Friday, April 13, 2012

டாஸ்மாக் வருமானத்தில் வாழும் அரசு -மனுஷ்யபுத்திரன் பேட்டி இன் விகடன்




மனித மனத்தின் நுட்பமான உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிப்பவை மனுஷ்யபுத்திரன் கவிதைகள். சமூக, அரசியல் யதார்த்தங்களை உரக்கப் பேசும் இவர், சமகாலத்தின் குரல்.


1.  ''தமிழர்களின் இலக்கிய ரசனை எந்த அளவுக்குச் செறிவாகி இருக்கிறது?''


சி.பி - தமிழன் கிட்டே இலக்கிய அறிவு எப்பவும் கம்மிதான்.. சாப்பாடு பற்றிய அறிவு தான் ஜாஸ்தி..
''முதலில் தமிழர்களுக்கு இலக்கிய ரசனை என்று ஒன்று இருக்கிறதா? ஒரு துறையில் அதன் தாக்கத்தை அளவிட, ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள் அதில் ஈடுபட வேண்டும். எட்டுக் கோடித் தமிழர்கள் வாழும் தமிழ்ச் சமூகத்தில் எவ்வளவு பேர் இலக்கியம் அறிந்து உள்ளனர்? எவ்வளவு பேர் புத்தகங்கள் படிக்கின்றனர்?


 இன்னும் பலருக்குப் பத்திரிகைக்கும் புத்தகங்களுக்குமான வேறுபாடே தெரியவில்லை.


சி.பி - டீக்கடைல போய் ஓ சி ல படிச்சா அது பத்திரிக்கை.. லைப்ரரில போய் ஓ சி ல படிச்சா அது புத்தகம். இதுதான் தமிழனோட பார்வை 


 மக்களுக்கு அன்றாட வாழ்க்கை யில் ஏராளமான கஷ்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றுக்கு இடையில்தான் சினிமா பார்க்கின்றனர், டி.வி. பார்க்கின்றனர், மற்ற கேளிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இலக்கியம் என்பதும் ஒரு கேளிக்கைதான். அது ஓர் உயர்தரமான, மனிதனைச் செம்மைப் படுத்தக்கூடிய கேளிக்கை. சக மனிதனைப் புரிந்துகொள்ளவும் வாழ்வை இன்னும் இலகுவாக்கவும் இலக்கியம் சொல்லித்தருகிறது.

திருக்குறளை எடுத்துக்கொள்ளுங்கள்... அதுபோன்ற படைப்பை ஒரு தனி மனிதன் உருவாக்கிவிட முடியாது. ஒட்டுமொத்த சமூகத்தின் அறிவுநிலை அப்படி ஓர் உயர்மட்டத்தில் இருந்தால்தான் அது சாத்தியம். அதேபோல, திருவள்ளுவர் ஒருவர் மட்டும் இருந்திருக்க முடியாது. அவருக்கு முன்னும் பின்னும் பல்லாயிரம் படைப் பாளிகள் இருந்துள்ளனர்



 அப்படியானால், திருவள்ளுவர் எதனுடைய கண்ணி? எதனுடைய தொடர்ச்சி? இதை எல்லாம் நாம் என்றைக்கேனும் யோசித்தோமா? இரண்டாயிரம் வருடத் தமிழ் அறிவின் சாரமான திருக்குறளை, அதன் கவித்துவத் தைக் கெடுத்து, அதன் அறவியல் நோக்கத்தை உதறிவிட்டு, வெறுமனே மனப்பாடப் பொருளாக நம் பிள்ளைகளுக்குக் கற்றுத்தருகிறோம். தமிழ் இலக்கிய ரசனை இந்த அளவில்தான் இருக்கிறது!''


2. ''-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என இன்றைய இளைய சமூகம் ஒரு மெய்நிகர் உலகத்தில் (virtual world) வாழ ஆரம்பித்துவிட்டதா?''


சி.பி - நம்மாளு காலைல பல்லு விலக்குறதையே  செல் ஃபோன்ல படம் பிடிச்சு ஸ்டேட்டஸா போடறான். சென்னைல நில நடுக்கம் வந்தப்பக்கூட மாடிப்படில இறங்கி ஓடிட்டே ட்விட்டர்ல ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றான்.. . 
''இணையத்தின் வழியாக நமக்குத் திறந்துவிடப்பட்டு இருக்கும் உலகம் ஆச்சர்யங்களும் அதிசயங்களும் நிறைந்தது. மனிதகுல வரலாற்றில் இத்தனை கட்டற்ற சுதந்திரம் முன்னொருபோதும் இருந்தது இல்லை. தன் அடையாளத்தை முழுவதும் மறைத்துக்கொண்டு, அடையாளமே இல்லாத இன்னொருவருடன் உரையாடலாம். இது மனிதனுக்குப் பெரிய மன விடுதலையைக் கொடுத்திருக்கிறது

சி.பி - முன்னே எல்லாம் கில்மா படம் பார்க்கனும்னா அதுக்குன்னு இருக்கற தியேடர்க்குப்போய் இண்டர்வெல் பெல் அடிக்கற வரை காத்திருக்கனும்.. இப்போ எல்லாம் நடிகைங்க ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ரூம் எடுத்து குளிக்கறப்பக்கூட அதை செல் ஃபோன்ல படம் பிடிச்சு  நெட்ல ரிலீஸ் பண்ணிடறாங்க.. டெக்னாலஜி ஈஸ் வெரி வெரி டெவலப்டு.. 




 ஏனெனில், நமது சமூகம் எப்போதும் நமது ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கிறது, இடைவிடாமல் கண்காணிக்கிறது. நவீன தொழில்நுட்பம் மனிதர்களை மேலும் மேலும் தனிமைப்படுத்துகிறது. இணைய உலகில் இந்த தனிமைப்படுத்தலும் கண்காணிப்பும் இல்லை என்பது மனித மனதுக்குப் பெரிய ஆசுவாசம். ஆகவே, நான் இதை எதிர் மறையாகப் பார்க்கவில்லை. யதார்த்த வாழ்க்கையில் வாழ முடியாத வாழ்க்கையைக் கற்பனையில் வாழ்வதற்கான வாசலை விஞ்ஞானம் திறந்துவிட்டுள்ளது.

 சி.பி - இந்த சேட்டிங்க் மேட்டர்ல பெண்கள் ஜாக்கிரதையா இருக்கனும்.. சாரு மாதிரி பாவாத்மாக்கள் கிட்டே மாட்டிக்கிட க்கூடாது



 இதை அனுபவிப்பதற்கான உரிமை எல்லோருக்கும் உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு இந்த சைபர் ஸ்பேஸ் மிக முக்கியமானது. இதுவரை நம்மைக் கண்காணித்து, கட்டுப்படுத்தி அதன் மூலம் அதிகாரத்தைச் சுவைத்தவர்கள்தான் இப்போது பதற்றத்துடன் எதிர்க்கின்றனர்!''



சி.பி - வீட்டில் நெட் வைத்திருப்பவர்கள் குழந்தைகளை தங்கள் மேற்பார்வையில் வைத்திருப்பது நல்லது. நெட் செண்ட்டர் அனுப்ப வேண்டிய சூழல் வந்தால் குழந்தைகளுடன் பெற்றோரில் ஒருவர் உடன் செல்வது நலம்..  

3. ''காதல் இப்போதும் புனிதமானதுதானா?''

சி.பி - காதல் எப்போதும் புனிதமானதுதான்.. ஆனால் காதலர்கள் தான் பாவம் பண்ணி பேரை கெடுக்கறாங்க. 
''காதல் எப்போதும் காதலாக மட்டும்தான் இருந்திருக்கிறது. அது புனிதமானதாகவோ, புனிதமற்றதாகவோ ஒருபோதும் இருந்தது இல்லை. எல்லா அடிப்படைத் தேவைகளையும்போல காதலும் ஓர் ஆதாரமான தேவை. குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில்கூடக் கலப்படம் வந்துவிட்ட உலகில், காதல் மட்டும் எப்படித் தூய்மையானதாக இருக்க முடியும்

 சி.பி - இந்த உலகில் கலப்படம் இல்லாதது தாய்ப்பாலும் ,இளநீரும் தான்



 ஆனால், நடைமுறையில் சாத்தியப்படாத அப்படி ஒரு தூய்மைவாதக் காதலுக்கு மனித மனம் ஏங்குகிறது. கற்பனையின் வழியே காதலின் முழுமையை அடையத் துடிக்கிறது. நமது இலக்கியங்கள் அதற்குத் துணை செய்கின்றன. யதார்த்தம் அப்படி இருக்க முடியாது என்பதால், காதல் புனிதமானதாக இருப்பது இல்லை!''  

4. ''இலக்கு நிர்ணயித்து விற்பனையைப் பெருக்கும் அளவுக்கு அரசு டாஸ்மாக் மீது கரிசனத்துடன் இருப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''


சி.பி - கவர்மெண்ட்டோட முக்கிய வருமானமே சரக்குல தானே?

''ஓர் அரசுக்குக் குறைந்தபட்சப் பொறுப்பு உணர்வு வேண் டாமா? டாஸ்மாக் மூலம் வரும் பணத்தை அரசு வருமானமாகப் பார்க்கிறது.அது எங்கே இருந்து வருகிறது? கோடிக்கணக்கான ஏழை மக்கள் தங்கள் உழைப்பை விற்றுச் சம்பா திக்கும் பணம்


 பிள்ளை களுக்குப் பால் டின் வாங்க வும் அடுத்த வேளை உண வுக்கு அரிசி வாங்கவும் வைத்திருந்த பணம். சாரா யத்தை ஊற்றிக்கொடுத்து, அவன் போதையில் இருக் கும்போது அந்தப் பணத்தை வழிப்பறி செய்வது அயோக்கியத்தனம் இல்லையா? ஆனால், இது குறித்து அரசாங்கத்துக்கு வெட்கமே இல்லை.
லாட்டரிச் சீட்டை ஏன் தடை செய்தார் கள்? ஏழைக் குடும்பங்களைப் பாதிக்கிறது என்றுதானே? அதே காரணம் குடிக்கும் பொருந்தாதா? அதைவிடவும் பன்மடங்கு பாதிப்பு ஏற்படுத்தும் குடியை ஊக்குவிப் பதும் பரவலாக்குவதும் மக்கள் நல அரசு செய்யும் வேலையா?
உலகின் பல சமூகங்களில் குடி என்பது ஓய்வு நேரப் பொழுதுபோக்கு. இங்குதான் வாழ்க்கைமுறையின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் எத்தனை லட்சம் குடும்பங்கள் நிர்கதி ஆக்கப்பட்டு உள்ளன? எத்தனைகுழந் தைகள் அநாதைகளாக அலைகின் றனர்? எத்தனை லட்சம் தொழிலாளர் கள் உழைக்கும் திறனை இழந்து, நோய் களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்? 



ஏன் அரசு இது குறித்த சிறு அக்கறையும் இல்லாமல் இருக்கிறது? குடியைத்தடை கூடச் செய்ய வேண்டாம்... குறைந்த பட்சக் கட்டுப்பாடு கொண்டுவரலாம் அல்லவா? ஏன் நாள் முழுக்க டாஸ் மாக் கடை திறந்திருக்க வேண்டும்? அரிசி இத்தனை கிலோதான் என்று கட்டுப்பாடு இருக்கும்போது சாராயத் துக்குக் கட்டுப்பாடு இருந்தால் என்ன தப்பு?''
5. ''இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் சவால்களாக நீங்கள் எவற்றைக் கருதுவீர்கள்?''



சி.பி - இளைஞர்கள் இப்போது சந்திக்கும் மிகப்பெரிய சவாலே வேலைதான்.. அதுவும் ஐ டி டிபார்ட்மெண்ட்டில் வேலை செய்யனும்னு துடிக்கிறான்.. அதுல தான் அதிக வருமானம் வருது. இப்போ பெண் வீட்டாரும் அதுதான் விரும்பறாங்க.. டாக்டர், எஞ்சினியர் காலம் எல்லாம் மலை ஏறிடுச்சு
''முந்தைய தலைமுறை மீது இல்லாத அழுத்தமும் சுமையும் இன்றைய இளைஞன் மீது படிந்திருக்கிறது. அவன் எதிர்கொள்ளும் மன நெருக்கடிகளும் சவால்களும் மிக அதிகம். குடும்பத்தின் தேவைகள், அலுவலக நெருக்கடிகள், வேலை கிடைக்காத சூழல் என அவன் எப்போதும் அவநம்பிக்கை யோடு வாழ்கிறான்.



 35, 40 வயதுகளில்கூட திருமணம் குறித்தோ, எதிர்கால வாழ்க்கை குறித்தோ சிந்திக்கக்கூடத் திராணியற்ற இளைஞர்களை நகரங்கள் உற்பத்தி செய்கின்றன. இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை நாம் பேசுவோம். வட மாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் இங்கு பணிபுரிகின்றனர். அவர்களை எந்தக்குற்ற உணர்வும் இல்லாமல் குறைந்த கூலிக்குச் சுரண்டுகிறோம். முறையான வாழ்விடம் தரப்படுவது இல்லை.



 வட மாநிலக் குழந் தைகள் படிப்பதற்கான வாய்ப்பு இல்லை. பிழைப்பு தேடி இங்கு வந்துள்ள அவர்களை முதலில் பரிவுடன் அணுக வேண்டும்.அவர்களின் குற்றச் செயல்கள் தொடர் பான விசாரணைகள் தனி. ஒரு குறிப்பிட்ட சமூகம் பெரும் அளவில் இடம்பெயர்ந்து வரும்போது, அதில் ஒரு பகுதியினர்குற்றச் செயல்களில் ஈடுபடுவது இயல்பானதுதான். அதற்காக ஒட்டுமொத்தக் குற்றங்களுக்கும் வட மாநிலத்தவர்களைக் காரணமாக்குவது தவறு.


தமிழ்நாட்டில் நடைபெறும் அத்த னைக் குற்றங்களையும் வட மாநிலத் தவர்கள்தான் செய்கிறார்களா என்ன?''

6. ''தனி நபர்களை மையமாகக்கொண்ட அரசியல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எந்த விதத்தில் பாதிக்கும்?''



சி.பி - மன்னராட்சி போய் மக்கள் ஆட்சி வந்தாலும் தமிழன் இன்னும் அதுல இருந்து மீண்டு வர முடியலை.. நேரு பரம்பரை மத்தியிலும், கலைஞர் பரம்பரை மாநிலத்திலும் தொடரும் அபாயம் இருக்கு. 
''ஓர் இயக்கம்தான் கோட்பாட்டு முடிவு களை எடுக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் எனத் தனி நபர்களை முன்னிலைப்படுத்தும் அரசியல்தான் நடக்கிறது. இந்தத் தனி நபர்களின் விருப்பு, வெறுப்புகள்தான் ஒட்டுமொத்தத் தமிழக அரசியலின் திசையை, தன்மையைத் தீர்மானிக்கின்றன


 இது ஓர் அரசியல் சூனியத்தை தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்கிறது. இது நீடிக்கும் வரை தமிழர்களின் எந்தப் பிரச்னைக்கும் ஒரு நியாயமான தீர்வை நம்மால் எதிர்பார்க்க முடியாது!''

ஓ பி அடிக்க நினைக்கும் இல்லத்தரசிகள் செய்யும் தகிடுதித்தங்கள் ( ஜோக்ஸ் )


இது குதிரையின் ஓவியம் மட்டுமல்ல # ரசிக்க முடிந்தவர்கள் ரசித்துக் கொள்ளவும் ! http://pic.twitter.com/wk7dqLFF - அண்ணே ஒரு விளம்பரம்
pic.twitter.com/wk7dqLFF
Flag this media powered by Photobucke

1. ஆண்கள் பயன்படுத்தும் மிக வலிய ஆயுதம்- என்னதான் பொண்ணுங்க கண்டுக்காம போனாலும் அதைக்கண்டுக்காமல்  பின்னாலயே போறது தான்! ஹி ஹி # எ கீ


---------------


2. ஆஸ்தியை கரைக்க ஆண் குழந்தை, கடைசி வரை நம் உடன்  இருந்து நம் அஸ்தியை கரைக்க பெண் குழந்தை, எது வேண்டும்? மக்களே?


--------------------

3.  முகத்தை பார்த்து பேசறதில்லைன்னு ஆண்களை குறைகூறும் பெண்களே! நாங்கள் கூச்சசுபாவம், அதனால் தலை குனிந்து பேசறோம், டோண்ட் மிஸ்டேக்கன்,ஹி ஹி 


--------------------------------------

4. மாநில ஆட்சி, மத்திய ஆட்சி இரண்டிலுமே  பெண்ணின் ஆதிக்கம் கண்டும் பெண் குழந்தையை அழிக்க நினைக்கும் விசித்திர தேசம் இது:(


---------------------------

5. டியர், என்னை மடச்சாம்பிராணின்னு திட்டாதே, மீ எம் சி ஏ யூ நோ? 


 அவ்ளவ் தானே ,கம்ப்யூட்டர் சாம்பிராணி ஓக்கே?


-------------------------


அறிவு ஜீவிகளுக்கு ! http://pic.twitter.com/ctOPQp8Q - சேட்டைக்காரன்
6. என்னடா இரவுடின்னு சொல்றாங்களேன்னு மண்டையை உடைச்சுக்கிட்டேன்.. அது ரவுடியின் செந்தமிழாம், ஹய்யோ அய்யோ


----------------------------

7. மெச்சூர் ஆனபின் போடுவது மெச்சூர் ட்வீட், மெச்சூர் ஆவதற்கு முன் போடுவது அமெச்சூர் ட்வீட்? ஹி ஹி 


--------------------------
8.இன்னைக்கு டிஃபன் புட்டு சாப்பிடப்போறேன்...... நாங்க மட்டும் புடாமயா சாப்பிடுவோம்?இட்லி, தோசை எதா இருந்தாலும் புட்டுதான் சாப்பிடுவோம்

--------------------------

9.  பல ஃபிகருங்க அஞ்சலி, ஓவியா மாதிரி.. அடக்கமான ஃபிகருங்கன்னு நினைப்போம், திடீர்னு சர்ப்பரைஸ் ஷாக் குடுத்துடுவாங்க

--------------------


10. டிராக்டர் ஓட்டும் விவசாயியை விட ஏர் உழும் விவசாயி என் கண்களுக்கு அழகாகத்தெரிகிறான்



----------------------------------

chambakka(rose apple) kerala spl,mouth watering;p http://pic.twitter.com/RzD8rbbX - புரோட்டா புவனா


11.உனக்கும், எனக்கும் பெரிதாக வித்தியாசம் ஏதும் இல்லை, நீ அழகாக இருக்கிறாய்.. நான் அழகுடன் ( உன்னுடன்) இருக்கிறேன்


-----------------------------------

13. சில சமயங்களில் என்னைக்கட்டுப்படுத்தும் மந்திரவாதி ஆகிறாய்! பல சமயங்களில் என்னைக்கட்டுப்படுத்த முடியாத “மந்த்ரா” வாதி ஆகிறாய்


-------------------------------

14. என்னுடன் எப்போதும் நீ பேசிக்கொண்டிருக்கிறாய்!தனிமையில் தன்னைப்போல நான் பிதற்றுவதாய் இந்த உலகம் பிதற்றிக்கொண்டிருகிறது


----------------------------

15. 2ஜி வழக்கு: அடக்கமாக நடந்துகொள்ளுமாறு ராசாவுக்கு நீதிபதி எச்சரிக்கை # வாயைத்திறந்தா உள்ளேயே அடக்கம் பண்ணிடுவாங்கன்னு எச்சரிக்கை?


