Thursday, February 04, 2016

1100

1 ஃபேஸ்புக்ல உன் ஃபாலோயர்ஸ்  ஒவ்வொரு பெண்ணா ப்ளாக் பண்ணிட்டே இருக்கியே?, ஏன்?

முன் எச்சரிக்கை நடவடிக்கை, ஆஃபீசில் இருந்து வீட்டுக்குப்போறேன்,இப்போ


=============

2  மன்னன் ரீமேக்கப்பட்டா பாட்டு எப்டி இருக்கும்?



டபுள் ஒன் டபுள் ஜீரோ (1100) என அழைக்காத உயிர் இல்லையே

==============


3 ஆஃபீசுக்கு ஏன் லேட்?

 2 சமையல் செய்யறதுனால லேட் சார்

 2 சமையல்னா?

என் சம்சாரத்துக்கும், சின்ன வீட்டுக்கும் தனித்தனியா சமைக்கனும் சார்


==============

4  சார்.நீங்க எங்கே போனாலும் ஒரு போட்டோகிராபரைக்கூடவே கூட்டிட்டுப்போறீங்களாமே?


அதை விடுங்க .நீங்க எங்கே போனாலும் புருசனைக்கூட கூட்டிட்டே போறதில்லையாமே?


============

5 கடினமான விஷயத்தை எளிதாக புரிய வைக்கும் வித்தை உங்கள் எழுத்தில் இருக்கே எப்டி?


இங்க்லீஷ் புக் ல படிச்சதை தமிழ் ல ட்ரான்ஸ்லேட் பண்ணிடுவேன்



=============

6 டியர்.மேரேஜ்க்குப்பின் ஒரு சுற்று பெருத்துட்டேன் போல.?


ஆமா.இதுவே "இறுதிச்சுற்று" வா இருந்தா நல்லது




============

7 தலைவரே!,ஊழலை வேரோடு ஒழிப்பேன்னு ஏன் சொன்னீங்க?


நாம திருடனும்னா ஏற்கனவே இருக்கும் திருடனை ஒழிக்கனும்.நியூட்டனின் 4ம்.விதி



===========

8 திமுக தேமுதிக கூட்டணி உறுதி னு எப்டி சொல்றே?


கேப்டனோட மாநகரக்காவல் படத்தைத்தான் கலைஞர் பேரன் கெத்து னு ரீமிக்ஸ் பண்ணி இருக்கார்



===========

9 புவியியல் மிஸ் புவனா =,பர்முடா ட்ரை ஆங்கிள் பற்றி சொல்லு.


அதப்பத்தி தெரியாது டீச்சர்.பர்முடாஸ் தான் தெரியும்



=============

10 தாலி கட்ன சம்சாரத்தை காஷ்மீர்ல விட்டுட்டு நீ ஏன் கன்யாகுமரி வந்தே?




ஒருத்தர ரொம்ப புடிச்சிருக்குன்னா அவுங்கள விட்டு தள்ளி இருக்குறதே நல்லதாம்


===============

11 மணிஷ் பாண்டே செஞ்சுரி போட்டதைப்பத்தி  என்ன  நினைக்கறீங்க?

பூனம் பாண்டே   FACEBOOK ல அடிச்ச செல்ஃபி செஞ்சுரி யைத்தொட்டது வேணா தெரியும்


====================


12  ஹலோ! டியர், கடைவீதில இருக்கேன், உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும் ?

 உங்க “சவுரி”யம்


====================




13 டாக்டர், திராட்சை ஒரு கொத்து  டெய்லி சாப்ட்டா முக அழகு முழுக்க வெளிக்காட்டிக்குமாமே? நிஜமா?

முதல் கட்டமா தொண்டை கட்டிக்கும்


=================



14  ஹலோ! மிஸ்! வீட்லயா இருக்கீங்க?

 டேய், லூசு, லேண்ட் லைன் ஃபோனுக்கு பண்ணிட்டு இதென்ன கேள்வி?


=================


15 எங்க என் பார்ட்னர காணும் :(
ஹலோ!எங்க இருக்க பார்ட்னர்? ஓவர் ஓவர்"



டாஸ்மாக் ல தான்.ஓவர் ஓவர் ஓவரோ ஓவர்

=================

16 டியர்.உங்களுக்கு புது பத்திரிகையின் மணம் பிடிக்குமா?

