Showing posts with label அனுபவம் கமல் சினிமா KAMAL CINEMA. Show all posts
Showing posts with label அனுபவம் கமல் சினிமா KAMAL CINEMA. Show all posts

Wednesday, January 02, 2013

மகாநதி எடிட்டிங்கில் வந்த பிரச்சனை +விஸ்வரூபம் பிரச்சனை - கமல் பேட்டி

  https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh45z0m31P771jM5hHWrWvZ8H19qe8b7Ua4U5Twwl7KhAYWOkxQZWeHaWgmx3SDIHAwMJidMRfxUyt8lhdQktuYh_qRvPyIemt2GWxfEYJHXtXpq8Do_AZGMQoXfpSusEyyXDwicUSV_4g/s1600/viswaroopam_Poster1.jpg

தொழில் செய்யவிடாமல் தடுப்பது சட்டப்படி குற்றம்! : கமல் எச்சரிக்கை
 
 
Posted Date : 11:09 (30/12/2012)Last updated : 18:25 (31/12/2012)
விஸ்வரூபம் படத்தினை DTHல் ஒளிபரப்புவது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல்.
அச்சந்திப்பில் கமல் பேசியது
"DTH முயற்சியைப் பற்றிச் சொல்லும்பொழுது இது நிகழும் என்பது பல பேருக்குத் தெரியும். என்னவோ நான் தான் கண்டுபிடித்தவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது DTHச்சையே நான் தான் கண்டு பிடித்தேன் என்று நினைக்கிறார்கள்.



 அப்படி கிடையாது. இது இருக்கு. செல்போன் வந்தது, அதில் பேசலாம் என்று தெரியும், அதை கையில் எடுத்து பேசினார் சுட்டுடும் என்று பல பேர் பயந்தார்கள், நான் தைரியமாக எடுத்துப் பேசினேன். எனக்கு எதிர்முனையில் ஒருவர் பேசினார் அதனால் நான் பேசினேன் அவ்வளவு தான்.



 இது இதற்கு முன்பாக ஒரு வடநாட்டு நண்பர் ஒருவர் முயற்சி செய்து தோற்றுப்போன ஒன்று. அவர் என்ன பண்ணிட்டார்னா.. கூழுக்கும் மீசைக்கும் ஆசைப்பட்டு விட்டார். அதாவது இதில் என்ன பிழை என்றால்  தியேட்டர்காரர்களிடம் எம்ஜி வாங்கிவிட்டு டி.டி.ஹெச்சிலும் கொடுத்து விட்டார். அதனால் தியேட்டர்காரர்கள் அவருக்கு எதிராக திரும்பி விட்டார்கள். அது நியாயாமான ஒன்றுதான். அவர்களுக்கு எதிரான ஒரு விஷயம் என்றால் அவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள்.



 ஆனால் நான் அப்படி இல்லை என்னை வாழ வைத்த இந்தச் சூழலை கெடுத்துக்கொண்டு நான் எந்த வேலையையும் செய்ய விரும்புவனில்லை. ஒரு விவசாயி வயலில் வேலை செய்வான். ஆனால் அதை புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். அதைதான் நான் செய்கிறேன்.



 சாட்டிலைட் சேனல்கள் வந்தபொழுது அதற்கு நான் ஆதரவாக குரல்கொடுத்தேன், இது விஞ்ஞானம் வரத்தான் செய்யும் என்று சொன்னேன் என்பதற்காக என்னை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். ஆனால் நான் தைரியமாக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொன்னேன். அந்த தைரியம் தான் இன்று உங்கள் முன்னால் என்னை நிற்க வைத்திருக்கிறது.


 அதேபோலத்தான் சொல்கிறேன் இது பிழையல்ல, குற்றமல்ல அதனால் செய்கிறேன்.

 தியேட்டர்காரர்களுக்கு அது சொத்து, ஆனால் இந்தப்படம் எனக்கு செலவு. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் என்னால் செலவு செய்ததை எடுக்க முடியாது. யார் அந்த பொருளுக்கு சொந்தக்காரனோ அவன் தான் அந்தப்பொருளை பயன்படுத்த வேண்டும்.


 இது கசப்பு மருந்து தான். கசப்பு என்று தெரிந்து தான் சாப்பிடுகிறோம். ஆனால் இந்த கசப்பு மருந்து உடம்புக்கு நல்லது. வேம்பு கசக்கும் ஆனால் பாம்பு கடிக்கு போட்டால் சரியாகிவிடும். உங்களை கடித்திருக்கும் பாம்பு திருட்டு வி.சி.டி, அதற்கு கசப்பு மருந்தாக வந்திருப்பது தான் இந்த சிஸ்டம். இந்தக் கசப்பு மருந்து எந்தளவுக்கு குணமாக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.


 தியேட்டர்களை மூடி விட வேண்டியது தான் என்று சொல்கிறார்கள். ஆமாம், பராமரிப்பில்லாத தியேட்டர்களை மூடித்தான் ஆக வேண்டும். தியேட்டர்களுக்கு வருகிறவர்களுக்கு படம் பார்க்கக்கூடிய நல்ல சூழல் இல்லாத தியேட்டர்களை கண்டிப்பாக மூடிவிடுவார்கள். ஆனால் அதற்கு இதை ஒரு காரணமாக சொல்லாதீர்கள்.



 தொழில் செய்யும் உரிமையை இந்த அரசாங்கம் எனக்கு கொடுத்திருக்கிறது. இதைத் தடுப்பது சட்டப்படி குற்றமாகும்.



 இப்படத்தினை  சன், வீடியோகான், ரிலையன்ஸ், ஏர்டெல், DSV,  ஆகியோருடன் இன்னொரு புதிய DTH ஆபரேட்டரும் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் டாடா ஸ்கை நிறுவனத்தினர் தான். அவர்கள் முதலில் வருவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் DVR என்று சொல்லக்கூடிய டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரில் இந்தப்படத்தை ரெக்கார்டிங் செய்யும் தொழில்நுட்பத்தை தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் உங்களுடன் நான் வியாபாரத்துக்கு வர மாட்டேன் என்று சொன்னேன்.



 அதேபோல இதை கமர்ஷியலாக இல்லாமல் ஒரு தனி சேனலாக காட்ட வேண்டும் என்று சொன்னேன். மேலே உள்ள அந்த இரண்டு கண்டிஷன்களுக்கும் டாடாஸ்கை முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் வராமல் இருந்தார்கள் ஆனால் மற்றவர்கள் வந்து விட்டார்கள். இப்போது சுமார் 1 மணி நேரத்துக்கு முன்னதாக அவர்களும் இந்த கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொண்டு நாங்களும் வருகிறோம் என்று வந்துவிட்டார்கள். ஆக இப்போது இந்தியாவில் இருக்கும் ஆறு DTHலும் இப்படம் ரிலீஸாகிறது.



 இதையெல்லாம் தியேட்டர்களை பாதுகாப்பதற்காகத்தான் நான் செய்தேன். இதைப்புரிந்து கொண்டு என் பின்னால் வருபவர்களுக்கு நான் வரவேற்பு செய்கிறேன். வராதவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை.

 ‘இழப்பதற்கு ஒன்றுமில்லை, நடப்பதற்கு ஒரு தங்கப்பாதை’ என்று சொன்னார்கள். இதை கம்யூனிஸ்டு தோழர்கள் சொல்லியிருந்தார்கள். அது இப்போது வியாபாரத்துக்கும் பயன்படுகிறது.



 இந்த தங்கப்பாதைக்கு வாருங்கள் என்று நான் கூப்பிடுகிறேன், ஆனால் நீங்கள் செருப்பு தேய்ந்து விடும் என்று கவலைப்படுகிறீங்கள். இது தான் என்னுடைய வேண்டுகோள். வந்தவர்கள் வரைக்கும் எனக்கு சந்தோஷம்; வராதவர்கள் இருந்தாலும் ரொம்ப சந்தோஷம் " என்று பேசினார்
 
 
http://www.cinejosh.com/gallereys/movies/normal/viswaroopam_movie_stills_0806120245/viswaroopam_movie_stills_0806120245_026.jpg
 
 
ஆர் எஸ் அந்தணன் கட்டுரை 
 
சுற்றிலும் ராணி, குதிரை, யானை, சோல்ஜர்கள் இருந்தும் ராஜாவை காப்பாற்ற  முடியாமல் கமல் செஸ் ஆட்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறார். (இறுதி வெற்றி  எனக்கே என்ற அவரது தன்னம்பிக்கைக்கு விடை தெரிய இன்னும் முழுசாக ரெண்டு  வாரங்கள் காத்திருக்க வேண்டும்) எதிர் தரப்பில் ராணியும் இல்லை, குதிரையும்  இல்லை. யானையும் இல்லை. ஆனால் ராஜாவை குறிவைத்து நெருங்கிக்  கொண்டிருக்கும் அவர்களின் பக்கத்தில் துணையாக வைத்திருப்பது யாரை? அல்லது யார்  யாரையெல்லாம்?

அதை தெரிந்து கொள்வதற்கு முன் கமல் என்ற முன்மாதிரியை,முழு கலைஞனை,  கலியுகத்தின் கலிலியோவை பற்றி அறிந்து கொள்வது நல்லது.

'மகாநதி' திரைப்படம் தயாரிப்பில் இருந்த நேரம்.சென்னையிலிருக்கிற முன்னணி  சினிமா எடிட்டர்கள் பலர் ரூம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள்."கமல் ஏதோ  'ஆவிட்'டுன்னு ஒண்ணு கொண்டு வராராம்.அஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹா...அதை  கொண்டு வந்து வச்சுகிட்டுதான் மகாநதியை எடிட் பண்ண போறாராம்.அதென்ன  ஆவிட்டோ, டேவிட்டோ? இங்க ஒருத்தனுக்கும் புரியல.தணிகாசலம் சாரு பிலிமை  கையில புடிச்சு ஸ்பாட் வச்சு நறுக்கிற வேகம் வருமா? இல்ல அந்த பர்பெக்ஷன்தான்  அதுல வந்துருமா? வௌங்கிரும்."

இவர்களின் பேச்செல்லாம் அப்படியே கமல் காதுகளுக்கும் போனது.ஆனால்"நம்ம  படத்துக்கு ஆவிட் எடிட்டிங்தான்.மூவியாலாவெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில்  இருக்காது.வேணும்னா அதையெல்லாம் மியூசித்துல பார்த்துக்கலாம்" என்ற கமல், இந்த  விஷயத்தையும் ஒரு கை பார்த்துக்கலாம் என்று தன்னம்பிக்கையோடு களம் இறங்கினார்.

மும்பையிலிருந்து ஸ்பெஷலாக ஒரு எடிட்டர் வந்துதான் மகாநதியை எடிட் பண்ண  வேண்டியதாயிற்று.இங்குள்ள யாரும் அதை கற்று கொள்கிற எண்ணத்திலேயே இல்லை.  அவ்வளவு ஏன்? இதை வேடிக்கை பார்க்கக் கூட யாரும் வரவேயில்லை அங்கு.

அது நடந்து சில பல வருடங்களில் ஒவ்வொரு எடிட்டிங் ஸ்டுடியோக்களிலும் ஆவிட்  புகுந்து கொண்டது. ஏதோ ஆமை புகுந்தது போல ஆவிட்டை பார்த்து அஞ்சிய அத்தனை  எடிட்டர்களும் தடவி தடவி கற்றுக் கொண்டார்கள் இந்த ஆவிட் தொழில் நுட்பத்தை.  அதுதான் கமல்ஹாசன்! படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு கம்ப்யூட்டரை வைத்துக்  கொண்டு ஸ்பாட் எடிட்டிங் செய்கிற அளவுக்கு தொழில் முற்றிப் போனதற்கு காரணமும்  கமல்தானே அய்யா?

அப்படியே இன்னொரு சம்பவம்...இன்று வீட்டுக்கு வீடு பரவிவிட்டது கம்ப்யூட்டர்  சாதனம்! பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன்,  பல பத்திரிகை அலுவலகங்களில் கூட அது இருந்ததில்லை. க் ச் ம் என்று  எழுத்துக்களை தேடி எடுத்து பொருத்தி கொள்கிற அவஸ்தையும் இருந்தது.ஒரு சில  மிகப்பெரிய பத்திரிகை அலுவலகங்களில் மட்டும் டிடிபி என்று சொல்லப்படுகிற அதிநவீன  தட்டச்சு இயந்திரத்தை பயன்படுத்தினார்கள்.ஏதோ பூச்சாண்டியை பார்ப்பது போலவே  கம்ப்யூட்டரை பலரும் கருதி வந்த காலம் அது.

பத்திரிகையாளர்களை சந்திக்கிற சினிமாக்காரர்கள் பத்திரிகை செய்திகளை கைகளால்  எழுதி,அதை ஜெராக்ஸ் எடுத்து விநியோகம் செய்வார்கள்.போட்டோக்கள்?  நூற்றுக்கணக்கான போட்டோக்களை பிரிண்ட் போட்டு மேக்ஸி, போஸ்ட் கார்டு சைஸ்  என்று விதவிதமாக தருவார்கள்.அதை ஒரு அட்டையில் ஒட்டி பிலிம் எடுத்து பிளேட்  போட்டு என்று...ஆறேழு பரீட்சைகளை தாண்டிதான் ஒரு துணுக்கு செய்தியாக  இருந்தாலும் பத்திரிகையில் இடம் பிடிக்கும்.

அந்த கால கட்டத்தில்தான் நான் கமல் பிரஸ்மீட் ஒன்றுக்கு சென்றிருந்தேன்.கேள்வி  பதில் நேரம் முடிந்து கிளம்பும்போது அழகாக வட்ட வடிவில் ஒரு பொருளை கையில்  கொடுத்தார்கள் கமல் அலுவலக ஊழியர்கள். அதுதான் குறுந்தகடு என்பதே தெரியாமல்  கையில் வைத்துக் கொண்டு திருதிருவென விழித்தார்கள் அநேக நிருபர்கள். (நானும்  கூட) இதுக்குள்ளேதான் கமல் சாரோட போட்டோ இருக்காம்.கொண்டு போய் ஆபிஸ்ல  கொடுங்கப்பா. அவங்க கம்ப்யூட்டர்ல போட்டு கண்டுபிடிப்பாங்க என்றெல்லாம்  ஆளாளுக்கு ஆம்ஸ்ட்ராங் ஆனார்கள்.

கமல் சொன்னார்,"இன்னும் கொஞ்ச நாளில் இப்படிதான் ஆகப்போவுது. போட்டோ  பிரிண்ட் போட்டு கொடுக்கிற வழக்கமெல்லாம் மறைஞ்சுரும்"என்று. ஆழ்வார்பேட்டை  ஏரியாவிலிருக்கிற இறைச்சி கடைகளில் 'தல'கறிக்கு அவ்வளவு விற்பனை இல்ல.  ஏன்னா கமல் மாதிரி ரொம்ப பேரு இங்க இருப்பாங்க போலிருக்கு என்று கமென்ட்  அடித்தபடியே கலைந்த கூட்டம்தான் நாங்கள் எல்லாம்.

எதையும் இன்னும் பத்து வருடங்கள் கழித்து...என யோசிப்பவர் கமல்.நாமெல்லாம்  பஞ்சாங்கத்தில் நல்லநேரம் பார்த்துக் கொண்டிருந்தால்,கமல் அண்டார்டிகாவுக்கு அந்த  பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றி யோசித்துக் கொண்டிருப்பார்.அவரால்  நிறைவேற்றப்பட வேண்டிய காரியங்களில் ஒன்றுதான் இந்த டிடிஎச் ஒளிபரப்பு.(கமல்  செய்யாவிட்டால் இதை வேறு யார் செய்து தொலைப்பதாம்?)

