Saturday, January 23, 2016

சீமான் ஜெராக்ஸ் கடை

சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்கு: நளினி சிதம்பரம் பெயர் சேர்ப்பு # சாரதா , சீட்டு, நளினி, மோசடி, ஊழல் எல்லாம் 3 எழுத்தில வருதே,நாமம்தான்



=====================




அதிமுக பேனர்களுக்கு ஒரே நாளில் அனுமதியளித்த அதிகாரி களின் வேகம் வியக்க வைக்கிறது - நீதிபதி  வேகத்தில் செயல்படக்காரணம் இரட்டைஇலை




=================



நாங்கள் மட்டும்தான் சாதிக் கட்சியா?- ராமதாஸ் கேள்வி# நான் மட்டும் தான் குற்றவாளியா?னு ஜட்ஜ்ட்ட கேட்டா ரிலீஸ் பண்ணுவாரா?




=================




ஜெ மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வரும் 8-ம் தேதி நடைபெறாது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு# என்ன  அவசரம்? தேர்தல் முடியட்டும்னு ஆர்டரோ?




====================



'நம்பிக்கைதானே வாழ்க்கை... விஜயகாந்த் வருவார்!' - வைகோ # கேப்டன் மனசுல ரெண்டே சாய்ஸ் , பிஜேபியா? திமுகவா? அதிக சீட் தரும் கட்சிக்கு 




======================




மத்திய துணை ராணுவப் படைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: விரைவில் நடைமுறைக்கு வருகிறது # இனி மிலிட்ரில லவ் ஸ்டோரி நிறைய வரும்




=================




டிடிசிஏ தலைவராக இருந்தபோது யாரிடமிருந்தும் பணம் வாங்கவில்லை: நீதிமன்றத்தில் ஜேட்லி # பின் தேதி இட்ட காசோலையா வாங்கிட்டீங்களோ?




==================




ஜெ வுக்கு ராமதாஸ் கண்டனம் வாட்ஸ்அப் விளம்பரத்திற்காக 50 கோடியை வீணடிப்பதா? #,சொந்தக்காசா போச்சு?மக்கள் வரிப்பணம்தானே னு நினைச்சிருப்பாரு ஜெ


============

9 மேக் இன் இந்தியா’ திட்டம்: 50,000 கோடி கடன் ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு எந்த பலனும் இல்லை# அப்போ பிஜேபி அதிமுக கூட்டணி இருக்காது


================

10 400 ரயில் நிலையம் நவீனமாக்க விரைவில் டெண்டர் : அருண் ஜெட்லி # இதுல. செம காசு கை மாறும்


==================

11 செய்தித்தாளைப் போல் சுருட்டிக் கொள்ளும் அசத்தல் டிவி-யை அறிமுகப்படுத்தும் எல்.ஜி # திருடனுக்கு ஈசி.அப்டியே சுருட்டி ட்டுப்போய்டுவான்

============

12 30 வயதுக்குள் சாதனை படைத்த 45 இந்திய தொழில் அதிபர்கள்: போர்ப்ஸ் பத்திரிகையின் புதிய பட்டியல்..# அப்பாடா.45,நடிகைகளுக்கு மாப்ளை ரெடி.

=========

13 அ.தி.மு.க. ஆட்சிக்கு பதில் சொல்லும் காலம் வரும்: கருணாநிதி #,அப்டி ஒரு காலம் வர்லைன்னா இவர் தான் அதுக்கு "ஜவாப்தாரி ஜிம்மேதாரி எல்லாம்

=================


14 2016ல் ADMK ஆட்சிக்கு வந்தால் “ஜெ ஸ்டிக்கர்” Made in அம்மா நாடு என்று உலகப் புகழும் பெற்று விடும்.-கலைஞர் # தலைவரே! அவதூறு வழக்கு பார்சல்


====================

15  வருடம் தோறும் பெரும் இழப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே மின்சார வாரியம், இந்தியாவிலேயே TNEB  மட்டும்தான்!-கலைஞர் # தலைவரே! 2006 டூ 2010?