ம்

இந்தாங்க என் கல்யாணப்பத்திரிக்கை.்


=================

17 சார்.உங்க பையனுக்கு தமிழ் சுட்டுப்போட்டாலும் வர்லை.புரோட்டான்னு எழுதச்சொன்னா ரோ பு டா ட் னு எழுதறான்

டீச்சர்.புரியல?அது கொத்து புரோட்டா. பிட்ச்சுப்போட்டிருக்கான். பாசிட்டிவா பாருங்க


=================

18 டியர்.10 வருசமா லவ் மட்டும் தான் பண்றோம்.எப்போ மேரேஜ்?

ட்விட்டர்/ஃபேஸ்புக் அடிக்ட் =,என் ட்வீட் 1000 ஆர் டி ஆனா, ஷேர் ஆனா பார்ப்போம்


===========


19 மிஸ் ! ஐ லவ் யூ.

சாரி.நீ கறுப்பு.

கறுப்பு தான் பேரழகுன்னு FBல போட்டீங்க?
அது வெறும் வார்த்தை.இது வாழ்க்கை


===============

20 டாக்டர்.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டா.ஆரோக்கியத்துடன் வாழலாமா?

ஆமா.அப்புறம் பல் டாக்டருங்க ஆரோக்யமா வாழ முடியாது


================

Wednesday, February 03, 2016

அஜித்க்கு முந்தைய காலம்

தனக்கு 2  ஸ்ரீதேவிக காதலியா இருக்காங்கறதை வெளில பெருமையா சொல்லிக்கிட்டா 3வதா ஒரு  மூதேவி தானாவந்து வலையில் மாட்டும்னு நினைக்கறான் நெட்தமிழன்



=================




அன்பே! அழுதா ரொம்ப அழகா இருக்க-னு  எவனோ  உன் கிட்டே அடிச்சு விட்டிருக்கான், உண்மையைச்சொன்னா சிரிச்சாலே நீ சுமாராதான் இருக்கே!




================



ஜெயம் ரவி நடிச்ச படமான மழைக்குக்கூட தியேட்டர் பக்கம் ஒதுங்காதவங்க நாங்கன்னு சொல்லிக்க ஒரு க்ரூப் இருக்குமே?



==============

4 நெட் தமிழன் லவ் லெட்டர் எழுதறக்கு சமூக வலைத்தளம் வந்து ஐடியா கேட்கறான்.அடுத்து இதை எப்டி பார்ட்டிக்கு டெலிவரி பண்றதுன்னும் கேட்பானோ?


============

5 அனிச்ச மலருக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சாம்.
கருணை மலருக்கு காதலன் பிக்ஸ் ஆகிடுச்சாம்.
மிச்சம் இருக்கறது பனி மலர் தான்

=========


6 தினமும் என் தலை வருடி தன் கையால் என் கூந்தலில் பூச்சுடுபவன் என் தலைவரு டி

==============

7 நேருக்கு நேர் " இவங்க 2 பேரும் மோதப்போறாங்கன்னு என் "ஏழாவது அறிவு "சொல்லுது # தெறி VS 24 @ 14/4/2016

=============


8 அன்பே! டிபி யில் இருப்பது உன் குழந்தை போட்டோவா?இல்ல அந்த குழந்தையே நீ தானா? # டவுட் டே விட்


=============

9 கிரிக்கெட் எப்போ முடியும்? எப்போ நம்ம காதல் கவிதைகளை  ஃபேஸ்புக்ல இறக்கி வைக்கலாம்னு ஒரு லோடு பொண்ணுங்க காத்துக்கிட்டு இருப்பாக போலயே


==================

10 பிரேமம்  மலர் டீச்சர்  வாரா வாரம் நம்ம வீட்டுக்கு வந்தா அது வார மலர் ஆகிடும் இல்ல?


==============


11 பூமிக்கும் காய்ச்சல் 
வரும் என்னவள் 
வாசலில்  நீர் தெளிக்கும் போது


 ஏன்? உங்க ஆளு  சுடு தண்ணியைத்தெளிக்குமா?


==================

12  தினமும் ஹோட்டலில் நீ புரோட்டா சாப்பிட்டால் விரைவில் எமனின் புரோட்டோ கால் லிஸ்ட்டில்  இடம் பிடிப்பாய், மரனப்படுக்கையில் படுப்பாய்!


