Sunday, August 09, 2020

இளமை ஊஞ்சலாடுகிறது (1978) - சினிமா விமர்சனம்

 

இளமை ஊஞ்சலாடுகிறது | Ilamai Oonjal Aadukirathu Full Movie HD |  Rajini,Kamal,Sripriya | GoldenCinema - YouTube

ஒரு கம்பெனில  குமாஸ்தாவா  வேலை  செஞ்சவரோட  மகன்  அவர்  மறைவுக்குப்பின் அந்த  கம்பெனி  எம் டி யோட மகன்  கூடவே இன்னொரு மகனா வளர்றார்.  பெரிய ஆள்  ஆனதும்  அவங்க  2  பேரும்  ஒரே கம்பெனில   ஒர்க் பண்றாங்க . எம் டி யோட பையன் எம் டி யாவும் , குமாஸ்தாவோட மகன் ஜெனரல்  மேனேஜராகவும்  ஒர்க் பண்றாங்க. கம்பெனில  ஒர்க் பண்ணூம்போது  சார் , வாங்க  போங்க  என ஃபார்மாலிட்டியா  நடந்துக்கிட்டாலும்  கம்பெனியை விட்டு வெளீல  வந்தா , வீட்ல  இருவரும்  அண்ணன், தம்பி போல  நண்பர்கள்  போல  தான்  உரிமையா  டா போட்டு  பேசிக்குவாங்க

 

இப்போ குமாஸ்தாவின் மகன் தான் ஹீரோ. அவரு   ஒரு பெண்ணை  லவ்பண்றாரு. அதுவும்  டிட்டோ.  2  பேரும்  லவ்விட்டே இருந்தா  கதை  நகர  வேணாமா?

 

 நாயகன்  வேலை  செய்யும்  கம்பெனில / ஆஃபிஸ்ல  நாயகியின் தோழி  டைப்பிஸ்ட்,   ஆல்ரெடி  மேரேஜ்  ஆகி  டைவர் ஸ்  ஆன  பொண்ணு   சந்தர்ப்ப  சூழ்நிலையால   அந்தப்பொண்ணு  கூட நாயகன்  தப்பு  பண்ணிடறாரு

 

இது நாயகிக்கு தெரிஞ்சிடுது அதுக்குப்பின்  அவர்  என்ன  முடிவு எடுத்தார்  என்பதே  கதை

 

 நாயகனா  கமல்  அசால்ட் பண்ணி   இருப்பார் , அந்தக்கால  காதல்  இளவரசன்  ஆச்சே ? பாடல்  காட்சிகளில்  ஈடுப்பாட்டுடன்  நடிப்பது  தமிழ்  சினிமாவில்  கமல், மோகன்,  கார்த்திக்  மூவரும்  முன்னிலை

 

 

 ரஜினி   இன்னொரு  ஹீரோ . செம  சுறுசுறுப்பு , இவ்ரோட  ஸ்பீடுதான்  ரசிகர்களை  இவ்ளோ  மயக்கி இருக்கனும் , 2 மணி  நேரம்  கமல்  நடிச்சு  வாங்குன  பேரை  20 நிமிச காட்சிகளில்  ரஜினி  நடிச்சு  அசால்ட்டா  ஓவர்  டேக்  பண்ணிடறார்

 

ஸ்ரீப்ரியா   நடிப்பும் கனக்ச்சிதம், அந்தக்காலக்கனவுக்கன்னி

 

 இசை  கலக்கல்  ரகம்,  ஒளிபப்திவு  ஓக்கே ரகம், திரைக்கதையில்  பின் பாதி  இழுவை

 

ஆ-ன்னா  ஊ-ன்னா   கேர்க்டர்கள்  கடிதம்  எழுதி வெச்ட்டு ஊரை  விட்டு  ஓடிப்போவது  தமாஷ்

 இயக்குநர்  ஸ்ரீதரின்  படங்களில்  காதல், பாடல்கள், இசை  தூக்கலாக இருக்கும் என்பதற்கு இது இன்னொரு உதா

நச்  டயலாக்ஸ்

 

1        ட்ராமாவைக்கண்டு பிடிச்சடு  யாரு?

 தெரியலையே?

 

 என் ஃபிரண்ட்   வெங்க”ட்ராமா”

 

2        டியர் , இன்னைக்கு  சாயங்காலம்  ஆறு மணிக்கு  உழைப்பாளர்  சிலைக்குப்பக்கத்துல  நாம  மீட் பண்ணலாமா?

 எதுக்கு?

 நாம 2 பேரும் சேர்ந்து  உழைக்கத்தான்

 

3   சார் , என் ஃபிரெண்ட்  ஒருத்தன்  இருக்கான், ஒரு வேலைக்கும் உதவாதச்வன், எதுக்கும் துப்பில்லாதவன், உங்க கமெப்னில அவனுக்கு ஒரு   வேலை  போட்டுக்குடுக்க முடியுமா?

 

யோவ், என்னைப்பார்த்தா  உனக்கு  எப்டி தெரியுது?

 

4   ஆனா,  சாரி   இந்த  ரெண்டும்  எனக்குப்பிடிக்காத   வார்த்தை

 

 சபாஷ் டைரக்டர் 


பாடல்கள்

 

பாடல்களைப்பற்றிக்குறிப்பிட்டுச்சொல்லியே ஆகனும், செம  கலக்கல்ஸ்  எல்லாமே, ஸ்ரீதர்  படமா? கொக்கா?

 

1        ஒரே நாள்  உனை நான் நிலாவில் பார்த்தது    (  இந்தப்பாட்டுக்கு  கமல்  லாங்க் ஷாட்டில்  ஆட  க்ளோசப்பில்  நாயகி   முகம் – இதே  போல்  பல வருடங்களுக்குப்பின் காக்கிச்சட்டை  படத்தில்  வானிலே  தேனிலா  ஆடுதே  பாடுதே  பாட்டில்  அம்பிகா  க்ளோசப்  ஷாட்டில்  இருப்பார் , கமல்  லாங்க் ஷாட்டில்   அவர்  முகம்  அருகே    முகம் கொண்டு போவார் , ரசனைக்குரிய காட்சி )

2        நீ  கேட்டால்  நான் மாட்டேன் என்றா  சொல்வேன் கண்ணா

3   என்னடி  மீனாட்சி , சொன்னது  என்னாச்சு7  இது  ரிலீஸ்  டைமில்  செம ஹிட் . இந்தப்பல்லவிக்கு  முன் பல்லையாக  வார்த்தை  தவறி விட்டாய்  கண்ணம்மா, மார்பு  துடிக்குதடி .. லைன்ஸ்  செமயா  இருக்கும், ஆர்க்கெஸ்ட்ராக்களில்  இது அடிக்கடி  கேட்கும் விருப்பப்பாட்டு   (  விஜயகாந்த்  நடிச்ச  உழவன் மகன்  ல இதே மாதிரி  உன்னை  தினம்  தேடும்  தலைவன்  பாடல்  பல்லவிக்கு  முன் பல்லவியாக   மாலைக்கருக்கலிலே மை இருட்டு வேளையிலே   வரும்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ்

 

 

 1  நாயகன்  ஒரு கிராமத்தில்  ஒரு பெண்  கூட தப்பு  பண்ணிடறான், பேக்கு மாதிரி   ஒரு ஒப்புதல்  வாக்குமூலம்  மாதிரி  ஒரு லெட்டர்  எழுதி  வெச்ட்டு விடியாததற்கு  முன்பே ஓடிடறான், அது  ஒரு சாலிட்  எவிடென்ஸ்  ஆகாதா?  இத்தனைக்கும்  அடுத்த  நாள்  காலை  நாயகி  அங்கே  வருவானு தெரியும். அந்த லெட்டரை  அவ  பார்த்தா  மாட்னோம்னு நினைக்க மாட்டானா?>

 

 

2   பொதுவா  பொண்ணுக்குதான்  விழிப்புணர்வு ஜாஸ்தி , சம்போகம்    நடந்த  பின் ஆண் தான் அடிச்சுப்போட்ட மாதிரி  தூங்குவான், இந்க்கதைல   எல்லாமே  தலைகீழ். ஆண்  காலையில்  எழுந்து    லைட் போட்டு ஒரு லெட்டர்  எழுதி  வெச்சு  கிளம்பற  வரை  அந்தப்பொண்ணு தூங்கிட்டே இருக்கு

 

3        நாயகியைப்பார்க்க  கிராமத்துக்கு  வரும்  நாயகன்  அவ பக்கத்து  ஊருக்குப்போய் இருக்கா என்ற  தகவல் கிடைச்சதும்  யோக்கியனா  இருக்கறவன் டக்னு  டாக்சி  பிடிச்சு  அங்கே  போகாம  அந்தப்பெண்  வீட்டில்  ஏன் தங்கறான்?

4        ரஜினி , கமல்  இருவரும்  அவ்ளோ  க்ளோசா  பழகறாங்க , கமல்  தன்  காதலி இவர் தான் என அறிமுகப்படுத்தவே  இல்லை , அதே  போல்  லிஃப்ட்  பார்ட்டி  இவதான் என ரஜினி  கடைசி  வரை  காட்டவே இல்லை . இருவரும்  ஒருவர் தான் என்ற  சஸ்பென்ஸ்  மெனக்கெட்டுக்கொண்டு வர  பயங்கரமா  லாஜிக்  இடிக்குதே ?

5        தனிமையைப்பயன்படுத்தி  தப்பு  செஞ்சிட்டேனு கமலைக்குற்றம்  சொல்லும் ரஜினி  காரில்  இன்னொரு நாயகியுடன்  தனிமையில்  இருக்கும்போது இவரு மட்டும்  என்ன  செஞ்சாரு?

 சிபி ஃபைனல்  கமெண்ட் -  காதலர்கள் , கமல் , ரஜினி  ரசிகர்கள்  பார்க்கலாம். 42  வருடங்களுக்கு முன்  எடுக்கப்பட்ட படம் என்றாலும்  ரசிக்கும்படி தான் இருக்கு . ரேட்டிங்  3 / 5

 

0 comments: