Saturday, August 08, 2020

RAAT AKELE HAI ( HINDI-2020) –சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) - நெட் ஃபிளிக்ஸ் ரிலீஸ்

RAAT AKELE HAI  ( HINDI-2020) –சினிமா விமர்சனம்  ( க்ரைம்  இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லர்)  - நெட் ஃபிளிக்ஸ்  ரிலீஸ்

Raat Akeli Hai Trailer: Nawazuddin Siddiqui and Radhika Apte starrer murder  mystery looks enthralling | Bollywood Bubble

 

ஹீரோ  ஒரு  போலீஸ்  ஆஃபீசர். ஒரு டைம்  இவரு ட்ரெய்ன் ல போய்க்கிட்டு இருக்கும்போது  சும்மா தம் பத்தலாம்னு   கதவு  பக்கமா  காத்து  வாங்கிட்டு நிக்கறார். அப்போ  ஒரு  தாவணியோ, ஷாலோ  காத்துல  வந்து  இவர்  கைக்கு  சிக்குது . பாத்தா  பக்கத்து  அபார்ட்மெண்ட்ல  ஒரு பொண்ணு  தற்கொலை பண்ண  முயற்சி  பண்ணிட்டு  இருக்கு . அந்தப்பெண்ணோட அப்பா  ஓடி வந்து  பொண்ணைக்காப்பாத்துனதுக்கு நன்றி சொல்றார்.

 

 ஹீரோக்கு இன்னும் மேரேஜ் ஆகல . அம்மா  பொண்ணு  பார்த்திட்டு இருக்காங்க . பார்க்கற  பொண்ணுங்களை  ஒண்ணை  விடறதில்லை . என் மகன்  ஃபோட்டோ  இது  பிடிச்சிருக்கா?னு கேட்கறாங்க. கலர்  கம்மியா  இருக்காரே?னு ஒரு பொண்ணு  சொன்னது  ஹீரோ  காதுக்குப்போகுது , அப்ப இருந்து சராசரி  ஆண்  போல  ஃபேர் அண்ட்  லவ்லி எல்லாம் போட்டு  சமாளிக்கறார்.

 

ஒரு கேஸ்  வருது. ஒரு வயசான  பணக்காரர். இளவயதுப்பெண்ணை  கல்யாணம்  கட்டிக்கிட்ட  முதல்  ராத்திரி  மாப்ளைக்கு  கடைசி  ராத்திரி  ஆகுது. நைட்  11   மணிக்கு  கொலை நடந்ததா  சொல்லபப்டுது . ஹீரோ  இந்தக்கேசை   இன்வெஸ்டிகேட்  பண்ன  ஸ்பாட்டுக்கு  வர்றார். அவருக்கு  ஒரு அதிர்ச்சி . முத  பேரால  நாம  பார்த்தமே    தற்கொலைக்கு  முயன்ற  பொண்ணு  அதுதான்  இது , இதுதான் அது . இந்த  வீட்ல  இருந்து  யாரும்  வெளில  போகக்கூடாது , கேஸ் முடியும்  வரை  எல்லார்  மீதும்  சந்தேகம்  வரும்,  விசாரனை  நடக்கும்கறார்  ஹீரோ

 

சுந்தர் சி படத்துல  வர்ற   கேரக்டர்ஸ்  மாதிரி  இந்தக்குடும்பத்துல  ஏகப்பட்ட  கேரக்டர்ஸ்., அவங்களை எல்லாம் யார்  , எவர்?னு அறிமுகம்  பண்றதுன்னா  தாவு  தீர்ந்திடும், அதனால  ஸ்ட்ரைட்டா  மேட்டருக்கு  வருவோம்

 

சொத்துக்கு  ஆசைப்பட்டு  குடும்பத்துல  இருக்கற  யாரோ தான்  வயசான  அந்த  கிழ  போல்ட்டை  போட்டுத்தள்ளி  இருக்கனும்கற  கோணத்துல  ஹீரோ விசாரணையை துவங்கும்போது  அவருக்கு ஒரு அதிர்ச்சி  காத்திருக்கு

 

மணப்பெண்ணுக்கு ஆல்ரெடி  ஒரு லவ்வர்  இருக்கான், அதுவும் அந்தக்குடும்பத்துலயே , அதனால  மணப்பெண்ணும், காதலனும்  சேர்ந்துதான்  மாப்ளையை  போட்டுத்தள்ளி இருக்கனும்னு  டிபார்ட்மெண்ட்  நம்புது, சில சாட்சிகள், சூழ்நிலைகளும் அப்டி சொல்லுது

 

 ஆனா  ஹீரோவுக்கு  மணப்பெண்  மேல ஒரு கிரேஸ், நமக்குப்பிடிச்சவங்க  நிஜமாவே ஒரு தப்பு பண்ணி  இருந்தாக்கூட  நாம  அதை  ஒத்துக்க  மாட்டோம், அவங்க நல்லவங்க தான், சந்தர்ப்பம், சூழ்நிலைனு சால்ஜாப்  சொல்வோம்

 

அது மாதிரி  ஹீரோ  அந்த  மணப்பெண்ணுக்கு ஆதரவா  இருக்கார். கொலையாளி  யார்?னு கண்டு  பிடிக்கும் முன்  மேலிட  பிரஷர் அவரை  அந்தக்கேஸ்ல இருந்து  விலக  வைக்க  முயற்சிகள்  நடக்குது

 

 அதுக்கப்புறம்  என்ன  ஆச்சு? கொலையாளி  யார்? என்பதைக்கண்டுபிடித்தாரா? நாயகியைக்கை  பிடித்தாரா? என்பதை  நெட் ஃபிளிக்சில் காண்க

 

ஹீரோவா நவாஸ்தீன்  சித்திக் , இவருக்குன்னு ஒரு ரசிகர் கூட்டம்  உண்டு . இவர் நடிப்பில்  நாலு படம்  தான்  பார்த்திருக்கேன், அசால்ல்ட்டான  நடிப்பு , பெருசா  எதுக்கும்  அலட்டிக்கறதில்லை , அதே சமயம்  தன் கம்பீரத்தை  விட்டுத்தருவதில்லை  , வெரிகுட் பர்ஃபார்மென்ஸ் .

 

நாயகியிடம்  நேரடியாக  தன் அன்பை சொல்லவும் முடியாமல் , சந்தேகப்படவும்  முடியாமல்  பரிதவிப்பது  குட்

 

நாயகியா  ராதிகா  ஆப்தே.  வாட்சப்ல வந்த  ஒரு ஞோக் தான் நினைவு வருது . காலா  படத்துல  ரஜினிக்கு  ஜோடியா நடிச்சதால  அந்த  ஒரு  படம்  மட்டும் தான்  ராதிகா ஆப்தே லைஃப்  கேரியர்ல  எல்லாரும் குடும்பத்தோட  உக்காந்து   பார்க்கற  மாதிரி  இருக்கு , மத்ததெல்லாமே   அடல்ட்  கண்ட்டென்ட்  உள்ள படங்கள்  தான்  அப்டிங்கற  அர்த்தத்துல அந்த  ஜோக்  இருக்கும்,  இதோ காலாவுக்கு  அடுத்து  இந்தப்படத்தையும் நல்ல  பட  லிஸ்ட்ல  சேர்க்கலாம். நல்ல நடிப்பு.

 

 நாயகிக்கு  கண்களும், உதடுகளுமே  அழகிய  ஆயுதங்கள், அதையே  அவர் தொடர்ந்து நம்பி களத்தில்  இறங்கலாம். ரயிலில்,  மாளிகையில் , பல இடங்களில்  நாயகனுடன் அவர் கண்கள்தான்  ஓவர் டைம்  போட்டு பேசுது , செம  ஆக்டிங் , படம்  பார்க்கற  ஆடியன்சுக்கே  இவர் கொலையாளியா இருப்பாரா? மாட்டாரா? என ஒரு குழப்பம்

 

ஒளிப்பதிவு , இசை , ஆடை  வடிவமைப்பு  எல்லாமே  தரம்.

 Raat Akeli Hai I Another spectacular performance by Nawazuddin Siddiqui

 சபாஷ்  டைரக்டர்

 

1        நாயகன், நாயகி  தேர்வும், அவங்க  கெமிஸ்ட்ரியும்  தான்  படத்தின்  பெரும்  பலம் , இயக்குநர்  அதை  நன்கு  உணர்ந்து  காட்சிகளை  வடிவமைத்து  இருக்கார்

2        நாயகன் – நாயகி ஏற்கனவே வாழ்வில் சந்தித்தவர்கள்  தான்  என்பதை  ஃபிளாஸ்பேக்கில்  சொன்ன  உத்தி  குட்

3        கொலை  செய்யப்பட்ட  நபரின்  குடும்ப  நபர்கள்  எல்லாருமே  திருட்டு  முழி  முழிப்பதும் ,  விசார்னையில்  மாட்டுவதும்  எதிர்பார்ப்பை  எகிறை வைக்கிறது

4        க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  நல்லாருக்கு , ஆனாலும்  இன்னும்  கொஞ்சம்  டீட்டெய்லா  அந்த  ஃபிளாஸ்பேக்கை  சொல்லி  இருக்கலாம்

5  கொலைக்கேஸ்  விசாரணையில்  இதற்கு முன்  நடந்த  சில  கொலைகள்  இந்தக்கேசுடன்  சம்பந்தப்பட்டிருப்பது நல்ல  திருப்பம், ஒப்பனிங்  சீன்லயே அதுக்கான  லீட் குடுத்தது  குட்

 

  நச்  டயலாக்ஸ்

 

1        திட்டமிட்டு வருவதில்லை  காதல். அது  திடீர்னு  உருவாகும்

2        கலர் கம்மியா இருந்தா  மனசு சுத்தமா  இருக்கும் அப்டினு ஆண்கள்  அகராதில இருக்கு

3        இந்த  உலகம் ரொம்ப  குரூரமானது, அடுத்தவங்களுக்கு  ஒரு கஷ்டம்னா அதை ரசிக்கும்

4        எந்தப்பொண்ணுமே என் ப்ரப்போசலுக்கு ஒத்துக்கலை, கடைசில எதா இருந்தாலும் பரவால்லை,அப்படிங்கற நிலைமைக்கு வந்தாச்சு

5        ஒருத்தரோட கேரக்டரை தேரிஞ்சுக்கனும்னா ஜஸ்ட்  இக்னோர்  தெம், அலட்சியப்படுத்தறப்ப  அவங்க  ரீ ஆக்சன்  அவங்களை நமக்குக்காட்டிக்குடுத்துடும்

6  இந்தக்கொலைக்கேசை   டீல்  பண்றதுதான்  என் வேலை , அவ கேரக்டரை  அனலைஸ் பண்றது  என் வேலை  இல்லை

 

  லாஜிக்  மிஸ்டேக்ஸ்

 

1  கொலை  நடந்த  நேரம் இரவு 11 என  ஹீரோக்கு சொல்லப்படுது , ஆனா நைட்  9 மணிக்கே கொலை நடந்திருக்கலாம்னு   சிலர்  டவுட்  கிளப்பறாங்க,  போஸ்ட் மார்ட்டம்  ரிப்போர்ட்ல  உண்மை  தெரிஞ்சுடாதா? எதுக்கு குழப்பிக்கிட்டு?

 

2   கொலை  விசாரணை நடக்கும்போது  சம்பந்தம்  இல்லாம  ஒரு     தற்கொலை  நடந்து  அந்த  கேரக்டர்  ,மேல்   அனுதாபம்  வரச்செய்வதை  தவிர்த்திருக்கலாம்

 

3   ஒரு சீன்ல  மினி  வில்லன்  ஒருவன் மேல்  பாதிக்கப்பட்ட  பெண் பெட்ரோல்  தெளிக்கறா , வாசம்  கண்டதும் அவன்  ஓட மாட்டானா?  நெருப்பு  பத்த  வைக்கற வரை  பக்கத்துலயே பேக்கு மாதிரி  நின்னு  மாட்டிக்குவானா?

 

4  அந்தக்குடும்பத்தில்  இருக்கும் 4  பெண் கேரக்டர்களில்  நாயகி உட்பட   எல்லாரையும் விட அழகா  அந்த  பணிப்பெண்  இருக்கா, ஆனா  அந்தப்பெண்ணை    வேட்டையாடாமல்  மத்த  பெண்களை  அவன்  வேட்டையாடியது  ஏன்?

 

 

 சி. பி  ஃபைனல்  கமெண்ட் -   கொஞ்சம்  நிதானமான  திரைக்கதையில் , நல்ல ட்விஸ்ட் உடன் கூடிய  க்ரைம் இன்வெஸ்டிகேஷன் ஃபிலிம் பார்க்க  நினைப்பவர்கள்  பார்க்கலாம், ஆஹா , ஓஹோ, அபாரம்  எல்லாம் கிடையாது , ஆனா நல்லாருக்கு , ஹிந்தி  மொழி  அறிந்தவர்கள்  கூடுதலா  ரசிக்கலாம், வசனத்துக்கு  அதிக  முக்கியத்துவம்  கொண்ட  படம் , ரேட்டிங்  3 / 5

 

 


0 comments: