Friday, August 07, 2020

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு (2019)_ சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)


 Irandam Ulagaporin Kadaisi Gundu (Tamil) (aka) Irandam Ulagaporin Kadaisi  Gundu review

எழுத்தாளர்கள்ல  2 வகை உண்டு. தான்  என்ன  நினைக்கறோமோ  அதை  அப்படியே  எழுதித்தன்  சிறப்பை நிறுவுபவர்  ஒரு வகை .  விகடன் , குமுதம், வாரமலர், கல்கி , குங்குமம் என  ஒவ்வொரு பத்திரிக்கைக்கும்  ஒரு ஸ்டைல்  உண்டு . அந்தந்தப்பத்திரிக்கையின் தரத்துக்கு  ஏற்ப  (  வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப )  தன்  படைப்பை  ஒரு ஷேப்க்கு  கொண்டு  வந்து  சைன்  பண்றவங்க  இன்னொரு  வகை . இந்தப்பட  டைரகடர்   2 வகைக்கும்  பொருந்தும் ஆள் போல

 

ஒரு நல்ல  த்ரில்லர் கதையை  படமா எடுக்கலாம்னு ஒரு டைரக்டர்   களம்  இறங்கறப்போ அவர் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையைத்தான் இந்தப்பட  டைரக்டரும்  சந்திச்சு இருக்கனும். சார், இதுல கமர்ஷியல் எலிமெண்ட்டே  இல்லை , ஒரு ஹீரோயின், ஒரு லவ்வு , 2  சாங்  , 2 ஃபைட்  சேர்த்தா  படம்  எங்கேயோ  போய்டும். இப்டி யாரோ  சொன்னாங்கன்னு  ஒன்றரை  மணி  நேரத்தில்  க்ரிஸ்ப் ஆக  அமைத்த  பிரமாதமான  திரைக்கதையை  மசாலா  அயிட்டங்கள்  சேர்த்து  ரெண்டே கால்  மணி  நேரப்படமா  தந்தாலும்  தனித்துவம்  தெரியுது , கலக்கிட்டார்  மனுசன்

 

1  உலகப்போர் நடந்தப்ப   அங்கே வெடிக்காத  ஒரு குண்டு  காயலான்  கடைல சிக்கி   அதை பற்றி விபரம்  தெரியாத  ஆட்களால்  எடைக்குப்போடப்பட்டு  காசு  பார்க்க  லாரில  போகுது , லாரி டிரைவர் தான்  ஹீரோ

 2  போரில்  பாதிக்கப்பட்ட    ஆனால் அரசால் நிவாரணம் கிடைக்கப்பெறாத  ஒரு போராளிப்பெண்  மீடியாவில்  ஒர்க் பண்ணுது .அந்தப்பொண்ணு இந்தக்குண்டைத்தேடிக்கிளம்புது. இந்தக்குண்டைக்கண்டு  பிடிச்சா  இந்த  உலகத்துக்கு  பல உண்மைகளைப்படம்  போட்டுக்காட்டி  பாதிக்கப்பட்ட  அனைவருக்கும்  நிவாரணம்  வாங்கித்தரலாம்னு   ஐடியா

 

3  லாரி  ஓனருக்கும் , டிரைவ்ருக்கும்  ஒரு தகறாரு . அவரு  க்ளீனரை   தன்னோட ஸ்பையா  டிரைவர்  கூட அனுப்பறாரு.   அவருக்கு  என்னா டவுட்னா எடைக்குப்போடறப்ப டிரைவர்  எதுனா    ஆட்டையைப்போடறானோ?அதை  செக் பண்ண   ஒரு ஆளை  அனுப்பறார். அவன்  அப்பப்ப  டீட்டெய்ல்ஸ்   அப்டேட்டிட்டு  இருக்கான்

 

4   லாரி  டிரைவரான  ஹீரோவுக்கு  ஒரு காதலி. வீட்ல  வேற  பக்கம்   மாப்ளை  பார்க்கறாங்க , அவங்க  கிட்டே  இருந்து  தப்பி ஹீரோ  கிட்டே  வந்து  சேரனும்

 

5  இந்த மாதிரி  காணாமப்போன  குண்டு  இருக்கறது  மீடியாவுக்கு  தெரிஞ்சுடக்கூடாதுனு  மேலிடத்துல  இருந்து  போலீஸ்க்கு  உத்தரவு போகுது , அவங்க  ஒரு பக்கம்  தேடிட்டு இருக்காங்க

 

 மேலே  சொன்ன  5 வகையான   கேரக்டர்களும்  எந்தப்புள்ளியில் சேர்றாங்க என்பதுதான்  திரைக்கதையின் சுவராஸ்யம்

 

படத்தின்  முதல்  ஹீரோவே திரைக்கதை  தான், லோகேஷ்  கனகராஜின்  கைதி  கதைக்கும் , குண்டு  கதைக்கும்  அடிபப்டையில்  ஒற்றுமைகள்  உண்டு. ஒரே நாளில்  நடக்கும்  கதை , லாரி  டிரைவர்  சந்திக்கும்  பிரச்சனைகள்

 

 ஆனா  காயலான்  கடை  களம்  தானேனு அசால்ட்டா  சேர்ல சாய்ஞ்சு  உக்காந்து  படம்  பார்க்க ஆரம்பிச்சா  இயக்குநர்  காட்டிய  டீட்டெய்லிங்  ,மிரண்டுட்டேன். கலக்கிட்டார்  மனுசன்

 

 காயலான்  கடை   ஓனர்   அவரோட  அல்டாப்புகள் , லேபர்சை   கேவலமா நடத்தும்  அவர்  பாங்கு . லாரி  டிரைவரான  ஹீரோவை நடத்தும்  விதம்  இருவருக்கும் இடையே யான  சண்டைகள்   எல்லாம்  கலக்கலா  ஒரு சிறுகதை  போல மனசில் பதியுது

 

மீடியாவில் பணி  புரியும்  பெண்கள்  இருவரும்  செய்யும்  சாகச  பயணம் குட். ஆனா  எந்த  விதமான  பாதுகாப்பும் இல்லாம  அவங்க  வருவது  பயக்க வைக்குது

 

ஹீரோவா  அட்டக்கத்தி  தினேஷ். நல்லா  பண்ணி  இருக்கார் .  சக  தொழிலாளிக்கு  ஆபத்து  என்றதும் ஓனரை  பகைச்சுக்கிட்டு  ஹாஸ்பிடலுக்கு  எடுத்துச்செல்லும்  அவசரம்  அருமை   நாயகியுடனான  காதல்  குறும்புகள்  கச்சிதம்

 

 க்ளீனராக வரும்  முனீஷ்காந்த் பிரமாதமான  நடிப்பு  , அவருக்கு  கேரக்டர்  ஸ்கெட்ச்  ஒவ்வொரு படத்திலும்  நல்லா  அமைவது  ஆச்சரியம் . பின்னி  எடுத்திருக்கார்  மனுசன்

 

 லாரி  ஓனர்  நடிப்பு தரம் .  ஒளிப்பதிவு  , இசை , பின்னணி  இசை  மிரள வைக்குது . நல்ல  தரம்

 

சபாஷ்  டைரக்டர்

 

1        முதல்  10 நிமிடங்களில்  உலகப்போர்  பற்றிய  ஆவணப்டமும், க்ளைமாக்ஸில்  காட்டும்  புள்ளி  விபரங்களும் நல்ல டீட்டெய்லிங்

2   திரைக்கதை  எந்த  இடத்திலும்  தொய்வில்லை . நாயகன் – நாயகி  சம்பந்தபப்ட்ட  காதல்  காட்சிகள்   மெயின் கதையிலிருந்து  விலகி இருந்தாலும் பெரிய   பாதிப்பில்லை

 

3        ஒரு  பரபரப்பான  த்ரில்லர்  கதையில்  துனிச்சலாக  காமெடி  டிராக்  வைத்தது . அது  தனியே  இல்லாமல்  கதையோடு  சேர்ந்து  பயணிப்பது

4   நாயகன்  தன் நண்பன் இறந்து   விட்டதாக  நினைத்து  கதறிஅழும்  காட்சியில் அசால்ட்டாக நண்பன்  வந்து  இன்னாபா  பிரச்சனை? என்ன ஆச்சு? என கேட்பது,ம்  அதைத்தொடர்ந்து   நிகழும்   சம்பவங்களும்

 

 

 

நச்  டயலாக்ஸ்

 

1        ஏம்மா, தண்ணிக்குடத்தோட நிக்கற  பொண்ணே!  உனக்கும் எனக்கும்  என்ன வித்தியாசம்? சொல்லு பார்ப்போம்?

தெரியலையே?

 நீ  தண்ணியோட   வந்திருக்கே, நான் தண்ணி  போட வந்திருக்கேன்

 

2        இன்னாபா? நீ ரிட்டயர் ஆகியே  ஆறு மாசம்  ஆச்சு, இன்னும் யூனிஃபார்ம் போட்டு மாமூல் வாங்கிட்டு இருக்கே?


3          முதலாளிக்கு  ஸ்பையா  வேலை பார்க்கற எத்தனையோ பேரை  நான் பாத்திருக்கேன், அவனுங்க  முன்னேறுனதே இல்லை

4  நான் டிரைவரா ஆனபிறகு  ஓனராண்ட  சொல்லி  லாரில  இருந்து  இறங்க  ஒரு    குட்டி  லிஃப்ட்  வைக்கச்சொல்லனும், எம்மாம்  உயரம்?

 

4        ஆடு மேல  வண்டி இடிச்சிடக்கூடாதுனு வண்டியை  ஒதுக்குனதுல ஆக்சிடெண்ட்  ஆகி  இறந்தவர்  என் அப்பா5        மனுசன்ன்னா  ஒருவர் வலியை  இன்னொருவர் உணரனும், நானும் அனுபவிச்சாதான்  உணருவேன்னு  அடம்  பிடிச்சா  எப்படி?


6        என்  வேலை  என்ன?னு பார்க்காதே! என் திறமை  என்ன?னு பாரு


7        நம்ம நாட்டுக்குண்டு  நம்ம  நாட்ல  வெடிக்குமா?

 இன்னாடாக்கதையா கீது? அப்போ  அவங்கவங்க நாட்டு குண்டு அந்தந்த நாட்டில் வெடிக்காதா?  குண்டுக்கு  உண்டான  மரியாதையையே கெடுத்துட்டே

 

8        டேய், நீ நைட்  பூரா  கண் முழிச்சு லாரி  ஓட்டுவே , பகல்ல வீட்டுக்கு வந்து  தூங்கிடுவே , நான்  நைட்  பூரா தூங்கிட்டு பகல்ல ஆஃபீஸ்க்குப்போய்டுவேன், அப்றம்  நமக்குள்ளே  மத்த  விஷயம்  எல்லாம் எப்படிடா நடக்கும்?

 லாஜிக் மிஸ்டேக்ஸ்

 

1  போலீஸ்  ஆஃபீசர்  கூடவே  இருக்கும் ஒரு போலீஸ்   மீடியா  லேடிக்கு  இன்ஃபார்மராக  இருப்பது  ஓக்கே , ஆனா  மெசேஜ்  மட்டும்  அனுப்பினால் போதாதா? அடிக்கடி  ரகசியமாய் பேசினால்  டவுட் வராதா?

 

2   போலீஸ்  முதற்கொண்டு  பலரும்  பயப்படும்  அந்த  மீடியா  லேடி கேரக்டருக்கு பலரும்  அறிந்த  ஒரு பெரிய  நடிகையை   புக்  பண்ணி  இருந்தால்  கெத்து  காட்டி இருக்கலாம். , அவர்  சமபந்தப்பட்ட  காட்சிகள்  ஏனோதானா என இருக்கு


3   அரசியல்  பலம், போலீஸ்  துணை  எல்லாம்  இருந்தும்  எந்த  வித  பின் புலமும்  இல்லாத  மீடியா  லேடீஸ்  இருவரை    ஃப்ரேம்  பண்ண  முடியாம  தடுமாறுஅவ்து அபத்தம்


4  அண்ணன், அண்ணி  மேல்  பாசமோ  மரியாதையோ  இல்லாத  நாயகி  மன்சை  மாற்ற  அண்ணன்  தற்கொலை நாடகம்  போடும் இடம் தேவை அற்றது

 

சி.பி  ஃபைனல்  கமெண்ட்  -  பர  பரப்பான  சீட் எட்ஜ்  த்ரில்லர்  படம்  பார்க்க  அசைபப்டுபவர்கள் தவறவிடக்கூடாத  ப்டம் . நெட் ஃபிளிக்சில்  கிடைக்குது  . டோண்ட்  மிஸ்  இட்  .   ரேட்டிங்  3.5  / 5

0 comments: