Saturday, January 16, 2016

பொண்ணுங்க தோசை சுடத்தான் லாயக்குனு இனி சொல்ல வழி இல்லை

2016ல் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை,அம்மாநாடுஎன மாற்றி விடுவார்கள்: கருணாநிதி  நீங்க வந்து அய்யா நாடுன்னு மாத்திட்டா போச்சு



=================



சர்வதேச துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா உலக சாதனை # பொண்ணுங்க தோசை சுடத்தான் லாயக்குனு இனி சொல்ல வழி இல்லை




=================



‘பேஸ்புக்கில்’ ஆபாசமாக நடிகை மஞ்சு வாரியரை இழிவுபடுத்திய போலீஸ் அதிகாரி இடைநீக்கம்  # நடிகையின் காலை வாரிட நினைச்சாரு, பதவியையே வாரிட்டாங்க




===============




கூட்டணி குறித்து பேச இன்னும் யாரும் வரவில்லை -ஜி.கே மணி # இலவு காத்த கிளி ,தனித்து நிற்க கிலி,இது பசுத்தோல் போர்த்திய புலி




==============




5 வெற்றிக்கூட்டணியில் தமாகா இடம்பெறும்-ஜி.கே.வாசன்

# எங்க கண்ணுக்கு வெட்டிக்கூட்டணி போல் தோணுது


=============

6 திமுகவிடம் 60 தொகுதிகளை கேட்போம் - காங்கிரஸ் # 160 கூடக்கேளுங்க.ஆனா தலைவர் 30 டூ 40 தான் தருவார்.இதயத்தில் வேணா 60 ஏக்கரா இடம் தருவாரு


==============


7 தமிழக மக்களை நாங்கள் காப்பாற்றுவோம் - கருணாநிதி # தமிழகத்தை விற்றுவிடுவோம் -சொல்ல மறந்த கதை


===========

8 மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்த்தை மீண்டும் அழைப்போம்: -திருமாவளவன் # ஒரு தடவை கூப்பிட்டா அழைப்பு.அடிக்கடி கூப்பிட்டா நச்சரிப்பு்

============


9 தேர்தலில் தமிழக அரசியலில் மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது-வைகோ # எல்லா குடுகுடுப்பைக்காரங்களும் நல்ல காலம் பிறக்குதுன்னுதான் சொல்றாங்க


=============


10 கிஸ் ஆப் லவ் போராட்டம் ஆபாசத்தின் வெளிப்பாடு: மலையாள நடிகை ஷீலா ஆவேசம் # ஷோல்டரை இறக்குங்க.ஓசில லைவ் ஷோ பார்க்க.வாய்ப்பு


=================

11 விஜய் , அஜித் யாருக்கு முதலிடம்” - ஸ்ரீதிவ்யா ஜாலி பேட்டி! # க்ளைமாக்ஸ்ல சிவகார்த்திகேயன் னு சொல்லி இருக்குமே?இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான்


=============

12 ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி RKஅகர்வால் திடீரென மாற்றப்பட்டு அமிதவராய் நியமிப்பு#மறுபடியும் முதல்ல இருந்தா?


==================


13  போற இடங்களில் எல்லாம் எங்களுக்கு வரவேற்பு இருக்கிறது - அன்புமணி  #  டாக்டர் அய்யா! வரவேற்பு இருக்கும், ஆனா பதவிஏற்பு இருக்காது.பகல்கனவுதான்


===================


14  தமிழகஅரசின் சாதனைகளை விளக்கிஅதிமுகவினர் வீடு,வீடாக காலண்டர்விநியோகம் # அப்டியே ஒரு டைரி குடுங்க, ஒரு கைதியின் டைரி-ன்னு மக்கள் கொண்டாடுவாங்க


==================

15  மக்கள் நலக் கூட்டணியில் CM வேட்பாளராக நான் போட்டியிட தொண்டர்கள் விரும்பினால் அதை ஏற்கிறேன் - வைகோ # கேப்டன் கை விரிச்ட்டார் போல


================


16   ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கு மட்டுமே வெள்ள நிவாரணம்: இளங்கோவன் குற்றச்சாட்டு # இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டுடறோம்னு சத்தியம் பண்ணாப்போதுமாம்


===================


17 ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி"# தமிழர்கள் வீரம் தெறி க்கப்போகுது

==============

18 ஜெ மீதான சொத்துக்குவிப்பு அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை # யுவர் ஆனர்.குவிச்சு வெச்ச சொத்தை வெள்ளம் அடிச்ட்டுப்போய்டுச்சு.

============

19 பெண் நீதிபதி மீது செருப்பு வீச்சு: பூந்தமல்லி கோர்ட்டில் பரபரப்பு !#,அது ஹை ஹீல்ஸ் இல்லையாம்.சோ ரிஜக்டட்


==================

20  கத்தி , புலிக்கு வந்த பிரச்னை தெறி க்கு வராது நடிகர் சங்கம் தலைவர் நாசர் உறுதி # ஜெ- அங்கே என்ன சத்தம்? நாசர் = சும்மா பேசிட்டுஇருந்தோம்மா


=======================

புஷ்பா வை சுருக்கி புஷ்-னு கூப்ட்டா அபாயமாமே? ஏன்?

1  சூரியனுக்கு முன் எழுந்து கூவுவது சேவலாக இருந்தாலும் கோழி கூவுது என சொல்லி பெண் இனத்துக்கே தன் பெருமையை விட்டுக்கொடுப்பது ஆண் இனம்



===============




நம் வாழ்வின் எழுச்சிப்பயணத்தின் முதல் படி அதிகாலையில் எழுந்து கொள்தல்,வெற்றிப்பயணத்துக்கு வழிகாட்டி பெற்றோரிடம் பணிவாக நடந்துகொள்தல்




====================



ஆறுவது சினம் னு டீச்சர் பாடம் நடத்துனா நெட் தமிழன் அது ஆராதனாவின் குணம் கறான்




===============




4 ஒருவருடைய வாயை அடைத்துவிட்டால் அவரை வென்றுவிட்டதாக ஆகிவிடாது.பிகருக்கு அவர் சம்மதத்துடன் லிப் கிஸ் தருவது விதி விலக்கு.



==========



5 இருதயத்தினுள் ஒரு வெற்றிடத்தை உணர்கிறேன் என புலம்பாதீர்.வெற்றிக்கான இடம் வெற்றிடத்தில் ஒளிந்துள்ளது. # தனித்திரு பசித்திரு விழித்திரு




===========



6 ஆணில்லாமல் ஒரு பெண்ணால் வாழ முடியாது் ஏனெனில் பெண்ணுக்கு எல்லா எடுபுடி வேலையையும் செய்து கொடுப்பவன் ஆண் தான்




=========



7 சிரசாசனம் நல்லது.அது போல் தலைகீழ் வாசிப்பும் ஒரு கிளுகிளுப்பே.உதா= நேற்று இரவு முதல் என்பதை திருப்பினால் முதல் இரவு நேற்று



============



8 சாப்பிடறது பபுள்கம்மா இருந்தா மாடு மாதிரி அசை போடறதுல தப்பே இல்லை.

கூப்பிடறது பிகரா இருந்தா ஆபீசுக்கு லீவ் போடறதுல தப்பே இல்ல


===========

9 சார்.ஜீன் கிளாடு வேன்டம் நடிச்ச யுனிவர்சல் சோல்ஜரை உல்டா பண்ணீட்டீங்களா?


யோவ்.டைட்டில் தான் யுனிவர்சல்.படம் பக்கா லோக்கல் ( யுனிவர்சல் காப்-சிங்கம்-3)


==============

10 கேரளாவில் பஸ் கண்டக்டர்1,ரூபா 2,ரூபா ஏமாற்றுவதில்லை.எரிந்து விழுவதில்லை.மீதி சில்லறை யை இன்முகத்துடன் தாமாகவே முன் வந்து தந்து.விடுகின்றனர்

================

11 பொண்ணுங்க பேரை சுருக்கிக்கூப்பிடுவதிலும் ஆபத்து உண்டு.உதா.புஷ்பா வை சுருக்கி புஷ்(PUSH)னா புடிச்சு தள்ளி விட்டுடும்

===============


12 ஹைட்டா இருக்கறவன் ஹையர் ஸ்டடி படிக்க பாரீன் போகமாட்டான் என்பதும் க்யூட்டா இருக்கும் பிகரைக்கட்டிக்கிட்டா லைப் பிரைட்டா இருக்கும் என்பதும் 1

================

13 உன்னைத்துரத்துவது ஆண் போலீஸ்னா வேகமா ஓடு.பெண் போலீஸ்னா கையைப்பிடிச்சு இழுத்துட்டு ஓடு.


=============

14 இந்தப்பொண்டாட்டிங்க எல்லாம் வீட்ல மிச்சம் மீதி ஆன காய்கறியை அரிசி மாவுல தூவி விட்டுட்டு வெஜ்டபிள்ஸ் தோசைன்னு அப்டேட்டிடறாங்க

============


15 கல்வியா?செல்வமா?வீரமா?ன்னு கேட்டா வீரம் னு சொல்றவன் அஜித் ரசிகனா இருப்பான்

==============

16 அன்பே!நீ அனுப்பும் குறுஞ்செய்திகளை உன் குரலிலேயே கேட்க ஆசைப்படுகிறேன், ஏன்னா எனக்கு படிப்பு லேது


===================

17  எத்தனையோ அழைப்புகள் 
என் தொலைபேசிக்கு அனுதினமும் வரும், ஆனால் நேரில் தினம் வருவது அன்பே அனு நீ மட்டம் தான் சாரி நீ மட்டும்தான்!


================


18  ஸ்ருதி கமல் = டாடி, உங்க கூட ஒரு படம் நடிப்பது எனக்கு சந்தோஷம், உங்களுக்குப்பயமா? ஏன்?

கமல் = இதுல மட்டுமாவது போர்த்திட்டு வாம்மா


===================


19  மீன ராசி அன்பர்களே! 2016ம் வருசம் ராகு கேது பெயர்ச்சி பலன் கள் நமக்குத்தான்  செம சாதகம் என சொல்லுது ஜாதகம் 91%  மார்க் -நல்லதே நடக்கும்


=================

20 100 மீ ரேசில் முதல் அடியை முதலில் வைப்பவன் ,செஸ்சில் வெள்ளை காய்ன் பெற்றவன் வெற்றி பெறுவான்.்.எனவே எழுவதில் நீ சூரியனை சேவலை முந்திக்கொள்

===============

Friday, January 15, 2016

MONSOON MANGOES - சினிமா விமர்சனம் ( மலையாளம் )


ஹீரோ ஒரு அரைகுறை  டேலண்ட் ஆள். ஆஃபீஸ்ல ஒர்க் பண்ணாலும் சினிமா எடுக்கும் நினைப்பிலேயே இருக்காரு . இவரோட சினிமா ஆர்வம் அப்பாவுக்கும் பிடிக்கலை. ஆஃபீஸ் டேமெஜருக்கும் பிடிக்கலை.

 அப்பா எப்போப்பாரு திட்டிட்டே இருக்காரு .எந்த வீட்ல தான் அப்பா பையனை கொஞ்சி இருக்காரு , உள்ளூர பாசத்தை ஒளிச்சு வைப்பதில் ஆண்களுக்கே  முதலிடம் .

 ஆஃபீஸ் ல டேமேஜர் ஒரு நாள் கடுப்பாகி ஹீரோவை டெர்மினேட் பண்ணிடறாரு . நம்மாளு கவலைப்படலையே, ஒரு சினிமா டைரக்ட் பண்ணலாம்னு முழு மூச்சா இறங்கிடறாரு

ஹீரோவுக்கு டேலண்ட் கம்மியா இருந்தாலும் அடுத்த மல்லுவுட் ஸ்பீல்பெர்க்கா ஆகனும்னு ஆசை. உலக அளவில் ஒரு தரமான மலையாள இலக்கிய சினிமாவைப்படைக்கனும்னு நினைக்கறாரு.


 சினிமா வில் நடிக்க நடிகர்கள் தேவைன்னு விளம்பரம் தர்றாரு. ஆட்கள் வர்றாங்க. அவங்களை தன் வீட்டிலேயே தங்க வைக்கறாரு , அதுல ஒருத்தன்  வீட்ல இருக்கும் செல்வத்தை ஆட்டையைப்போட்டுட்டுப்போய்டறான். அப்பா செம கடுப்பாகி வீட்டை விட்டு வெளியே போங்கறார். ஹீரோ அவர் ஆசைப்பட்டபடி அவார்டு ஃபிலிம் எடுத்தாரா? இல்லை செல்வராகவன் மாதிரி கெடுத்தாரா? என்பது க்ளைமாக்ஸ்


 ஹீரோவா  படத்தில் இயக்குநரா வருபவர் ஃபகத் ஃபாசில் . மிக இயற்கையான காமெடி நடிப்பு  ஓவர் ஆக்டிங் , ஒரு துளியும் இல்லை . பாடி லேங்குவேஜ் பக்கா

ஹீரோயின் ஐஸ்வர்யா மேனன். ஆனா படத்தில்  ஹீரோயினுக்கு அதிக வேலை இல்லை . இது ஹீரோ ஓரியண்ட் மூவி . ஊறுகாய் மாதிரி தொட்டுக்குவார்னு பார்த்தா இயக்குநரும் தொடலை , ஹீரோவையும்  தொட விடலை. ஹீரோயின் சம்பளம் வேஸ்ட்டா போச்சேன்னு தமிழன் கவலைப்படறான்

 இதுக்கெல்லாம் தமிழ் டைரக்டர்கள் தான் சரி . ஹீரோயினுக்கு 35 லட்சம்  ரூபா சம்பளம் கொடுத்தா   எந்த அளவு  கிஸ் சீன் , கிளாமர் சீன் எல்லாம் எடுக்க முடியுமோ அதை எல்லாம் 10  ரீல் எடுத்து வெச்சுக்குவாங்க . படத்துல 2 ரீல் தான் வரும்  என்பது வேற  விஷயம்


ஹீரோவோட அசிஸ்டெண்ட் டைரக்டரா வினய் காமெடி  ரோலில் கன கச்சிதம்


ஹிந்தி ஆக்டர் பிரேம்குமாரா வரும் விஜய் கச்சிதமான நடிப்பு ! என்ன பார்க்கறீங்க? இது வேற விஜய்.

"Akkara Kazhchakal". என்ற புகழ் பெற்ற படத்தை இயக்கிய  அபி வர்கீஸ் தான் படத்தின்  திரைக்கதை இயக்கம் எல்லாம், இவர் நம்மூரு அகத்தியன் எடுத்த  விடுகதை டைப்ல எடுத்திருக்கார்.


படம்  ரொம்ப ஸ்லோ . டீசண்ட்டான காட்சி அமைப்புகள் படத்தின் பலம் என்றாலும் ஹை க்ளாஸ் ஆடியன்சுக்கு மட்டுமே பிடிக்கும் விதத்தில் இருக்கு, இது ஒரு   பலவீனம்

 5 பாட்டு இருக்கு 2 தேறுது. ஒளிப்பதிவும் இசையும் கச்சிதம்



மனதைக் கவர்ந்த  வசனங்கள்

ஒரு கண்ணாடி உடைந்தால் அதில் 1000 கண்ணாடித்துகள்கள் உருவாகும்
ஒரு கனவு சிதைந்தால் அதில் இருந்து.1000 கனவுகள் கிளர்ந்து எழும்#MONSOON


2 ஏன் காலேஜ் போகல?

ரவீந்திரநாத் தாகூர் காலேஜே போகாம பாடல் இயற்றலையா?
ஏன்?ஏசு கிறிஸ்து ஸ்கூலுக்குப்போனாரா?ன்னு கேளேன்#MONSOON


3 YOU ARE FIRED.
WHAT?
U R TERMINATED.
SIR!!
யோவ்.வேலையை விட்டு தூக்கிட்டோம்னு பச்சையா சொன்னாதான் புரியுமா?


உங்க கதைல டெப்த் கம்மியா இருக்கே?
இன்னும் 2/3 "சீன்",சேர்த்த வேண்டி இருக்கு சார்.



ஹீரோயின் இல்லாம எடுக்கப்படும் சினிமா ஓணம் பண்டிகை.அன்னைக்கு வெறும் ரொட்டி சாப்ட்டது போல் இருக்கும்


என் படத்துல நீங்க நடிக்கனும்னா அந்த கேரக்டராவே மாறிடனும்.
அய்யய்யோ.அப்போ சாகற மாதிரி சீன் வந்தா ?
ஆ! # MONSOON MANGOES


7 சார்.நம்ம பட.டைட்டில் எப்படி இருக்கு?
ம்ம் மேங்கோஸ் னு வர்றதால ஹீரோயின் டி சர்ட்ல டைட்டில் வர்ற மாதிரி டிசைன் பண்ணிடலாம் #,MONSOON MANGOES

8 குதிரையை கூட்டிட்டு வா ன்னா கழுதையை ஷூட்டிங் கூட்டிட்டு வந்திருக்கே?
சார்.2ம் ஒரே பேமிலிதானே?,அட்ஜஸ் பண்ணிக்க முடியாதா? MANGOES


9 அம்மா அப்பா இஷ்டப்படி குறிப்பிட்ட வயசு வரைதான் நடக்க முடியும்.பின் நம்ம இஷ்டப்படிதான் வாழனும் MANGOES


10 உன் கனவு நிகழ்ந்தேற பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் # M M


11 அடல்ட்ஸ் ஒன்லி படம் தானே எடுக்கப்போறீங்க?,அதுக்கு கதை எதுக்கு?,எல்லாப்படத்துலயும் ஒரே க்ளைமாக்ஸ் தானே? MANGOES


12 வாழ்க்கையை விட சினிமா பெருசில்ல.சினிமாவை.விட உயர்ந்தது வாழ்க்கை #,M M








இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  எடுத்துக்கொண்ட கதை  என்னவோ அதை நோக்கிய நிதானமான பயணமாக அமைக்கப்ட்ட தெளிவான திரைக்கதை


2 தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள் கச்சிதமான பங்களிப்பை அளித்தது




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  முன் பின் அறிமுகம் இல்லாத ஆட்களை எப்படி  வீட்டுக்குள் தங்க வைப்பாங்க ? வெள்ள பாதிப்பு மக்களா இருந்தாக்கூட அப்படி செய்யலாம். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தவர்களை கெஸ்ட் ஹவுசிலோ  தனி  வீட்டிலோதானே தங்க வைப்பாங்க ?


2  ஹீரோ எந்த ஒரு இய்க்குநரிடமும் அசிஸ்டெண்ட்டா ஒர்க் பண்ணாமயே எப்படி கேமரா கையாள்வது உட்பட எல்லா ஒர்க்கும் பண்றாரு ? பெரிய மணி ரத்னமா?


3 படத்துக்குப்பக்க பலம் வசனங்கள் , ஆனால் எல்லாம் ஆங்கில பொது அறிவு நூல்கள், அறிஞர்கள் பழமொழிகள்  அறிவுரைகள்  இவற்றில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கு, ட்விட்டர்ல இருந்தும்

4  ஹீரோயின் இல்லாம படம் எடுக்கறது வேஸ்ட்னு படத்துலயே டயலாக் வெச்ச இயக்குநர் அதை அவர் ஃபாலோ பண்ண மறந்தது ஏனோ?




சி  பி  கமெண்ட் - Monsoon Mangoes ( 2016- malaiyaalam)- அரைகுறை திறமையுடன் சினிமா எடுக்கும் ஆர்வக்கோளாறு காமெடி கதை - ஏ செண்ட்டர் ஃபிலிம், ரேட்டிங் = 3/5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 43  ( மலையாளப்படத்துக்கு விமர்சனம் அதிகம் போடுவதில்லை, ஒரு ஒப்பீட்டு நோக்கில்_)



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - ஓக்கே



 ரேட்டிங் =3/5


திருவனந்த புரம் ஸ்ரீ  தியேட்டரில் படம் பார்த்தேன்





Thursday, January 14, 2016

ரஜினி முருகன் - சினிமா விமர்சனம்


ஹீரோ வோட அப்பாவும் , ஹீரோயினோட அப்பாவும் சின்ன வயசுலயே ஃபிரண்ட்ஸ்.எப்படி கலைஞர் வைகோவுக்கு அந்தக்காலத்தில் பொய்யா வாக்குறுதி கொடுத்தாரோ அந்த மாதிரி என் பொண்ணு உன் பையனுக்குத்தான்னு சொல்லி ஹீரோயினோட அப்பா ஹீரோவோட அப்பா மனசுல ஆசையை விதைக்கறாரு.ஹீரோவும் ஹீரோயினை சின்ன வய்சுல இருந்தே லவ்வறாரு.


 நாஞ்சில் சம்பத் எசகுபிசகா உளறி மாட்டின மாதிரி ஒரு சின்ன பிரச்னைல 2 குடும்பத்துக்கும் தகறாரு. அதனால சம்பந்தம் கட்.  கேப்டன் எப்படி  தூ-ன்னு துப்பி துரத்துனாலும் விடாம அவர் பின்னால சுத்தும்  நிருபர்/அரசியல் வாதி போல  ஹீரோ ஹீரோயின் வீட்டு முன்னாடியே  டீக்கடை போட்டு டேரா போடறார்.

