Sunday, March 11, 2012

அழகிய அனுஷ்கா, திகு திகு த்ரிஷா யார் டாப்? - ஆர்யா ஓப்பன் டாக். பேட்டி

http://sareesmania.files.wordpress.com/2011/02/anushka-dancing-green-saree1.jpg
''சார்... வீட்டுக்கு வர்றீங் களா... பிரியாணி சாப்பிடலாம்! ஸ்டிரைக்  நடக்கிறதால வீட்லயே இருக்கேன். 'புள்ளை நல்லா சாப்பிடட்டும்னு பிரியாணி பண்ணி ஊட்டி விட்டுட்டே இருக்காங்க. எக்குத்தப்பா வெயிட் போட்டுட்டுப் போய் நிக்கப்போறேன்... செல்வா சார் அடிச்சுத்துரத்தப்போறார்!''- வசீகரமாகச் சிரிக்கிறார் கோலிவுட்டின் 'மோஸ்ட் வான்டட் பேச்சுலர்ஆர்யா!


 1. ''யாருமே எதிர்பார்க்காம திடீர்னு செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்படத்துல நடிக்கிறீங்க. அங்கே உங்க ஜாலி கேலி சேட்டைகள்லாம் செல்லாதே...''

 சி.பி - ச்சே, ச்சே அப்படி எல்லாம் இல்லை.. டைரக்டர்க்கு தனி கேபின் , ஹீரோவுக்கு தனி கேபின் , மாத்தி மாத்தி சேட்டை பண்ணிக்கலாம் ஹி ஹி 

''உண்மைதான் சார். ஆனா, ஒவ்வொரு நடிகனும் அவர்கிட்ட நிச்சயம் ஒரு படமா வது நடிக்கணும்.

சி.பி - நல்லவேளை, நடிகையை பற்றி சொல்லலை, அப்புறம் சோனியா அகர்வால்,ஆண்ட்ரியா எல்லாரும் சண்டைக்கு வந்திருப்பாங்க 

 பெரிய ஸ்கோப் கொடுப்பார். கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக்கூட நடிக் கலாம். எல்லாத்தையும் அவர் பார்த்துக்குவார்.

சி.பி - அதுதாங்க , கம்ப்ளைண்ட்டே, எல்லாத்தையும் அவரே பார்த்துக்கறாராம், வேற யாருக்கும் சான்ஸ் தர மாட்டேங்கறாராம்.. 




 'இரண்டாம் உலகம்தான் என் படங்களில் ரொம்பப் பெரிசு ஆர்யா. என் கனவுப் படம் இதுதான்னு சொன்னார். அப்படி அவர் நினைக்கிற படத்தில் நான் இருக்கேன்கிறது என் அதிர்ஷ்டம். சமத்தா நடிச்சு அவர்கிட்ட நல்ல பேர் வாங்க ணும்னு முயற்சி பண்ணிக்கிட்டே இருக் கேன்.

சி.பி - ஆயிரத்தில் ஒருவன் வந்தப்பவும் இப்படித்தான் சொன்னாரு.. பொதுவா எல்லா டைரக்டர்களும் அவங்கவங்க பட ரிலீஸ் அப்போ இந்தப்படம் தான் மெகா பட்ஜெட், இதுவரை யாருமே தொடாத கதைம்பாங்க , ஆனா ரிலீஸ் ஆனாத்தான் தெரியும்.

அவர்கிட்ட திட்டு வாங்காம நடிச் சாலே பெரிய விஷயம்னு தோணுது.சும்மா விளையாட்டுப் பையனாவே திரிஞ்சாலும் சரி வராது. அதான் அப்பப்போ இப்படிப் பட்ட கிரியேட்டர்களிடம் நம்மளைக் கொடுத்து பாலீஷ் பண்ணிக்கிட்டு இருக்கேன்!''


http://trisha.indiancelebs.co.in/wp-content/uploads/l-600-400-feeacd83-65cc-4924-bdb9-6472b9409d30.jpeg

2. ''அனுஷ்காதான் ஜோடியாமே. சாக்குபோக்கு சொல்லாம ஷூட்டிங்குக்கு ஆஜர் ஆகிடுவீங்களே...''

''அடப் போங்க சார். அனுஷ்கா ரொம்ப ஃப்ரெண்ட்லி. எந்தப் படத்தில் நடிக்கும்போதும் 'ஒரு ஹீரோயின் இந்தப் படத்துல நடிக்கிறாங்கங்கிற ஃபீல் இருந்துட்டே இருக்கும். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல அனுஷ்கா வர்றதும் தெரியாது... போறதும் தெரியாது.  



 சி.பி - அவ்ளவ் கமுக்கமான ஆளா? பார்த்தா ஓப்பன் டைப் மாதிரிதானே தெரியுது?




நல்ல தமிழ் வார்த்தைகளா பேசுறாங்க. 'நான் கடவுள் என் கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருந்துச்சாம். ஒரு படமா 'மதராஸபட்டினம்அவங்களுக்குப் பிடிச்சிருக்கு. 'பாஸ் என்கிற பாஸ்கரன்பார்த்துட்டு சிரிச்சுட்டே இருந்தாங்களாம். ஒரு அழகான பொண்ணு... நமக்குப் பிடிச்ச பொண்ணு... நல்ல விஷயங் களா சொல்லி நம்மைப் பாராட்டும்போது அதைக் கேட்கிறதே சுகமா இருக்குங்க. கேமரா முன்னாடி நடிக்க வந்துட்டா செம டஃப் கொடுக்குறாங்க. செல்வா சார், அனுஷ்கா ரெண்டு பேரையும் சமாளிச்சு நடிக்கிறது பெரிய சாதனைங்க!''


 சி.பி - அப்போ இந்த பேட்டிக்கு டைட்டிலா ஆர்யாவால் அனுஷ்காவை சமாளீக்க முடியவில்லை, திணறல்னு வெச்சுடலாமா? ஹி ஹி 


http://www.extramirchi.com/wp-content/uploads/2009/03/trisha_arya_sarvam-5.jpg
3. ''லிங்குசாமி தயாரிப்பில் இருந்து விலகிட்டீங்க, நீங்கள் தயாரிச்ச 'படித்துறைபடத்தை வெளியிட நீங்களே தயங்குறீங்கனு... திடீர்னு ஆர்யாவைச் சுத்தி ஏன் இத்தனை சர்ச்சைகள்?''

''லிங்குசாமி சாருக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. 'நானே உனக்கேத்த மாதிரி 'நச்னு ஒரு கேரக்டர் வாங்கித் தர்றேன்னு அவரே சொல்லிட்டார். இனிமே, அவரே எனக்கு டைரக்டர் ஏற்பாடு செய்துதருவார். என்னைப் பத்தி அவருக்கு நல்லாத் தெரியும். அவரோட பெஸ்ட் 'நண்பேன்டாநான். அப்புறம் 'படித்துறைபடத்துல இன்னும் கொஞ்சம் புரொடக் ஷன் வேலை பாக்கியிருக்கு. வேற வேலை கள்ல சிக்கிட்டதால அதுல கவனம் செலுத்த முடியலை. படத்தை ரிலீஸ் பண்ணாம இருக்கணும்னுலாம் நான் நினைக்கலை. நிச்சயம் 'படித்துறைவெளிவரும்!''


சி.பி - ஆஹா டைட்டிலே கவிதையா இருக்கே? ஆர்ட் ஃபிலிமா இருந்து வழுக்கி விடாம இருந்தா சரிதான் /

4. ''சேனல்ல சூர்யா குரோர்பதி பண்றார். விக்ரமும் வரப்போறதா சொல்றாங்க. உங்களுக்கு அந்த மாதிரி வாய்ப்பு கிடைச்சா பண்ணுவீங்களா?''

