஐ லைக் இட் # போ ரா


8 உன் கை என் இடுப்பை பிடிச்சிருக்கு.ஏன் ?
ஏன்னா உன்னை ப்பிடிச்சிருக்க்க்க்க்கு #,போ ரா



9  மிஸ் நர்ஸ், உங்க மிடி காத்துல  தூக்குனப்போ எல்லாரும் தான் பார்த்தாங்க. எதுக்கு என்னை மட்டும் பளார்? # போ ரா


10  என் ஹேர் ஸ்டைல் எப்டிடா இருக்கு?

 சுருளி’’

 டேய் இது கர்லிங் # போ ரா


11 டேய் இங்கே  வா

 ம்

 ஜாக்கெட் பேக் ஹூக் போட்டு விடு



 நீ என்ன எதிர்பார்க்கறேன்னு எனக்கு தெரியும், கண்ணை மூடிட்டு போடு # போ ரா


12  அன்பால தான் தமிழனை அடிமை ஆக்க முடியும்னு நல்லா தெரிஞ்சு வெச்சிருக்கீங்க மகாராணி ! # போ ரா


13  ஊர்ல இருக்கறவன் பேச்சை எல்லாம் கேட்பாளுக, ஆனா லவ்வர் சொல்றதை மட்டும் கேட்க மாட்டாளுக # போ ரா  கலக்கல் வசனம்


14  இங்கே யார்டா வாய்  கொப்புளிச்சது?

 அண்ணே அது பேய் கொப்பிளிக்குதுண்ணே # போ ரா



15  யாருடி இவரு?  சால்ட் & பெப்பர்  லுக்ல? லூஸ் மாதிரி  சிரிக்கறாரு?

 என் அப்பா தான்

 ஓ சாரி # போ ரா  ரெஃப்ரன்ஸ்



 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  போக்கிரி ராஜா 141 நிமிடம் @ திருவனந்தபுரம் தேவிப்ரியா 11 15 am show

2 டைட்டில்ல ஜீவா ன்னு போடாம ஜூவா ன்னு போடறாங்க.தமிழா! இது சரியான தமிழா?


3 ஓப்பனிங் சீன் ல ஹீரோ கொட்டாவி விடறாரு.சுத்தம்

4 அத்து விட்டா அத்து விட்டா அப்படியே அத்து விட்டா.செம டப்பாங்குத்து சாங்.ஆனால் பாடல் படம் ஆக்கப்பட்ட.விதம் சுமார்தான்


5 பாடகர் பாடலைப்பாடும் முன் ஹீரோ யார் அவர் குரல் எப்டீ இருக்குனு பார்த்துட்டு பாடனும்


6 ஹன்சிகா ஜீவா வுக்கு ஒரே பாட்டு சீன்ல 18 கிஸ் குடுத்திருக்கு. ஏன்னா இது வயது வந்தவருக்கான படம்னு சிம்பாலிக்காம் அடங்கோ $ பூவை நீ குத்தாதே போ


7 ஹன்சிகா பேக் யு நெக் ஜாக் போட்டிருக்கு, நானும்  அரை மணி நேரமா  ஜாக் கலர் தேடறேன் துணியையே காணோம் முதுகுதான் 70 mm போல் ஃபுல்லா தெரியுது

8  துப்பாக்கி  வாங்குனீங்க சரி குறி யாரு பார்ப்பா? குருவிக்காரனா? ரெஃப்ரன்ஸ்  போ ரா



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

 1 மனோபாலா காமெடி காட்சிகள்  சிரிக்க வைக்குது. ப மூ வாயன் காட்சிகளும்


2  ஹன்சிகா கிளாமரில் 3  சாங்க்  ஓக்கே ரகம்

3  வில்லனின்  அடியாட்கள்  வில்லன் உத்தரவுப்படி வசீகரா பாட்டுக்கு ஆடும் டான்ஸ் கலக்கல்




இயக்குநரிடம்  சில கேள்விகள்

1   ஹை கிளாஸ் ஆளான வில்லன் காரில் போறவர் வருபவர் நடு ரோட்டில்  லோ கிளாஸ் ஆள் போல்  சந்துப்பக்கம் ஒதுங்குவாரா? அவர் ரேஞ்சுக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தானே போவார்?


2  ஹீரோவின்  கொட்டாவி மேட்டர் டேஞ்சர்னு தெரிஞ்சும் டாக்டர் ஏன் அசால்ட்டா  அவரை அனுப்பிடறார்?


3   ஹீரோவுக்கும்  வில்லனுக்கும் பகைமை ஏற்படக்காரணம் பலமானதா எதுவும்  கிடைக்கலையா? செம மொக்கை பாஸ்



4  வில்லனை கோமாளித்தனமா   பேக்கு போல் காட்டிட்டா  எப்டி ஆடியன்சுக்கு ஒரு பர பரப்பு எதிர்பார்ப்பு ஏற்படும்?


5  ஃபிளாஸ்பேக் சீன்ல அந்தக்கால ஆங்கிலேயர் கதை ஏழாம் அறிவு போதி தர்மன் கதை போல் சாயலில். அதுவும் கிராஃபிக்சில் பொம்மைப்படம் போல் ஏன் காட்டனும்? மனசில் பதியலை

6  ஒரு ஐ டி கம்பெனி ல எல்லாரும் நீட்டா யூனிஃபார்ம்ல ஃபார்மல் ட்ரெஸ்ல வரும்போது  ஹீரோ  ஹீரோயின்மட்டும் சர்ட் பட்ட்ட்னை கழட்டி விட்ட்டு வருவது ஏன்?  யாரு ம்  ஜெர்க் ஆகாதீங்க ,மேல் சர்ட்டைல மேல் பட்டன் மட்டும்

7  இது காமெடிப்படமா? மொக்கைப்படமா? லவ் சப்ஜெக்டா?ன்னு ஒரு முடிவுக்கு வர்றதுக்குள் படம் முடியுது





சி  பி  கமெண்ட் - போக்கிரிராஜா - ஹன்சிகா கிளாமர் /மொக்கை காமெடி வசனங்கள் பி, சி செண்ட்டரில் ஓடும் மீடியமான காமெடி மசாலாப்படம், விகடன் =40 , ரேட்டிங் -2.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - ஓக்கே







 ரேட்டிங்  2.5 / 5


 திருவனந்த புரம் தேவிப்ரியா தியேட்டர்ல் படம் பார்த்தேன் ஜனங்க படத்தை நல்லா சிரிச்சு தான் ரசிக்கறாங்க, ஃபேமிலி ஆடியன்ஸ்  அதிகம்\\

தமிழா! உன் ஆதரவு யாருக்கு? நக்மாவா? குஷ்பூவா? நெஞ்சில் கை வைத்து சொல்!

வருவாய் குறைந்ததும், கடன் பெருகியதும் 
தான் ஜெ ஆட்சியின் சாதனை -ராம்தாஸ் # அதிமுக வாக்கு வங்கியும் 41% லிருந்து 31% ஆக குறைஞ்சிடுச்சு


============


2  செல்போனில் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சியை திமுக தொடங்கியுள்ளது # செல் ஃபோன் மூலம் செய்யும் முயற்சி செல் லாது தலைவா!நாட் ரீச்சபிள்


=============

தமிழ் சினிமாவில் ஜெயித்து காட்டுவேன்: சாக்ஷி அகர்வால்..#,திறமை காட்டுங்க.முடியலைன்னா கிளாமர் காட்டுங்க.ஜெயிக்க ரெண்டே பார்முலாதான்



=============



4 சென்னைIIT.மாணவி சாமியார் ஆசிரமத்தில் மீட்பு: மேலும் மாணவிகள் சிக்கி னர்#,குடியைத்தான் ஒழிக்க முடியல.போலி சாமியார்களையாவது ஒழிக்கலாமில்ல?




