Sunday, September 13, 2026

The Last House(2026)- அமெரிக்கன் மூவி/தமிழ் - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் பிக்சன் சர்வைவல் திரில்லர்)@நெட் பிளிக்ஸ்




திரை அரங்கு களில் வெளியாகாமல்  நேரடியாக நெட் பிளிக்சில் 7/8/2026 முதல் தமிழ் டப்பிங் கில்  வெளியாகியிருக்கிறது.



ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகன் தன் மனைவி ,இரு குழந்தைகள் கொண்ட அழகான குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறான்.ஒரு நாள் வித்தியாசமான முறையில் ,பலத்த மழை பெய்கிறது.வீட்டின் கதவுகள் ,ஜன்னல்கள் எல்லாம் திடீரென  லாக் ஆகிக்கொள்கின்றன.வெளியே வர முடியவில்லை.

எதிர் வீட்டில் இதே நிலைமைதான் என்பதை அறிந்ததும் நாயகனுக்கு நிம்மதிப்பெருமூச்சு.நம்ம வீட்டில் கரண்ட் போனதும் கவலைப்படும் நாம் பக்கத்து வீட்டிலும் கரண்ட் இல்லை எனில் அப்பாடா இங்கேயும் கரண்ட் இல்லை ,அங்கேயும் கரண்ட் இல்லை ,எங்கேயும் கரண்ட் இல்லை என்று நினைப்போமே அதே மைண்ட் செட்டில் தான் நாயகன் இப்போது இருக்கிறான்.

இப்போது ஊர்,உலகம் மொத்தமும் கொரோனா காலத்து லாக் டவுன் மாதிரி அடைபட்டு விட்டோம் என்பதை உணர்கிறார்கள் 

சரி,மாட்டிக்கொண்டோம்.சாப்பாட்டுக்கு என்ன வழி?வீட்டுக்குள் இருக்கும் பொருட்களை வைத்து எத்தனை நாட்கள் சாப்பாடு தயார் செய்ய முடியும் ?எனப்பார்த்தால் இரண்டு மாதங்களுக்குத்தேவையான மளிகைப்பொருட்கள் இருக்கின்றன.அப்பாடா,கவலை இல்லை என நிம்மதிப்பெருமூச்சு விடுகிறார்கள்.

ஆனால். 5 வருடங்ககாக இந்த நிலை தொடர் கிறது.போதாக்குறைக்கு ஏலியன்சா?மான்ஸ்டர்சா?என்று தெரியாத மாதிரி ஒரு விசித்திர உயிரினங்கள்   தாக்க வருகின்றன.நாயகன் எப்படி சமாளித்தான்?சர்வைவல் ஆனானா?என்பது மீதிக்கதை.

நாயகனாக  வாக்னர் மோரா,நாயகியாக க்ரேட்டா லீ கச்சிதமாக நடித்து இருக்கிறார்கள்.மகன் ,மகளாக  எம்மா ஹோ,ஆர்டன் சோ சுட்டித்தனத்துடன் நடித்திருக்கிறார்கள்.


பின்னணி இசை, ஒளிப்பதிவு , சவுண்ட் டிசைனிங்க் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் அருமை.

படத்தின் ரன்னிங்க் டைம்  112 நிமிடங்கள்



சபாஷ் டைரக்டர்


1 படத்தின் ஓப்பனிங்க் ஷாட்லயே இந்த பூமிக்கு லேண்ட்ஸ்கேப் என பெயர் வைத்தது தப்பு,நிலத்தை விட கடல் பகுதிதானே அதிகமாக இருக்கிறது?என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கும்போதே ஏதோ மிஸ்ட்டீரியஸ் மேட்டர் என்பதைக்கோடிட்டுக்காட்டிய விதம்.

2 பக்கத்து வீட்டுப்பெண் மான்ஸ்டரிம் மாட்டி பலியாகும் திகில் காட்சி படமாக்கப்பட்ட விதம்.

3 மான்ஸ்டர் நாயகனின் வீட்டுக்கு வரும் சீனும் அப்போது ஆட்டோமெடிக்காக வீட்டின்  கதவுகள் திறப்பதும் திகிலான காட்சி.

4 முதல் 45 நிமிடங்கள் கேரக்டர் டிசைன் ,சிச்சுவேஷன் எல்லாவற்றையும்  பிரமாதமாக செட் செய்து எமோஷனல் கனெக்ட் கொடுத்த விதம் அருமை.

5 டெக்னிக்கல் டீம் ,கம்யூட்டர் கிராபிக்ஸ் ,சவுண்ட் டிசைனிங் ,ஒளிப்பதிவு அனைத்தும் அருமை.

6 ஜன்னல் கண்ணாடியைக்கூட உடைக்க முடியவில்லை என்பதை விஷூவலாகக்காட்டிய விதம் அருமை.



லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 வீட்டுக்குள்ளேயே தோட்டம் அமைத்து காய்கறி செடிகளை வளர்த்து உணவுக்கு ரெடி ஆவது சரி.ஆனால்   சூரிய ஒளியே இல்லாமல் அடைபட்ட வீட்டுக்குள் செடி எப்படி வளரும் ?

2 ஒரே வீட்டுக்குள் முழுக்கதையும் நடப்பதால் ,ஒரே குடும்பம் நான்கு பேர் தான் மொத்த கேரக்டர்சும் என்பதால் கொஞ்சம் போர் அடிக்கிறது

3. க்ளைமாக்சில் தெளிவான விளக்கம் தரப்படவில்லை.அந்த மான்ஸ்டர்ஸ் கேரக்டர்களில் நல்லது ,கெட்டது எனப்பிரிவது நம்ப முடியலை.

4 மான்ஸ்டர்சின் உருவம் பிரமிப்பை ஊட்டவில்லை.இதெல்லாம் சாதாரணமப்பா என சலித்துக்கொள்வது போல் தான் தோன்றியது.





ரசித்த வசனங்கள்

1 மான்ஸ்டரில் நல்லது ,கெட்டது என எதுவுமில்லை.எல்லாமே கெட்டவை தான்.



அடல்ட் கண்ட்டண்ட் வார்னிங் 13+ க்ளீன் யூ.  குடும்பத்துடன் பார்க்கலாம்.


CPS கமெண்ட் -  வித்தியாசமான ,மாறுபட்ட சர்வைவல் திரில்லர் படம் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க். 3/5

The Last House
Release poster
Directed byLouis Leterrier
Written byMatthew Robinson
Produced by
Starring
CinematographyPål Ulvik Rokseth
Edited byAdam Gough
Music byYair Elazar Glotman
Production
companies
Distributed byNetflix
Release date
  • August 7, 2026
Running time
112 minutes[1]
CountryUnited States
LanguageEnglish



Saturday, September 12, 2026

Main Vaapas Aaunga (2026)- ஹிந்தி - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா) @நெட் பிளிக்ஸ்


 Jab we met ஜப் வீ மெட் (2007),Love Aaj kal  லவ் ஆஜ்கல் (2009),my Melbourne(2024) மை மெல்பர்ன் உட்பட பல வெற்றிப்படஙகளைக்கொடுத்த இயக்குநர்  இம்தியாஸ் அலியின் லேட்டஸ்ட் படம் இது.70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் 100 கோடி வசூலித்தது.



ஏ ஆர் ரஹ்மான் தான் இசை என்பதால் இந்தியா முழுக்க கவனம் பெற்ற இந்தப்படம் நம்ம ஊர் பாரதிராஜாவின் முதல் மரியாதை போல ஒரு Feel குட் மூவி.

டைட்டிலுக்கான அர்த்தம் நான் திரும்ப வருவேன்.

ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகனுக்கு இப்போது 95 வயது.ஸ்ட்ரோக் வந்ததால் ஹாஸ்பிடலில் சேர்க்கிறார்கள்.அவருக்கு டெமன்சியாவும் இருப்பதால் எல்லா விஷயங்களை யும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுகிறார்.இவரைக்காப்பாற்ற வழியே இல்லை என டாக்டர்கள் சொல்லி விடுகிறார்கள்.நாயகனின் வாரிசுகள் இனி வேறு வழியில்லை என அவரது மரணத்துக்குக்காத்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் இருக்கும் தன் பூர்வீக வீட்டுக்குப்போக வேண்டும் என நாயகன் வலியுறுத்துகிறார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் பஞ்சாபில் நாயகன் குடி இருந்தார்.இத்தனை வருடங்கள் ஆனபின்பும் தன் பழைய காதலியை அவர் இன்னும் மறக்கவில்லை என அவரது வாரிசுகள் உணர்கிறார்கள்.20 வயதிலிருந்து 95 வயது வரை நிகழ்ந்த சம்பவங்கள் எதுவும் அவருக்கு நினைவில்லை.17 வயதில் நடந்த காதல் மட்டுமே நினைவிருக்கிறது.இதற்குப்பின் நிகழ்ந்த சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

பம்பாய் படத்தில் மணிரத்னம் எப்படி இந்து முஸ்லீம் கலவரத்துக்கு நடுவே ஒரு காதல் கதையை சொன்னாரோ ,டைட்டானிக் படத்தில் மூழ்கிப்போன கப்பலின் கதையில் மூழ்காத காதலைப்பற்றி சொன்னாரோ அந்த மாதிரி இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில் ஒரு காதல் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குநர்.



நாயகனாக நஸ்ருதின் ஷா உணர்ச்சிப்பிழம்பாக நடித்திருக்கிறார்.இளவயது நாயகன் தோற்றத்தில் வேதாங்க் ரெய்னா நடித்திருக்கிறார்.இளமை ,துள்ளல் மிக்க நடிப்பு.

நாயகனின் பேரனாக தில்சித் தோஷன் பிரமாதமான நடிப்பு.

நாயகியாக ஷர்வாரி நடித்திருக்கிறார்.நாயகனின் பேரனின் கேர்ள் பிரண்டாக பனிட்டா சந்து அழகாக வந்து போகிறார்.

மற்ற அனைத்துக்கேரக்டர்களும் அவரவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

படத்துக்குப்பெரிய பலம் இசையும் ,ஒளிப்பதிவும்.ஒரு ரொமாண்டிக் டிராமா காலம் கடந்தும் மனதில் நிற்க பாடல்கள் ஹிட் ஆக வேண்டும்.காட்சிகள் மனதில் பதிய வேண்டும்.இந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

ஆர்த்தி பஜாஜின் எடிட்டிங்கில்  படம் 167 நிமிடங்கள் ஓடுகிறது.சில்வெஸ்டர் போன்செசா  தான் ஒளிப்பதிவு.காட்சிகள் கவிதை தான்.

பாடல்களுக்கான இசை ,பின்னணி இசை இரண்டையும் ஏ ஆர் ரஹ்மான்  பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
நயானிகா  மஹ்தானி யுடன் இணைந்து திரைக்கதை எழுதித்தனியாக இயக்கி இருக்கிறார் இம்தியாஸ் அலி

சபாஷ் டைரக்டர்

1 சீரியசான பிரச்சனையான இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை ஸ்டேண்ட் அப் காமெடி மூலம் எளிமையாகபுரிய வைத்த லாவகம் அருமை.

2  ஹார்ட் சர்ஜன் - டெய்லர் இருவரையும் ஒப்புமைப்படுத்தி சொன்ன காமெடி 


3 ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு 3 நாட்கள் கழித்து 17ம் தேதிதான் பிரிவினை பற்றிய விபரங்கள் வழங்கப்பட்டது,அந்த 3 நாட்களில். எவ்வளவு குழப்பங்களும் ,வன்முறைகளும் நடந்தேறின என்பதை காமெடியாக சொன்ன விதம்.

,4 பிரிவினையின் போது குடும்பத்துப்பெண்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து விவரித்த விதம்.

5 எட்டு பாடல்களில் ஏ ஆர் ரஹ்மானின் மயக்கும் இசை அனைத்தையும் ஹிட் ஆக்கியவிதம்.

6 ஒளிப்பதிவு மிகப்பெரிய பங்களிப்பைத்தந்திருக்கிறது.அட்டகாசமான லொக்கேஷன்ஸ்




ரசித்த வசனங்கள்

1 நாம் கிறிஸ்டியன் ஆகிட்டா சர்ச் ல கல்யாணம் பண்ணிக்கலாம்.


இதை இப்போ யோசிச்சியா?


2 நான் ஒரு வருசம் கழிச்சுத்தான் உன் காதலுக்கு சம்மதம் சொல்லலாம்னு இருந்தேன்.இப்பவே ஓக்கே சொல்லிட்டதால் என்னைக்குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம்.

