Skip to content

Tuesday, January 26, 2016

மாமியாரை தாக்கிய மருமகள் மாமனார் கற்பழித்தாக புகார் - வழக்கில் திடீர் திருப்பம்

திடீர் திருப்பம் : மாமியாரை தாக்கிய மருமகள் மாமனார் கற்பழித்தாக புகார்   @ உத்தரப்பிரதேசம் # ஏம்மா, அதுக்கு நீ மாமனாரைத்தானே தாக்கனும்?


==============



விமானம் புறப்படுவதற்கு முன் 3 மணி நேரம் முன்னதாகவே வரவேண்டும் - ஏர் இந்தியா அறிவிப்பு # ஏன் ? ஒரு சினிமாப்படம் ஓட்டிக்காட்டப்போறீங்களா?



=============




3 பொங்கல் விளையாட்டு’ என பெயரை மாற்றிவிட்டு ஜல்லிகட்டை நடத்துங்கள்,-மார்க்கண்டேய கட்ஜூ   போட்டு போலீஸ் மாத்து மாத்துன்னு மாத்திடா?




======================



தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் குறைகள் கேட்கப்படும்: மு.க.ஸ்டாலின்# அப்போக்கூட  குறைகளைக்களைவோம்னு சொல்லலை, சும்மா காதால் கேட்போம்னு ஒரு  ஃபார்மாலிட்டி க்காக  சொல்றீங்க



===================




தேர்தலில் ஊழல் பெருச்சாளிகளை வீழ்த்த வேண்டும்: கலைஞர் # ஏன் சேம் சைடு கோல் போடறீங்க?நம்ம கட்சிக்காரங்க ஓட்டு கூட கிடைக்காம போய்டப்போகுது




===============




6 அதிமுக அரசுக்கு எதிராக திமுக திண்ணைப் பிரச்சாரம்: மு.க.ஸ்டாலின் - அழகிரி மைன்ட் வாய்ஸ் -தம்பி எப்போ எந்திரிப்பாரு?திண்ணை எப்போ காலி ஆகும்?




=============




7 ] 16 மாதங்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் ஜெ #,சாமான்யன் டெய்லி ஆபீசுக்குப்போவான்.சரித்திர நாயகர்கள் வருசத்துக்கு ஒரு டைம்




===========



8 ஆதார் திட்டத்தால் ரூ.6,700 கோடி இழப்பு தவிர்ப்பு:இந்தியாவுக்கு உலக வங்கி பாராட்டு# அதுக்குப்பரிசா நாங்க வாங்குன லோனை தள்ளுபடி பண்ணுங்க




============



9 திமுக ஆட்சிக்கு வருவதை தடுப்போருக்கு வாக்களியுங்கள்... 'சோ' பேச்சு # தெளிவா இருக்கும் மக்களைக்குழப்பறாரு



===============



10 மனைவியின் பிரசவத்திற்கு கள்ளக்காதலியை அழைத்து வந்த கணவருக்கு தர்ம அடி # கள்ளக்காதலி பிரசவத்துக்கு மனைவியை கூட்டிட்டுப்போவாரா?




============




11 சைனாவில் மலைப்பாம்புக்கு் "கிஸ்” கொடுத்து செல்பி எடுக்க முயன்ற பெண்- பாய்ந்த பாம்பு மூக்கை கடித்ததால் காயம்! # செல்பி புள்ள உம்மா உம்மா




===========



12 பாலா, தனுஷ் மற்றும் குஷ்பு வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை # பாலா வீட்ல கஞ்சா .தனுஷ் வீட்ல அனிரூத் சிக்குனாங்களாம்



============




13 தேயிலை உற்பத்தியில் உலகிலேயே 2-வது இடத்தில் இந்தியா! #  டீக்கடை வெச்சா அரசியல்ல பெரிய ஆள் ஆகிடலாம்னு ஆளாளுக்கு முயற்சிப்பாங்க போல




==================




14 ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு சட்டரீதியான முயற்சிகளில் ம.அரசு ஈடுபட்டுள்ளது; மத்திய மந்திரி # எண்ட் கார்டு போட்டபின் டைட்டில் சாங்க் எதுக்கு?