=================



13 ஐ.பி.எல் க்கு  மனிஷ் பாண்டே !!
அரசியல்வாதிகளுக்கு  ரங்கராஜ் பாண்டே !!
சினிமா வுக்கு பூனம் பாண்டே!


==================


14  ஆண் பெண் நட்பு எத்தனை வகைப்படும்? அவை யாவை?


1  மற்றவர்களுக்கு ஒரு முன் மாதிரி நட்பு
2 ஒரு மாதிரி நட்பு
 என  2 வகைப்படும்

====================


15  பழநி மலை முருகனுக்கு தைப்பூசத்துக்கு அரோகரா
ரஜினி முருகனுக்கு வசூலில் க்ரோர் க்ரோரா


================

16 வரனும் பழைய பன்னீர்செல்வமா வரனும் அப்டினு  மிசஸ் ஓபிஎஸ் மனசுக்குள்ளே ஆசைப்பட்டிருபாங்க இல்ல?


===================



17  அவசர உதவி எண்ணைக்கூட நிதானமா யோசிச்சு இரட்டை இலையை நினைவுபடுத்துவது போல் கூட்டுத்தொகை 2 வருவது போல் அமைச்சிருக்காங்க ( 1100= 1+1+0+0=2)



=================


18  ஆம்பளைக்கு முடி நரைச்சா இனி பொண்ணுங்க கண்டுக்க மாட்டாங்க என்பதெல்லாம் அஜித்க்கு முந்தைய காலம்


===================


19 பொண்ணுங்க குண்டானா ஆண்கள் ரசிக்க மாட்டாங்க என்பது குஷ்பூ, ஹன்சிகா வுக்கு முந்தின காலம்


=================

20 காதலியிடம் லேண்ட் லைன் ஃபோன் நெம்பர் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள், கோபத்தில் செல் ஃபோனை ஆஃப் செய்யலாம்,அவசரத்துக்கு உதவியாக இருக்கும்

==================

மேய்க்கறது எருமை, வெளில சொன்னா சிறுமை, இதுல என்னம்மா பெருமை?

1  கூட்டணிக்காக தேமுதிக. பதிலை எதிர்பார்க்கிறோம்: -வைகோ -# வைகோ வைGO GO  என துரத்தினாலும் கேப்டன் வீட்டு வாசலை விட்டு கிளம்பமாட்டார்போல



==============



தேர்தல் கூட்டணிக்காக தே.மு.தி.க. பதிலை எதிர்பார்க்கிறோம்: நெல்லையில் வைகோ   தனியே , எதிர் பார்த்திருந்தேன் உனையே




===========================




ஆபாச படங்களில் நடித்தற்காக பெருமைப்படுகிறேன்: சன்னி லியோன் # மேய்க்கறது எருமை, வெளில சொன்னா சிறுமை, இதுல என்னம்மா பெருமை?





==================




4  படிக்கும் போதே ஜெ 100 க்கு 100 எடுத்தவர் -OPS # நல்ல வேளை வாத்தியார் குமாரசாமியா இருந்தா 110 போட்டிருப்பாரு, குழப்பம் ஆகி இருக்கும்




==================




5  எம்ஜிஆரிடம் இருந்ததை எல்லாம் பறித்துக் கொண்டு விரட்டிவிட்டவர் தான் இந்த ஜெ-இளங்கோவன் # இல்லையே , கூலிங்க் கிளாஸ், தொப்பி மிச்சம் இருந்துதே?




=====================


6  சர்வதேச கால்பந்து நடுவராக தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல் ரூபாதேவி
# தமிழ் நாட்டுக்குப்பெருமை சேர்க்க பெண் ரூபத்தில் ஒரு தேவதை.


=============


7 இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள்!-எஸ்.ஏ.சந்திரசேகரன் # யாரும் ஜெர்க் ஆகாதீங்க.அண்ணன் சொன்னது சிம்பு தேவனை


=============

8 100 நாளில் தமிழகத்துக்கு விடிவு வந்துவிடும்: குஷ்பு ஆரூடம் # 100 நாள் கழிச்சு தெறி தான் ரிலீஸ் ஆகுது.விடிஞ்சிடும்


=============

9 விஜயதாரணி குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை - ஈவிகேஎஸ் இளங்கோவன்"# பதில் சொல்லத்தெரியலை ,சொல்ல முடியலைனு சொல்லுங்

===============

10 அதிமுக அரசு 5 ஆண்டுகளாக சிறப்பாக மக்கள் பணியாற்றி வருகிறது: முதல்வர் ஜெ 5 வருசம் ஒர்க் 5 வருசம் ரெஸ்ட்.இதான் தமிழக பார்முலா


==============

11 ஊழல் பெருச்சாளிகளை வேரோடு ஒழிப்போம் : கலைஞர் # கழகம் ஒரு ஆலமரம் னு சொன்னாரே இந்த அர்த்தத்தில் தானா?


=============

12 தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7% பேர் ஆதரவு,அதிமுக ஆட்சி அமைக்க 35% ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு # கேப்டனோட ஆதரவு யாருக்கோ அது ஜெயிக்கும்


=============

13 போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு கருணாநிதி வேண்டுகோள்# அப்டியே போலி வேட்பாளர்களையும் நீக்கிடச்சொல்லிடுங்க தலைவரே


===========

14 கெத்து'= ஆணவம், செருக்கு என்று பொருள்.. திருப்புகழை பாடி நீதிபதி விளக்கம் # ஓ.பாட்டாவே படிச்ட்டாரா ?திருப்புகழைப்பாடப்பாட வாய் மணக்கும்

==============

15 தேர்தல் கருத்துக் கணிப்பு; மக்கள் மனநிலையை மாற்ற முடியாது: ராமதாஸ் கருத்து # அப்போ மாற்றம், முன்னேற்றம் எல்லாம் இனி 2021 ல் தானா?


==================


16 தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம்: ஜெ # மேடம், தமிழ்க்”குடி” மக்களுக்கு உங்க மேல “ ஃபுல்” கான்ஃபிடன்ஸ் இருக்காம்


===============


17 பேரவையில் உரிமைக் குழு அறிக்கையை கிழித்து திமுகவினர் அமளி # (முன்னாள்)எதிர்க்கட்சியா என்னத்தைக்கிழிச்சீங்க?னு இனி கேட்க முடியாது   இல்ல


==================

18 அதிமுக சாதனை பட்டியல் உரையை வாசிக்க தொடர்ந்து 36 நாட்கள் தேவைப்படும்.-ஜெ:  # அப்போ இன்னும் 36 நாளுக்கு ஒரே ஜால்ரா சத்தம் தான் கேட்குமா?


===================

19  போலி கருத்துக்கணிப்புகள் மூலம் மக்களின் மனநிலையை மாற்றமுடியாது -ராமதாஸ் #  தமிழன்  என்னைக்கும் ஸ்டெடியாத்தான் இருப்பான் தண்ணி அடிக்கும் வரை


===================

20   இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அ.தி.மு.க மக்களுக்காகவே இயங்கும்-ஜெ# இன்னைக்கே கிடைக்காத கிலாக்காயா நாளைக்கு பலாக்காயா?


========================

Tuesday, February 02, 2016

தமனாக்கு ஆஸ்கார் விருது!!?? தமிழர்கள் அதிர்ச்சி!

1  மதுவை கொடுத்து மக்களை கெடுப்பதில் அதிமுகவும், திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: ராமதாஸ்  # மப்பு தெளிஞ்சுட்டா இவங்க ஊழல் தெரிஞ்சுட்டா?அதான் தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிக்கறாங்க



================




2  இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் பெரும்பாலான பாஸ்வேர்டு 123456 - செய்தி #  இதைத்தான் ரஜினி தர்மதுரைலயே 1991ல  பாடிட்டாரே?




