Skip to content

Tuesday, December 29, 2015

அஞ்சனா ,ஆராதனா-நாலணா எட்டணா

1/மிஸ்! உங்க TL் /நாவல் /கதை படிச்சேன்.உங்க எழுத்து நடை சுமாராத்தான் இருக்கு.


நேர் ல வந்து பாரு.நான் நடக்கறதை.பிரமாதமான நடைனு சிலாகிப்பே



==============

2/உங்க பேங்க் ல 5000 ரூபா லோன் வேணும்.


ஸாரி சார்.செக்யூரிட்டி இல்லாம லோன் தர முடியாது.
என்ன சார்.ரேப் பண்ணுனவனுக்கே 10000 ரூபா லோன் தர்றாங்க


============


3/டியர்.5 வருசம் லவ் பண்ணியும் என் சுண்டு விரல் கூட உன் மேல படலை.


ஆமா.இது கூடா நட்பு.


=============

4/ஏய் மிஸ்டர்! மேனர்சே இல்லாம இடிச்ட்டு ஒரு சாரி கூட சொல்லாம போறே?


இடிக்கறது மட்டும் தான் என் வேலை.சாரி யை என் அப்பா வந்து கேட்பாரு # TR


===========

5/யுவர் ஆனர்.அந்தப்பாட்டை அபிசியலா நான் ரிலீஸ் பண்ணலை.எனக்கு எப்டி தண்டனை தர முடியும்?


நித்யானந்தா வீடியோ கூடத்தான் அவர் ரிலீஸ் பண்ணல


==============

6/வழக்கமா கதை எழுதும்போது தரைல உக்காந்து எழுதும் நீங்க இப்போ டைனிங் டேபிள்ல உக்காந்து எழுதறீங்களே?


என் எழுத்து தரை லோக்கலாம்.புகார்வருது


==================


சன் டி வி யைப்பார்த்து ஏன் ஜெர்க் ஆகிட்டீங்க?
டாப் டென் பீப் சாங் னு ஒரு புரோக்ராம்வருதாம்

7]


===================
8]சார்.எந்த தைரியத்துல எதிர்ப்பு வரும்னு தெரிஞ்சும் பீப் சாங் பாடுனீங்க்.


பேமிலி ஜோசியர்தான் இது மன்மத ஆண்டு.நல்ல ராசின்னாரு#மன்மதன் சிம்பு



===================


ஆபீஸ் வொர்க் கொடுக்க'ல சும்மாவே இருக்க கடுப்பா இருக்கு :(("
அதான் நெட் ஒர்க் கொடுத்திருக்காங்க இல்ல? பூந்து விளையாடுங்க

===================

10]சார்.எந்திரன் -2 ல இருந்து ஏன் விலகீட்டீங்க?



அர்னால்டு = 100 கோடி கேட்டேன்.1 ஐ குறைச்சுக்கனும்னாங்க.99,கோடினு நினைச்சா 10 கோடி தரவான்னாக


=====

11]2015-ம் உலக அழகி பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி தனியாதான் குடி இருக்குனு எப்டி சொல்றே?


பேரு பியா "அலோன் "்ஜோ உர்ட்ஸ்பட்ச். னாங்க.

=================
12]முதல் இரவில்


அர்ஜென்ட் ஆன்ட்டனி = டியர்.விளக்கை அணைச்சிடு.
சோப்ளாங்கி சொப்னா = எப்டியும் 10 மணிக்கு கரண்ட் போய்டும்.


===================



13]மிஸ்! பூங்குழலி!

என் பேரு ராகிணி.
தாங்க்ஸ் பார் த இன்பர்மேசன்.கூந்தலில் பூச்சூடி இருக்கும் எல்லாப்பெண்களும் ஒரு வகையில் பூங்குழலியே!


================

14]தலைவரே!,சகாயம் ஐஏஎஸ் சால் நமக்கு பாதிப்பு இருக்காதுன்னு எப்டி சொல்றீங்க?

அரசு ஊழியர்கள் பணி யில் இருக்கும்போது தேர்தலில் நிற்கமுடியாது.


===============

15]தலைவரே! சகாயம் சார் தன் வேலையை ரிசைன் பண்ணிட்டு தேர்தலில் நின்னா?

வேலையை ரிசைன் பண்ணி 2 வருசத்துக்கு சட்டப்படி தேர்தல்ல நிக்க முடியாது

==============

16]மேடம்! உங்க ராசி கூட கிளாமர்னு எப்டி சொல்றீங்க?

கவர்ச்சி நடிகை = ஏன்னா என் ராசி லி ப்ரா

=================

17-]டாக்டர்! காது குத்தினால் தெரிகிறது மூக்கு குத்தினால் தெரிகிறது முதுகில் குத்தினால் தெரிவதில்லை

ஏன்?உன் முதுகுல குத்துனா ரத்தம் வராதா?


================

18]என்ன சார்?உங்க பொண்ணுக்கு நாலணா ன்னு பேர் வெச்சிருக்கீங்க?


பொறுங்க தொடர்ந்து அடுத்தடுத்து அஞ்சனா ,ஆராதனா,ஏழாதனா,எட்டணா ன்னு வைப்போமில்ல?


=============
ஜோசியரே!,அடிக்கடி அதிர்ஷ்டம் அடிக்கனும்.என்ன செய்யலாம்?
அதிர்ஷ்டராணி யைக்கல்யாணம் கட்டிக்குங்க.டெய்லி அடிக்கும்.


============
முத்தங்களை பொது இடத்தில் கொடுக்கக்கூடாதுனு போர்டு இருக்கே படிக்கலை?
காதலியோட உதடு பிரைவேட் இடம் தானே?
20]

=================

Monday, December 28, 2015

நடிகர் சிம்பு-அனிருத் மீது 2-வது வழக்கு; சென்னை சைபர் கிரைம் போலீசாரும் நடவடிக்கை

1/சிம்பு, அனிருத் ‘பீப் பாடல்’ விவகாரம்:நாசர் கருத்து தெரிவிக்காதது ஏன்? சரத்குமார்#சிம்புவை நான் நடிகராவே ஏத்துக்கலைனு சமாளிப்பாரோ?


==============



2/சோனியா-ராகுல் காந்திக்கு நீதி கிடைக்காவிட்டால் இந்தியாவே பற்றி எரியும்-EVKS# தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவரு உள்ளே போகப்போறாரு



============



3/அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக வழக்கு: சோனியா காந்தி # ஊர் உலகத்துல மாட்டிக்கிட்ட எல்லா அயோக்கியப்பயல்களும் இதே டயலாக்தான் சொல்றாக



===============



4/நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வெல்லும்: ராபர்ட் வத்ரா நம்பிக்கை # ஓஹோ.சோனியா உள்ளே போய்டுவார்னு சொல்றீங்களா?




===================



5/மக்கள் நல கூட்டணிக்கு விஜயகாந்த் வரவேண்டும் -வைகோ# வேல்யூ ஏத்தி விடுங்க.அப்போதான் திமுக கூட்டணில 100 சீட் கேட்க வசதி கேப்டனுக்கு




=============




6/இது என் பாட்டு, எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பேற்கிறேன்-சிம்பு அறிக்கை! # பாத்துக்குங்க அரசியல்வாதிகளே.இப்டி செஞ்ச தப்பை ஒத்துக்கனும்



=============



7/வெள்ள நிவாரணத்தில் முறைகேடு: உணவுக்கே ரூ. 40 கோடியா? கடலூர் கலெக்டரிடம் விசாரணை

# சாரி சார்.பரிமாறும்போது பசி எடுக்காதா?50% சாப்டுட்டேன்

=============

8/வயதான நடிகர்களுக்கு இளம் கதாநாயகிகள் தேவையா?’ – கோபத்தில் அனுஷ்கா சர்மா # ஏம்மா.தொழில் அதிபர்களா பாத்து லவ் பண்றாங்களே நடிகைங்க.அதுக்கு?

===========

2016ம் ஆண்டு புதிய ரேஷன் கார்டு கிடையாது: பழைய கார்டுகளையே பயன்படுத்த தமிழக அரசு உத்தரவு#2016 ல புது அரசு வந்து புது கார்டு தருமா?

================

10/பீப் பாடல் விவகாரம் ... சிம்பு பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி வேலை : டி. ராஜேந்தர் #,நம்ம் பேரு தான் ஆல்ரெடி களங்கப்பட்டுதானே இருக்கு?

=============1

11/ரயிலில் சில்மிஷம் : ட்விட் செய்த அடுத்த நிமிடத்தில் கைது நடவடிக்கை! # சில்மிசம் பண்ண நினைக்கறவன் இனி முதல்ல செல்போனை பிடுங்கிக்குவானோ?

=============

12/கூடா நட்பு கேடு விளைவித்து விட்டது...! -டி. ராஜேந்தர் வருத்தம் # இதே டயலாக்கை அனிரூத் வீட்லயும் சொல்லி இருப்பாங்க இல்ல?்

============

13/பீப் சாங் பிரச்சனையில் நடிகர்சங்கம் தலையிடாது-செய்தி! # வரலட்சுமி,லட்சுமிமேனனுக்கு் சுண்டு விரல்ல நகச்சுத்தி வந்துடுச்சாம்.இதுல தலை இடுமா?


=========

14/நடிகர் சிம்பு-அனிருத் மீது 2-வது வழக்கு; சென்னை சைபர் கிரைம் போலீசாரும் நடவடிக்கை # நல்லவேளை.நயன் தாரா ,ஹன்சிகா யாரும் எந்தப்புகாரும் தர்ல


=================
ரூ.800 லஞ்சம் வாங்கிய போலீஸ்க்கு 6 மாதம் சிறை மும்பை ஐகோர்ட்டு# அடடா.குமாரசாமியா இருந்திருந்தா 400ரூபா(50%) கொடுத்திருந்தா விட்டிருப்பாரு
15]


=================

16]ரஜினி அளவு நடிக்க முடியாததால்
அர்னால்டு விலகினார் -
# 100 கோடி சம்பளம் தர மனசு வர்லைன்னு ஓப்பனா உடைச்சுச்சொல்லமுடியுமா ?


================

17]ஜெ.வை அவதூறாக பேசியதாக டிராபிக் ராமசாமி மீது வழக்கு. # மாண்புமிகு புரட்சித்தலைவி அடைமொழி சேர்க்காம விட்டுட்டாரா?


==================

18]சென்னை -3 அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்ட பாலம் மூன்றாவது நாளில் சேதம்!
30 நாள் தாங்கனும்னா 30 அமைச்சர்களால் திறக்கப்படனுமா?

===============

வெள்ளம் பற்றிய ஜெவின் வாட்ஸ்அப் உரைக்கு முக்கால்வாசி மக்கள் அதிருப்தி!
# மீதி கால் வாசிப்பேரு கால் ல விழற கலாச்சாரக்கூட்டமா இருக்கும்

=================

20]தங்க மகனில் தனுஷின் ஆபாசம்!- பொங்கும் பால் முகவர் சங்கம் # இதான் சாக்கு.அட்ரா அவரை வெட்ரா அவரை.தேவையே இல்லை பாடிட்டே கோஷம் போடுவாங்களோ?"

===================

பதின் பருவம் புதிர் பருவமா? 14 - நிஜமாகக் கொல்லும் மூடநம்பிக்கைகள்

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
தற்கொலைகள் பற்றி ஓரளவுக்காவது அறிவியல் பூர்வமான புரிதல் இருக்கிறதோ, இல்லையோ நம்மில் பெரும்பாலான வர்களிடம் மிகவும் தவறான புரிதல் இருப்பது என்னவோ உண்மை.



தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் எல்லாருமே கோழைகள், வாழத் தெரியாதவர்கள்; வேண்டுமென்றே செய்கிறார்கள்; வெறும் மிரட்டல்கள் முயற்சியாக மாறாது; தற்கொலையில் இருந்து ஒருமுறை மீண்டு வந்துவிட்டால் மறுபடியும் அதற்கு முயற்சிக்க மாட்டார்கள்; தற்கொலை எண்ணங்களைப் பற்றி மருத்துவர் சாதாரணமாக விசாரித்தாலே, அந்த எண்ணம் இல்லாதவர்களுக்கும்கூடத் தற்கொலை எண்ணம் தோன்றிவிடும் - தற்கொலைக்கு முயற்சிப்பவர்களைப் பற்றி நிலவும் தவறான மூடநம்பிக்கைகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள் இவை.



ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்துவிட்டால் வாழ்க்கையே தோற்றுப்போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அதேநேரம் தற்கொலை என்பது ஒரு பிரச்சினையை மறப்பதற்கோ, மாற்றுவதற்கோ உள்ள தீர்வு கிடையாது. அது இன்னொரு பிரச்சினையின் ஆரம்பம் என்பதை வளர்இளம் பருவத்தினர் மனதில் கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணங்களைக் கொண்டவர்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டிய வர்கள். பல நேரம் அவர்களுக்குச் சிகிச்சையும் தேவைப்படலாம்.



தடுக்க முடியுமா?
தற்கொலை சம்பவங்கள் கண்டிப்பாகத் தடுக்கக் கூடியவைதான். ஏற்கெனவே கூறியதுபோல ஆபத்தான மனநிலை யில் உள்ளவர்களுக்கு மனநல ஆலோசனை தர வேண்டும். சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் தற்கொலை எண்ணத்தை, நடத்திப் பார்க்கும் முயற்சியாக மாற்றத் தூண்டும். உதாரணமாக எறும்பு பொடி, வயலுக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் போன்றவை இப்படிப்பட்ட நபர்களின் பார்வையில் படாமல் வைத்திருப்பது, நல்ல பலனைத் தரும்.



கொடைக்கானலில் உள்ள தற்கொலை முனையில் தடுப்பு வேலிகள் அமைத்த பின்பு, அங்கு அது போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. லண்டன் நகரின் தேம்ஸ் நதியின் மேலுள்ள பாலத்தில் தடுப்பு சுவர்கள் உயர்த்திக் கட்டப்பட்ட பின்பு, அங்குத் தற்கொலை சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மனஉளைச்சலில் இருக்கும் நபர்களிடம் ‘மது அருந்தினால் நிம்மதி கிடைக்கும்’ என நண்பர்கள் ஆலோசனை கூறித் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள். மது, நிச்சயமாக மனநிம்மதிக்கான மருந்தல்ல. சமீபகாலமாக எந்தக் காரணமும் இல்லாமலேயே மது தரும் போதையில், தற்கொலைக்கு முயன்றவர்கள் ஏராளம். மதுவும் தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் விஷப்பொருள்தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


என்ன செய்யலாம்?
கடைசிக் கட்டத்தில் கிடைக்கும், ஒரு சிறிய ஆலோசனையும்கூடத் தற்கொலை முயற்சியைத் தடுக்கும். எனவே, அதைப் பற்றிய லேசான எண்ணங்கள் எட்டிப் பார்த்தால்கூட நம்பிக்கைக்கு உரியவர்களிடம் அதைப் பற்றி பகிர்ந்துவிடுவது நல்லது. இதுபோன்ற நேரத்தில் தனிமையைத் தவிர்ப்பதும் நல்லது. மனநல மருத்துவரின் ஆலோசனைகளும் மாத்திரைகளும் சரியான நேரத்தில் கிடைத்தால், பல தற்கொலை எண்ணங்கள் முயற்சிகளாக மாறுவது தவிர்க்கப் படும். இது போன்ற வர்களுக்கு உதவுவதற்காக, தற்கொலைத் தடுப்பு அவசர உதவி மையங்கள் நிறைய செயல்படுகின்றன.



சமுதாயம், ஊடகங்களின் பொறுப்பு
தற்கொலைகளைத் தடுப்பதில் சமுதாயத்துக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. தற்கொலை முயற்சி செய்த பின் உளவியல் ஆலோசனை பெற வரும் வளர்இளம் பருவத்தினரிடம் கேட்டதில், அவர்களில் பலரும் சினிமாக்களில் வரும் தற்கொலைக் காட்சிகளை உள்வாங்கிப் பிரதிபலிப்பது தெரியவந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த வான் கதே என்ற எழுத்தாளர் தனது ‘இளம் வெர்தரின் சோகம்’ (Sorrows of young Werther ) என்ற நாவலில், நாயகனின் ஒருதலைக் காதல் தோல்வியடைந்ததன் விளைவாகத் தற்கொலை செய்துகொள்வதாகச் சித்தரித்திருப்பார்.



அந்த நாவல் வெளிவந்த காலகட்டத்தில், நாவலில் வெர்தர் எந்த உடையணிந்து, எப்படித் தற்கொலை செய்துகொண்டாரோ, அதுபோலவே ஐரோப்பாவில் தற்கொலை செய்து மடிந்த இளம்பருவத்தினரின் எண்ணிக்கை சுமார் இரண்டாயிரம். இது ஒரு எடுத்துக்காட்டுதான். இதுபோல இன்றும் பல ஊடகச் செய்திகளும் படங்களும் வளர்இளம் பருவத்தினரைப் பாதிப்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். 

ஊடகங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
(அடுத்த முறை: தற்கொலை எண்ணங்கள் தவிர்ப்போம்)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் 
உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர் 
தொடர்புக்கு: [email protected]

தஹிந்து

’ (The Hateful Eight’)- திரைக்கதைக்காக இரண்டு ஆஸ்கர்கள்

  • ஹேட்ஃபுல் எயிட் படப்பிடிப்பு | உள்படம்: க்வெண்டின் டாரண்டினோ
    ஹேட்ஃபுல் எயிட் படப்பிடிப்பு | உள்படம்: க்வெண்டின் டாரண்டினோ
இன்று கிறிஸ்மஸ். இந்தத் தேதியில், இந்தத் தொடரில் நாம் ஏற்கெனவே பார்த்திருக்கும் படம் ஒன்று வெளியாகிறது. இப்படம் வெளியாவது அமெரிக்காவில் மட்டுமே. உலகமெங்கும் ஜனவரியில்தான் வருகிறது. திரைக்கதைக்காக இரண்டு ஆஸ்கர்கள் வென்றிருக்கும் க்வெண்டின் டாரண்டினோவின் ‘ஹேட்ஃபுல் எய்ட் ’ (The Hateful Eight’) படம்தான் அது.



இந்தப் படம் Ultra 70MM என்ற வடிவில் வெளியாவதைப் பற்றி நாம் முதலிலேயே பார்த்துவிட்டோம். உலகில் இந்த வடிவில் இதுவரை பத்தே படங்கள்தான் வந்துள்ளன. இது பதினோராவது. இதற்கு முன்னர் வந்துள்ள அல்ட்ரா 70MM படங்களைப் படமாக்கிய அதே லென்ஸ்களில்தான் இந்தப் படமும் படமாக்கப்பட்டுள்ளது. இதுதான் கடைசியாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில், படச்சுருளில் படமெடுப்பது உலகம் முழுதுமே அருகிவிட்ட காலம் இது. அதிலும் இருப்பதிலேயே மிகவும் அகலமான ஃப்ரேம் ரேட்டில் (2:76:1) வெளியாவதே இந்த அல்ட்ரா 70MM-ன் முக்கியமான அம்சம்.
அமெரிக்கர்களுக்கு ரோட் ஷோ!


கிறிஸ்மஸ் அன்று, அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட 70MM தியேட்டர்களில் ரோட் ஷோ என்ற பெயரில் ஒரு முக்கிய நிகழ்வாக இப்படம் வெளியிடப்படுகிறது. ரோட் ஷோ என்றால், பழைய காலத்தில் நம்மூரில் வெளியான ஆங்கிலப் படங்கள் எப்படித் திரையிடப்பட்டன? முதலில் பல நிமிடங்களுக்கு நீளமான டைட்டில் இசை வரும். அதன் பின்னர் படம் ஆரம்பிக்கும்.



பாதியில் ஒரு நீண்ட இடைவேளை. அதன் பின் படம் தொடர்ந்து முடியும். Gone with the Wind, El Cid, Bridge on the River Kwai, Benhur, The Ten Commandments, Lawrence of Arabia, Cleopatra, My Fair Lady, Doctor Zhivago போன்ற காவியங்களில் இதை நன்றாகக் காண முடியும். இந்த நீளமான தொடக்க இசைக்கு Overture என்று பெயர். பழைய ஹாலிவுட் படங்கள் உலகம் முழுதுமே இப்படித்தான் திரையிடப்பட்டன. இதன் பின்னர்தான் அங்கே இந்தத் தொடக்க ஆர்கெஸ்ட்ரா இசை, இடைவேளை முதலியன அகற்றப்பட்டன (நம்மூரில் இன்னும் இந்த இடைவேளை அப்போதிலிருந்தே இருந்துகொண்டிருக்கிறது என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்).



இத்தகைய, பழைய ஹாலிவுட் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் அதேபோன்ற நீளமான தொடக்க இசை, நீண்ட இடைவேளை ஆகியவற்றை இந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று ‘The Hateful Eight’ படத்தின் அமெரிக்க வெளியீட்டில் காண முடியும். படத்தின் இசை, உலகத் திரையிசையின் ஜாம்பவானான என்னியோ மாரிகோனி (Ennio Morricone) என்பதால், அவசியம் அட்டகாசமான overtureஐயும் பின்னணி இசையையும் இப்படத்தில் கேட்க முடியும்.


இயக்குநரைக் கவர்ந்தது ஏன்?
‘ஹேட்ஃபுல் எய்ட்’ படத்தில் மட்டும் ஏன் இந்தப் பழைய பாரம்பரியத்தை டாரண்டினோ தொடர விரும்பினார்? அவரைப் பொறுத்தவரை, டாரண்டினோ ஒரு சினிமா வெறியர். அவரது சிறு வயதில் பார்த்த காவியங்கள் அவரது மனதை விட்டு இன்னும் அகலவில்லை. எனவே, Benhur, How the West was Won, Mutiny on the Bounty, The Greatest Story Ever Told, Khartoum முதலான அல்ட்ரா 70MM படங்கள் அவருக்கு அளித்த அனுபவத்தை இப்போது தனது ரசிகர்களுக்குத் தர நினைத்தே இந்தப் பழைய, வழக்கொழிந்துபோன பாரம்பரியத்தைத் தற்போது அமெரிக்காவில் அவர் மீண்டும் கொண்டுவரக் காரணம்.



