Showing posts with label Unmadham (2026)-மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர்). Show all posts
Showing posts with label Unmadham (2026)-மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர்). Show all posts

Friday, September 04, 2026

Unmadham (2026)-மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர்) @Sony LIV

 


கேரளாவில் 31/7/2026 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் தமிழகத்திலும் ஆங்கில சப் டைட்டிலுடன்  முக்கிய நகரங்களில் வெளியாகி இருக்கிறது.மலையாளப்படங்களுக்கு என தமிழகத்தில்  ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.


இளவீழா பூஞ்சிரா(2022)என்ற படத்துக்காக சிறந்த அறிமுக இயக்குநர் விருது பெற்ற ஷாஹி கபீர் தான் இந்தப்படத்தின் திரைக்கதையை எழுதி இருக்கிறார்.நிஜத்தில் இவர் ஒரு போலீஸ்காரர்.இவர் திரைக்கதை அமைத்த அனைத்துப்படங்களும் போலீஸ் பின்னணிக்கதைகளே.இதுவரை சொல்லப்படாத கேஸ் டீட்டெயிலிங் இவர் கதைகளில் இருக்கும்.

ISHQ(2019) என்ற வித்தியாசமான திரில்லர் படத்தின் எடிட்டர் கிரண்தாஸ் அறிமுக இயக்குநராகப்பணியாற்றிய படம் இது என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

படத்தின் டைட்டிலான உன்மாதம் என்பதற்கு தமிழில் உன்மத்தம்,ஒரு மாதிரி வெறித்தனம், என்று அர்த்தம்.குழப்பமான,வேகமான,தெளிவில்லாத மன நிலையைக்குறிக்கும் சொல் இது.



ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள்.ஆனால் அவனுக்கு அந்த வேலையில் பெரிய ஆர்வம் இல்லை.சினிமா இண்டஸ்ட்ரியில் புகுந்து ஒரு சினிமா டைரக்டர் ஆகி கேரளாவையே கலக்க வேண்டும் என்பது தான் அவன் ஆசை.அவனுக்கு மனைவி, ,குழந்தைகள் உண்டு.மனைவியும் வேலைக்குப்போகிறாள்.

நாயகன் மெடிக்கல் லீவ் போட்டு விட்டு சினிமா சான்சுக்காக அலைகிறான்.ஆனால் எதுவும் செட் ஆகவில்லை.கேரக்டர் டிசைன் எல்லாம் ஓக்கே,ஆனால் கதை திரைக்கதை  சரியில்லை என்று சொல்லி விடுகிறார்கள்.

வீட்டு க்கு வந்து மனைவியிடம் விஷயத்தை சொன்னதும் கடுப்பாகிறாள்.ஒழுக்கமா வேலைக்குப்போய் பொழப்பைப்பாரு என்கிறாள்.


நாயகன் மெடிக்கல் லீவைக்கேன்சல் செய்து விட்டு டியிட்டியில் ஜாயின் பண்ணுகிறான்.அவனுக்கு வேறு ஒரு ஸ்டேஷனுக்கு ட்ரான்ஸ்பர் கிடைக்கிறது.

புதிதாக டியூட்டியில் ஜாயின் செய்த நாயகன்  தெரியாத்தனமாக.  ஒரு கேஸ்கட்டை  ஓப்பன் செய்து விடுகிறான்.பல வருடங்களாகக்கிடப்பில் போடப்பட்ட கேஸ் அது.அந்தக்கேசைப்பொறுத்தவரை அது ஒரு சபிக்கப்பட்ட கேஸ்.அந்தக்கேஸ் கட்டை யார் தொட்டாலும் அவனுக்கு ஏதாவது 
கெட்ட சம்பவம் நடக்கும் என்பது நம்பிக்கை.2019ல் நடந்த கேஸ் அது.7 வருடங்களுக்குப்பின் இப்போது நாயகன் அதை ஓப்பன் செய்கிறான்.

ரயில் மோதி இறந்ததாக சொல்லப்படும் ஒரு பெண்ணின் வழக்கு அது.உண்மையில் அது கொலை தான்.அந்தபெண் கொலை  செய்யப்பட்ட அதே நாகில் அவளது காதலனும் கொலை செய்யப்பட்டிருக்கிறான்.இது ஆணவக்கொலை அல்ல. வேறு ஒரு விஷயம் என்பதை நாயகன் கண்டுபிடிக்கிறான்.இந்தக்கேசை நாயகன் எப்படி டீல் செய்கிறான் ?என்பது மீதித்திரைக்கதை.


நாயகனாக குஞ்சாக்க போபன் பிரமாதமான நடிப்பு.கலக்கி விட்டார்.போலீஸ் கான்ஸ்டபிளாக அவர் அண்டர்பிளே ஆக்டிங்க் செய்யும்போதும் சரி.ஆவி புகுந்த உடம்பை ஆடியன்சுக்கு உணர்த்தும் இடத்திலும் செமயான நடிப்பு.

நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் கச்சிதமான நடிப்பு.
படத்தில் வரும் மற்ற அனைத்துக்கேரக்டர்களும்  பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

படத்தின் இயக்குநர் கெஸ்ட் ரோலில் வருகிறார்.


ஒளிப்பதிவு,எடிட்டிங்க் ,பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் அருமை.


சபாஷ் டைரக்டர்

1 நாயகன் படத்தின் பின் பாதியில் கையில் எடுக்கும் அந்த கேஸ் கதையையே புரொடியூசரிடம் சொல்லி ஓக்கே வாங்குவது ,அந்த கேஸ் டீட்டெய்லிங்,நாயகன்- நாயகி குடும்பப்பிரச்சனைகள். இந்த மூன்று விஷயங்களையும் நான் லீனியர் கட்டில் மாற்றி மாற்றி சொன்ன விதம் அருமை.

2  நாயகனின் உடம்பில் கொலை செய்யப்பட்ட கீர்த்தனாவின் ஆன்மா புகுந்து கொள்வதன் தாக்கத்தை நடிப்பில் நாயகன் கொண்டு வந்த விதம் அபாரம்.அவரது உடல் மொழியும் அருமை.

3 ஒளிப்பதிவு ,சவுண்ட் டிசைனிங்கில் மிரட்டி விட்டார்கள்.குறிப்பாக ரயில் போகும் காட்சியில் திடீரென வரும் அந்த வினோத ஒலி கலக்கல் ரகம்..

4 கொலை செய்யப்பட்ட  கீர்த்தனா வுக்கு ஒரு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்கிறாள் என்ற ட்விஸ்ட் அருமை.

5 கோர்ட் சீக்வன்சில் நாயகனின் நடிப்பு அருமை.

லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 மெயின் கதைக்கு வரும்போது கிட்டத்தட்ட இடை வேளையே வந்து விடுகிறது.ரொம்பவும் இழுத்து விட்டார்கள்.

2. பின் பாதியில் வரும் அந்த கேஸ்க்கான கதைக்கரு அமீர்கான் நடிப்பில் வெளியான TALAASH (2012) படத்தில் நாம் பார்த்ததுதான். அதே போல் மிஷ்க்ன் இயக்கத்தில்  வந்த பிசாசு(2014) கதையிலும் கொலை செய்யப்பட்டவரின் ஆவி கொலையாளியைக்கண்டு பிடிக்க உதவும்.

3 க்ரைம் திரில்லர் கதை மாதிரி கொண்டு போய்  சைக்கலாஜிக்கல் டிராமாவாக மாற்றி, சூப்பர் நேச்சுரல்  ஹாரர் திரில்லராக முடித்திருப்பது சிலருக்குப்பிடிக்காமல் போகலாம்.

4 நாயகனுக்கு உதவி செய்யும் கீர்த்தனா வின் ஆவி எதற்காக 7 வருடங்கள் காத்திருந்தது?என்பதற்கு பதில் இல்லை.

5 இவ்வளவு பில்டப் கொடுத்து விட்டு கீர்த்தனாவின் கொலைக்கான காரணம் அரதப்பழசானது.இன்னமும் புதியதாக யோசித்திருக்கலாம்.


அடல்ட் கண்ட்டெண்ட்  வார்னிங். 16+



CPS கமெண்ட்- மலையாளப்படங்கள் பார்த்துப்பழக்கம் உள்ள பொறுமைசாலிகள்,க்ரைம் திரில்லர் மூவி ரசிகர்கள் தாராளமாகப்பார்க்கலாம். ரேட்டிங் 3/5