=================




ஜல்லிக்கட்டு குறித்து பேச திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தகுதி இல்லை: ஓ.பன்னீர்செல்வம் # உங்களுக்குத்தகுதி இருக்கு, ஆனா பேச முடியாது




==================



கோயிலுக்குள் காலணி அணிந்து வந்ததாகப் புகார்: சல்மான் கான், ஷாரூக் கானுக்கு எதிராக வழக்கு # கார் ஏத்திக்கொன்ன வழக்கிலயே தப்பியாச், இது ஜூஜுபி




=================




5  கட்டடம் கட்டியபிறகே கல்யாணம்: விஷால் உறுதி #  ஏனுங்க்ணா, கண்ணாலம் கட்ன பிறகு கட்டிடம் கட்னா சங்கத்துல ஒத்துக்கமாட்டாங்களா?எதுனா ஒரு சால்ஜாப்




===================




6  இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தான் செயல்பட வேண்டும் ஃபரூக் அப்துல்லா # அதுக்குத்தானே சானியா மிர்சாவை அங்கே கட்டிக்கொடுத்திருக்கோம்




===================




7  கேரளாவில் சங்கீத அகாடமி தொடங்க இளையராஜாவுக்கு 5 ஏக்கர் நிலம்: கேரள முதல்வர் அறிவிப்பு #  கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் வரப்பு




==================




தமிழக அரசின் தற்போதைய நிகர கடன் ரூ. 1.98 லட்சம் கோடி மட்டுமே - ஓ.பன்னீர்செல்வம் # அடடே, 2 ஜி ஊழல் மதிப்பு அளவுதானா? தேவலையே?




================



திருத்தணியில் இருந்து பிரச்சாரத்தை துவங்கும் ஜெயலலிதா # வாக்காளர்களுக்கு  வாக்கு கொடுத்து பின் ஜெயிச்சபின் மொட்டை அடிக்கப்போறாங்க, குறியீடு




==================




10 பெங்களூரில் ஐபிஎம் ஊழியை கொலை: 3 மணிநேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்த போலீஸ்  # சூப்பரு, ஒரு சினிமா பார்க்கற டைம் தான் 




====================



11 ஒரே நேரத்தில் 12 வகையான ஒயின் குடித்த மதுபான விடுதி ஊழியர் உயிரிழப்பு..# ஓசி ல கிடைச்சா எதை வேணாலும் அளவில்லாம அடிச்சுடவேண்டியது




============
12  பிரதமரின் வங்கிக் கணக்கு திட்டத்தில் வைப்புத் தொகை ரூ.30 ஆயிரம் கோடியை தாண்டியது # மோடியின் திட்டங்களில் இது ஒரு உருப்படியான விஷயம்



=============


13 விவசாயத்துறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விருப்பம் # நம்ம மண்ணில் கால் வைக்க அயல்நாட்டு மண்ணுக்கு அனுமதி அளித்தால் அபாயம்


===========

14 பஞ்ச் டயலாக்குடன் 26/1/16ல் வெளியாகிறது் 'தெறி' டீசர்!# ஆபீசுக்கு லீவ் போட்டுட்டு டீசரை பஞ்சர் பண்ணக்காத்திருக்காங்க அஜித் ரசிகர்கள்


==========

15 என்னை நீக்கியதற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் காரணம் விஜயதாரணி அதிரடி குற்றச்சாட்டு# பேரை அஜித் தாரணின்னு மாத்திப்பாருங்க.ஒர்க் அவுட் ஆகலாம்

============

16 கிருஷ்ணகிரி-டாஸ்மாக் கடைக்கு சென்ற கணவரை காணோம். நீதி கேட்கும் மனைவி # எல்லா சாக்கடை ஓரத்திலும் தேடிப்பாருங்க.மப்புல உருண்டு கிடப்பாரு


==============

17 நீதிபதிகள் பற்றி அவதூறு. மன்னிப்பு கேட்ட் வைரமுத்து : வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட் பேசுனதுக்கு சாரி.இன்னைக்கு வீட்ல டிபன் பூரி


================

18 2016ல் மக்கள் வாழச் சிறந்த நாடுகள்... ஜெர்மனி முதலிடம்... இந்தியாவிற்கு 22! # ஜெர்மனியின் செந்தேன் மலரே!


==============



19 நயன்தாராவுக்கு இணையாக சம்பளம் கேட்கும் காஜல் அகர்வால் #  நயன் தாராக்கு இணை ஆக சம்பளம் கேட்கும் காஜல்னு ஒரு அர்த்தம் வருது


===================


20 வெள்ளையா இருந்தாதான் ஆஸ்கர் அவார்டு கிடைக்குமா?விழாவை புறக்கணிக்கும் வில் ஸ்மித்   எல்லாம் இல்லீங்க, தமனாவுக்கு குடுத்திருப்பாங்களே?


======================