Saturday, August 01, 2020

அவள் அப்படித்தான் ( 1978) - சினிமா விமர்சனம்
ருத்ரய்யா  எடுத்த ஒரே படம்  இதுதான்னு  நினைக்கறேன், ஒரு வாசகம்  சொன்னாலும் திருவாசகம்  சொன்னாரு  கதையா  பிரமாதமா  எடுத்திருக்காரு . சினிமா  எடுக்க  வரும் புது ஆட்கள்  அந்தக்காலத்தில் இந்தப்படத்தை  ஒரு படிப்பினையா   பார்த்து  கத்துக்குவாங்களாம்

பெண்களின்  பெருமைகள்  பற்றி  ஒரு டாக்குமெண்ட்ரி படம்  எடுக்க நினைக்கறாரு ஹீரோ . அதுக்கு  அவரோட  நண்பர்  உதவி பண்றார்.. அவர்  பல பெண்களை  பேட்டி காண  வேண்டி இருப்பதால்   துணைக்கு  ஒரு பெண்  இருந்தா  உதவும்னு நினைச்சு  தன் ஆஃபீசில்  பணி  புரியும் நாயகியை  துணைக்கு அனுப்பறார்

 நாயகனும், நாயகியும்  பழகறாங்க . நாயகியின்  கடந்த  கால  வாழ்வில்   அவர் அம்மா கேரக்டர்  சரி இல்லாததால்  அவர்  மன ரீதியாக   பாதிக்கப்படுகிறார். போதாததுக்கு  அவர் வாழ்வில்  2 பேரை  காதலித்து   ஏமாற்றப்பட்டவர் . அதனால்  ஆண்கள் மேலும். க்லயாணம், குடும்பம்  போன்ற  உறவுகள்  மீதும் அவருக்கு  வெறுப்பு . ஆனா  போகப்போக நாயகி நாயகன் மேல  அன்பு வசப்படுகிறார். நாயகன்  வெளிப்படையா  தன் காதலை  நாயகியிடம் சொல்லலை . இறுதியில்  என்ன  ஆச்சு? என்பது   சஸ்பென்ஸ்

 நாயகனா  கமல் . ஒரு ஃபிலிம் மேக்கரா  அந்தக்காலத்துலயே  கெத்து  காட்டி நடிச்சிருக்கார்   நாயகி  மீது  பரிதாப்பபப்டுவதும்  அது அன்பாக மலர்வதும் , காதலாக  கசிந்துருகுவதும்  ஆனா அதை வெளிப்படுத்தாமலேயே இருப்பதும்  செமயான  முரளி  டைப் நடிப்பை  அப்பவே தந்திருக்காரு

 சின்ன  ரோல்ல வந்தாலும்  எப்பவும் கமல்  ரஜினி காம்போ காட்சிகள்ல  எல்லாப்படங்கள்ல யும் ரஜினிதான்  மாஸ்  காட்டுவாரு, என்னடா  மாப்பிள்ளை என அவர் கமலை  உரின்மையாகக்கூறுவது  லேடீஸ் , காதல்  பற்றிய  அவர் அபிப்ராயங்களைச்சொல்லும்போதும்  தியேட்டரில்  விசில்  பறந்திருக்கும்

 நாயகியா ஸ்ரீப்ரியா . ஆழமான  கேரக்டர்  யாராலும்  யூகிக்க முடியாத  கேரக்டராக  தன்னை  காட்டிக்கொள்ள  அவர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள்  அருமை . பல  இடங்களில்  நக்கலான  வசனங்கள்  அவருக்குக்கைகொடுக்குது

படத்தின்  மிகப்பெரும்  பலம் வசனங்கள் . போட்டுத்தாக்கி  இருக்காங்க இந்தக்காலபப்டங்களில்  நச் வசனங்கள்  எவ்ளோ  வருதுனு  பார்த்தா  சராசரியா  5 அல்லது 10 தேறுவதே  அதிகம், கேட்டா  காட்சியாலயே  கதை சொல்றோம்னு சமாளிப்பாங்க . ஆனா  இந்தப்படத்துல  கிட்டத்தடட்ட   50  இடங்கள்ல  வசனம்  களை  கட்டுது

   இசை  இளையராஜா .  உறவுகள்  தொடர்கதை  பாட்டு கலக்கல்  ரகம் . பிஜிஎம்மில் வழக்கம் போல்  முத்திரை  பதிச்சிருக்கார்


 சபாஷ்  டைரக்டர்

1   பெண்களை  மார்க்கெட்டிங்க்கு எப்படி  யூஸ்  பண்ணிக்கறாங்க  என்பதை  நக்கலாக நாயகி கேரக்டர்   மூலம்  சொல்லும் இடம்

2 எதையும் அசால்ல்ட்டாக  அணூகும்  ரஜினியின்  கேரக்டர்  ஸ்கெட்ச்  அற்புதம்

3  க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம்  முன் ரஜினி ஸ்ரீப்ரியாவை  அப்ரோச்  பண்ணுவதும்  அதை  மறுத்து நாயகி  வசனம்  பேசி  தப்பிப்பதும்  அதற்கு அடுத்த  நாள்  எதுவுமே  நடக்காத  மாதிரி  ரஜினி  பேசும்  வசனங்களும்  கூல்

4   ஸ்ரீப்ரியாவின்  அக்காவாக  தன்னை  அறிமுகப்படுத்திக்கொள்ளும்  கேரக்டர்  நடிப்பு  குட். சொல்லப்போனா அவர் ஸ்ரீப்ரியாவை  விட அழகாவே இருக்கார்

நச் வசனங்கள்

1        ஏதோ  மிருகம் ஆடறதை  ரசிக்கற  ,மாதிரி  என்னை ஆடவிட்டு ரசிக்கறாங்க , எனக்குக்குமட்டுது


2        எனக்கு ஒரு பசி , அவங்களுக்கு ஒரு பசி


3  அவங்க   கிட்டே  இருந்து  காசைப்பறிச்சுக்கறதுக்காக என  உடையை உறிச்சுக்கறேன்

4        இடுப்புல  இருக்கும் இலை உதிரும்னு ஒபார்த்தா  பல்லி  விழுந்திருச்சு?


5        எதுக்கு மார்க்கெட்  இருக்கோ அதை  எக்ஸ்போஸ் பண்றாங்க

ஆமா,  பெண்களுக்கு எப்பவும் மார்க்கெட்   இருக்கும்

6        மிஸ், உங்களை  எனக்கு  ரொம்ப  பிடிச்சிருக்கு
 அசட்டுத்தனமான ஜோக், சரி, ஏதோ  படம்  எடுக்கறதா சொன்னீங்களே?  என்ன  மாதிரி  படம்?
 அசடுகளைப்பத்தி.. ஐ மீன்  பொண்ணுங்களைப்பத்தி.....

7        மேடம், உங்களைப்பேட்டி  எடுக்க வந்திருக்கோம்
 மேக்கப்  போடனுமோ?

 ,தேவை இல்லை, எப்பவும்  போடுற  சொசயிட்டி  மேக்கப்  போதும், சமூக  சேவகி தானே நீங்க?

8        நிறைய  அபலைப்பெண்களுக்கு  ஆதரவு தந்தா  எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும்
 அப்போ உங்களுக்கு ஆத்ம திருப்தி  கிடைக்கனும்னா  நிறைய  அபலைப்பெண்கள் உருவாகனுமா?

9        வித்தியாசமா இருப்பதாக்காட்டிக்குவது  ஒரு ஃபேஷன்

10  ஆண்கள்  தனியா  இருக்கும்போது  ரெண்டே  விஷயங்கள்  பத்திதான்  யோசிப்பாங்க  1  பெண்கள்  2   லக் ( இதை  ஃபக்  அப்டினு  வெச்சதாகவும்  சென்சார்  ஆட்சேபித்ததால் லக்  என மாற்றியதாகவும் தகவல்கள் )

11     `ரசிச்சுட்டே  இருக்க  வைக்கறதும் , ருசிச்சுட்டே இருக்க வைப்பதும் ரெண்டே  விஷயங்கள்  1 மது  2 மாது


12    +ஆணும் , பெண்ணும்  சமமா  இருக்கவே  முடியாது , குறிப்பா  பெட்ரூம்ல


13    மனசு  ஸ்திர்மா  இருந்தா தான்  மேரேஜ்  பற்றி யோசிக்க  முடியும்
14  நாம  ஜாக்கிரதையா  இருக்க  வேண்டிய   நபர்கள்  1  அரசியல்வாதிகள்  2 பெண்கள்
 தான்  நினைச்சதை  அடைய  எதையும்  செய்யத்தயங்க மாட்டாங்க , ஆனா  என்ன நினைக்கறாங்கனு அவங்களுக்கே தெரியாது

15    இள்:மை  எதுக்கு  இருக்கு? இளமை  இருக்கும்போதே  அனுபவிக்கனும்
16    ஃப்ரீயா  செக்ஸ்  பத்தி  பேசறியே?
 ஃப்ரீ செக்ஸ்  வெச்சுக்கலாம்னா பேசுனேன்?

17    ஒரு நிமிச  கோபம்  ஒரு நாள்  வாழ்க்கையையே  மாத்திடும்
18  வறட்டு கவுரவம்  பார்க்கறவங்க , தன் தகுதிக்கு  மீறி  தன்னை  உயர்வா கருதறவங்க   இருவரு,ம்  ஆபத்தானவங்க , எனக்குப்பிடிக்காது
`19  எந்தக்கடவுளா  இருந்தாலும் செய்யற உதவியை  கொஞ்சம்  பெருசா , குயிக்கா செய்யக்கூடாதா?

