Showing posts with label ராஜா ரங்குஸ்கி (2018) – சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்). Show all posts
Showing posts with label ராஜா ரங்குஸ்கி (2018) – சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்). Show all posts

Thursday, November 05, 2020

ராஜா ரங்குஸ்கி (2018) – சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)


படத்தோட
  டைட்டில்ல  எதுனா  ட்விஸ்ட்  இருக்கும், என்ன  அர்த்தமா இருக்கும்னு  நானும்  சில  பல  யோசனைகள்  செஞ்சு வெச்சிருந்தேன், கடைசிலபார்த்தா  ஹீரோ  பேரு  ராஜா ,  ஹீரோயின்  பேரு  ரங்குஸ்கி . சப்புனு போய்டுச்சு எனக்கு , அப்பதான்  நம்ம  இளையதளதி  நடிச்ச  கத்தி  பட  டைட்டில்க்கான  ஏ ஆர்  முருகதாசின்  விளக்கம்  நினைவு வந்தது ,  சீமானை விட பெரிய  வடைசுடும்  திலகம்  உலகில்  யாரும்  இல்லைனு  நினைச்சிருந்தேன். ஹீரோ பேரு  கதிரேசன்  , அவரை  சுருக்கமா  எல்லாரும்  கத்தின்னுதான்  கூப்பிடுவாங்களாம், கதிரேசனை  கதிர்னு கூப்பிடலாம்,  ரேஷன்னு கூப்பிடலாம் ,கத்தின்னு  யாராவது  கூப்ட்டு  பார்த்திருக்கமா?

 

ஆனா டைட்டில்ல  வந்த  ஏமாற்றம்  ஹீரோ ஹீரோயினை  ப்ரப்போஸ்  பண்ண  எடுத்துக்கிட்ட  ஐடியாவில் சரியா  போய்டுச்சு , வாலி  படம்தான்  தமிழ்  சினிமா உலகிலேயே  ஹீரோ  ஹீரோயினை  கரெக்ட்  பண்ண  லவ் ஃபெய்லியர்  மாதிரி  பொய்யா  ஒரு கதையை ரெடி  பண்ணி   சொல்லும்  மாறுபட்ட  காட்சி  கொண்டது.

 

 அதே  டைப்ல  இது  வேற  மாதிரி . அதாவது  ஹீரோயின்  கேரக்டர்   யாராவது  செய் அப்டின்னா அதை  செய்ய  மாட்டாப்டி  செய்யாதே  அப்டின்னா  செய்வாப்டி . இந்த  அரிய  தகவலை  பக்  வீட்  ஆண்ட்டி  மூலமா  தெரிஞ்சுக்கிட்ட  ஹீரோ  குரலை  மாற்றி  ஹீரோயினுக்கு   ஃபோன் செஞ்சு  நீ  அவன்  கூட  சுத்திட்டிருக்காதே  , எனக்கு  பிடிக்கல அப்டினு  ஒரு  பிட்டைப்போடறாரு, அந்த  பேக்கு  ஹீரோயின்  உடனே  நீ  என்ன  சொல்றது  நான் அப்டிதான்  சுத்துவேன்னு  ஹீரோவை லவ்வ  ஆரம்பிச்சிடுது


இப்போ  ஹீரோ  ஹீரோயின் கூட பேசிட்டு  இருக்கும்போது ஹீரோயின்க்கு  ஒரு ஃபோன் கால்  வருது . ஹீரோயின்  சொல்லுது . அவன்  தான்  , உன் கூட பேசக்கூடாதுனு  சொல்வானே  அவன்  தான் லைன்ல . அப்டினதும்  ஹீரோக்கு தூக்கி வாரிப்போடுது. இதென்னடா  நாம  உருவாக்குன  கற்பனை  கேரக்டர்  நம்ம  கண்  முன்  உலா  வருதே?  என்ன  மர்மம்?னு திகைக்கறார்

 

ஹீரோ  ஒரு போலீஸ்  கான்ஸ்டபிள் . அவருக்கு  இந்த  லவ்   ஐடியா  கொடுத்த  ஆண்ட்டி  திடீர்னு ஒரு நாள்  கொலை  செய்யப்பட்டு  அவர்  வீட்லயே  கிடக்கறாங்க .   அந்த  டெலிஃபோன்  குரல்  வேற  அப்பப்ப  ஹீரோவை மிரட்டிட்டு இருக்கு அந்த  ஆண்ட்டியை  அடிக்கடி  சந்திச்சது  ஹீரோ தான்  , போலீஸ்க்கு  ஹீரோ  மேல  சந்தேகம்.இதுக்குப்பின்  நிகழ்ந்த சுவராஸ்யமான  சம்பவங்கள்  தான்  படம்,  இது  ஜீ  5   ஓ டி டி ல  கிடைக்குது

 

ஹீரோவா  நடிச்சவர்   சிரீஷ்  முகம்  எல்லாம் நல்லாதான் இருக்கு , ஆனா  முக பாவனைகளை  தேட  வேண்டியதா  இருக்கு .மெட்ரோ  படத்தில்  நல்லா  நடிச்சவர் இதுல ஏன் சொதப்பிட்டார்னு தெரில 

 

ஹீரோயினா  வருபவர் சாந்தினி  முகம்  ஓவல்  ஷேப்ல  இருந்தாலும்   நல்லாதான் இருக்கு . பொதுவா  பெண்களை  நான் குறை  சொல்வதே  இல்லை , இருக்கறதை  ரசிச்சுட்டுப்போய்டறது

 

  சொல்றதுக்குக்கொஞ்சம்  கூச்சமா  இருந்தாலும் மனசுல  பட்டதை  சொல்லிடறேன். ஹீரோயினை  விட  பொதுவா ஹீரோயின்  தோழி  நல்லாருப்பாங்க  , ஆனா  இந்தப்படத்துல  ஹீரோயினை  கரெக்ட்  பண்ண  ஹீரோவுக்கு  ஐடியா  கொடுக்கும்  ஆண்ட்டி  அட்டகாசம். பேரு  அனுபமாவாம். குட் ஒன்

 

ஹீரோவுக்கு  நண்பனா  வருபவர்  ஏதோ  டி வி  ஆர்டிஸ்ட்  அல்லது  ஸ்டேண்ட்  அப்  காமெடியன்னு  நினைக்கறேன். குட்  ஆக்டிங் , நல்ல  பாடி லேங்க்வேஜ். கல்லூரி  புகழ்  வினோத் , சில  கவுண்ட்டர்கள்  நல்லா  செட்  ஆகி இருக்கு  

 கேசை  டீல்  பண்ணும்  ஆஃபீசர்  மனசில்  நடந்த  சம்பவங்கள்  கண்  முன்  ஓடுவது  எப்படினு  விளக்கலை . ஆனா  அந்த  கேரக்டர்  ஸ்கெட்ச்  நல்லாருக்கு, வெல்டன்   ஜெயக்குமார் . இன்ஸ்பெக்டராக  வரும்  ஜானகிராமன்  கூட நல்ல  ஆக்டிங் .  ஓவராலா  பார்த்தா  ஹீரோவைத்தவிர    எல்லாருமே  நல்ல  பர்ஃபார்மென்ஸ்

 

சபாஷ்  டைரக்டர்

1   கார்த்திக்  காலிங்  கார்த்திக்  படத்தின்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டை  கொஞ்சம்  பட்டி டிங்கரிங்  பண்ணி  இந்தப்படத்துல  யூஸ்  பண்ணிய வித்கம்  அருமை 


2    பின்னணி  இசையில் கலக்கி இருக்கும்  யுவன்  ஷங்கர்  ராஜாவுக்கும்  அவரிடம்  பிஜிஎம்  வாங்கிய  இயக்குநர் ந் தரணி தரனும்  குட்


3 ஒளிப்பதிவும்  , எடிட்டிங்கும்  எக்ஸ்ட்ரா      ஆர்டினரி   



நச்  டயலாக்ஸ்


1   ரைட்டர்    இப்படித்தான்  லவ்வை  சொல்வாங்களா?


பின்னே? ஒரு போலீஸ்  கிட்டே  எப்படி  லவ்வை  சொல்ல?


2   லவ்  பண்ண  மூணு  முக்கியமான  விதிகள்   பொய் சொல்லக்கூடாது , ஏமாத்தக்கூடாது  ,  நடிக்கக்கூடாது. ஆனா  இந்த  மூணையுமே  நான்  மீறி  இருக்கேன்


3    ஐ லவ்  யூ டா... 


 என்ன  ஏமாந்துட்டியா? நான்  எது  சொன்னாலும்  நம்பிடற?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   ஹீரோவான  போலீஸ்  தன் நண்பனுடன்  ஜாலியா  பப்ளிக் ரோட்ல  டிஸ்கஸ்  பண்ணிட்டு இருக்கார், ஆனா  அவரை  போலீஸ்  வலை  போட்டு தேடுது 


2  க்ளைமாக்ஸ்ல    அவ்ளோ  பெரிய  டீலிங்கை  ஒரு பெரிய  கேங்  கிட்டே  தனி ஒரு ஆளா  ஒரு பெண்  அசால்ட்டா  டீல் பண்றது  எப்படி? அவங்க  தேவையான  பொருளை  வாங்கிட்டு  பணம்  தராம  ஷூட் பண்ணி  இருந்தா? 


3   கொலை   செய்வதற்கான வலுவான  காரணங்கள் இல்லை. அந்தக்கொலைகளை  செய்யாமலேயே  ஈசியா  அந்த  வேலைகளை  செய்திருக்க முடியும்


4   ஹீரோ வை  மாட்டி விடவே  இத்தனை  பிளான்  என்பதும்  ஏத்துக்கற  மாதிரி  இல்லை 



  சி.பி  ஃபைனல்  கமெண்ட் -  பிரமாதமான  படம்னு  சொல்ல முடியலைன்னாலும்  சராசரி  த்ரில்லர்  மூவி என்ற  அளவில்  பார்க்கலாம், குறிப்பா நாயகியின்  நடிப்புக்காகவும் , க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டுக்காகவும் . ரேட்டிங்  2.5 / 5 ,  ஜீ 5  ஓ டி டி  ல கிடைக்குது ,  2 மணி நேரப்படம்  தான்