  டீக்கடை போட்டா ஃபிகரை செட் பண்ண முடியுமா?ன்னு ஏளனமா கேட்காதீங்க. முன்னாள் டீகடை ஓனர் தான் இந்நாள்  இந்தியப்பிரதமர்.


இந்த லவ் டிராக் இடைவேளை வரை ஜாலியா காமெடியோட ஓடிட்டு இருக்கு. அதுக்குப்பின் கதையை நகர்த்தனுமே? வில்லன் எண்ட்ரி 

 எப்படி அழகிரி  கலைஞர் கிட்டே வாரிசு உரிமைப்பிரச்னை கிளப்பினாரோ அதே மாதிரி  வில்லன்  நான் தான் இந்த வீட்டின் இன்னொரு வாரிசுங்கறார். 

 சொத்து என்னாச்சு? பிரிஞ்ச குடும்பம் 1 சேர்ந்ததா? என்பதுதான் மிச்ச மீதிக்கதை




 விஷால் எப்படி தன்க்குன்னு ஒரு ஃபார்முலா வெச்சிருக்காரோ அதே போல் சிவா வும் ஒரு சக்சஸ் ஃபார்முலா வெச்சிருக்கார். விஷால் உள்ளூரில் இருந்து வேற ஊருக்குப்போய் ரவுடிகளை துவம்சம் பண்ணுவார்.சிவா உள்ளூரிலேயே  ஃபிகரை கரெக்ட் பண்ண டேரா போட்டு லோலாயம் பண்ணுவார்.


இந்தப்படம் சிவாவுக்கு முக்கியமான படம், ஏன்னா அவரோட சம்பளத்தை 20 கோடி ரேஞ்சுக்கு உயர்த்தப்போகும் படம். நடிப்புக்காக அதிகம் மெனக்கெடலை. ஆனா டான்சில் காமெடியில்   கல்லா கட்றார். ஒவ்வொரு  ஃபிரேமிலும் அவர் ஆதிக்கம் தான் 


 ஹீரோயினா  கீர்த்தி சுரேஷ். சுரேஷை கட் பண்ணிடுவோம், செல்லமா கீர்த்தி. பால்கோவாவில் ஃபில்டர் பண்ணின கோஷாப்பழ கலர் உதடு , மின்னல் வெட்டுனது போல் பார்வை கொண்ட கண்கள் , சந்தனக்கிண்ணம் போல் கன்னம்-னு ஸ்ரீ திவ்யா வுக்கு அக்கா மாதிரி இருக்கார் . செம ஃபிகர். ஒரு பாட்டுக்கு அவர் போடும் குத்தாட்டம் ம்ம்ம் வேற  லெவல் 


சூரியின் ஒன் லைனர்கள்  சிலது மொக்கையா இருந்தாலும்  வழக்கம் போல் ஆடியன்ஸ் சிரிக்கறாங்க . அதனால அவரை மன்னிச்சிடலாம்


 ராஜ்கிரணின் குணச்சித்திர நடிப்பு பக்கா


 சமுத்திரக்கனியின் வில்லன் நடிப்பு சுமார் ரகம் தான் . அவரெல்லாம் போராளி , போலீஸ் ஆஃபீசர் , வாத்தியார்  ரோல்களில் பார்த்துட்டு இது  போல் டம்மி வில்லனாய்ப்பார்க்க கஷ்டமா இருக்கு 


 பாடல்கள் 3 செம ஹிட்டு . எந்தப்பாட்டும்  போர் அடிக்கலை . என்னம்மா இப்படிப்பண்றீங்களேம்மா பாட்டு மெட்டுக்கு தியேட்டரில்  தமிழே தெரியாத மலையாளீஸ்  கூட எந்திரிச்சு நின்னு ஆட்டம் போடறாங்க. தமிழ் நாட்டில் எப்படி  இருந்திருக்கும் ?


இயக்குநர்  திரைக்கதையை மிக சாமார்த்தியமாக போர் அடிக்காமல் ஜனரஞ்சகமா நகர்த்தி இருக்கார் . பெண்கள்  ஃபேமிலியுடன் வந்து பார்க்கும் அளவு  மிக கண்ணியமான படமாக்கம்.


மனதைக் கவர்ந்த  வசனங்கள்

 நாளை அப்டேட்டப்படும்



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  பால்கோவா அழகி கீர்த்தி அறிமுகம் , அவருக்கு தோழியாக ஒரு ஃபிகர் அறிமுகம் 2க்கும் 70 மார்க்


2  சூரி  - ஃபாரீன்  ஃபிகர்  லவ்  சீன்


3 ராஜ்கிரண்  டெட் பாடி  டிராமா  களை கட்டும் காமெடி காட்சிகள்


4 அம்மா அம்மா பாட்டு காமெடி சிக்சர் . கொக்கரக்கோ கோழி  ஓபனிங் சாங் டான்ஸ் ஸ்டெப்ஸ்  அருமை


வசனங்கள்  பல இடங்களில்  நச் .


5 க்ளைமாக்சில்  இன்னொரு சிவா வருவதும் அது வருத்தப்படாத வாலிபர் சங்க  ஹீரோ கெட்டப் என்பதும் நல்ல கற்பனை


இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   தாதா மாதிரி இருக்கும்  வில்லன் சொத்துக்கு ஆசைப்பட்டு தன்னை வைப்பாட்டி மகன் என ஊரெல்லாம் ஊருக்கு முன் பஞ்சாயத்தார் முன் அடிக்கடி  சொல்லி அசிங்கப்படுவாரா? அவர் தான் மிரட்டிப்பணம் பறிக்க ஆள் அடியாள் வெச்சிருக்காரே? டைரக்டா மிரட்டி வாங்கிட்டா போச்சு


2  சொத்து பத்திரமான பட்டயத்தை பாட்டியிடம் வில்லன் கேட்கும்போது தர மறுக்குது. பின்  அதை எப்படி வில்லன் கையில் விட்டுட்டு தண்ணீர் எடுக்க உள்ளே போகுது ? கிராமத்துப்பாட்டிகள்  அவ்வளவு உஷார் இல்லாதவர்களா?


3  வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட திரைக்கதையைப்பக்கத்திலேயே வைத்து இதுக்கு திரைக்கதை எழுதுனது போல் பல சீன்கள் அதே சாயலில்





சி  பி  கமெண்ட்-ரஜினி முருகன் - ஜாலிவாலிஃபேமிலி எண்ட்டர்டெய்னர்-சிவா வின் ஆல் செண்ட்டர் ஹிட் சிக்சர் - விகடன் மார்க் = 42 , ரேட்டிங் = 3 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 42



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)- ஓக்கே



 ரேட்டிங்
= 3/5


 திருவனந்தபுரம் ஸ்ரீ குமாரில் படம் பார்த்தேன்



வஞ்சிப்பா ,புஷ்பா ,ரம்பா

மாமா, உங்க பொண்ணுக்கு வாய் ஜாஸ்தியா இருக்கு

 இல்லியே மாப்ளை, எல்லாரையும் போல அவளுக்கு ஒரு வாய் தானே இருக்கு? நல்லா பார்த்துட்டு சொல்லுங்க


==============

2  நான் எந்த ஸ்டேட்டஸ் போட்டாலும்  4 லைக்ஸ் தான் விழுது

 மேடம், இனிமே ஸ்டேட்டஸே போடமாட்டேன்னு ஒரு ஸ்டேட்டஸ் போடுங்க, 4000 லைக்ஸ் விழும்


================


3  லோ பிரசர், லோ சுகர்னு க்ளினிக் வந்தீங்க, ஆனா செக் பண்ணா ஹை பிசர், ஹை சுகர் காட்டுதே?

டாக்டர், நர்ஸ் லோ ஹிப் லோ கட் சேலை கட்டுதே? அதான்


================

விடிஞ்சு.2,மணி.நேரம் ஆகுது.கெட்டப் மேன்

எந்திரி.

ஹீரோ = கெட்டப் பா?,அய்யோ நான் மாட்டேன்


==============

5 கி.மு , கி.பி என்பது கிருஷ்ணன் பிறப்புதற்கு முன், பின் தானாம், கிறிஸ்து கிடையாதாம்


 நல்ல வேளை, கில்லி ரிலீசுக்கு முன்,பின்  என சொல்லலை


==============


6 டியர், மாசாமாசம் நான்தான் உனக்கு விதம்விதமா மோதிரம் கிஃப்ட் பண்றேன்,ஒரு நாளாவது நீ ரிங்க் தந்திருக்கியா?

டெய்லி மிஸ்டு கால் ரிங்க் தருவேனே?


==================

7 டியர், லவ் பண்றப்போ 
எனக்கு பிடிச்சவங்களுக்காக நா எதையும் செய்வேன்னு சொன்னியே?


ஆமா, இப்போ அதுக்கு என்ன?

மேரேஜ் ஆகிடுச்சே?சமையல் பண்ணு

================

8  இன்ஸ்பெக்டர், சிம்புவை எல்லா இடத்துலயும் தேடியும் கிடைக்கலையா?

ம்ம், பாபநாசம் க்ளைமாக்ஸ் போல் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே  ஒளிஞ்சிருக்காரோ?


=================

9  தலைவரே! தனியா நிக்காம  ஏன் கூட்டணி வைக்கறீங்க?

 தனியா நின்னு தோத்தா நமக்கு கெட்ட பேரு, கூட்டணி வெச்சு தோத்தா பழியை அவங்க மேல போட்டுடலாம்


==================


10 
தமிழ் மிஸ்.தம்புராட்டி = பா எத்தனை வகைப்படும்?

லொள் மாணவன் = வஞ்சிப்பா ,புஷ்பா ,ரம்பா என பல வகைப்படும்


===============




11 தலைவரே! ஜெயிக்கற கட்சிக்குத்தான் ஓட்டுப் போடனும்னு தமிழன் நினைக்கறான்.


 ஓஹோ. அப்போ நம்ம கட்சிப்பேரை ஜெயிக்கற கட்சின்னு மாத்திடலாமா?



===================

12  

லெட்டர் எழுதுனா போஸ்ட் பண்ணனும்னு அவசியமா என்ன! ?


 எஸ் மிஸ், டோண்ட் போஸ்ட்போன் இட்


===================\


13  லெட்டர்ஸ் டூ GOD -னு நம்ம பொண்ணு எழுதிட்டிருக்கே? கண்டிக்கலையா?

 கடவுளுக்குத்தானே?


 எனக்கென்னவோ அவ மனதை ஆண்டவனுக்கு-ன்னு தோணுது


====================

14 டியர், இன்னைக்கு வேட்டி தினம் கொண்டாடுனீங்களா?


 பெருசா கொண்டாட என்ன இருக்கு? டெய்லி நமக்கு வெட்டி தினம், இன்னைக்கு வேட்டி தினம்


=================


15  தலைவரே!சிவாஜி கணேசன் நடிச்ச சாதனைப்பட திரைக்கதையை எதுக்கு மேடைல சொல்றீங்க?


சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தனும்னு மேலிட உத்தரவு


====================

16 திருமண வைபவத்துல எதுக்கு அரிசிய தலைல போடுறாங்க?

பொண்டாட்டி  புருசன் தலைல அம்மிக்கல்லைத்தூக்கிப்போடுவான்னு ஒரு முன்னோட்ட எச்சரிக்கைதான்


===============

17  இன்ஸ்பெக்டர், உங்க கண் முன்னாலயே திருடன் கார்ல தப்பிப்போறான், பிடிக்கலை?


 சாரி, அவன் கார் நெம்பர் ஒத்தைப்படை, நம்ம ஜீப் ரெட்டைப்படை


=====================

18 இன்ஸ்பெக்டர், நாகார்ஜூன் ஃபோட்டோவை  டிபி யா வெச்சிருக்கறவர் எனக்கு டெய்லி டி எம் அனுப்பறார்


 ஏம்மா, அமலா டிபி தானே நீங்க.அட்ஜஸ் பண்ணிக்குங்க


==================

19  சிங்கம்-3 ல ஹீரோயினா  யாரைப்போடலாம் ஜோசியரே?


 நியூமராலஜிப்படி  த்ரிஷா தான், நேமாலஜிப்படி சிம்ம வாகினி


===================


20  ஜாப் கோயமுத்தூர்'ல ஆனா இன்டர்வீயூ திருச்சி'ல


பார்த்து மிஸ்! சம்பளத்தை  மாசா மாசம்  சென்னை வந்து சைன் பண்ணி வாங்கிக்கோ சொல்லப்போறாங்க


======================