==================




15  ஜல்லிக்கட்டு தடை பற்றி நான் எந்தக்கருத்தும் கூறவே இல்லை -தனுஷ் பல்டி # எதுனா சொல்லவேண்டியது.பிரச்னை எதிர்ப்பு வந்தா அன்னைக்கு மவுனவிரதம், நான் எதுவும் கருத்தே சொல்லலையேன்னு அடிச்சு விட வேண்டியது


==============


16 5 வருசத்துக்கு பேசப்படும் படமாக 24 படம் இருக்கும் -சூர்யா #,24 = 2+4=6 கூட்டுத்தொகை.6,வருசம்னு சொல்லி இருக்கலாம்


==============

17 சுனந்தா புஸ்கர் நஞ்சு கொடுத்து கொல்லப்பட்டதாக ஆய்வில் உறுதி#:தாமாகவே முன் வந்து குடிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டார்னு தப்பிவிடுவார் சசிதரூர்

=============

18 காங்கிரஸ் கட்சியை திமுக விலக்கி வைக்கவில்லை - கருணாநிதி

# ஆமா தலைவா.இதுல சோகம் என்னான்னா குஷ்பூ திமுக வை விலக்கி வெச்சதுதான்


===============

19 விஜயகாந்தை ஆட்சி கட்டிலில் ஏற்றுங்கள்''

-பிரேமலதா # எதுக்கு? ஏத்தமய்யா ஏத்தம்னு எங்களைப்பாத்தே கோபமா கேட்பாரு, வம்பா?


=================

20 விஜயகாந்தை ஆட்சி கட்டிலில் ஏற்றுங்கள்'-பிரேமலதா# எதிர்க்கட்சித்தலைவராவே ஒழுங்கா, நிதானமா செயல்படாதவரா ஆளுங்கட்சித்தலைவரா செயல்படப்போறாரு?


===========================

Monday, January 25, 2016

உங்களுக்கு பிடிச்ச நல்ல Romance Songs சொல்லுங்க

ஜல்லிக்கட்டு சபரிமலைக்கு
தடையும் உடையும் தமிழனுக்கே
என்று மாறிப்போனது பஜனைகள்

===============

2 பன்னு-ன்னா உங்க மனசுல என்ன தோணுது?

காதல் பண்ணு-னு கால் ஃபார் பண்ற மாதிரி


=============


3  டியர், என் கஷ்டத்தை உங்க கிட்டே எப்படி விளக்கறதுன்னே தெரியலை


 முதல்ல பாத்திரத்தை விளக்கு ( துலக்கு)அப்புறமா பொரணி பேசறதுல கலக்கு


===============

தலைவரே! பகுத்தறிவுக்கொள்கை உள்ள நீங்க ஏன் ராமானுஜர் சீரியல் எடுக்கறீங்க?

எப்டியாவது பணம் சம்பாதிக்கனும் என்பதே என் முதல் கொள்கை

===========

5 எம் பி யைப்பார்த்து முதுகெலும்பை உடைப்பேன்னு சொன்னீங்களா?

அவர் தான் கட்சியின் BACK BONEனு சொன்னாங்க


================


6 திமிங்கலம் 1 = டியர்.உன் முதுகுல ஏதோ ஒட்டி இருக்கே?

திமி 2= கரையோரம் ஒதுங்கினேன்.அம்மா ஸ்டிக்கர் ஒட்டி நடுக்கடல்ல.விட்டுட்டாங்க


=============

7 தெறி படத்துல ஹீரோயின் பேரு மஞ்சுளா ன்னு எப்டி சொல்றே?

ஹீரோ பேரு விஜய்குமார்.அப்போ ஹீரோயின் பேரு மஞ்சுளா தானே?


============

8 சார்.உங்க புதுப்படம் சத்ரியன் படத்தோட தழுவல் னு சொல்றாங்களே?

அது உண்மையா இருந்தா சத்"தெறி"யன் னு தான் டைட்டில் வெச்சிருப்பேன்?

===========

9 டாக்டர்.ரோஜா இதழை தினமும் கன்னத்துல தேய்ச்சுக்கிட்டா முக அழகு கூடுமாமே?

ஆமா.ஆனா ஆர் கே செல்வமணி அதுக்கு ஒத்துக்க மாட்டாரே?

===========

10 டியர்.நான் வைக்கும் முதல் பொங்கல் இதுதான்.எப்டி இருக்கு என் கன்னிப்பொங்கல்?

ரொம்ப கண்ணிப்போய் இருக்கே?நெய் ஊத்தலையா ?

=============


11 என்ன கீரை கொடுத்தீங்க பசு சோர்வா இருக்கு ?

அரைக்கீரை.
அட கஞ்சப்பிசினாரி.முழுக்கீரையும் கொடுத்தா என்ன?

=============

12 தலைவரே! எலக்சன் டைம்ல எதுக்கு மெக்கானிக் ஷாப்,மினரல் வாட்டர் கடை , கூரியர் சர்வீஸ் ஓப்பன் பண்ணுனீங்க?


மக்களுக்காக என்ன சர்வீஸ் பண்ணுனீங்க?ன்னா பைக்சர்வீஸ் , வாட்டர் சர் வீஸ்,கூரியர் சர்வீஸ்னு சமாளிக்கலாமே?

=


============

13 டாக்டர்.எனக்குள்ளே ஒரு மிருகம் தூங்கிட்டு இருக்கு.அது எப்போ விழிக்கும்?னு சொல்ல முடியுமா?


நீங்க தூங்குனா அது எந்திரிச்சுக்கும்னு நினைக்கறேன்


=============

14 எனக்கு 40% வாக்கு வங்கி இருக்கு.

தலைவரே! தமிழக வாக்காளர் எண்ணிக்கை 5.66 கோடி.உங்க ட்விட்டர் பாலோயர்ஸே.10,000 பேர்தான்.கணக்கு உதைக்குதே?

==================

15 டியர்! என் பிரிவைத்தாங்கும் சக்தி இருக்கா உங்க கிட்டே?

90 கிலோ வெயிட் இருந்த உன்னையே தாங்கிட்டேன்.உன் பிரிவைத்தாங்க மாட்டேனா?


==============

16 டாக்டர்! என் புருசன் டெய்லி சரக்கு அடிச்சு ஆல்ஹகாலிக் பர்சன் ஆகிட்டாரு.

அப்போ டெய்லி FANTA.குடிக்கச்சொல்லுங்க.FANTASTIC PERSON ஆகறாரா பார்ப்போம்

===========


17 உன் ஆளு  மொடாக்குடிகாரனா இருப்பான்னு சந்தேகப்படறியா? ஏண்டி?

 ராவோடு ராவா ஊரை விட்டு ஓடிடலாமா?ன்னு கேட்கறான்



===================


18  நான் ரசித்த முதல் ஆண் நீயே!!என் அன்பே!!💕

 அடிப்பாவி! அப்போ 2 வது  3 வதுன்னு லிஸ்ட் நீளுமா?


==================


19 உங்களுக்கு பிடிச்ச நல்ல Romance Songs சொல்லுங்க. டவுன்லோடிக்கிறேன் :))

 மிஸ்! ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க? நானே ஒரு பாட்டுப்பாடறேன்,ரெடியா?


=====================


20  டியர்!Cap sleeve blouse போட்டுக்கிட்டா எனக்கு  நல்லாருக்குமா?

நல்லாருக்கும், ஆனா GAPல பார்க்கறவங்க க்ளாப்ஸ் அடிப்பாங்க, பரவால்லியா?


===========================

கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி'-3 மாணவிகள் இறந்த விவகாரம் பின்னந்தலையில் அடித்துக் கொலையா?

எஸ்.கீதாலட்சுமி | கோப்புப் படம்
எஸ்.கீதாலட்சுமி | கோப்புப் படம்

மூன்று மாணவிகள் இறந்த விவகாரம்: 'அனுமதியின்றி இயங்கி வந்தது கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி'

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் சந்தேகத்துக்கு இடமான வகையில் இறந்தனர்.
இதனையடுத்து அக்கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டு அக்கல்லூரியின் முதல்வர் கலாநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி, "விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் அந்தக் கல்லூரி இயங்கியுள்ளது.
இது குறித்து விசாரணைக் குழு அமைத்து தகுந்த விசாரணை மேற்கொள்ளப்படும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலேயே சேர்க்க வேண்டும்" என்றார்.


மாணவிகள் மூவர் சந்தேக மரணம்: கள்ளக்குறிச்சி கல்லூரி முதல்வர் கைது

மாணவிகள் 3 பேரின் சந்தேக மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி தனியார் சித்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கலாநிதி, கல்லூரி நிர்வாகியின் மகன் சுவாகத் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
15 நாள் நீதிமன்றக் காவல்:
கைது செய்யப்பட்ட எஸ்.வி.எஸ். கல்லூரி முதல்வர் கலாநிதியையும், கல்லூரியின் தாளாளர் மகன் சுவாகத்தையும் 15 நாள் காவலில் வைக்கும்படி கள்ளக்குறிச்சி ஜெ.எம். 1 நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு எதிரே தனியார் நிலத்தில் உள்ள தரைக் கிணற்றில் இக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவிகளான காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரை சேர்ந்த ஏழுமலை மகள் சரண்யா, திருவாரூர் வ.உ.சி தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகள் பிரியங்கா, சென்னை எர்ணாவூரை சேர்ந்த தமிழரசன் மகள் மோனிஷா ஆகியோர் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.
தகவலறிந்த சின்னசேலம் போலீ ஸார், மாணவிகளின் உடல்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விழுப்புரம் டிஐஜி அனிசா உசேன், எஸ்பி நரேந்திரன் நாயர் வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
கல்லூரிக்கு சீல்:
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி, கல்லூரிக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் (பொறுப்பு) பத்ரிநாத் தலைமையிலான அதிகாரிகள் கல்லூரிக்கு சீல் வைத்தனர். அப்போது ஏடிஎஸ்பி அனிஷ்யா டெய்சின், டிஎஸ்பி மதிவாணன், கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் சையத்காதர் உடன் இருந்தனர்.
தாளாளர் தலைமறைவு:
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கல்லூரி தாளாளர் வாசுகி தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது கணவர் சுப்பிரமணியன் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கல்லூரி தாளாளர் வாசுகி மற்றும் அவரது கணவரை கைது செய்ய கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னைக்கு விரைந்துள்ளனர்.
தற்கொலை இல்லை:
"கள்ளக்குறிச்சி அருகே தனியார் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கல்லூரி நிர்வாகம் அவர்களை அடித்து கொலை செய்துள்ளது" என மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து ஞாயிற்றுக்கிழமை கல்லூரிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.