============



5 தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது-OPS சொல்றீங்க.வகை தொகையா கேட்கத்தோணுது.நகையா எடுத்துக்கறோம்.




===========



6 பாஜக கூட்டணிக்கு எந்தகட்சி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்-H.ராஜா! # மாரி, கேப்மாரி,மொள்ளமாரி, யார் வந்தாலும் ஏத்துக்குவீங்களா? நீங்க என்ன கலைஞரா?




============



7  திமுகவை தட்டி கேட்கும் உரிமை எனக்கு மட்டும் உள்ளது - அழகிரி  # அப்பாதான் தலைல குட்டி உட்கார  வெச்ட்டாரே?




============



படுத்து கெடந்த காங்கிரசை தூக்கி நிறுத்தியவர் இளங்கோவன் - குஷ்பு # கோமா  ஸ்டேஜ்ல இருப்பவர் படுத்து இருந்தாலும் நிற்க வெச்சாலும் ஒண்ணுதானே?



=============



9  ரூ.14,200 கோடி வரி ஏய்ப்பு: வோடஃபோன் நிறுவனத்துக்கு வருமான வரித் துறை மீண்டும் நோட்டீஸ் # அடேங்கப்பா, வரி ஏய்ச்ச லாபமே இவ்ளோன்னா நிகர லாபம்?



==============



10 குலதெய்வக்கோயிலில் விஜயகாந்த், பிரேமலதா பூஜை #  என்னதான் கட்சிக்காரங்க , நிருபர்களுக்கு கோபத்தில் பூஜை போட்டாலும் சாமிக்கும் பவ்யபூஜை!


==============


11 திமுக விரும்பினால்
திமுக வேட்பாளர்களை
ஆதரித்து பிரச்சாரம்
செய்வேன்-நக்மா # 24 மணி நேரமும் கதவு திறந்தேதான் இருக்கு, தாராளமா நீங்க வரலாம்


===============


12 கார்கிலில் ஊடுருவி வாஜ்பாயின் முதுகில் குத்தியது பாக்-.நவாஸ் ஷெரீப்  # முதுகில் குத்துனது எதிரியா இருந்தா அப்பவே அவன் நெஞ்சில் குத்தனும்


=================

13 ஒரு கட்சியின் தலைவராக அல்லாமல், நாட்டின் தலைவராக திகழ்வேன்-  மோடி  # உள்நாட்டுக்கா?வெளி நாட்டுக்கா? நாம எப்பவும் வெளிநாட்டில்தானே இருக்கோம்?


================


14 அழகிரியின் ஆட்டத்தை சமாளிப்பேன்-கலைஞரிடம் கனிமொழி உறுதிமொழி # வீட்டுப்பிரச்னையையே தீர்க்கமுடியலை, நாட்டுப்பிரச்னையை எப்டி தீர்ப்பாங்க?


==================

15 மாநாடு முடிந்ததும் விருந்து: விஜயகாந்த் ரகசிய ஏற்பாடு # எல்லா பேப்பர்லயும் நியூஸ் வந்திடுச்சே, அப்புறம்  என்ன ரகசியம்?


=============

16 234 தொகுதிகளிலும் திமுக. கூட்டணி வெல்லும் ராகுல் பிரதமர் ஆவார் குஷ்பு பேச்சு. # குழப்பாதீங்க, அப்டியே ஜெயிச்சாலும் கலைஞர் தானே சிஎம் ஆவார்?


================


17 மயிலாப்பூர் தொகுதி யாருக்கு?மல்லுக்கட்டும் குஷ்பு - நக்மா  க்கு தங்கச்சி ஜோதிகா, சூர்யா ரசிகர்களும் ஆதரவு தருவாங்க,அதான் பெஸ்ட்


=================


18  இலவசத்தை காட்டி ஏமாற்றுகின்றனர்!-பண்டாரு தத்தாத்ரேயா ( பிஜேபி)  # இரட்டை இலை  வசம் இருக்கும் ஒரே ஆயுதம் இப்போதைக்கு இலவசம் தான்


===============

19  8 மாநில  இடைத்தேர்தல் உ.பி., கர்நாடகாவில் பா.ஜ., அபாரம்: காங்கிரசுக்கு பின்னடைவு # எல்லோரும் கையை கை கழுவும் நேரம் இது,விதிவிலக்கு-கலைஞர்


===============
20 தவறான பிரசாரத்தை நம்பி, தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்-ஓபிஎஸ் # ஆமா சென்னை  வெள்ள பாதிப்புக்கு இயற்கை சீற்றம் தான் காரணம்,னு சொன்னதைத்தானே?


=====================

Thursday, March 03, 2016

எத்தனையோ மைனஸ் இருந்தும் இந்த ஆட்சி சிறந்ததுன்னு எப்படி சொல்றீங்க?

1  ஃபிகரை கரெக்ட் பண்ணலாம்னு பூக்கடை வெச்சியே என்னாச்சு?

எல்லாரும் ஓசிலயே பூ  வாங்கிட்டுப்போய்ட்டு மறுபடி கடைப்பக்கமே எட்டிப்பார்க்கல


==============

2  டாக்டர்! நோய்வாய்ப்பட்ட எல்லார்க்கும் கைல ஊசி போடறீங்களாமே?

ஆமா, நாய் வாய் பட்டா, ஐ மீன் நாய் கடிச்சா தொப்புள் ல ஊசி


================

டியர், உன்னோடு நான் பேசும்
ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே... !!!ஏன்?

பபுள்கம், சிவிங்கம் சாப்ட்டுட்டே பேசி இருப்பே



================

தலைவரே! நடைப்பயணத்தில் 5 லட்சம் கிமீ நடந்தீங்களா?

பாட்ஷா ஃபார்முலா தான், நான் ஒரு கிமீ நடந்தா 100 கிமீ நடந்த மாதிரி


===============


5 மிஸ்! சமீபத்துல பார்த்ததுல உங்களுக்குப்பிடிச்ச படம் எது?

 எல்லாப்படத்தையும் நான் பால்கனில தான் பார்ப்பேன், சமீபத்துலபோய்ப்பார்க்கமாட்டேன்


================


இன்ட்டர்வ்யூவில்


கேள்வி கேட்டதும் ஸ்கூல் ஞாபகம் வந்துட்டு..."
மிஸ்! அப்ப சம்பளம் குடுக்கறப்ப.ஸ்காகலர்சிப் ஞாபகம் வருமா ?



============

7 டியர்.வில் அம்பு சினிமா்போலாமா?


என்னைப்பொறுத்தவரை உன் புருவம் தான்.வில்.உன் கண் தான் அம்பு.கைல வேற காசில்லை.எதுனா சொல்லி சமாளிப்போம்

========


8 பொண்ணுங்கள்லாம் டெய்லி சேலைல ஆபிஸ் வந்தா செமயா இருக்கும்ல?


ஆமா.ஆனா ஆபீஸ் ல எவனும் வேலை பார்க்க மாட்டான்.சேலையைத்தான் பார்த்திட்டிருப்பான்


========

9 தலைவரே! உங்க வீட்ல இருந்த பசு மாட்டை, ஆட்டுக்குட்டியை ஏன் துரத்தி விட்டுட்டீங்க?

 என்ன தைரியம் இருந்தா அம்மா, அம்மேனு கத்தும்


==============


10 மேடம், பட்ஜெட்ல ஒரு வரலாற்றுப்பிழை இருக்கு

 என்ன அது?

 ஸ்டிக்கர் ஒட்ட ஆன செலவு இத்தனை கோடின்னு கணக்கே காட்டலையே?


=================


11 ஒரே நேரத்துல 2  வேலை செய்யறவங்க ஒருவேலையும் உருப்படியா செய்யமாட்டாங்க 

 ஏன்? தியேட்டர்ல சினிமா பார்த்துட்டே காதலிட்ட சில்மிஷம் பண்றாங்களே?


===============

12 லவ் பண்றப்ப இந்த 'அப்புறம்' வார்த்தைக்கு அப்புறம் என்ன தாங்க பேசுறது ?

 அப்றம் சொல்றேன்,இப்போ லவ் பண்ணிட்டு இருக்கேன்



==============

13  தலைவரே! சமூக வலைதளத்தில் இருப்பவர்களை  ஏன் திட்டறீங்க?


அரசியல்வாதின்னா டெய்லி யாரையாவது திட்டனும், டீச்சர்னா  தலைல குட்டனும்


=================


14 உங்க முத பொண்ணுதான் உங்க குடும்பத்துக்கே முன்னோடியா? எப்டி?

 அவ தான் முத முதலா லவ்வரோட ஓடிப்போனா



===============

15  ஒரு ஃபிகரோட  ஃபோட்டோவைப்போட்டு மை க்ளிக்-னு போட்டிருக்கியே?


ம், க்ளிக் பண்ணிட்டேன்


================

16 கேரளத்துப்பொண்ணுங்க எல்லாம் ஷார்ட் டெம்ப்பர் டைப் னு எப்டி சொல்றே?

ஷார்ட் ஸ்லீவ் ஜாக்கெட் /சுடி /சர்ட் தானே போடறாங்க பெரும்பாலும்


==========

17 தலைவரே! தமிழ் நாட்டின் சுற்றளவு எவ்ளோ?

2 1/2 லட்சம் கிமீ
ஓ.5 லட்சம் கிமீ நடந்ததா சொன்னீங்க?
2,டைம் ரவுண்ட் அடிச்சேன்

============


18 அமைச்சரே! சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் நடத்தியாச்சா?

ம்.மன்னா!,சாதனையை சொல்லிக்காட்டி னால்தான் தெரியும்னா அது சாதனையா?


=============

19 மன்னா! பாரம்பரிய வழக்கப்படி மூத்த மகனுக்குத்தானே பட்டாபிஷேகம்?

என்னைப்பொறுத்தவரை இளைய மகனுக்கு பட்டமணிவிப்பதே ஷேமம்


==================


20  சார், எத்தனையோ மைனஸ் இருந்தும் இந்த ஆட்சி சிறந்ததுன்னு எப்படி சொல்றீங்க?

 போன் ஆட்சி ரொம்ப மோசம், இது மோசம், 2 ல எது பெஸ்ட்? மோசம் தானே?

===============

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (4/3/16 ) 14 படங்கள் முன்னோட்ட பார்வை

