Monday, August 03, 2020

பொய் சாட்சி –(1982) - சினிமா விமர்சனம்





ஹீரோ  ஒரு பக்கா  ஃபிராடு. அவர்  வேலையே  கோர்ட்ல  சாமார்த்தியமா  பொய் சாட்சி  சொல்வதுதான் . எப்படி  அரசியல்வாதிங்க ஜனங்களை  ஏமாத்தறதையே  தங்கள்  தொழிலா நடத்திட்டு வர்றாங்களோ அந்த  மாதிரி  கோர்ட்டை  ஏமாத்துவதில்  ஹீரோ  கில்லாடி , ஆனா  இவரும்  ஒரு கொள்கை  வெச்சிருக்கார், அது என்னான்னா  கொலை  கேசில்  மட்டும் பொய் சாட்சி சொல்ல மாட்டேன், ஏன்னா  அப்டி சொன்னா ஒரு அப்பாவி வாழ்க்கையே பாழாப்போய்டும்

அப்படி  வைராக்யத்தோட  இருந்தவர்  சந்தர்ப்ப  சூழ்நிலையால  கொலைக்கேசில்  பொய் சாட்சி  சொல்லி ஒரு அப்பாவிக்கு  ஜெயில்  தண்டனை  கிடைக்க  காரணம் ஆகிடறார், அந்தப்பழிக்குப்பரிகாரமா என்ன  செஞ்சார்   என்பதும்  அந்த  விஷயம்  வெளில  தெரிய  வந்த  போது  என்ன ஆச்சு  என்பதும் க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்ஸ்

ஓப்பனிங்  சீனிலேயே  கே பாக்யராஜின்  தர்பார்  களை  கட்டுது.கட்சிக்காரரை  செருப்பால்  அடித்தவரை நேரில் பார்த்தேன்  என பொய் சாட்சி  சொல்பவர்  எல்லா விபரங்களையும் கேட்டு  வைத்தவர்  செருப்பு  என்ன  கலர்  என்பதை  மட்டும்  கேட்க மறக்கிறார், குறுக்கு விசாரணையில்  வக்கீல்  மடக்கும்போது    அவர்  வ்க்கீலை  திருப்பி  ஒரு கேள்வி கேட்டு  மடக்குவாரே  ஆரவாரமான  காட்சி

செந்திலை  ஹோட்டலுக்குக்கூட்டிட்டுப்போய்  சாப்பாடு  வாங்கிக்கொடுத்து   தானும் ஒரு கட்டு கட்டிட்டு எஸ்  ஆகும்  காட்சியில்  ஹோட்டல்  ஓனரிடமே  லந்து  பண்ணுவது  அக்மார்க்  பாக்யராஜ் முத்திரை

விவ்சாயம்  பண்றேன்னு   அவர்  வயக்காட்ல  உழவோட்டும்போது   கட்டி வெச்சிருந்த  பசுமாட்டைக்காணோமே  என  தேடும்  ஓனரின்  மனைவி பின் கணவரிடம்  முறையிடுவதும்  பின் நடக்கும்  காமெடி  களேபரங்களும்  அருமை

சைக்கிள்  கடைல  வேலை  கேட்டுப்போன் இடத்தில் ஒரு ஒன்ற்ரையணா  பூட்டை திறக்க  முடியாமல்  அவர்  தடுமாறும்போது ஜூஜூபி  பூட்டு  என  திறப்பது,ம்   இந்த  பூட்டையே  இவ்ளோ  லாவகமா  திறந்துட்டியே, கல்லாவை அப்டி திறக்க மாட்டேனு என்ன    நிச்சயம்? என  அவர் மடக்குவதும்  ஆஹா

 கொல்லன்  பட்டறையில்  வேலை  செய்வதும்  அது  சம்பந்தமான  காமெடி  மட்டும் எடுபடலை , சாதா வாத்தான் இருக்கு. வேற  சீன் யோசிச்சிருக்கலாம்

நாயகியாக  ராதிகா. அதிக  வாய்ப்பில்லை . வந்தவரை  பேரைக்காப்பாத்தி இருக்கார்


நாயகனின் அக்காவாக  சுமித்ரா  அருமையான  நடிப்பு

 சபலிஸ்ட்டாக  வரும் கல்லாபபெட்டி  சிங்காரத்துக்கு பொருத்தமான  ரோல் . விளையாடிட்டார்


லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1  பொய் சாட்சி  சொல்லி   தண்டனை  பெற்றவரைக்காப்பாற்ற மனம் திருந்திய பின் நாயகன் ஜட்ஜைப்பார்த்து  உண்மையை  சொல்லி இருக்கலாமே?  அந்த  முயற்சியில் ஈடுபடாதது  ஏன்?

2  சனிக்குளத்தில்  பணம்  எடுக்க  மூழ்கும்  நாயகி  தன் உடைக்ள்  அனைத்தையும் கழட்டி கரையில் போடுவது அபத்தம் அதுக்கு  ஒரு கல் கூட வெயிட்டா வைக்கலை. துவட்ட  துண்டும்  கொண்டு  வர்ல . எப்படி  சமாளிப்பார்?

3  ஒரு காட்சியில்  சனிக்குளத்தில் பணம்  திருடுவது  நள்ளிரவில் என வசனம்  வருது, ஆனா  காட்சியா  காட்டும்போது  பகல்  தான். பகல்  டைம்ல தான் ஜனங்க  இருப்பாங்களே?

4   நாயகன் , நாயகி  இருவரும்  குளத்தில்  மூழ்கி  எழும்போது   தலை முடி நனைஞ்சு  இருக்கு  , ஆனா  அடுத்த  ஷாட்டில்  க்ளோசப் ல காட்டும்போது காய்ஞ்சிருக்கு

5   சபலிஸ்ட்டான கல்லாப்பெட்டி  சிங்காரம்   அடைக்கலம்  கொடுத்த  அடுத்த  ஒரு மணி   நேரத்துலயே கையைப்பிடிச்சு இழுக்கறார். இதெல்லாம்  நிதானமா  செய்ய  வேண்டிய  விஷயம். நம்பவே முடியாத  காட்சி  அமைப்பு

 6  நாயகனின்  அக்கா  கணவர்  கொலைக்கேசில்  ஏன் மாட்டவைக்கப்படுகிறார்? யார்  ஏன் அதை  செய்கிறார்கள்  என்ற விபரம்  சொல்லப்படவில்லை

 சி.பி ஃபைனல்  கமெண்ட் -  கே பாக்யராஜின்  அக்மார்க்  காமெடிகளை  ரசிப்பவர்கள்   பார்க்கலாம், பிரமாதம்  எல்லாம்  இல்லை, ஆனாலும்  ரசிக்கலாம். விகடன் யூக மார்க் 45 , ரேட்டிங்  3 / 5

Poi Satchi Full Movie HD - YouTube

0 comments: