Showing posts with label S.Saraswathi(2026)-தெலுங்கு-சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label S.Saraswathi(2026)-தெலுங்கு-சினிமா விமர்சனம். Show all posts

Saturday, May 16, 2026

S.Saraswathi(2026)-தெலுங்கு-சினிமா விமர்சனம் (லீகல் திரில்லர்)@அமேசான் பிரைம்

 


வரலட்சுமி சரத்குமாரின் சொந்தப்படம் இது.திரைக்கதை ,இயக்கம் கூட அவர் தான்..இவர் இயக்குநர் ஆகக்களம். இறங்கும் முதல் படம் இது.நாயகியும் அவரே! 6/3/2026 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது 3/4/2026 முதல்  அமேசான் பிரைம் தளத்தில் காணக்கிடைக்கிறது .தமிழ் டப்பிங் இல்லை.ஆங்கில சப் டைட்டில் உண்டு.


ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகி ஒரு நர்ஸ்.அவருக்கு 12 வயதில் ஒரு மகள்.காலையில் மகளை ஸ்கூலில் விட்டு விட்டு நர்ஸ் டியூட்டி பார்த்து விட்டு மாலையில் மகளை பிக்கப் செய்யப்போனால் அங்கே மகள் இல்லை.

விசாரிக்கும்போது நாயகிக்கு அதிர்ச்சி.அவரது மகள் அந்த ஸ்கூலிலேயே படிக்கவில்லை என்று டீச்சர்சும் ,நிர்வாகமும் சொல்கிறது.

குழப்பம் அடைந்த நாயகி வீட்டுக்கு வருகிறாள்.அப்போது அவருக்கு ஒரு போன் கால் வருகிறது.போனில் அவரது மகள் தான்.அம்மா,நான் ஸ்கூலில் பிரின்சிபால் ரூமில் தான் இருக்கிறேன்.என்னை வந்து காப்பாற்றுங்கள் என்று கதறுகிறாள்.

நாயகி பதட்டம் அடைந்து ஸ்கூலுக்குப்போனால் அங்கே மகள் ரத்த வெள்ளத்தில்  இருக்கிறாள்.3 நபர்களால் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அறிகிறாள்.


அடுத்த நாள் போலீஸ் விசாரணை நடக்கும்போது உங்கள் மகள் எங்கே? என்று கேட்டதும் நாயகி எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.அதனால் இறந்த மகளை ஒரு இடத்தில் புதைத்து விட்டேன் என்கிறார்.நாயகி சொன்ன இடத்தில் தோண்டினால் அங்கே பிணம் இல்லை.மகளுக்கு நடந்த கொடுமைக்கு ஆதாரம் இருக்கிறது.ஸ்கூல் பிரின்சிபால் ரூமில் ஒரு செல் போன் பார்த்தேன்.அதில் ஒரு வீடியோ இருந்தது என்று சொல்லவும் ஸ்கூலுக்குப்போனால் அப்படி எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

இப்போது போலீசுக்கும் ,படம் பார்க்கும் ஆடியன்சுக்கும் குழப்பம்.நாயகி மனநலன் பாதிக்கப்பட்டவரா? இல்லை வேண்டுமென்றே நடிக்கிறாரா?மகள் விஷயத்தில் யாரும் பொய் சொல்ல மாட்டார்களே?ஆனால் நாயகி சொல்லும் தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறதே?என்று போலீஸ் குழம்புகிறது.

மேலே நான் சொன்னது முதல் 10 நிமிடக்கதை தான்.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மொத்தத்திரைக்கதையும்.

நாயகி ஆக  வரலட்சுமி சரத்குமார் பிரமாதமான நடிப்பு.ஆனால் அழுகைக்காட்சி உட்பட எல்லாக்காசிகளிலும் அவருக்கு அதீத ஒப்பனை உறுத்துகிறது.

நாயகியின் கணவன் ஆக ஜீவா .சின்ன ரோல் தான்.சரியாக செய்திருக்கிறார்.

நாயகியின் வக்கீல் ஆக பிரகாஷ் ராஜ் கோர்ட்டில் வாதாடும் காட்சியில் கச்சிதம்.

நாயகியின் அம்மாவாக பிரியாமணி நல்ல நடிப்பு.

ஜட்ஜ் ஆக வரும்  ராவ் ரமேஷ் பரவாயில்லை ரகம்.

