
1.ஜட்ஜ்- எதுக்காக கறுப்புக்கொடியை காட்னீங்க?
கேப்டன் - போயஸ் தோட்டம்னா மட்டும்தான் வெள்ளைக்கொடி காட்டுவேன்
--------------------------------------
2. நடிகை- அய்யரே, காஞ்சனாஸ்ரீ-ங்கற பேருக்கு அர்ச்சனை செய்யனும் .
என்ன நட்சத்திரம்மா?
நடிகை - சினிமா நட்சத்திரம்
-----------------------------------------
3. ஆண்கள் எல்லாரும் டைப்பிகல் கைஸ் (typical guys)னு சொல்றாங்களே, அது நிஜமா?
சரியா தெரியல, ஆனா நான் டைப் ல லோயர் க்ளாஸ் கூட போகலை
-----------------------------------
4. பெண்களோட கற்பு பற்றியும், ஆண்களோடு கறுப்பு பற்றியும் யாரும் விமர்சனம் பண்னக்கூடாது - கேப்டன்
----------------------------------
5. யாரும் , யாரையும் கிண்டல் பண்னாதீங்கய்யா, வாழ்நாள் முழுக்க உம்மணாம்மூஞ்சியாவே இருந்து நாசமா போவோம்
-----------------------------------
6.நிருபர் -மேடம்,உங்க வீட்ல சி பி ஐ 8900 சேலைகளை கைப்பற்றி இருக்காங்களாமே?
நடிகை - சோ வாட்?
நிருபர்- கலை மாமணி விருதுக்குப்பதிலா உங்களுக்கு சேலைமாமணி விருது கொடுத்திருக்கலாம்
-----------------------------------------
7. தலைவர் ஒண்டிக்கட்டை என்பதை நம்ப முடியலை..
ஏன்?
கூடவே ஒரு கட்டை எந்நேரமும் இருக்கே?
----------------------------------------
8. ஜட்ஜ்- எதுக்காக பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்னீங்க?
கேப்டன் - அவ்வ், அவர்தான் பிரதமரா? சத்தியமா எனக்கு தெரியாது யுவர் ஆனர்
-------------------------------------
9. பிரபல டிவிட்டர்களும் , பிரதமரும் ஏன் பதில் கூறுவதில்லை?
ஒருத்தருக்கு தலைக்கனம், இன்னொருத்தருக்கு மடில கனம்
--------------------------------------
10. 2012ம் ஆண்டை கணிதஆண்டாக அனுசரிக்கப்படும் – சென்னையில் பிரதமர் அறிவிப்பு ! # கணக்கு பண்றவங்க எல்லாம் நோட்பண்ணிக்குங்க, தீயா வேலை செய்யனும்
-------------------------------------

11. வழிப்போக்கர்களாக நம் வாழ்வில் ஊடாலே வந்தவர்கள் வலி போக்கர்களாக மாறினால் அவர்கள் வாழ்நாள் நண்பர்கள் ஆகி விடுகிறார்கள் # ரீ மிக்ஸ் டோரா
----------------------------------
12. அதிகமாய் பேசுவோரின் திடீர் அமைதி காண்போருக்கு விசித்திரமே..
அது சரி, வாய் வலிக்காதா? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க விடுங்கம்மா.
----------------------------
13. என் ஃபேஸ்புக்ல 3 மாசம் கழிச்சு உள்ளே போனா யார் யாரோ அங்கே தீபாவளி கொண்டாடி இருக்காங்க, அடேய், ஹவுஸ் ஓனரே இல்லாத வீட்ல என்னடா பண்றீங்க?
---------------------------------
14. ஒரு பெண்ணுக்கு ஆணை பிடிக்க அவன் செய்ய வேண்டியது தனியாக ஏதும் இல்லை, உண்மையாகவும் , இயல்பாகவும் இருத்தலே
------------------------------
15. சரியாக சமைக்க தெரியாதவர்களுக்கு ஒரு ஐடியா, அரைகுறை சாம்பாரை பக்கத்து வீடுகளுக்கு தரவும், அவர்கள் தருவதை வாங்கி வந்து சாப்பிடவும்
-----------------------------------
16. திருநள்ளாறு கோவிலில் நடிகர் விவேக் வழிபாடு # ஊருக்கு மட்டும் உபதேசம், தனக்கு என வந்தால் சமரசம், கலைஞர் வழி நகைச்சுவை கலைஞன் வழி?
-----------------------------------
17. இந்திய ஆண், பெண்களின் தேசிய நிறம் அழகிய மாநிறமே, ஆனால் எல்லோரும் எதிர்பார்ப்பது பழுத்த ”மா” நிறமே !
-----------------------------------
18. என்னோட பெண் பார்க்கும் வைபவத்துல 12 பெண்கள் என்னை கறுப்புனு சொல்லி ரிஜக்ட் பண்ணாங்க, அப்புறம் ஃபேரன்லவ்லி போட்டு சிவப்பானேன் ஹி ஹி
-----------------------------------
19. பசங்க கடலை போட ஆசப்படறாங்க, பொண்ணுங்க கடலை மாவு போட ஆசப்படறாங்க , கடலை விவசாயம் , கடலை மாவு முக நயம்
---------------------------------
20. மைசூர் போனா மைசூர் சில்க் வாங்கனும் தானே?
லேடீஸ் ஆல்வேஸ் லேடீஸ்.. மைசூர் போண்டா, மைசூர்பாக்னு வாங்க எவ்வளவோ இருக்கே?
--------------------------------------------
லேடீஸ் ஆல்வேஸ் லேடீஸ்.. மைசூர் போண்டா, மைசூர்பாக்னு வாங்க எவ்வளவோ இருக்கே?
--------------------------------------------