---------------------------


அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். என் வாழ்வில் நான் காணும் இரண்டாம் நந்தன வருடம். http://pic.twitter.com/AesDwSW9 -

16. ஓ பி அடிக்க நினைக்கும் இல்லத்தரசிகள் செய்யும் டிஃபன் உப்புமா, லஞ்ச் - அரிசிம்பருப்பு சாதம்


-------------------------

17. மார்கழிப்பனியின் குளிரில் நாம் இருவரும் கட்டித்தழுவி நிற்கையில் நமக்கிடையே கோடை வெப்பம் .. அதை சிலர் பனிப்போர் என்றனர்


---------------------------------

18. மனைவியை அழ வைக்காத கணவனும், கணவன் மனம் நோக வைக்காத மனைவியும் இந்த உலகில் இல்லை # வீட்டுக்கு வீடு அடிதடி


------------------------------

19.  டாக்டர்,பன்றிக்காய்ச்சலுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க..


 ரியாஸ் - ஓக்கே, நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்க, பன்றி எங்கே?


-----------------------------

20. எந்த வேலைக்கும் போகாம ஊரைச்சுத்திட்டு இருந்தா அவன் ஊர்சுற்றி,கவர்மெண்ட்சம்பளம் வாங்கிட்டு உலகத்தையே வெட்டியா சுத்திட்டு இருந்தா ஜனாதிபதி


--------------------------------

 

Thursday, April 12, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (13.4 .2012) 3 படங்கள் முன்னோட்ட பார்வை

 http://suriyantv.com/wp-content/uploads/2012/03/%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF.jpg

1. 'ஒரு கல் ஒரு கண்ணாடி -இன்றைய தேதியில் தயா‌ரிப்பாளர்கள் பயமில்லாமல் அணுகக் கூடிய இயக்குனர் ராஜேஷ் எம். சிம்பிளான பட்ஜெட்டில் அதைவிட சிம்பிளான கதையை ஜாலியாக எடுப்பது இவரது ஸ்பெஷாலிட்டி. கதை இருக்கிறதோ இல்லையோ கல்லா நிறைவது கன்ஃபார்ம்.
சிவா மனசுல சக்தியை தொடர்ந்து இவர் இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன் தமிழகமெங்கும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. காமெடி விஷயத்தில் கை தேர்ந்தவர் என்பதால் தனது திரையுலக பிரவேசத்துக்கு உதயநிதி ஸ்டாலின் இவரைத்தான் தேர்வு செய்திருக்கிறார்.
ராஜேஷ் அடுத்து உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார். படத்தின் பெயர் ஒரு கல் ஒரு கண்ணாடி. துணைப் பெயர், ஓகே ஓகே. 

உதயநிதி ஸ்டாலின் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். 'ஆதவன்' படத்தில் ஒரு மிகச்சிறிய வேடத்தில் நடித்ததிருந்தார். உடன்  ஹன்சிகா, சந்தானம், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

 ராஜேஷ் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். உதயநிதி ஸ்டாலின் இப்படத்தினை தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார்.


ராஜேஷ் இயக்கிய 'சிவா மனசுல சக்தி' படத்தில் இடம்பெற்ற 'ஒரு கல்.. ஒரு கண்ணாடி.. உடையாமல் மோதிக் கொண்டால் காதல்' பாடலின் முதல் வரி இப்படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டது.

'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தினை தனது நிறுவனம் மூலம் வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின், அப்போது இயக்குனர் ராஜேஷிடம் ஏற்பட்ட நட்பால் இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று முடிவு எடுத்து ஆரம்பிக்கப்பட்டது  'ஒரு கல் ஒரு கண்ணாடி'.

உதயநிதி ஸ்டாலினிடம் ராஜேஷ் கதையின் சுருக்கத்தைச் சொல்ல, உதயநிதிக்கு மிகவும் பிடித்து விட்டது. தான் நாயகனாக அறிமுகமாக ஏற்ற படம் இது தான் என்று முடிவு செய்தாராம்.
http://123tamilcinema.com/images/2011/08/hansika-nipple-e1313100324383.jpg

நாயகன், நாயகி இருவரும்  காதலித்து வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதை காமெடி காக்டெய்லலாக தந்திருக்கிறாராம் ராஜேஷ்.

வழக்கம் போல் நாயகனின் நண்பனாக நடித்து இருக்கிறார் சந்தானம்.

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்கு இயக்குனர் ராஜேஷ், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தானம் கூட்டணி மிகப் பெரிய பலம். ராஜேஷின் முந்தைய படங்கள் போலவே இப்படத்தில் சந்தானத்தை வைத்து காமெடி கதகளி ஆடி இருக்கிறார். டிரெய்லருக்கே சந்தானம் கைதட்டல்களை அள்ளிக் கொண்டிருக்கிறார்.

படத்தின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு. காதலில் தோல்வியுற்ற இளைஞர்களுக்கான ' வேணாம் மச்சான் வேணாம் ' பாடல் இணையத்தில் பரபரவென பரவிக் கொண்டிருக்கிறது.

இளைஞர்கள் 'வேணாம் மச்சான் வேணாம்' பாடலுக்கு தங்களது ஆசைக்கு ஏற்றவாறு நடனம் அமைத்து வீடியோ பதிவினை YOUTUBE இணையத்தில் பதிவேற்றம் செய்து வருவது படத்துக்கு பெரிய ப்ளஸ்.

படம் பார்ப்பவர்களை இரண்டரை மணி நேரம் அனைத்தையும் மறந்து ரசிக்க, சிரிக்க வைக்கும் என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறது படக்குழு.

ஏப்ரல் 13ம் தேதி 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யை வெளியிட இருக்கிறார்கள்.ஈரோடு அபிராமி, ஆனூரில் ரிலீஸ்
http://www.thedipaar.com/pictures/resize_20100812131846.jpg

2. பச்சை என்கிற காத்து -தமிழு’, ‘வதை’ ஆகிய குறும்படங்களை இயக்கிய கீரா, இயக்கும் முழு நீளப்படம் ‘பச்சை என்கிற காத்து’. மணப்பாறை அருகே வாழ்ந்து இறந்துபோன 27வயது இளைஞனின் உண்மை கதையை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் ஒரே இரவில் தொடங்கி ஒரே இரவில் முடிகிறது.



தனக்கு எது பிடிக்கிறதோ, அதை மட்டுமே சரியென்று எண்ணி, சமூகத்தின் பல அடுக்குகளுக்கு ஓடுகின்ற ஒருவன், அவன் தேர்ந்தெடுத்த அரசியலாலும், காதலியாலும் எப்படி சிக்கி சீரழிகிறான்? என்பதே இப்படத்தின் கதை.


பச்சை ராம்குமார், வாழ்ந்த, பழகிய அதே மணப்பாறை, திருச்சி, பெரம்பலூர் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று உள்ளது. இறந்துபோன பச்சையை பற்றி ஏழு பேர் கதை சொல்லுவது போல இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அவரவர் கோணத்தில், பிளாஷ்பேக் ஆக காட்சிகள் விரிகின்றன.
முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இப்படம் எதார்த்த வடிவில் உருவாகியுள்ளது. உதவி இயக்குநர் வாசகர் கதாநாயகாகவும், தேவதை கதா‌நா‌யு‌கி‌யா‌கவு‌ம்‌ நடி‌க்‌கி‌றா‌ர்‌லகள்‌.இவர்‌களுடன்‌ மு.ரா, அப்புக்குட்டி, துருவன், பரத்குமார், மருதை, சத்யபாமா, துளசி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். அனைவருக்கும் கூத்துப்பட்டறையில் பயிற்சி அளிக்கப்பட்ட பிறகே படப்பிடிப்புக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.


அன்பு ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்ய, ஹரிபாபு இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கீரா, இயக்குகிறார். ‘அ’ திரை நிறுவனம் சார்பில் அசுவத்தாமன் இந்துமதி, வைகறையாழன் தனலட்சுமி ஆகிய இருவரும் தயாரிப்பிலும், திலீபன் – சங்கர் , அஸ்வின்ராஜா இருவரது இணைதயாரிப்பிலும் விரைவில் வெளிவர இருக்கிறது ” பச்சை என்கிற காத்து!”

 http://mmimages.mmnews.in/gallery/2012/Apr/3206_L_galvpf.gif


படம்‌ பற்‌றி‌ இயக்‌குநர்‌ கூறுகை‌யி‌ல்‌ “படை‌ப்‌பி‌ல்‌ வலி‌ இருக்‌கி‌றது. தயா‌ரி‌ப்‌பா‌ளரும்‌ நா‌னும்‌ ஒரு தே‌னி‌ர்‌ கடை‌யி‌ல்‌ அமர்‌ந்‌து பே‌சும்‌போ‌து நா‌ம இந்‌தப்‌ படத்‌தை‌ செ‌ய்‌யலா‌ம்‌ என்‌றா‌ர்‌. சொ‌ன்‌னது போ‌லவே‌ செ‌ய்‌து கா‌ட்‌டி‌னா‌ர்‌. இது இயக்‌குநரி‌ன்‌ படம்‌ இல்‌லை‌. இதி‌ல்‌ உழை‌த்‌த கடை‌சி‌ மனி‌தனுக்‌கும்‌ இந்‌த படை‌ப்‌பி‌ல்‌ வெ‌ற்‌றி‌யி‌ல்‌ பங்‌கு இருக்‌கி‌றது..” என்‌றா‌ர்‌

 ஈரோடு ஸ்டார், ஸ்ரீலட்சுமியில் ரிலீஸ்


http://www.filmglitz.com/tamil/wp-content/uploads/2012/04/Varudangal-20.jpg


3. வருடங்கள் 20 - கே.பி. பிரியங்கா புரொடக்ஷன் தயாரிக்கும் படம் 'வருடங்கள் 20' இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு, இசையமைத்து கதாநாயகனாகவும் நடித்திருப்பவர் புதுமுகம் கே.கென்னடி.


 இப்படம் குறித்து அவர் பேசும்போது, "கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை சினிமாவுக்காக கொஞ்சம் கற்பனை கலந்து திரைக்கதையாக்கி, கதைக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். கதைக்கு ஏற்ற முகங்களைத் தேர்வு செய்ததால் எனக்கு வேலை வாங்க எளிதாக இருந்தது. நான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறேன். என்னுடன் ஜனார்த்தனன், மைக்கேல், சார்லஸ், கதாநாயகியாக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷோபியா மற்றும் ஸ்வாதி ஆகியோர் நடித்துள்ளனர்.


 இது 1980ஆம் கால கட்டத்தில் நடக்கிற கதை. அதனால் அந்தக் காலத்தை நினைவுப்படுத்தும் வகையிலான உடை, நடை, பேச்சு என எல்லாம் இருக்கும். நான் நிறைய படங்களை வாங்கி திருநெல்வேலி ஏரியாவில் ரிலீஸ் செய்திருக்கிறேன். என் அண்ணன் டைட்டான், இயக்குநர் ஜி.எம்.குமாரிடம் உதவியாளராக இருந்தவர். அவர் தற்போது இயக்கியுள்ள 'பிஸி' என்கிற படத்தில் நான் அசிஸ்டென்ட் டைரக்டராக வேலை செய்திருக்கிறேன்


. 'வருடங்கள் 20' படத்தின் காட்சிகளை முட்டம், பெரியவிழை, அழிக்கால், பிள்ளைத்தோப்பு என நாகர்கோவிலை சுற்றியுள்ள இடங்களில் எடுத்திருக்கிறேன். படப்பிடிப்பில் எனக்கு ரொம்பவும் உதவியாக இருந்தவர் ஒளிப்பதிவாளர் சந்திரன். அதேபோல எடிட்டர் ரஜினிகுமார், டான்ஸ் மாஸ்டர்கள் பாஸ்கர், சீனு, சண்டை பயிற்சியாளர் த்ரில் சேகர் ஆகியோரும் எனக்குப் பக்க பலமாக இருந்தார்கள்.