1 பிச்சைக்காரன்
2 போக்கிரிராஜா
3 சவுகார்பேட்டை
4 பக்கிபயலுக


 ஹாலிவுட்

5 LONDON HAS FALLEN

மலையாளம்
6 Machuka 
7 Appuram Bengal Ippuram Thiruvithamcore 

தெலுங்கு

8 Guntur Talkies
9 Kalyana Vaibhogame
10 Shourya
11 Shiva Ganga  ( telugu 4)

ஹிந்தி

12 Zubaan
13 Jai Gangaajal
14 Do Lafzon Ki Kahani (hindi)#4/3

# 4/3/16


1 பிச்சைக்காரன்

விஜய் ஆண்டனி நடிப்பில் நாளை திரைக்கு வரவிருக்கும் படம்பிச்சைக்காரன். இப்படத்தை தரமான இயக்குனர் சசி தான் இயக்கியுள்ளார்.
இப்படம் குறித்து சமீபத்தில் ஒரு ப்ரோமோ வீடியோ வந்துள்ளது, இதில் தியேட்டர் கார் பார்க்கிங் செய்யும் நபர், பிச்சைக்காரன் என்ற தலைப்பால் எத்தனை கஷ்டத்தை அனுபவிக்கின்றார் என்பதை கலாட்டாவாக எடுத்துள்ளனர்.
இறுதியில் விஜய் ஆண்டனியே அங்கு வர, அவரை ‘ஏன் சார் இப்படியெல்லாம் தலைப்பு வைக்கின்றீர்கள்’ என அந்த இளைஞர் திட்டுகிறார். மேலும் இப்படம் ஒரு தரமான பொழுதுபோக்கு படமாக இருக்கும் அதே சமயம் இயக்குனர் சசி யின் அழுத்தமான கிளைமாக்ஸ் நம்மை கலங்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

'பிச்சைக்காரன்' பாடலுக்கு எழுந்துள்ள சர்ச்சைக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி விளக்கம் அளித்திருக்கிறார்.
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் 'பிச்சைக்காரன்'. இப்படத்தில் 'பாழா போன உலகத்துல' என்ற பாடலுக்கு சில மருத்துவர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
இதற்கு விஜய் ஆண்டனி விடுத்துள்ள அறிக்கையில், "'பாழா போன உலகத்துல காசு பணம் பெருசு' என்ற சமூக விழிப்புணர்வு பாடலை 'பிச்சைக்காரன்' படத்தின் விளம்பர பாடலாக கவிஞர் லோகன் எழுதியுள்ளார்.
அந்த பாடலில், பண பலம் படைத்த கல்வித்தகுதி இல்லாத சிலர் தன் பண பலத்தை உபயோகித்து தனியார் கல்வி நிறுவனங்கள் சிலவற்றுக்கு லட்சத்தையும், கோடிகளையும் கொடுத்து மருத்துவர்களாகி நல்ல மருத்துவ சமுதயாத்துக்கு களங்கம் விளைவிக்கின்றார்கள் என்பதைத்தான் 'கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டராவுரான்' என்று பாடலாசிரியர் லோகன் குறிப்பிட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த டாக்டர்களை அவமதித்து, லோகன் அந்த பாடலை எழுதவில்லை.
இன்னும் சொல்ல போனால், கவிஞர் லோகனும், பாடலை பாடிய வேல்முருகனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து சாதனை படைத்தவர்கள் தான்.
ஒரு வரியை வைத்து எங்கள் மீது களங்கம் கற்பிக்க வேண்டாம். இந்த பாடலை முழுமையாக கேட்டால் தான், இப்பாடல் எழுதப்பட்ட நோக்கம் என்ன, அது யாருக்காக எழுதப்பட்டது என்பது உங்களுக்கு புரியும். இந்த பாடல் மூலம், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத்த்தான் எடுத்து சொல்கிறோமே தவிர, யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை.
ஒரு நல்ல மருத்துவன் எப்படி வாழ வேண்டும் என்று என்னுடைய முந்தைய படமான 'சலீம்'-ல் வாழ்ந்து காட்டியவன் நான். சமூகத்தின் மேல் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் மேல் மிகுந்த அக்கறை எனக்கும் உண்டு.
பாடலின் அர்த்தம் சிலருக்கு சரியாக புரியவில்லை என்பதால், 'கோட்டா' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'காசு கொடுத்து' என மாற்றி விட்டோம் என்பதை தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாடலாசிரியர் லோகன் எழுதிய பாடல் வரிகள் சிலரை புண்படுத்தி இருந்தால், அதற்கு என் 'பிச்சைக்காரன்' படக்குழுவின் சார்பாக நான் விளக்கமளிக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.


2 போக்கிரிராஜா

 ராம்பிரகாஷ்ராயப்பா இயக்கத்தில் ஜீவா, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் போக்கிரிராஜா படம் மார்ச் 4 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் சொன்ன தேதியில் படம் வெளியாகுமா? என்கிற கேள்வி இப்போது எழுந்திருக்கிறதாம். ஏனெனில் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் பி.டி.செல்வகுமாரின் தயாரிப்பில் வெளியான விஜய்யின் புலி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நிறைய நட்டம் ஏற்பட்டுவிட்டதாம்.
அதனால் அவர்களெல்லாம் ஒன்றுகூடி, எங்கள் நட்டத்துக்குப் பொறுப்பெடுத்துக்கொண்டால் மட்டுமே போக்கிரராஜாவை திரையிட அனுமதிப்போம் என்று சொல்லிவிட்டார்களாம். இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
அந்தப்பேச்சுவார்த்தையின் போது, புலி படத்தால் சுமார் ஆறுகோடிவரை நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்தத் தொகைக்கான பொறுப்பை தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டால்தான் போக்கிரிராஜாவை வெளியிடுவோம் என்று சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
இதனால் தயாரிப்பாளர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அதனால் படவெளியீடு சொன்னபடி நடந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.    

3 சவுகார்பேட்டை

மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “
இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக ராய் லட்சுமி நடிக்கிறார்.  மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டா சீனிவாசராவ், சம்பத், கோவை சரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஜான் பீட்டர் இசையமைக்க படத்துக்கு சீனிவாசரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வி.சி..வடிவுடையான். இவர் 'தம்பிவெட்டோத்தி சுந்தரம்’ என்ற படத்தை இயக்கியதுடன், விரைவில் வெளியாக உள்ள “ கன்னியும் காளையும் செம்ம காதல் ‘படத்தையும் இயக்கி உள்ளார்.
படத்தை பற்றி இயக்குநர் வடிவுடையானிடம் கேட்டோம்…
சென்னையில் உள்ள சவுகார்பேட்டை ஜனசந்தடி அதிகமுள்ள இடம் மட்டுமல்ல… பணம் அதிகளவில் புழங்கும் இடமும் கூட.. அப்படிப்பட்ட சவுகார்பேட்டையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கதை!
காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், திகில், ஹாரர் எல்லாமும் இருக்கும் கமர்ஷியல்  படம் இது. ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று முடிவடைகிறது என்றார் வடிவுடையான்.
4 பக்கிபயலுக

மீனாட்சி அம்மன் வழங்க ஆர்.எஸ்.கே. ஸ்டுடியோ சார்பில் ஆத்தூர் சிவக்குமார் தயாரிக்கும் படத்துக்கு பக்கி பயலுக என பெயரிடப்பட்டு உள்ளது.

இதில் பாரதி, பாலாஜி, மணிகண்டன், வைவுல்லா ஆகியோர் கதையின் நாயகர்களாக அறிமுகமாகின்றனர். அனிதா, பரிமளா ஆகியோர் நாயகிகளாக அறிமுகமாகின்றனர். கராத்தே ராஜா, பாவா லட்சுமணன், ரிஷா, முருகேசன், பகவதி பாலா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாரதி இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.

வாலு வச்ச குரங்கும் சரி, நாலு பேரும் சேர்ந்த கேங்கும் சரி எங்கே போனாலும் சேட்டைதான் என்று ஊர் சுற்றிக் கொண்டு திரியும் நான்கு இளைஞர்கள் வேலை தேடி சென்னை வருகிறார்கள். ஒரு பெண்ணால் அவர்களது முன்னேற்றம் தடைபடுகிறது. அதில் இருந்து மீண்டு எவ்வாறு வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள்கிறார்கள் என்பது கதை.

இதன் படப்பிடிப்பு சேலம், ஆத்தூர், மேட்டூர், ஏற்காடு போன்ற பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

ஒளிப்பதிவு: பகவதிபாலா, இசை: புருஷ், பாடல்: கார்க்கி பிரியா, எடிட்டிங்: ராஜ்கீர்த்தி.



நன்றி - தினமணி  மாலைமலர் ஆல் சினி வெப்சைட்