''நிச்சயமா! எனக்கு அதுக்கான எல்லாத் திறமையும் இருக்குங்க. சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி னேன். நான் நடிக்கிறதைவிட அது நல்லாவே இருந்ததுனு எல்லாரும் பாராட் டினாங்க. எனக்கு எல்லாமே சேலஞ்ச் தான். ஷாரூக் கான் பண்றார். நான் பண்ண முடியாதா? சான்ஸ் கிடைச்சா பட்டையைக் கிளப்பிடலாம் சார்!''

5. ''ஸ்டார் கிரிக்கெட்ல என்னதான் தகராறு?''

''பெங்களூரு டீம் நல்ல பலமான டீம். எங்களைத் தூக்கியே ஆகணும்னு முடிவு பண்ணிட்டு வந்தாங்க.  நாங்க நிதானமா, பொறுமையா, சாமர்த்தியமா விளையாடி னோம். அவங்க எப்பவும் ஒரு பதற்றத் தோடவே விளையாடினாங்க. அதுதான் அவங்க காலை வாரிடுச்சு. 'இவ்வளவு பலமான டீமா இருந்தும் தோத்துட் டோமேனு அவங்களுக்கு ஆதங்கம். அது வருத்தமா வெளிப்பட்டு இருந்தா பரவா யில்லை. ஆத்திரமா மாறிடுச்சு. இதுக்கு மேல அதைப் பத்திப் பேச வேண்டாமே...


http://www.dailomo.net/wp-content/gallery/stunning-trisha-in-silk-saree/trisha-too-hot-in-silk-saree-stunning-pic-5.jpg
6. '' 'அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு உங்க நெருங்கிய தோழி த்ரிஷா சொல்லி யிருக்காங்கபோல... பையன் யார்?''


''அட... நீங்க வேற சார்... த்ரிஷா சொல்றதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு. அவளுக்கு இப்போதைக்கு கல்யாணமா? சான்ஸே இல்லை! இன்னைக்குச் சொன்னதை நாளைக்குக் கேட்டா இல்லேம்பா! அவளை யாரும் கன்ட்ரோல் பண்ண முடியாது. அவளுக்கு என்ன தோணுதோ அதைத்தான் பண்ணுவா. கல்யாணம் பண்றதா இருந்தா என் கிட்ட சொல்லியிருப்பா. நான் விசாரிக்கிறேன்!''

சி.பி - த்ரிஷாவை யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாது , என்னை தவிர - ஆர்யா பர பர பேட்டி - எப்படி டைட்டில் ? 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3ucST0tkjADmMYhabtSAZN2O6XLhXHjdE_QFfbjq7GYXQIQjqpamPL5H-Ckbx2Jd5vhbQPuHY_OMAJjTaSC0DmMxO52qZXBSY_Z5oKu8uIISPrIcGwn145s1XaINaljI3bY0kHgEoY4g/s1600/ank2.jpg

அரவான் கலைஞர் குடும்பக்கதையா? ஜெ பதில்

1.ஜெயலலிதா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தம்பதியினர் கைது # அந்த 64 ஜோடில ஒரு ஜோடியா இருக்கும், அதுக்குள்ள டைவர்சா?


--------------------

 2. மகளிர் தினத்துக்கு ஜெவுக்கோ, கவர்னருக்கோ வாழ்த்து சொல்லாம கலைஞர் குஷ்புவுக்கும் கலா மாஸ்டருக்கும் சொல்றாரு, அடங்கோ

------------------------------------

3. வள்ளுவர் - என் கிட்டே 133 அதிகாரம் இருக்கே ஹே ஹே ஹே !

 வாசுகி - சும்மா ஆடாதய்யா ,அடுப்பை பற்ற வெச்சு உலைல அரிசியை போடு

-----------------------------

4. .பெற்றோரின் பாதங்களை வணங்காதவன் எவரெஸ்ட் உச்சி தொட்டாலும் பயன் என்ன?


