Skip to content

Tuesday, February 02, 2016

அறிமுகம் இல்லா பெண்ணுக்கு SMS அனுப்பாதீர்! - VMSS அபாயம்

கால் வயிறு தண்ணீர் ,அரை வயிறு உணவு,கால் வயிறு வெற்றிடம் என்பதே உணவுக்கட்டுப்பாடு



==========
2 தினசரி உடல் பயிற்சியில் 4 கிமீ நடைப்பயிற்சி ஒரு அங்கமாக இருந்தால் உன் உடல் ஆரோக்யத்துக்கு ஒரு பங்கமும் வராது



============



3 அஸ்கா (வெள்ளை சர்க்கரை) தவிர்த்து பனங்கற்கண்டு,பனை வெல்லம் ,நாட்டு சர்க்கரை ,கொப்பத்து வெல்லம் இவற்றை இனிப்புக்கு சேர்த்து வந்தால் நல்லது



===========



4 மைதா மாவில் செய்யும் பதார்த்தங்கள் (கேக் ,பிஸ்கெட்,புரோட்டா) முற்றிலும் தவிர்ப்பீர்.கோதுமை மாவு .ராகி மாவு உபயோகிப்பீர் (பக்கோடா)




============



5 தினமும் வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் (4 டம்ளர்) அருந்திவிட்டு பின் 1 மணி நேரம் எந்த பானமும் அருந்தாமல் இருந்தால் அது சிறந்தது




==============



6 தினமும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டால் உங்கள் வாழ்க்கை வெற்றி நடை போடுகிறது என அர்த்தம்



=============




7 நீங்க வாலண்ட்ரியாப்போய் ஃபேஸ்புக்ல ? ட்விட்டர்ல  பொண்ணுங்களுக்கு வணக்கம் வைக்கறப்போ  இ கா வ சொன்னா அது இனிய காலை வணக்கம் இல்லை, இளிச்சவாயன் காலைலயே வந்துட்டான்




===================



ஒரு ஒயிஃப் மனசில எப்பன்னாலும் விதவிதமான டவுட் தோன்றிகிட்டே இருக்கும் !"அதனால புருசன் ஜாக்கிரதையா தப்பு செய்யனும்



=============


9 வெற்றியும் பெறணும் ஆனா மத்தவங்க பொறாமையும் படக்கூடாதுன்னா பெற்ற குழந்தைக்கு வெற்றி ன்னு பேர் வெச்சுடலாம்


============

10 அறிமுகம் இல்லா பெண்ணுக்கு SMS அனுப்பாதீர்!

பொண்ணு கோபமா இருந்தா VMSS இல்லையா?என கேட்கக்கூடும் ( வெட்கம் ,மானம் ,சூடு ,சுரணை)


================


11 குளிர் சாதனப்பெட்டி (பிரிட்ஜ்)யில் வைக்கப்பட்ட எல்லாப்பொருட்களும் உடல் நலனுக்கு கேடு


============

12 உண்மையில் ஆரோக்யமான போட்டி என்பது ஒரே ஏரியாவில் பல மருத்துவமனைகள் இருப்பதே!


===============


13 அறியாமல் நீ செய்த தவறு அன்பே உன் கையால் சமைத்தது.

அரியாமல் செய்த தவறு காய்கறியை அரியாமல் சாம்பாரில் போட்டது
=============



14 காதலர்களுக்கு இடையேயான  அலை பேசி உரையாடலில் பெரும்பாலான ஃபோன் கட் ஆணுடையதாகத்தான் இருக்கும், ஏன்னா அவுட்கோயிங்க் கால் பேசும் பெண்கள் கம்மி



================

15 குழந்தைக்குப் பெயர்வைக்க கூகுளில் தேடாதீர்கள்! இலக்கியத்தில் தேடுங்கள்!!என யாரும் சொல்லாதீர்கள், கூகுள் சர்ச்சிலும் இலக்கியம் கிடைக்கும்

================


16 விலை உயர்ந்த வைரக்கல் மோதிரத்தை நீ பரிசாகக்கோடுத்தாலும் ரொம்ப சிறுசா இருக்கே? என குறை சொல்பவர்கள் பெண்கள்

===============


17  அய்யே, இது எச்சில்  என லிப் கிஸ் கொடுக்கும்போது யாரும் முகம் சுளிப்பதே இல்லை


===============


18  பாய் ஒரு ஓரத்தில் கிழிஞ்சிருந்தா அதை ஸ்மைலி பாய் எனவும் சொல்லலாம்


===============

19 நெட் தமிழன் புதுசா ஒரு டெக்னிக் கண்டுபிடிச்சிருக்கான், பொண்ணுங்க கிட்டே இப்பவெல்லாம் உங்க அம்மா, அப்பா, பாட்டி தாத்தா. நலமா?னு விசாரிக்கறான்


=================


20  முகத்துக்கு ஸ்னோ தடவ நோ சொல்லாத பெண்கள் கம்மி



=====================

Monday, February 01, 2016

தினமும் காலையில் பிரட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?டாக்டர்?

1  தினமும் காலையில் பிரட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?டாக்டர்?


மேடம்.பிரட்டிவிமன் (PRETTY WOMAN)ஆகனும் னா பிரெட் ,டீ சாப்டனும்னு அவசியம் இல்ல



===========


2 டியர்! 3 நாளா வேலைக்கார லேடி வரல. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க 


ஒரு வெள்ளைக்கார லேடி எனக்குத்தெரியும், வீட்டுக்கு கூட்டிட்டு வரவா?

==================


3  டாக்டர், ஆண் மூலம் அரசாளுமா?

 ஏம்மா, மூல நோய்க்காரங்க உட்காரவே முடியாது,எங்கிருந்து அரியாசணத்தில் அமர்ந்து ஆட்சி எல்லாம் பண்றது?


================


பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை எல்லாம் நம்பமாட்டேன்,


ஏன்?

 முதல் பாவம் நாயகி அபிலாஷாவுக்கு 10 லட்சம் சம்பளம், ஆண்பாவம் ஹீரோவுக்கு 20 லட்சம்


=================

ஹலோ! அம்மா குறை தீர்க்கும் மையமா?

ஆமா, உங்களுக்கு என்ன குறை?


லைனே கிடைக்க மாட்டேங்குது, எங்கேஜ்டாவே இருக்குனு பலர் குறைபட்டுக்கறாங்க


=================


6  டிக்டேட்டர் படத்தை அஜித்க்குப்பதிலா கமல் ரீமேக்கினா டைட்டில் என்ன வைப்பாங்க?


டிக் டிக் டிக் நைட்டர்


================


7   ஒரு லெட்டர் கூட ஒழுங்கா பிரிண்ட் அவுட்  எடுக்கத்தெரியல, என்னம்மா டைப்பிஸ்ட் நீ?

 ரிசர்வ் பேங்க்லயே 1000 ரூபா நோட்டை தப்பா பிரிண்ட் பண்றாங்க, என்னைக்குறை சொல்ல வந்துட்டீங்க?



=================


8  டியர், லிப் கிஸ்க்கு மூக்குத்தி  தடையா இருக்கு, அதைக்கழட்டேன்

 ஆங், நம்ப மாட்டேன், அடகு வெச்சுடுவீங்க


================


9  சார், தியேட்டருக்குப்போனீங்களே, படம் எப்படி?

 கேண்ட்டீன்ல பப்ஸ் நல்லாருந்தது

 சார், படம் படம்.

ஐஸ்க்ரீம் செம டேஸ்ட் தெரியுமா?


================

10   மகளிர் அணித்தலைவியைப்பார்த்து மேடைல தலைவர்   கட்சியின் பூலான் தேவியே! அப்டிங்கறாரே?

பூமா தேவியேன்னு தான் சொல்ல வந்தார், டங்க் ஸ்லிப்டு


======================


11  சார், நீங்க ட்விட்டர்/ ஃபேஸ்புக் வந்து இதுவரை என்ன சம்பாதிச்சிருக்கீங்க?

கெட்டபேருதான்


==================


12 தலைவரே! பொங்கல் பரிசா 2 அடி நீள கரும்புத்துண்டு ஏன் கொடுத்தீங்க?

2 அடின்னா இரட்டை இலை, 5 அடி குடுத்தா உதய சூரியன்


=================


13 சார், உங்க SB  அக்கவுண்ட்ல மினிமம் பேலன்ஸ் இல்லை,1000 ரூபா கட்டுங்க

 அய்யய்யோ, என் கிட்டே இருக்கற மேக்சிமம் பேலன்சே   200 ரூபாதானுங்க


==================


14 நீரில் நனையாதத் தன்மை {water proof} பட்டுப் புடைவை  ஒரு லட்சம் ரூபாய் தான்.

 ஏம்மா, அதுக்கு நாங்க துவைக்காமயே சாதா புடவையை வெச்சுக்கறோம்


================


15   டாக்டர்! காலைல டைம் முத்தம் தர கரெக்ட் டைம்னு எப்படி சொல்றீங்க?

 அப்பொதான் மவுத்வாஷ் பண்ணி  ஓரளவு சுத்தமா இருப்பீங்க?


=================


16 டாக்டர்! கடலை எண்ணெய்ல எள்ளுப்பொடி கலந்து தோசைக்கோ இட்லிக்கோ தொட்டுக்கிட்டா நல்லதா?


 எள்ளு நல்லது, எண்ணெய் கெட்டது ,  ப்ளஸ் இண்ட் மைனஸ்  மைனஸ்


==================




19  மிஸ்! நீங்க கீர்த்தி மாதிரி இருக்கீங்க
 டேய் லூசு, என்பேரே கீர்த்திதான்
கீர்த்தி சுரேஷ் மாதிரி
கீர்த்தி எப்படி சுரேஷ்மாதிரி இருக்கமுடியும்



=====================


20  இண்ட்டர்வ்யூவில்

மிஸ்! உங்க பேரு என்ன?


பவானி.

ஓஹோ.உங்க தங்கச்சி பேரு குமார பாளையமா? அக்கா பேரு பள்ளி பாளையமா?

=============

எம்.ஜி.ஆர் ஆட்சியில் சலசலக்க வைத்த ராபின் மெயின் வழக்கு

எம்.ஜி.ஆர். உடன் ஜெயலலிதா | தி இந்து புகைப்பட ஆவண காப்பகம்.
எம்.ஜி.ஆர். உடன் ஜெயலலிதா | தி இந்து புகைப்பட ஆவண காப்பகம்.
ராபின் மெயின் மோசடி வழக்கு. இது, அரசியல் பெரும்புள்ளி ஒருவரும் சம்பந்தப்பட்ட வழக்கு. பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 32 காலங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜனவரி 29) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 32 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு என்ற இக்காரணத்தை தவிர வேறு சில காரணங்களுக்காகவும் இந்த வழக்கை சற்று பின்னோக்கிப் பார்க்கலாம்.
அவ்வாறு சற்றே காலச்சக்கரத்தை பின்னோக்கிச் செலுத்தினால், எம்.ஜி.ஆர். தலைமையிலான அப்போதைய ஆட்சியில் ராபின் மெயின் வழக்கு ஏற்படுத்திய சலசலப்பும், அதிமுகவில் ஜெயலலிதா, காளிமுத்து உள்ளிட்ட பலரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும் தெரியவரும்.
1985 அக்டோபர் மாதம். அப்போதுதான் ராபின் மெயின் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார். அவர் மீதான கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், அவர் அன்றைய வேளாண் அமைச்சர் காளிமுத்துவின் நண்பர்.
நண்பர் மீதான கைது நடவடிக்கையையும், அந்த வழக்கில் தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் சற்றும் எதிர்பாராத காளிமுத்து, ஜெயலலிதா மீது விமர்சனங்களை குவித்தார்.
அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவை எம்ஜிஆர் மீண்டும் நியமித்ததற்கு கட்சியில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காளிமுத்து தெரிவித்த எதிர்ப்பே மிகக் கடுமையானது. ஜெயலலிதாவை ஏன் கொள்கை பரப்புச் செயலராக நியமித்தீர்கள் என எம்.ஜி.ஆரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் திராவிட கட்சியின் அதிகாரத்தை முடிவு கட்ட ஜெயலலிதா சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் எம்.ஜி.ஆரிடம் கூறினார்.
ராபின் மெயின் வழக்கில் வேண்டுமென்றே தன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார். சிபிஐ தன் மீது அவ்வாறாக குற்றம் சுமத்த ஜெயலலிதாவே முழுமுதற் காரணமாக இருந்தார் எனவும் கூறினார்.
மேலும் ராபின் மெயின் வழக்கு தொடர்பாக தனது உதவியாளர் மாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரி ஒருவர், மூன்று மாதங்களில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற இந்திரா காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவை தமிழக முதல்வராக்கவும் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்ததாக கூறினார்.
காளிமுத்து - ஜெயலலிதா காரசார வாக்குவாதம்
இந்தக் குற்றசாட்டுகளையெல்லாம் திட்டமிட்டு மறுத்த ஜெயலலிதா, கற்பனை அடிப்படையில் காளிமுத்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் என்றார். இல்லை, நான் அவரது (ஜெயலலிதாவின்) அரசியல் எதிர்காலத்துக்கு சவாலாக இருப்பேன் என்பதற்காகவே என் மீது போலி குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா சுமத்துகிறார் என்ற பதில் வாதத்தை முன்வைத்தார் காளிமுத்து. இந்த வார்த்தைப் போர் ஓயவில்லை, "யாரோ ஒருவர் செய்த குற்றத்துக்கு நான் பலிகடா ஆக முடியாது" என்றார் ஜெயலலிதா. இவ்வாறாக பதிலுக்கு பதில் தொடர்ந்து கொண்டே இருந்தது.
எம்.ஜி.ஆர். வைத்த முற்றுப்புள்ளி:
தொடரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் 1985 அக்டோபர் 28-ம் தேதி எம்.ஜி.ஆர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை தாக்கல் செய்தனர். இந்த அதிரடி அறிவிப்பால், சலசலப்புகள் சற்று ஒய்ந்தன.
அந்த வேளையில்தான், சிபிஐ தனக்கு எதிராக ராபின் மெயினிடம் வாக்குமூலம் பெற சிபிஐ முயற்சிப்பதாக எம்.ஜி.ஆரிடம் முறையிட்டார் காளிமுத்து. இதனையடுத்து எம்.ஜி.ஆரும், சட்ட அமைச்சர் பொன்னையனும் காவல்நிலைய லாக்-அப் நிலவரம் அறிவதாக கூறி அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். எழும்பூர் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அங்குதான் ராபின் மெயின் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியே சலசலப்பும், பரஸ்பர குற்றச்சாட்டுகளும் அவ்வப்போதும் எழுந்தும், மறைந்தும் இரண்டு ஆண்டுகள் உருண்டோடின.
1987-ல் எம்.ஜி.ஆர். மறைந்தார். அவருக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அதுவரை ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவந்த காளிமுத்து, ஜெயலலிதா தரப்பில் ஐக்கியமானார். பின்னர் அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.ஆனார். ஆனால், எல்லாம் அப்படியே சுமுகமாக செல்லவில்லை. திடீரென காளிமுத்து திமுகவுக்கு திரும்பினார். அங்கும் அவர் வெகு காலம் நீடிக்கவில்லை. மீண்டும் அதிமுகவுக்கே வந்தார்.
2001-ல் காளிமுத்துவை சட்டப்பேரவை சபாநாயகராக ஆக்கினார் ஜெயலலிதா. 4 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் 2005-ல் ராபின் மெயின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு காளிமுத்துவுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அப்போது, காளிமுத்து பதவி விலக வேண்டும் என வலுவான எதிர்ப்புக் குரல் உருவானது. ஆனால், சபாநாயகர் பதவியை காளிமுத்து ராஜினாமா செய்யத் தேவையில்லை என ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்தார். வழக்கில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக காளிமுத்து மாரடைப்பில் இறந்தார்.
ராபின் மெயின் வழக்கில் குற்ற வாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த காளிமுத்து உட்பட 16 பேர் வழக்கு நடத்து கொண்டிருக்கும்போதே இறந்துவிட்டனர்.
ஆனால், ராபின் மெயின் வழக்கு அதிமுகவில் ஏற்படுத்திய சர்ச்சைகளையும் சமரசங்களையும் யாரும் மறக்க முடியாது


ராபின் மெயின் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் | படம்: சிறப்பு ஏற்பாடு.
ராபின் மெயின் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் | படம்: சிறப்பு ஏற்பாடு.
தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட முன்னாள் அமைச்சர் காளிமுத்து மற்றும் அவரது நண்பர் ராபின் மெயின் உள்ளிட்ட 32 பேர் மீதான மோசடி வழக்கின் விசா ரணை முடிந்து 32 ஆண்டுகளுக் குப் பிறகு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 5 பேருக்கு சிறை தண் டனையும், அபராதமும் விதித்து சி.பி.ஐ பொருளாதார குற்றப்பிரிவு நீதிபதி உத்தரவிட்டார்.
1982-ம் ஆண்டில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தவர் காளிமுத்து (பின்னர் இவர் தமிழக சட்டப்பேரவை சபா நாயகராகவும் இருந்தார்). 1982-83-ம் ஆண்டுகளில் அரசுடைமை யாக்கப்பட்ட வங்கிகளில் வேளாண்மை துறை நிதியை முதலீடு செய்வதாகவும், அதற்கு கைமாறாக அவர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டுமென ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக புகார் கூறப்பட்டது.
காளிமுத்துவின் சிபாரிசின் பேரில் அவரது நண்பர்கள் ராபின் மெயின், சூரியக் குமார், சாகுல் அமீது, சோமசுந்தரம், பசில் சாம் உள்ளிட்ட சிலர் ஒன்றரை லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை லாரி மற்றும் டிராக்டர்கள் வாங்குவதற்கு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். கடன் பெறுவதற் காக போலி ஆவணங்கள் தயாரித்து வங்கிகளில் சமர்ப்பித்துள்ளனர். இதன் மூலம் 15 லாரி மற்றும் டிராக் டர்கள் வாங்குவதற்கு கடன் பெற்ற தாக குற்றச்சாட்டு எழுந்தது. கடன் பெற்றவர்கள் சிலர் வங்கிகளில் பெற்ற கடனுக்கு உரிய தவணை தொகையை செலுத்தவில்லை. வாகனங்கள் குறித்து வங்கிகள் தரப்பில் விசாரித்தபோது வங்கி களில் சமர்ப்பித்த ஆவணங் களில் உள்ள பதிவு எண் களில் உள்ள வாறு வாகனங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, வங்கிகள் சார்பில் சி.பி.ஐ போலீஸாரிடம் புகார் செய்தனர்.
சி.பி.ஐ 1984-ல் வழக்கு பதிவு செய்தது. முன்னாள் அமைச்சர் காளிமுத்து, அவரது உதவியாளர் மாணிக்கம், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ராபின் மெயின், சூரியக் குமார், சாகுல் அமீது, பேசில் சாமுவேல், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 6 பேர், வாகன மதிப்பீட்டாளர்கள் 4 பேர் உள்ளிட்ட 32 பேர் இந்த வழக் கில் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டிருந்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளிலும், இந்திய ஊழல் தடுப் புச் சட்டத்தின் கீழ் ஒரு பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
1984-ல் சி.பி.ஐ பொருளாதார குற்றப்பிரிவினரால் தொடரப்பட்ட இந்த வழக்கில் 1987-ல் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்டது. 96 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 32 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்ற வாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த காளிமுத்து உட்பட 16 பேர் வழக்கு நடத்து கொண்டிருக்கும்போதே இறந்துவிட்டனர். அதனால் தற் போது உயிருடன் உள்ள 16 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. நேற்று இவ்வழக்கில் 5 பேரை குற்றவாளிகள் என அறிவித்தும் 11 பேரை விடுதலை செய்தும் சென்னை சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் நீதிபதி கே.வெங்கடசாமி தீர்ப்பு வழங்கினார்.
சி.பி.ஐ தரப்பில் வழக் கறிஞர்கள் கீதா ராமசேஷன், எம்.வி.தினகர் ஆகியோர் ஆஜ ராகினர்.
ராபின் மெயின் - 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. ஒரு கோடியே 8 லட்ச ரூபாய் அபராதம்.
சூரியக் குமார்- 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம்.
சோமசுந்தரம்- 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. 20 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம்.
சாகுல் அமீது- 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம்.
பசில் சாம்- 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. 3 லட்சம் ரூபாய் அபராதம்.
அபராதத் தொகை ஒரு கோடியே 65 லட்சத்து 500 ரூபாயில் 52 லட்சம் ரூபாயை வாகனக் கடன் வழங்கிய வங்கிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, குற்றவாளிகள் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


நன்றி - த இந்து

தெறி படம் வேட்டைக்காரன் மாதிரியே ஹிட் ஆகும்னு எப்டி சொல்றே?

சூரிய உதயத்துக்கு முன் நீ எழுந்து விட்டால் உன் வெற்றிக்கு அஸ்தமனம் கிடையாது


============



2 சக மனிதனுக்கு எந்த உதவியும் செய்யாதவர்கள் ,செய்ய நினையாதவர்கள் தான் இந்த சமூகத்தில் மிகவும் பின் தங்கிய மக்கள்




===========



3 பெற்றோர் ,பெரியோர் சொல் கேட்டு நடக்க வேண்டும்.அதிகாலையில் தினம் 4 கிமீ நடக்க வேண்டும்.இவை உன் வாழ்வில் தினம் நடக்க வேண்டும்




============




4 வீண் ஆனது என நாம் ஒதுக்கிய பல உபயோகமானவையாக இருக்கக்கூடும்.உதா - பிர"வீண்" என்ற பெயர்ச்சொல்லுக்கு திறமைசாலி என்று பொருள்



=============




5 தலைவர்கள் ,நடிகர்கள் வாழ்வு உயர தாமாக முன் வந்து பல்லக்குத்தூக்கத்தயாராக இருப்பவர்கள் இருக்கும்வரை இந்த சமூகம் முன்னேறாது



=============




6 வயிறு பசியுடன் இருக்கும் நேரமே மூளை சுறுசுறுப்பாக இயங்கும் தருணம்.எனவே பசித்த உடனே சாப்பிடாதீர்!




==============



7 பட்டுப்போல் மென்மையாக இருப்பதால்,பட்டுப்புடவையைக்கட்டிக்கொள்வதால் தொட்டுத்தொடரும் பாரம்பரியம் என நினைப்பதால் பெண்கள் பட்டினத்தார் !



================



8 ஏன் எனக்கு மென்சன் போடாதவங்க எங்கிட்ட பேசாதவங்கள ,டி எம் அனுப்பாதவங்களை ஃபாலோயர்சா வச்சுக்கனும்னு நினைச்சா ஒரு பாலோயர் கூட நிலைக்காது




===========



9 நடுரோட்டில் பைக்கில் செல்கையில் சிம்ம வாகினி,ஜகன் மோகினி வகையறாவிடம் கடலைபோடாதீர்!எருமை வாகனன் வந்து உங்களுக்கு லிப்ட் தரக்கூடும்



=============




10 அன்பே! நீ காதலியாய் இருக்கும் வரை சிண்ட்ரெல்லா! கல்யாணம் ஆகி விட்டால் சிலிண்டர்லா!




==========



11 எங்கிட்ட பேசாதவங்களா பார்த்து அன்பாலோ பண்ண போறேன் 😋😋😋😋😋"



மிஸ்! நீங்க பாரீன்,நாங்க லோக்கல்.எப்டி "கிட்டே"வந்து பேச முடியும்?



============


12 வளர் பிறை நாட்களில் வளர்மதிக்கு மூளை கொஞ்சம் அதிகமாய் வளரும் என்பது ஒரு வித மூட நம்பிக்கையே!


=============


13 நான் பாலோ செய்யும் அத்தனை பேருடனும் டெய்லி பேசியிருக்கிறேன்


சும்மா அடிச்சு விடாதீங்க.5000 பாலோயர்ஸ் ங்க கூட டெய்லி பேச டைம் பத்துமா பத்மா?


=============

14 யாரை மாதிரி எழுதனும்னு ஆசைப்படறீங்க?

எல்லாருக்கும் தனித்தனிக்கையெழுத்து இருக்கு, எதுக்கு இன்னொருத்தர் மாதிரி நாம எழுதனும்?


================


15  விடிகாலை ல 4 மணிக்கு ஒரு நெட் தமிழன் “போ லூசு , உன் கிட்டே பேசமாட்டேன்”னான், இன்னும் பேசிட்டேதான் இருக்கான், அண்ணன் எப்போ எந்திரிப்பான்?திண்ணை  எப்போ காலி ஆகும்?

====================

15  தெறி படம் வேட்டைக்காரன் மாதிரியே ஹிட் ஆகும்னு எப்டி சொல்றே?

வேட்டைக்காரன்ல மகன் நடிச்சாரு, தெறில மகள். செண்ட்டிமெண்ட் படி ஹிட் தான்


=======================


16  அன்பே சொரூபா !
உன்னைக்கண்ணாலம் கட்டிக்கிட்டா
சோறு, ரூபா 2ம் இலவசமாக் கிடைக்குமாமே?நிஜமா?
 (  "SORU"BA)! ( SO"RUBA")


================


17 நிகழ்காலத்தில் கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கினால் எதிர்காலத்தில் கரை வாழ் உயிரினங்களான மனிதர்க்கு ஏதோ கேடு  வரப்போகுது என்று பொருள்


===================

18 கூடன் குள அணு மின் நிலைய சோதச்னையால் வெளிப்பட்ட கதிரியக்க  பாதிப்பால் தான் கடல்வாழ் உயிரினங்கள் இறந்திருக்கும் என கணிக்கிறேன்


===============


19  பெற்றோர் தம் பிள்ளைகளுக்குக்கொடுக்கும் அழுத்தமானது விதை நெல்லின் மேல் இருக்கும் மண்ணின் அழுத்தத்துக்குச்சமம்

==========

20 தினசரி 3,வேளையும் இருக்கவேண்டும் உணவுக்கட்டுப்பாடு.
இருந்தால் வருடம் 365 1/4 நாளும் வராது உடல் ஆரோக்யத்தட்டுப்பாடு

=================

Sunday, January 31, 2016

சன்னி லியோனின் கணவர் பயங்கரக்கோபக்காரராம். ஏன்?

சமூகபொருளாதார வளர்ச்சிக்கு உகந்த அமைதிப் பூங்கா தமிழகம் சட்டசபையில் கவர்னர் ரோசய்யா # என்ன? மழை வெள்ளம் வந்ததால வாட்டர் பார்க் ஆகிடுச்சு



==================




சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பேசுவோர் பட்டியல் ஜெயலலிதா அறிவிப்பு  # ஆச்சரியமா இருக்கே? நம்ம கட்சில பேசக்கூட அனுமதி உண்டா?




=================




3  அரசின் தோல்விகளை ஆளுநர் உரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது: வைகோ # அப்போ ஆளுநர் பதவிக்கு ஆபத்துன்னு சொல்லுங்க, கட்டம் கட்டிடுவாங்க




====================




4  ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றுங்கள்: தமிழக காங்கிரஸாருக்கு ராகுல் அறிவுரை # ஆமா, நக்மா கோஷ்டி, குஷ்பூ கோஷ்டின்னு யாரும் அடிச்சுக்காம




==================



5   ஓட்டுக்கு பணம் வாங்குமாறு கூறிய விவகாரம்: கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி # அப்போ பணம் வாங்கிக்கலாம்னு அர்த்தமா?என்னய்யா தீர்ப்பு இது?




===================




6  முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு # மாற்றம் , முன்னேற்றம்கற பாமக ஸ்லோகனை இவங்க தப்பா புரிஞ்சுட்டாங்க போல




==================




இன்றிலிருந்து (21/1/'16) ஒரு மாதத்திற்கு 5 கிரகங்களை வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்-செய்தி # திமுக, அதிமுக , காங்கிரஸ்,பாமக,சமக கட்சிகளா?