விஸ்வரூபம் படத்தை டிடிஎச்-ல் ஒளிபரப்பக் கூடாது.அப்படி ஒளிபரப்பினால்  தியேட்டர்களை இழுத்து மூட வேண்டி வரும் என்று அவரவர் தொழில் குறித்து  அச்சப்படுவதும் நியாயம்தான். சின்னத்திரை வந்தபோதும் இதே அச்சத்தோடு  இருந்தவர்கள்தான் தியேட்டர்காரர்கள். ஆனால் அப்போதைவிட இப்போதைக்குதான்  படங்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. எங்கள் படங்களை ரிலீஸ் செய்ய தியேட்டர்  கிடைக்கவில்லை என்ற புலம்பலும் கூடியிருக்கிறது.இத்தனைக்கும் தினந்தோறும் மூன்று  படங்களையாவது ஒளிபரப்பிவிடுகின்றன முன்னணி சேனல்கள்.

சின்னத்திரையில் படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்தபோது, சினிமாக்காரர்கள் திரண்டு  சென்று அப்போதைய முதல்வர் கலைஞரை சந்தித்து முறையிட்டார்கள்."ஏன்யா...  உங்க சினிமா வந்து நாடகத்தை அழிக்கலையா? அதுமாதிரிதான் இதுவும்.இந்த  விஞ்ஞான வளர்ச்சியை ஏத்துகிட்டுதான் ஆகணும்" என்றார் கலைஞர். அதே  போன்றதொரு 'உரத்த குரல்' இப்போது தேவைப்படுகிறது கமலுக்கும்!

ஆடியோ மார்க்கெட் ஒழிஞ்சுருச்சே என்று சினிமாக்காரர்கள் அலறும்போதுதான் அதைவிட  பல மடங்கு கொட்டிக் கொடுக்கிறதே,சேனல் ரைட்ஸ்...அத பற்றி ஏம்ப்பா பேச  மாட்டேங்கிறீங்க? என்ற எதிர் கேள்வி பிறக்கிறது இங்கே.

சரி விவாதத்தை விட்டுவிட்டு கமல் பிரச்சனைக்கு வருவோம்.சுமார் எழுபது கோடியை  இந்த படத்திற்காக இறைத்திருக்கிறார் அவர்.நேற்று வந்த நடிகர்கள் எல்லாம், முப்பது  கோடி சம்பளம் கேட்கும்போது சாதனையாளர் கமல்,படத்திற்கு ஆன செலவு போக  பதினைந்து கோடியாவது இப்படத்தின் மூலம் தனக்கு கிடைக்க வேண்டும் என்று  நினைப்பது தவறா?

இப்படத்தின் முதல் தயாரிப்பாளராக தன்னை இணைத்துக் கொண்ட பிவிபி நிறுவனம்,  போட்ட பணத்தை திரும்ப கேட்கிறது.சுமார் ஐம்பது கோடி ரூபாயை அவர் தரவேண்டிய  நிலையிலிருக்கிறார்.ஆனால் விநியோகஸ்தர் தரப்பிலிருந்து இந்த படத்தின் மொத்த  விலையுமே ஐம்பது கோடியாகதான் நிர்ணயிக்கிறார்களாம்.அதை மேலும் குறைக்கிற  விதத்தில் நடுவில் வந்து சேர்ந்தது முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு.

விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பதாக  கிசுகிசுப்பு எழுந்ததுமே படத்தின் வியாபார தொகையும் பாதிக்குமேல் குறைக்கப்பட்டதாக  கூறுகிறார்கள்.