போலீஸ் ஆபீசர் ஆக வரும
 முரளிசர்மா,மன நல மருத்துவர்களாக வரும் ராதிகா சரத்குமார்,நாசர்  ,மீம்ஸ் கோபி ,ஹரிஸ் பெரோடி என அனைவருமே அவரவர்க்குத்தரப்பட்ட ரோலை சரியாக செய்திருக்கிறார்கள்.

எஸ் தமனின். பின்னணி இசையில் பல காட்சிகள் உயிரோட்டம் பெறுகின்றன.வெங்கட் ராஜனின் எடிட்டிங்கில் படம் விறுவிறுப்பாக நகர்கிறது.

ஏ எம் எட்வின் சக்கே வின் ஒளிப்பதிவில் நேர்த்தியான காட்சிகள் தெளிவாகப்படமாக்கப்பட்டு இருக்கின்றன.

சாய் மாரவ் புரா வின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பவர் வரலட்சுமி சரத் குமார்


சபாஷ் டைரக்டர்

1 நாயகியால் புகார் சொல்லப்பட்ட ஸ்கூல் பிரின்சிபால் கோர்ட்டுக்கு வர அவர் நான் சொன்ன பிரின்சிபால் இல்லை.ஆள் மாறாட்டம் நடந்திருக்கிறது என நாயகி கூற 15 வருடங்களாக இவர் தான் பிரின்சிபால் என தெரிய வர கதை சூடு பிடிக்கும் விதம்

2. கலெக்டர் ஆபீசுக்குப்புகார் கொடுக்கப்போகும் நாயகி அங்கே திடீர் எனக்கலெக்டரைக்கொலை செய்யும் காட்சி யாரும் எதிர் பாராத திருப்பம்

3  நாயகியின் முன்னாள் கணவர் நாயகியை விட்டுப்பிரியக்காரணமே இருவருக்கும் குழந்தை பாக்கியமே இல்லை என்பதால் தான் என்ற உண்மை  வெளி வரும்போது அப்போது நாயகி புகார் கொடுத்த குழந்தை காணவில்லை என்ற ஸ்டேட்மெண்ட்டில் அது யார் குழந்தை ?என்ற கேள்வி எழுவது..செம ட்விஸ்ட்

4 நாயகியின் குழந்தை போட்டோவை நாயகியின் முன்னாள் கணவரிடம்  காட்டி விசாரிக்கும்போது அது நாயகியின் சின்ன வயது போடோதான்  என்று தெரிய வரும்போது வரும் ஷாக்.

5. Fantacy prone Disorder என்ற வியாதியைப்பற்றிப்படித்து அதை திரைக்கதைக்குள் கொண்டு வந்த விதம்


லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் வில்லன்கள் அதை வீடியோ எடுத்து வைத்துக்கொள்வது மடத்தனமான ஐடியா என்றால் அந்த  வீடியோ கேசட்டை அந்த சிறுமியே மாற்றி வைத்து ஒளித்து வைப்பது நம்ப முடியாதது.மூன்று பேர் கண்களில் எப்படி மண் தூவினாள் என்பது காட்சியாகக்காட்டவில்லை.

2 க்ளைமாக்சில் நாயகி சர்வ சாதாரணமாக ஒரு மினிஸ்டரையே கொலை செய்வது. கொஞ்சம் கூட நம்ப முடியாத ,ஏற்றுக்கொள்ள முடியாத காட்சி.

3  மன நலன் பாதிக்கப்பட்டவர் என்பதை அவ்வளவு எளிதாக  ஒரே ஒரு டாக்டர் பரிந்துரைப்படி கோர்ட் ஒத்துக்கொள்ளுமா?என்ன?

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+


சி பி எஸ் பைனல் கமெண்ட். - வித்தியாசமான க்ரைம் திரில்லர் தான். பார்க்கலாம்.ரேட்டிங்க். 3/5


விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு சுவராஸ்யத்தகவல். இந்தப்படத்துக்கு முதலில் சரஸ்வதி என்று தான் டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.ஆனால் சென்சார் அந்த டைட்டிலை  அனுமதிக்கவில்லை.கல்விக்கடவுள் சரஸ்வதி.நாயகி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது போல் காட்சி இருப்பதால் இந்துக்கள் மனம் புண்படும் என சொன்னதால் பின் டைட்டில் எஸ்.சரஸ்வதி என்று மாற்றப்பட்டது.