================




பாதுகாப்பு அம்சம் இல்லாமல்  ரிசர்வ் வங்கி அச்சிட்ட 1,000 ரூ.நோட்டு : ரூ.30,000 கோடி நோட்டுகள் செல்லாது-செய்தி # கள்ள நோட்டு அடிக்கறவன் கரெக்டா  அடிச்சுடறான், நல்ல நோட்டை தப்பு தப்பா அடிக்கறாங்க




=====================



சமுதாய மறுமலர்ச்சி ஏற்பட மாணவர்கள் அரசியல் கட்சியில் சேர வேண்டும்- கார்த்தி ப சிதம்பரம் # கறிவேப்பிலையா யூஸ் பண்ணிட்டு தூக்கிப்போடவா?


=============


10 சன்னி லியோனிடம் "ஆபாச" கேள்வி கேட்ட செய்தியாளர்... பொங்கியெழுந்த நெட்டிசன்கள்... கணவர் கண்டனம் # புருசன் பயங்கரக்கோபக்காரர் போல.


==========

11 எனக்கு அப்பவே கோவில் கட்டினாங்க... குஷ்பு பெருமிதம் .தமிழன் உங்களுக்கு மட்டுமா கட்டினான்?ஹன் சிகா ,நயன் தாரா வுக்கும்தான் கட்னான்


=============


12 1 லட்சம் கொடுத்து 26 வயதுப் பெண்ணுடன்காண்டிராக்ட்கல்யாணம்.56 வயது சோமாலியா நபர் கைது # சினிமாப்பார்த்து காமா சோமானு எதுனா செய்யறது.


===========


13 திருமணம் எனக்கு தேவை இல்லை: நமீதா பேட்டி # மச்சான்ஸ் மட்டும் போதும் மாமன் வேணாம்கறார்


===============

14 வரும் தேர்தல் தமாகா-வுக்கு திருவிழா போல இருக்கும் -வாசன்# நம்ம கரகாட்டக்காரி சூறாவளிக்கு சொல்லி விட்டிருக்கு.சுளுக்கு எடுத்துடுவாப்டி


===========

15 தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை-அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்  #   தன்னிகரற்ற அம்மாவின் “தண்ணி” நீக்கமற நிறைந்த டாஸ்மாக் ஆட்சி வாழ்க!


==================

16   ஊழலை ஒழிக்க விரும்பினால் லோக் ஆயுக்தா அமைப்பீர்: ஜெ.-க்கு விஜயகாந்த் வலியுறுத்தல் # ஊழலை ஒளிக்க விரும்பினால் என்ன பண்ணனும்னும் சொல்லிருங்க



===================



17  பாமக ஆட்சி அமைத்து முழு மதுவிலக்கு அமல்படுத்துவது உறுதி-ராமதாஸ் # முழு மதுவிலக்குன்னா ஃபுல்லுக்கு மட்டும் தடை,குவாட்டர், ஆஃப் உண்டா?


==================


18  மரங்களில் ஆணி அடித்தால் இனி ரூ.5 ஆயிரம் அபராதம்: மதுரையில் விளம்பரபலகைநிறுவனமுகவரிகள் சேகரிப்பு # இனி ஆணியே புடுங்கவேணாம்னு சொல்ல முடியாது


===================


19  அம்மா ஆட்சியின்  சாதனையை விளக்கி மக்களிடம் துண்டு சீட்டை எம்.எல்.ஏக்கள் வழங்கினார்கள்:
செய்தி# ஒரே ஒரு துண்டு சீட்டில் அடங்கிடுச்சா சாதனை?


================


20  எதிரிகளையும் காத்து ஜெ  பூமாதேவியாக இருக்கிறார்-நாஞ்சில் பி.சி.அன்பழகன் # ஓஹோ, ஊழல்வாதியா எதிரி இருந்தா காத்து நின்னா சட்டப்படி குற்றம்


=======================