Tuesday, August 11, 2020

DOUBLE JEOPANDY (1999) –சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)

 Double Jeopardy (1999)

DOUBLE  JEOPANDY (1999) –சினிமா விமர்சனம் ( க்ரைம்  த்ரில்லர்)

 

செய்யாத  ஒரு தப்புக்கு உங்களுக்கு  தண்டனை  கிடைச்சா  நீங்க  என்ன செய்வீங்க? அந்த தப்பை  செஞ்சு  டேலி  பண்ணிடுவோம் இல்லையா? அதான்  இந்தக்கதையின் KNOT

 

ஹீரோ, ஹீரோயின்  இருவருக்கும்  ஒரு மகன், நல்ல  குடும்பம். ஒரு நாள்  அவங்க  கடல்ல  ஒரு ரைடு  போய்ட்டு  வரலாம்னு  தீர்மானிக்கறாங்க . மகனை  ஒரு டீச்சர்  கிட்டே  விட்டுட்டுப்போறாங்க . அவங்க  குழந்தையைப்பாத்துக்கட்டும், நாம  ஒரு ட்ரிப் அடிச்ட்டு வந்துடலாம்னு  ஹீரோ  சொன்னதால  ஹீரோயின்  ஓக்கே  சொல்லி   போறாங்க

 

நைட்  2 பேரும்  ஜாலியா  இருந்துட்டு காலைல  எந்திரிச்சுப்பார்க்கும்போது  கணவனைக்காணோம்.  மனைவிக்கு  அதிர்ச்சி . மனைவியின்  உடலில்   ரத்தக்கறை , அவங்களுக்கு  காயம்  ஏதும் இல்லை ஆனா  அருகே  ஒரு கத்தி  கிடைக்கு . யாரோ  கணவனை  தாக்கி  இருக்காங்க . அவர்  போராடி  இருக்கார் .. இதான்  மனைவியுஇன் யூகம், அப்போ  கரெக்டா  போலீஸ்  வந்துடுது. சந்தர்ப்பமும்,   சூழ்நிலையும்  மனைவிக்குப்பாதகமா  இருக்கு

 

 கோர்ட்ல  கேஸ்   அவர் தன்  கணவனை  இன்சூரன்ஸ்  பணத்துக்காக  கொலை பண்ணி  இருக்கலாம்னு சொல்றாங்க .. மகனை  அதே  டீச்சர்  கிட்டே  விட்டுட்டு  மனைவி  ஜெயிலுக்குப்போறாங்க

 

 அப்பப்ப  மகன்  கிட்டே  ஃபோன்ல  பேசிக்கிட்டு  இருப்பாங்க. ஒரு நாள்  மகன் பேச்சு  வாக்குல  அப்பா  அப்டிங்கறான், உடனே  லைன் கட் ஆகுது

 

 அப்போதான்  நாயகிக்கு ஒரு உண்மை  தெரியுது. தன்  கணவன் பிளான்  பண்ணி  நம்மை  ஏமாத்தி  இருக்கான். டீச்சரும்  அவனுக்கு  உடந்தை , இப்போ  கணவன்  டீச்சர்  கூடத்தான்  இருக்கான்

 

 இந்த  உண்மை  தெரிஞ்சதும்  நாயகி  ஜெயிலில்  சிலருடன்  டிஸ்கஸ்  பண்றா. அவளுக்கு  சொல்லப்படும்  ஆலோசனைகள்  அவளூக்கு  2 விதமான  ஐடியாக்களை  தருது

 

1        தன் கணவனை  தேடிக்கண்டு பிடிச்சு  போட்டுத்தள்ளீடலாம், ஏன்னா  அதுக்கு  தண்டனை  கிடையாது. அதான்  ஆல்ரெடி  தண்டனை  அனுபவிச்ட்டு இருக்காரே?

2  தன்  கணவன்  எப்படி  தன்னை   மாட்ட வெச்சாரோ அதே  மாதிரி  டிராமா  பண்ணி   தான்  காணாம  போன  மாதிரி  செட்டப் பண்ணி  கனவனை கொலை  கேசில்  மாட்ட  வைப்பது

 

போலீசுக்கு  இந்த   மேட்டர்  தெரிய  வருது. அவங்க  ஒரு பக்கம்   நாயகியை  வலை வீசி தேடிட்டு இருக்காங்க , பரோல்ல  வெளில  வந்த  நாயகி  தான்  நினைச்சபடி  செஞ்சாரா? இல்லையா? என்பதே  பரப்ரப்பான திரைக்கதை

 

படத்துல  நாயகி நடிப்பு  அருமை . முதல்  பாதி அப்பாவி    மனைவி  ரோல்லயும் சரி , பின் பாதி    ரிவஞ்ச்  எடுக்கும்போதும்   சரி  , மாறுபட்ட  இரு வித  நடிப்பு

 

நாயகன்  கம் வில்லன் நடிப்பும்  சோடை  போகலை . நாயகிக்கு உதவும்  போலீஸ் ஆஃபீசர்   நடிப்பு  கச்சிதம்

 

 க்டைசி  20 நிமிடங்கள்  நல்ல  பரபரப்பு , அதை  ரசிக்க  ஓப்பனிங்கில்  வரும்  முதல்  30 நிமிடக்காட்சிகளை  பொறுமையாக  பார்க்கனும், ஸ்லோவாதான் போகும்

 How accurate is the movie Double Jeopardy?

சபாஷ் டைரக்டர்

 

1        நிலப்பரப்பில்  அந்த  குற்ற  போலி சம்பவத்தை  அரங்கேற்றினால்  டெட் பாடி  தேடும்  படலத்தில்  மாட்டுவோம்  என  கடல்  பரப்பில்  அரங்கேற்றிய  ஐடியா

2        பின் பாதியில்  மனைவியை  மகன்  மாதிரி  போலி  சிறுவனை  செட்டப்  செய்து  அவளை  அலைக்கழித்து  போடும் டிராமா  ஐடியா

3    சவப்பெட்டியில்  மாட்டிய  நாயகி  தப்பிக்கும்  ஐடியா  லாஜிக்கலாக  நல்லா வந்திருக்கு

 

சில  சந்தேகங்கள்

 

1  ஒரு கொலைக்கேஸ்ல   குற்றவாளிக்கு   தண்டனை  கிடைக்கனும்னா   கொலை செய்யப்பட்ட  நபரோட   டெட்  பாடி   தேவை  இல்லையா?

 

2  சந்தர்ப்ப  சூழ்நிலையால  கொலை தான் நடந்திருக்கும்னு   யூகத்தின்  அடிபப்டையில் கேஸ்  கொண்டு போனாலும்  குற்றவாளியின்  ஒப்புதல்  வாக்குமூலம் வேணாமா?

 

3  தன்னை    தாக்க  வரும் நாயகியை  நாயகன்  சவப்பெட்டிக்குள்  உயிருடன்  அடைக்கும்போது  அவ  கிட்டே  ஆயுதம், உபகரணம்  இருக்கா?னு செக்  பண்ண  மாட்டானா?

 BoyActors - Double Jeopardy (1999)

சி.பி  ஃபைனல் கமெண்ட் -   ஐந்தே  கேரக்டர்களை  வைத்து  எடுக்கப்பட்ட  லோ பட்ஜெட்  க்ரைம்  த்ரில்லர் , பார்க்கலாம், நெட் ஃபிளிக்சில் கிடைக்குது. ரேட்டிங்  2.75 / 5

1 comments:

srinath vinayak said...

indha kadhai thaan tamil la sarathkumar nadicha "dosth" padama eduthaanga.