சீல் வைக்கப்பட்ட தனியார் கல்லூரி | படம்: சிறப்பு ஏற்பாடு.
சீல் வைக்கப்பட்ட தனியார் கல்லூரி | படம்: சிறப்பு ஏற்பாடு.
தனியார் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவி களின் பெற்றோர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். 3 மாணவிகளின் தலையின் பின்புறத்தில் அடித்ததற் கான காயம் இருந்துள்ளதால் அவர் கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக மாணவி மோனிஷாவின் தந்தை தமிழரசன் கூறியதாவது: பொங்கல் விடு முறை முடிந்து கடந்த 22-ம் தேதி சென்னையில் இருந்து வந்த மோனி ஷாவுடன், செய்யூரை சேர்ந்த சரண்யா மேல்மருவத்தூரில் இணைந்து கல்லூரிக்கு சென்றார். திருவாரூரை சேர்ந்த பிரியங்கா, கள்ளக்குறிச்சியில் இவர்களோடு இணைந்து கொண்டார். மூவரும் ஒன்றாகவே மாலை 5 மணிக்கு கல்லூரி விடுதிக்கு சென்றுள்ளனர். அதுவரை இயக்க நிலையில் இருந்த அவர்களது மொபைல் பின்னர் இயங்கவில்லை. நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு 3 மாணவிகள் இறந்துவிட்டதாக கல்லூரி நிர்வா கம் தகவல் தெரிவித்தது. மேலும் மாணவிகள் எழுதியதாகக் கூறப் படும் கடிதத்தில் 3-ம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதம், இறந்த மாணவிகள் எழுதியது இல்லை. 2 பேர் ஸ்மார்ட் போனும், ஒருவர் சாதாரண போனும் வைத்திருந்தனர். இதில் 2 ஸ்மார்ட் போன்கள் காணாமல் போய் உள்ளன. இறந்த மாணவிகளின் பின்னந்தலையில் பலத்த அடிபட் டுள்ளது. கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டால் ஒரே இடத்தில் அடிபட வாய்ப் பில்லை. கல்லூரி நிர்வாகமே கடந்த 22-ம் தேதி அடித்து கொன்று, அன்று இரவே கிணற்றில் வீசிவிட்டு நேற்றுமுன்தினம் மாலை தகவலை வெளிப்படுத்தியுள்ளனர், இவ்வாறு கூறினார்.
இறந்த மாணவி சரண்யாவின் உறவினர் மஞ்சுளா கூறும்போது, “எங்களுக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸார் மற்றும் இங்கு பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர் கள் மேல் நம்பிக்கை இல்லை. எனவே சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும். இதுவரை இக்கல்லூரியில் படித்த மாணவர்கள் ஒருவர்கூட பட்டம் பெறவில்லை” என்றனர்.
சாலை மறியல்
இக்கோரிக்கைகளை வலி யுறுத்தி மருத்துவக் கல்லூரிக்கு வெளியே வந்த மாணவிகளின் பெற்றோர்கள், கல்லூரியில் படிக் கும் மாணவர்களுடன் இணைந்து சாலை மறியல் நடத்தினர். இதனால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீ ஸார் அவர்களை சமாதானப்படுத்தி சாலை மறியலை கைவிட செய் தனர்.
இதுதொடர்பாக போலீஸ் வட் டாரங்களில் விசாரித்தபோது, “கள் ளக்குறிச்சியில் உளவுத்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதர வாக போலீஸாரின் நடவடிக்கை களை கூறி வருவதால், சில நட வடிக்கைகளை யாரிடம் சொல்ல இயலாத நிலையில் உள்ளோம்” என்றனர்.
இதைத்தொடர்ந்து ஆட்சியர் லட்சுமி, டிஐஜி அனிஷா உசேன், எஸ்பி நரேந்திரன் நாயர், கோட்டாட்சியர் செந்தில் ஆறுமுகம், மருத்துவத்துறையின் இணை இயக்குநர் ஜோதி உள்ளிட்டோர் மாணவிகளின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இதுவரை எந்த முடிவும் எடுக் கப்படவில்லை.
இறந்த 3 மாணவிகளுக்கும் அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையில் இக்கல்லூரியில் இடம் கிடைத்துள் ளது. மேலும் மாணவிகளின் பெற்றோர் தரப்பில் இருந்து இது வரை போலீஸில் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ராமதாஸ் கண்டனம்
பாமக நிறுவனர் டாக்டர் ராம தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மாணவிகளின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி அதற்கு கார ணமான அனைவர் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும். உயிரி ழந்த மாணவிகளின் குடும்பங் களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப் பீடு வழங்க வேண்டும். சித்த மருத்துவக் கல்லூரியை மூடி முத்திரையிட்டு அதில் படித்து வரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்க வேண்டும்.
வைகோ கோரிக்கை
எஸ்.வி.எஸ் இயற்கை மருத் துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்கி யது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசு விதி முறைகளை காற்றில் பறக்கவிட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாணவிகளின் தற்கொலைக்கு காரணமான கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
திருமாவளவன் ஆறுதல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாணவி களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மாணவியரின் குடும் பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.


நன்றி - த இந்து

மூன்றாம் உலகப்போர்-திரை விமர்சனம்:

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 2025-ல் மீண்டும் ஒரு போர் ஏற்பட்டால் அது எப்படியிருக்கும் என்ற கற்பனைதான் இந்தப் படத்தின் கதைக்கரு. எதிர்காலத் தில் பயணிக்கும் இந்தக் கதைக்கு இயக்கு நர் எவ்வாறு உயிர் கொடுக்க முயன் றிருக்கிறார் என்பதைப் பார்க்கலாம்.