=============

16  10,000 எழுத்துக்கள் வரை பதிவிடும் வசதியை டிவிட்டர் அறிமுகம் செய்ய உள்ளது!-செய்தி# தேர்தல் அறிக்கையே  ட்விட்டர்ல வந்துடுமே, செத்தாண்டா சேகரு

=================

17 அதிமுக சாதனை விளக்க பேரணி துவக்கம்!# விளக்கிச்சொல்லிப்புரிய வைக்க வேண்டிய  அளவுக்கு உங்கள் சாதனை மக்களுக்குத்தெரியாமல் இருந்தால் அது வேதனை



=================================



18  லட்சக்கணக்கான சீமான்களை உருவாக்கி வருகிறோம் - சீமான் #  சீமான் ஜெராக்ஸ் கடை ஆரம்பிச்ட்டீங்களா?


===================


19  ஒற்றை, இரட்டைப்படை வாகன நடைமுறை: நிறுத்த சொல்லும் டெல்லி நீதிமன்றம்!# போக்குவரத்து  நெரிசல் குறையும்னு நினைச்சா கார் புக்கிங் கூடிடுச்சாம்


==================


20  
பொங்கலுக்கு இரண்டு துண்டு கரும்பு வழங்கப்படும்- செய்தி#  அதுல கூட இரட்டை இலைக்கு மறைமுக பிரச்சாரம்.னு நம்ம தானைத்தலைவர் இன்னும் கிளம்பலையா?

=====================

Friday, January 22, 2016

AIR LIFT ( 2016) - சினிமா விமர்சனம் ( ஹிந்தி )

கக்கன், காமராஜர் மாதிர் தியாகத்தலைவர்கள் வாழ்ந்த தேசம் இது. தமிழ் இனத்தின் தலைவலிகள் , புரட்டுத்தலைவிகள் தான் இப்போ நம்மநாட்டில் அதிகம் இருக்காங்க.  ஒரு தலைவனா இல்லாம சாதா மனிதனா  ஒரு தனி மனிதன் நாட்டுப்பற்று , மனித நேயம்  கொண்டு நடத்தும் சாகசம் தான் கதை.இது ஒரு உண்மைச்சம்பவமாம்



கதைக்களம் குவைத். 1990 ஆகஸ்ட் ல நடக்குது.

 ஹீரோ ஒரு பிஸ்னெஸ்மேன், பேசிக்கலா இந்தியன் ஆனா வாழ்விடம் குவைத்ல . எப்படி இத்தாலியை தாய்நாடா கொண்டிருந்தாலும் மருமகளா இந்தியா வந்து கட்சியை , சொத்தை ஆக்ரமிச்சு இந்தியாவிலேயே தங்கிட்டாங்களே அந்த மாதிரி இல்லாம நேர்மையான ஆள்.


குவைத்ல ஹீரோ குடும்பத்தோட இருக்கும்போது திடீர்னு சதாம் உசேனின் ஈராக் படைகள் நகரத்தைச்சூழந்து தாக்குது.


தன் கிட்டே இருக்கும் வசதியை வெச்சு அவர் நினைச்சிருந்தா தனியா தப்பி இருக்க முடியும் , ஆனா ஆயிரக்கணக்கான இந்திய மக்களை சதாம் உசேனின்  படைகளிலிருந்து எப்படிக்காப்பாத்தி இந்தியா கூட்டிட்டு வர்றார் என்பதே கதை. 


ஹீரோ , தன் மனைவி , குழந்தை மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மக்கள்  இவங்களைக்காப்பாத்தனும்.அவர் எப்படிக்காப்பாத்தறார் என்பதே பரபரப்பான திரைக்கதை



 ஹீரோவா அக்சய் குமார் . அட்டகாசமான நடிப்பு . பிரமாதமான பாடி லேங்குவேஜ் , டூயட் , ஃபைட் என கமர்ஷியல் ஐட்டம் இல்லாமலேயே விறு விறுப்பான திரைக்கதை இருந்தால் போதும் என சமீபத்திய ஃபார்முலாப்படி வந்த வ்ழக்கமான ஃபார்முலாவில் இருந்து மாறுபட்ட படம் 


ஹீரோயினா நிர்மத் கவுர்  இயல்பான நடிப்பு . கிளாமர் காட்டும் வாய்ப்பு இல்லை, ஆனா தன் கணவனுக்காக பரிந்து பேசி அவர் தியாகத்தை உணர வைக்கும் ஒரு விஜய்காந்த் தனமான டயலாக் சீனில்  கலக்கிட்டார்.

படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை . ஒரு சீன் கூட போர் அடிக்காமல் க்ரிஸ்பாக  கொண்டு போய் இருக்காங்க 



மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  பிஸ்னெஸ் தனி.பிரெண்ட்ஷிப் தனி.ரெண்டையும் குழப்பிக்கக்கூடாது.அப்போதான் நட்பில் தெளிவு இருக்கும் LIFT்

2 அசாதாரணமான அமைதி ஒரு இடத்தில் இருந்தா அங்கே ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகுதுன்னு அர்த்தம் #,AIR LIFT


3 குவைத்ல போர்க்கால சூழல் ஏற்பட்ட இந்தியா என்ன செஞ்சுது?

வழக்கம் போல வேடிக்கை தான் பார்த்ததா? LIFT


4 வெற்றிகரமான மனிதன் தனக்கு இது நினைவில்லை மறந்துட்டேன்னு எதையும் சொல்ல மாட்டான்.ஞாபக சக்தி தான் வெற்றிக்கு முதல் தகுதி LIFT


5 தன்னுடைய பாதுகாப்புக்காக தன் பொறுப்பைத்தட்டிக்கழிப்பவன் நல்ல தலைவனா பரிமளிக்க முடியாது # AIR LIFT


6 விருப்பமானவரின் மரணம் நம் கண் முன் நிகழ்வது மரணத்தை விட கொடிய வலி LIFT


7 பகல் ல ஏன் சரக்கு அடிக்கறே?

மோசமான மன நிலைல இருக்கறவனுக்கு பகல் இரவு பாகுபாடு கிடையாது LIFT

8 தன்னோட பாதுகாப்பை விட தன்னோட குடும்பத்தோட பாதுகாப்புக்கு பாடுபடுபவன் தான் இந்தியன் # AIR LIFT


9 இந்தியர்களை எதுவும் செய்யக்கூடாதுன்னு சதாம் ல எழுதப்படாத விதி இருக்கு.அதனால இந்தியர்கள் பாதுகாப்புக்கு பயம் இல்லை # AIR LIFT


10 என் வீடு என் குடும்பம்னு குறுகிய வட்டத்துல என்னால இருக்க முடியாது.என் நாடு என் மக்கள் னு பொதுவாத்தான் பார்ப்பேன் # AIR LIFT


11 அதைப்பத்தி என்னால யோசிக்கவே முடியல.
உனக்குத்தேவையான பணம் கொடுத்துட்டா யோசிக்க முடியுமில்ல?, LIFT


12 தலைவர் பதவி என்பது சாதாராணமானது அல்ல.எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டி வரும் #,AIR LIFT




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

போர்ப்பின்னணி யில் எடுக்கப்படும் படத்துக்கு ஒளிப்பதிவு ,பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் முக்கியமான படம் AIR LIFT

2 பலதரப்ப்பினரின் பாராட்டைப்பெற்று  வரும் AIR LIFT (2016) ஹிந்திப்படம் 2012 ல் வெளிவந்த ARGO  எனும் ஹாலிவுட் படத்தின் சாயலில் வந்த படமாம்





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

 1 ஹீரோவுக்கு ஓபனிங் சாங், ஓப்பனிங் ஃபைட் எல்லாம் எதுவும் வைக்காம [படத்தோட முதல் ரீலிலேயே நேரடியா கதைக்கு வந்தது


2  குவைத் பெண்ணின் பாத்திரப்படைப்பு , அந்தப்பெண்ணுக்காக ஹீரோ   செய்யத்துணியும் சாகசம் அப்ளாஸ் அள்ளிய காட்சி



3  அரசியல் கலந்த அநாயசமான கூர்மையான வசனங்கள் படத்துக்குப்பெரிய பலம்

4  பின்னணி இசை  செம . பல இடங்களில்  டெம்ப்போ ஏற பிஜிஎம் ஒரு காரணம்

5 ஒளிப்பதிவு  ஒரு லேடி . வெரிகுட் பர்ஃபார்மென்ஸ்.



இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  படத்தில்  முக்கியமான காட்சி பஸ்சில் பலர் ஏறிட்டாங்க . இந்தியா கிளம்பப்போகுது. அப்போ ஒரு ஆள் மட்டும்  குவைத் பொண்ணு வர அனுமதிக்க மாட்டேன், செக்கிங்க் ல இந்தியர்களை விட்டுடுவாங்க , குவைத் ஜென்மப்பகைஅதனால அவங்களோட சேர்ந்து நாமும் மாட்டிக்குவோம்கறாரு.அப்போ ஹீரோ அந்த குவைத் லேடியை பஸ் சிலிருந்து இறக்கி  தன் கார்ல கூட்டிட்டுப்போறார், இது எவ்ளவ் அபாயம்? பஸ் சில் 60 பேரில்  ஒருவராக குவைத் லேடி இருந்தா தெரியாது , சமாளிச்சுடலாம்


ஆனா கார்ல ஹீரோ ஹீரோயின் குவைத் லேடி 3 பேர் தான் , செக்கிங்க் வந்தா மாட்டிக்க பஸ் சை விட கார் பயணத்தில் தானே ரிஸ்க் அதிகம்.

 அப்போ ஹீரோ என்ன பண்ணி இருக்கனும்? ஆட்சேபம் தெரிவிச்ச அந்த ஆளை மட்டும் தன் கார்ல வரச்சொல்லிட்டு அந்த குவைத் லேடியை பஸ்லயே வர வெச்சிருக்கலாமே?


2  செக்கிங்க் ல குவைத் லேடி மாட்டுனதும்  5 வீரர்கள்  ஹீரோ வைத்தாக்க வற்றாங்க. அப்போ ஒரு ஆள் மட்டும் துப்பாக்கி யை யூஸ் பண்றாரு, அது ஒர்க் ஆகலை. போர்க்காலத்தில்  வீரனின்  துப்பாக்கி எப்படி ஒர்க் ஆகாம இருக்கும்? அதென்ன போலீஸ் ஸ்டேஷன்ல செக்யூரிட்டிக்கு நிற்கும் டம்மி போலீஸ் கன்னா?


3  சுற்றி வளைத்த 5 போலீசில் மீதி ஆட்களிடம் ஏன் துப்பாக்கி  இல்லை ?


4 க்ளைமாக்சில்  வில்லன்  ஹீரோயினை துப்பாக்கி முனையில் மிரட்டி ஹீரோவை பணிய வைக்கிறார்,அப்போ பஸ்சில் இருந்து ஜனங்க எல்லாம் திரளா வர்றாங்க. அப்போ வில்லன் அதே மிரட்டலை கண்ட்டிநியூ பண்ணி தப்பி இருக்கலாமே? ஹீரோயின் அவன் பிடில தானே இருக்கு ?
 ?

5 ஆபத்தான சமயம் வந்தப்போ ஹீரோயின் உங்களை விட்டுட்டு நான் தனியாப்போகமாட்டேன்னு சொல்லுது,. ஓக்கே,ஆனா குழந்தையைப்பாதுகாப்பா அனுப்பி இருக்கலாமே? ரிஸ்க் எதுக்கு?ஏன் குழந்தையையும் தன் கூடவே வெச்சிருக்கு?




சி  பி  கமெண்ட் -AIR LIFT (HINDI)- குவைத்தில் நடந்த உண்மை சம்பவம்.போர்ச்சூழல் பின்னணியில் .ஏ சென்ட்டர் ரசிகர்களுக்காக.- ரேட்டிங் =3.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 46



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)= நன்று


திருவனந்த புரம் பத்மனாபா வில் பார்த்தேன்
 ரேட்டிங்




ஒவ்வொரு படம் பார்த்துட்டு வரும்போதும் பலருக்கும் பல விதமான எண்னங்கள் தோணும், ஆனா இந்தப்படத்தைப்பார்த்தா பலருக்கும் ஒரே விதமான எண்ணம் தான் தோணும்.  வசதி வாய்ப்புக்காக ஃபாரீன் போய் பின் அகதியா அலையக்கூடாது சொந்த மண்ணில் வாழனும், சொந்த மண்ணில் சாகனும். அது தான் படத்தின் இயக்குநருக்குக்கிடைத்த வெற்றி

டிஸ்கி = இந்தப்பட டயலாக்சை ட்விட்டரில் அப்டேட்டும்போது படம் தமிழ் ல டப் ஆகி வந்திருக்கா? சப் டைட்டில் இங்க்லீஷ் ல போடறாங்களா? என பலரும் கேட்டாங்க. எல்லாத்துக்கும் ஒரே பதில் தான் . நோ. நான் ஹிந்தில எம் ஏ என்பதை தன்னடக்கத்தோட பகிர்ந்துக்கறேன், அதே போல் மலையாளம், தெலுங்கு  படங்கள் பார்த்தா வசனங்கள் புரியும். அவையும் அப்டேட்டப்படும்

என் இலக்கியப்பணிக்கு தமிழக முதல்வர் ஜெ கையால் ஒரு விருது!!!

நல்லக்கண்ணு தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும்-EVKS.#,அதுக்கு மக்கள் மனசு மாறனும்.ரெட்டை இலை,சூரியன் 2 க்கும் மாத்தி மாத்திகுத்தக்கூடாது


============


2 தமிழக மக்கள் என்னை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பார்கள்-வைகோ#கட்சி தான் கிடைல படுத்துக்கிடக்கே?

=============

3 காங்கிரஸில் இணைந்த பிறகு நிறைய முதல் மரியாதை கிடைக்கிறது -குஷ்பு# முறைப்படி ராதாவுக்குத்தானே முதல் மரியாதை கிடைக்கனும்?

============


4 ஆந்திராவில் அனைத்து போலீசாருக்கும் குற்றவாளிகள் கைரேகை பதிவுடன் செல்போன் # மாமூல் வாங்கறது இனி ஈசி

=============


5 என்னிடம் அஜித் , விஜய் இருவருக்கும் தனித்தனி ஸ்க்ரிப்ட் ரெடியா இருக்கு - M.சசிகுமார் # 2 கதையையும் ஒரே கதையாக்கி 2 பேரையும் புக் பண்ணுங்க


================


தமாகா இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது:- ஜிகேவாசன்  # ஏன்? தலைவரே?கவர்னர் உரை டாக்குமெண்ட்டை எடுத்து ஒளிச்சு வெச்சுடுவீங்களா?


=================

நேரு - சிவா ஆதரவாளர்கள் மோதல்: கருணாநிதி கடும் எச்சரிக்கை # அழகிரி-ஸ்டாலின் மோதுனா பொறுத்துக்கலாம், ஒரே ரத்தம், இவங்க மோதுனா பொறுக்கமுடியுமா


====================


அன்புமணியை CM வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் தேமுதிக வுடன் கூட்டணி - ராமதாஸ்# 4% வெச்சுக்கிட்டு 12% ஓட்டு வெச்சவர்க்கு கண்டிஷன் போட்டா எப்டி?


================


சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து நிற்கவும் காங்கிரஸ் கட்சி தயார்: ஈவிகேஎஸ் இளங்கோவன் உறுதி # நீங்க தயார் தான், மக்கள் ஓட்டுப்போடத்தயாரா?


====================


10  நிலமோசடி வழக்கில் இருந்து கருணாநிதி மகள் செல்வி விடுவிப்பு # வீட்டுக்கு வீடு வாசப்படி , கோர்ட்டுக்கு கோர்ட் ஒரு குமாரசாமி


=============

11 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து நிற்கவும் காங்கிரஸ் கட்சி தயார்: ஈவிகேஎஸ் இளங்கோவன் உறுதி # நீங்க தயார் தான், மக்கள் ஓட்டுப்போடத்தயாரா?


=============

12 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது ஏன்?- விஞ்ஞானிகள்,  விளக்கம்# அதுங்களும் நம்மை மாதிரியே “சுறா”வைப்பார்த்து பயந்திருக்குமோ?என்னமோ?


===================


13 சென்சார் குழுவில் கமல்ஹாசன் இடம்பெற வாய்ப்பு -செய்தி # நல்ல “வாய்”ப்பைப்பயன்படுத்தி  செம கிளு கிளு , கிஸ் சீன்களை சேர்க்குமாறு மாறுகோமாறுகோ


===========



14 இனி 'சுமோ' காட்சியில் நடிக்க மாட்டேன்: இணைய கலாய்ப்புகளுக்கு விஷால் பதில் # டாடா சுமோவுக்கு பதிலா மாருதி ஆம்னி பறக்குமோ?


