Wednesday, October 19, 2011

தில்லு துர ஜோக்ஸ்



1.டியர், நான் பக்கத்துலதானே இருக்கேன், எதுக்கு ஃபிளையிங்க் கிஸ் தர்றீங்க? 

நீ ஏர்ஹோஸ்டல் ஆச்சே?அதானே பிடிக்கும்?

------------------------

2.இதயம் என்பது துக்கங்களையும், சோகங்களையும் வைத்திருக்கும் குப்பைக்கூடை அல்ல, அது ரோஜாக்களை, மகிழ்ச்சிகளை வைத்திருக்கும் தங்கப்பெட்டி

-----------------------------

3. குளிப்பதற்கு டெமோ காட்டுகிறார் பூனம் பாண்டே! # அடச்சே, வெறும் டெமோ தானா?

-------------------------

4. டியர், நாம டெய்லி கோயிலுக்குபோனா நம்ம காதல் தெய்வீகக்காதல் ஆகிடுமா? 

தேவை இல்லை, டிவைன் லவ்வர்ஸ்னு ஒரு கில்மா படம்,அதுக்குப்போனாலே போதும்

----------------------------
5. வாழ்க்கையில் கசப்பான உண்மைகளை விட இனிப்பான பொய்களே அவசியமாய் இருக்கின்றன மனதிற்கு

--------------------------

6. சாதாரண மனிதன் புத்தகத்துடன் இருப்பான், சாதனை மனிதன் புத்தகத்தில் இருப்பான்

--------------------------



7. வேலாயுதம் படத்துக்கு அனைவரும் பார்க்கலாம் என யு சான்றிதழ் வழங்கியது சென்சார் # அனைவரும் பார்க்கலாமா?அப்போ அதுல விஜய் இல்லையா?

-------------------------------

8. நீர் நிலைகளின் மேற்பரப்பில் தோன்றும் வாத்துகள் அமைதியாய் இருப்பதாய் தோன்றினாலும் உள்ளே அது கால்களால் நீந்திக்கொண்டே இருக்கும்

----------------------------

9. எல்லோராலும் விரும்பப்படும் நபர் என யாரும் இல்லை.. அனைவராலும் வெறுக்கப்படும் நபர் எனவும் யாரும் இல்லை

-------------------------------

10.இன்றைய லட்சியம் நாளைய மாற்றம், இன்றைய அலட்சியம் நாளைய ஏமாற்றம்

-------------------------

three musketeers by Marcin Nawrocki

11. வார்த்தைப்பரிமாறல்கள்தான் காதல் என்றால் இதழ்கள் போதுமே, இதயம் எதற்கு?

------------------------

12. சிநேகங்களின் சோகங்கள் சுலபமாக இறக்கி வைக்கப்படுகின்றன, கேட்கும் நமக்குத்தான் மனதில் பாரம் ஏறுகிறது, கண்ணில் ஈரம் ஊறுகிறது

-------------------------

13. பெண்ணை கோபப்படுத்தாமல் பேசுவது எப்படி? என்ற கலையை இன்னும் எந்த ஆணும் கற்றுக்கொள்ளவில்லை

----------------------------

14. கண்ணீரும், புன்னகையும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பது அபூர்வம்,வாழ்வின் மறக்க முடியாத அந்த சந்திப்பு உன்னுடனான ஒரு சந்திப்பில் நிகழும் 

--------------------------------

15. பெற்றோரை எதிர்த்து செய்த காதல் திருமணங்கள் 10% என்றால், பெற்றோர் மனம் நோகக்கூடாது என்பதற்காக பிரிந்த காதல் 50 % 

----------------------------


Piddling

16. வாய்ப்புகள் நம்மைத்தேடி வரும்போது அதன் முக்கியத்துவம் நாம் உணர்வதில்லை, நம் கை விட்டு நழுவிய பின் தான் உணர்கிறோம்

----------------------------

17. க்ரைம்கதை எழுதுபவர்களை யாரும் கொலை செய்த அனுபவம் உண்டா? என கேட்பதில்லை, ஆனால் கவிதை எழுதுபவர்களை காதல் அனுபவம் உண்டா? என கேட்கிறார்கள்

-------------------------
18. காதலிப்பது யாராக இருந்தாலும் கஷ்டப்படுவது நான் தான் - மொபைல் ஃபோன் # SMS

--------------------------------

19. உண்மை, தூய்மை, சுய நலமின்மை இந்த 3ம் அமையப்பெற்ற ஒருவனை இந்த உலகமே எதிர்த்தாலும் எதுவும் செய்ய முடியாது # காலண்டரில் கண்டது

-------------------------


20.பொறுப்பை ஏற்றுக்கொள்வதுதான் ஒருவரின் இதயத்தை ஆக்ரமிக்க உதவும் சிறந்த ஆயுதம்

-------------------------------


Art by Erik Johansson