தீப்பிடிக்கிற நேரத்தில் தப்பி ஓடுகிற வழியில் அழகான கோலம் போட்டிருக்க வேண்டும்  என்றோ, அது கிழக்கு வாசலாக இருக்க வேண்டும் என்றோ நினைக்க முடியாது.  நடுநிலையோடு நோக்கினால் கமலின் நிலையும் அதுதான். போட்ட பணத்தை  எடுப்பதற்காக அவர் புதிதாக திறந்த புழக்கடைதான் இந்த டிடிஎச் என்று கருத  வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் சுயலாபத்துக்காக உயிராக நேசிக்கும் சினிமாவை  காவு கொடுக்கிறவரல்ல கமல் என்பதையும் அவரது கடந்த கால சினிமா வரலாறுகள்  நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

பாரம்பரியமான சினிமா நிறுவனங்கள் எல்லாம் எங்கே போயின? சத்யா மூவிஸ் எங்கே,  தேவர் பிலிம்ஸ் எங்கே? சூப்பர்குட் எங்கே, எல்.எம்.எம் எங்கே? ஏ.வி.எம் நிறுவனம்  ஏன் வருடத்திற்கு ஒரு படத்தை கூட எடுக்க மாட்டேன் என்கிறது? இன்னும் இதுபோன்ற  முக்கிய நிறுவனங்கள் எல்லாம் ஏன் ஒதுங்கின? சினிமா ஆரோக்கியமாக இல்லை.  பணம் போடுகிற முதலாளி அப்படம் ரிலீஸ் ஆகிற நேரத்தில் ஓடி ஒளிகிற அவல நிலை  இங்கு தொடர்கிறது.

ரியல் எஸ்டேட் புரோக்கர்களும், கள்ளப்பண முதலாளிகளும் ஆசைக்கு ஒரு படம்  எடுத்து அதிலும் தானே ஹீரோவாக நடித்து ஒதுங்கிக் கொள்கிறார்கள்.அவ்வளவு ஏன்?  பல்லாயிரம் கோடிகளை கையிருப்பில் வைத்துக் கொண்டு சினிமாவுக்குள் நுழைந்து  கோலி குண்டு விளையாடும் கார்ப்பரேட் நிறுவனங்களே கூட விழிபிதுங்கி கிடக்கின்றன.

எல்லாவற்றுக்கும் காரணம் வியாபாரத்தை இங்கே சுதந்திரமாக செய்ய முடிவதில்லை  என்பதுதான். சூழ்ச்சியும் அசந்த நேரத்தில் கால்களை வாரிவிடும் கலையும் இங்கே  சகஜமாக இருக்கின்றன. படப்பெட்டிகளை டெலிவரி செய்யும்போது பேசிய பணத்தை  எண்ணி வைக்கிற விநியோகஸ்தர்கள் இங்கே இருப்பதே இல்லை. இங்கு எல்லா  படங்களின் டெலிவரியும் ரத்தக்கறையோடு நடப்பதை லேப் பக்கம் சென்றால் நடுங்க  நடுங்க கவனிக்க முடியும்.

'விஸ்வரூபம்' விஷயத்தில் கூட கமலுக்கு எதிரான சில சினிமா பிரமுகர்கள் முஸ்லீம்  அமைப்புகளையும், தியேட்டர்காரர்களையும் தூண்டி விடுவதாக கூறப்படுகிறது. ஒரு  படம் தோல்வியடைந்தால் இதே சினிமாவிலிருக்கும் பெரும்பாலனோர் பார்ட்டி வைத்து  கொண்டாடுகிறார்களே, சினிமா எப்படி பிழைக்கும்?

ஒரு சங்கத்தின் சட்டதிட்டங்கள் இன்னொரு சங்கத்தை கட்டுப்படுத்த முடியாது. ஆனால்  சினிமாவில் முடியும். விருப்பமே இல்லாவிட்டாலும் இந்த கட்டுக்கோப்பான  சட்டதிட்டங்களை எல்லாரும் மதித்தே ஆக வேண்டும் என்கிற முரட்டு சிந்தனை இங்கே  பல வருடங்களாக இருக்கிறது.வேதனை என்னவென்றால் பணம் போடுகிற முதலாளியும்  இங்கே கைகட்டி நிற்க வேண்டி இருக்கிறது.

கமல் என்ற முதலாளியின் நிலைமையும் இன்று அப்படிதானிருக்க வேண்டும் என்று  நினைக்கிறார்கள் பலர்.'உன் தியேட்டரில் முறுக்கு விற்க கூடாது.சுண்டல் விற்க  கூடாது' என்று சொல்ல எப்படி எந்த பட முதலாளிக்கும் அதிகாரம் இல்லையோ,  அப்படிதான் 'உன் படத்தை டிடிஎச்-ல் ஒளிபரப்பக் கூடாது என்று இவர்கள் சொல்வதற்கும்  அதிகாரம் இல்லை.

இந்த சின்ன உண்மையை புரிந்து கொண்டால் போதும்... விஸ்வரூபம் பிரச்னை,  இவ்வளவு பெரிய அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கவேண்டிய தேவையே இருக்காது! 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-g9hhlMlEYA-kmziFC2D2RSbM9B4zAaBnh0zxGMzYfGpD3ulOoJte1rOWHGwCm6xuD_D0I5yUHbA3F1MVTan8NHPCZTDsibHiX4ilfExsbKnKkqgIL40E40AQLm04nzEVoTq7UBM9c9Y/s1600/viswaroopam_movie_latest_stills_005.jpg
 

மக்கள் கருத்து


தமிழ்ச் சினிமா மிகபெரிய பரிணாமத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது.

படித்த இளஞர்கள் புதிய சிந்தனையுடன் விதம் விதமான அணுகுமுறையுடன் நடிகர்களாக,இயக்குநர்களாக, இசையமைப்பளர்களாக சினிமாவிற்குள் பிரவேசித்துள்ளார்கள்.


கமலஹாசனின் இந்த முயற்சி தமிழ்ச்சினிமாவை வேற்றுமொழியினரும் பார்த்து ஆச்சரியப்பட வைக்கப் போகின்றது.


டிரிஎச் ஒளிபரப்பு முறை சர்வதேசத்தை தமிழ்ச்சினிமா சென்றடைய ஒரு பாதையுமாகும்.


திரையரங்க உரிமையாளர்கள் விஸ்வரூபத்தை திரையிடுவதன் மூலம் நட்டமடையவே மாட்டார்கள்.


பலரால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.திருட்டு விசிடியால் தயாரிப்பாளர்கள் நட்டமடைவதை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் திரையரங்க உரிமையளர்களே.திரையரங்கிலிருந்துதான் திருட்டு விசிடி வெளிவருகின்றது என்பதும் உண்மை.


கமலஹாசனின் இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

 

 

2. இதைத்தான் தைரியம், துணிச்சல் என்பது. ஒரு முடிவு எடுத்தபின்னர் பின்வாங்குவதும் அதைத் தவிர்ப்பதும் கோழைத்தனம். அந்த முடிவு தவறானதாக இருக்கும் பட்சத்தில் பின்வாங்குவது தேவைதான். ஆனால், சரியான முடிவை எடுத்துவிட்டு துணிச்சலோடு சவால்களை எதிர்கொள்ள தனித்துவம் வேண்டும்! சினிமா என்பது ஒரு வியாபாரம். அதில் முதல் போடுபவர்கள் இலாபம் கிடைக்காவிட்டாலும், ஆகக் குறைந்தது நட்டமாவது ஏற்படாமல் இருக்கவே முயல்வார்கள். ஒரு படம் வெளிவரும்போது அதனை வெற்றிபெறவைத்து இலாபம் எடுத்துத் தருகிறோம் என்று எந்தத் தியேட்டர்காரராவது உறுதிகூறமுடியுமா? ஆனால், படம் ஓடாவிட்டால் பணத்தைத் திருப்பித்தா என்று கேட்கமட்டும் வந்துவிடுவார்கள்.

