Showing posts with label TOH TI ANI FUJI ( MAIN WOH AUR FUJI) 2026 -மராத்தி /தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label TOH TI ANI FUJI ( MAIN WOH AUR FUJI) 2026 -மராத்தி /தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Wednesday, May 20, 2026

TOH TI ANI FUJI ( MAIN WOH AUR FUJI) 2026 -மராத்தி /தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ சோனி லைவ்

 



TOH TI ANI FUJI ( MAIN WOH AUR FUJI) 2026 -மராத்தி /தமிழ் - சினிமா விமர்சனம்  ( ரொமாண்டிக் டிராமா ) @ சோனி லைவ்


இந்த மராத்திப்படத்தின்  டைட்டிலுக்கு   நான் , அவர்  மற்றும் பியூஜி   என்று  அர்த்தம்  .6/1/2026 முதல் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இந்தப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கில் 16/4/2026 முதல் காணக்கிடைக்கிறது.இதன் ஹிந்தி வெர்சன் 10/4/2026 முதல் வெளியானது.

இந்தப்படத்துக்கான முதல். தமிழ் விமர்சனம் இது தான்.

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகி ஜப்பானில் டோக்கியோவில் 7 ஆண்டுகளுக்குப்பின் நாயகனை சந்திக்கிறாள். 

நாயகன்,நாயகி இருவரும் காதலர்கள்.நாயகனின் அப்பா மிகப்பெரிய செல்வந்தர்.ஆனால் ஒரு மார்க்கமானவர்.தன் மனைவியையே அதாவது நாயகனின் அம்மாவையே சரியாக மதிக்காதவர்.

நாயகன் தன் காதலியான நாயகியைத்தன் வீட்டுக்கு அழைத்து வந்து தன் பெற்றோருக்கு அறிமுகப்படுத்தும்போது நாயகனின் அப்பா நாயகியின் ஏழ்மையை குத்திக்காட்டுகிறார்.

இதனால் கடுப்பான நாயகன் பெற்றோரைப்பிரிந்து ஒரு தனி பிளாட்டில் நாயகி உடன் லிவ்விங்க் டுகெதர் வாழ்க்கை வாழ்கிறான்.

நாயகனுக்கு வேலை இல்லை.நாயகி தான் வேலைக்குப்போய் சம்பாதித்துக்குடும்பத்தை நடத்துகிறாள்.உன் தன்மானத்தை விட்டு விட்டு  அப்பாவிடம் பணம் கேள் என்று நாயகி சொன்னதும் நாயகன் சைக்கோ போல் கத்துகிறான்.

இதனால் நாயகி நாயகனுக்குத்தெரியாமல் நாயகனின் அப்பாவிடம் பண உதவி பெறுகிறாள்.இது நாயகனுக்குத்தெரிய வந்ததும் வீட்டில் பூகம்பம் வெடிக்கிறது.

நாயகன் ,நாயகி இருவரும் பிரிகிறார்கள்.

7 வருடங்களுக்குப்பின் இப்போது தான் சந்திக்கிறார்கள்.நாயகி ஒரு மகனுடன் வசிக்கிறாள்.அந்த மகன் நாயகனுக்குப்பிறந்தவனா?அல்லது நாயகியின் தற்போதைய கணவனுக்குப்பிறந்தவனா?என்பது சஸ்பென்ஸ்.

இதற்குப்பின் நாயகி எடுக்கும் முடிவு என்ன?என்பது க்ளைமாக்ஸ்.

நாயகி ஆக ம்ரின்மயீ காட்போலே பிரமாதமாக நடித்திருக்கிறார்.இவரது ஆடை வடிவமைப்பும்,ஒப்பனையும் அருமை.காஸ்ட்யூம் டிசைனர் ,மேக்கப்மேன் இருவருக்கும் நல்ல எதிர் காலம் உண்டு.நாயகி சந்தோஷமாக இருக்கும்போதும்,சோகத்திலும்,கோபத்தில் என அனைத்து உணர்வுகளிலும் நம்மை ரசிக்க வைக்கிறார்.

நாயகன் ஆக லலித் பிரபாகர் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.இவர் சைக்கோ போல் நடந்து கொள்ளும்போது இந்தக்கேரக்டரில் புரியாத புதிர் ரகுவரன் நடித்திருந்தால் எவ்வளவு பிரமாதமாக இருக்கும்?என்பதை நினைக்க வைக்கிறார்.

படத்தில் நடித்த மற்ற கலைஞர்கள் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

இயக்கி இருப்பவர் மோஹித் டஹால்கர்.ஒளிப்பதிவு பிரமாதம்.டோக்கியோவின் அழகைக்கண் முன் நிறுத்துகிறார் கேமராமேன்.பெரும்பாலான காட்சிகள் டோக்கியோவில் தான் படமாக்கப்பட்டு இருக்கிறது

நான் லீனியர் கட் டில். திரைக்கதை நிகழ்காலம் ,கடந்த காலம் என மாறி மாறி பயணிக்கிறது.ஒரே நேர் கோட்டில் கதை சொல்லி இருந்தால் இவ்வளவு சுவராஸ்யம் இருந்திருக்காது.

சபாஷ் டைரக்டர்

1 நாயகன் ,நாயகி இருவரும் எப்படிக்காதலித்தார்கள்?யார் காதலை முதலில் வெளிப்படுத்தியது?காதலை ஏற்றுக்கொண்ட தருணம் எது?போன்ற சுவராஸ்யமான சம்பவங்கள் எதையும் காட்டாமலேயே காதல் கதையை ரசிக்கும்படி சொல்ல முடியும் என்பதை நிரூபித்த விதம்

2. நாயகி நாயகனின் அப்பாவிடம் தான் ட்ரான்ஸ்லேட்டர் வேலை செய்வதாக சொல்லும்போது அவர் கேட்கும் கேள்விகளும் ,நாயகி கொடுக்கும் பதில்களும் ,நாயகனின் ரீ ஆக்சனும் அருமை

3.  நாயகன் சொன்னபடி சொன்ன விதத்தில் நாயகி வெங்காயம் வெட்டவில்லை ,வேறு மாதிரி கட் பண்ணி விட்டார் என்பதற்காக தொடங்கும் சண்டை நம்ப முடியாத அளவுக்கு வளர்ந்து விசுவரூபம் எடுப்பது பயங்கரம்.அந்தக்காட்சியைப்பிரமாதமாகக்காட்சிப்படுத்தி இருந்தார் இயக்குநர்

4 நாயகனுக்கும் ,நாயகிக்கும் பிரண்ட்சுடனான பார்ட்டியில் சண்டை வருவது நம்பகத்தன்மையுடன் இருந்தது

5 கே பாக்யராஜ் இயக்கிய அந்த ஏழு நாட்கள் படத்தின் அபிஷியல் ரீமேக் தான்  இது என்பது நம்மால் நம்பவே முடியாதபடி  காட்சிகளை வித்தியாசமாக தொகுத்த விதம் அருமை


ரசித்த வசனங்கள்


1  உன் பின்னாடி இதுவரை  இரண்டு பசங்கதான் சுத்தத்தினாங்களா?

 என் பின்னாடி மட்டுமில்லை , என்  அம்மாவுக்கும் சேர்த்து ரூட்  விட்டாங்க


2  ஒரு  மனுஷனோட  உண்மையான குணத்தை மாத்த முடியாது 

3     அவளைக்கேள்வி கேட்கறீங்களா ? விசாரணை  பண்றீங்களா? 

4 எல்லாருக்கும் சக்சஸ் ஸ்டோரிதான் இருக்கனும்னு  அவசியம் இல்லை.

5 யாருக்காக நம்மை நாம் நிரூபித்துக்கொள்ள வேண்டும்?

6. பணத்தோட அருமை உனக்குத்தெரியலை.அதை சம்பாதிக்க ஜனங்கள் ராப்பகலாக்கஷ்டப்படறாங்க.

7 நான். அழும்போது என் அம்மா அழுகை நல்லது என சொல்லி இருக்காங்க

8. என் கிட்டே கொடுக்க எதுவுமே இல்லை,எல்லாமே இழந்துட்டேன்.

உன் கிட்டே எனக்கு என்ன கிடைச்சுது?

9 நான் உனக்கான பெஸ்ட்டை சொல்றேன்,ஆனா உனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

10  நீ என்னை விட்டுப்போனபோது அவங்க நம் உறவை போஸ்ட்மார்ட்டமே பண்ணிட்டாங்க.

11ஒரே வீட்டில் ,ஒரே அறையில் நாம் இருவரும்  இரண்டு வாழ்க்கை வாழ்ந்திருக்கோம்.

12 ஒரு தடவையாவது என் வலியை உணர்ந்து என் கிட்டே நீ சாரி கேட்டிருக்கியா?

13. அதீதக்காதல்,அதீத வெறுப்பு  இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லக்கஷ்டமா இருக்கு.

14  ஒரே கடந்த காலத்தை  நாம் இருவரும் வேறு வேறு மாதிரி வாழ்ந்திருக்கோம்


லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. முழுப்படத்திலும் 90% காட்சிகளில் நாயகன் ,நாயகி இருவர் மட்டுமே இருப்பதால் எது பிளாஸ்பேக் சீன்?எது தற்காலம்?என்பதில் குழப்பம் வருகிறது.இருவரும் சண்டை போட்டுக்கிட்டு இருந்தா அது கடந்த காலம்,சந்தோஷமாப்பேசிட்டு இருந்தா நிகழ் காலம்னு  புரிஞ்சுக்க வேண்டி இருக்கு.

2 நாயகி நாயகன் தன்னை விட்டுப்பிரிந்த பின் போன் பண்ணி நான்  கர்ப்பமா இருக்கேன் என்கிறார்.அதற்குப்பின் ஏழு வருடம் கழித்து சந்திக்கும் நாயகனின் முதல் கேள்வி இது நம் குழந்தையா?என்று தானே இருக்க வேண்டும்?ஆனால் நாயகன் அப்படிக்கேட்கவே இல்லை.

3 நாயகன்,நாயகி இருவரும் வறுமையில் இருப்பதாக வசனத்தில் தான் சொல்கிறார்கள்.ஆனால் காட்சி அமைப்பில் 50,000 ரூபாய் வாடகை உள்ள பிளாட்டில் மிக வசதியாக வாழ்கிறார்கள். பைவ் ஸ்டார் ஹோட்டலில் அடிக்கடி சாப்பிடுகிறார்கள்.பணம் ஏது ?



அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். - 16+


சி பி எஸ் பைனல் கமெண்ட்-   பிரச்சனைகளை சந்திக்கும் காதலர்கள் கதை , ஆனால் வில்லன் இல்லை,அடிதடி இல்லை.ரசிக்கலாம்.ரேட்டிங்க். 3/5