தொகுப்பாளினி போட்டிருந்த டிரஸ் பற்றி சொல்லியே ஆகனும்.சமீபத்துல இவ்வளவு கேவலமான டிரஸ்ஸை நான் பார்க்கவே இல்ல.(அதான் இப்போ பார்த்துட்டியே ? அப்புறம் என்ன?)பொண்ணுங்க மாடர்ன் டிரஸ் போடறது தப்பே இல்லை.. ஆனா அது அட்ராக்ட்டிவ்வா இருக்கனும்.சரி.. விடுங்க.. இதுக்கு மேல ஏதாவது சொன்னா அது எங்க இஷ்டம்..நீ விமர்சனம் பண்ண வந்தது நிகழ்ச்சியையா? டிரஸ்ஸையா? அப்படிம்பாங்க.. ஏற்கனவே நமக்கு ஏழரை நடக்குது.. ( அது ஏன் நடக்குது..? சீக்கிரம் ஓடிட்டா தேவலை)
1. ராகேஷ் - 50 -50 ( ஃபிஃப்டி ஃபிஃப்டி)
பில்லா,ரன் லெவலுக்கு பில்டப் மற்றும் ஃபைட் சீனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட முதல் குறும்படம் என்ற அளவில் இது முக்கியமான படம்.எனக்கு தெரிந்து ஒரு ஷார்ட் ஃபிலிமில் இந்த அளவு பர்ஃபெக்ட் ஃபைட் சீன் வந்ததே இல்லை. அதே போல் ஹீரோ பில்டப்புக்கான ஹம்மிங்க் மியூசிக்,பில்டப் பேக்ட்ராப் எல்லாம் கலக்கல்.ஆனால் கதை தான் துக்ளியூண்டு.
ஒரு கேங்க்ஸ்டர்ஸ் குரூப்பில் பண பரிவர்த்தனையில் ஒரு கோல்மால் நடக்குது. ஹீரோ போய் அந்த பணத்தை வாங்கி வருகிறார். இதான் கதை.ஆனா எடுத்த விதம் பக்கா..
சாக்லேட் பேபி மாதிரி முகம் வைத்திருக்கும் ஹீரோவை நீ கொயந்தை பையண்டா என சீண்டி சீண்டியே அவனை தூண்டி விடுகிறார்கள். அவன் தனி ஆளாக கேங்க்ஸ்டர் முகாம் போய் ஃபைட் பண்ணி பணத்தை மீட்டு வருகிறான்.
இதற்கு டைட்டில் ஏன் 50 - 50 வைத்தார்கள் என தெரியவில்லை. நான் சாதா அல்ல ,இப்புடுச்சூடு கண்ணா,நான் பார்க்கத்தான் பப்பா அடிச்சா டாப்பா மாதிரி டப்பிங்க் வாசனை அடிக்கும் டைட்டில் வைத்திருக்கலாம்.ஒளிப்பதிவு ,எடிட்டிங்க் போன்ற தொழில் நுட்பங்கள் ரசிக்க வைத்தது. இந்த படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணி புரிந்த பிரபுக்கு பெஸ்ட் டெக்னீஷியனுக்கான பரிசு கிடைத்தது சந்தோஷம்.
2. அருண்குமார் - கையில் எடுக்க வேண்டுமா?
அண்ணன் மிஸ்கின்னின் தீவிர ரசிகர் போல . பெரும்பாலான ஷாட்ஸை எல்லாம் அவர் மாதிரியே கேமரா கோணங்கள் வைத்து எடுத்தாரு. கால்கள் மூலம் கதை செல்லும் திசை சொல்வது..
ஒரு அப்பார்ட்மெண்ட்ல ஒரு தம்பதி, பக்கத்து வீட்ல ஒரு போலீஸ் ஆஃபீசர் பக்கத்து வீட்டு தம்பதி கல்யாண நாள் அன்று கணவன் வெளில போனதும் மனைவியை போலீஸ் ஆஃபீசர் பலாத்காரம் பண்ண அதை அந்த போலீஸ் ஆஃபீசரின் நடவடிக்கையை செல்ஃபோனில் படம் பிடித்த பெண்ணை அவர் மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில் போட்டுத்தள்ள முயலும்போது இறந்த மனைவியின் கணவன் பழிக்குப்பழி வாங்குகிறான்.
இந்தப்படம் கிட்டத்தட்ட 30 நிமிஷப்படமா எடுத்தாத்தான் புரியும்.. டைரக்டர் ஏகப்பட்ட காசிகளை ஷூட் பண்ணிட்டு எடிட்டிங்க்ல தடுமாறி இருக்கறது நல்லாவே தெரியுது.இதுக்கு என்ன பண்ணனும்னா 8 நிமிஷப்படத்துக்கு உண்டான மாதிரி சிம்ப்பிளா சின்ன படமா எடுத்துக்கனும்.சும்மா கசாமுசான்னு அரை மணீ நேரப்படமா எடுத்துட்டு அதுக்குப்பிறகு 7 நிமிடப்படமா எடிட்டிங்க் பண்ணுனா எடுத்தப்ப இருந்த எஃப்ஃபக்ட் கிடைக்காது.
இந்தப்படத்துல ஒரு பாராட்டத்தக்க விஷயம் கணவன், மனைவி ஊடல் கொண்ட நிலையில் கணவ்ன் ஆஃபீஸில் செகரட்டரி ரூட் போடறப்ப கணவன் அவளை தவிர்ப்பது மாதிரி காட்னது... ஆண்களெல்லாம் காலரை தூக்கி விட்டுக்க ஒரு சான்ஸ்.கதை இந்த திசைல தான் போகுதுங்கறதை டைவர்ட் பண்ண அந்த சீனை இயக்குநர் வெச்சிருக்கனும். நல்ல உத்தி..
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்காக சட்டத்தை கையில் எடுக்க வேண்டுமா? என்பது தான் கதையின் தீம் என்றாலும் டைட்டில் எஸ் ஏ சந்திர சேகர் காலத்தில் எடுத்த பட தலைப்பு மாதிரி சுரஹ்ட்தே இல்லாமல் இருக்கு. இந்தப்படத்துக்கு பக்கத்து வீட்டு பரிமளா,ஃபிகரு இங்கே.. மர்டர் எங்கே? இப்படி டைட்டில் வெச்சிருக்கலாம்.. ( இதை சம்பந்தப்பட்ட டைரக்டர் படிச்சா இப்படி கேவலமா டைட்டில் வைக்கறதுக்கு தான் வெச்ச டைட்டிலே தேவலாம்னு நினைப்பாரோ/? ஹி ஹி )
இந்தப்படத்துல குறிப்பிட்டு சொல்ல வேண்டிய முக்கிய அம்சம் ஹீரோயின் அம்சமா இருந்தாங்க.. ( பார்த்தீங்களா? ஃபிகர் நல்லாருந்தா மரியாதை தானா வருது..# தமிழேண்டா)அதுவும் கல்யாண நாள் அன்னைக்கு அவரது மங்கள கெட்டப் செம.. (சரி சரி கர்ச்சீப் எடு).இந்தப்படத்துக்கு ஃபைட் சீன்ல பேக் டிராப்ல காயத்ரி மந்திரம் போட்டது நல்லாருந்ததுன்னு கே பி சார் கமெண்ட் பண்ணுனார்.

3. சரத் ஜோடி - புழுதி ஆட்டம்
டைட்டிலைப்பார்த்ததுமே இது வில்லேஜ் சப்ஜெக்ட்னு நினைச்சது சரி தான். செம நேட்டிவிட்டியோட எடுக்கப்பட்ட இந்தப்படத்துக்கு முதல் பரிசு கிடைச்ச துல ஆச்சரியம் இல்லை.பசங்க பட ஸ்டைலில் எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான படம்,. கிரிக்கெட் விளையாடற டீம்ல ஒரு சண்டை. கிரிக்கெட் பேட்டை ஒரு குரூப் ல ஒரு பொடியன் எடுத்துட்டு ஓடிடறான்.அவனை துரத்திட்டு போய் 3 பசங்க மீட்கறப்ப அவங்க சைக்கிள் எதிரி குரூப் கிட்டே சிக்கிடுது.. ஆட்டம் தொடரும்னு சப் டைட்டிலோட படம் முடியுது..
இதுல பாராட்ட வேண்டிய முக்கிய அம்சம் படப்பிடிப்பு நடந்த இடம். பக்கா சேரியை செலக்ட் பண்ணி கேமரா வை லாங்க் ஷாட்ல வெச்சு லெங்த்தி
.ஷாட்டா எடுத்து தள்ளின டைரக்டரை பாராட்றதா? ரொம்ப இயல்பா சேரிப்பசங்க மாதிரியே பாடி லேங்குவேஜ்,வசன உச்சரிப்புல கலக்குன சின்னபசங்களைப்பாராட்றதா?செம கலக்கல்.
எல்லா சின்னப்பசங்களையும் மேடை ஏற்றி கவுரவிச்சாங்க.. ஆனா செம கலக்கு கலக்குன அந்த குண்டு பையன் மிஸ்ஸிங்க்..
இந்தப்பட டைரக்டர் மேடைல பலராலும் பாராட்டப்பட்றப்ப அவர் காட்டிய நிதானம் ஆச்சரியப்பட வெச்சுது.. ரொம்ப சிம்பிளா ஸ்மைலிங்கோட அதை எதிர் கொண்டது அண்ணன் ரொம்ப பக்குவப்பட்டிருக்கார்னு தோணூச்சு.. வெல்டன்..
டிஸ்கி - மேலே உள்ள ஸ்டில்ஸ்களுக்கும், குறும்படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சும்மா ஒரு ரசனைக்காக....