--------------------------------

5. பாலு -என் பாதம்பட்டு புனிதப்படவே, கோலம் போட்டு வச்சிருக்கு, எதிர்வீட்டு ஃபிகரு.

 மாலு - அடப்பாவி, அப்போ செப்பல் கூட இல்லையா? அவ்வ்


---------------------------------

6.எல்லோர் வீட்டிலும் அம்மா, அப்பா இருவரில் ஒருவர் அன்பாகவும் , மற்றொருவர் கண்டிப்பாகவும் குழந்தைகளிடம் நடந்துகொள்கின்றனர் #அவதானிப்பு


---------------------------


7.நாம் தினமும் மனதார வணங்க வேண்டியவர்கள் பெற்றோர்,உழவர்கள்,இயற்கை அன்னை




----------------------------------


8. கபில் சிபில் - என்னய்யா இது? டைம் லைன் ஃபுல்லா சேட் லைனா மாறி இருக்கு?

 ட்விட்டர் ஓனர் - நல்ல வேளை , நீங்க DM பார்க்கலை!


---------------------------------------


9. அம்மாவின் அன்பு மழை பொழிவது  போல இயற்கையானது,உண்மையானது,காதலியின் அன்பு வானவில்லை தொலை தூரத்தில் பார்ப்பது போல


--------------------------------------


10. சோகங்கள்,வருத்தங்கள்,வலிகள் நம்மை ஆக்ரமிக்கும்போது கண்ணீர் விட்டுக்கதறி அழுது விட்டால் மனசு லேசாகி விடுகிறது




---------------------------------


11. தனக்குத்தெரிந்த எல்லா நல்ல விஷயங்களையும் பெற்றோர் நமக்கு கற்றுத்தருகின்றனர்,நமக்குத்தெரிய வரும் நவீன விஷயங்களை நாம்  சொல்லித்தருவதில்லை


----------------------------------


12. மே 11-ல் சினேகா - பிரசன்னா திருமணம்! # ஆரம்பத்துல அண்ணானு கூப்பிட்டவர் இப்போ பிரஸ்னு கூப்பிடறாராம்


---------------------------------


13. முத்தக்காட்சியில் நடித்து ,முகம் சுழிக்கும் வகையிலான படங்களில் நான் நடிக்க மாட்டேன் - சிவ கார்த்திகேயன் # உதட்டை சுளிச்சா போதுமே?




------------------------------


14. ஆன்ட்ரியா ரோலை விடஅதிக வெயிட் உள்ள ரோலை எனக்குத்தரனும் - திவ்யா ஸ்பந்தனா # அவங்க சாதா லேடி, நீங்க பிரக்னண்ட் லேடி, ஓக்கேவா மேடம்?


-------------------------------


15. புத்துணர்வு அளிப்பதில், ஆறுதல் தருவதில் இசை பெரும் பங்கு வகிக்கிறது




-------------------------------


16. நம் பெற்றோர் அனுபவிக்காத வசதிகளை காலம்,விஞ்ஞானம் நமக்குத்தந்த போதும் ஒரு வித குற்ற உணர்வோடே, அரைகுறையாக  நாம் அதை அனுபவிக்க முடிகிறது


---------------------------------------


17. நம் மனம் சரி இல்லை என்றால் நம் முகத்தை பார்த்தே நம் அகத்தை உணர்வதில் அம்மாவுக்கே என்றும் முதல் இடம்


---------------------------


18.நட்சத்திர விடுதிகளுக்கு வரி அதிகரிப்பு: இன்று முதல் அமல் # ஓஹோ, விடுதில ஒரு சினிமா நட்சத்திரம் தங்குனா அது நட்சத்திர விடுதியா?