=================


15 இலக்கியவளர்ச்சிக்குதொண்டாற்றியவர்களுக்கு தமிழகஅரசு விருதுகள் அறிவிப்பு# நான் எந்த இலக்கியமும் படைக்கலை,அதுவும் ஒரு தொண்டுதானே?விருது  உண்டா?


================

16 கிருஷ்ணகிரியில் 1-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த பள்ளி HM தலைமறைவு # கிழிஞ்சது கிருஷ்ணகிரி


==================

17 ஜல்லிக்கட்டு-மோடியிடம் ஜெ நேரில் பேச ராமதாஸ் கோரிக்கை # தேர்தல் கூட்டணிப்பேச்சுவார்த்தைக்குன்னா மெனக்கெடுவாங்க,இதுக்கெல்லாம் டைம் இருக்குமா?


=================

18 பொங்கல் அதிகம் சாப்பிடுவதால் கால்நடைகள் உயிருக்கு ஆபத்து- கால்நடை பராமரிப்புத்துறை எச்சரிக்கை#நல்லவேளை, நமக்கு ஆபத்து இல்ல, கட்டு கட்டலாம்


================

19 திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் மீது திராவகம் வீசிய பெண்:உத்தரப் பிரதேசத்தில்  # ,இனி எந்த மூஞ்சியை வெச்சுக்கிட்டு  பொண்ணுங்களை ஏமாத்துவான்


==================

20 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது கடவுளின் சித்தம் -பஞ்சாப் மந்திரி சுர்ஜித் சிங் # உடனடியா டாக்டரைப்பாருங்க, உங்களுக்கு ஏறி இருப்பது பித்தம்


==================

இதுவரை யாரும் பார்க்காத படம் (UNSEEN PICTURE) 18+ , 32+ , 36 + , 42 +

என்னை ட்ராமா தாஸ் னு சொல்லிட்டாங்க.அவதூறு வழக்கு போடனும்.



ஓஹோ.உங்க ட்விட்டர் ஹேன்டில் என்ன?




DRRAMAADAS



DRAAMA DAS னு சரியாத்தானே இருக்கு?

===========================


2 நானெல்லாம் சர்க்கரைப்பொங்கல் செஞ்சா நெய்லாம் ஒழுகும்


ஏன் மேடம்? நெய்க்குண்டா ல ஓட்டை விழுந்துடுச்சா?


================

3 ரசிக்கத் தெரியாதவர்களிடம் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்காதீர்கள்.அது கேரளா பிகர் எனில் லுங்கி (கைலி) கட்டிக்கொண்டு நில்லுங்கள்.


=============

4 மஞ்சு விரட்டுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டதால் தீர்ப்பு சாதகமாக.வரும் வரை மஞ்சு தவிர மற்ற பிகர்களை விரட்டிட்டு இருப்போம்


=============

5 பொண்ணுங்க இந்தக்காலத்துல இமயமலைக்கே போய்ட்டு அசால்ட்டா வர்றாங்க.இப்போப்போய் சபரி மலைக்குப்போக தடை விதிச்சா எப்படி?

=============

6 ஜல்லிக்கட்டு , விஜய் படம் இரண்டும் ஒன்று தான் , கடைசி வரை தடை இருக்குமா? விலகுமா? என்ற சஸ்பென்ஸ்லயே காத்திருக்கனும்


=


==============


7 ஜாக்சன் துரை , மைக்கேல் ஜாக்சன், எமி ஜாக்சன்  மூவரும் தமிழர்களுக்கு அந்நியமாய்ப்போனதில்  நிறத்திற்கு முக்கியபங்கு உண்டு



==================






8  தமிழ்க்கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மக்கள் டிவி பார்க்க ஆள் இல்லை,கலாச்சாரசீர்கேட்டை பரப்பும் சீரியல்கள் கொண்ட சன் டிவிக்கு மவுசு



================




அன்பே! அன்பால் உன்னை நனைய வைக்கலாம் என  நான் வரும்போதுதான் நீ என் எதிரே குடையுடன்  வருகிறாய்!




==================




10 அசாதாரண மனிதனுக்கு ஆயுள் கம்மி( பாரதி,விவேகானந்தர்), எனவே நீ சாதாரணனாகவே எளிமையாக வாழக்கற்றுக்கொள்




=================



11 அதிகாலையில் நீ எழுந்து விட்டால் சூரிய பகவானுக்கே நீ முன்னோடி ஆவாய்!அதிகாலையில் நீ நடந்தால் நடராஜருக்கே நீ போட்டியாளர் ஆவாய்!



=============



12 பட்டிமன்றங்களிலும் நீதிமன்றங்களிலும் தீர்ப்புகள் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன.வாத விவாதங்கள் ஒரு பார்மாலிட்டி மட்டுமே




============



13 அன்பே!பூ பறிக்கும் நோம்பி அன்னைக்கு ஊரே பார்க்கில் இருக்கும்.நீ வீட்டிலேயே இரு.வந்ததும் பொங்கல் வைப்போம்



=============


14 இதுவரை யாரும் பார்க்காத படம் (UNSEEN PICTURE)என வெளியிடப்படும் எல்லாப்படங்களும் ஏற்கானவே யாராவது சிலரால் பார்க்கப்பட்டவையே!


==============


15 அரவிந்த்கேஜ்ரிவால் உடன் ராம்தாசை ஒப்பிட முடியாது. பொதுமக்கள் ஆதரவு இல்லை, சாதிக்கட்சி எனும் லேபிள் மக்கள் மனதில் ஆழ வேரூன்றி விட்டது




============



16  அபிமான ஹீரோவின் படம் ஹிட் ஆகும் என்பதும் அபிமானத்தலைவர் கட்சி ஆட்சி அமைக்கும் என நம்புவதும் ஒன்றுதான். மக்கள் ஆதரவு இல்லாமல் எதுவும் இல்லை


=============


17 அன்பே அஞ்சனா!
நீ சொன்னபடி உன் பேமிலில மெம்பர்ஸ் எல்லார் போன் நெம்பர்க்கும் டாப் அப் செஞ்சேனா?

============

18 ஃபிகருங்க யாராவது உங்களை  எதிரியாக பாா்த்தால் நீங்க அவங்களை உதிரியாப்பாருங்க, ஏன்னா உதிரிப்பூக்கள் -ல ஹீரோ  மச்சினியை மடக்கப்பார்ப்பாரு,ராசி


=====================


19  பூஜைக்கு எதுஎதை படைக்கலாம்னு கலெக்ட் பண்ணிட்டு இருக்கேன்.


அப்டியே  நம்ம பையனைக்கண்காணிச்சுக்கோ, எதிர் வீட்டு ஃபிகரை கரெக்ட் பண்ணிடப்போறான்


================

20 மிஸ்! ஐ லவ் யூ!

எனக்கு இந்த மாதிரி  யார் கிட்டையும் சொல்லி பழக்கம் இல்ல .


அர்னால்ட் ஸ்வார்ஜெனேகர்க்கு ஸ்பெல்லிங்கா கேட்டேன்? இது ஈசிதானே?

===================

Thursday, January 21, 2016

பிங்க் கலர்ல புது ரயிலா? பெண்கள் மகிழ்ச்சி

பெண்கள் அதிகமாகப் புகைபிடிக்கும் நாடுகளில் இந்தியா 2வது இடம் # விறகு அடுப்பில் சமைத்து புகை சுவாசித்த பெண்களை கணக்கில் சேர்த்துட்டாங்களா?


============



2 'தாரை தப்பட்டை' வாய்ப்புக்கு காரணம் விஷால் அல்ல: வரலெட்சுமி #  என்னம்மா? சித்தப்பா ராடன் டிவி ஆஃபீசுக்குள் இல்லைனு சொல்ற மாதிரி சொல்றீங்க?





================



யாருடன் தேர்தல்  கூட்டணி? - சரத்குமார் விரைவில் அறிவிப்பு  # யார்  1 சீட்  தர்றாங்களோ அவங்களுடன் கூட்டணினு சொல்லிடுங்க, யாரும் தர மாட்டாங்க.




