
---------------------
2. ஏராளமான ரணங்களை தொடர்ந்து அளித்துக்கொண்டு இருக்கிறாய்! உன் ஞாபகார்த்தமாய் பின்னாளில் தழும்புகளாய் அவை மிளிரக்கூடும்
-----------------
3. அன்பு என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்பவள் நீ! உன் உள்ளம் முழுவதையும் அன்பால் நிரப்புபவன் நான்! ஏற்றுக்கொள்ளாமல் நீ! தேற்றிக்கொள்ளும் நான்
----------------------------
4. என் அப்பா என்னிடம் காட்டிய கண்டிப்புகளை பாதியாக்கி, காட்டிய அன்பை டபுளாக்கி என் மகளிடம் அன்பாகப்பொழிகிறேன்
---------------------------------
5. யாராலும் சொல்லித்தரப்படாமல்,கற்பிக்கப்படாமல்,வழி நடத்தப்படாமல், தானாகவே பற்றிக்கொள்வதே ஒழுக்கம்
-----------------------------------
Synchronized Dance


6. நீ வீட்டை விட்டு கிளம்புகையில் அதீத ஒப்பனையுடன் செல்கிறாய்! நான் உன்னுடன் வருவது போலே அதீத கற்பனையுடன் வருகிறேன்
----------------
7. ஆண்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள ஃபிகர்களை ஃபாலோ பண்ணாமல் இருப்பதில்லை # நீதி - ஆண் ஒரு வெள்ளந்தி
-----------------------
8. வெளியூர் போகும் நாட்களிலெல்லாம் வீட்டில் தனக்காக ஒரு உயிர் காத்திருகிறது என்பதை நினைவில் கொண்டால் ஆணுக்கும் கற்பு சாத்தியமே!
---------------------------------
9. ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் எனும் விதியின்படி என் சுய மரியாதையை இழந்து உன் அன்பை பெறுகிறேன்
--------------------------------
10. உயர் திணையான என்னை அஃறிணை ஆக்கினாய், நான் ஒரு நாய்க்கு உரிய நன்றியுடன் உன் அவமானங்களை கடந்து செல்கிறேன்
---------------------

11. நீ கிடைக்கவில்லை என்பதற்காக நான் இறக்கப்போவதும் இல்லை, உன்னை, உன் நினைவுகளை இழக்கப்போவதும் இல்லை
-----------------------------
12. நடிகருடன் கள்ளத்தொடர்பு : நடிகை நிகிதாவுக்கு 3 ஆண்டு நடிக்கத் தடை!! # ஓக்கே சார், நடிக்கலை, கவர்ச்சி டான்ஸ் மட்டும் ஆடலாமா?-நிகிதா
-----------------------------------
13. கெட்ட வார்த்தையால் திட்டி மிரட்டுகிறார்கள்- ஷகீலா புகார் # விடுங்க, ஏற்கனவே நீங்க கேட்ட வார்த்தைகள் தானே?
-----------------------------
14.சென்சார் போர்டு ஓவர் கண்டிஷன்பா
எப்படி சொல்றே?
, ஆயுதங்களை அனுமதிக்க முடியாதுன்னு விஜய்யின் வேலாயுதம் பட டைட்டிலை வேல்னு சுருக்கிட்டாங்களாம்
------------------------
15. அரசியல் பிடிக்காது, ஆனா அரசியல்வாதி பிடிக்குமா? எப்படி?
குடும்பம் பிடிக்காது, ஆனா குடும்பப்பெண்கள் பிடிக்குதே அந்த மாதிரி
--------------------------

16. உங்களூக்கும் உங்க மனைவிக்கும் ஏன் வேவ் லெங்க்த் செட் ஆகலை?
அவளுக்கு டாங்க் லெங்க்த் ஜாஸ்தி ,வாய் நீளம்ப்பா!
-------------------
17. தலைவரோட லொள்ளூக்கு அளவே இல்லை.
ஏன்?
இனி அனைத்து ஜெயில்களிலும் ஸ்விஸ் பேங்க் ஏ டி எம் வசதி வேணும்னு ஆர்ப்பாட்டம் பண்றாரே?
---------------------------
18. தலைவரோட பொண்ணுக்கு பந்தா ஜாஸ்திய்யா,
ஏன்?
தான் பூப்பெய்திய நாளைக்கூட “வயசுக்கு வந்த ரவுசு”ன்னு போஸ்டர் ஒட்டி கொண்டாடனும்னு அடம் பிடிக்குதே?
------------------------------
19. என் வாழ்வில் விளையாடிய பெண் என்பதால் நீ விளையாட்டுத்தனம் மிக்க பெண் ஆகி விட மாட்டாய்
--------------------------------
20.டியர், எனக்கு கோபம் வர்ற மாதிரி வேணும்னே நடந்துக்கறீங்களே, அடிக்கடி, அது ஏன்?
கோபம் வந்தா உன் கன்னங்கள் சிவக்குமே?