--------------------------------------------

19. அ.தி.மு.க.,வினர் பணம் கொடுத்தாலும், தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க வேண்டும்''-அழகிரி # தமிழன் என்ன அவ்வளவு கேணையா?


------------------------------

 20. ஓ பி எஸ் -மேடம்,அரவான் படம் டிவிடி இருக்கு பார்க்கறீங்களா?


 ஜெ- தேவை இல்லை, கலைஞர் குடும்பக்கதையைத்தான் பல வருஷமா பார்த்துட்டு இருக்கேனே?


--------------------------------------------------

Saturday, March 10, 2012

உதிரிப்பூக்கள் இயக்குநர் மகேந்திரன் பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLf1hydgQ1SZN1v7L6gsubtouh8r8mO9Tbcz3Rm6e0Ob6yxvB1WJwlGfCfbD5IC3hVaKwzTn_6H7y8en75QReA_eNlT_k_YulRk-wxxHwEbn4QaLNSrBmz3bMPAYkUYytuwUISk2HS7rk8/s400/Uthiri-Pookal.jpg 

''நான் இன்னும் நல்ல சினிமா எடுக்காத குற்ற உணர்வில் இருக்கிறேன். இது தன்னடக்கம் அல்ல. நிஜமான என் வாக்குமூலம்!'' - சிம்பிளாகச் சிரித்து ஆச்சர்யப்படுத்துகிறார் இயக்குநர் மகேந்திரன்

சி.பி - உதிரிப்பூக்கள் மாதிரி ஒரு படம் இனி நீங்களே நினைச்சாலும் எடுக்க முடியாதே சார்.. ஆனந்த விகடன் விமர்சனங்களில் அதுதானே 2வது இடத்தில் இருக்கு ( முதல் இடம் 16 வயதினிலே)


 ''நீங்க சினிமாவுக்கு வந்தது விபத்தா... விருப்பப்பட்டா?''


''விருப்பம் இல்லாம சினிமாவுக்கு வந்தவன் நான். விரும்பாதது கிடைச்சாலும் நேசிக்க வேண்டிய கட்டாயம். பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படலை. சினிமாவை ஒரு தொழிலா மட்டும்தான் பார்த்தேன். அதனாலதான் 30 வருஷம் கழிச்சு 'முள்ளும் மலரும்விமர்சனம் படிக்கும்போது மனசுக்குள்ளே சின்ன ஆசுவாசம் கிடைக்குது. நான் சினிமாவைக் கட்டாயக் கல்யாணம் பண்ணிக்கிட் டாலும், எந்தக்காலத்திலும் நான் அதை வெறுக்கலை... கொடுமை பண்ணலை. பல முறை சினிமாவைவிட்டுப் போக நினைச்ச நான், 36 படங்களுக்குக் கதை - வசனம் எழுதி, 12 படங்களை இயக்கியிருக்கேன். எனக்கும் சினிமாவுக்குமான உறவு நாகரிகமாவே இருக்கு!''  

 சி.பி - அடேங்கப்பா, 36 படங்களில் பணி ஆற்றி இருக்கீங்களா? ஹூம்.. அந்த லிஸ்ட்டை முதல்ல எடுத்து எதெல்லாம் பார்க்காத படம்னு பார்த்து க்ளியர் பண்னனும்.. வீ ஜஸ்ட் மிஸ் இட்

'' 'முள்ளும் மலரும்படத்துக்கு முன்புவரை ரஜினிக்கு வில்லன் முத்திரைதான் அழுத்தமா இருந்துச்சு. அவரை எப்படி ஹீரோவா தேர்ந்தெடுத்தீங்க?''

''நடிகர், ஸ்க்ரிப்ட், இயக்கம்னு எதையும், நான் யார்க்கிட்டேயும் கத்துக்கலை. எது எப்படி இருக்கணும்னு எனக்கு நானே தீர்மானிச்சேன். போகிப் பண்டிகையில வேண்டாத விஷயங்களைக் கொளுத்துற மாதிரி, சினிமாவில் யதார்த்தத்துக்குப் புறம்பான, பிடிக்காத விஷயங்களைத் தூக்கிப்போட்டேன்.