=================




2017ல் சாம்பல், நீலம் , மஞ்சள்  கலர்களில் அதிவேக ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு# பிங்க் கலர்ல விடுங்க, ஃபிகர்ங்களுக்குப்பிடிக்கும்





===================




திமுக, அதிமுக கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளில் செய்யாததை, 5 ஆண்டுகளில் செய்வேன்" - அன்புமணி#தமிழ் நாட்டை மொத்தமா இதுவரை விக்காம இருக்காங்க!




==================




குழந்தைகளுக்கு எதிரான  குற்றங்களுக்கு தனிச் சட்டம்: உச்ச நீதிமன்றம் பரிந்துரை# எல்லா ஐடியாவும் கோர்ட்டே கொடுக்குது, அரசு சொந்தமா யோசிக்காதா?



================




அம்மா சிரஞ்சீவி சித்த மருத்துவ திட்டத்தை தொடங்கிவைத்தார் ஜெ. # லேபிள்ல அம்மா படம் போடாம சிரஞ்சீவி படத்தைப்போட்றாதீங்க, நாஞ்சில் கதிதான்





==================




வெட்கமே இல்லாமல் என்னுடன் கூட்டணி சேர திமுக முயல்கிறது: விஜயகாந்த் # நிச்சயதார்த்தம் நடக்கும் வரை அப்டித்தான், மேரேஜ்ஆன பின் இருக்கு கச்சேரி




================




DMKஆட்சிக்கு வந்தால் கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: மு.க.ஸ்டாலின் # கழக ஆட்சியில் எப்போதும் தாரத்துக்கு முன்னுரிமை




===================




10 அடுத்த 40 ஆண்டுக்கான திட்டத்தை இப்போதே வகுப்பவர் மோடி: இல.கணேசன்#  நாளை  பலாக்காயை விடுங்க, இன்னைக்கு கிடைக்கப்போகும் கிலாக்காய் என்ன?




===================




11 சபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதி மறுக்க கூடாது!- உச்ச நீதிமன்றம் அதிரடி # சாமியே  அய்யப்பா,மாமியே ஹைய்யா டாப்பா




================




12 இன்னும் 15 வருடங்களில் கல்வித்துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழும் -ஓபிஎஸ் # அப்போ  3 ஆட்சி மாறனும் போல 




==================




13 திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் ! # போய்யா.திட்ட திட்ட திண்டுக்கல் னு சொல்லி இருப்பாரோ?


=========



14 எந்த அரசாங்கமும் சினிமாவுக்கு நல்லது பண்ணலை - கமல் ஹாஸன். பண்ணலைன்னு சொல்லலை, நல்லது பண்ணி இருந்தா நல்லாருக்கும்னு சொல்றேன்




====================



15 அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கிறது -சரத்குமார் # இந்த ராணுவ ரகசியம் அம்மாவுக்குத்தெரியுமா? தகவல் கொடுக்கனுமா?



===============


16 கூட்டணி குறித்து பேச இன்னும் யாரும் வரவில்லை -ஜி.கே மணி # செல் போன் ரிங் டோன் " காத்திருந்தேன் தனியே! எதிர்பார்த்திருந்தேன் உனையே!"?


================

17 கோயில்களில் ஆடை கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுக்கு ஹைகோர்ட்் இடைக்கால தடை # ரைட்டு.மிடி ஜீன்சில் வர்றவங்க எல்லாம் வரிசையா வாங்கஇன்றே கடைசி


=============

18 கேரளாவில் மதுவிலக்கை கொண்டு வந்தது போல் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வர முடியுமா?: குஷ்பு # பாமக வந்தா முடியும்.ஆனா வராது.


==============

19 அண்ணா நூலகத்தை சிறுமை எண்ணத்தோடு சீர்குலைக்க ஜெயலலிதா முயற்சி: கருணாநிதி வேதனை தவறான முயற்சி தேர்தலில் வினை ஆகும்

==============

20 பேஸ்புக் காதலால் காதலனைத் தேடி... பாகிஸ்தான் சென்று திருமணம் செய்த இந்தியப் பெண் # ஏம்மா எங்களை எல்லாம் பார்த்தா மனுசனாத்தெரியலையா?


==============