3 அவர் இதயமே இல்லாதவர்னு பலரும் சொல்வாங்க,ஆனா அவர் தன் இதயத்தை இங்கே யே விட்டுட்டுப்போய்ட்டார்.

இல்லை.இரண்டு வருசம் முன்பே யோசிச்சேன்.

4 உன்னால முடியாதுன்னா யாராலயும் முடியாது.

5 என்னை என்ன?னு நினைச்சே? ஒருபோதும் அது மாதிரி செய்ய மாட்டேன்.

மேரெஜ் ஆனாக்கூடவா?

6 இந்தக்காதல் தான் எவ்வளவு சக்தி வாய்ந்தது? மரணத்தருவாயில் இருக்கும் ஒருவனை சாகக்கூட விட மாட்டேங்குது


லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 படத்தின் நீளம் பெரிய மைனஸ்.3 மணி நேரத்துக்கு நெருக்கி ஓடுகிறது.இது ஒரு ஸ்லோ ட்ராமா என்பதை விட  டெட் ஸ்லோ ட்ராமா என சொல்லலாம்.

2 இதே இயக்குநர் இயக்கிய ஜப் வி மெட் , பாரதிராஜாவின் முதல் மரியாதை ,கமலின் ஹே ராம் , ஆகிய படங்களை நினைவுபடுத்தும் பல காட்சிகள்



அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 16+


CPS கமெண்ட் - பொறுமைசாலிகளும் ,பெண்களும் ,காதலர்களும் இந்தப்படத்தைக்கொண்டாடுவார்கள்.ரேட்டிங் 3.5/5






Friday, September 11, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி-செப்டம்பர் 10,11 ரிலீஸ் படங்கள் முன்னோட்டப்பார்வை

 தமிழ் சினிமாத்தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக்கை வாபஸ் வாங்கினாலும் வாங்கியது கோடம்பாக்கத்தில் ஒரே கொண்டாட்டம்.இந்த வாரம் செப்டம்பர் 10,11 ஆகிய இரு தினங்களில் 9 படங்கள்  ரிலீஸ் ஆகின்றன.கார்த்தி,அருள்நிதி,சூரி நடிப்பில் வெளி வரும் பெரிய பட்ஜெட் தமிழ்ப்படங்கள் 3 ,லோ பட்ஜெட் தமிழ்ப்படம் 1 ,ஒரு கன்னடம்,2 தெலுங்கு ,1 ஹிந்தி,1 மலையாளம். தமிழ் டப்பிங்கில்  வெளியாகின்றன.



1 சர்தார் 2 
2 டிமாண்டி காலனி 3
3 மண்டாடி
4 ரி யூனியன்
5 Vk 30
6 மகேந்திரகிரி வாரஹி
7 வேம்ப்பயர்ஸ் சகா
8 ரணபாலி
9 பிரதம திரிஷ்டியா குட்டக்கர்




1 சர்தார் 2.  தமிழ்   ஸ்பை ஆக்சன் திரில்லர்


பருத்தி வீரன் மெகா ஹிட்டுக்குப்பின்  கார்த்திக்கு ஹிட்டான முக்கியமான ஆக்சன் படங்கள் இரண்டு.சிறுத்தை ,சர்தார். சிறுத்தை படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்பில்லை என சிவா அறிவித்து விட்டார். சர்தார் 2 வருகிறது.

முதல் பாகத்தில் நடித்த  கார்த்தி ,ரஜிஷா விஜயன் மீண்டும் நடிக்க புதிதாக சேர்ந்திருப்பவர்கள் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா,மாளவிகா மோகனன் ,ஆஷிகா ரங்க நாத்.
முதல் பாகத்தில்  ஜி வி பிரகாஷ் குமார் இசை.இரண்டாம் பாகத்தில் யுவன் சங்கர் ராஜா வின் இசையில்  5 பாடல்கள் இடம் பெறுகின்றன.

அப்பா,மகன் என இரு வேடங்களில் கார்த்தி நடிக்கிறார்.அப்பா கேரக்டர் ஸ்பை ஏஜெண்ட்.மகன் கேரக்டர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரோல்.


சர்தார் 2 டீசர் ,ட்ரெய்லர் இரண்டுமே ஆக்சன் பாக்கேஜ்.

முதல் பாகத்தில் சைனாவின் கையாளை க்ளைமாக்சில் தீர்த்து க்கட்டுவது போல் காட்டி இருப்பார்கள்.இந்த இரண்டாம் பா
கத்தில் இந்தியர்கள் உபயோகிக்கும் தண்ணீரை சீனா கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு பிராஜக்ட் செய்கிறது.அதை சீனா போய் நாயகன் சர்தார் நிர்மூலமாக்குகிறார்.

வில்லன் பெயர் பிளாக் கேடர்.சைனாவில் நிஞ்சா போன்ற ஒரு ஆயுதம் தான் கேடர் என்பது.அதைத்தன் பெயராக வில்லன் வைத்திருக்கிறான் என்பதால் சைனாவின் கைக்கூலியாக இருக்கலாம்.ஆனால் ஆள் அமெரிக்காக்காரனைப்போல் தான் கெட்டப் இருக்கிறது.

வில்லனின் திட்டத்தை நாயகன் எப்படி முறியடிக்கிறான் என்பது தான் கதை.     


ரசித்த வசனங்கள்


1 அப்பா பலசாலி,மூளைக்காரன்.பையன் கூல் Guy,ஆனா Tough ஆனவன்.ஆனா ஷோ ஸ்டீல் நான் தான்.ஏன்னா அவங்க டார்கெட்டே நான் தான்.

2. டெக்னிக்கலி நான் தான் நல்லவன்.அவங்கதான் கெட்டவங்க.

3. இப்போ கேள்வி என்ன?னா. ஜெயிக்கப்போவது நல்ல வில்லனா?கெட்ட வில்லனா?

4 நம்ம தேசம் அபாயத்தில் இருக்கு. நமக்கு இம்மீடியட்டா ஒரு ஏஜெண்ட் வேணும்.

5  அந்தக்கூத்தாசிப்பையன் வர்றதுகுள்ளே தைப்பூசமே வந்துடும்.வரச்சொல்லு அவனை.

போஸ் இப்போ வேல் தூக்கிடுச்சு.இப்போ எல்லாக்காவடிகளையும் வழி நடத்தும் லீடர் அவர்.


6 மெட்ராஸ்ல இருந்து ஆள் வந்திருக்கு ,உடனே போகனும்.

இப்படிக்காவடியை பாதிலயே விட்டுட்டுப்போனா எப்படி?

நீங்கதானே சொல்லிக்குடுத்தீங்க?செய்யும் தொழிலே தெய்வம்னு.நான் போயாகனும்.

7 முப்பது கோடிப்பேர் சம்பந்தப்பட்ட விஷயம்.இந்த ட்ரெய்னை வெச்சு எப்படி முடிக்கப்போறோம் ?


8 மிஷின் அக்கம்ப்பளிஷ்டு சக்சஸ்புல்லி

இல்லை சார் எனக்குப்பெருசா தோத்துட்டு நிக்கற மாதிரி தோணுது.

9 போஸ்,அத்தனை உயிர்களையும் நீ தான் காப்பாத்தி இருக்கே.அதுக்கான விலையைக்கொடுத்துதான் ஆகனும்


10 இது ஒரு சாபம்.என் தலைக்குள்ளே சுத்திக்கிட்டே இருக்கு.சாகறவரை என்னை விட்டுப்போகாது போல

11 இனிமே இது நடக்காதில்ல?

கண்டிப்பா நடக்கும் ,பெண்ட்டாஸ்டிக்கா,மார்வெலசா ,டிலைட்புல்லா நடக்கும்.ஏன்னா இப்போ அதைப்பண்ணப்போறது நான்.

12. ஐ ஆம் அன் ஸ்டாப்பபிள்

13 இது போஸ்க்கு தெரிஞ்சா திரும்பி வருவான்.தானா வருவான்.

14 விட சொல்றியா?

நம்ப சொல்றேன்

15. நான் உன்னோட Fan தெரியுமா? உனக்காக வெயிட் பண்றேன் தெரியுமா?

16 வா,உனக்கு நான் காட்றேன்.fan boy சம்பவம்னா என்ன?எனக்காட்றேன்.




2 டிமாண்ட்டி காலனி 3   தமிழ். ஹாரர் திரில்லர்

அருள்நிதி ஒரு அண்டர்ரேட்டட் ஹீரோ. இவரது ஸ்க்ரிப்ட் செலக்சன் பிரமாதமாக இருக்கும்
மாமூல் மசாலாக்கதையில் நடிக்கவே மாட்டார் மாறுபட்ட க்ரைம் திரில்லர் ,திகில் ஊட்டும் ஹாரர் திரில்லர் தான் இவரது  சாய்ஸ்.

முதல் பாகம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி 26 கோடி ரூபாய் வசூல் செய்த மாபெரும் ஹிட் படம்.இரண்டாம் பாகம் 60 கோடி ரூபாய்  வசூல் செய்து சாதனை படைத்தது.இப்போது வர இருக்கும் மூன்றாம் பாகம் 75 கோடி வசூல் நிச்சயம் ,100 கோடி வசூல் லட்சியம் என்று சொல்கிறார்கள்.

இதில் அருள்நிதி,பிரியா பவானி சங்கர் ,அர்ச்சனா ரவிச்சந்திரன் ,மீனாட்சி கோவிந்தராஜன்,மியா ஜார்ஜ்  ,குருசோமசுந்தரம், ஆகியோர் முக்கியக்கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

சாம் சி எஸ்  இசையில் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனத்தில்  அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

மிரட்டலான டீசர் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.





3 மண்டாடி. தமிழ். ஸ்போர்ட்ஸ் ஆக்சன் டிராமா

புரோட்டா சூரி ஹீரோ ஆகி விட்டார்.கருடன்,விடுதலை பாகம் 1 ,பாகம் 2 ,கொட்டுக்காளி என்று அவரது படங்கள் வரிசையாக வந்து வெற்றி பெறுகிறது.

மாண்டாடி என்றால் கடலில் அலைபவன் என்று அர்த்தம்

செல்பி (2022) பட இயக்குநர்  மதிமான் புகழேந்தி இயக்குகிறார்.

இயக்குநர் வெற்றிமாறனின் சொந்தப்படம் இது.

சூரி ,மஹிமா நம்பியார்,சத்யராஜ் ,கஹாஸ்,பால சரவணன், ஆகியோர் முக்கியக்கேரக்டர்களில் வருகிறார்கள்.

ட்ரெய்லரைப்பார்த்ததில் யூகித்த கதை

நாயகன் படகோட்டி வீரன்.அதில் சாம்பியன். அவர் தனது சொந்த ஊரான கடலோடி கிராமத்திலிருந்து தன்னைத்தானே  ஒதுக்கிக்கொண்டு வேறு இடம் போகிறான்.

வில்லன் அந்த ஏரியாவில் இரு பிரிவுகளை உருவாக்கி சண்டை மூட்டி விடுகிறான்.

நாயகன் திரும்ப வந்து ஒரு படகுப்போட்டியில் கலந்து கொள்ள ஒரு குழுவுக்குப்பயிற்சி அளிக்கிறான்.

நாயகன் ,வில்லன் இருவரில் படகுப்போட்டியில் யார் ஜெயித்தார்கள்?என்பதே க்ளைமாக்ஸ்.

ரசித்த வசனங்கள்

1 இந்தக்கடல் எவ்வளவு பெருசோ ,அதிலிருக்கும் ஆபத்துக்கள் அதை விடப்பெருசு.

2 சிங்கம் இல்லாதப்ப ஓநாய்க்கூட்டம் அரசாளும் கதையா ....

3  இந்த ஊரோட படகுப்பந்தயம்னா அது சுனாமி ரைடர்ஸ் தான்.எவன் வந்தாலும் அதைத்தடுக்க முடியாது.

4 லோக்கல் பசங்க இல்லாத டீம்னா அது எப்படி ஊர்க்காரங்க டீம் ஆகும்?

5 பந்தயம்கறது யார் பெரிய ஆளுனு காட்டிக்கறதுக்காக நடக்கும் போட்டி இல்ல.பந்தயம்கறது அறிவு

6 தொழிலைக்காப்பாத்திக்க என்ன வேணா நான் செய்வேன்.

7 உன்னை நம்பறவங்களுக்கு சாவையும் ,ஒப்பாரி யையும் தவிர்த்து என்னதான் நீ கொடுக்க முடியும்?

8 இன்னைக்கு மட்டும் நாம ஜெயிக்கலைன்னா நம்ம பசங்க கரைல நின்னு வேடிக்கை பார்க்கும் கூட்டமா மாறிடுவாங்க.

9 தரைல வேணா அவன் பெரிய ஆளா இருக்கலாம்.தண்ணில நாமதான் கிங்கு

10 புள்ளயை எதிரின்கிட்டே இருந்து காப்பாத்தி துரோகி கிட்டே ஒப்படைச்சு இருக்கே.


4 ரீ யூனியன். தமிழ். கேங்க்ஸ்டர் ஆக்சன் டிராமா


அருள்தாஸ் ,அனுபமா குமார் , நடிப்பில் சாட்ஸ் ரெக்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லோ பட்ஜெட் படம் இது.

ஸ்கூல் படிக்கும்போதே ரவுடியாக இருந்த ஒரு க்ரூப்  பல ஆண்டுகளுக்குப்பின் ஒன்று கூடுகிறது. அவர்களுக்குள் இருக்கும்  பழைய பகையும் ,மறைக்கப்பட்ட சில உண்மைகளும் இப்போது வெளியே வந்து மோதல் வெடிக்கிறது.


5. வி கே 30. கன்னடம்./தமிழ் ஆக்சன் டிராமா


துனியா விஜய்  இயக்குநர் ஆர் ஆர் வெற்றிவேல்  என்கிற தம்பி மகேஷ் இயக்கியிருக்கும் படம் இது.





6.  மகேந்திரகிரி வாரஹி.  தெலுங்கு /தமிழ்.  மித்தலாஜிக்கல் ஆக்சன் திரில்லர்

ஐஸ்வர்யா ராஜேஷ் ,சுமந்த் ,மாளவிகா நாயர் ,மீனாட்சி கோ ஸ்வாமி ,பிரம்மானந்தம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் ஜாகர்லபுடி இயக்கி இருக்கிறார்.


ட்ரெய்லரைப்பார்த்ததில் யூகித்த கதை

மகேந்திரகிரி என்ற ராஜ வம்சத்தை சேர்ந்த ஆண்கள் அனைவரும் அவர்களது 33 வது வயதில் இறக்கிறார்கள் .வாரணாசியில் இருக்கும் வாராஹி என்ற அம்மனின் சாபம் என்று கூறப்படுகிறது.இந்த மர்ம மரணங்கள் 150 வருடங்களாக ஏன் தொடர்கிறது என்பதை   நாயகனான தொல் பொருள் ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பதே கதை.


7  வேம்பயர்ஸ் சகா  ஹிந்தி /தமிழ் ரொமாண்டிக் ஆக்சன்  ஹாரர் திரில்லர்


 இயக்குநர் ஜூபர் கே  கான்   இயக்கத்தில்  அப்துல் அத்னான் ,ஜூபர் கே கான் ,சனா சுல்தான் ,புஷ்ரா ஷேக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ட்ரெய்லரைப்பார்த்ததில் யூகித்த கதை

ஒரு புகழ் பெற்ற கல்லூரியில்  நான்கு காதல் ஜோடிகள் இருக்கிறார்கள்.ஒரு பழங்கால வேம்பயர் கூட்டத்துக்கும் ,அவர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது.யார் வெற்றி பெற்றார்கள் என்பதே மீதிக்கதை.



8 ரணபாலி. தெலுங்கு/தமிழ்.  ஹிஸ்டாரிக்கல் ஆக்சன் டிராமா

விஜய் தேவரகொண்டா + ராஷ்மிகா மந்தனா  ஜோடியுடன் அர்னால்டு வோஸ்லூ நடித்திருக்கிறார்.ராகுல் சங்கிருதயன் இயக்கி இருக்கிறார்.

ட்ரெய்லரில் ஒரே ஒரு மனிதனின் பேராசையால் ஒரு பேரரசே அழிந்த கதை என்கிறார்கள்.ராஜா காலத்துப்படம் போல் தெரிகிறது..பாகுபலி டைப்பில் பிரம்மாண்டமாக முயற்சித்திருக்கிறார்கள்.





9 பிரதம திரிஷ்டியா  குட்டக்கர்   மலையாளம்/தமிழ்.  மிஸ்ட்ரி இன்வெஸ்டிகேசன் க்ரைம் திரில்லர்


பார்வதி திருவோத்து ,உன்னி மாயா பிரசாத்,மேத்யூ தாமஸ்,சித்தார்த் பரதன் ,விஜயராகவன்  ஆகியோர் நடிக்க  உருவாகி இருக்கும் படம்.நாயகி பார்வதி திருவோத்து முதன்முதலாக போலீஸ் ஆபீசராக நடிக்கிறார். டைரக்சன் சாஹத்

Thursday, September 10, 2026

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (பேமிலி டிராமா)@நெட்ஃபிக்ஸ் (Netflix)


 தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி Tholi Prema(2018),Mr Majnu(2019),Rang De(2021), வாத்தி(2023),லக்கி பாஸ்கர்(2024) ஆகிய ஐந்து படங்கள் இயக்கியவர்.அதில் மிஸ்டர் மஜ்னு மட்டும் பிளாப் படம்.மற்றவை அனைத்தும் வெற்றிப்படங்கள் தான்.தனுஷ் நடித்த வாத்தி தமிழில் சுமாராகப்போனாலும் தெலுங்கில் ஹிட்.இவர் இயக்கிய 5 படங்களில் லக்கி பாஸ்கர் தான் பிளாக் பஸ்டர் ஹிட்.கறுப்பு என்ற பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த சூர்யாவுடன் இவர் இணைந்திருக்கும் இந்தப்படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்போம்.



ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகன் ஒரு பெரிய தொழில் அதிபர் + பிஸ்னெஸ் மேன்,கோடீஸ்வரன். இவர் தம் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார்.நாயகன் சிறுவனாக இருக்கும்போதே அவனது அப்பா வேறு ஒரு பெண்ணைத்திருமணம் செய்து கொண்டதால்  நாயகனுக்கு இந்த உறவு முறையில் வெறுப்பு.திருமணம் செய்யாமலேயே வாழலாம் என நினைக்கிறான்.இப்போது நாயகனுக்கு 40+ வயது.


நாயகனின் அம்மாவுக்குப்பேரன் பேத்தி பார்க்க வேண்டும் ,மகனுக்குத்திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசை.தொடர்ந்து மகனை வற்புறுத்திக்கொண்டே இருக்க நாயகன் அதைத்தட்டிக்கழித்துக்கொண்டே இருக்கிறான்.ஒரு கட்டத்தில் அமெரிக்கா வில்.  சான்பிரான்சஸ்கோ போய் வாடகைத்தாய் மூலம் ஒரு குழந்தை பெற்றுக்கொள்கிறான்.


அதாவது நாயகனின் உயிர் அணுவை ஹாஸ்பிடலில் ஒப்படைத்தால் அவர்கள் வாசகைத்தாய் மூலம் கர்ப்பம் தரிக்க வைத்துக்குழந்தையைத்தருவார்கள்.அந்தக்குழந்தையுடன் 10 மாதம் கழித்து இந்தியா வந்து அம்மாவிடம் குழந்தையைத்தருகிறான்.


இப்போது அந்தக்குழந்தைக்கு மெடிக்கல் ரீதியாக ஒரு பிரச்சனை..இந்தப்பிரச்சனை சரியாக குழந்தையின் அம்மாவின் உதவி வேண்டும்.அவரது திசுக்கள் ,செல்கள் மூலம் ஆபரேசன் செய்து குழந்தையைக்காப்பாற்ற வேண்டும்.

நாயகன் மீண்டும். அமெரிக்கா போய் வாடகைத்தாயைக்கண்டு பிடித்து அவளை இந்தியா அழைத்து வருகிறான்.அந்த வாடகைத்தாய் தான் நாயகி.

நாயகி குழந்தையைக்காப்பாற்றுகிறாள்.நாயகி நாயகனை விரும்புகிறாள்.நாயகனுடன் அவள் இணைந்தாளா?இல்லையா?என்பது தான் மீதித்திரைக்கதை.


நாயகனாக த ஒன் சூர்யா.கஜினி படத்தின் சஞ்சய் ராமசாமி கேரக்டரை மனதில் வைத்து சஞ்சய் விஸ்வநாத் என்ற கேரக்டர் டிசைன் உருவாக்கப்பட்டிருக்கிறது.வாரணம் ஆயிரம் படத்தில் பார்த்த இளமை சூர்யாவை இதில் பார்க்க முடிகிறது.அவரது ஆடை வடிவமைப்பு ,நடிப்பு  இரண்டும்  பிரமாதம்.


நாயகியாக மமிதா பைஜூ.அரங்கேற்ற வேளை பட ரேவதி ,சந்தோஷ் சுப்ரமணியம் பட ஜெனிலியா ,முந்தானை முடிச்சு பட ஊர்வசி மூவரும் கலந்த கலவைதான் இவர் கேரக்டர் டிசைன்.கலக்கி இருக்கிறார்.படத்தின் முதல் பாதி முழுக்க இவர் ஆகிக்கம் தான்.குறும்பான பார்வை,முக பாவனைகள்.க்யூட் மொமெண்ட்ஸ்  என ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிப்பு.


நாயகனின்  அம்மாவாக ராதிகா செம நடிப்பு.குணச்சித்திரக்கதாபாத்திரத்தில் கலக்கி விட்டார்.

அப்பாவாக ராஜீவ் மேனன் ,சித்தியாக ரவீனா டாண்டான் கச்சிதமான நடிப்பு.இவர்கள் போக நாசர் ,காளி வெங்கட் ,மைம் கோபி என அனைவர் நடிப்பும் ஓக்கே ரகம்.

ஜி வி பிரகாஷ் இசை சுமார் ரகம் தான்.பாடல்களும் பெரிய ஹிட் இல்லை.பின்னணி இசையும் பிரமாதம் லெவலில் இல்லை.

எடிட்டிங்க் பக்கா.ரன்னிங்க் டைம் 161 நிமிடங்கள்.இன்னமும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.

ஒளிப்பதிவு ,சவுண்ட் டிசைனிங்க் ஓக்கே ரகம்.



சபாஷ் டைரக்டர்


1  நாயகன் கார் டிரைவருடன் செய்யும் கான்வர்சேஷன் அருமை.

2 நாயகி,நாயகனின் அம்மா இருவருக்குமான ஹாஸ்லிடல் சீக்வன்ஸ் அருமை.
3  முதல் பாதியை கலகலப்பாகக்கொண்டு போன விதம் அருமை.

4 சுனிலின் காமெடி டிராக் கச்சிதம்

5 நாயகன் நாயகி கெமிஸ்ட்ரி,மாமியார் ,மருமகள் பாண்டிங் இரண்டும் அருமை

6 நாயகனின் அம்மா இறந்த பின்  காட்டும் உணர்ச்சிப்பூர்வமான நாயகனின் நடிப்பு அமர்க்களம்.


லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 படத்தின் முக்கிய க்கரு வாடகைத்தாய் மேட்டர்.அது  எழுத்தாளர் சிவசஙகரி எழுதிய  ஒரு சிங்கம் முயலாகிறது என்ற நாவலைத்தழுவி முக்தா சீனிவாசன் எடுத்த அவன் அவள் அது (1980) படத்தில் வந்ததுதான்.சிவக்குமார்,லட்சுமி தம்பதியாக நடிக்க வாடகைத்தாயாக ஸ்ரீப்ரியா நடித்திருப்பார்.

2 சூர்யா ரசிகர்களைத்திருப்திப்படுத்த வலியத்திணிக்கப்பட்ட இரண்டு சண்டைக்காட்சிகள்  படத்துடன் ஒட்டவில்லை.

3 முதல் பாதி திரைக்கதை அளவு பின் பாதி திரைக்கதை இல்லை.எங்கெங்கோ பயணிக்கிறது.படத்தின் நீளமும் அதிகம்.போர் அடிக்கிறது.

4 கதைப்படி நாயகன் துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக் சாம்பியன்.மீடியாவில் புகழ் பெற்றவர்.அப்படிப்பட்ட வி ஐ பி யை ஒரு பெரிய ஹோட்டல்  ஓனருக்கு அவரை யார் என்றே  தெரியாமல் இருப்பது எப்படி ?

5 நாற்பது + வயது நாயகன், 20+ வயது நாயகி வயது வித்தியாசக்காதல் கதை அகத்தியன் இயக்கிய விடுகதை படத்தில் வந்ததுதான்.

6 கைக்குழந்தையுடன் இருக்கும் நாயகனை நாயகி சம்மதிக்க வைப்பதும் கே பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் பார்த்ததுதான்.

7 பின் பாதிக்கதையில் அப்பா செண்டிமெண்ட் ,சித்தி மீது பாசம் ,சித்தி மகளின் திருமணம் என கதை எங்கெங்கோ போகிறது.

8 முதல் பாதிக்கதைக்கும் ,பின் பாதிக்கதைக்கும் சம்பந்தமே இல்லை 

9 ஊட்டியில் நடக்கும் சித்தி மகளின் மேரேஜ் பங்க்‌ஷன் போர்சன் 26 நிமிடங்கள் வருகிறது.மெயின் கதைக்கும் ,அதற்கும் சம்பந்தமே இல்லை.நமக்கு ஒரு எமோஷனல் கனெக்ட்டும் இல்லை.

ரசித்த வசனங்கள்


1. நம்ம லட்சியத்துக்காகவும்,கனவுக்காகவும் எதை வேணும்னாலும் இழக்கலாம்.ஆனா எதற்காகவும் இலட்சியத்தையும் ,கனவையும் விட்டுத்தரக்கூடாது
2 நம்மைப்படிக்க வைத்து ஆளாக்கின நம் பெற்றோரை எப்பவும் நம் கூடவே வெச்சுக்கனும்

3 ஒரு பெண் ஒரு குழந்தையைப்பார்த்துக்கொள்வது போல் ஒரு ஆனால் பார்த்துக்கொள்ள முடியாது.

4 ஒருவர் மீது நமக்கிருக்கும் காதல் குறிப்பிட்ட காலம் வரை தான்.அதற்குப்பின் நம் மனம் வேறு ஒரு துணையைத்தேடிப்போகும்.
5 ஒரு விஷயம் உனக்குத்தேவைன்னா நீ தான் போய்க்கத்துக்கனும்.

6 ஒரு பொருள் ரிப்பேர் ஆகிட்டா புதுப்பொருள் வாங்கும் வரை அந்தப்பொருளை  ரிப்பேர் செய்ய உனக்குத்தெரிந்திருக்கனும்.
7 படிக்க வைப்பது என்னோட கடமை.
8 விவசாய நிலங்களை எக்காரணம் கொண்டும் கை வைக்கக்கூடாது


1 நம்ம பணம் ,ஸ்டேட்டஸ் எல்லாம் நமக்கு கவுரவமா இருக்கனும்,கர்வமா இருக்கக்கூடாது.

2 திருட்டுத்தனமா அன்பு காட்டுவார்,அது எனக்கு வேணும்னு தோணுச்சு.

3 ஒரு பையனைப்பத்தி நினைக்கும்போதே கூஸ்பம்ப் மொமெண்ட்ஸ் வரும்,தெரியுமா?

4 ரொம்ப ஒட்டாத,ஒட்டாதன்னு சொன்னேன்,இப்போப்பாரு ,எவ்ளோ கஷ்டமா இருக்குன்னு...

5 மனுசங்க பிரியறது சண்டை போடறதால் இல்லைங்க,சண்டைக்குப்பின் எப்படிப்பேசறதுன்னு தெரியாததால்தான்.

7 ஜெயிக்கறவரைக்கும் நிற்கக்கூடாது,ஜெயிச்சபின் அதைப்பத்தியே பேசிட்டு இருக்கக்கூடாது.

8 இப்போ எதுக்கு சந்திரமுகி  ஜோதிகா மாதிரி பிஹேவ் பண்றே?


அடல்ட் கண்ட்டெண்ட். வார்னிங். க்ளீன் யு .குடும்பத்துடன் பார்க்கலாம்.


CPS  கமெண்ட். பெண்களை மிகவும் கவரும்.பேமிலி ஆடியன்சை தியேட்டருக்கு வரவைக்கும்.கருப்பு மாதிரி லக்கி பாஸ்கர் மாதிரி பிளாக் பஸ்டர் ஹிட் ஆகாது. மீடியமாக ஓடும்.ரேட்டிங்க். 2.5 /5



 விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு சுவராஸ்யத்தகவல்


நாயகனின்  அப்பா பெயர் விஸ்வநாத்.இது மணிரத்னம் இயக்கிய  அக்னிநட்சத்திரம்(1988) படத்தில் விஜயகுமார் கேரக்டர் பெயர்.அவருக்கும் இரு மனைவிகள்.இரு மகன்கள்.அசோக் விஸ்வநாத்,கவுதம் விஸ்வநாத்

Wednesday, September 09, 2026

Unidentified(2026)- சவுதி அரேபியன் மூவி/தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் திரில்லர் )@அமேசான் பிரைம்

 


19/6/2026 முதல். அமெரிக்காவில்  ரிலீஸ் ஆன இந்தப்படம் இப்போது தமிழ் டப்பிங் கில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.டொராண்ட்டோ இண்ட்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் 5/9/2025 ல் திரையிடப்பட்டு பலரது பாராட்டுதல்களைப்பெற்ற படம் இது.




ஸ்பாய்லர் அலெர்ட்

கதை நடக்கும் இடம் சவுதி அரேபியா.


நாயகி கணவனை விட்டுப்பிரிந்து தனியாக வாழ்பவள்.கணவன் வேறு ஒரு பெண்ணைத்திருமணம் செய்ய இருக்கிறான் என்பது தெரிந்ததும் பிரிந்து வந்து விட்டாள்.போலீஸ் வேலைக்காகப்படிக்கும் நாயகி இப்போது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆக வேலை செய்கிறாள்.அதாவது போலீஸ் ஸ்டேஷனில் டாக்குமெண்ட்சை எல்லாம் டைப் செய்து சிஸ்டத்தில் ஏற்றும் வேலை.,பிரிண்ட் எடுக்கும் வேலை எல்லாம் செய்பவள் .கேசைத்துப்பறிவதில் போலீசுக்கு உதவியாக அவ்வப்போது இருப்பாள்.


பாலைவனத்தில் ஒரு இளம்பெண்ணின் பிணம் கிடைக்கிறது.பிணத்தின் உடலில் இருக்கும் உடைகளைப்பார்த்தால் நல்ல செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவளாக இருக்கலாம்.வேறு எந்தத்தடயமும் கிடைக்கவில்லை.


நாயகி பணி புரியும் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் இந்த கேசில் நாயகியைக்கூட இருந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறார்.

இந்தக்கேசை நாயகி எப்படி டீல் செய்தாள் என்பது மீதித்திரைக்கதை.

நாயகியாக மிலா ஐ ஜஹ்ராணி கச்சிதமாக நடித்திருக்கிறார்.

இறந்த பெண் அமலின் சகோதரி  ஜூட் ஆக நடித்த பள்ளி மாணவி கொள்ளை அழகு.

இன்ஸ்பெக்டராக வருபவர் ,நாயகியின் கணவராக வருபவர் ,இறந்த பெண் அமலின் முறைமாமனாக வருபவர் ஆகிய மூவர் நடிப்பும் கச்சிதம்.

சாம் தாம்சன் ,அமேலியா வார்னர் இருவரும் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள்.பின்னணி இசை குட்.

மோண்ட்டி ரோவனின் ஒளிப்பதிவு நாம் அதிகம் பார்க்காத சவுதி அரேபியாவின் அழகைக்காட்டுகிறது.

ரபேல் நூர்+ ஸ்டீவ் கோஹென் எடிட்டிங்கில் படம்  99 நிமிடங்கள் ஓடுகிறது.

பிரட் நிமன் என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார் ஹைபா ஐ மன்சூர்.



சபாஷ் டைரக்டர்

1 இறந்து கிடந்த பெண்ணுக்கு ஒரு சகோதரி இருப்பதை நாயகி கண்டு பிடிப்பது ,அவளின் குடும்பத்தாரையும் கண்டுபிடிப்பது  வித்தியாசமான கோணத்தில் காட்டியது.

2 மெயின் கதைக்கு சம்பந்தமில்லாமல் நாயகி டைவர்ஸ் மேட்டர் ,நாயகியின் சகோதரன் சமாதானப்படுத்துவது ,நாயகிக்குக்குழந்தை பாக்கியம் இல்லாததால் தான் கணவன் பிரிகிறான் போன்ற விஷயஙகளை எல்லாம் கதையோடு தொடர்பு படுத்திய விதம் பிரில்லியண்ட் 

3 இறந்து கிடந்த பெண்ணின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதும் ,ஹிட் அண்ட் ரன் கேசாக இருக்கலாம் என்பது தெரிய வருவதும் ஒரு திருப்பம்.

4 இறந்து கிடந்த பெண்ணின் சகோதரியோ,அம்மாவோ அந்த நிகழ்வு பற்றி எந்தக்கவலையையும் படாமல் இருப்பதை நாயகி ட்ராக் பண்ணுவது குட்.

5 இறந்து கிடந்த பெண் அமல்,சகோதரி ஜூட்.  , இருவருக்கும் அமலின் காதலன்   முறை மாமன் தான் என்பது தெரிய வருவதும்,திடீரென அவன் குற்றத்தை ஒத்துக்கொள்வதும் ட்விஸ்ட்.


6 அமலின் காதலன் நோவாதான் அமல் வேறு ஒருவனைத்திருமணம் செய்ய சம்மதித்ததால். அவளைக்கொலை செய்திருக்க வேண்டும் என அமலின் சகோதரி  ஜூட் கொடுக்கும் ஸ்டேட்மெண்ட் அதிர்ச்சி.

7 கொலையாளி யார் ?என்ற க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம்.




லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 நாயகிக்கு அறிமுகமில்லாத புது நெம்பரிலிருந்து அவ்வப்போது சில வீடியோக்கள் வருவது கேஸ் விசாரணைக்கு உதவுவது ஓக்கே,ஆனால் இன்ஸ்பெக்டர் அந்த போன் நெம்பரை ஆரம்பத்திலேயே ட்ராக் பண்ண முயற்சிக்கவே இல்லையே?அது ஏன் ?

2 போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராகப்பணியாற்றவர் ஒரு ஹெல்ப்பராக இருக்கும் நாயகியைக்காரின் பின் சீட்டில் அமர வைத்து அழைத்துப்போவது ஏன்?ஓனரம்மாவா?

3 இறந்த பெண் அமலின் சகோதரி ஜூட்டுக்கு அமல் தன் முறை மாமனைக்காதலிப்பது தெரியாது என்பது எப்படி? சொந்த மாமா மகனை லவ் பண்ணுவது தெரியாமல் போகுமா?

4 காதலித்த மாமா மகனை விட்டு விட்டு வேறு ஒரு ஆளுக்கு இரண்டாம் தாரமாக ஒத்துக்கொள்வது ஏன்?என்பதை அமல் தரப்பிலிருந்து சரியான விளக்கம் இல்லை.

5 கேஸ் முடிஞ்சிடுச்சு.இந்த அமல் பற்றிய பைலை நீயே வெச்சுக்கோ என இன்ஸ்பெக்டர் நாயகியிடம் தருவது எப்படி ?போலீஸ் ரெக்கார்டுக்கு அது வேண்டாமா?

6 புருசன் இரண்டாம் தாரமாக மனைவியின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய முன்வரும்போது கொல்ல வேண்டியது புருசனையா?இரண்டாம் தாரமாக வரும் சக்களத்தியையா?


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+


CPS கமெண்ட் - சவுதி அரேபியா பின்னணியில்  வந்திருக்கும் க்ரைம் திரில்லர் என்பதாலும் ,க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுக்காகவும் பார்க்கலாம்.ரேட்டிங்க் 2.5 /5

Unidentified
American theatrical release poster
Directed byHaifaa al-Mansour
Written byHaifaa al-Mansour
Brad Niemann
Produced by
  • Brad Niemann
  • Haifaa al-Mansour[1]
Starring
  • Mila al-Zahrani
  • Shafi al-Harthi
CinematographyMonty Rowan
Edited byRafael Nur[1]
Steve Cohen[1]
Music bySam Thompson
Amelia Warner
Production
companies
Distributed by
Release dates
  • September 5, 2025 (TIFF)
  • June 19, 2026 (United States)
Running time
99 minutes[1]
CountrySaudi Arabia
LanguageArabic
Box office$45,319[2][3]