சி.பி - முக்கியமா டூயட், ஃபைட் அவாய்ட் பண்ணீங்க..  

http://www.kollytalk.com/wp-content/uploads/2012/03/Director-Mahendran.jpg



 'ஆடுபுலி ஆட்டம்படத்துக்கு வசனம் எழுதினப்ப, ரஜினி எனக்கு நல்ல நண்பர் ஆனார். விடிய விடிய சினிமாபத்திப் பேசுவோம். சினிமா மேல அவருக்கு  வேட்கையும் தீராக் காதலும் இருந்துச்சு. 'முள்ளும் மலரும்எழுதினப்ப ரஜினிதான் சரியா இருப்பார்னு தோணுச்சு. தயாரிப்பாளர் வேணுகிட்ட சொன்னப்ப, 'ரஜினி கறுப்பா இருக்காரு. வில்லன் கேரக்டர்ல நடிக்கிறார். ஹீரோவா போட்டா எடுபடுமா?’ன்னு தயங்கினார். ஆனா, 'ரஜினிதான் ஹீரோன்னு நான் தீர்மானமா இருந்தேன்.

 சி.பி - கறுப்பு நிறமா இருக்கறவங்க சினிமால ஹீரோ ஆக முடியாதுங்கற கோடம்பாக்கம் செண்ட்டிமெண்ட்டை உடைச்சு வெற்றிகரமா சூப்பர் ஸ்டார் ஆன முத ஹீரோ ரஜினிதான்னு நினைக்கறேன்.. விஜய்காந்த் எல்லாம் அதுக்குப்பிறகு வந்தவங்க தானே?

 படம் வெளியான மூணு வாரம் மக்களிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. பிறந்தவுடனே குழந்தை சத்தம் போடாம இருந்தா, எப்படிப் பதைபதைப்பா இருக்குமோ, அப்படித்தான் நானும் ரஜினியும் இருந்தோம். நாலாவது வாரத்துல படம்     பிக்-அப்   ஆச்சு. இப்போ யோசிச்சாலும் காளி கேரக்டருக்கு ரஜினியைத் தவிர வேற யாரையும் யோசிக்க முடியலை!''  


 சி.பி - காளி கேரக்டரை காலி பண்ணிட்டாரே..?

'' 'உங்களுக்குப் பிடிச்ச டைரக்டர் யார்?’னு பாலச்சந்தர் கேட்டப்பவே, ரஜினி உங்க பேரைத்தான் சொன்னார். அதை எப்படி எடுத்துக்கிட்டீங்க?''

''நிறையப் பேர் 'ரஜினி உங்களைப் பத்திப் பேசியிருக்கார். அவருக்கு போன் பண்ணி நன்றி சொல்லுங்கன்னு சொன்னாங்க. 'நீங்க ரஜினியை, ரஜினியாப் பார்க்கிறீங்க. நான் என் நண்பனா பார்க்கிறேன்னு சொல்லிட்டேன். என் மனைவி தொடர்ந்து சொன்னதால ரஜினிக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதினேன். 'உலக சினிமாக்களைப்பார்த்த பிறகு நான் தமிழ் சினிமாவில் நுனிப்புல் மேய்ந்தவனாக உணர்கிறேன். என்னைப் போய் சொல்லியிருக்கீங்களே!’னு எழுதி இருந்தேன்


 கடிதம் போனதும் ரஜினி உடனே போன் பண்ணினார். 'சார் உங்க லெட்டர் படிச்சேன். எனக்கு போன் பண்ண பலரும் மகேந்திரனைச் சொன்னது தான் நல்ல பதில்னு சொன்னாங்கன்னு ஆரம்பிச்சு பழையவிஷ யங்களைப் பத்திப் பேசிட்டே இருந்தார். அவர் எப்பவும் என் ரஜினிதான்!''