சிறு வயதிலிருந்தே எனக்கு பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். நான் சினிமாப் பாடல்கள் மட்டுமல்லாது நாட்டுப்புறப் பாடல்களையும் பாடுவேன். இசையிலும் எனக்கு ஞானம் உள்ளதால் படத்திற்கு நானே இசையமைக்க முடிவு செய்தேன். படத்தில் இடம் பெறும் அத்தனை பாடல்களையும் நானே எழுதியிருக்கிறேன்.




 'அதிகாலை நிலவு... நடைபாதை வந்ததே...' என்கிற மெலடிப் பாடலையும், 'ஊரு ஊரா கூத்தடிக்கற கும்மாங்கோ... வெளிநாட்டுக்கெல்லாம் ரூட் அடிக்கிற கொய்யாங்கோ...' என்கிற குத்துப் பாடலையும் முதலில் டியூன் போட்டு பாட வைத்தேன். இது அனைவருக்கும் பிடித்துப் போனதால் மத்தப் பாடல்களையும் உருவாக்கினேன்.


ஈரோடு அண்ணா, சங்கீதாவில் ரிலீஸ்


சமந்தாவுக்கும், எனக்கும் நடுவுல, ஓரத்துல எதுவும் இல்லை - நீதானே என் பொன்வசந்தம் கவுதம் பேட்டி - காமெடி கும்மி


http://www.virakesari.lk/vira/Online_Gallery/05needhanae-500.jpg

எப்போது சந்தித்தாலும் கௌதமிடம் கேட்க மட்டும் ஏராளமான கேள்விகள் இருக்கும். எதிர்பார்க்காத ஆங்கிளில் பேட்டிக்குத் தலைப்பும் சிக்கும்! இதோ இப்போதும்...


சி.பி - ரொம்ப  லோ ஆங்கிள்ல கேள்வி கேட்க அவர் என்ன ஜம்பு கர்ணனா? 
1.  '' 'நீதானே என் பொன்வசந்தம்’ - மீண்டும் கௌதம் காதல் ஸ்பெஷலா?''


சி.பி - நல்ல வேளை அண்ணன் விண்ணைத்தாண்டி வருவாயே எஃபக்ட்ல படம் எடுக்கறாரு.. நடு நிசி நாய்கள் ரேஞ்சுக்கு எடுத்தா சமந்தா கதி என்ன?
''சிம்பிள் காதல் கதை. இந்தக் காதலுக்குக் காதலர்களே எதிரி. அவங்க ஒண்ணு சேருவாங் களா இல்லையா? அதான் படம். ரொம்ப சந்தோஷமான படம். 'இப்படியான படம்தான் நாங்க நிறையப் பார்த்திருக்கோமேனு நீங்க சொன்னா, இந்தப் படத்தையும் மிஸ் பண்ணாமப் பாருங்கனு சொல்வேன். காரணம், ராஜா சார் மியூஸிக். படத்தில் அதுதான் ஹைலைட்!''



சி.பி - குஷி , அன்பே வா , அன்பே ஆருயிரே 3 படத்தையும் மிக்சில போட்டு அரைச்சு எடுத்துட்டார் போல..  



http://www.filmics.com/tamil/images/stories/news/2012/January/11-01-12/samantha-cute-stills.jpg

2. ''அதைச் சொல்லுங்க... இளையராஜா என்ன சொன்னார்?''

சி.பி - அவர் என்ன சொல்லி இருப்பார்.  எப்படியோ ரெக்கார்டிங்க் சாக்கா வெச்சு உலக நாடுகள் 10 இடம் சுத்தி பார்த்துக்கலாம்னு சொல்லி இருப்பார்.. 

''அவரைச் சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கும்போதுகூட என்ன விஷயம் பேசப்போறேன்னு சொல்லவே இல்லை. 'நான் ஒரு படம் பண்றேன். ஏற்கெனவே 50 சதவிகிதம் ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. இதுதான் கதை. இந்த மாதிரி மியூஸிக் வேணும்னு சொல்லி, ஷூட் பண்ணின போர்ஷனைப் போட்டுக் காட்டினேன்.



சி.பி - என்னது? போர்ஷனை காட்டுனீங்களா? இது என்ன விசு படமா?  ஒரே போர்ஷன்ல கதையை முடிக்க? ஓ!! படம் எடுத்த போர்ஷன்?? ம் ம்

 எல்லாத்தையும் உள்வாங்கிட்டு பிரமாதமான டியூன்கள் தந்தார். ஒரே நாள்தான்... எனக்குத் திக்குமுக்காடிடுச்சு! 'சார்... என்னால இவ்வளவு விஷயங்களையும் மனசுல ஏத்திக்க முடியலை. மீதியை நாளைக்கு வெச்சுக்கலாம்னு சொன்னேன். 'ஒரு விஷயம் நல்லா நடக்கும்போது பிரேக் பண்ணாதீங்கன்னார். 'சார்... நீங்க கொட்றீங்க. என்னால  முடியலைனு சொல்லிச் சமாளிச்சேன்.

'இளையராஜா ஒரு பாடலை உருவாக்கும்போது, நாம கூட இருக்கிறதே பெரிய கொடுப்பினைனு என்கிட்ட ஒரு ஸ்டார் நடிகர் சொன்னார். அது நூத்துக்கு நூறு உண்மை!''



சி.பி - அந்த ஸ்டார் நடிகர் ராமராஜன் தானே? ஹி ஹி இளையராஜா கிட்டே இன்னும் நன்றி உணர்ச்சியோட இருக்கற ஒரே ஸ்டார் அவர் தான்.. ஏன்னா ராமராஜன் படங்கள், மோகன் படங்கள் ஹிட் ஆக 99% இசை ஞானி தானே காரணம்?


http://www.worldtamils.com/wp-content/uploads/2011/12/samanthaa.jpg

3. ''தமிழ்ல ஜீவா, தெலுங்குல நானி, இந்தியில ஆதித்யா... இந்தப் படத்தோட மூணு ஹீரோக்கள்ல யார் பெஸ்ட்?''


சி.பி - இந்த கம்பேர் பண்ற வேலையை தமிழன் கடைசி காலம் வரை விட மாட்டான் போல..  பக்கத்து வீட்டுக்காரன் லாரி ஆக்சிடெண்ட்ல செத்தா இவனும் அதை விடப்பெரிய லாரி ஆக்சிடெண்ட்ல தான் சாகனும், அதுதான் கவுரதன்னு நினப்பான் போல.. 
''அப்படிலாம் பிரிச்சு சொல்ல முடியாத அளவுக்கு மூணு பேரும் வித்தியாசம் காட்டி அசத்தி இருக்காங்க. ஒரே லொகேஷன்தான். மூணு பேரையும் ஷூட் பண்ண பிறகுதான் கேமரா அடுத்த லொகேஷனுக்குப் போகும். ஜீவா, நானி, ஆதித்யா மூணு பேர்கிட்டயும் ஒரே மாதிரிதான் காட்சியை விளக்குவேன். எந்த ஈகோவும் இல்லாம பிரமாதப்படுத்தி இருக்காங்க. ஆனா, இவங்க மூணு பேரையும் சமாளிச்ச சமந்தா... சான்ஸே இல்லை. சமந்தாவின் முதல் ரசிகன் நான்தாங்க!''



சி.பி - அண்ணன் டூயட் சீன்ல டெமோ காட்டறப்போ 3 ஹீரோவுக்கும் சமந்தா கூட கட்டிப்பிடிச்சு எப்படி ஆடனும்னு காட்டி இருப்பாரு.. அதுல பாடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு போல..  



http://www.teluguone.com/tmdbuserfiles/Samantha+Hot+Bikini+stills.jpg

4. ''ஆஹா... சமீரா போய் இப்ப சமந்தாவா?''


சி.பி - ஆமா சமீரா ரொட்டி எல்லாம் பழசுங்க.. சமந்தா குட்டிதான் புதுசு. அண்ணன்  எதையும் யூஸ் அண்ட் த்ரோ பாலிசி வெச்சிருக்காருங்கோவ்.
''நான் சும்மா விளையாட்டுக்குச் சொல்லலை. தமிழ், தெலுங்கு, இந்தினு மூணு மொழிகள்லேயும் ஒரே நேரத்தில் வேற வேற ஹீரோக்களுடன் ரொமான்ஸ் பண்ணி நடிக்கணும். அந்தப் பொறுப்பை ரொம்ப அழகா தூக்கிச் சுமந்தாங்க சமந்தா.


சி.பி - அய்யய்யோ. ரொம்ப கஷ்டமான பருப்புங்க.. அடச்சே பொறுப்புங்க. எவ்ளவ் சிரமம்..  அரிசி மூட்டை தூக்குறதை விட அதுதான் கஷ்டம்.  

 ரொம்ப ப்ரில்லியன்ட். என் ஒப்பீனியன்ல இப்போ ஃபீல்டுல இருக்குற ஹீரோயின்களில் சமந்தாதான் டாப்


சி.பி - அப்படி ஒண்ணும் ”டாப்” பா தெரியலையே? அண்ணனுக்கு ஏன் அப்படி தோணுச்சுன்னு ஆராய்ச்சி தான் பண்ணனும்.. பொதுவாவே ஒரு படம் ஷுட்டிங்க்ல இருக்கறவரை ஹீரோயினை புகழ்றதும், பட ரீலீஸ் ஆனதும் கழட்டி விடறதும் சகஜம் தானே?


 இப்படி அவங்களைப் பத்தி நான் புகழ்ந்து பேசுவதால், 'சமந்தாவுக்கும் கௌதமுக்கும் சம்திங் சம்திங்னு கிசுகிசு கிளம்பும். ஆனா, அதுக்குப் பயந்துக்கிட்டு நான் சமந்தா திறமையைப் பத்தி வெளியே சொல்லாம இருந்தா, அது நான் அவங்களுக்குச் செய்ற துரோகமாயிடும். கிசுகிசு வந்தாலும் வரலைன்னாலும் சமந்தா என் டார்லிங்தான்!''



சி.பி - என்னமோ அண்ணன் இதுவரை யாருக்குமே துரோகம் பண்ணாத மாதிரியும், இதுதான் முத டைம் மாதிரியும் பதர்றாரே?அண்ணே.. ஹீரோயின் புகழாவே பாடறீங்களே, ஹீரோ பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கணே..  


http://nammaarea.com/wp-content/uploads/2010/11/Samantha-Hot-Photo-Shoot-Stills.jpg

5. '' 'மின்னலேஇந்தி ரீ-மேக், 'விண்ணைத் தாண்டி வருவாயாஇந்தி ரீ-மேக்... எதுவும் எதிர் பார்த்த அளவுக்குப் போகலை. ஆனாலும், ஏன் இந்தியில் விடாமப் போராடிக்கிட்டு இருக்கீங்க?''



சி.பி - அண்ணன் மட்டும் இல்லை, பல டைரக்டர்ங்க ஹிந்தி மார்க்கெட்டை குறி வெச்சதுக்குக்காரணம் ஆல் ஓவர் இந்தியா மார்க்கெட் பிடிக்கத்தான். சம்பளம் கிர்ருன்னு ஏறும்.. 
''என் படங்கள் ஓடலை. அவ்வளவுதான்! 'மின்னலேரீ-மேக்ல 'வெயிட்டைக் குறைங்கனு மாதவன்கிட்ட சொன்னேன். அவர் கேட்கலை. அவரைப் பார்க்கவும் யாரும் தியேட்டருக்கு வரலை.


சி.பி - விடுங்கணே.. உங்களைக்கூடத்தான் ஹெட் வெயிட்டை குறைங்கன்னு பலர் சொன்னாங்க.. நீங்க கேட்டீங்களா?

 'ஏக் தீவானா தாவுக்கு ஓப்பனிங்கே கிடைக்கலை. ஹீரோ ப்ரதீக் படத்துக்குப் பெரிய மைனஸ். ஏற்கெனவே அந்தப் பையனுக்கு நாலு படம் ஃப்ளாப் ஆகியிருக்கு. நெகட்டிவ் இமேஜ். நானும் அங்க பெரிய டைரக்டர் கிடையாது. ரஹ்மான் மியூஸிக்குக்காக மட்டும் 10, 15 பேர் தியேட்டருக்கு வந்திருந்தாங்க. எந்தப் பத்திரிகையும் நல்ல ரெவ்யூ தரலை. 'அப்பா, அம்மா பேச்சைக் கேட்கிற பொண்ணு மும்பையில் எங்கே இருக்காங்கனு எல்லாம் சில்லியா ரெவ்யூ எழுதினாங்க. அதே படத்தை ரன்பீர் கபூர் பண்ணியிருந்தா, சாலிடா ரெண்டு வாரம் ஓடியிருக்கும். என்னதான் சரக்கு வெச்சிருந்தாலும், அதை விளம்பரப்படுத்த ஒரு ஹீரோ தேவை!''


சி.பி - ஏன்? படம் எடுக்கும்போதே அவர்க்கு மார்க்கெட் இல்லைன்னு தெரியலையா? படத்துல சரக்கு இருந்தா ஹீரோ யாரா இருந்தாலும் ஓடும்ங்க. புது வசந்தம் ஓடலையா?வைகாசி பொறந்தாச்சு ஓடலையா? இதெல்லாமே புதுமுகங்கள் நடிச்ச படம் தானே.. ஸ்கிரிப்ட் பக்காவா இருந்தா போதுமே? 


http://gallery.smashingcinema.com/var/albums/South%20Cinema%20Photos/Celebrities/Samantha-Hot-Stills/Samantha%20Hot.jpg?m=1298705985
6. ‘ஓ.கே. விஜய்யை வைத்து நீங்க இயக்க உள்ளதா விளம்பரப்படுத்தின ‘யோஹன் அத்யாயம் 1’ என்னாச்சு?’’


சி.பி- யோஹன்க்கு யோகம் இல்லைன்னு நினைக்கறேன்.. 2 பேருக்கும் ஒத்து வர்லைன்னு இண்டஸ்ட்ரில பேச்சு. ஆனா அண்ணன் ஒத்துக்க மாட்டார் பாருங்க.. 




‘‘நீங்க சொல்ற தொனி, ஏதோ போன நூற்றாண்டுல விளம்பரப்படுத்தின மாதிரி இருக்கு. ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு. முருகதாஸ் கூட விஜய் ‘துப்பாக்கி’ முடிச்சிட்டா, ‘யோஹன்’ ஆரம்பிச்சிடலாம்.


 சி.பி - துப்பாக்கி படம்  விஜயை முடிச்சுட்டா?

 இந்தப் படத்துல விஜய் மட்டும்தான் தமிழ் முகம். ஹீரோயின் ஒரு இந்தியனா இருப்பாங்க. மத்த நடிகர், நடிகை எல்லாருமே வெளிநாட்டினர்தான். தமிழ் படம்தான். ஆனா, இங்கிலீஷ் சப்-டைட்டிலோட உலகம் முழுக்க எங்கேயும் வெளியிடும் தரம் இருக்கும். ரஹ்மான் இசை. ‘யோஹன்’ங்கிற இந்த கேரக்டரை எஸ்டாபிளிஷ் பண்ணிட்டா ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி அத்யாயம் 1, 2னு அடுத்தடுத்து பண்ணலாம்!’’


சி.பி - இது வரை தமிழ் சினிமாவில் இப்படி வந்ததே இல்லை.. ஈகோ, சம்பளப்பிரச்சனை , மார்க்கெட் பிரச்சனை எல்லாம் தாண்டி அப்படி தொடர் வந்தால் சாதனை தான்.. வாழ்த்துகள்




7. ‘‘டி.வி சீரியல் இயக்கப்போறீங்கன்னு சொன்னீங்க. அந்த அத்யாயம் என்னாச்சு?’’


சி.பி  - அய்யய்யோ. சீரியல் கில்லர் ஆகப்போறாரா? அண்ணே.. வீட்ல பொண்ணுங்க எல்லாம் இருப்பாங்க.. நடு நிசி நாய்கள் மாதிரி உலகப்படம் கொடுத்து அவங்களை கெடுத்துடாதீங்கண்ணே.. 




‘‘ஒரு மாசத்துல ஆரம்பிக்கிறோம். சன் டிவியில் மெயின் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகப்போகுது. ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக். பார்த்திபன் ஹீரோ. இது டி.வியில் புது முயற்சி. ஆக்ஷன், எமோஷன்னு எல்லாம் இருக்கும்!’’

8. ‘‘ரஜினிக்காக ஆளாளுக்கு ஸ்கிரிப்ட் பண்றாங்க. உங்க பங்குக்கு?’’



‘‘பிளான் இருக்கு. கோச்சடையான், ராணானு அவர் பிஸியா இருக்கார். கே.வி.ஆனந்த்கிட்டயும் கதை கேட்ருக்கார். ரஜினி, கமல் எப்பக் கூப்பிட்டாலும் படம் பண்ண ஸ்கிரிப்ட் தயாரா இருக்கு. எனக்கு அஜீத்கூடவும் வொர்க் பண்ண ஆசை. அஜீத்தைப் பத்தி நான் ஏதோ தப்பா சொன்னதா சோசியல் மீடியாக்களில் வதந்தி.


 ‘டேய் நீயா சொன்னே?’னு அவர் ரசிகர்கள் ஸ்டேட்டஸ் போட்டு மிரட்டுறாங்க. ஆனா, சமீபத்தில் அஜீத்தைச் சந்திச்சப்ப, நான் என்ன பேசினேன்னு விவரமா சொன்னேன். ‘விடுங்க கௌதம்... அதைப் பத்திலாம் நான் கண்டுக்கலை’ன்னார். அவர்கூட கண்டிப்பா ஒரு படம் பண்ணனும்!’’


சி.பி - தல கிட்டே என்ன சொன்னீங்கன்னு பப்ளிக்கா சொல்லுங்களேன்.. நாங்களூம் தெரிஞ்சுக்குவோம் இல்ல?/ மப்புல இருக்கறப்ப எதையாவது உளறிட வேண்டியது. மப்பு தெளிஞ்சதும்  மன்னிப்பு கேட்க வேண்டியது.. 

 அன்புள்ள விகடன்க்கு. ஆனந்த விகடன் புக்ல  மீதி பேட்டி விகடன் இணைய தளத்தில் பார்க்கவும்னு போட்டிருக்கீங்க..  புக் வாங்கற 5 லட்சத்து 87 ஆயிரம் பேர்ல நெட் யூஸ் பண்றவங்க 10,000 பேர்தான்.. அதுல விகடன்ல இணைய தள சந்தா கட்டி வாசிப்பது 980 பேர்தான்.. அவங்க மட்டும் படிச்சா போதுமா? முழு பேட்டியும் புக்லயே போட்டிருக்கலாம்.