அணில் ரவிப்புடி ,விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவான ஜன நாயகன் படத்தின் ஒரிஜினல் வெர்சன் ஆன பகவான் கேசரி படத்தின் இயக்குனர் இவர் தான் .சங்கராந்திக்கு வஸ்துண்ணம் என்ற மெகா ஹிட் படத்தை 2024ல் இயக்கியவரும் இவர் தான்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் மத்திய அரசுப்பணி யில் நேஷனல் செக்யூரிட்டி டிபார்ட்மெண்ட்டில் ஹையர் ஆபீசர் ஆக இருக்கிறார் . நாயகி இந்தியாவில் இருக்கின்ற மாபெரும் தொழில் அதிபர்களில் ஒருவரின் மகள் . நாயகிக்கு திருமணம் . மேடையில் நாயகிக்கு மாப்பிள்ளையைப்பிடிக்கவில்லை என அறிவித்து திருமணத்தை நிறுத்துகிறார் . தன்னை மதிக்காத , பெண்ணை மதிக்காத ஆள் கூட எப்படிக்குடும்பம் நடத்துவேன்? என்கிறார் .. நாயகன் நாயகியின் துணிச்சலைப்பாராட்டுகிறார் . இதுதான் நாயகன் - நாயகி இருவருக்கும் முதல் அறிமுகம்
அடுத்து கேரளாவில் இன்னொரு திருமண விழாவில் நாயகியை நாயகன் சந்திக்கிறார் . இப்போது நாயகியின் தோழி தான் மணப்பெண் .இது போல வெவ்வேறு விழாக்களில் சந்தித்த இருவரும் பரிச்சயம் ஆகிறார்கள் .
திடீர் என ஒரு விழாவில் நாயகி நாயகனிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் என்ன? எனக் கேட் க நாயகனும் சரி சொல்கிறார் . இருவருக்கும் திருமணம் நடக்கிறது . ஆனால் நாயகியின் அப்பாவுக்கு இந்தத்திருமணத்தில் இஷ்டம் இல்லை . இருந்தாலும் செல்ல மகளுக்காக அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை .
தம்பதிக்கு ஒரு மகன் , ஒரு மகள் என இரு வாரிசுகள் பிறக்கின்றன
ஆரம்பத்தில் நாயகன் கம்பெனியில் எம் டி மாதிரி இருக்கிறான். பின் மாமனாரின் சதியால் வீட்டு வேலைகளைப்பார்த்துக்கொள்கிறான் . கம்ப்பெனியை நாயகி பார்த்த்துக்கொள்கிறார் . கம்ப்பெனி வேலை விஷயமாக நாயகி அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது
சில சதி வேலைகள் செய்து மாமனார் நாயகன் - நாயகி இருவரையும் பிரித்து விடுகிறார் . டைவர்ஸும் ஆகி விடுகிறது
இதுவரை மேலே சொன்னவை படத்தின் முதல் 15 நிமிடக்கதை . நாயகன் எப்படி தனது குழந்தைகளை , மனைவியை தன வசப்படுததுகிறான் ? என்பதுதான் காமெடிக்கலக்களான மீதி திரைக்கதை
நாயகன் ஆக சிரஞ்சீவி ஜெயிலர் ரஜினி கெட்டப்பில் கண்ணாடி , தாடி , மீசை உடன் வருகிறார் . ஓவர் பில்டப் தரும் ஹீரோ இன்ட் ரோ ஆக்சன் மசாலா டெம்ப்ளேட்டில் இருந்து இறங்கி வந்து சிக்ஸர் அடிக்கிறார் . வின்னர் வடிவேலு மாதிரி தன்னை தாழ்த்திக்கொண்டு காமெடி பண்ணும் காட்சிகள் அனைத்தும் அருமை ,சிரஞ்சீவி ரசிகர்களுக்கும் இது புதுசு
நாயகி ஆக நயன் தாரா . ஆளுமையான கதாப் பாத்திரம் . மன்னன் விஜய சாந்தி மாதிரி மிடுக்குடன் வருகிறார் .ஓப்பனிங் சீன்களில் நாயகன் அவரைப்பார்த்து சூப்பர் என அபிநயம செய்யும்போது இவர் காட்டும் பாவனைகள் அழகு
நாயகியின் அப்பாவாக சச்சின் கேடெக்கர் வருகிறார் . அவரது வில்லத்தனமான நடிப்பு அருமை . நய வஞ்சகச்சிரிப்பு கமலின் சத்யா பட வில்லன் கிட்டியை நினைவுபடுத்த்துகிறது
நாயகனின் செக்யூரிட்டி டீமில் வரும் ஒரு பெண்ணாக கேத்ரீன் தெரேசா வருகிறார் . அதிக வாய்ப்பில்லை ., வந்தவரை ஓகே ரகம்
வெங்கடேஷ் கெஸ்ட் ரோலில் வருகிறார்
படத்தில் நடித்த மற்ற அனைவருமே அவரவர் பாத்திரத்தைத்திறம்பட ஏற்று நடித்திருக்கிறார்கள்
பீம்ஸ் செசிரெலியோ இசையில் பாடல்கள் ஆல்ரெடி ஹிட் . பின்னணி இசையும் நன்று . ஹீரோ பில்டப் சீன்களில் பி ஜி எம் தெறிக்கிறது
சமீர் ரெட்டியின் ஒளிப்பதிவில் காட் சிகள் அனைத்த்தும் பிரம்மாண்டம் . அதே போல் பாடல் காட் சிகளும் கலர்புல் கலக்கல் . தம்மி ராஜூவின் எடிட்டிங்கில் படம் 165 நிமிடங்கள் ஓடுகின்றது . ஒரு சீன் கூட போர் அடிக்காமல் கலகலப்பான திரைக்கதை
அமைத்து இயக்கி இருப்பவர் அணில் ரவிப்புடி
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் , நாயகி இருவருக்குமான சந்திப்புக்காட் சிகள் , காதல் மலரும் சீன்கள் காமெடி கம் யதார்த்தம்
2 நாயகன் திருமணத்துக்குப்பின் நாயகிக்கு வீட்டு வேலைக்காரனாக மாறும் சீன்கள் கலாட் டா ரகங்கள்
3 நாயகன் தனக்குக்கீழ் பணியாற்றும் ஜூனியர்களிடம் பந்தா பண்ணி பின் மொக்கை வாங்கும் இடங்கள் எல்லாமே கலகலப்பானவை , அந்த சீன்களில் நாயகனின் உடல் மொழி அருமை
4 நாயகன் பி டி மாஸ்டர் ஆக தனது வாரிசுகள் படிக்கும் பள்ளியில் நுழைவது , அவர்கள் மனம் கவர மடத்தனமாக ஏதாவது செய்து பல்பு வாங்குவது அருமை
5 தன்னை மட்டம் தட்டும் மாமனாரிடம் நாயகன் செக்யூரிட் டி ஆபீசர் ஆக சில டாஸ்க் எல்லாம் கொடுத்து அவரை ட்ரொல் செய்வது அருமை
6 நாயகி இரண்டாவது கல்யாணத்துக்குத்தயார் ஆவது , புது மாப்பிள்ளையை நாயகன் எதிர் கொள்வது எல்லாமே திரைக்கதைக்கு சுவாரசியம்
7 ஓடி பி என்றால் ஒன டைம் பளார் என விளக்கம் கொடுக்கும் இரு காட் சிகளும் அருமை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லன் வலிமையானவர் என்பதைக்காட்டிட எஸ் பி யை அவரது ஆபீஸிலேயே கொலை செய்வது எல்லாம் உருட்டோ உருட்டு ரகம்
2 வில்லன் நாயகியைக்கொலை செய்ய எளிமையான பலவழிகள் இருந்தும் பாதுகாப்பான பில் டிங்கில் இருக்கும்போது முயற்சிப்பது மடத்தனம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -16 +
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - விசுவாசம் கதைதான் என்றாலும் திரைக்கதையில் ரசிக்கத்தக்க காமெடிகள் சேர்த்து இருப்பதால் பார்க்கலாம் . ரேட்டிங்க் 3/5
| Mana Shankara Vara Prasad Garu | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Anil Ravipudi |
| Written by | Anil Ravipudi |
| Produced by |
|
| Starring | |
| Cinematography | Sameer Reddy |
| Edited by | Tammiraju |
| Music by | Bheems Ceciroleo |
Production companies |
|
Release date |
|
Running time | 165 minutes |
| Country | India |
| Language | Telugu |
| Budget | ₹200 crore[1] |
| Box office | ₹297.25 crore[2] |

0 comments:
Post a Comment