  
''தற்போதைய தமிழ் சினிமாவின் சில அபத்தங்களை எப்படி மாற்றலாம்?''

''படம் பார்த்துட்டு வந்த பிறகும் மனசுக்குள்ள ரம்மியமான காட்சிகள் நினைவுக்கு வரணும். 'தி ஆர்டிஸ்ட்ஹாலிவுட் படம் வசனமே இல்லாமல் அழகா கறுப்பு - வெள்ளையில் எடுத்திருக்காங்க. நாமதான் 'பிளாக் அண்ட் வொயிட்டை ஃப்ளாஷ் பேக் உத்தியா  மட்டுமே பயன்படுத்துறோம். 1958-லேயே எம்.ஜி.ஆர்கிட்ட 'ஏன் படத்துல டூயட் வருதுன்னு கேட்டேன். அது இப்போ 2012 வரை தொடருது. குத்துப் பாட்டு, டூயட் இல்லாத மாற்று சினிமா வேணும். அதுதான் நல்ல சினிமாவும்கூட!''

 சி.பி - பாட்டு இல்லாம படங்கள் வர ஆரம்பிச்சா அது ஒரு நல்ல தொடக்கமா இருக்கும்.. நம்ம ஆளுங்க ஏன் தயங்கறாங்கன்னா ஆடியோ மார்க்கெட் மற்றும் குரூப் டேன்சர்கள் நல வாழ்வு..



''சமீபத்திய சந்தோஷம்..?''

'' 'ரசிகன்நிகழ்ச்சி மூலமா மீண்டும் என் ரசிகர்களுடன் ஏற்பட்ட தொடர்புதான்!  நிகழ்ச்சியின் இயக்குநர் மணிவண்ணன்  பல கேள்விகள் மூலம் என் தவத்தைக் கலைச்சிருக்கார். வியட்நாம், சிங்கப்பூர், மலேசியானு பல நாடுகளில் இருந்து 'அடுத்த படம் எப்போ பண்ணுவீங்க?’னு போன்ல கேட்கிறாங்க. நிகழ்ச்சியில் திரையிட்ட ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் புதுசா ரிலீசான படம் மாதிரி  நினைச்சுப் பாராட்டுறது நெகிழ்ச்சியா இருக்கு.  அதேசமயம் இவ்ளோ மரியாதைவெச்சிருக்காங்களேன்னு கொஞ்சம் பயமாவும் இருக்கு.

 கலைஞர் டி வில நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்குப்பிறகு நல்ல பேர் வாங்கிக்கொடுத்தது இந்த ரசிகன் நிகழ்ச்சி தான்.. அந்த பேட்டில ஒரு இடத்துல கூட நீங்க கேமராவை பார்க்காம எதார்த்தமா பேசுனது செம.. உங்க படம் போலவே நீங்களூம் ரொம்ப எதார்த்தம்.. 

இதோ என் கூட்டைவிட்டு வெளியே வர தயாராகிட்டேன். 'மோகமுள்கதைக்கு என் பாணியில்   திரைக்கதை வடிவம் கொடுத்திருக்கேன். சீக்கிரமே மகேந்திரன் படைப்புகளை வெள்ளித்திரையில் பார்க்கலாம்!'' - அழகாகச் சிரிக்கிறார் மகேந்திரன்.

சி.பி - மோக முள் பெஸ்ட் சாய்ஸ் அல்ல.. ஏன்னா அது ரொம்ப பழைய கதை.. ஆல்ரெடி நாவலாவும் , படமாவும் மக்கள் பார்த்துட்டாங்க.. இங்கே கதைக்கா பஞ்சம்? புதுக்கதை கையைல எடுங்க. களத்துல குதிங்க.. ஆல் த பெஸ்ட் சார்..