எல்லையில் பணியாற்றும்போது சீன ராணுவத்தின் கையில் சிக்குகிறார் இந்திய ராணுவ மேஜரான சரவணன் (சுனில்குமார்). இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 100 சீன ராணுவ வீரர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாமல் போனதால் அவர்களைப் பற்றிய உண்மையை சரவணன் மூலம் அறியத் துடிக்கிறார் சீன ராணுவத் தளபதி (வில்சன்). ராணுவத்தின் துன்புறுத்தல்களில் சிக்கித் தவிக்கும் சரவணனின் நினைவுகள் சிறகடிக்கின்றன.



ஒரு மாத விடுமுறையில் தனது சொந்த ஊரான சென்னைக்கு வந்து மதிவத னியை (அகிலா கிஷோர்) திருமணம் செய்துகொண்டு தனது முகாமுக்குத் திரும்பியவர் தற்போது தப்பிச் செல்ல முடியாத பாதாளச் சிறையில் இருக்கிறார். ஒரு பக்கம் மனைவியின் நினைவுகள்; இன்னொரு பக்கம் கொடூரமான ராணுவச் சித்திரவதைகள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தச் சிறையிலிருந்து சரவணனால் தப்பிக்க முடிந்ததா? 100 சீன வீரர்கள் பற்றிய உண்மை என்ன? இந்தியா மீது சீனா தொடுக்க நினைக்கும் அந்தப் புதிய யுத்தம் என்ன? சரவணனின் மனைவியும் அவரது உறவினர்களும் அவர் உயிருடன் இருப்பதாக நம்புகிறார்களா? இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் தருகிறது திரைக்கதை.



‘மூன்றாம் உலகப்போர்’ என்ற ஈர்ப்பு மிக்க தலைப்பை வைத்துக்கொண்டு அதற்கு நியாயம் செய்யும் கதைக் கருவைத் தேர்ந்தெடுத்ததற்காக அறிமுக இயக்குநர் சுகன் கார்த்தியைப் பாராட்டலாம். எதிரி நாட்டு ராணுவத்தின் சிறைக் கொட்டடியில் வாடும் நாயகனின் பின்னோக்கிய நினைவுகளிலிருந்து விரிந்து செல்லும் உத்தியுடன், பிரதான கதையோடு ஒட்டியும் விலகியும் சித்தரிக்கும் திரைக்கதை உத்தியை யும் இயக்குநர் நன்கு பயன்படுத் திக்கொண்டிருக்கிறார். ஆனால், கதை யில் எந்தப் பகுதிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது என்பதில் தெளிவில்லாமல் போனதால் கதை, கதை சொல்லும் உத்தி ஆகியவற்றின் தாக்கம் குறைந்துவிட்டது.



இந்தியா மீது சீனா தொடுக்கவிருக்கும் அந்த மூன்றாம் உலக யுத்தம் எத் தகையது என்பதை வசனங்களின் வழியாகவே விவரிப்பதைத் தவிர்த் திருக்கலாம். ஒரு நாட்டில் அதன் எதிரி நாட்டால் நிகழ்த்தப்படும் மறைமுக யுத்தமானது சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலும் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைச் சில காட்சிகள் மூலம் நிறுவி, கதையின் நாயகனுக்கும் பார்வையாளர்களுக்கும் பயத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கலாம்.



விடுமுறையில் வந்து திருமணம் செய்துகொண்ட ராணுவ மேஜருக்கும் அவரது மனைவிக்குமான 20 நாட்கள் உறவு அழுத்தமாகச் சித்தரிக்கப் படாததால் மதிவதனி மற்றும் அவரது குடும்பத்தாரின் இழப்பும் சோகமும் பார்வையாளர்களிடம் அழுத்தமான சலனத்தை ஏற்படுத்தவில்லை.


சீன ராணுவத்தின் பாதாளச் சிறை யிலிருந்து மேஜர் சரவணன் தப்பிக்கும் அபத்தமான வழிமுறையும் காட்சிகளும் கேலிக்கூத்தாக மாறிவிடுகின்றன. 2025-ல் நடக்கும் ஒரு கதையில் தனக்குப் பிடித்த பிரபலங்கள் என்று மகேந்திர சிங் தோனியையும், சோட்டா பீம் கதாபாத்திரத்தையும் கதாநாயகி சுட்டிக் காட்டுகிறார்.


இந்தக் குறைகளையெல்லாம் மீறி, நட்சத்திரத் தேர்வு, கலை இயக்கம், கிராஃபிக்ஸ் காட்சிகளின் நேர்த்தி போன்றவை நம்மை இருக்கையில் அமர்த்தி வைக்கின்றன.


மேஜர் சரவணனாக நடித்திருக்கும் சுனில்குமாரின் உயரம், உருவம், நடிப்பு, வசன உச்சரிப்பு என எல்லாமே கதாபாத்திரத்துக்கு நம்பகத்தன்மையை அளிக்கின்றன. சிறையில் படும் வேதனைகளையும், நூதனமான சித்ர வதையால் கடைசியில் அவர் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மனைவியாக வரும் அகிலா கிஷோருக்கு அதிக வேலை இல்லை என்றாலும் பாத்திரப் பொருத்தம் கச்சிதம். சீன ராணுவ அதிகாரியாக வரும் வில்சன் பயமுறுத்தினாலும் பல நேரங்களில் நகைச்சுவை நடிகர் இல்லாத குறையைப் போக்கிவிடுகிறார்.


போர் சித்தரிப்பு ஆவணப்படங்களை மூலமாகக் கொண்டு, தொடக்கக் காட்சிகளை விறுவிறுப்பாக கிராஃபிக்ஸ் கொலாஜ் செய்தது, பாதாளச் சிறை, நீர்முழ்கி 2025-ன் கற்பனையான ராணுவக் கருவிகள் ஆகியவற்றைச் சித்தரிப்பதில் எபெக்ட்ஸ் அன்ட் லாஜிக் நிறுவனத்தின் கிராஃபிக்ஸ் பணி தரமாகவும் நம்பகத்தன்மை யுடனும் இருக்கிறது. வேத்சங்கரின் இசையில் பாடல்கள் எதுவும் எடுபடவில்லை என்றாலும் பின்னணி இசை தேறுகிறது.


ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு போர் தொடுப்பதற்கான வித்தியாசமான வழிமுறைகளை அழுத்தமாக உணரச் செய்வதில் தவறிவிட்டாலும், போர் என்பது ராணுவங்களுக்கிடையில் மட்டும் நடப்பதல்ல என்பதை உணர வைப்பதிலும் இந்திய மக்கள் பல விதங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற செய்தியைக் கடத்துவதிலும் படம் வெற்றி பெற்று விடுகிறது.


the hindu

சன் டி வி யின் எம் டி சன்னிலியோனா? கலைஞர் அதிர்ச்சி!

டியர்! நான் எப்போ  பஜ்ஜி சாப்டும்போதும் உன் நியாபகம் வந்துடும்

 அவ்ளோவ் டேஸ்ட்டா நான்?

 இல்லை, முகமெல்லாம் ஆயிலா இருக்கும்..

=================


2  மாமா! பூனை மாதிரி இருப்பானு நினைச்சா உங்க பொண்ணு புலி மாதிரி இருக்கே?

நீங்க ஏன் பூனைனு நினைச்சீங்க?

சவு”மியா(வ்)” -னு பேர் பார்த்து


==================


3  ஜோசியரே! கல்யாணம் பண்ணிக்கிட்டா தோஷம் போய்டும்னீங்க, போகலை?

வீட்ல நிம்மதி , சந்”தோஷம்” எல்லாம் போய் இருக்குமே?



=================


மேரேஜ்க்கு முன் எப்டி இருந்தாலும் சரி, மேரேஜ்க்குப்பின் ஸ்பெல்லிங்க் மாத்தனும்

 எப்டி?

 இனிமே  SOWMIYA     இல்லை     SOW"MY"A


=================

5 இன்ஸ்பெக்டர், இவன் என் DP யை திரும்ப திரும்ப பார்க்கறான்


ஏம்மா,நேர்லயே ஒரு டைம்தான் பார்க்கற மாதிரி இருக்கே?உன் DPயஎதுக்கு அப்டி பார்த்தான்


==================

6  உலகிலேயே உச்சபட்ச வலிகள் 4
1 பிரசவ.வலி 2 பல் வலி 3,மாரடைப்பு 4 அன்பு கொண்டோரின் நிராகரிப்பு்


============


7 என் சிரிப்பு உடஞ்சி சிதறி கெடக்கு
எப்ப வருவ எடுத்துக்க ? ஏன்மா நான் என்ன பொறுக்கியா? கீழே சிதறுனதை நான் எதுக்கு எடுக்கனும்?

===========

8 கோகுலக்கண்ணன் சினிமாப்படம் எடுத்தா ராதை என்ன விமர்சனம் எழுதும்?
குறையொன்றும் இல்லை... மறைமூர்த்தி கண்ணா..! குறையொன்றும் இல்லை கண்ணா...!"

===============


9 தியேட்டரில் யாரும் இல்லை,
இனி யாரும் வரமாட்டார்கள் என்று உறுதியான பிறகு தான்... இன்றே கடைசி போஸ்டர் ஒட்ட ஆரம்பிக்கிறார்கள்


===============

10 மேடம்.1000 ரூபா கடன் வேணும்.
- ஸாரி பேரு தான் "சஹாய" ராணி.பாலோயர்க்கு ஒரு சஹாயமும் பண்றதில்ல


================

11பஸ்சில் பாடல் ஒலிக்கும்போதும் தனி விருப்பப்பாடல் தான் கேட்பேன் என வாக்மேன்ல பாட்டுக்கேட்"பாவை"யர் தனிக்குடித்தன விரும்பிகளாக இருக்கக்கூடும்

================

12 பொங்கல் வாழ்த்து கூட சொல்லையே ஏன்?
பார்மாலிட்டியா வாழ்த்த நம்ம நட்பு ஒரு சாதா.நட்பு இல்லைனு நினைச்சிருக்கலாம்


==================

13 நான் உன்னை எப்படி எல்லாம் பாதித்தேன் என்று சொல்லச்சொன்னாள்!
நீ என்னில் பாதி தேன் என்றேன்


===============


14 40% வாக்கு வங்கி உள்ள ஆளுங்கட்சியை வெல்ல அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே கூட்டணியில் சேர்ந்தால் மட்டுமே சாத்தியம்.பிரிந்தால் வாக்கு பிரியும்


===============

15 ஒரு முன்னாள் முதல்வரின் மகன் தயாரித்து மகன் ஹீரோவா நடிச்ச படம் கேரளாவில் ரிலீஸ் இல்லை.ஆனால் சிவகார்த்திகேயன் படம் பட்டி தொட்டி எங்கும் ரிலீஸ் # ரஜினிமுருகன் vs கெத்து

===============

16 கேட்கறவன் கேனயனா இருந்தா சன் டி வி யை கண்டு பிடிச்சது சன்னிலியோன் னு சொல்வானாம் # கிராமத்து சொலவடை

==========

17 உடன் பிறப்பே! மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் 10% ஓட்டும் உபரியா.குஷ்பூவும் நம்ம பக்கம்.எப்பூடி நம்ம சாணக்கியத்தனம்?


==================

18 கோலம் போடுவது பெண்ணடிமை த்தனம்தானே?ன்னு சிலர் கேட்கறாங்க, பொண்ணுங்க செய்யும் ஏதோ சில அழகிய பணிகளில் அதுவும் 1, அதுக்கும் தடை போட்டா எப்படி?


=====================

19 ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணினதைச்சுட்டிக்காட்னாக்கூட  என் கீ போர்டு கூட நான் சொல்றதைக்கேட்பதில்லைனு சாமார்த்தியமா சமாளிப்பார்கள் பெண்கள்


===================


20   தெலுங்குப்படவிமர்சனமும் இனிபண்றீங்களா? செத்தாய்ங்க தெலுங்குக்காரங்க
 பார்க்கறது தெலுங்கா இருந்தாலும் விமர்சனம் தமிழ்ல.எப்டி அவங்க சாவாங்க?


==========================