20  தண்ணி  அடிக்கறவங்க கண்ல இருந்து  எதையும் மறைக்க முடியாது

21  உலகில் நம்மைக்கஷ்டப்படுத்துவது  1 வறுமை  2 சாவு

22   பொண்ணுங்க  கிட்டே  2 விஷயம்  மட்டும் இருக்கவே கூடாது , ஆபத்து 
1  காமவெறி 
 தன் கால்ல  தானே  சுயமா சம்பாதிச்சு  நின்னு  காட்டனும்கற வெறி

23  நிஜங்கள்  கசப்பானவை தான், ஆனா எல்லா நிஜங்களும் அப்படி அல்ல

24   யாராலும்  இவள் எப்படிப்பட்டவள் என யூகிக்க முடியாத  பெண்  அவள்

25  பொண்ணுங்க  மேல  வெறுப்பு வந்தா   தற்கொலை  பண்ணிக்குவேன், ஏன்னா  அதுக்குப்பின் வாழ்க்கைல என்ன  இருக்கு ?

26  வளையக்கூடியது  இரும்பு மட்டும் இல்லை, பெண்ணும் தான்

27 உங்க   புருவம் நல்லாதானே இருக்கு? ஏன் ட்ரிம் பண்றீங்க? 

இயற்கையா  இருந்தா  யார் சார்  ரசிக்கறாங்க ?

28   சினிமாவை எல்லாரும்  விரும்பித்தான்  பார்க்கறாங்க, ஆனா  சினிமாவில்  நடிக்கறவங்களை  மட்டும்  ஏன்  கேவலமா  பார்க்கறாங்க?

29  என்ன  தைரியம்  இருந்தா  என்னையே  டா போட்டு பேசுவே?

 டி போட்டு பேச நீ பொம்பள   இல்லையே?

30   வேலை  வேனாம்னு  வீராப்பா பேசிட்டு பின்  எந்த  மூஞ்சியை வெச்சுட்டு மறுபடி   அங்கேயே  போனீங்க ?

மூஞ்சியை  எவன்  சார் பார்க்கறான்? வேலையை  விட்டுப்போகனும்னு தோணுச்சு  , போனேன், பின் மீண்டும்  வரனும்னு  தோணுச்சு, வந்தேன்

31  உங்களைப்பார்த்து  எத்தனை  நாள்  ஆச்சு?

 நான் இதை எல்லாம் கணக்கு வெச்சுக்கறது இல்லை

32  அடிகக்டி  முரண்பாடா  பேசறீங்க

 முரண்பாடு  இல்லாம  யார் இருக்காங்க? அதனால  தான்  நாம  மனுசங்க

33   காதல்  பிச்சை  கேட்கும் அளவு  இன்னும் என் தன்மானம் இடம் கொடுக்கலை

34  அழகான  பொண்ணுங்களுக்கு  உதவும்  மனப்பான்மை தான் என்னை இன்னும் சாகாம வெச்சிருக்கு

35  பெண்  சுதந்திரம்  பற்றி  நீங்க  என்ன  நினைக்கறீங்க?

அதைப்பற்றி எல்லாம் எனக்கு தெரியாதுங்க ‘’
அதனால தான் நீங்க சந்தோசமா இருக்கீங்க போல


லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1        நாயகியின்  இரண்டாம்  காதலன்  நாயகியை  ஒரு முறை  அனுபவித்து  விடுகிறான்.பின்  தனி,மையான  சந்தர்ப்பம்  கிடைக்கும்  இன்னொரு  தருணத்தில்  நாயகி திருமணம்  செய்ய  சொல்லுவதால்  தங்கச்சி  என  பிளேட்டை  திருப்பிப்போடுகிறான், கிடைச்ச  வாய்ப்பான  அந்த  தனிமை  தினங்களை  யூஸ்  பண்ணி  அப்புறமா  விலகி இருக்கலாமே?  அவர் ஒன்றும் நல்லவர் இல்லையே?
2        க்ளைமாக்ஸில்  கமல்  தன்  திருமணத்துக்கு  ரஜினி , ஸ்ரீப்ரியா , அவர்  அக்கா  யாரையும் அழைக்காதது  ஏன்?
3        க்ளைமாக்ஸ்  சீனில்  ஹீரோவும் , ஹீரோயினும்  சேர  வேண்டும்  என்ற  துடிப்பு  நமக்கு  வர  வேண்டும்., ஆனா  அப்படி  ஏதும்  தோணலை. ஓப்பனா  சொல்லனும்னா நல்லவனான  நாயகன்  நாயகி கிட்டே  மாட்டிக்காம  புதுப்பெண்ணை  திருமணம்  செஞ்சுக்கிட்டா  சரி  என்ற  எண்ணம்  தான் நமக்கு வருது


சி.பி  ஃபைனல்  கமெண்ட்  -  மாறுபட்ட  கதைக்களனில்  ரஜினி – கமல்  காம்ப்போ  படம்  மிஸ்  பண்ணவங்க  தவறாமல் பார்த்துடுங்க . விகட்ன்  யூக  மதிப்பெண் 50+  . ரேட்டிங்  3 / 5    . வண்ண நிலவன் , கே ராஜேஷ்வர் இருவரும்  உதவி  திரைக்கதை.  ஞானராஜசேகரன்  ஒளிப்பதிவு , ஸ்ரீப்ரியாவுக்கு  விருது  கிடைத்தது , வணிக  ரீதியான  வெற்றியை  அப்போது  பெறாவிட்டாலும்  பாராட்டுக்களை  அள்ளிக்குவித்த படம் 

0 comments: