Showing posts with label சாருகேசி(2026)-தமிழ் -சினிமா விமர்சனம் (பேமிலி மெலோ டிராமா). Show all posts
Showing posts with label சாருகேசி(2026)-தமிழ் -சினிமா விமர்சனம் (பேமிலி மெலோ டிராமா). Show all posts

Monday, July 13, 2026

சாருகேசி(2026)-தமிழ் -சினிமா விமர்சனம் (பேமிலி மெலோ டிராமா)

             

  பாட்சா என்ற இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சிந்து பைரவி டைப்பில் ஒரு கர்நாடக இசை வித்வானின் பயோ பிக்சர் மாதிரி ஒரு படத்தைத்தர முயன்றிருக்கிறார்.அவரது    முயற்சி வெற்றி பெற்றதா? என்பதைப்பார்ப்போம்.


கர்நாடக இசையில் இருக்கும் 72 மேளகர்த்தா ராக அமைப்பில் 26 வது மேளகர்த்தா ராகம் தான் சாருகேசி ராகம்.ஆனால் கதையின் நாயகன் பெயரே சாருகேசிதான்

     பிரபலமான நபரின் வாரிசுக்கு தன் அப்பாவின் பிரபலம்  வரமா?சாபமா?என்பது தான் கதையின் மையக்கரு


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் சங்கீத உலகின் சக்கரவர்த்தி.உயர்ந்த இடத்தினை அடைந்திருக்கும் பிரபல வித்வான்.கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல அவர் போகுமிடமெல்லாம் மரியாதை அவருக்குத்தேடி வருகிறது.

ஆனால் நாயகனின் மகனுக்கு தன் அப்பாவின் அதீத புகழே தனக்கு எதிரி என நினைக்கிறான்.எல்லோரும் தன்னை இன்னாரின் மகன் என்று அடையாளப்படுத்துவதைப்பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இது போக மகன் ஒரு குடிகாரன்.அப்பா பேச்சைக்கேட்காமல் குடித்து விட்டு வண்டி ஓட்டி விபத்து ஏற்படுத்தி அப்பாவுக்குக்கெட்ட பெயரை உருவாக்குகிறான்..


அப்பாவைப்பகைத்துக்கொண்டு வெஸ்டர்ன் மியூசிக்கில் சாதனை படைக்க  நினைக்கிறான்.வெஸ்டர்ன் மியூசிக் ட்ரூப்பில் இருக்கும் வில்லியைக்காதலிக்கிறான்.


வில்லியின்  நோக்கமே நாயகனைப்பழி வாங்குவதுதான் .காரணம் வில்லியின் அப்பா நாயகனிடம் உதவியாளராகப்பணி புரிந்தபோது நாயகன் அவரை அவமானப்படுத்தி கச்சேரி நடக்கும்போதே வெளியேற்றி இருப்பார்.

நாயகனைப்பழி வாங்க நாயகனின் மகனைக்காதலிப்பது போல் நடித்துக்குடும்பத்தைப்பிரிக்க திட்டம்.


இப்படிப்பட்ட சூழலில் நாயகனுக்கு அல்சைமர் என்னும் ஞாபக மறதி வியாதி வந்து விடுகிறது.

இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் என்ன?வில்லி வெற்றி பெற்றாளா?நாயகன் தரப்பு நியாயம் என்ன?மகன் புத்தி மாறியதா? இவை எல்லாம் மீதித்திரைக்கதை.


நாயகனாக ஒய் ஜி மகேந்திரன்  அந்தக்கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்.மகனிடம் அன்புக்காக ஏங்குவது அருமை.

நாயகனின் மகனாக ராஜ் அய்யப்பா  நடித்திருக்கிறார்.

நாயகனின் மனைவியாக சுஹாசினி மணிரத்னம் கனகச்சிதம்.அப்பா,மகனுக்கு இடையே பிரச்சனை வரும்போதெல்லாம் அவர் சமாளிப்பது மிடில் கிளாஸ் இல்லத்தரசியின்  பாங்கு.

வில்லியாக ரம்யா பாண்டியன் நடிப்பு கச்சிதம்.கெஸ்ட் ரோல்களில் சத்யராஜ் ,சமுத்திரக்கனி ,தலைவாசல் விஜய் ஆகியோர் முத்திரை பதித்திருக்கிறார்கள்.


இசை தேனிசைத்தென்றல் தேவா.பாடல்களும் ,பின்னணி இசையும் அருமை.

ஒளிப்பதிவு பி எல் சஞ்சய் .கண்ணுக்குக்குளுமையான காட்சிகள் மனதில் நிறைகின்றன.எடிட்டிங். ரிச்சர்ட்.

திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.


சபாஷ்  டைரக்டர்


1 கடவுள் நம்பிக்கையே இல்லாத நாத்திகவாதியான சத்யராஜை  நடமாடும் கடவுளாக கேரக்டர் டிசைன் வடிவமைத்த சாமார்த்தியம் அருமை.

2 ஆஹா படத்துக்குப்பின் குடும்பக்கதையைக்கையில் எடுத்து புகழின் பின்னால் இருக்கும் தனிமை,அன்பு கிடைக்காமல் ஏங்கும்போது  ஏற்படும் வெறுப்பு ஆகியவற்றைப்பதிவு செய்த விதம் பிரமாதம்.

3 ஒய் ஜி மகேந்திரனின் பிரமாதமான நடிப்பு ,அவரது கேரக்டர் டிசைன் இரண்டும் டாப் ரகம்


4 தேனிசைத்தென்றல் தேவாவின் இசை படத்துக்கு உயிர்.

5 ஓ மை கடவுளே படத்தில் விஜய்சேதுபதி கடவுளாக வருவது போல்  வரும் சத்யராஜ் பேசும் தத்துவ வசனங்கள் பிரமாதம்.அவரது காமெடி டிராக் போர்சனும் குட்.


ரசித்த வசனங்கள்


1 நமக்கு யாரும் இல்லை என யார் கண் கலங்கினாலும் எனக்குப்பிடிக்காது

2 நானும் மனுசனோட மனுசனா இருக்கத்தான் ஆசைப்படறேன்,எங்கே விடறாங்க?கொண்டு போய் ஒரு இடத்தில் வெச்சுடறாங்க

3 கூட்டம் கலையப்போகுதுன்னா ஆட்டம் முடியப்போகுதுன்னு அர்த்தம்


4 பாகுபலி வந்திருக்கார்


அது பாகுபலி இல்லை.பாகவதர்

5 படைப்புக்கு முதல் கருவே வலி தான்.படைச்சவனுக்கே வலி இருக்கே?

6 சாருகேசி - காலம் கடந்து நிற்கப்போகும் ஒரு பேரிசை

7 எல்லாத்தையும் விட்டுடுங்க,ஆனா இசையை மட்டும் விட்டுடாதீங்க.



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள்

1 மிக மெதுவான திரைக்கதை படத்தில் பலவீனம் 

2 யூகிக்கக்கூடிய திரைக்கதை.திருப்பஙகள் பெரிதாக இல்லை.

3 டி வி சீரியல் மாதிரி  கதையோட்டம்



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பெண்களுக்குப்பிடிக்கும்.தியேட்டரில் கூட்டமே இல்லை.ஒருவேளை ஓடிடி யில் வரும்போது வரவேற்புப்பெறலாம்.நல்ல குடும்பப்படம்.ரேட்டிங் 2.5/5