திரையரங்குக்குள் நுழைந்து விளக்குகள் அணைக்கப்பட்டபின் மெதுவாகத் துவங்கி ராஜகம்பீரமாக ஒலித்து அனைவரையும் கவரும் நீண்ட துவக்க இசை, படம் ஓடிக்கொண்டிருக்கும்போது Intermission என்று அறிவிக்கப்பட்டு, படத்தில் ஆடியன்ஸ் ரசித்த முதல் பாதியைப் பற்றிப் பேசி விவாதிக்க அளிக்கப்படும் நிமிடங்கள், மறுபடியும் மணி ஒலித்த பின்னர் துவங்கும் இரண்டாம் பாதி, பின்னர் படத்தின் முடிவு என்ற அட்டகாசமான அனுபவத்தைப் பல ஆண்டுகள் கழித்து இவ்வாறாக டாரண்டினோ அவரது ரசிகர்களுக்குப் பிரத்தியேகமாக அளிக்கப்போகிறார். இது கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டுமே. அதன் பின் படம் ஜனவரியில் உலகமெங்கும் வெளியாகும்போது படத்தின் தொடக்க இசை, இடைவேளை முதலியன இருக்காது.
நமக்குப் புதிதல்ல!
இந்தியாவில் மட்டும் சினிமா தொடங்கிய காலகட்டம் முதல் இந்த இடைவேளை என்ற அம்சம் இருந்துகொண்டிருப்பதால் நமக்குப் பெரிதாக இதில் எதுவும் தெரியப்போவதில்லை என்பது வேறு விஷயம். இடைவேளையே இல்லாத ஹாலிவுட் படங்களிலேயேகூட இடைவேளையை வலிந்து சொருகுபவர்கள் ஆயிற்றே நாம்?



இந்தப் படத்தின் திரைக்கதை ஒரு வருடத்துக்கும் முன்னரே இணையத்தில் கசியவிடப்பட்டதையும், அதனால் டாரண்டினோ படம் எடுக்கும் எண்ணத்தையே கைவிட்டதையும், பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மறுபடியும் படம் எடுக்கச் சம்மதித்ததையும் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். இதன் பின்னர் டாரண்டினோ தனது திரைக்கதையில் பல மாற்றங்களைச் செய்தார்.


ஆனால், இதில் புதிய விஷயம் என்னவென்றால், இந்தப் படத்தின் கிறிஸ்மஸ் வெளியீட்டுக்கு ஒரு வாரம் முன்னரே, படத்தின் திரைக்கதையை டாரண்டினோ இணையத்தில் இலவசமாக அனைவரும் படிக்கும்வண்ணம் வெளியிட்டுள்ளார். யோசித்துப் பாருங்கள். உலகெங்கும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு ஹாலிவுட் படத்தின் திரைக்கதை, படத்தின் வெளியீட்டுக்கு முன்னரே இணையத்தில் அந்தப் படம் எடுத்தவர்களால் வெளியிடப்படுகிறது என்றால் அது எத்தனை துணிச்சலான முயற்சி? அதை டாரண்டினோவும் தயாரிப்பாளர்களான வெய்ன்ஸ்டீன் சகோதரர்களும் துணிச்சலாக மேற்கொண்டுள்ளனர்.



இதனால் என்னைப் போன்ற பல திரைக்கதை ஆர்வலர்களுக்கு ஒரு புதையல் கிடைத்ததுபோன்ற மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பழைய திரைக்கதையையும் புதிய திரைக்கதையையும் ஒப்பிட்டுப்பார்த்து, எங்கெல்லாம் திரைக்கதை மாற்றப்பட்டுள்ளது, எங்கெல்லாம் ஏற்கெனவே இருந்த காட்சிகள் புதிதாக மெருகேற்றப்பட்டுள்ளன என்பதையெல்லாம் கவனித்தால், அதுவே திரைக்கதையை எழுதுவதற்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். இதுவரை வெளியான டாரண்டினோ படங்களிலேயே இதுதான் நீளமான படம்.



கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள். அதிலும் இரண்டே லொகேஷன்கள். இருப்பினும், படம் மிகவும் சுவாரஸ்யமாகச் செல்கிறது என்பதைப் படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த மிகச் சில ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.


அமெரிக்காவில் இதைப் படிக்கும் திரை ஆர்வலர்கள், இந்தப் படத்தைத் தவறவிட வேண்டாம். அதிலும் இதை நீங்கள் படிக்கும் நாளுக்கு மறுநாள் காலையில்தான் படத்தின் கிறிஸ்மஸ் வெளியீடு. Ultra 70MMமில் இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கே. உலகிலேயே அன்று ஒருநாள்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அதைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


த்ஹிந்து
தொடர்புக்கு [email protected]

'மாலை நேரத்து மயக்கம்-இயக்குநர் செல்வராகவன்

'மாலை நேரத்து மயக்கம்' பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் செல்வராகவன்
'மாலை நேரத்து மயக்கம்' பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் செல்வராகவன்
பெண் இயக்குநர்கள் கட்டுப்பாடுகளை மீறி சுதந்திரமாக எல்லாவிதமான படங்களையும் எடுக்க வேண்டும் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்தார்.



புதுமுகம் பாலகிருஷ்ணன், வாமிகா, அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடிக்க, கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி வரும் படம் 'மாலை நேரத்து மயக்கம்'. '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு படத்தொகுப்பு செய்த கோலா பாஸ்கர் இப்படத்தை தயாரித்து வருகிறார். செல்வராகவன் இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.



ஜனவரி 1ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அச்சந்திப்பில் இயக்குநர் செல்வராகவன் பேசியது, “நானும், தனுஷும் 15 வருடங்களுக்கு முன்பு தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகி இப்போது தான் நல்ல இடத்துக்கு வந்துள்ளோம். அதுபோல் என் மனைவி கீதாஞ்சலியும் ‘மாலை நேரத்து மயக்கம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட மேலும் பல புதியவர்களும் இதில் அறிமுகமாகி இருக்கிறார்கள்.



எனது மனைவி இந்த படத்தை இயக்க முன் வந்ததும் நான் முதலில் தயங்கினேன். ஆனாலும், எனக்கு நம்பிக்கை அளித்து படத்தை இயக்கினார். படம் முடிவடைந்து முதல் பிரதி பார்த்ததும் எனக்கு பிடித்து விட்டது. நிஜமாகவே இந்த படம் எனக்கே புதுமையாக இருந்தது.
நான் ஆண் இயக்குநராக இருந்து பெண்களின் உணர்வுகளை பற்றிய படத்தை இயக்கினேன். கீதாஞ்சலி பெண் இயக்குநராக இருந்து ஆண்களை பற்றிய படத்தை இயக்கி உள்ளார். பொதுவாக பெண் இயக்குநர்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது.


பெண் இயக்குநர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் சம்பந்தமான கதைகளைத்தான் படமாக்க வேண்டும் என்ற நிலைமை இருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் இதுபோன்ற பாரபட்சம் கிடையாது. பல்வேறு கதைக்களங்கள் கொண்ட படங்களை பெண்கள் இயக்கி இருக்கிறார்கள். அவர்களை போல் இங்குள்ள பெண் இயக்குநர்களும் கட்டுப்பாடுகளை மீறி சுதந்திரமாக எல்லாவிதமான படங்களையும் எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

தஹிந்து

கல்யாண மண்டபத்தில் பொண்ணும் மாப்ளையும் க்ளோசாப்பழகும் முன்

1/அன்பே சொரூபா! 36 மணி நேரமா உங்க ் பாலோயர்ஸ்க்கு நன்றி சொல்லிட்டே இருந்தா சோறு யாரு வைப்பா வீட்டில்? - முதன்மை பாலோயர்


===========



2/நாம் அதிகம் எதிர்பார்க்கும் படங்கள்


1 எந்திரன் -2
2 பாகுபலி - 2
4 விஸ்வரூபம் -2
3 தெறி
6 கபாலி
5 தாரை தப்பட்டை

7/24


============3/

3/சிம்பு க்கு இப்பொ இறங்குமுகம்.அப்போ ஜாதகப்படி தனுஷ்க்கு ஏறுமுகம் # தங்க மகன்

===============

4/பெண்களை "தையல்" என தமிழில் சொல்வது ஏன்?

"

துணி கிழியும் வரை தையல் விடாது.நம்ம வாழ்க்கைலயும் பின்னிப்பிணைந்து இருப்பதால் தையல்


============

5/திருவனந்தபுரத்தில் AMBALAMUKKU னு ஒரு இடம்.இதை அம்பாள் அமுக்கு ( AMBAL amukku) னு படிக்கறதா? ஆம்பளமுக்கு(AMBALA MUKKU)னு படிக்கனுமா?

===============


6/வடலூர் வள்ளலார் வாசகமான அருட்பெருஞ்சோதி ,தனிப்பெருங்கருணை ன்னாக்கூட நெட் தமிழன் பரங்கிமலை ஜோதி,கொல்லிமலை கருணை மலர் நினைவாவே இருக்கான்

==============

7/ரஜினி பட டைட்டில் வெச்ட்டா மட்டும் ஒரு ஹீரோ ரஜினி லெவல் ஆகிட முடியாது .லேட்டஸ்ட் உதா = தங்க மகன்



==============



8/ட்விட் லாங்கர் எழுதியாச்.

அதை போஸ்ட் பண்ணலாமா வேணாமா குழப்பம்"னு ஒரு பொண்ணு சொன்னா ஒரு 100 பேராவது ப்ளீஸ் டூ இட் னு கெஞ்சனும்னு அர்த்தம்

===============

பிரபலமான பெண் ட்வீட்டர்கள் யாராவது 5,பேர் என்னை பிளாக் செய்யவும்.அவசரம்.ஊர்ல ஒரு பய மதிக்கமாட்டேங்கறான்.நானும் ரவுடிதான்னு காட்டிக்கனும்

===============

10/நீண்ட இடைவெளிக்குப்பின் களத்தில் இறங்குபவர்கள் சக போட்டியாளர்களை முந்த 2 மடங்கு உழைக்க வேண்டி இருக்கும்



==============



11/லிப்ஸ்டிக் போட்ட மாடர்ன் பிகருங்க வாழ்வில் ஜெயிப்பாங்க = வாய் மை யே வெல்லும்



=============



12/ஒருத்தரோட ட்வீட்ஸ் எப்டி இருக்குன்னு பார்க்க அவர் TL பார்க்கனும்.ஆனா நெட் தமிழன் பொண்ணு கிட்டே போய் அவர் ட்வீட்ஸ் எப்டி இருக்கும்?பான்



==============



13/நஸ்ரியா புருசர் மைன்ட் வாய்ஸ் = நம்ம சம்சாரம் பிறந்த நாளை நாமே இவ்ளவ் கொண்டாடலை.இவங்க கொண்டாடித்தீர்த்துட்டாங்களே!



=============



14/பெண்மணி அவள் கண்மணி ன்னு விசு மாதிரி பெரியவங்க என்னதான் கத்துக்கொடுத்தாலும் நெட் தமிழன் கண்மணி அன்போட னு குணா கமல் வாய்ஸ் லதான் கூப்பிடறான்


===================

15ஒரு நெட் தமிழச்சி FB ல அப்டேட்டின கலர்க்கோலம்#மார்கழி 5 போனவருசம் அதே பொண்ணால மார்கழி 27 ல் போட்டதோட ரீ பிரிண்ட்.யார் கிட்டே? என்னம்மா


================

16]5 வருசமா லவ்வின காதலி எப்போடா மேரேஜ்னு கேட்டா பல நேரங்களில் மௌனமாய் இருந்துவிடுவதே நட்பிற்கு நல்லது"னு சென்ட்டிமென்ட்டா அடிச்சு விடுவான்நெட் தமிழன்


===================

17]கல்யாண மண்டபத்தில் பொண்ணும் மாப்ளையும் க்ளோசாப்பழகும் முன் பொண்ணோட தோழி கிட்டே மாப்ளைத்தோழன் க்ளோஸ் ஆகிடறான்


===============

18]கேரளாவில்

வெள்ளை பெயின்ட் பஸ் =,சாதா = ஒரு கிமீ க்கு 1 ரூபா

சிவப்பு பஸ் = LSS = ஒரு கிமீ க்கு 2 ரூபா
ஏ சி பஸ் =,ஒரு கிமீ க்கு 3 ரூபா

===============

கேரளா வில் டவுன் பஸ் மினிமம் சார்ஜ் 7 ரூ
ஆட்டோ வில் மினிமம் சார்ஜ்20 ரூபா
டிராபிக் போலீஸ் மினிமம் லஞ்சம் சார்ஜ் 100 ரூபா


===============

20]சரத் குமார் ன் தென்னிந்தியன் = த மெட்ரோ மலையாளப்பட டப்பிங்

===================



Sunday, December 27, 2015

பதின் பருவம் புதிர் பருவமா? 13 - சாய்த்துவிடும் சந்தர்ப்ப சூழ்நிலைகள்-டாக்டர் ஆ. காட்சன்

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
‘அவன்/அவள் ரொம்ப தைரியசாலிப்பா. இதுக்கெல்லாம் கலங்கிட மாட்டாங்க. ஒண்ணும் தப்பா நடக்காது. பார்த்துக்கலாம்’ என்று யாரைப் பற்றியும் தவறாகப் புரிதலை வைத்துக்கொள்ளக் கூடாது. இக்கட்டான சூழ்நிலைகளில் தைரியமானவர்கள்கூடச் சில நேரம் தடுமாறக்கூடும்.


தற்கொலை முயற்சிக்குப் பல நோக்கங்கள் உண்டு. பெரும்பாலும் மனதின் குழப்ப நிலையை வெளிப்படுத்தும் முயற்சியாகவும், உலகப் பிரச்சினைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் முயற்சியாகவும் அது இருக்கும். சில நேரம் தங்களது காரியங்களைச் சாதித்துக்கொள்ளவும், வீட்டிலுள்ளவர்களை மிரட்டவும் இதை ஒரு ஆயுதமாக விடலைப் பருவத்தினர் பயன்படுத்துவதுண்டு. சிலவேளைகளில் இந்த மிரட்டல் முயற்சிகள் உயிருக்கு ஆபத்தாகவும் முடிவடையும்.



எதிர்பாலினத்தின் கவனத்தைத் தங்கள் மீது திருப்புவதற்கு, தற்கொலை முயற்சியை ஒரு கருவியாகச் சிலர் பயன்படுத்திப் பார்ப்பது உண்டு. சிலர் தேர்வு முடிவு வருவதற்கு முன்னரே, ‘எதற்கும் ஒரு தற்கொலை முயற்சியைச் செய்துவிட்டால் பாதுகாப்பு’ என நினைத்து விபரீத முயற்சிகளில் இறங்குவார்கள்.



தற்கொலை ஒரு தியாகமா?
எமில் டர்ஹெய்ம் என்ற சமூக உளவியலாளர் தற்கொலைகளைப் பல வகைகளாகப் பிரித்துள்ளார். அதில் ஒருவகை சமுதாய நலனுக்காகவோ, மற்றவர்களிடம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்திலோகூட சிலர் தற்கொலை செய்யும் அளவுக்குத் துணிவது. சமீபத்தில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன் அப்படிப்பட்டவன். தான் தற்கொலைக்கு முயற்சித்ததற்கு, அவன் சொன்ன காரணம் வித்தியாசமானது. பொதுவாகவே அதிகப்படியான சட்டதிட்டங்களைப் பேசும் அவன், வகுப்பில் ஆசிரியர் மொபைல் போனில் பேசியதைத் தட்டிக்கேட்டுள்ளான். பின்பு, இந்தக் காரணத்தை எழுதி வைத்துவிட்டுத் தான் தற்கொலை செய்துகொண்டால், தனது சாவுக்குப் பின்னாலாவது இதுபோன்ற விதிமீறல்கள் ஏற்படாது என்பதுதான் அவனுடைய எண்ணம்.



இதுபோலப் பல இடங்களில் விவாதங்களில் ஈடுபடுவது அவனுக்கு வாடிக்கை. விசாரித்ததில் மனநலப் பாதிப்புகளுக்கான பல அறிகுறிகள் அவனிடம் இருந்தன. இன்னொரு சிறுவன் தான் செத்தாலாவது தனது அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்துவார் என்ற நம்பிக்கையில் விஷம் குடித்துள்ளான். இதுபோன்ற விபரீத முயற்சிகள் வளர்இளம் பருவத்தில் சில நேரம் வரலாம். ஆனால், இந்த முயற்சிகளால் எந்த மாற்றமும் ஏற்படு வதில்லை என்பதுதான் உண்மை.



யாருக்குப் பாதிப்பு அதிகம்?
தற்கொலை எண்ணங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். ‘இவ்வளவு தைரியமானவனா இப்படிச் செய்தான்’ என்று சிலரைப் பற்றி கூறுவார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை எப்படிப்பட்டவரையும் சில வேளைகளில் சாய்த்துவிடும். ஆனால், வளர்இளம் பருவத்தினரில் சிலர் எப்போதும் ஆபத்தின் வட்டத்துக்குள்ளேயே இருப்பார்கள். படிப்பில் மந்தம், தங்கள் உடலமைப்பில் திருப்தியின்மை, தேர்வுகளில் அடிக்கடி தோல்வி, போதைப்பொருட்கள் பயன்பாடு, பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டவர்கள், சின்ன வயதில் தாயை இழந்தவர்கள், குழந்தைப் பருவத்தில் உடல், பாலியல்ரீதியிலான கொடுமைகளுக்கு ஆளானவர்கள் எளிதில் தற்கொலை எண்ணங்களுக்கு ஆட்பட வாய்ப்புண்டு.



ஏற்கெனவே குடும்ப நபர்கள் யாரேனும் தற்கொலை செய்துகொண்டு இறந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பருவத்தினர் அதிகப் பாதிப்புக்குள்ளாகலாம். ஏனென்றால், தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில் 5 - ஹைடிராக்சி டிரிப்டமைன் (5-HT ) என்ற ரசாயனத்தைத் தீர்மானிக்கும் மரபணுக் கள் முக்கியப் பங்கு வகிப்பதுடன், பரம்பரையாகப் பாதிக்கும் நிலையும் உள்ளது. ஒருவர் ஒருமுறை தற்கொலை மிரட்டலோ அல்லது தற்கொலை எண்ணத்தையோ வெளிப்படுத்தினால், அவர்கள் எப்போதுமே ஆபத்துக்கு உரியவர்கள்தான். அவர்களுடைய செயல்பாடுகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.



குணரீதியான மாற்றங்கள்


வளர்இளம் பருவத்தினர் சிலருக்கு வேலையே அவ்வப்போதுத் தற்கொலை மிரட்டல்களிலும் முயற்சிகளிலும் ஈடுபடுவதாகத்தான் இருக்கும்.
குறிப்பிட்ட குணத்தோடு ஒன்றிப்போன அவர்களிடம், வேறு பல மாற்றங்களும் காணப்படும். யாரிடமும் ஒத்துப்போகாமல் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுவது, கையில் கிடைத்ததைத் தூக்கி எறிந்துவிடுவது, எளிதில் உறவுகளை முறித்துக்கொள்வது, தனக்கு மட்டுமே வாழ்க்கையில் எல்லாப் பிரச்சினைகளும் இருக்கின்றன என்ற மனோபாவம், காதல் வலைகளில் மாறிமாறிச் சிக்கிக்கொள்வது, இளம் வயதில் பாலுறவு மற்றும் போதைப் பழக்கம் போன்றவற்றுடன் அடிக்கடி தங்கள் கையைப் பிளேடால் கிழித்துக்கொள்வது, சூடுபோட்டுக்கொள்வது, தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது ஆகிய குணநல மாற்றங்கள் ஒன்றுசேர்ந்து காணப்படலாம். இதற்குப் பார்டர்லைன் பெர்சனாலிட்டி குறைபாடு (Borderline Personality Disorder ) என்று பெயர். இவர்களுக்கு மாத்திரைகளோடு மனநல ஆலோசனையும் கட்டாயம் தேவை.


எந்த வகை ஆபத்தானது?
விடலைப் பருவத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளத் தேர்ந்தெடுக்கும் முறைகளில் இருக்கும் பல்வேறு காரணிகளை ஆராய்ந்தால், அவர் செய்த முயற்சி எவ்வளவு ஆபத்தானது என்பதைக் கணிக்கலாம். யாரும் இல்லாத, காப்பாற்ற வழியில்லாத இடங்களைத் தேர்வு செய்வது, ரயில் முன்னால் அல்லது மாடியிலிருந்து விழுவது, கடிதம் எழுதிவைப்பது, விஷம் அருந்தியதைக் கடைசிவரைக்கும் யாரிடமும் சொல்லாமல் இருப்பது போன்றவை தீவிரமான தற்கொலை எண்ணங்களின் வெளிப்பாடு.



ஒரு மாணவன் மருந்துக் கடையில் தூக்க மாத்திரை கேட்டிருக்கிறான். அவர்கள் இரண்டு மாத்திரைக்கு மேல் கொடுக்க மறுத்ததால், பல கடைகளில் இரண்டிரண்டு மாத்திரைகளாக, பல நாட்களாகச் சேகரித்துவைத்துத் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான். இத்தகைய நபர்கள் கண்டிப்பாகத் தீவிர மனநல ஆலோசனைகளுக்கும் கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால், இவர்கள் மனநோய் பாதிப்புக்கு உள்ளாகியிருக்க வாய்ப்பு அதிகம்.


(அடுத்த முறை: நிஜமாகக் கொல்லும் மூடநம்பிக்கைகள்) 
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் 
உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர் 
தொடர்புக்கு: [email protected]

தஹிந்து