 

3. இந்தியாவில் ஐம்பது சதவிகிதமாக கட்டணம் குறைக்கும் நிலையில், இந்த முயற்சி நிச்சயம் பலன் தரும்.

தன்னுடைய எல்லா திரைப்படங்களையும் மறுமுறை பார்த்து தேவையற்ற காட்சிகளை நீக்கி விட்டு டி.டி.ஹெச் சில் திரையிட்டால் ராஜ் கமல் ப்ரொடக்ஷன்ஸ் தானே ஒரு சானல் அமைக்க முடியும்.

கமலின் இந்த முயற்சி, நிச்சயம் வெற்றி பெறும்.

வாழ்த்துக்கள்.
 

 

 

 

Kamal Haasan exclusive interview on Vishwaroopam - Tv9


Tuesday, May 01, 2012

கமல் -ன் விஸ்வரூபம் - கோஸ்ட் புரோட்டாகால் -ன் உல்டாவா? - கிடாவெட்டு


உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாஸனின் மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தின் முதல் ஸ்டில் மற்றும் 30 வினாடிகள் கொண்ட ட்ரைலர் இன்று வெளியானது.


சி.பி - முதன் முதலா ஸ்டில் ரிலீஸ் பண்றார். கொஞ்சம் மங்களகரமா இருக்கப்படாதா? முக்காடு போட்ட மாதிரி இருக்கு.. டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வயிற்றில் எல்லாம் கலக்குதாம்
கமல் ஹாஸன் மிகவும் ரகசியம் காத்து வந்ததால் இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்ப்பார்ப்பு நிலவியது.


சி.பி - கமல் படங்கள்ல அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் இந்தியன்,ஆளவந்தான், விக்ரம், நாயகன் தான்.. விஸ்வரூபம் அந்த அளவு எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை.. 
இந்த நிலையில் கமல் நேற்று இந்தப் படத்தின் முதல் போஸ்டர் ஸ்டில்லை வெளியிட்டார். விஸ்வரூபம் என்ற தலைப்பு, உருது மொழி எழுத்துருவைப் போல டிசைன் செய்யப்பட்டிருந்தது. பின்னணியில் அமெரிக்கா.
சி.பி - தமிழ்ப்படம் எடுத்தாலே நமக்குப்புரியாது.. உருது எழுத்தா? அய்யய்யோ.. 


இந்தப் படம் ஆப்கன் தீவிரவாதம் தொடர்பானது என்று கூறப்பட்டுவந்த நிலையில், அதன் எழுத்துரு உருது போல அமைந்திருப்பது பல யூகங்களுக்கு வழி வகுக்கிறது.


இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ 30 செகன்ட் ட்ரைலரிலும் இந்த ஒரு படம்தான் இடம்பெற்றுள்ளது. ஒரு வெள்ளைப்புறா பறந்து செல்கிறது. அடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம்... அதன் மத்தியில் கமல் நிற்கிறார்.. 'முழு நிறைவு பெறும் தருவாயில்... எழுத்தும் ஆக்கமும் கமல் ஹாஸன்' என்று முடிகிறது.



சி.பி - இதுக்குப்பேரு ட்ரெய்லர் இல்லை , மினி ட்ரெய்லர்.. யார் ஜோடின்னே தெரியலை இன்னும்

இந்த ட்ரைலரை கமல் உருவாக்கியுள்ள ஸ்டைல் அந்தப் படத்தின் தரத்தைக் காட்டுவதாக உள்ளது. எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கிறது.

படத்தை கமல் ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனமும், பிவிபி சினிமாவும் இணைந்து தயாரிக்கின்றன. சங்கர் எசான் லாய் இசையமைக்கிறார். சனுஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சி.பி - வழக்கமா சொந்தப்படம்னா செலவு பண்ண மாட்டாரே.. இதுல மட்டும் அள்ளீ இறைச்சிருக்கார் போல  

Mission Impossible Ghost Protocol vs Vishwaroopam! கையும் களவுமாக மாட்டிக் கொண்ட கமல் :)))